Loading

         பகுதி-09

கதிர்வேலன்,  தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிமேகலையிடம் கேட்க,  அவரோ செய்வதறியாமல் திகைத்திருந்தார்.

“ஏன் மேகா நான் ரொம்ப வயசானவனா தெரியுறேனோ …?உங்களுக்கு செட் ஆக மாட்டேன்னு நினைக்கிறிங்களா இல்ல உடல் ரீதியாக… ” என்று சொல்ல தயங்கினார் கதிர். 

மணிமேகலை சட்டென்று, “ச்சே ஏன் இப்படி பேசுறீங்க… நான் அதெல்லாம் யோசிக்கலை…  சரி ஓகே நான் ரெண்டு நாளில் என் முடிவை சொல்லலாமா ..?”என தீர்க்கமாக கேட்க கதிர்வேலனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

“ஃபைன் மேகா…  நீங்க யோசித்து சொல்லுங்க ஒண்ணும் அவசரம் இல்ல சரியா …!!”என்றவர் அவரது கையை எடுத்து கொண்டு மேகாவின் கைகளை விடுவித்தார்.

மணிமேகலை எழுந்து கொள்ள.,” டைம் ஆகிடுச்சு ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம் இல்லையா…!!  இல்ல எனக்கு பசிக்குது தனியா சாப்பிட வேண்டும் என்று கேட்டேன்… ” கதிரின்  நைச்சியமான வார்த்தையில் மணிமேகலையின் இதழ்கள் தானாய் புன்னகைக்க, கதிர்  உடனே காலை உணவை வரவழைக்க  ,ப்யூனுக்கு அழைக்க…

 

“ஹலோ இங்கேயே தான் வாங்கிட்டு வரச் சொல்வீங்களா..?? வெளியே எல்லாம் அழைச்சுட்டு போக மாட்டீங்களா…?” என்று கேட்டார் மணிமேகலை.

 

“வித் ப்ளசர் மேகா வாங்க…!” மகிழ்வாய் எழுந்தார் கதிர்வேலன்.

இருவரும் அருகில் இருந்த உணவகத்திற்கு சென்றனர்.

“அண்ணா ஒரு கம்பு தோசை, ராகி இட்லி போதும் மேகா உங்களுக்கு…?” என உற்சாகமாக கேட்டார் கதிர். 

“சார் ரொம்ப  ஹெல்த் கான்சியஸ் போல… எனக்கு ஒரு தோசை ரெண்டு இட்லி..!” என்று ஆர்டர் செய்தார் மேகா. 

“ஹெல்த் கான்சியஸ் னு சொல்லலாம் . பட் எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்… இந்த ஹோட்டலில் ரொம்ப நல்லா இருக்கும்…  வீட்டில் சாப்பிடலைனா இங்கே தான் ஆர்டர் பண்ணுவேன்…”என்று சொல்ல மணிமேகலை கதிர்வேலனை  கூர்ந்து பார்த்தார்.

ஆர்டர் செய்த உணவு வந்தது.

“அண்ணா உங்க ஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி “என சர்வர் வைக்க.,” டேய் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் எனக்காக தனியா அரைக்காதீங்கனு…” என்று கதிர் கடிந்து கொள்ள,  மணிமேகலைக்கு புரிந்து விட்டது இங்கே தான் கதிருக்கு தினமும் காலை உணவு என்று..

“என்ன மேகா சாப்பிடுங்க… ? கம்பு தோசை டேஸ்ட் பண்றீங்களா..?” என இயல்பாய் கேட்டார்.

“இங்கே ரெகுலர் கஸ்டமர் போல… !!” சந்தேகமாய் கேட்க 

கதிரோ,  “அப்படி இல்லை “என்று தடுமாற .,”புரியுது” என அமைதிப்படுத்தினார் மணிமேகலை.

இருவரும் பகிர்ந்து உண்டு முடித்து வெளியே வந்தனர்.

“சரி நான் கிளம்புறேன் கதிர்” என்றதும் கதிரின் முகம் சுணங்கியது. அதனை மணிமேகலை கவனிக்க  புன்சிரிப்புடன் “பாய்…  போய் ஒர்க் பாருங்க” என்றார்.

“ம்ம்ம்… ” என்று விட்டு அங்கேயே நிற்க, மணிமேகலை கிளம்பி விட்டார்.  கதிருக்கு என்றும் இல்லாமல் இன்று ஏனோ வெறுமையாகத் தோன்றியது.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

வேதாந்த்  நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

விடாமல் அழைப்பு மணி ஒலித்தது.

“ப்ப்ச் யார் டா அது ? நடு இரவில் காலிங் பெல் அடிக்கிறது… ஸ்ஸ்ஸ் அய்யய்ய… ச்சை தூங்க விடுறானுகளா… !! டேய்  ஜீவ் கதவைத் திறயேன் டா… !! அத்ஸ் “என்று முனகியவன் எழுந்து சென்று கதவைத் திறந்தான்.

“ஆஆஆஆ ஆஆஆ” என்று கொட்டாவி விட்டபடி தலையை சொறிந்து கொண்டே .,”யாருபா” என்று கண் விழித்து பார்க்க அங்கே ஜேபியும் ,தேவான்ஷியும், அனுகீர்த்திகாவுடன் நின்றிருந்தனர்.

“டேய் நீயா டா… !!,  இன்னைக்கு எந்த சுடுகாடு.. ச்சே இடுகாடு… “என்றவன் அனுகீர்த்திகாவைப் பார்த்து விட்டு அதிர்ந்தவன்,”  இது யார் டா புதுப் பேயா… ? அச்சோ உனக்கு ஆவிப் பிடிக்கிறது தான் வேலையா டா …!!கடவுளே, இவன் புத்தியை நான் எப்படி தான் தெளிய வைக்கப் போறேன் னு தெரியலையே… !!” என்று ஒப்பாரி வைத்தான் வேதாந்த்.

“ஹேய் மிஸ்டர் யாரைப் பார்த்து ஆவி னு சொன்ன , என்னைப் பார்த்தா உனக்கு பேய், ஆவி, காட்டேரி, மாதிரி தெரியுதா…. ?? அக்கா இது யார் மென்டல் மாதிரி இருக்கான். ஏன் பைத்தியத்தை எல்லாம் வீட்டில் வச்சிருக்கீங்க?” என்று அனு எகிற,   ஜீவா சிரித்து விட்டான்.

வேதா அனுவை ஆவென்று பார்த்துக் கொண்டிருக்க,  தேவா வேகமாக, “வேதாண்ணா ஏன் இப்படி இருக்க…?,  நான் ஒண்ணும் பண்ணலையே…!!”என்று தேவான்ஷி உலுக்க திடுக்கிட்டு பார்த்தான் வேதாந்த் .

 

“தேவா… எனக்கு உன்னைப் பார்த்தா ஆவி னு தோணவே இல்லை.. ஆனால் இதோ இதைப் பார்த்தா நிச்சயம் சொல்வேன் இது ஒரு குட்டிச் சாத்தான்னு … ரத்தக் காட்டேரி மாதிரி கத்துது” என்று பயந்தவன் போல பின்னால் செல்ல,  அனு தன் இரு கைகளையும் அவன் கழுத்திற்கு கொண்டு சென்றாள்.

“நானாடா பேய்!!, நானா ரத்தக்காட்டேரி…?, என்னைப் பார்த்தா குட்டிசாத்தான் மாதிரி தெரியுதா… ?? நீ தான் பேய், பிசாசு அப்புறம் வேதாளம், அப்புறம் அப்புறம் அச்சோ ஆம்பளை பேய்களை என்ன சொல்வாங்கனு தெரியலையே …!!”என்று கத்த, ஜீவா விழுந்து விழுந்து சிரித்தான்.

“சார் சிரிக்காதீங்க ரெண்டு பேர் சண்டையையும் நிறுத்துங்க… “என தேவான்ஷி கூறியதும் .,”நீ அனுவைப் பிடி விட்டா கழுத்தை நெரித்து விடுவாப் போல “என்று விட்டு வேதாவை தூக்கி தள்ளி நிறுத்தினான்.

“அனு விடு.. அடி லூசு ,அவங்களை விடு “என்று சொல்ல அனு சற்று அமைதியானாள்.

“போய் ரெஃப்ரஷ் ஆகிட்டு வாடா பேசலாம் “என்று ஜீவா கூறியதும் அனுவைப் பார்த்தபடியே வேதாந்த் தனது அறைக்கு சென்றான்.

“ஹான் அனு நீங்க அந்த லெஃப்ட் ரூமை எடுத்துக்கங்க தேவா காட்டு…”  என்று கூறி விட்டு தன் அறைக்குள் நுழைந்தான் ஜீவா.

“அக்கா” என்று அனு தயங்கிட , “அனு எதையும் யோசித்திடாமல் போங்க உங்களுக்கு டிரெஸ் வேணும் இல்ல நான் அரேஞ்ச் பண்றேன் நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றவன் வெளியே சென்றான்.

“அக்கா… அப்பா..!!” என தயங்க

“அவரை நான் பார்த்துக்கிறேன் நீ ரெஸ்ட் எடு..” என தேவா கூறி விட்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

நர்த்தனா சண்முகத்திடம் கத்திக் கொண்டிருந்தாள்.

“அண்ணா அந்த சாமியார் கிட்ட மருந்து வாங்கி போட்டுட்டேன், தாயத்துக் கூட கட்ட வச்சுட்டேன் ஆனா எதுவும் நடக்கவில்லை அந்த கிழவனுக்கு இப்ப தான் கல்யாண ஆசை வந்து தொலைஞ்சிருக்கு…  அதுவும் அந்த மேனாமினுக்கியை கல்யாணம் பண்ண துடியா துடிக்கிறார் “என்று பொரிந்து தள்ளினாள்.

“அட விடு பாப்பா… கல்யாணம் ஆனா போதுமா ? ,பிள்ளைனு ஒண்ணு பிறக்க வேண்டாமா….?  அதுவும் இந்த வயசில் சான்ஸே இல்லை. பிள்ளை  பிறந்தா தான் அந்த ஆளுக்கு சொத்து கிடைக்கும்…  அப்படியே பிறக்க வாய்ப்பு இருந்தாலும் அதை நாம பிறக்க விடாமல் செய்வோம்…  இப்போது நீ எதிர்ப்பு காட்டினா சொத்துக்களை முழுதும் ஏதாவது ஆசிரமத்திற்கு எழுதி வச்சுட்டா என்ன செய்வ…?, அதனால் என்ன நடந்தாலும் விட்டுடு…  இதுக்கு மேல குழந்தை பிறக்க வாய்ப்பு ரொம்ப கம்மி…  அப்படி பிறந்திடும் னு நினைச்சா மெடிக்கல் ல எத்தனை மருந்து மாத்திரைகள் விற்குது வாங்கி சாப்பாட்டில் கலந்து கொடு… உனக்கு இதில் விருப்பம் இல்லை என்றால் நம்ம போய் பார்த்தோமே அந்த சாமியார் கிட்ட செய்வினை வைக்க சொல்லி கேட்கலாம். இதோப் பாரு தங்கச்சி உனக்கு புளியங்கொம்பா கிடைச்சிருக்கு கை விட்டுடாத… சொத்து முழுவதும் உன் மகனுக்கு தான்…” என்று சிரித்தான் சண்முகம்.

“நீ சொல்றது சரி தான் அண்ணே நாம சாமியார் கிட்ட கேட்கலாம்” என்று நர்த்தனா திடமாக பேசினாள்.

சண்முகமோ மனதில் .,’உன்னை வச்சே அந்த சொத்துக்களுக்கு அதிபதியாக நான் ஆகிறேன்…’  என்று நினைத்து கொண்டு கிளம்பினான்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இங்கே இளங்கோவன் அடிபட்ட சிங்கமாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

“ச்சே இந்தப் பொண்ணு இப்படி செய்துட்டாளே, நேத்தே எனக்கு டவுட் வந்தது. அவ யார் கிட்டயோ பேசுற சத்தம் கேட்டுச்சு நான் கேட்டதுக்கு டிவி பார்க்கிறேன் னு சொன்னா… இப்போ அவங்களுக்கு என்ன பதில் சொல்வது…  ??” தவித்துப் போனார். 

 

“அவ ஃப்ரெண்டு வீட்டில் கேட்கலாமா… ??” என்று விஜயா கேட்க , இளங்கோவன் மறுத்து விட்டார்.

“வேண்டாம் வேண்டாம் வெளியே தெரிஞ்சா அசிங்கமாயிடும்” என மறுத்து விட்டார்.

மனதில் இதை எப்படி சமாளிப்பது என்று சிந்தித்து கொண்டிருந்தார்.

விஜயா நிம்மதி பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து நகர்ந்தார். 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அன்று

மாலுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் தலைவன் தான் தேடும் பெண்ணைப் பார்த்து விட்டு பின் தொடர்ந்து செல்ல கண் இமைக்கும் நேரத்திற்குள் அவள் மாயமாகி இருந்தாள்.

“ச்சே எங்கே எஸ்கேப் ஆகி இருப்பா…?  அப்போ அவ கண்டிப்பாக இங்க தான் இருக்கா…  சென்னையை சல்லடையா சலிச்சிடுறேன் இருக்கட்டும்…!!”  என்று முனகியபடி சுற்றும் முற்றும் தேடினான்.

அடி வாங்கிய அடியாளோ, அருகிலிருந்தவனிடம் மெதுவாக.,” ஏன் டா நம்ம தலக்கு மூளையே இல்லையா இவ்வளவு பெரிய சிட்டி இதை யாராவது சல்லடையில் சலிக்க முடியுமா…  இதைச் சொன்னா நம்மளை அடிக்க வருவாங்க தேவையா நமக்கு..” என்றான்.

“வாங்குனது உனக்கு பத்தலை அமைதியா வாடா தேவை இல்லாம மறுபடியும் அடி வாங்கி சாகாத” என்று அருகிலிருந்தவன் எச்சரித்தான்.

“அது சரி அவரோட லெஃப்ட் தானே நீ,  அதான் இப்படி பேசுற..!,  என் அறிவு பார்த்து உனக்கு பொறாமை”  என்று திரும்ப அவனோ தலையிலடித்துக் கொண்டான்.

“ஹான் சார், அந்தப் பொண்ணு இங்கே சென்னையில தான் இருக்கா…!!   பட் இப்போ எஸ்கேப் ஆகிட்டா கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவேன்” என்றான் தலைவன்.

“நிஜமாவா எந்த இடத்தில் இருந்தா பேர் சொல்லு…  நிச்சயம் அதே ஏரியாவில் தான் இருப்பா…  நான் இன்னும் ஆளுகளை அனுப்பி வைக்கிறேன்” என்று படபடக்க  அவனோ எரிச்சல் அடைந்தான்.

“சார் இவ்வளவு தூரம் வந்து கண்டு பிடித்து இருக்கேன் அந்த பொண்ணை பிடிக்க மாட்டேனா நானே பார்த்துக்கிறேன் விடுங்க இல்ல எங்க மேல நம்பிக்கை இல்லையா…  எங்கே இருக்கிறாள் என்றே தெரியாம இருந்தீங்க இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சிருக்கேன் அதை பாராட்டாம… இப்போ தான் ஆள் அனுப்பி வைக்கிறேன் னு சொல்றீங்க … இன்னும் ரெண்டு நாளில் பொண்ணு உங்க முன்னாடி இருக்கும்” என்று ஒரு வாறாக சம்மதிக்க வைத்தான்.

“சரி என்னவோ சொல்ற உன்னை நம்பி ஒப்படைக்கிறேன் ரெண்டு நாளில் பொண்ணு வந்தாகனும் புரிஞ்சுதா பணம் உன் அக்கவுண்ட்ல போடுறேன் “என்று இணைப்பைத் துண்டித்தார்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மணிமேகலை புன்னகை முகத்துடன் வீடு வந்து சேர்ந்திருந்தார்.

வேதாந்த் அனுவை ஒரு பார்வை, பின்னர் ஜீவனை ஒரு பார்வை, என மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்.

“டேய் தட்டைப் பார்த்து சாப்பிடு டா…  “என்று ஜீவன் அதட்ட அனு வேதாவை நிமிர்ந்து பார்த்தாள் .

“அச்சோ நான் யாரையும் பார்க்கலைப்பா” என்றதும் , மூக்கு நுனியை மட்டும் இடவலமாக திருப்பி முகத்தை ஒரு வெட்டு வெட்டி விட்டு சாப்பாட்டில் கவனம் வைத்தாள் அனுகீர்த்திகா.

“ஜீவ் யார் இந்த பொண்ணு… ?” என்றபடி மணிமேகலை வரவும் ,  “தெரிஞ்ச பொண்ணு அத்தை  இவங்களைப் பத்தி சொல்றேன் வாங்க சாப்பிடுங்க என்ன காலையிலேயே வெளியே போயிட்டு வந்திருக்கீங்க போலிருக்கு… “என்றான்.

“ஹாய் மா ..!!”என்று அனுவிடம் இயல்பாய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஜீவனிடம் பேசினார்.

“சாப்டாச்சு ஜீவ்…  நத்திங் சும்மா கதிர் வரச் சொல்லி இருந்தார் பார்க்க போயிருந்தேன்” என்று இயல்பாய் கூறினாலும் முகம் சிவப்பதை தடுக்க இயலவில்லை மணிமேகலையால்.

“இவ்வளவு காலையிலா… ஏதாவது முக்கியமான விஷயமா அத்தை…? பணம் கேட்டேனே ,அதுக்காகவா போனீங்க… ?”

“ப்ப்ச் அது இன்னும் ரெண்டு நாளில் கிடைக்கும் , ஜீவ் அதற்காக இல்லை கொஞ்சம் பர்ஸனல்” என சொல்ல ஜீவன் மணிமேகலையை ஆழ்ந்து கவனித்தான்.

“என்ன அத்ஸ் கதிர்வேல் கரெக்ட் பண்ண பார்க்கிறாரோ… அச்சோ ப்ளஷ் (blush)  பண்றீங்களே அப்போ நிஜமா கரெக்ட் பண்ணிட்டாரோ…!!” என்று நக்கலடித்தான் வேதாந்த்.

அனுவோ  மீண்டும் அவனை முறைத்தாள்.

‘இந்தப் பொண்ணு என்ன நாம என்ன சொன்னாலும் முறைக்குது  …ஹ்ம்ம்…  நம்ம அருமை பெருமை எல்லாம் தெரியாத பொண்ணா இருக்கு பா இந்த ஜீவன் அதை எல்லாம் சொல்லி அழைச்சுட்டு வரக் கூடாது ‘என தனக்கு தானே பேசியபடி உணவை உண்டு முடித்தான்.

அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு எழ ,ஜீவனையும் வேதாந்தையும் தனியே அழைத்தார் மணிமேகலை.

“சொல்லுங்க அத்தை… !!”

கதிர் வீட்டில் நடந்ததையும் , தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கதிர் கேட்டதையும் கூறி முடித்தார் மணிமேகலை.

“ஜீவன் அமைதியாக இருக்கவே  ஏன் ஜீவ் உனக்கு இதுல அப்ஜெக்ஷன் ஏதாவது இருக்கா…?”  தயங்கி தான் கேட்டார் மணிமேகலை.

“அத்தை உங்களுக்கு ஒரு குடும்பம் வாழ்க்கை அமைச்சு தர அப்பா எவ்வளவு முயற்சி செய்து இருப்பார் னு உங்களுக்கேத் தெரியும் அப்படி இருக்கும் பட்சத்தில் நான் மறுத்து சொல்வேனா…  ஐம் ஹாப்பி அத்தை .உங்களுக்கு அவரைப் பிடித்து இருக்கு தான் இருந்தாலும் அந்த நர்த்தனா இப்பவே இவ்வளவு தூரம் பேசுறாங்கன்னா, மேரேஜ் ஆகிடுச்சுன்னா என்ன பண்ணுவாளோன்னு யோசிக்கிறேன் வேற ஒண்ணும் இல்ல …!!”என்றான் ஜீவன்.

 

“இவ்வளவு தானே,  நர்த்தனா எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே கிடையாது…  நான் சமாளிச்சுக்கிறேன் பட் உன் ஓபினியன் எனக்கு வேண்டும் இத்தனை நாளும் நான் மேரேஜ் பத்தி யோசிக்கவே இல்லை , ஏன் விருப்பம் இல்லை என்று கூட சொல்லலாம்… பட் இப்போ  நிலைமை வேற… அது மட்டுமில்லாமல் அண்ணன் இடத்தில் இப்போ எனக்காக நீங்க மட்டும் தான் இருக்கீங்க…  ஸோ நீங்க தான் சொல்லணும் “என்றதும் கண்கள் கலங்கியது ஜீவனுக்கு.

“டேய் வேதாந்தம் நீ என்ன டா சொல்ற ..?”என்று கேட்டதும் வேதாந்த் ஆச்சரியம் தாளாமல் மணிமேகலையைப் பார்த்தான்.

“அத்ஸ் என்னையும் ஒரு ஆளா மதிச்சு கேட்டதே எனக்கு சந்தோஷம் .உங்கள் மனசுப்படி செய்ங்க “என்று வேதாந்த் கூற ,அவனது தலையில் தட்டி விட்டு .,” எனக்கு நீ வேற , ஜீவ் வேற இல்ல, ரெண்டு பேரும் ஒண்ணு தான் சரியா …!!”என்றார் மணிமேகலை.

“ஓகே அத்தை கதிர் சாரை முறைப்படி பெண் கேட்டு வர சொல்லுங்க நல்லா கிராண்டா மேரேஜ் பண்றோம் “என குதூகலித்தான் ஜீவ்.

“டேய் விழி கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும் இல்லையா..!!” என்று தயங்க  ,”விழி கிட்ட பேச வேண்டியது என் பொறுப்பு நீங்க கவலையை விடுங்க போய் முதலில் கதிர் சார் கிட்ட சம்மதம் சொல்லுங்க” என்று ஷோரூமிற்கு கிளம்பினான் கூடவே வேதாந்தும்.

மணிமேகலைக்கு உடனே தன் விருப்பத்தை கதிரிடம் கூற தோன்றினாலும் காக்க வைத்து கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

கதிர்வேலனுக்கோ இருப்பு கொள்ளவில்லை… மனம் மணிமேகலையை சுற்றி வந்தது. அவரது தந்தையிடம் விஷயத்தை கூறி விட அவர் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. 

“சந்தோஷம் பா இப்பவாவது கல்யாணம் பண்ணிக்க எண்ணம் வந்ததே உனக்கு… ஜாதகம் ஜோசியம் எதுவும் பார்க்க வேண்டாம் முகூர்த்த தேதி குறிச்சிடலாம் “என்று கூறினார்.

“அப்பா இன்னும் அவங்க சம்மதம் சொல்லவே இல்லை ப்பா வெயிட் பண்ணுங்க” என்றதும் .,”அதெல்லாம் அந்தப் பொண்ணு ஒத்துக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் அவர்.

மறுநாளே மணிமேகலை முன்பு வந்து நின்றார் கதிர்.

“ரெண்டு நாளில் சொல்றதா சொன்னேனே…?” வேண்டுமென்றே வம்பு செய்த மணிமேகலையை பாவமாக பார்த்து விட்டு,” நான் சும்மா பார்க்க தான் வந்தேன் “என்று கூறினார்.

“சும்மா எல்லாம் பார்க்க வரக்கூடாது கதிர்சார் முறைப்படி பொண்ணு கேட்டு வாங்க .அப்போ தான் அத்தை கல்யாணத்திற்கு ஒத்துப்பேன்” என ஜீவன் கூற ,அவர் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி ததும்பியது.

“தாங்க் யூ ஜீவன்…  கண்டிப்பாக வர்றேன் “என்று அணைத்து தன் மகிழ்வை வெளிப்படுத்தியவர், அங்கிருந்தபடியே தன் தந்தையை குடும்பத்துடன் வரவழைத்தார்.

பெண் பார்க்கும் படலம் துவங்க ஜீவன் வீட்டில் கல்யாண களை கட்டியது.

இங்கே மந்திரவாதியிடம் அனுவின் புகைப்படத்தை காட்டி அவள் தப்பி விட்டதாக தகவல் கூறிக் கொண்டிருந்தான் ஒருவன்.

….. தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  5 Comments

  1. டேய் என்னங்கடா…எங்க திரும்பினாலும் வில்லன்களும் வில்லிகளும் கூடவே வில்லங்கமுமாவே இருக்கே…
   கதிர் மேகாவுக்கு நர்த்தனாவும் அவங்க அண்ணனும்…தேவாக்கும் அனுவுக்கும் அவங்க அப்பாவே எதிரா இருக்காரு…இதுல யாரோ ஒரு பொண்ண ஒரு ரவுடி கும்பலே தொரத்துது….அது தேவாதானோனு ஒரு டவுட்டு வேர இருக்கு….இதுல தேவா பேயே இல்லனு ஒரு டவுட்டு வேற இருக்கு….பத்தாக்குறைக்கு இந்த சாமியாரால ஜேபிக்கு தொல்லை….
   எந்தபக்கம் திரும்பினாலும் பிரச்சினையாவே இருக்கே…இதெல்லாம் எப்போ தீருமோ…

   1. Author

    ஹீஹீஹீ பேபி வெயிட் பண்ணுடா இப்ப தான் நாம 9 வது எபிக்கே வந்திருக்கோம் வில்லனுகளை லிஸ்ட் அவுட் பண்ணிட்டு ஒவ்வொருத்தரையா காலி பண்ணலாம் 😁😁😁😁😁😁மிக்க மகிழ்ச்சி மா

  2. 🤣🤣🤣🤣அத்தை இப்படி காக்க வெக்குறது கொஞ்சம் ஓவரா இல்ல. இந்த மந்திரவாதிக்கு ஒரு பாயசத்தை போட்டுற வேண்டி தான்😑😑😑😑

   1. Author

    மிக்க நன்றி மா பாயசம் போட ஆள் இருக்கு தாராளமாக போடுவாங்க அவருக்கு வெயிட் பண்ணுங்க

  3. Shh appa…. Muthala intha manthravathiya thookkanim… Ella idathulayum kada vetturan….