Loading

சரணடைந்தேன்..2

இளா ஜீப்பை ஓட்டிக் கொண்டிருக்க, அருகில் சத்யன் அமர்ந்திருந்தான்.. வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த சதியனின் கண்களில் விழுந்தனர், சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணும், சிறுமியும்.. சைக்கிள் ஓரத்தில், பால் கேனைக் கட்டிக் கொண்டு, கேரியலில் ஒரு சிறுமியை அமர வைத்து அவ்வப்போது, அந்த சிறுமி விழுந்து விடாதவாறு, இடுப்பில் இருந்த கையை தன்னை இறுக பிடித்து கொண்டாள்..

  அந்த சிறுமியும், அவளின் இடையில் கைபோட்டு முகத்தை முதுகில் பதித்து இருக்க, ஏனோ அதை பார்க்கவே சத்யனுக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது.. அந்த பெண்ணின் முகம் தெரியவில்லை யோசனையாக “ டேய் வேந்தா யாருடே இது ஊருக்கு புதுசா இருக்காவ?” பக்கத்தில் இருந்த வேந்தனிடம் கேட்க, வேந்தனும் அந்த பெண்ணை பார்த்தான்..  எனக்கும் தெரியலடே  பொறு விசாரிச்சு சொல்றே..” என்ற வேந்தனிடம்

“வேணாம் டே பஞ்சாயத்துக்கு நேரமாகிட்டு இங்கதான இருக்காவ பார்த்துக்கலாம்.. நீ ஜீப்பை கூட்டத்துக்கு விடு..!!” என்றவன்.. அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே வந்தான்.. “டேய் வேந்தா ஜீப்பை கொஞ்சம் முன்னாடி விடுடே முகத்தை பார்க்கலாம்..” ஆர்வத்தில் வாய்தவறி உளறிய நண்பனை ஆச்சரியமாக பார்த்தான் வேந்தன்..

”ஹி ஹி அது இவியள எங்கேயோ பார்த்திருக்க மாதிரி தோணுதுடே அதான் ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.. நீ ரோட்டை பார்த்து ஓட்டுலே” நண்பனுக்கு விளக்கம் சொன்னவன் பார்வையை வெளியில் செலுத்த.. அந்த இருவரும் எங்கோ மறைந்து விட்டிருந்தனர்..  ஒரு பெருமூச்சுடன் மீண்டும் பார்வையை சாலையில் செலுத்தினான்..

அங்கு கூட்டத்தில் என்ன பேசுவதென்று யோசித்தவாறே வந்த சத்யன், சாலையில், டூவீலரில் ஒருவன் சென்று கொண்டிருப்பதை பார்த்து யோசனை வந்தவனாக தனக்குள் சிரித்துக்கொண்டான்..

சத்யனும், வேந்தனும் அங்கு வந்து சேர, முதலிலேயே ஊர்மக்கள் அங்கு கூடியிருந்தனர்.. அனைவரும் அவனுக்கு வணக்கம் வைக்க, ஒரு கம்பீர தலையசைப்புடன் அதை ஏற்றவன், இருக்கையில் அமர்ந்தான், சில நொடிகள் அமைதியாக இரு குடும்பத்தாரையும் ஆராய்ந்தவன், “ம்ம் சொல்லுவே.. உனக்கு என்ன பிரச்சினை.. எதுக்குடே உன் பொஞ்சாதியை வெட்டிவிடணும் நினைக்கிற..?” அதட்டலாக கேட்க,

“அய்யா அதை நாஞ்சொல்றேங்க..”  என்று முன்வந்தார் அந்த பையனின் அன்னை.. சத்யன் அவரை ஒரு பார்வை பார்க்க, அவர் கால்கள் தானாக பின்னடைந்தது.. “ம்ம் சொல்லுடே எதுக்கு உன் பொஞ்சாதியை வெட்டிவிடனும் நினைகிற..” அழுத்தமாக கேட்க, “அய்யா எங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லய்யா.. அதான் இவளை வெட்டிவிட்டு வேற கல்யாணஞ் செய்யலாம்னு இருக்கேன்.. நீங்க தான் இவக்கிட்ட இருந்து விடுதலை வாங்கி தரணும் அய்யா..” கை கூப்பி நின்றான்..

தன் மீசையை நீவியவாறே அவன் சொல்வதை கேட்டிருந்தவன், “சரி உன் விருப்பப்படியே செய்யலாம்..” என்றவனை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, பெண்ணின் தந்தையும், அவளின் அன்னையும் ”அய்யா..!” ஒருசேர அழைக்க, “கொஞ்சம் பொறும் நான் பேசிட்டு இருக்கேன்..” அவர்களை அழுத்தமாக பார்த்து சொல்ல,  சத்யன் பேச்சிற்கு கட்டுப்பட்டு, கண்ணீருடன் அமைதியாக நின்றனர்.. 

மீண்டும் அந்த பையனிடம் திரும்பியவன், ” ஆனா கடைசில பேச்சு மாற மாட்டதானடே..” உறுதிபடுத்தி கொள்ள கேட்க, “அய்யா எனக்கு இந்த பீடை..”  ” எடே இன்னும் அடுத்த வார்த்தை தப்பா வந்துச்சு உன் அம்மை அப்பனுக்கு வாரிசு இருக்காது..” என்று எச்சரிக்க, சத்யனின் கோபத்தில், அடங்கியவன், அய்யா எனக்கு இவ வேணாம் அய்யா..” என்றவனிடம்

” உறுதியா தான் சொல்றியாலே உம் பொஞ்சாதிய பிரிச்சு விட்றலாம்ல, மறும்படியும் கேட்க, சதயன் திரும்ப திரும்ப கேட்கவும், அவனுக்கு என்ன தோன்றியதோ, “ அய்யா என் பொஞ்சாதி தங்கமானவங்க.. அவள குற்றஞ் சொல்லலை.. ஆனால் அவ வயித்துல  ஒரு குழந்த பொறக்கமாட்டிங்குதே.. குடும்பம் தழைக்க ஒரு வாரிசு வேணும் நினைக்கிற என் ஆசைல என்ன தப்பு இருக்குங்கையா..? வேணுமின்னா  நான் என் பொஞ்சதிய பிரியலை.. அவக்கிட்ட நான் ரெண்டாம் கல்யாணம் செய்றதுக்கு சம்மதம் மட்டும் வாங்கித் தாங்கய்யா.. இவளும் ஒரு ஓரமா எங்க குடும்பத்துல இருந்துட்டு போவட்டும்..” பெரியமனது வைத்து சொல்ல,

 

சத்யனால் மணி என்று அழைக்கப்பட்ட பெண், கணவனின் பேச்சை கேட்டு கதறி அழுதாள்… “இப்ப எதுக்கு அழறவ.. வாயை மூடு..” சத்யன் அந்த பெண்ணை அதட்டவும் தன் கையால், வாயை இறுக மூடிக்கொண்டாள் அவள்.. ”  “ அவன் சொல்றதிலேயும் தப்பு இருக்கிற மாதிரி தெரியலமா.. இந்தா இந்த பத்திரத்துல கையெழுத்து போடு..!” அந்த பெண்ணிடம் பத்திரத்தை நீட்டினான்.. சத்யனை நிராசையுடன் பார்த்தவாறே, அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டாள்.. அதை வாங்கி அந்த பெண்ணின் கணவனிடம் கொடுத்தவன் இதோட உனக்கும் இவளுக்குமான உறவு முடிஞ்சதுடே..” எனவும், அப்பெண்ணின் மாமனார், மாமியார் முகத்தில் சந்தோசம்.. ஆனால் கணவனின் முகத்தில் குழப்பம்..

 

 ”என்னடே யோசனை அதேன் அய்யாவுகளே எந்த பக்க நியாயம் இருக்குன்னு பார்த்து தீர்ப்பு சொல்லி அவளை வெட்டி விட்டுட்டாவள்ல, அப்பறம் என்ன..? இப்பதான் நிம்மதி.. வாடே வீட்டுக்கு போகாலாம்.. உன்ன கல்யாணம் பண்ணிக்க என் அண்ணன் மவ தயாரா இருக்காடே” அந்த பையனின் அன்னை அழைக்க,  அவன் தன் மனைவியை பார்த்தான்.. அவளின் கண்ணீர் அவனை ஏதோ செய்தாலும்,  நிதர்சனம் உணர்ந்து அமைதியாக தன் பெற்றோருடன் சென்றான்..

 

 ”இளா..!” சற்று தள்ளி இருந்த நண்பனை அழைக்க, வேந்தன் சத்யன் அருகில் வந்தான் கூடவே ஒரு அழகான இளைஞனும்..  சத்யன் குரல் கேட்டு மணியின் கணவன் திரும்பி பார்க்க, இளாவுடன் ஒரு இளைஞன் இருப்பதை பார்த்து குழப்பமாக நின்றான்.. அனைவரும் அந்த புதியவன் யாரென்று  ஆச்சரியமாக பார்க்க, “என்ன பார்க்கிறிங்க..? இவர்தான் நம்ம மணியை அதாவது மணிமேகலையை கட்டிக்க போற புது மாப்பிள்ளை.. இவர் சென்னையில பெரிய வசதி படச்சவருதேன்.. வேலை விசயமா இங்க வந்திருக்காவ

 

 இங்க கூட்டத்தை பார்த்து என்ன விசாரிச்சு மணியை பத்து கேட்டதும், அவரே மணியை கட்டிக்கிறேன்னு சொல்லிட்டாவ,  அவருக்கு மணிக்கு குழந்தை இல்லாதது பெரிய பிரச்சினை இல்லையாம்.. அவருக்கு மணியை ரொம்ம பிடிச்சுருக்காம் அவளை மட்டும்  கட்டி கொடுத்தால் போதும் சொல்றாவ.. எனக்கு இர்ஹுல சம்மதந்தேன்.. நீங்க எல்லாரும் என்ன சொல்றிய..?” ஊர்மக்களை பார்த்து கேட்க,

 

“யார் பொண்டாட்டியை யார் கல்யாணம் செய்றது..? அவ எம் பொஞ்சாதி, “ ஆவேசமாக பேசிக்கொண்டு மணியின் கணவன், முன்னே வர, அனைவரும் ஆ வென வாய்பிளந்து பார்த்தனர்..  இருக்கையில் இருந்து நிதானமாக எழுந்த சத்யன், “ இப்ப அவ உம் பொஞ்சாதி இல்லடே பத்து நிமிசத்துக்கு முன்னாடிதேன் உனக்கு அவக்கிட்ட இருந்து விடுதலை கிடிச்சிருக்கு.. நீ எப்படி தனி ஆளோ இனி அவளும் தனி தான்.. நீ வேற கல்யாணம் செய்ய போற அவளும் வேற கல்யாணம் செய்ய போற அதுல உனக்கென்னடே..” என்று கேட்க

 

அவன் திகைத்து நின்றான்.. “ நீ கேட்டதை வாங்கி கொடுத்துட்டேன்.. இனி இவ விசயத்துல நீ தலையிட கூடாது..” என்று அழுத்தமாக சொல்ல,

வர்ற முகூர்த்தத்துல நம்ம மணிமேகலைக்கும், இவர்..” அந்த புதியவை காட்டி ஒரு நொடி யோசித்தவன், “ஹான் இவர் பேர் சந்தோஷ்கான்.. ஆமா சந்தோஷ்கான்” தனக்கு தானே ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொண்டு, வர மூர்த்த்த்துல ரெண்டுபேருக்கும் கல்யாணம்..” இது தான் இந்த பஞ்சாயத்து தீர்ப்பு..” இடையே மணிமேகலை பேச வந்த்தையும் தடுத்து தன்னுடைய முடிவை சொல்ல,

“இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்..” பெருங்குரலெடுத்து கத்தினான், மணியின் கணவன், “உன் சம்மதம் யாருக்குடே தேவை.. நீதான் பத்திரத்தில கையெழுத்து வாங்கிட்டேல்லடெ, உன் சோலியை பார்த்து போடே..” என்று அதட்ட,  இத்தனை நாட்களாக, தன்னில் ஒருத்தியாக இருந்தவள் ந்று பிரிந்த்ஹே மனம் ஒரு மாதிரியாக இருக்க, சத்யன் பேச்சிலும், அந்த புதியவன் தோற்றத்திலும் பொறாமை உணர்வு தலைதூக்க தன் கையில் வைத்திருந்த பத்திரத்தை சுக்குநூறாக கிழித்தவன்,

“ இப்பவும் அவ என் பொஞ்சாதிதேன் எனக்கு குழந்தை இல்லேனாலும் பரவாயில்லை.. எனக்கு எம் பொஞ்சாது தான் வேணும்..” என்று அடம்பிடிக்க, “ஏலே உன் பொஞ்சாதி வேற ஒருத்தனை கல்யாணஞ் செய்ய போறான்னு இப்ப மனசு மாறுதியாடே.. உனக்கும் இவளுக்கும் உள்ள உறவு,முறிஞ்சிருச்சுடே” நீ இவ வாழ்க்கையில குறுக்கிடாத, “ என்ற சத்யனிடம் அதெல்லாம் முடியாதுய்யா நான் பஞ்சாயத்த்து கூட்டினது தப்புதேன்.. இனி எப்பவு இந்த தவறை செய்ய மாட்டேன் தயவு செய்து என் பொஞ்சாதியை என்கூட சேர்த்து வச்சிருங்கையா..” என்று கை கூப்பி கெஞ்ச,

“அடிங்க.. முட்டாள் நீ வேணாம் சொன்னா போறதுக்கும், வேணும் சொன்னா வாரதுக்கும், அவ என்ன உன் பொம்மைன்னு நினைச்சியா..? இல்லை குழந்தை பெத்து போட்ற மிசின் நினைச்ச்யா..? உன் பொஞ்சாதிடே.. உன்னோட சரிபாதி, உனக்காக தன்னை பெத்து வளர்த்தவங்களை விட்டு நீயே தஞ்சமென வந்த மகாலக்ஷ்மி அவளை போய் அத்துவிட வந்து நிக்கிற,”  சத்யன் அதட்ட, அவன் தலை குணிந்த்து நின்றான்..

”இந்தா இதை படிச்சவங்க யார்க்கிட்டஇயாவது படிக்க சொல்லி கேளு.. ஆறு மாசத்துக்கு முன்னாடி நீயும், உம் பொஞ்சாதியும் போய் செக் பண்ண ரிப்போர்ட்.. உன் பக்கம் தான்டே குறை இருக்கு.. அதுவும் சரிபடுத்தக்கூடிது தான் உன் பொஞ்சாதி உனக்கே தெரியாம உன்னை அதுல இருந்து குணப்படுத்த முயற்சி செஞ்சுட்டு இருந்தா.. நீ அதுக்குள்ள பஞ்சாயத்தை கூட்டிட்ட.. உன் குறையை உனக்கே தெரியாம குணப்படுத்தின அவ எங்க..?! அவக்கிட்ட இல்லாத குறையை கண்டுபிடிச்சு, பழிசொன்ன நீ எங்க..?” சொல்லுடே.. இப்பா யார்க்கிட்ட குறை இருக்கு..? இப்பா அவதாண்டே உன்கிட்ட இருந்து விடௌதலை வாங்கணும்..” என்று நீளமாக பேசி முடிக்க,

“என்னை மன்னிச்சிரு மணி..‼” என்றவாறு அவளின் காலில் விழ, கூட்டத்தில் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்த்தனர்.. கணவன் காலில் விழுந்ததும் அவள் பதறி அவனை தூக்கினாள்.. அந்த குடும்பம் சமாதானம் அகிவிட,  “ என்ன பங்கு இப்படி சடன்னா கால்ல விழுந்துட்டான்..” சத்யன் ஆச்சரியமாக கேட்க, “ஒருவேளை உன் பேச்சை கேட்கிறதுக்கு பதிலா இப்படி எதாவது செஞ்சு உன் வாயை அடைச்சிரலாம்னு நினைச்சிருப்பானோ பங்கு..?” வேந்தன் யோசனையோட சொல்ல, அவனை தீயாய் உறுத்து விழித்த சத்யனை “சும்மா பங்கு.. நீ பேசினது சூப்பர்..!!” என்று பாராட்ட, “அது..!!”என்று கெத்தாக சொல்லியவன்,  

 அந்த குடும்பத்தை நிறைவுடன்  பார்த்திருக்க, சத்யனின் அருகில் வந்த அந்த புதியவன், “சார்  அதான் எல்லாம் சரியாகிருச்சே என் பைக் சாவியை கொடுத்தால் நான் வந்த வேலையை பார்க்க போவேன்..” என்று பணிவுடன் கேட்க..

“ஹே அமெரிக்கா மாப்பிள்ளை நீ இன்னும் கிளம்பலையாடே.” சத்யன் கேட்க, “அது என்ன பங்கு அமெரிக்க மாப்பிள்ளை இவன் அமஞ்சிக்கரன்னு சொனான்லே..  வேந்தன் சொல்ல “அது பங்கு.. இந்த சினிமால எல்லாம் வருவாங்கல்லடே தற்காலிகமா அமெரிக்க மாப்பிள்ளை..  அத மாதி இவரும் வந்தாரா.. அதான் அப்படி கூப்பிட்டேன்..” நண்பனுக்கு விளக்கம் சொன்னவன், “ ஆமா உன் பேரு என்னலே..?” பைக்காரனிடம் கேட்க,

“அப்ப சந்தோஷ்கான் சொன்ன..”?  வேந்தன்  மீண்டும் சந்தேகம் கேட்க.. “அடேய் அது அவசரத்துக்கு நான் வச்ச பேருடே.. இவன் வேற.. சந்தேகம் கேட்டே கொள்றான்..” சலித்துக் கொண்டவன் மீண்டும், அந்த பைக்காரனிடம் பேரை கேட்க, என் பேர் மனோகர் சார்..குற்றால அருவில குளிக்கலாம்னு வந்தேன் வந்த இடத்தில..” என்று நிறுத்திய மனோகரின் தோளில் தட்டிய சத்யன், “சாரிடே.. உன்னை கேட்காம இப்படி சொன்னதுக்கு,,” மன்னிப்பை கேட்க, “அய்யோ சார் அதெல்லாம் பரவாயில்லை.. நல்ல விசயத்துக்கு தான என் பேரை சொன்னிங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை.. நீங்க பேசினதும் கேட்டேன்.. பொண்ணுங்களை எப்படி மதிக்கணும் உங்க பேச்சில கத்துக்கிட்டேன்..” என்று உணர்ந்து சொல்ல, அவனை சிரிப்புடன் பார்த்த சத்யன், மனோவிடம் பைக் சாவியை கொடுத்து,  தோளோடு அணைத்து விடுவித்தான்..

 தன் தங்கையை பள்ளியில் விட்டு வந்த யுவதி வரும் வழியில் கூட்டம் நடப்பதை பார்த்து, முதலில் கண்டுகொள்ளாமல் செல்ல போனவள், காதில் விவாகரத்து பற்றி பேச்சு எழவும், கால்கள் தன்னையறியாமல் கூட்டத்தில் செல்ல, அங்கு மணிமேகலையின் கணவன் பேசிய பேச்சில் அவளின் முகம் செந்தணலாக மாறி நிற்க, அதற்கு தோதாக சத்யனும் பேசியது, அவளின் கோபத்திற்கு தூபம் போட்டது..

 அவனும் ஒரு ஆண்தானே என்று எள்ளலாக நினைத்து கோபமாக சத்யனை நெருங்கி திட்ட போக, அடுத்து, சத்யன் பேசிய பேச்சுக்களில் உறைந்து நின்றாள்.. கண்களில் அவளறியாமல் கண்ணீர் வர அவசரமாக துடைத்துகொண்டு சத்யனை பார்க்க, அவனோடு வேந்தனும், அந்த புதியவனும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டவளுக்கு லேசாக சிரிப்பு வர, பாண்டி அய்யாவோட வாரிசுன்னா சும்மாவா..? எப்படி பேசி அவனை மனசை மாத்திருக்காவ..” சத்யனை பாராட்டியபடி ஊர் மக்கள் கலைந்து செல்ல, அதை கேட்டவாறே தன் சைக்கிளை ஓட்டி சென்றாள்..

பஞ்சாயத்து முடித்த சத்யன், தங்கள் ஊரில் கல்லூரி கட்டுவது சம்பந்தமாக  மாவட்ட ஆட்சியரை பார்க்க, அவர் அலுவலகம் சென்றான்.. அவரிடம் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக  முடிய, நேராக தன் வயலுக்கு வந்தான், அவன் வந்த நேரம் சப்பாட்டு நேரமாக இருக்க, அப்பொழுதுதான் தான் காலையில் எதுவும் உண்ணவில்லை என்பதே நினைவிற்கு வர, பசியின் வீரியத்தை முழுதாக உணர்ந்தான்..

சத்யனுக்கு அண்ணையின் முகம் வந்து போனது.. “ திலகா எனக்கு ரொம்ப பசிக்குது.. நீ என்னை கவனிக்காம ஜாலியா அப்பா கூட மேல டூயட் பாடிட்டு இருக்க போம்மா உன் பேச்சு கா.. அப்பா அண்ணா அண்ணி உங்க கூடயும் தான்..“ மானசீகமாக தன் குடும்பத்தாருடன் சண்ட்டை போட்டவன், அங்கிருந்த ஆலமரத்துக்கடியில் கண்மூடி அமர்ந்தான்.. அவன் கைகள் தானாக வையிற்றை இறுக பிடித்தது..

”டேய் பங்கு இந்தா சாப்பாடு..  சாம்ம்பார் சாதம் போல நல்ல வாசனையா இருக்குடே..” சாப்பாட்டை வாசம் பிடித்தவாறே வேந்தன் சொல்ல, வேந்தனின் குரலில் கண்விழித்த சத்யன், வேந்தன கைகளில் இருந்த சாப்பாடு பொட்டலத்தை பார்த்து கேள்வியாக பார்க்க,  அவனின் பார்வையை புரிந்து, “ இங்க இருக்கிறவியளுக்கு ஒரு பொண்ணு  தினமும் சாப்பாடு செஞ்சு தருவாங்க போல, இன்னைக்கு ரெண்டு சாப்பாடு மிச்சம் ஆகிருச்சாம்.. நமக்கு கொடுத்தாங்க வாங்கிட்டு வந்தேன்..” என்றுவிட்டு ஒரு பொட்டலத்தை கொடுக்க,

“என்னடே நமக்கு மிச்சம் மீதி இருக்கிறதை கொடுக்கிறாவளாக்கும்.. எனக்கு வேணாம் டே..” மறுத்தவன் எதேட்சையாக வேந்தனின் பின்புறம் பார்க்க, காலையில் பார்த்த அதே உருவம்.. சைக்கிள் கேரியலில் சாப்பாடு கூடையை வைத்து தள்ளிக்கொண்டு செல்வதை பார்த்தவன்.. மறுபேச்சு பேசாமல் அந்த உணவை வாங்கி கொண்டான்..

காலையில் இருந்த பசிக்கு அந்த சாம்பார் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் அமிர்தமாக இருக்க வேகவேகமாக சாப்பிட்ட சத்யனை பார்த்த வேந்தன்.. “என்ன பங்கு காலையில உன் அத்தைமக ரத்தினம் கொண்டுவந்த சாப்பாடை சாப்பிடலையா..? இந்த மொக்கு மொக்கிற..” கேலியாக கேட்க, “இல்லடா அதுக்குள்ளயும் இந்த பிரச்சினை வந்திருச்சு.. அப்பறம் அடுத்து அடுத்து வேலை வந்ததுல, மறந்துட்டேன் டா..” என்றவன் கடைசி பருக்கையும் உண்டுவிட்டே கைகழுவினான்.. ரொம்ப திருப்தியா இருக்குடே டேஸ்ட்டாவும் இருக்கு..” என்று மனதார பாராட்ட, வேந்தனும் சிரிப்புடன் ஒத்துக்கொண்டான்..      

மாலை வேளையில், தென்னந் தோப்பிற்கு வந்தவன், “டேய் வேந்தா என்னதான்  சிட்டி லைஃப் ஜாலின்னு சொன்னாலும், கிராமத்து வாழ்க்கை தான் சொர்க்கம்டே.. சூரியன் சுள்ளுனு சுட்டெரிச்சாலும் அத உள்ள விடாம நெருக்கமா இருக்க தென்னைமரமும் இங்க வர காத்தும் பரம சுகம்டே..” கயிற்றுக்கட்டிலில் படுத்தவாறே சொல்ல,

அங்கிருந்த இயற்கையகவே நாற்காலில் போல் அமைந்திருந்த தென்னைமரத்தில் அமர்ந்திருந்த வேந்தனும் அதை ஆமோதித்தான்.. இருவரும் பேசிக்கொண்டிருக்க, “ பங்கு நாளைக்கு தேங்கா பறிக்கணும் ஆள் வரசொல்லுடே நாள மறுநாள்.. லோடு ஆந்திரா போணும்..” என்று சொல்லி சிறிதுநேரம் கண் மூடினான்..

மறுநாள் தென்னந்தோப்பிற்கு வந்தவன், அங்கு தேங்காய் பறிக்க வந்த ஆட்களை பார்த்தவன், “ஆள் பத்தாது டே இன்னும் வேற யார் இருந்தாலும் கூட்டிட்டு வா பங்கு வேலை சீக்கிரமா முடியணும்..” என்று சொல்ல.. வேந்தனும், ஆட்களை அழைத்து வந்தான்..  அந்த ஆட்களில் ஒரு பெண்ணும் இருக்க, சத்யன், வேந்தனை பார்க்க..

“பங்கு இவங்களும் தேங்கா பறிக்க வந்தவிய தான் டே.. நமக்கு மதியம் சாப்பாடு கொடுத்தவகளும் இவியத்தான்.. அப்பறம் நம்ம காலையில சைக்கிள்ல பார்த்ததும் இவியளைத்தான்.. அதை மட்டும் காதில் சொன்ன வேந்தன்  இவிய பேர் கேட்க மறந்துட்டேன்..” என்றவன் அந்த பெண்ணிடம் திரும்பி பேரை கேட்க..

“ என் பேர் சாம்பவி..” நானும் இந்த ஊர்க்காரிதேன்.. மருதப்பனோட பேத்தி..” என்று சொல்ல,  சத்யனுக்கு அவள் குடும்பத்தை பற்றி மனதில் பலகேள்விகள் இருந்தாலும், “உங்களால மரத்து மேல ஏற முடியுமா..?”என்ற கேள்விமட்டும் வர, அவன் கேள்வியில் ரோசம் வரப்பெற்றவள்.. தன் இடையில் கயிற்றை கட்டியவள் லாவகமாக மரத்தில் ஏறினாள்.. அதுவும் அங்கிருந்த அண்களைவிட..

 “முதல் வேளையா நானும் மரத்தில் ஏற கத்துக்கணும் அவள் மரத்தில் ஏறும் வேகத்தையும், லாவகத்தையும்  வாய்பிளந்து பார்த்தவன். தன் மனைதில் உறுதி மொழி எடுத்தான்..

சரணடைவாள்(ன்)                   

   

    

  

 

     

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்