Loading

குட்டி டீஸர் −2

“காஞ்சிக்காமாட்சியம்மன் கோயிலிலிருந்து கிளம்பிய அகிலன்,  வழக்கமாக சந்திக்கும் ரெஸ்டாரண்ட்டில் காத்துக்கொண்டிருந்தான் துமிக்காக.”

துமி, “புடவையை மாற்றிக்கொண்டு சல்வாரில்” அகிலன்  காத்துக்கொண்டிருக்கும் ரெஸ்டாரண்டிற்கு வந்து அவன் முன்னாடி அம்ர்ந்தாள்.

துமி, நீ இன்னைக்கு எவ்வளவு? அழகா இருக்கறதெரியுமா?. அந்த “தேவதையை” நேரில் வந்தமாதிரி இருந்தது. “நான் கவிஞனாக பிறக்கவில்லேயே! இருந்திருந்தால் பல கோடி கவிதைகளை படைத்திருப்பேன்” உனக்காக அகிலன் அவள் அழகை வர்ணித்துக்கொண்டிருந்தான்.

அகிலா,என் அழகை வர்ணித்ததுப்போதும் எப்போது? நீ வேலைக்குப்போறது. நம் விஷயத்தை நம் அப்பாவிடம் சொல்லி நாம் கல்யாணம் செய்துக்கொள்வது.துமி கேட்டுக்கொண்டிருக்க.

அகிலன், சிறிது நேரம் அமைதிக்காத்தவன், துமிம்மா, நான் வேலைக்கு டிரைப்பண்ணிக்கொண்டுதானிருக்கிறேன். எனக்குதான் வேலைக்கிடைக்கமாட்டேங்குது. என்ன செய்வது.

அகிலா, இப்படியே! எத்தனைக்காலம்தான் என்னிடம் சொல்லிக்கொண்டிருப்ப.”உன் அம்மாவை கொஞ்சமாச்சும் நினைத்துப்பாரு. அவங்க வேகாத வெயிலில் போய் வீடு வீடா காய்கறி வித்துட்டு வந்து, உனக்கும் சோறு போட்டுக்கொண்டு, உன் தங்கச்சியும் படிக்க வைக்கிறாங்க”.அதை மனதில் வைத்துக்கொள் அகிலா.

முகத்தை சுணங்கியப்படியே! துமி உனக்கு காலேஜ்ஜிற்கு டைம் ஆகிவிட்டது கிளம்பு. நான் அடுத்தமுறை சந்திக்கும்போது, நல்ல வேலேயில் சேர்ந்துவிட்டுதான் வந்து சந்திப்பேன். கோபமாக டேபிளை விட்டு எந்திரிச்சான்.

அவன் கையப்பிடித்து அமர வைத்து, நல்லது சொன்னா கோபம்தான் வருது. புரிஞ்சிக்கோ. “நம்ம வாழ்க்கையும் இதில் அடங்கியுள்ளது”.அவன் கைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.

துமி, இந்தக்கை எப்பவுமே பிரியக்கூடாது என்றால் நான் நல்ல வேலைக்குப்போறேன். நம்ம எதிர்காலத்திற்காக. 

“இப்பதான் நல்லப்பையன் என்று அவன் தலைமுடியை கோதிவிட்டு, அவனைப்பார்த்துக்கொண்டிருந்தாள்” துமி.

இரு கண்களும்  பார்த்துக்கொண்டிருந்தது வெயிட்டர் வரும் வரைக்கும்.

வெயிட்டர் வந்ததும் இரு காபியை ஆர்டர் பண்ணிக்குடித்துவிட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்கள்.

துகிலன், “ஆபிஸ் கிளம்புவதற்காக ரெடியாவதற்காக நிலைக்கண்ணாடி முன்னாடி நின்று , ஒப்பனை பார்த்துக்கொண்டிருக்கும்போது, “துமியின் பிம்பம் பிரதிபலித்தது”. அவன் மனதிற்குள் ஆயிரம் பட்டம்பூச்சிகள் சிறகை விரித்துப்பறந்துக்கொண்டிருந்தது. கற்பனையில் கவிதை வரிகள் தோன்றிக்கொண்டிருந்தது.

பெண்ணே உன் வதனத்தை

எப்படி அந்த பிரம்மன் படைத்துவிட்டான்

ஆயிரம் நிலவுகள் ஒருசேர

மிளிர்கிறதே 

இதைப்பார்த்த என் மனம்தான்

தொலைந்துப்போகிறதே

நான் உன்னுள் தொலைந்திடவா

பெண்ணே

உன்னைக்கண்ட விழிகள்

அகல மறுக்கின்றதே

இதழ்கள் பட்டென்று

உன்னிடம் காதல் சொல்லத்துடிக்கின்றதே

மறுபடியும் எப்படி உன்னைக்காண்பேன்

மனம் ஏங்குகிறதே

பெண்ணே!

“கவிதையை மனதில் வர்ணித்தவன் ஒரு குரல் அழைத்து களத்தது அவன் கற்பனையை”.

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்