Loading


பகுதி -17

‘தேவான்ஷியை என்று பார்த்தேன் ‘என்பதை வேதாந்த் விவரித்துக் கொண்டிருந்தான்.

அன்று :
ஜீவனைப் பின்தொடர்ந்து வந்த வேதா ,அவன் உள்ளே சென்ற பிறகு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளக் கண்காணித்துக் கொண்டிருக்க ,இயற்கை அழைப்பு அவனை நிற்க விடாமல் படுத்தியது .

வேதாந்த் இயற்கை உபாதை கழித்து விட்டு திரும்பி வர ,தேவான்ஷி வேகமாக வந்து மோதி விட்டாள்.

எச்சில் கூட்டி விழுங்கியவளோ கையெடுத்துக் கும்பிட்டு .,”சார் சார் காப்பாத்துங்க…!!” என்று சொல்ல

“யார் மா நீ …?ஏன் என்ன ஆச்சு …? “என்று கேட்பதற்குள் அவள் மயங்கி இருந்தாள்.

அதற்குள்ளாக நாலைந்து பேர் வேகமாக அங்கிருந்து ஓடி வர,  வேதா தேவாவை ஓரிடத்தில் மறைத்து வைத்தான்.

அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நகர்ந்தனர்.

தேவாவை தூக்கியவன், காருக்குள் போட்டு விட்டுத் தண்ணீர் பாட்டிலை எடுத்து தேவாவை எழுப்பினான்.

மயங்கி இருந்தவள், எழாமல் போகவே  தண்ணீரைத் தெளித்து எழுப்பினான். 

தேவான்ஷி கண் விழித்தாலும் உடல் நடுங்கியது அவளுக்கு.

 

“ம்மா.. ம்மா இதோ பாரு பயப்படாத நான் எதுவும் செய்ய மாட்டேன் நான் எந்த வகையிலும் உனக்கு ஆபத்தானவனா இருக்க மாட்டேன். ரிலாக்ஸ் ஓகே ரிலாக்ஸ்…  முதல்ல இங்கிருந்து போயிடலாம். அப்புறம் பேசலாம் சரியா… இரு நான் காரை எடுக்கிறேன்” என்று ஓட்டிக் கொண்டு வந்தவன் ஒரு உணவகத்தில் நிறுத்தினான்.

சட்டெனத் திருதிருத்தவளோ “ப்ளீஸ் என்னை ஏதாவது ஆசிரமத்திற்கு அனுப்பி விட்டுடுங்க” என்று கைகூப்பினாள்.

“ப்ப்ச் ஹோட்டலுக்கு வந்தது சாப்பிட, நீ தேவை இல்லாமல் இமேஜின் பண்ணாதே ! உன் டிரெஸ் பாரு, செவசெவன்னு மந்திரவாதி மாதிரி இருக்க, எனக்கே உன்னைப் பார்த்து பயமா இருக்கு…  வா முதல்ல டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு சாப்பிடு அப்புறம் பேசுவோம் ஓகே…”  என்றான்.

அவளோ தயங்கியபடி அமர்ந்திருந்தாள். 

“அம்மா தாயே! நீ துணி மாத்தவே வேணாம் அழுவறதை நிறுத்து… இரு இரு நான் காரிலேயே சாப்பாடு வாங்கிட்டு வந்து தரேன் “என்று கூறியவன் உணவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான்.

சாப்பிடத் துவங்கியவளுக்கு அழுகை நின்றபாடில்லை.

“ப்ம்ச் அழாதே புரை ஏறிக்கும்” என்றதும்… கண்ணீருடன் பேசினாள்.

“என் அப்பா அம்மா எனக்கு ஊட்டாமல் சாப்பிடவே மாட்டாங்க..!” என்றாள் எங்கோ வெறித்தபடி 

 

“உன் பேரண்ட்ஸ் நினைவு வந்திடுச்சா, நான் அவங்க கிட்ட கொண்டு போய் விடவா…  ?”என்றான் வேகமாக.

 

வெறுமையாகச் சிரித்தவள் .,”என்னை இந்தச் சாமியார் கிட்ட விட்டதே அவங்க தான் “என்றாள்.

“என்னம்மா சொல்ற… ?”திடுக்கிட்டான் வேதா.

 

“எனக்கு மேரேஜ் னு சொல்லி எல்லா ஏற்பாட்டையும் செய்தாங்க, ஏதோ பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று இங்கே அழைச்சுட்டு வந்தாங்க, நானும் முதலில் அப்படித் தான் நினைச்சேன்… அப்பா அம்மா நமக்குத் துரோகமா செய்யப் போறாங்க நல்லது தானே செய்வாங்க னு நம்பி வந்தேன்.  எனக்கு ஏதேதோ சடங்கு எல்லாம் செஞ்சு ஒரு  ஹோம குண்டத்திற்கு முன்னாடி படுக்க வச்சாங்க எனக்குத் தூக்கமா வந்தது … என்னைச் சுற்றி ஏதோ நடக்கிறதென்று உணர்ந்து தூக்கத்தை உதறி விட்டுக் கண் விழித்தால் என் பேரண்ட்ஸ் என் காலில் விழுந்து கும்பிட்டு விட்டு ஒரு ஓரமாக நின்னாங்க…  அப்பா இங்கிருந்து போயிடலாம் னு சொன்னேன்…  அவரோ போயிடலாம் மா இது தான் கடைசிப் பூஜை னு சொன்னாரு…  அந்தச் சாமியார் புகையை அதிகமாகப் போட்டு ஏதோ ஒரு கட்டை மீது வெட்டினான் ரத்தம் மாதிரி எல்லா இடங்களிலும் தெளிச்சது…  அதைப் பார்த்து விட்டு நரபலி வெற்றிகரமாக முடிந்தது என்று சொல்லி அந்த ரத்தத்தை எடுத்து அவங்களுக்குப் பூசி விட்டு உனக்கு வாரிசு நிச்சயம் பிறக்கும் நீ தைரியமாகப் போ நான் கொடுத்த பிணத்தை ஊரில் உன் மக தான் னு சொல்லி விபத்தில் இறந்து போயிட்டான்னு சொல்லு எல்லாக் காரியங்களையும் ஊருக்குள்ள போகாமலேயே சுடுகாட்டில் பண்ணி முடி யாரும் கேட்டா வெளியூரிலிருந்து பிணத்தைக் கொண்டு வந்து ஊருக்குள் வைக்கக் கூடாது  என்றும் சொல்லு மீறி செஞ்சா ஊருக்குள் ரத்தக்காட்டேரி எல்லோரையும் பாடா படுத்துமாம் னு சொல்லி விடுனு சொன்னாரு    என்னைக் கத்த முடியாதபடி வாயைக் கட்டி இருந்தாங்க,  அதனால எதுவும்  பேச முடியல… என் அப்பா வேகமாக எப்படியோ எங்களுக்கு ஆண் வாரிசு வந்தா போதும் சாமி னு சொன்னார்…நான் மனசொடிந்து போயிட்டேன் பெத்தவங்களே பிள்ளையைக் கொல்ல துணிஞ்சுட்டாங்களேனு வேதனையில் செத்திடலாம் னு நினைக்கும் போது தான் என் தங்கச்சியையும் நரபலி கொடுக்கப் போறதா பேசினாங்க. அதனால் தான் அங்கிருந்து தப்பிச்சு என் சிஸ்டரை காப்பாத்த நினைச்சேன் பட் அதுக்குள்ள அந்தச் சாமியார் என்னைத் தூக்கிட்டுப் போய் “என்று தேம்பி அழுதாள்.

 

“சரி ! சரி !! ரிலாக்ஸ் அழாத ப்ளீஸ்,  என்ன இவ்வளவு முட்டாளாக இருக்காங்க… ? சரி சரி அழாத உன் சிஸ்டரை காப்பாத்திடலாம் ஓகே… ” என்று ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தான்.

“அண்ணா நானாவது கொஞ்சம் தைரியமாக வந்து விட்டேன் என் தங்கை ரொம்பச் சின்னப் பொண்ணு” என்றவளை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அவளை விழியின் அறையில் தங்க வைத்திருந்தான். 
சீக்கிரம் இதைப் பற்றி ஜீவனிடம் பேச வேண்டும் என்று எண்ணி இருக்க ஜீவனோ படு பிஸியாக அலைந்தான் சாமியாரைப் பின்பற்றி..

அதன் பிறகு வந்த நாட்களில் ஜீவன் செய்த அலப்பறையைக் கண்டு கடுப்பானவனோ ,தேவாவிடம் யதார்த்தமாகக் கூறினான்.

 

“தேவ் நீ வேணுன்னா பாரேன் இவன் சமாதியில் பூஜை பண்றேன், புனஸ்காரம் பண்றேன் னு இருக்கான் .நிஜமாகவே ஒரு பேய் வந்து நிற்க போகுது “என்றான்.
தேவா யோசித்தபடி அமர்ந்திருக்க, வேதாவிற்கு முகத்தில் புன்னகை அரும்பியது.

“தேவா ஒரு ஐடியா…!! பேசாமல் நீயே ஏன் பேயா நடிக்கக் கூடாது நீ தங்குறதும் ஈசி அவனையும் திருத்தி விடலாம் “என்றான் மகிழ்வாக

“அண்ணா இந்தக் காலத்தில் யாராவது பேய் பிசாசு இதெல்லாம் நம்புவாங்களா ! சும்மா இருங்க” என்றாள்.

 

“ஏன் நம்ப மாட்டார்கள்…? அதுவும் ஜீவன் ஏற்கனவே அப்பாவோட ஆவியை மீண்டும் உயிர்பிக்கத் தானே மந்திரவாதி கிட்ட போறான்,  ஸோ நம்புவான் நீ அன்றைக்கு ஒரு சிவப்புச் சேலையில் இருந்தியே அதுல காஞ்சனா மாதிரி வேஷத்தைப் போட்டு என்ட்ரி குடு பையன் நம்பிடுவான்…  அது மட்டுமில்லாமல் அந்தச் சாமியாரைப் பழி வாங்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்… எப்படியும் நீ ஆவியா வந்ததாக அந்தச் சாமியார் கிட்ட சொல்லுவான் அவனும் உன்னைப் பார்த்து ஆவி னு நம்பிட்டா அவனைக் கொஞ்சம் அலற விடலாம்…” என்றான் உற்சாகமாக

 

“அதெப்படி முடியும்…?” என்றாள் குழப்பமாக. 

 

 

 வேதாவோ,  “அதெல்லாம் முடியும்…  சினிமாவில் எல்லாம் நிஜமாகவா ஆவியைக் கொண்டு வர்றாங்க.. நாமளும் கிராபிக்ஸ் அனிமேஷன் னு ஏதாவது பண்ணலாம்…!” என உற்சாகமாக கூறிட, 

 

“அண்ணா அதற்கெல்லாம் செலவு ஆகும் வேண்டாம்” என்று மறுத்தாள் தேவான்ஷி.

 

“ப்ம்ச் அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுற,  எனக்கு என் நண்பனை இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் கூடவே உன்னை அடைய நினைச்ச சாமியாரை பழி வாங்க வேண்டும் நிச்சயம் செய்வோம் அது மட்டுமில்லாமல் அத்தையிடம் பேசுறேன் அவங்க நமக்குக் கண்டிப்பாக உதவி செய்வாங்க… ” என்றான் நம்பிக்கையாக
எல்லாவற்றையும் கூறி முடித்தான் வேதா.

 

“இவ்வளவு பண்ணி இருக்கியா வேதா, பெருமையா இருக்கு டா உன்னை நினைத்து “என்று கதிர் சொல்ல அவனோ,” இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை மாமா… ஜேபி எனக்குச் செய்ததை விட இது குறைவு தான் அவனைக் காப்பாற்ற வேண்டும் அவ்வளவு தான் எனக்கு… அப்புறம் தேவா அவ பாவம் மாமா , அவ்வளவு பாசமா பார்த்துக்கிட்ட அப்பா ,அம்மா ,அவங்களே கொலை செய்ய நினைச்சது எவ்வளவு வலிக்கும், இவ தப்பிச்சுட்டானு தெரிஞ்சு அந்தச் சாமியார் ஆள் விட்டு தேடிட்டு இருந்திருக்கான். நான் தான் சென்னை அழைச்சுட்டு வந்து விட்டேனே அவனால கண்டுபிடிக்க முடியலை அப்புறம் இங்கேயே ஆள் அனுப்பித் தேவா இருக்கிற இடத்தைக் கண்டு பிடித்துத் தொலைச்சுட்டான்…” என்றான்.

 

“எப்படி டா…?” என  மணிமேகலை அதிர

 

“ஹான் நீங்க  ஷோரூமிற்கு அழைச்சுட்டுப் போனீங்களே அப்போ தான்… ” 

 

“அச்சோ அப்போ தேவா மாட்டிக்கிட்டாளா…?” என்று படபடத்த ,மணிமேகலையிடம் சிரிப்புடன் கதிர் விளக்கினார்.

 

“அவ மாட்டி இருந்தா எப்படி இங்கே இருப்பா மேகா… ?”என்றார்.

“ஓஓஓ ஆமா இல்ல…  சரி அப்புறம் என்ன ஆச்சு….?”  என்று கேட்க, வேதா முகத்தை இறுக்கமாக வைத்தவன் ,”தேவாவை தேடின கும்பலை ஆள் வச்சு போட அனுப்பினேன் ஆனால் அதுக்கு முன்னாடி அந்தக் கும்பலை அடிச்சு ஹாஸ்பிடல் ல போட்டுட்டாங்க அவங்களை ஏற்பாடு செய்த கனகவேல் னு ஒருத்தனை  தேவா”  என்று நிறுத்தினான்.

 

“தேவா… தேவ் என்ன செஞ்சா… ?”பதட்டமாகக் கேட்டார் மேகா.

“தேவ் ஆக்ஸிடன்ட் பண்ணிட்டா அத்தை. பட் ஆளில்லாத வண்டி னு சொல்லி கேஸ் க்ளோஸ் ஆகி இருக்கு… வண்டியில் தேவா இருந்ததை யாரும் பார்க்கவில்லை அதே சமயம் சிசிடிவி கேமராவிலும் பதிவாகவில்லை அதான் எனக்கே குழப்பமாக இருக்கிறது “என்றவன் மீண்டும் தொடர்ந்தான்.

“அதன் பிறகு அங்கே சாமியாரோட இடத்திலேயே ஒருத்தனை காசு கொடுத்துக் கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன்…  அவனை வச்சு தான் தேவாவை ஆவினு சொல்லி அந்தச் சாமியாரைப் பழி வாங்கிட்டு இருக்கோம்…  அதிலேயே அவன் கதி கலங்கி போயிருக்கான் மறுபடியும் எதுவும் செய்ய மாட்டான் னு நம்புறேன் பார்க்கலாம்…” என்று முடித்தான் வேதாந்த்.

“உண்மையிலே வேதா உன்னை மாதிரி ஒருத்தன் நண்பனா கிடைச்சதுக்கு ஜீவன் கொடுத்து வச்சிருக்கணும் டா” என்று கதிர் சிலாகித்தார்.

“ஹான் மாமா இப்ப உங்களை வரச் சொல்ல ஒரு முக்கியமான விஷயம் இருக்கு அதனால தான் வரச் சொன்னேன்” என்று பீடிகைப் போட கதிர் கூர்ந்து கவனித்தார்.

“அந்தச் சாமியார் கிட்ட போறது ஜீவன் மட்டுமில்லை… “என்று நிறுத்த
“அப்புறம் வேற யார்… ?”
“உங்க தம்பி மனைவி நர்த்தனாவும் தான் “என்றதும் அதிர்ந்து போனார் கதிர்வேலன்.

“ஆனால் அவ எதற்கு…??”

“அது தெரியாமல் தான்  மாமா நான் போனேன் … ஜீவனை ஃபாலோ பண்ணி போன போது இவங்க ஒரு பெட்டியைக் கொடுத்து இருந்தாங்க அங்கே நான் வச்ச ஆள் என்னிடம் கூறிய விஷயம் தான் என்னை அதிர்ச்சியாக்கியது…”எனப் புதிர்   போட்டான் வேதா. 

“டேய் புதிர் போடாமல் சொல்லுடா…!!” என்று மணிமேகலை கூற

“அத்தை  ஒண்ணும் இல்ல உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்க , இரண்டாவது அப்படியே நீங்க சேர்ந்து இருந்தாலும் குழந்தை பிறக்க கூடாது என்பதற்காகச் சில மருந்துகளும் ,தாயத்துகளும் ,வாங்கியதற்காகப் பணம் கொடுத்ததா சொன்னான்…  அஞ்சு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்காங்க இதைச் சொன்னதும் ஷாக் ஆகிட்டேன் அதான் உங்களை உஷாரா இருக்கச் சொல்வோம் என்று வரவழைத்தேன் ” என்றான்.

 

‘சொன்னேனா…!!’ என்பது போல மணிமேகலை கதிர்வேலனைப் பார்த்தார் .

“புரிந்தது” எனத் தலையாட்டிய கதிர்வேலன் அமைதி காத்திட ,மணிமேகலையின்  கைபேசி அழைத்தது.

 

அழைத்தது யார் என்று உணர்ந்து முகம் மலர்ந்தார் மணிமேகலை. 

“ஒரு நிமிஷம்” என்றவர் இணைப்பை ஏற்க  ரமேஷ் தான் அழைத்திருந்தான்.

கதிர்வேலன் கேள்வியாகப் பார்க்க ஒரு நிமிஷம் அமைதியாகக் கேளுங்க சரியா என்று விட்டு,” ஹலோ சொல்லுங்க ரமேஷ்…” என்றார்.

“அண்ணி வீடு பார்த்து விட்டேன் அண்ணி வேலைக்குப் போற இடத்திற்குப் பக்கத்திலேயே கிடைச்சிருக்கு… “என்றான்.

“சூப்பர் ரமேஷ் எப்போ குடியேறப் போறீங்க…?”

“அடுத்த வாரம் அண்ணி அதுக்குள்ள நீங்க ஒரு தடவை அண்ணனோட வந்து பார்க்கறீங்களா…?” என்க கதிர்வேலனுக்கு இன்னும் புரியவில்லை.

“சரி ரமேஷ் இன்னைக்கே கூடப் போய்ப் பார்க்கலாம் அட்ரஸ் அனுப்பி விடு… நீ பயந்தா மாதிரி தான் ரமேஷ், நர்த்தனா தான் பணத்தை எடுத்து  ஒரு சாமியார் கிட்ட கொடுத்து இருக்கா” என்றதும் எதிர்முனையில் அமைதி நிலவியது. 

“ரமேஷ் கவலைப்படாதே சீக்கிரம் சரி பண்ணிடலாம்…  அவளுக்கு ஒரு பாதுகாப்பின்மை அதான் இப்படி நடந்துக்கிறா…  நான் இருக்கேன் புரியுதா அவளை எதுவும் சொல்ல வேண்டாம் நான் பார்த்துக்கிறேன் “என்றார்.

“சரிங்க அண்ணி… இருந்தாலும் அஞ்சு லட்சத்தைத் தூக்கி கொடுத்திருக்கிறாளே அதான் அண்ணி” என்று தயங்கினான்.

“ரமேஷ் அது உழைச்ச பணம் நம்ம கிட்ட திரும்பி வந்தே தீரும்…  நீ கவலைப்படாதே நானும் உன் அண்ணனும் வீட்டைப் பார்க்க வர்றோம் அவர் கிட்ட நான் பேசுறேன்” என இணைப்பை துண்டித்தார்.

கதிர்வேலன் எல்லாவற்றையும் கேட்டு விட்டு,” அவன் பேசினதுக்குக் காரணமும் நீ தானா…?” என்று கேட்க சிரித்தபடி ,”உங்க தம்பியை அவர் சொந்தக்காலில் நிற்க வைக்க வேண்டாமா…?” என்றார்.

“அவன் சின்னப்பையன் மா” என்று கூறி மணிமேகலையின் முறைப்பை பரிசாகப் பெற்றுக் கொண்டார் கதிர்வேலன்.

“சின்னப்பையனா? அவனுக்கே ஒரு குழந்தை இருக்கு நினைவிருக்கட்டும்… இப்படியே விட்டால் உங்க உழைப்பை எல்லாம் அந்த நர்த்தனாவுக்கு அண்ணன் னு சொல்லிட்டு வர்றானே அவன் தின்னுவான் பரவாயில்லையா…!!” என்று சொல்ல, கதிர்வேலன் வாயை மூடிக் கொண்டார்.

“ஒரு டீலரை இப்படி எல்லாம் மிரட்டி வைக்கிறது சரி இல்லை அத்ஸ்” என்று வேதா சிரித்தபடியே எழுந்தான்.

“உதை வாங்குவ” என்றபடி, “சரிடா நாங்களும் கிளம்புறோம் அவன் கிட்ட சொல்லிடு” என்று கதிர்வேலனுடன் கிளம்பினார் மணிமேகலை.

சற்று நேரத்தில் ஜீவன் கோபமாக வெளியேறி விட , தேவான்ஷி அவனைத் தொடர்ந்து சென்றாள் கண்ணீருடன்.

காரைக் கிளப்பும் சத்தம் காதை கிழிக்கத் தேவான்ஷி சோர்ந்து போய் உள்ளே வந்தவள் , அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொள்ள ,மணிமேகலை, வேதா, கதிர் ,மூவரும் அதிர்ந்தனர்.

கதவை உடைத்து விடும் அளவிற்குத் தட்டியும் தேவான்ஷி திறக்கவில்லை. 

“தேவ் என்ன பண்ற ? இப்போ கதவைத் திறக்க போறீயா இல்லையா…?” என்று வேதா கத்திட ,அவளோ அமைதியாக,” எனக்கு வாழப் பிடிக்கவில்லை அண்ணா” என்றாள்.

“ஏய் பைத்தியமா பிடித்திருக்கிறது உனக்கு…! கதவைத் திற தேவா நீ என்ன பண்ற… ! லூசுத்தனமா ஏதாவது பண்ணி வைக்காதே தேவா… !”எனக் கதவை எட்டி உதைத்துத் திறந்தான்.

அங்கே தேவா மின் விசிறியில் தனது புடவை ஒன்றை மாட்டி கழுத்தில் முடிச்சிட்டு கொண்டிருந்தாள்.

அவளைப் பிடித்துக் கீழே இறக்கியவன் கன்னம் பழுக்க ஒன்று விட்டான்.

“வேதா …”என்று கத்திய மணிமேகலை , தேவாவை அணைத்தபடி.,” தண்ணி கொண்டு வா போ.. “என்று கட்டிலில் அமர வைத்தார்.

தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தவன் குடிக்கும் வரை அமைதியாக இருந்தான்.

“இப்படிச் சாகறதுக்கு அங்கே நரபலியே கொடுக்க வைத்திருப்பேனே, இவ்வளவு தூரம் காப்பாற்றியது இப்படித் தூக்குப் போட்டு தொங்கவா…? “என்று பல்லைக் கடித்தான்.

“அவருக்கு என்னைப் பிடிக்கவே இல்லை…  நீ பொய் சொல்லி ஏமாத்திட்ட இல்ல னு வேதனையா சொல்லிட்டுப் போறார்…  நான் உயிரோட இருந்தா தானே அவருக்குப் பிடிக்காது…  செத்துட்டா ஆவியா வந்தாலாவது அவருக்கு என்னைப் பிடிக்கும் தானே…?”  என்று தேம்பி அழுதாள்.

“பைத்தியமே செத்தா கொண்டு போய்ப் பொதைச்சுடுவானுக அதோட அவ்வளவு தான்… ஆவியா வர்றாளாம்…ஆவியா..!  நீ பார்த்தாயா ஆவி ,பேய் எல்லாத்தையும், சும்மா ஏதாவது பேசிட்டு” கடுகடுவெனப் பேசினான் வேதா.

“நான் என்ன தான் பண்றது ?அவர் கூடவே இருந்து விட்டேன் இப்போ என்னை விட்டு விலகிப் போறார் அது எனக்குக் கஷ்டமா இருக்கே !!” என்று சொல்ல, கதிர்வேலன் அமைதியாக,” நீ ஜீவனை விரும்புறியா தேவா” என்று கேட்டார்.

அவள் தலை குனிந்து அமர்ந்திருக்க,” இப்படியே உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்…?” என்று வேதா உலுக்கினான்.

அதற்குள் ஜீவன் வந்து விட வந்தவனை எதுவுமே கேட்காமல் அடித்து விட்டார் மணிமேகலை. மற்ற அனைவரும் அதிர்ச்சியில் நின்றனர்.

“அத்தை நான் என்ன செஞ்சேன்…?” என்று கன்னத்தைப் பிடித்தபடியே கேட்டான் ஜீவன்.

“ஏன் டா எல்லா உண்மைகளும் தான் சொல்லியாச்சே !!இன்னும் என்ன வந்தது என்று அவளைத் திட்டிட்டு போயிருக்க…  அவ சூசைட் அட்டம்ப்ட் பண்ணிட்டா தெரியுமா உனக்கு …!!”என்று கத்தினார்.

ஜீவன் தேவான்ஷியை பார்க்க, அவளோ குனிந்த தலையை நிமிரவே இல்லை.

வேதா எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு எழுந்து சென்றான்.

“டேய் நான் எதுவும் ,”எனும் போதே கையை உயர்த்தித் தடுத்தவன் ,”அவளை சமாதானம் செய் அப்புறம் வந்து பேசு” என்று கூறி விட்டு வெளியேறினான்.

கதிரும் மேகாவும் ,”பார்த்துக்கோ ஜீவன் உன் வாழ்க்கையை நீயே ஸ்பாயில் பண்ணிக்காதே” என்று விட்டு வெளியேறினர் .

ஜீவன் அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

“அது வந்து…. !!”

ஜீவனோ “எதுவும் வர வேண்டாம் இனி இப்படிப் பண்ணாத பண்ணினா நானே உன்னைக் கொன்றுவேன்” என்று மிரட்டல் விடுத்தான்.

“அப்போ நீங்களும் அந்தச் சாமியாரைப் பார்க்க போகாதீங்க” என்றாள் அழுத்தமாக.

“அது என்னுடைய சொந்த விஷயம் .அதில் தலையிட நீ யார்..? என்னை ஏமாத்தின உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்னைக் கேள்வி கேட்க …?”என்றான் பதிலுக்கு.

“ப்ளீஸ் அந்தச் சாமியாரைப் பார்க்க போறேன் னு மறுபடியும் ஆரம்பிக்காதீங்க ஜீவா…” என்று கத்தி விட்டு நின்றாள்.

…. தொடரும் .

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. போன எபிலே நல்லா தானே இருந்தான் இப்போ என்ன கிறுக்கு மாறி பேசிட்டு இருக்கான் 🤔🤔🤔🤔

      1. Author

        அவன் அப்படி தான் மா 😍😍😍😍

    2. மேகா…எல்லாம் உங்க பிளான்.தானா? சைக்கிள் கேப்புல எப்போ இத பிளான் பண்ணீங்க? அப்போ ரமேஷ்க்கும் நர்த்தனா தான் பணம் எடுத்திருப்பானு டவுட் வந்துடிச்சா…அதான் மேகா கூட சேர்ந்து இந்த வேலை எல்லாம் பாக்குறானா….

      அந்த சனியன் புடிச்ச சாமியாருக்கு பணத்தாசை தான் இருக்குனு பார்த்தா பொண்ணுங்கள தப்பா பயன்படுத்த வேற பாக்குறானா….எடுபட்டபய….
      நல்லவேளை வேதா அங்க இருந்ததால தேவா தப்பிச்சுட்டாள்…அவள் தப்பிச்சதால அனுவையும் காப்பாத்திட்டாள்…இல்லனா அந்த நாயக்கிட்ட ரெண்டு பேருமே மாட்டி இருப்பாங்க… எல்லாம் அவங்க அப்பா அம்மாவால வந்தது….

      இந்த ஜீவன் ஏன் இன்னும் அந்த சாமியார புடிச்சு தொங்கிட்டு இருக்கான்னு தெரகயலயே

      1. Author

        மேகா ப்ளான் போடாம அவனுக்கு அறிவு வருமா அதான் நன்றி மா

    3. Naan kuda starting la nijama pei than nu nambi ella epi yum padichen ka.. But imagination la start pani practical a move panrenga really super ka.. sema sema sema.. waiting for next ud.. seekiram podunga..

      1. Author

        ஹாஹாஹா நன்றி மா சீக்கிரம் போடுகிறேன்