Loading

               பகுதி-30

திருமணம் முடிந்த கையோடு மொத்தக் குடும்பமும் கூடி இருந்தது.  ஜீவனிடம் முத்தரசனைப் பற்றித் தெரிந்து கொள்ள,  இத்தனை மாதங்கள் முடிந்தும் என்ன நடந்தது என்று சொல்லவில்லை அவன் இன்று ஒரே முடிவாகக் கேட்டு விட வேண்டும் என்று குழுமி இருந்தனர்.

“டேய் ! ஜீவா இன்னைக்கு உண்மையைச் சொல்லாம உன்னை விடுறதில்லை .ஒழுங்கா சொல்லு அந்தச் சாமியாரை என்ன பண்ணீங்க… ?”என்று மணிமேகலை கேட்டதும் ஜீவன் சிரித்தபடியே ,”அவரைக் காட்டுக்குள்ள விட்டுட்டோம் அத்தை…  முற்றும் துறந்த சாமியார் இல்லையா ?அதான் அத்தை காட்டில் விட்டுட்டோம் “என்றான்.

“நம்புற மாதிரி இல்லையே…  ஏதோ பெரிய சம்பவம் பண்ண மாதிரி இல்லத் தெரியுது.. “சந்தேகமாகப் புருவம் முடிச்சிட கேட்ட மணிமேகலையைக் கூர்ந்து பார்த்து விட்டு  ,”புரியுது இல்ல அப்புறம் ஏன் கேட்குறீங்க? “என்று கேட்டான்.

“ஜீவா என்ன நடந்தது னு சொல்லிடுவோம் ரொம்ப ஆர்வமா இருக்காங்க இல்ல…??”  என்று தேவா கூறியதும்… ஜீவன் கூறினான்.

“அது அவனுடைய ஆண்மையை நீக்கி விட்டுக் காட்டில் விடத் தான் நினைச்சோம்…  அப்புறம் தான்  யோசித்தேன் காட்டிற்குள் விட்டா தப்பிச்சு வந்து வேற எங்கேயாவது மடம் ஆரம்பிச்சா என்ன செய்வது என்று யோசித்துக் கொடைக்கானலின் மதிகெட்டான் சோலைக்குள் விட்டுட்டோம்…  திரும்பி வந்தாலும் பைத்தியமாகத் தான் வர வேண்டும் .அப்படியே வந்தாலும் சில நாட்களிலேயே பைத்தியம் முத்தி இறந்து போயிடுவான் ஸோ பண்ணிட்டோம்” என்றான் வெகு இயல்பாக.

(  மதிகெட்டான் சோலை    கொடைக்கானலில் இருந்து பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. வனத்திற்கு உள்ளே செல்லாமல் சாலையிலிருந்து இந்தக் காட்டை பார்த்து இரசிக்க முடியும்! வனத் துறையினரின் அனுமதி பெறாமல் இங்கு செல்ல முடியாது. தற்போது இங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் இந்தக் காட்டின் உள்ளே செல்பவர்கள் தங்கள் மதி மயங்கி காட்டை விட்டு வெளியே வராமல் அங்கேயே உயிரை விட்டுவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. மீறி உயிருடன் திரும்புபவர்கள் தங்கள் அறிவிழந்து ஒருவித பைத்தியக்கார மனநிலையில் தான் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தக் காட்டினுள் பலவித மூலிகைகள் இருப்பதாகவும் அவை இந்தக் காட்டிற்குள் நுழையும் மனிதர்களின் மதியை மயக்கி அவர்களின் மரணத்திற்கு காரணமாகிறது என்று சொல்லப்படுகிறது. சித்தர் போகர் உருவாக்கிய சிலை ஒன்று இந்தக் காட்டினுள் இருப்பதாகவும் அந்த சிலையைப் பாதுகாக்க சித்தர்களின் சித்து விளையாட்டுதான் காட்டினுள் அத்துமீறி நுழைபவர்களை இவ்வாறு பைத்தியக்கார மனநிலைக்கு கொண்டு செல்கிறது என்றும் சமயத்தில் மரணத்தை சம்பவிக்கிறது என்றும் கூறப்படுகிறது.)

எல்லோரும் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க,   ஜீவனோ ,”அவனைக் கொடுமைப் படுத்தி வீடியோ எடுத்து வச்சிருக்கான் சந்துரு,   ஏதாவது போலிச் சாமியார்கள் பத்தி தெரிஞ்சதுனா முதல்ல இந்த வீடியோவை அனுப்புவோம் அப்புறம் லைட்டா ஒரு டெமோ,  அப்புறம் ஸ்ட்டெயிட் ஆக்ஷன் தான்… ” என்று சொல்ல அனைவரும் சரி என்றனர்.

“அதானே பார்த்தேன் நீங்களாவது ,விடுறதாவது,  என்னைக் கடத்திய விஷயத்தை எனக்கே கனவு னு நிருபிச்சவங்களாச்சே” என அனுகீர்த்திகா வாரி விட ,வேதா அதிர்ச்சியாக ஜீவனைத் திரும்பி பார்த்தான்.

“டேய் ! ஷாக்கை குறை ஷாக்கை குறை,  அன்னைக்கு வெளியே போக வேண்டாம் என்று சொல்லியும் அனு உனக்கு ஆக்ஸிடன்ட் னு சொன்னதும்  சொல்லாம கொள்ளாம ஹாஸ்பிடல் வந்துட்டா,  அந்தப் பரந்தாமன் ஆட்கள் இவளைக் கடத்திட்டானுக , முத்தரசன் பேசிட்டு இருக்கும் போது சந்துரு ஒட்டுக் கேட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ணான் நானும் உடனே போய்க் கடத்தினவனைச் சாத்திட்டு இவளைக் கொண்டு வந்து வீட்டில் விட்டேன் அப்புறம் தான் உனக்குச் சொன்னேன் உன்னிடம் உண்மையைச் சொன்னா பயந்துடுவியோனு தான் சொல்லவில்லை. அது மட்டுமில்லை  பக்கத்து வீட்டு துரை அங்கிள் வொய்ஃப் அனுவை திட்டுச்சே அதுக்கும் ஒரு செக் வச்சுட்டு தான் வந்தேன் அது தான் அவங்க வீட்டை காலி பண்ணிட்டு கிளம்பி போயிட்டாங்க.. “என்றான் ஜீவன் .

“அப்படி என்ன டா சொன்ன?  வீட்டை காலி பண்ணிட்டு போக அளவுக்கு…” கதிர் சந்தேகத்துடன் கேட்க

“வேற ஒண்ணும் இல்ல மாமா அவங்களோட பொண்ணும் அதே மடத்தில் தான் இருந்தது அதுவும் விருப்பப்பட்டு…  வரவே மாட்டேன் னு சொல்லிடுச்சு அதுக்குக் கவுன்சலிங் கொடுத்து அந்தப் பொண்ணைச் சரி பண்ணி வீட்டிற்கு அழைச்சுட்டு வந்தேன்…  அந்தப் பொண்ணை வீட்டில் விட்டதும் அனுவைப் பேசினதுக்கு நல்லா திட்டிட்டு வந்துட்டேன் அதான் போயிட்டாங்க. நம்ம மேல அழுக்கை வச்சுட்டு அடுத்தவன் சுத்தமில்லைனு சொல்லறது எவ்வளவு அசிங்கமான எண்ணம் அதான் திட்டிட்டேன் “என இயல்பாகக் கூறினான்.

ஜீவனிடம் “எல்லாம் ஓகே இந்தப் போலீஸ் வேலையை மூட்டைக் கட்டி வச்சுட்டு ஒழுங்கா ஹனிமூன் கிளம்பு.   தேவ் இப்பவே கிளம்பிடு இல்லை இவனைப் பிடிக்க முடியாது ” என்றார் மணிமேகலை.

சில வருடங்களுக்குப் பிறகு

ஜீவன் கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.  அவனெதிரில் ஒரு லத்தியை தூக்க முடியாமல் தூக்கி தட்டிக் கொண்டு ஒரு வாண்டு நடந்து கொண்டிருந்தது.

“உங்க… உங்களுக்கு… ம்ம்ம் ஹான்… ம்ம்ம்  …. ஜீவ… ஜீவப்… ஜீவப்ரியன் னு பேர் வச்சதுக்குப் பதிலா என் ஜீவனை வாங்குற ப்ரியன்னு பேர் வச்சிருக்கலாம்…”  மழலை மொழியில் மிழற்றி பத்து முறை சொல்லிப் பார்த்து,  ஒரு வழியாக அந்த வசனத்தைப் பேசி விட்டு இருந்தது அந்தக் குட்டி வாண்டு.

ஜீவப்ரியன் , தேவான்ஷியின் காதலுக்கு உதாரணமாகப் பிறந்த மழலை  ஸ்ரீ ராம்.   தனது தந்தையின் பெயரை வைத்தாலும் வைத்தான் ஜீவன் அவனுக்கு….  அவனது தந்தையிடம் திட்டு வாங்குவது போலவே திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறான் ஜேபி.

(மிட்டாய் வாங்கி வரலையாம் அதுக்கு தான் இந்த டயலாக் )

“டேய் ! நான் உன் அப்பா . அது மட்டுமில்லாமல் ஒரு போலீஸ்காரன் வேற,  நீ என்னையவே மிரட்டிட்டு இருக்க… ? குடுடா லத்தியை… “என மிரட்ட அந்த வாண்டு பின்னால் திரும்பி இடுப்பை வளைத்து ஆட்டியபடி ஓடியவன் , திரும்பி பழிப்புக் காட்டினான்.

“அடிங்க  அம்மாவோட சேட்டையில் முக்கால் வாசி இருக்கு…”  என்று துரத்த அவனோ தன் தாயிடம் தஞ்சம் அடைந்தான்.

“என்ன ஸ்ரீ  வந்ததும் அப்பா கிட்ட வம்பு பண்ண ஆரம்பிச்சுட்டியா…?  லத்தியை கொடு” என்று வாங்கி வைத்த தேவா ,”ஒரு வாரம் எங்கே போயிருந்தீங்க …?”என்று கடிந்து கொண்டாள்.

“டியூட்டி மா முக்கியமான கேஸ் டா வந்ததும் கேள்வி கேட்க வேண்டுமா..?” என்று சலித்துக் கொண்டவன் ஆடை மாற்ற சென்றான்.

“ஸ்ரீ, நீ போய் நகுலன் மாமா  கூட விளையாடு நான் வரேன்” என்று கணவனின் பின்னால் சென்றாள்.

வாண்டுப்பையன், கதிர் மணிமேகலையின்   மகன்  நகுலனைத் தேடி ஓடி விட்டான்.

இருவருக்கும் ஒரே வருடம் தான் வித்தியாசம் என்றாலும் உறவு முறை சொல்லித் தான் அழைக்கப் பழக்கி இருக்கிறாள் தேவான்ஷி.

“என்ன வரும் போதே சலிப்பு ?,  “ஜீவனைப் பின்னால் இருந்து அணைத்துக் கொள்ள ,” கசகசன்னு இருக்கு டி விடு குளிச்சிட்டு வரேன்” என விலக அவளோ விடாது பிடித்துக் கொண்டாள்.

“இது தான் நல்லா இருக்கும்… !! , என்றவளோ விடாமல் பிடித்துக் கொண்டாள்.

“அது சரி ஒரு மார்க்கமா தான் இருக்க !!”என்றவனோ, முன்னால் திரும்பிட  , இரு விழிகள் கலந்து இதயமிரண்டும்  மௌன மொழியில் பேசிக் கொண்டது. 

“தேவ்…  “

“ம்ம்ம்ஹ்ம்.. ” என்று அவனோடு இழைந்தாள்.

“நாம லவ் பண்ணலாமா…  ?” கிறக்கமாகக் கேட்டான் ஜீவன்.

“இப்போ அதைத் தானே பண்ணிட்டு இருக்கோம்… ” என்றாள் அவனின் மூக்குரசி.

“இன்னும் கொஞ்சம் டீப் ரொமான்ஸ்… ” என்று பார்வையால் இதழ்களை வருடியவன் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமானான்.

அதற்குள் கழுகுக்கு மூக்கு வியர்த்ததோ !, இல்லை காவல்துறைக்கு அடுத்தப் போலிச்சாமியார் கிடைத்தாரோ தெரியவில்லை அலைபேசி அலறியது.

“ரொமான்ஸ்… ம்ம்ம்…  போங்க,  போய் ஃபோன் கூடப் பண்ணுங்க உங்க ரொமான்ஸை,  ம்ம்ம்ஹ்ம் ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“வேதா தான் கூப்பிடுறான் கட் பண்ணிடவா…!!”  என்றதும் உடனே பிடுங்கி இணைப்பை ஏற்றாள்.

“ஹாய் வேதாண்ணா…  என்ன முகம் வீங்கி இருக்கு…  அனு அடிச்சுட்டாளோ…!!” கிண்டலடிக்க ,தன் நிறைமாத வயிறுடன் வந்து நின்றாள்  அனுகீர்த்திகா.

“அக்கா ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்… அவர் சாப்பிட்டு சாப்பிட்டு இப்படித் தர்பூசணி கணக்கா வீங்கி இருக்கார் “என்றவள் ,” எப்போ ஊருக்கு வர்றீங்க… எனக்கு அடுத்த வாரம் டியூ டேட் நினைவு இருக்கா… !!”என்றாள் அனு.

“ரெண்டு நாளில் கிளம்பிடுவோம்…  உன் ஹெல்த் பார்த்துக்க” எனக் கூறி விட்டு சிறிது நேரம் பேசியவர்கள் பின்னர் இணைப்பைத் துண்டித்தனர்.

வேதாந்தும், அனுவும் விருதுநகரில் ஜேபி அப்ளையன்ஸஸின் ஒரு கிளையைத் துவங்கி கவனித்துக் கொண்டிருக்கிறான்.  எந்த ஊரில் அவனது சொத்துக்களை ஏமாற்றி வாங்கிக் கொண்டனரோ அதே ஊரில் மனைவி மக்களுடன் இணைந்து  சொத்துக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இது ஜீவனின் ஏற்பாடு , ஒன்று பாதுகாப்பு கருதியும் இரண்டாவது வேதாவின் பெருமையை நிலைநாட்டவும் இந்த வேலையைச் செய்திருந்தான் ஜீவன்.

 

“மேகா என்ன பண்றீங்க… ? நேரம் ஆகிட்டுமா… ?” மனைவியிடம் இதோடு பத்தாவது முறை சொல்லி விட்டார் கதிர்வேலன்.

“அடடா என்ன அவசரம் டீலரே உங்களுக்கென்ன நாலு மணிக்கு எழுந்துப்பிங்க. நாங்க ரெடி ஆக வேண்டாம்… ஏன் டா நகுல் ?” என்று மகனோடு ஹைபை போட  ,மிருது குட்டி ஓடி வந்து  , “அதுக்குச் சோம்பேறி மாதிரி தூங்காமல் சீக்கிரம் எழுந்துக்கனும்” எனத் தந்தைக்கு ஆதரவாக வந்தாள்.

“அடிக் கழுதை யாரை சோம்பேறி சொல்ற உன்னை ” எனும் போதே, தந்தையின் பின்னால் ஒளிந்து கொண்டாள் மிருதுளா.

கதிர்வேலனோ,  தன் பிள்ளைகள் அறியாமல் கண் சிமிட்டி உதடு குவித்துக் காற்றில் முத்தமொன்றை பறக்க விட , நம் நவநாகரீக மங்கை மணிமேகலை  முற்றிலும் விழுந்து விட்டார்.  பிறகெங்கே , மகளை அதட்ட கணவனோடு இணைந்து சிரித்தார்.

கதிர் வேலன் மணிமேகலை தங்களது இல்லறத்தை இனிதாக நடத்தி வருகின்றனர். அவர்களின் காதலின் அடையாளமாக நகுலன் என்ற மகனும் , மிருதுளா என்ற மகளும் இருக்கின்றனர்.

நர்த்தனா  தான் இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறாள்.  ரமேஷ் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது தான் அவளிடம் இயல்பாகப் பேசத் துவங்கி இருக்கிறான். 

நம் நாயகனும் நாயகியும் தங்கள் கடமையுடன் சேர்த்து தீவிரமான காதலையும் கவனித்து வருகின்றனர். 

நம்ம தேவா பேபி மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறாள் ஒரு என்ஜிஓ அமைப்புடன் இணைந்து பெண்கள் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறாள். அவ்வபோது அவர்களைப் புரட்டி எடுப்பதையும் தவறுவதில்லை நம் நாயகனும் நாயகியும்.

இருவரது பணியும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் கூறி விட்டு நாமும் விடை பெற்றுக் கொள்வோம்

     ….. சுபம்…..

ஒரு வழியாகக் கதையை முடித்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி இத்தளத்தில் எழுத வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி அட்மினே… இதுவரை எனக்கு விமர்சனம் அளித்து மீம்ஸ் போட்டு உற்சாகப் படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    9 Comments

    1. All the best 🤩🤩🤩🤩ஸ்டோரில யார மிஸ் பண்ணுறோமோ இல்லையோ நம்ம கதிர் மாமஸே மிஸ் பண்ணுவோம் 😝😝 எங்கையோ ஆரம்பிச்சு ஒரு சீரியஸ் கன்டென்ட் எடுத்து அழகா முடிச்சிருக்கீங்க🥳🥳🥳🥳🥳 படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்😇😇😇😇

      1. Author

        மிக்க மகிழ்ச்சி டா அர்ச்சு பேபி செம சூப்பர் கமெண்ட்ஸ்

    2. #அவல்_பொங்கலின்_அலசல்

      உடல் பொருள் ஆவி நீயடி! Bambara Vedi

      ஹீரோ ஜீவ பிரியன்
      ஹீரோயின் தேவான்ஷி

      உடல் பொருள் ஆவி நீயடி டைட்டில் பார்த்து இதுக்கு பதிலா சர்வமும் நீயடி இல்ல எல்லாமும் நீயடின்னு வச்சிருக்கலாம் அது என்ன தனித்தனியா உடல் பொருள் ஆவின்னு பிரிச்சிட்டுன்னு யோசிச்சேன்.

      அப்பறம் தான் தெரிஞ்சது இது ஒரு பேய் லவ் ஸ்டோரின்னு.😆

      பொதுவா ஹீரோயின் தான் டாட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ்ன்னு இருப்பா, சுத்தமா அறிவு இருக்காது. ஆனா ஒரு சேஞ்ச்க்கு இங்க ஹீரோக்கு அறிவு இல்லாம எழுதிருக்காங்க..

      இங்க போலி சாமியார் கதைய யோசிருக்காங்க .ஏமாறுறவன் இருக்க வரை ஏமாத்துறவன் இருக்க தான செய்வான் அத தான் இவங்களும் எழுதிருக்காங்க. பேராசை ஒரு மனிதனின் மூளைய மளுங்க வச்சி அவனை எந்த அளவு முட்டாள் ஆக்குதுன்னு கதைல காமெடி கலந்த செண்டிமெண்ட் ஸ்டோரியா சொல்லிருக்காங்க..

      கதைல காமெடி செண்டிமெண்ட் ஆக்ஷன் த்ரில்லர் எல்லாமே கலந்து சூப்பரா இருந்தது

      லாஸ்ட் சந்துரு, ஜீவன்னோட டிவிஸ்ட் எதிர்பார்க்கவே இல்ல

      உறவுகள் எல்லாம் பேராசையில் போலி ஆகிவிட மணிமேகலை, கதிர் மாமா, வேதா, அனு, தேவா எல்லாம் அப்படி எல்லாம் இல்லன்னு சொல்ற அளவு பாசமானவங்க.

      எனக்கு கதைல புடிச்சது மணிமேகலை தான்.

      பார்க்க தான் மார்டன் மாமி, ஆனா மொத்த கூட்டத்தையும் பொறுப்பா கட்டி மேய்க்கிறது அவங்க தான். அவங்களுக்கு பெர்ஃபெக்ட் மேட்ச் கதிர் மாமா.

      கதைல ஆவி யாருன்னு சொல்லலைல வேற யாரு நம்ம ஹீரோயின் தான்

      அதேதான் ஹீரோ லூசு அவனை லூசாக்குன ஹீரோயின் ஒரு ஆவி.

      அப்போ கதை எவளோ ஃபன்னா இருக்கும் பார்த்துக்கோங்க.

      ஃபன்னா ஒரு சோசியல் அவர்னெஸ் ஸ்டோரி எதிர்பார்க்குறவங்க மிஸ் பண்ணிடாதீங்க

      வாழ்த்துகள் பம்பர வெடி.. 🎉🧨

      அன்புடன் அவல் பொங்கல்.

      1. Author

        மிக்க நன்றி மா அவல் செம கமெண்ட் ரொம்ப அழகா ரிவ்யூ தந்திருக்கீங்க

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    4. முதலில் ஆசிரியருக்கு ஒரு பாராட்டு……. ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போதும் முதல் அத்தியாயத்தின் கடைசி பகுதியோடு ஆரம்பித்ததற்கு….

      கல்யாணத்துக்கு மறுக்கும் நம் நாயகன் ஜீவா. ஒருவழியா சம்மதத்தை சப்ரைஸா அப்பாக்கு நேரில் சொல்ல போனால் அப்பா உயிர் பிரிந்து சென்றுவிட்டது…..
      அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்ற நினைத்து அந்த பொண்ண தேடினால் அவ ஆக்ஸிடென்ட் ல் இறந்துட்டாளாம்🙍‍♀️
      பின் இறந்த அப்பாவை திரும்ப உயிரோட கொண்டுவர போறேன்னு மந்திரம் மாந்தீகம்னு போறான்( அடேய் நீ ஹீரோட இப்படி மூடநம்பிக்கையில ஊரி போறியே அப்புறம் எப்படி உன்னை ஹீரோனு ஏத்துக்கொள்வாங்க)
      அப்பா சமாதில செய்ய வேண்டிய பூஜையை பாங்க் மேனஜர் பொண்ணு சமாதில பண்ணிட்டு வாரான்.
      (ஆவியா வந்த பொண்ண இப்படி சைட் அடிக்குறானே)
      இது மட்டுமா இன்னும் என்னவெல்லாமோ பண்ணுறான் இது மூட நம்பிக்கைனு புரிஞ்சுப்பான🤔

      அப்பா சொன்னதும் கல்யாணத்துக்கு உடனே ஓகே சொல்லும் நம் நாயகி தேவா.(இவ தாங்க பாங்க் மேனஜரின் பொண்ணு)
      பாசமான அம்மா அப்பா பெற்றோர் சொல்லை தட்டாத பொண்ணுங்க தான் தேவா, அனு…..

      ஐயோ அப்ப நம்ம நாயகி ஆவியா😳😳😳
      இடுகாட்டுல இருந்து ஜீவா வீட்டுக்கு வந்து பண்ணுற அளப்பறைகள் 🤣🤣🤣🤣 ஆவியா இருந்தாலும் ஜீவன் கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமானு கேக்குறியே

      நல்ல நட்பு இருந்தால் வாழ்வே மாறும்ங்கிறது வேதாந்த் க்கு பொருந்தும்….. நட்புடன் ஜீவன் அவன் வாழ்க்கையே மாற்றியிருக்கிறான்….
      ஜீவனின் மூடநம்பிக்கையில இருந்து காப்பாற்ற இவன் செய்யும் தகிடதத்தங்கள் ஏராளம்… ஜீவனை வேதா மாற்றினான இல்லை வேதா மாறினான🤔🤔

      கதிர் ❤️மேகா😍😍😍
      செம்ம கப்பல்… லேட் மேரேஜ்னாலும் அழகான அன்டர்ஸ்டேன்டிங் ஜோடி…. இவங்க சந்திப்புல இருந்து கல்யாணம் முதலிரவு தேன்நிலவு னு கடைசி வரைக்கும் ரசிக்க வைப்பாங்க…….

      நர்த்தனா…. இப்படியும் ஒரு பெண்ணா…. சொத்துக்காக கணவனின் அண்ணாவின் கல்யாணத்தை தடுக்கணும்னு… குழந்தை பிறக்ககூடாதுனும் மந்திரவாதி கிட்ட போய் பணத்தமட்டுமில்லை அவ இழந்தது அதற்கும் மேல்….. அப்படி என்ன இழந்தா🤔 கடைசியில் திருந்தினால இல்லையா🤔

      ஏமாறுறவன் இருக்க வரைக்கும் ஏமாற்றுபவனும் இருக்க தான் செய்வான்…
      கடவுள நம்புங்க ஏன்டா இப்படி கடவுள் பேர சொல்லி ஏமாத்துற சிலர் கிட்ட போய் அவங்கள முழுசா நம்பி மூட நம்பிக்கையை வளர்த்து கொள்ளுரீங்க…… அதுனால நீங்க இழக்கும் விடயங்கள் ஏராளம் தேவாவின் அம்மா அப்பா, நர்த்தனா போல….
      எவ்வளவு படித்தும் வேலையில்லையே😏 😏
      ஜீவன் கடைசியில் ஒரு கலக்கு கலக்கு கலக்கிட்டான்😍 என்ன கலக்கினான்னு கதையில் பாருங்க…..

      பெற்றவஙளே இந்த மாதிரி சில சாமியார் மந்திரவாதி சொல்லுறாங்கனு பிள்ளைகளை பலிகுடுக்கிறதும் நரபலி கொடுக்குறதும் எப்பதான் விட போறாங்களோ……

      ஆரம்பமே அப்பாவ போட்டுத் தள்ளி
      ஹீரோவ மூட நம்பிக்கையில அலைய விட்டு ஹீரோயினிய ஆவியா அலைய விட்டு ஹீரோட கெத்தையும் குறைக்காம அழகான ஒரு கதையை தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

      1. மிக்க நன்றி மா விரிவான விமர்சனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் விமர்சனம் 😍😍😍😍

    5. அருமையான இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒரு கருத்தை எடுத்து கதையாக குடுத்ததற்கு வாழ்த்துகள் சகி.

      மூட நம்பிக்கை மூடர்களின் நம்பிக்கை என தெரிந்தும் கூட இன்னும் சிலர் பணத்திற்காகவும் இன்ன பிற சுகத்திற்காகவும் யாரைவது நம்பி அவர்களால் தன் வாழ்வை மட்டுமல்லாது தன்னோடு சார்ந்தவர்களின் வாழ்வையும் சிதைக்கின்றனர் என்பதை ஆணித்தரமாக புரிய வைத்து இருக்கிறீர்கள்.

      மொத்தத்தில் விதிப்படி நடக்கும் அனைத்தையும் மாற்ற எந்த ஆசாமியாலும் முடியாது என்பதை காதலும் நட்பும் கலந்து உணர்த்தி இருக்கிறது இந்த உடல் பொருள் ஆவி நீயடி. வெற்றி பெற வாழ்த்துகள் சகி..

      1. மிக்க நன்றி மா விரிவான விமர்சனத்திற்கு மகிழ்ச்சி மா