Loading

அத்தியாயம்−2

துகிலன் துமியை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க. துமி போனதுக்கூட அவனுக்குத்தெரியவில்லை.

அமுதன், “துகிலா” அங்கு என்னடாப்பண்ற. அவங்க குடித்த கப்பைக்கொண்டு வந்துக்கொடுத்துவிட்டு, இங்கு வந்து, “வடைக்கு வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி கொடுடா”. என தன் தம்பியை கூப்பிட்டான்.

துகிலன் மனதிற்குள், அடப்பாவி என்னை “ஆபிசிற்கு” லீவு போட சொல்லிவிட்டு, வெங்காயம் நறுக்கக்கூப்பிடறியே!. உனக்கு வெங்காயம் நறுக்க வந்தாலும். என் கண்ணில் என் காதலியைக்காட்டிவிட்ட. இனி, தினமும் இங்கே! வந்து என் காதலிக்காக கண்ணீரை கரைத்துவிட தயார் என்று தனக்குள் முனகியப்படியே! போய் வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்தான் தன் கண்களிலிருந்து கண்ணீர் வடிய.

டேய், அகிலா கண்ணீர் எரியுதாடா. அமுதன் கேட்க.

இல்லை அமுதா, கண் எரியலை “குளுமையாக இருக்கு”.நான் ஆபிசுக்கு போகாமல், உன்கூட வேலைக்கு வந்துரட்டுமா. என் காதலியை பார்த்து ரசித்துக்கொண்டேயிருக்கலாம்னு தனக்குள்ளே பேசினான்.துகிலன்.

என்னடா? இங்கு வரதுக்கு முன்னாடி, என் ஆபிஸ் எம்.டி “தங்குஸ் மண்டையன்” எகிறுவான் சொல்லிக்கொண்டிருந்த. இப்போ! இங்கே வேலைக்கு சேர்ந்துக்கொள்கிறேன் சொல்ற. என்னடா? உனக்குள்ள நடக்குது. நீ காதலிக்கும் பெண் இந்தக்காலேஜ்ஜில் படிக்கிறாளா?.என்று அமுதன் கேட்க.

துகிலன், பல் இளித்தப்படியே! இல்லை அமுதா. இந்தக்காலேஜ் நல்லாருக்குனு மழுப்பினான்.

சரி, சரி, மழுப்பாமல் சீக்கிரம் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கிக்கொடுடா. “வடைக்கு பருப்பு ஆட்டி வைத்து நீண்ட நேரமாக காத்துக்கொண்டிருக்கிறது”. அமுதன்.

துகிலன் தன் கையிலிருந்த கத்தியை ஸ்டைலாக திருப்பி,வெங்காயத்தை பொடிசாக நறுக்கி தன் அண்ணனிடம் கொடுத்தான்.

“துமி, தன் தோழிகளுடன் வகுப்பில் நுழைந்தவள்.  தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.”

ஏய்! துமி, கேண்டினில் ஒருத்தன் காபி கொண்டு வந்துக்கொடுத்தானே!. பார்க்க எப்படி? இருக்கிறான் என்று துமியின் தோழி விமலாக்கூற.

ஏய்! அவன் எப்படி? இருந்தா உனக்கென்னடி. நீ அவன “லவ் பண்ணப்போறியானு” இன்னொரு தோழி ரம்யா கேட்க.

இல்லடி, அவன் காபி கொண்டு வந்துக்கொடுத்ததிலிருந்து, துமியைதான் பார்த்துக்கொண்டிருந்தான். அதற்காகதான் கேட்டேன். விமலா.

அவன், பார்த்தப்பார்வையே சரியில்லை. ஆளை முழுங்கிறமாதிரி. தனக்குள் முனவியப்படியே!.அதை விட்டுத்தள்ளிவிட்டு, படிக்கிற வேலையைப்பாருங்க. துமி.

“தோழிகள் இருவரும், இவளுக்குதான் ஏற்கனவே ஆள் இருக்கே. மறந்தே போயிட்டோம்”. தன் புத்தகத்தில் மூழ்கிப்போனார்கள்.

அகிலன், தன் அம்மா ஆபரேஷனுக்காக நண்பர்கள் சொன்ன வேலைக்கு மனதை கல்லாக்கிக்கொண்டு கிளம்பினான்.

“ட்ரக்ஸ் கம்பெனிற்குள் நுழைந்தவன் வெறிக்க வெறிக்கப்பார்த்துக்கொண்டிருந்தான்”. அகிலன்.

என்னடா! அகிலா, வெறிக்க வெறிக்கப்பார்க்கிற. வாடா, பாஸ்ஸிடம் போகலாம்னு அழைத்து சென்றார்கள். 

அகிலனும், நண்பர்களை பின் தொடர்ந்து, அவர்கள் பாஸ்ஸிடம் சென்று “பவ்யமாக” நின்றுக்கொண்டிருந்தான். அகிலன்.

பாஸ், நாங்கள் சொன்ன என் நண்பன் இவன்தான். அகிலனை”அறிமுகப்படுத்தி வைத்தார்கள். 

உன் பெயர் என்னானு குரல் உயர்த்திக்கேட்டார் பாஸ்.

என் பெயர் அகிலன் சார்.

“இந்த வேலையை முழுசம்மதத்துடன்தான் செய்வதற்காக வந்திருக்கிற. யாரும் கட்டாயப்படுத்தலையில்லைதானே!. பாஸ்.

இல்லை, சார், நான் முழு சம்மதத்துடன்தான் இந்த வேலைக்குவந்திருக்கிறேன். அகிலன்.

சரி, சரி, டேய்! உன் நண்பனைக்கூட்டிக்கொண்டுப்போய் வேலையை கத்துக்கொடு கட்டளையிட்டார்.

“அகிலனின் நண்பர்கள் கூட்டிட்டுப்போய் வேலையை அப்படி செய், இப்படி செய் என்றுக்கத்துக்கொடுத்தனர்”.

, அவர்கள் கத்துக்கொடுத்தப்படி செய்துக்கொண்டிருந்தான்.அகிலன்.

நண்பர்கள், “ட்ரக்ஸ் பாக்கெட்டை ஒரு தோள்பையில் போட்டு எடுத்துக்கொண்டுப்போனார்கள். வெளியில் விற்பனை செய்வதற்காக.”

மகிழ்விழி, ஆபரேஷன் தியேட்டர்க்கு வெளியில் காத்துக்கொண்டிருந்தாள்.

டாக்டர்கள், ஆபரேஷன் முடித்து வெளியே வந்தவர்கள். உன் அம்மாவிற்கு நல்லப்படியா ஆபரேஷன் முடிந்துவிட்டதும்மா. இனி பயப்படதேவையில்லை. உன் அண்ணனுக்கு போன் போட்டு விபரத்தை சொல்லிவிடு. ஒரு மணிநேரம் கழித்து, நார்மல் வார்டிற்கு மாத்திவிடுவோம். என்று கூறிவிட்டு தன் ரூமிற்கு கிளம்பிப்போனார்கள்.

மகிழ்விழி, தன் அம்மாவிற்கு “ஆபரேஷன் முடிந்த விஷயத்தை சொல்வதற்காக மகிழ்ச்சியாக” தன் போனை எடுத்து அகிலனிற்கு போன் பண்ணினாள்.

அகிலன், போன் எடுக்கவேயில்லை. தன் வேலையில் பிசியாக இருந்தான்.

மகிழ்விழி, போனைப்போட்டு, போட்டுப்பார்த்து சலிப்பாகி சேரில் அமர்ந்திருந்தாள்.

“ஒரு மணிநேரம் ஆனதும். தமிழரசியை நார்மல் வார்டிற்கு மாத்தினார்கள்”.

நர்ஸ் வந்து, நீங்கள் போய், உன் அம்மாவைப்பாருங்கள் என்றுக்கூறிவிட்டு செல்ல.

தன் அம்மாவைப்பார்ப்பதற்காக கண்ணிர் சொரிந்தப்படியே! உள்ளேப்போனாள்.மகிழ்விழி.

தமிழரசி, உடல் சிறிதாக அசைவுக்கொடுத்தது. மெதுவாக கண் திறந்துப்பார்த்தாள்.

அம்மா, அம்மா உனக்கு எதுவும் ஆகலைமா. நீ இப்போது! நல்லாருக்கிறம்மா. சரியான நேரத்தில் அண்ணனுடைய நண்பர்கள் வந்து பணத்தைக்கட்டி உன்னைக்காப்பாத்திட்டாங்க. என்று கண்ணிரை துடைத்துக்கொண்டே கூறினாள்.

“உன் அண்ணன் எங்க? மகிழ்னு தழுதழுத்த குரலில் பேசினாள்.” தமிழரசி.

அண்ணா, வேலைக்குப்போயிருக்குமா.என்னிடம் உன்னைப்பார்த்துக்க சொல்லிட்டு போயிருக்கும்மா பூரிப்புடன் சொன்னாள்.மகிழ்விழி.

என் மகன் வேலைக்குப்போயிருக்கிறானா?. ஆச்சரியமாகக்கேட்டாள். மகமாயி, என் மவன் வேலைக்குப்போறதுக்காகதான் எனக்கு இந்த “விபத்தை” உண்டாக்கினியா?. அவன் வேலைக்குப்போய் நல்லா வாழனும் மகமாயி. உனக்கு அளவுக்குத்திக்கொண்டு ஊர்வலமாக வருகிறேன்னு. கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தாள். தமிழரசி.

அம்மா, பார்த்தியா? உன் மகன் மட்டும் நல்லாயிருக்கனும் வேண்டுறியே!. நான் நல்லாருக்கனும்னு வேண்டிக்கோம்மா.மகிழ்விழி.

அடிப்போடி, உன் அண்ணன் வேலைக்குப்போயிருக்கிறான்ல. இனி நமக்கு “விடிவுகாலம்தான்”. மண்டைக்கட்டுப்போட்ட முகத்தில் புன்னகை தவழ்ந்தது.தமிழரசிக்கு.

“சாயந்தரம் ஆனது. வகுப்பைவிட்டு காலேஜ்ஜிலிருந்து எல்லாரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.

துகிலன், காலேஜ் விட்டுப்போறப்பெண்கள் எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்தான். துமி கண்ணில் தென்படுவாளா என்று.

துகிலன் பார்வையில் கடந்து, துமி காலேஜ் வாசலைக்கடந்து இருந்தாள்.

ச்சே! இப்போதான் பார்த்தேன். அதுக்குள்ள போயிட்டாங்களே!. விடு துகிலா. இந்தக்காலேஜ்ஜில்தானே படிக்கிறாங்க. அண்ணன் கேண்டினை சாக்காக வைத்துப்பார்க்க வேண்டியதுதான். என்று தனக்குள் முனகியப்படியே! “கேண்டின் சேரில் போய் அமர்ந்தான் சோகமாக”.

என்னடா? எக்கி எக்கி போறப்பெண்களையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த. இப்போ! சோகமா வந்து உட்கார்ந்திருக்கிற.அமுதன்.

அதவிடு, அமுதா. கேண்டினை எத்தனை மணிக்கு குளோஸ் பண்ணுவ.துகிலன்.

என்ன? ஏழு மணிக்கு குளோஸ் பண்ணிட்டு வீட்டுக்குப்போகலாம். அமுதன்.

அதுதான் காலேஜ்ஜில் படிக்கிறவங்க எல்லோரும் போயிட்டாங்களே!. இப்பவே குளோஸ் பண்ணிட்டு போகலாம். ஏன்? ஏழு மணி வரைக்கும் காத்திருக்கனும்.துகிலன் கேள்வியாய்க்கேட்டுக்கொண்டிருந்தான்.

டேய், காலேஜ்ஜில் பசங்க போனாங்கனா என்ன? பிரபொஸர் இருப்பாங்க. அவங்க வந்து, டீயோ! காபியோ குடிப்பாங்க. அவங்களுக்காகதான் ஏழுமணி வரைக்கும் திறந்து வச்சிருக்கிறேன். அமுதன்.

சரி, சரி, நீ உன் வேலையை கண்டன்யூ பண்ணுனு. தன் போனை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான். அப்போது! யாரோ இவள் யாரோ என் முன்னாடி வந்து போகிறாள்னு ரிங்டோன் ஒலித்தது. ஆன் செய்து காதில் வைத்தவன்.

டேய், துகிலா “ஆபிசுக்கு லீவு” போட்டுட்டு எங்கடா போன. அந்த தங்குஸ் மண்டையன் என்னைக்காச்சி எடுத்துட்டான்டா. நீ மீட்டிங் அட்டன்ட் பண்ணாததாலனு துகிலன் நண்பன் சஞ்சய் கூறினான்.

மச்சி, முக்கியமான வேலைக்கு வந்துட்டன்டா. நான் நாளைக்கு வந்ததும். அந்த தங்குஸ் மண்டையன்கிட்ட பேசிக்கிறேன்.நீ இப்போது! போன் வை மச்சினு போனை ஆப் செய்துவிட்டு. போனில் வீடியோப்பார்த்துக்கொண்டிருந்தான். துகிலன்.

“காலேஜ் வாசலில் அகிலன் நண்பர்கள் தன் தோளில் மாட்டியிருக்கும் தோல்பைகளில் உள்ளிருந்து, சில பாக்கெட்டுக்களை எடுத்து வாசலில் காத்துக்கிடந்த காலேஜ் பசங்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்ததை துகிலன் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்”. 

 

தொடரும்..

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments

    1. அருமையான சமூகம் சார்ந்த கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

      1. உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி சகோ

    2. Brinda Vijayakumar

      எல்லாரும் தங்களோட சுயநலத்துக்காக இது போன்ற வேலை செஞ்சா , இளம் தலை முறையோட எதிர் கால வாழ்க்கை என்ன ஆகாரது.. துமி, துகிளன், பேர் நல்லா இருக்கு….

      1. நன்றி நன்றி சகோ. ஆம் தன் சுயநலத்திற்காக பலபேர் இநகதமாதிரி வேலைகளில் ஈடுபட்டு இளைய சமூதாயத்தை சீரழிக்கிறாங்க. ஆனால் அந்த நுன்கிருமிகள் கண்ணுக்கு புலப்படுவதில்லை

    3. அகிலனோட அம்மா அவனுக்கு வேலை கிடைச்சிருச்சுனு சந்தோசப்படுறாங்க..அவன் பார்க்கற வேலையைப் பத்தி தெரியவரும் போது தாங்கிப்பாங்களா….துமிக்கு ஆல்ரெடி ஆள் இருக்கறது தெரியாம துகிலன் கேண்டின்ல கண்ணீர் வடியற வேலையை பார்க்றான் ஆபிஸ் கட் பண்ணிட்டு🤭🤭🤭…அகிலன் ட்ரக்ஸ் சப்ளை பண்றதை துகிலன் பார்த்துட்டான்

      1. எந்த ஒரு அம்மாவும் தன் மகன் தவறான வேலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்தால் மனமுடைந்துதான் போவார்கள். அகிலனோட அம்மாவுக்கு எப்படியும் ஒரு நாள் உண்மை தெரிய வரதான் போகிறது. அப்போது அவர்கள் என்ன? செய்வார்கள் என்று பார்க்கலாம். காதல் வந்துவிட்டால் கண்ணிர் சிந்திதானே ஆகனும். அதுதான் துகிலன் செய்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு துமி யாரென்று தெரிந்தால் துமியை காதலிப்பது விடுவானா காதலிப்பானா என்று பின்வரும் அத்தியாயங்களில் தெரிய வரும் நன்றி மகிழ்ச்சி சிஸ். உங்கள் ஆழ்ந்த விமர்சனத்திற்கு

    4. அருமையான சமூகம் சார்ந்த கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.