Loading

அத்தியாயம் -7

அகிலன் போனை காதில் வைத்து பேசிகொண்டிருந்தான்.

எதிர் முனையில்,ஹலோ அகிலா நான் “வித்யா” பேசுறேன்.

அகிலன், சொல்லுங்க வித்யா துமியோட தோழிதான் நீங்க.

வித்யா, ஆம் நான் துமி தோழிதான்.

அகிலன், வித்யா ஏன்? துமி போன் பண்ணால் எடுக்க மாட்டேங்கிறாள்.என் மேல் தவறு உள்ளது அவ போன் பண்ணப்ப நான் எடுக்கவில்லை அதுக்கு என் “சூழ்நிலைதான்” காரணம். ப்ளீஸ் அவளை என்கூட பேச சொல்லுங்க. அவள் பக்கத்தில் இருந்தாள்னா போனை கொடுங்க. அவள் குரலாவது கேட்டு ஆறுதல் அடைறேன். ‘வித்யாவிடம் கெஞ்சும் தொனில்’ கேட்டுக் கொண்டிருந்தான்.

வித்யா, சாரி! அகிலன் துமி இன்னைக்கு காலேஜ்க்கு வரலை.

அகிலன்,என்னாச்சு “துமிக்கு உடம்பு” எதாவது சரியில்லையா?.

வித்யா, தெரியல என்ன ரீசன் என்று. போன் போட்டாலும் நாட் ரீச்னு வருது. அதுதான் துமி உங்களை பார்க்க வந்தாளா என்று தெரிந்துக்கதான் போன் பண்ணேன். நீங்க “துமி” என் பக்கத்தில் இருப்பதாக கேட்கிறிங்க சரி நான் போனை வைத்து விடுகிறேன். போனை கட் பண்ணினாள்.

அகிலன், தன் அம்மாவிடமும், தங்கையிடமும் சொல்லிவிட்டு துமி வீட்டு முன்னாடி போய் நின்றான்.

துமி, காதல் நினைவிலிருந்து வெளியே வந்தவள். ‘ரோஜா பூச்செடி ஓரம்’ அகிலனை கண்டவள். மனம் பரவசமடைந்து முகம் மதி நிலவு போல் பிரகாசமாக துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள் அகிலனிடம்.

அகிலன், ‘மந்த காச புன்னகையுடன்’ தன் காதலியை கரம் நீட்டி அழைத்தான். காதலி அணைப்பில் குளிர்ந்து போக.

துமி, இளமை கன்று போல் துள்ளி குதித்து போனவள். ரோஜா பூ செடி அருகில் நிற்கும் அகிலனிடம். ஏன்டா இப்போ மட்டும் என்னை பார்க்க வந்த. நேற்று என்னை பார்க்க வரலை, ஒரு போன் இல்லை. போன் பண்ணாலும் துர எடுக்க மாட்டிங்களா?. போடா உன் கூட “கோவமா” இருக்கிறேன். பொய்யான கோபத்துடன் முகத்தை திருப்பி வைத்து கொண்டிருந்தாள்.

அகிலன், தன் காதைப் பிடித்துக் கொண்டு சாரி! சாரி!துமி, நான் நேத்து முழுக்க வேலைக்கு போய்விட்டேன் அதுதான் உன் போனை அட்டன் பண்ண முடியலை. அதுவுமில்லாமல் “என் அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் இருக்கிறாங்க அந்த வருத்ததில்” இருந்து விட்டேன் துமி.

துமி, ஏன்டா இதை என்னிடம் சொல்லலை. சொல்லிருந்தா உங்க அம்மாவை. “என் மாமியாரை பக்கத்தில் இருந்து” பார்த்து இருந்திருப்பேனே!. இந்த “உரிமை” எனக்கு இல்லையா? வா நாம் இப்போவே என் மாமியாரை சேர்த்திருக்கும் ஹாஸ்ப்பிட்டலுக்கு போகலாம். அகிலன் கையை பிடித்து கூட்டி சென்றாள்.

அகிலன், ஆமாம் நீ ஏன் காலேஜ்க்கு போகலை.

துமி, அது அப்புறம் சொல்றேன் பேசாமல் வாடா. அவனை தர தரவென்று இழுத்துக் கொண்டு போனாள்.

அகிலன், உங்க அம்மா உன்னை காணோம்னு தேட போறாங்கடி.

துமி, தேடட்டும். முதல்ல என் மாமியாரை பார்த்து நலம் விசாரிக்க வேண்டும்.

‘இருவரும், ஜோடியாக பைக்கில் செல்லும் காட்சியை மனோஜ் குமார் இரு சக்கர வாகனத்தில் ஒட்டி வரும் போது தன் மகள் துமி அகிலனுடன் செல்லும் காட்சியை பார்த்து விட்டு கோபம் உச்சிக்கு சென்றது’. உடேனே தன் வீட்டுக்கு அவசரமா வண்டியை முறுக்கியவர். வீட்டு முன்னாடி நிறுத்தி விட்டு. துமி, துமி, புவனா,புவனா என்று கத்தி கொண்டே உள்ள போனார்.

புவனா, கையில் காய் கறி கூடையுடன் உள்ளே நுழைந்தவள். என்னங்க இன்னைக்கு நேரமா வீட்டுக்கு சாப்பிட வந்துட்டிங்க. இன்னும் சமைக்கக் கூட இல்லையே!

மனோஜ் குமார், “உன் சமையலை கொட்டிக்க வரலை”. துமி காலேஜக்கு போனாளா?.

புவனா, இல்லங்க காலேஜ்க்கு போகலை அவ ரூமில்தான் இருந்தாள். நான் கடைக்கு போய்ட்டேன்.என்னங்க விஷயம் அவ “காலேஜ் பிரின்ஸ்பல்” போன் பண்ணரா? கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்தாள்.

மனோஜ், கோவமாக இனி அவளை காலேஜ்க்கு போகக்கூடாதுனு சொல்லிவிடு. வந்த வேகத்தில் திரும்பி விட்டார்.

துமி, அகிலன் கூட சென்றவள் தமிழரசியை கண்டதும் போய் அருகில் அமர்ந்து அவள் ‘மென்மையான பாதத்தை’ தொட்டு கும்பிட்டாள்.

தமிழரசி, தூங்கிக்கொண்டிருந்தவள் ‘கண் விழித்து’ துமியைக் கண்டதும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகிழ், பாத் ரூமிலிருந்து வந்தவள். அண்ணா இவங்க யாருண்ணா? என்று கேள்வி கேட்டாள்.

அகிலன், அம்மா இவ பேர் துமி இவள்தான் உங்க மருமகள். எங்களை “ஆசிர்வாதம்” பண்ணும்மா. தன் அம்மா காலில் இருவரும் தொட்டு கும்பிட்டார்கள்.

தமிழரசி, நல்ல இருங்க என ஆசிர்வாதம் பண்ணியவள். அகிலா! “இந்த புள்ளையை காதலிப்பது அவங்க குடும்பத்துக்கு தெரியும்மாயா”?. பார்த்தால் படிக்கிற புள்ளை மாதிரி இருக்கு.

அகிலன், ஆமாம்மா BSC பைனல் இயர் படிக்கிறாள்.

துமி, அத்தை என் வீட்டுக்கு தெரியாது.ஆனால் அவங்களை நான் சம்மதிக்க வைக்கிறேன். “இப்போதான் அகில் நல்ல வேலைக்கு” போய்ட்டானே!. அகிலா உன் வேலையை பத்தி சொல்லவே இல்லையடா என்ன வேலை, எந்த கம்பெனி, சேலரி எவ்ளவு?என கேள்வி மேல் கேள்வியாய் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அகிலன், “முகம் மாறியது, தொண்டை அடைத்தது, பதில் சொல்ல முடியாமல் திக்கி திணறினான்”.

மகிழ், அண்ணா நான் கேட்கும் கேள்வி அண்ணியே!கேட்டுட்டாங்க சொல்லுண்ணா. எந்த கம்பெனியில் என்ன வேலைன்னா. வற்புறுத்திக் கொண்டிருந்தாள்.

அகிலன், அது… வந்து… என இழுத்துக் கொண்டிருந்தான்.

பீட்டர், ரூமிற்குள் நுழைந்தவன் மச்சி நீ வேலை பார்க்கும் இடம் பெரிய “மல்டிபைல் கம்பெனி” என்று சொல்லுடா. மாசம் 60000ரூபாய் சொல்லு மச்சினு கண் சாடை காட்டினான்.

துமி, அகிலன் கையை பிடித்து வாழ்த்துக்கள் சொல்லியவள் அகிலன் ‘கண் இமையை இமைக்காமல்’ பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘அகிலனும் துமி இமையை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்’.

இருவரும், இப்படி பார்த்துக் கொண்டிருக்கும்போது.

பீட்டர், மச்சி நாங்க வேணும்னா வெளிய போகவாடா.

அகிலன், சுயநினைவுக்கு வந்தவன். மச்சி நீ எதுக்காக மச்சி இங்க வந்த.

பீட்டர், உன்னை என்னோடு இட்டுக்குன்னு போகத்தான் வந்தேன். நான் “ரிசப்ஷனில்” வெயிட் பண்றேன் நீ பேசி விட்டு வாடா.ரூமை விட்டு வெளிய போனான்.

அகிலன், துமி நீ அம்மாவிடம் பேசிக்கொண்டிரு. நான் வந்து விடுகிறேன்.

துமி, ம் சரி! அகிலா.

துமி, ‘மகிழ்கூடவும் தமிழரசிகூடவும் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்’.

அகிலன், பீட்டரிடம் சென்றவன். மச்சி தக்க சமயத்தில் வந்து காப்பாத்திட் டடா.

பீட்டர்,ஏன்டா ஒரு “பொய்கூட சொல்ல தெரியாமல் இப்படி அப்பாவியா” இருக்க. பொய் சொல்ல கத்துக்கோ மச்சி இல்லைனா வாழ்க்கை வாழ முடியாது. நான் எதுக்கு வந்தேன் தெரியுமா? உன்னை முதலாளி கூட்டிட்டு வர சொன்னாரு மச்சி அதுதான் வந்தேன். வாடா போகலாம்.

அகிலன், மச்சி துமி வந்திருக்கா அவளை விட்டு எப்படிடா வருவது. தயங்கினான்.

பீட்டர், மச்சி நீ வரலைனா முதலாளிக்கு “கோவம்” வந்துவிடும் அப்பறம் இருக்கிற வேலையும் போய்விடும்.

அகிலன், சரி!  மச்சி துமியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்துறேன்.படிக்கட்டில் ஏறி போகும் போது இவன் முன்னாடி ‘துமி’ நின்றுக் கொண்டிருந்தாள்.

அகிலன், என்ன துமி இங்க நிக்கிற.

துமி, அகிலா நான் வீட்டுக்கு போகணும் அதுக்காகதான் கீழே வந்தேன். நீ பேசிக் கொண்டிருந்த நீ என்ன? பேசுறேன்னு கேட்டுக் கொண்டிருந்தேன்.

அகிலன், நீ நான் பேசியது முழுவதும் கேட்டியா?.

துமி, இல்லை அகிலா இப்பதான் வந்தேன்.

அகிலன், சரி!துமி நீ பத்திரமா போயிட்டு வா. “நான் முக்கியமான இடத்துக்கு போகனும்”. அவசரப்பட்டான்.

துமி, அகிலா, ஒரு நிமிஷம் நான் சொல்ல வந்ததை கேளுடா. என் வீட்டில்…. என இழுக்கும்போது.

அகிலன், துமி எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். “நாம் வழக்கமா சந்திக்கும் இடத்திற்கு வந்து விடு சொல்லிவிட்டு” பீட்டர்கூட விரைந்தான்.

துமி, தான் வந்த விஷயத்தை சொல்லாமல் வந்த வழியே திரும்பினாள் ‘மன வருத்ததுடன்’.

…………………………………………………….

துமி, மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் ஏறி போனாள். தன் வீட்டிற்கு.

துகிலன், கேண்டிலிருந்து பைக்கில் வந்துக் கொண்டிருந்தான். ‘ஆட்டோவில் செல்லும் துமியை பார்த்துவிட்டு அவள் பின்னாடி பாலோவ் பண்ணி சென்றான்’ அவள் வீடு வரைக்கும்.

துமி, துகிலன் பின்னாடி வந்ததை கவனிக்காமல் வீட்டுக்குள் நுழைந்து விட்டாள்.

துகிலன், இதுதான் நம்ம தேவதை வீடா. ‘மனதிற்குள் மகேந்த்ரா,தாமரை செல்வி உங்களுடன் நாளைக்கு தாம்புல தட்டுடன் இந்த வீட்டிற்கு பெண் கேட்க வருவோம் நினைத்துக் கொண்டு’ பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

அகிலன், தன் முதலாளியிடம் சென்று ‘பவ்யாமாக’ நின்றான்.

முதலாளி, வாப்பா நேத்து சேர்ந்த புது பையன் தானே!நீ.

அகிலன், ஆமாம் சார்.

முதலாளி, உனக்கு இனி இங்கு வேலை இல்லை. ‘முகத்தில் அறைந்த மாதிரி’ சொல்ல.

அகிலன், சார்! ஏன் இப்படி சொல்றிங்க. நான் வேலை செய்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா?.

முதலாளி, இல்ல தம்பி நீ நாளைக்கு “கர்நாடகவிற்கு சரக்கு எடுத்துட்டு” போகனும். இந்தா பத்தாயிரம் ரூபாய் வைத்துக்கோ. சரக்கை காலையில் வந்து வாங்கிக்கொள். எச்சர்க்கையா இருக்கனும் போலீஸ்கிட்ட மாட்டிக்ககூடாது. எதுக்கு உன்னை அனுப்புறேன் தெரியுமா படித்தவன், புதுப் பையன் என்பதால் தான் உன்னை அனுப்புகிறேன்.

அகிலன், “பணத்தை வாங்கியவன் சரினு தலையை ஆட்டிவிட்டு பயத்தோடு” சென்றான்.

மாலை  மங்கியது மனோஜ் குமார் கோபமாக வீட்டிற்குள் வந்தார்.

தொடரும்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்