Loading

                 பகுதி-07

அந்த அரசியல் கட்சி தலைவர் சாமியார் கேட்டிருந்த பெண்ணை ஏற்பாடு செய்து இருக்க, தன் சல்லாபத்தை முடித்து விட்டு மடத்திற்கு கிளம்பினார் சாமியார்.

இங்கே ஜேபியோ , பணம் புரட்ட இயலாததால் ‘கதிர்வேலனுக்கு கொடுத்த பணத்தை வாங்கி வர முடியுமா..?’ என்று மணிமேகலையைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஜீவ் குடுத்தப் பணத்தை எப்படி திருப்பி கேட்க முடியும்…?” சங்கடமாக கேட்டார் மணிமேகலை.  

“அத்தை உங்களுக்கு உங்க அண்ணனைப் பார்க்க விருப்பம் இல்லையா…?” என்று கேட்டதும், சுள்ளென எரிந்து விழுந்தார் மணிமேகலை.

“உன் பைத்தியக்கார தனத்திற்கு உதவி செய்ய மாட்டேன் னு சொல்றேன் புரியுதா… !! ,ஜீவ் அண்ணன் இறந்து போயிட்டார்… இறந்தவரை உயிரோடுக் கொண்டு வருவதென்பது நடக்காத காரியம் அவருடைய உடம்பு கூட இப்போ மக்கி போயிருக்கும்” என்றார் கடுமையாக

“அத்தை..!” என்று அலறியவனோ,”  இனிமே உங்க கிட்ட எந்த ஹெல்ப்பும் நான் கேட்க மாட்டேன். என் அப்பாவை எப்படி கொண்டு வர வேண்டும் என்று எனக்குத் தெரியும்” என்று கத்தியவன், அங்கிருந்து சென்று விட்டான்.

மணிமேகலைக்கு ஜீவனை நினைத்து கவலையாக இருந்தது. 

“வேதா ஏன் டா இவன் இப்படி இருக்கிறான்…  உயிரோடு இருந்தபோது அவர் பேச்சை மருந்திற்கு கூட கேட்கவில்லை இப்போ இறந்த பிறகு அவரை உயிரோடு கொண்டு வரேன் னு பேசிட்டு இருக்கானே…  இவனை மாற்ற என்ன தான் டா வழி ” கவலையாக கேட்க ,

வேதாவோ சிரிப்புடன் .,”விரைவில் மாற்றம் வரும் கவலையை விடுங்க அத்தை. நாம எதுக்கு இருக்கோம்” என்று சமாதானம் செய்து விட்டு தேவான்ஷியை அழைத்தான்.

“தேவ் நீ இன்னைக்கு உன் பேரண்ட்ஸை பார்க்க வேண்டும் என்று அவனிடம் சொல்லு,  எத்தனை நாளைக்கு தான் நீயும் இப்படி ஆவியா அலைவ” என்று சொல்ல,

“சரிண்ணா “என்று முடித்துக் கொண்டாள்.

வேதாவிடம் கூறியபடியே ஜீவனை படுத்தி வைத்தாள் தேவான்ஷி.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

“சென்னைக்கு வந்து ஒரு வாரம் ஆகிடுச்சு ஆனாலும் அந்தப் பொண்ணை கண்டுபிடிக்க முடியலை இப்படியே போனா பேமண்ட் கிடைக்காது என்ன செய்வது…?” என்று அந்த ரௌடி கும்பல் தலைவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

“அண்ணே  பேசாம பேப்பர் ல நியூஸ் குடுப்போமா ….!!  ” அறிவாளி அடியாள் ஒருவன் கேட்க தலைவனோ,  மூக்கு விடைக்க முறைத்தான்.

“அப்படியே கண்டுபிடித்து தருபவர்களுக்கு பத்தாயிரம் சன்மானம் வழங்கப்படும் னு சொல்லி உன் பேர் ,என் பேர்,  நம்பர் எல்லாம் தருவோமா…??” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“செம ஐடியா தல…  அதே மாதிரி பண்றோம் பொண்ணை கண்டு பிடிக்கிறோம்… அமவுண்ட் வாங்கினதும் எனக்கு நீங்க இதுக்காக பெரிய பரிசு எல்லாம் தர வேண்டாம்… ஜஸ்ட் சம்பளத்தை ஏத்தினா மட்டும் போதும்” என்று கெத்தாக சொன்னவனை நெருங்கி இருந்தான் தலைவன்.

அவனது நடு மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தவனோ,” இனிமே ஐடியா சொல்றேன், ஐயர் பிடிக்கிறேன் னு வாயைத் திறந்த,  மகனே…! அடுத்த டெட்பாடி நீ தான். இவனை நாலு குமுறு குமுறி கூட்டிட்டு வாங்கடா…” என்று தனது ஜீப்பின் பேனட்டில் ஏறி அமர்ந்து சிகரெட்டை பத்த வைத்தான். அதற்குள் அவனது அலைபேசி அழைத்தது.

“டேய் என்ன அந்தப் பொண்ணை கண்டு பிடிச்சீங்களா..?, இல்ல நான் வேற ஆள் பார்த்துக்கட்டுமா…!!” என்று எடுத்ததும் கேட்க ரௌடி கும்பல் தலைவன் கடுப்பானான்.

“சார் இங்கே வந்து ரெண்டு நாள் தான் ஆகுது… இது ஒண்ணும் கொட்டாம்பட்டியோ பொட்டல்காடோ இல்லை உடனே கண்டு பிடிக்கிறதுக்கு சிங்கார சென்னை தமிழ் நாட்டின் தலைநகரம் எவ்வளவு மக்கள் தொகை இருக்குனு தெரியுமா உங்களுக்கு இதுல ஒரு ஃபோட்டோவை வச்சு ஒரு பொண்ணைக் கண்டு பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது பொறுமை வேணும் சார்…கொஞ்சம் பொறுத்துக்கங்க கண்டுபிடித்து தரேன்” என்று இணைப்பை துண்டித்து விட்டு திரும்ப அங்கே அவர்கள் தேடிய பெண் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தாள்.

“இது அவ தானே அவளே தான்… டேய் வாங்கடா அவளைக் கண்டு பிடிச்சாச்சு “என ஷாப்பிங் மாலுக்கு விரைந்தான் அவன்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

“அப்பா நீங்க செய்றது ரொம்ப தப்பு வேண்டாம் பா விட்டுடுங்க ப்ளீஸ்… !!”என்று அனுகீர்த்திகா இளங்கோவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“இதோப் பாரு மா,  நான் எந்த தவறும் செய்யவில்லை… நீ தேவை இல்லாமல் பயப்படாதே… உனக்கு இந்த மாதத்தில் கல்யாணம் செய்து வைக்கலாம் னு முடிவு பண்ணி இருக்கேன்…” என்றார் இளங்கோவன்.

“என்ன கல்யாணமா..? இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்…. அக்கா இறந்து மூன்று மாதம் தான் ஆகுது அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வைக்கனும் னு சொல்றீங்களே…!! அக்காவை மறந்து விட்டு ஒரு விஷேஷம் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்தது சாரிப்பா என்னால முடியாது” என்று அழுத்தமாக மறுத்தாள் அனுகீர்த்திகா.

“அப்போ நானும் உங்க அம்மாவும் விஷம் குடித்து சாக வேண்டியது தான்… கொடுத்த வாக்கை நிறைவேத்த முடியாத நாங்க எதற்காக உயிரோடு இருக்க வேண்டும் “என்று சொல்ல அனுகீர்த்திகா பயந்து போனாள்.

“அப்பா..!!” என்று அலற, அவரோ.,  தட்டில் சாதத்தைப் போட்டு ஒரு பாட்டில் மருந்தை அப்படியே கவிழ்த்து உணவை பிசைந்து வாயில் வைக்கப் போனார்.

அதை தட்டி விட்டவளோ, வேகமாக .,”இல்லப்பா நீங்க சொல்றதைக் கேட்கிறேன் பா” என்று அரற்ற, இளங்கோவன் வெற்றிப் புன்னகை புரிந்து நின்றார்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஜீவன், மணிமேகலையிடம் கத்தி விட்டு சென்றவன், நேராக அந்த மந்திரவாதியைத் தான் பார்க்க சென்று இருந்தான்.

“என்ன மகனே உன் முகம் குழப்பமாக இருக்கிறது..! ஏதேனும் பிரச்சினையா…?”

“ஆமாம் சாமி பணம் ஏற்பாடு செய்வதில் காலதாமதம் ஆகுது சாமி அதான் அது மட்டுமில்லாமல் என் நம்பிக்கையை தவறா பேசுறாங்க அதான் கஷ்டமா இருக்கு” என்று வேதனையுடன் பேசினான்.

“நம்பிக்கையற்றவர்களை கணக்கில் கொள்ளாதே மகனே… !! உன் ஆசை நிச்சயம் நிறைவேறும். உன் தந்தை வந்த பிறகு அவர்களுக்கு என் சக்தி புரியும் என்றவர் அன்று ஏதோ கூற வந்தாயே என்ன அது…?” என்று கூர்மையாக பார்த்து விட்டு கேட்டார்.

“ஆமாம் சாமி நானும் மறந்து விட்டேன் பாருங்க நல்ல வேளை நினைவுபடுத்தி விட்டீங்க நான் அன்னைக்கு சுடுகாட்டில் போய் பூஜை போட்டேனே அப்போ தவறுதலா வேறொரு சமாதியில் பூஜை செய்து விட்டேன் அதனால அந்த சமாதியில் இருந்த ஆவி எங்களோடு வந்திடுச்சு…” என்றான் அமைதியாக

“என்ன…?” என்று மந்திரவாதி பதற

“பயப்படாதீங்க சாமி அந்த ஆவி இதுவரை எங்களுக்கு எந்த பிரச்சினையும் தரவில்லை நார்மலான பொண்ணு மாதிரி தான் நடந்துக்கிது “என்றான் ஜீவன் இயல்பாக.

“தொல்லை தராத ஆவி என்றால் பரவாயில்லை தான் .ஆனால் ஒரு ஆவி இருக்கும் போது மற்றொரு ஆன்மா அந்த இடத்திற்கு வராது நாம மறுபடியும் அந்த ஆவியை சமாதிக்கு அனுப்பி விட்டு உன் அப்பாவை வரவழைப்போம்… ” என்றார் மந்திரவாதி.

“அச்சச்சோ அப்போ அந்த ஆவியை உடனே போக சொல்லனும் சாமி நீங்க தான் உதவி செய்யனும் …!” என்றான்.

“நிச்சயமாக மகனே…!அந்த ஆவியை எப்படியாவது இங்கே அழைத்து வந்து விடு நான் அதற்கு ஆத்ம சாந்தி அளிக்கிறேன்” என்றார் மந்திரவாதி.

“கண்டிப்பாக சாமி… அதுக்கு முன்னாடி அந்த பொண்ணு அவங்க அப்பா அம்மாவை பார்க்க வேண்டும் என்று கேட்டது அதை மட்டும் நிறைவேத்தி தந்திடுறேன் சாமி அதன் பிறகு அவளே வந்திடுவா “என்றவன் விடை பெற்றுக் கிளம்பினான்.

தன் ஆட்களை விரைந்து அழைத்த மந்திரவாதியோ ஜீவனை பின்தொடர்ந்து செல்லும்படி கூறினார்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஜீவனை திட்டி விட்டாலும், மனம் கேளாமல் கதிர்வேலனைப் பார்த்து திரும்ப பணத்தை கேட்கலாம் என்று கிளம்பினார் மணிமேகலை.

கதிர்வேலன்  நெற்றியில் கை வைத்தபடி , தனது வீட்டில் ஹாலில் அமர்ந்திருந்தார்.

“மே ஐ கமின் சார்… !”என்றதும் கண் விழிக்க மணிமேகலையைக் கண்டு முகம் மலர்ந்தார் கதிர்.

“வாங்க மேகா… சிட் டவுன்” என உபசரித்து அமர வைத்தார்.

“சார் பலமான யோசனையில் இருக்கீங்க போலிருக்கு…  டிஸ்டர்ப் பண்றேனோ…?” 

“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல நீங்க சொல்லுங்க …  ஏதாவது முக்கியமான விஷயமா அமவுண்ட் தான் செட்டில் பண்ணிட்டிங்களே…!!” என்று குழப்பமாக கேட்க மணிமேகலை தயங்கினார்.

“நான் பணத்தை திரும்ப வாங்கிட்டுப் போக வந்தேன் சார்…” என்றார் தயக்கமாக

“வாட்…?  ஆனால் எதுக்காக…?”

“ஜீவனுக்கு அர்ஜன்ட்டா பணம் தேவைப்படுதாம் .இப்போ வேற ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது னு சொல்லிட்டாங்க இல்லையா பேங்கில் பணம் எடுக்க சிரமமா இருக்கு ஸோ அதான் “என்றார் மணிமேகலை.

“ஸ்ஸ்ஸ் அப்படியா…  கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா அமவுண்ட் கொடுத்திருப்பேன் ஜஸ்ட் நவ் இப்ப தான் கேஷியர் கிட்ட கொடுத்து வங்கியில் கட்டிட்டு வர சொன்னேன்” என்றதும் மணிமேகலையின் முகத்தில் ஏமாற்றம் பரவியது.

அதைக் காண பொறுக்காதவனோ…  “கவலைப்படாதீங்க மேகா ஏதாவது பண்ணலாம்… பட் என்ன ரீசன் னு தெரிஞ்சுக்கலாமா…?” என்றான்.

“ப்ப்ச் அதை ஏன் கேட்குறீங்க என் அண்ணன் இறந்து போயிட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது… யாரோ ஒரு சாமியார் சொன்னாராம் .உன் அப்பாவை உயிரோடுக் கொண்டு வரேன் னு இவனும் பைத்தியம் மாதிரி அதை நம்பி பணத்தை வாரி இறைக்கிறான்” என்று சோர்வாக சொல்ல கதிர் அதிர்ச்சியாக கத்தியே விட்டான்.

“வாட்… இந்த காலத்தில் இதை எல்லாமா நம்புவாங்க ஜீவன் கிட்ட நான் பேசவா…? ஏன் இப்படி பண்றாரு..?” சற்று சினத்துடன் கேட்டார். 

“பேசிப் பார்த்தாச்சு அவன் நாங்க சொல்றதை கேட்கவே மாட்டேன்றான்… ” சலிப்பாக கூறினார் மணிமேகலை. 

“மேகா அதுக்காக லட்ச லட்சமா பணத்தை இழப்பாங்களா யாராவது…?  இது என்ன வியாபாரமா …? லாப நஷ்டம் வரும் போது அவங்களே புரிஞ்சுப்பாங்கனு நினைக்கிறதுக்கு…  இது ஒரு மூடநம்பிக்கை இதை என்கரேஜ் பண்றது போல நீங்களும் கண்டுக்காமல் இருப்பது முட்டாள்தனம் இல்லையா…?” என்று கடிந்து கொண்டான்.

“ஐ க்நோ கதிர் சார்…  பட் சின்ன குழந்தையா அடிச்சு திருத்த…  ? ஒரு பிஸ்னஸ்மேன் அவனுக்கே அது தெரியலைனும் போது நாம என்ன செய்ய முடியும்…?” என்று வருந்தினார் மணிமேகலை.

நர்த்தனா தன் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்திட , மணிமேகலையைக் கண்டு முகத்தை சுளித்தாள்.

“இந்த மேனாமினுக்கி என்ன அடிக்கடி வர்றா…!! இது சரி இல்லையே முதல்ல இவளை வெட்டி விடனும்” என நினைத்து கொண்டு நிற்க, கதிர்வேலன் நர்த்தனாவை அழைத்தான்.

“நர்த்தனா ரெண்டு காஃபி எடுத்துட்டு வாம்மா “என்றதும் சரி என்று தலையாட்டியவள், சமையலறைக்குள் புகுந்தாள்.

“இவளுக்கு நான் காபி தரனுமா..?,  தலை எழுத்து…” என்று முனகியபடி காஃபியை கலந்து இருவருக்கும் கொடுத்து விட்டு நகர அதற்குள் கதிர்வேலனின் கைபேசி அழைத்தது.

“ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன் நீங்க குடிங்க “என்றவன் சற்று தள்ளி நின்று பேச, நர்த்தனா மணிமேகலையிடம் வந்தாள்.

“என்ன மேடம் எங்க வீட்டுக்கு அடிக்கடி வர்றீங்க…? இவரை கரெக்ட் பண்ணி இங்கேயே செட்டில் ஆகப் ப்ளான் போடுறீங்களோ …?” நேரடியாகவே கேட்க,  ஏற்கனவே மணிமேகலைக்கு அன்று இவள் தேவை இல்லாமல் பேசியதில் கோபம் இருந்தது… இன்று தீர்க்க நினைத்தவள் வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.

“ஏன் அதில் என்ன தவறு இருக்கிறது…  அவர் பேச்சுலர், நானும் கல்யாணம் ஆகாத கன்னிப் பெண், ஸோ ஆசைப்படுறதில் தப்பு இல்லையே … “என்றார் நக்கலாக.

“ஓஓஓ அதான் முப்பது வயசுக்கு மேல ஆகியும் மாடர்ன் டிரெஸில் எவன்டா கிடைப்பான்னு சுத்துறீங்களோ…. ச்சீ ச்சீ எனன ஒரு கேவலமான புத்தி இதுக்கு நீங்க அந்த தொழில் பண்ணலாம் “என்று சொல்லும் போதே பின்னால் இருந்து கதிர்வேலனின் குரல் கர்ஜனையாக வந்து விழுந்தது.

“நர்த்தனா” என ஓங்கி அலற, அவளுக்கோ தலை முதல் கால் வரை நடுங்கியது.

“மா.. மாமா.. அது அது வந்து…  அவங்க தான் உங்களை… ” தடுமாறினாள் நர்த்தனா. 

“ச்சீ ஒரு குடும்பப் பொண்ணு பேசுற மாதிரியா பேசுற…  அதுவும் எப்படிப்பட்ட வார்த்தைகள்  உன்னை அறைய ஒரு நிமிஷம் ஆகாது…. பொண்ணுங்களை கை நீட்டக் கூடாது னு நினைக்கிறவன் நான்.. என் பொறுமையை சோதிக்காதே போயிடு மரியாதையா” என்று பல்லைக் கடித்தான்.

“நான் என்ன ஊருல உலகத்தில் நடக்காததையா சொல்லிட்டேன் இந்த வயசுலயும் இப்படி மினுக்கிட்டு வந்து நின்னா அதுவும் கல்யாணம் ஆகாத ஆம்பிளை முன்னாடி…  அதனால் தான் சொன்னேன்”  விடாமல் பேசினாள் நர்த்தனா.

கதிரவன் ஏதோ பேச வரவும், மணிமேகலை கையை நீட்டி தடுத்து நிறுத்தி விட்டு.,” இப்போ என்ன செய்யனும் னு சொல்றீங்க நர்த்தனா… நான் இங்கே வந்தது பிஸ்னஸ் பேச, இங்கே யாரையும் மயக்க வரலை, மயக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை, உங்களுடைய சொத்தை விட பல மடங்கு அதிகம் உள்ள சொத்துக்களுக்கு சொந்தக்காரி நான்…  இனிமே என் டிரெஸிங் பத்தியோ இல்லை, என் கேரக்டர் பத்தியோ பேசினால் அடிச்சு பல்லை கழட்டிடுவேன் “என்றார் சிரித்தபடியே.

“மேகா நீங்க கிளம்புங்க நான் பணத்தை கேஷியர் கிட்ட கொண்டு வரச் சொல்லி இருக்கேன் வந்ததும்  இன்ஃபார்ம் பண்றேன் வாங்கிக்கங்க” என்று அவரை அனுப்ப, ரமேஷ் குறுக்கிட்டான்.

“அண்ணா இப்பவே பணத்தை கொடுத்து இவங்க டீலிங்கை முடிங்க …மறுபடியும் ஒரு மீட்டிங் எதற்கு… நர்த்தனா சொன்ன மாதிரி ஏதாவது நடந்திட்டா, உங்களைப் பற்றி வெளியே என்னவெல்லாம் பேசுவாங்க…  உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசினா அது நம்ம குடும்பத்துக்கும் அசிங்கம்… வயசுக்கு தகுந்த மாதிரி துணி உடுத்தாத இவங்களைப் போய் உங்க கூட ச்சே அதுவும் என் அண்ணியா நினைச்சுப் பார்க்கவே கூசுது… “என்று முகத்தை சுளித்தான் ரமேஷ்.

இப்போது மணிமேகலைக்கு நிஜமாகவே கண்கள் கலங்கி விட்டது. சட்டென வெளியே செல்ல முற்பட, கதிர்வேலனின் இரும்புக் கரங்கள் அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியது.

“அவங்க என்னடா சேர்த்து வச்சு பேசுறது… ?, ஆமா டா  இவ என்னைப் பார்க்க தான் வந்தா…  !! என்னை மயக்கி கல்யாணம் பண்ணிக்க தான் வந்தா… நான் தான் வரச் சொன்னேன்… உங்களுக்கு வருத்தமா இருந்தா நீங்க ஒதுங்கிக்கலாம்…  மேகா என்னை திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பமா னு கேட்க மாட்டேன் என்னை கல்யாணம் பண்ணிக்கங்க னு வேண்டுகோள் வைக்கிறேன் .பண்ணிப்பிங்களா…!!”  என்று எல்லார் முன்னிலையிலும் கேட்டு விட்டான் கதிர்வேல்.

அவன்  சட்டென்று கேட்டதும் அதிர்ந்த மணிமேகலை எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினாள்.

நர்த்தனாவிற்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியவில்லை…  மனமோ.,” நிஜமாகவே கதிர்வேலன் மணிமேகலையைத் திருமணம் செய்து கொள்வானோ’ என்ற அச்சம் தோன்ற தன் கணவனை எரிக்கும் பார்வை பார்த்தாள் நர்த்தனா.

அறைக்குள் சென்ற கதிர்வேலனுக்கோ,’ தானா இப்படி பேசினோம்’ என ஆச்சரியமாக நின்று கொண்டிருந்தான்.

‘என்னைப் பற்றி என்ன நினைச்சிருப்பா…?, ச்சே எல்லாம் இந்த நர்த்தனாவால் வந்தது’ என்று எரிச்சலுடன் அமர, அவனது மனமோ .,’அவள் பேசினால் நீ திருமணம் செய்து கொள்ள கேட்பாயா …? ,உனக்கு அந்த எண்ணம் இல்லாமலா கேட்டாய் …!’என்று கிண்டல் செய்தது.

‘ஒரு வேளை நமக்கு மேகாவை பிடிச்சிருக்கோ அதனால் தான் கேட்டோமோ… ‘ என்று யோசிக்க மணிமேகலையோ  கதிர்வேலன் பேசியதை நினைத்தபடி காரில் சென்று கொண்டிருந்தாள்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

தேவான்ஷி ஜீவனை படுத்தி வைத்த பாட்டில், சாமியாரிடம் ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்த யாகத்தைக் கூட மறந்து விட்டு, அவளை இழுத்து கொண்டு சேலத்திற்கு கிளம்பினான். 

“இதோப் பாரு நீ கேட்ட மாதிரியே உன்னை உன்  பேரண்ட்ஸ் கிட்ட அழைச்சுட்டு போறேன்…  பார்த்துட்டு பேசிட்டு என்னோடு வா நான் சொன்ன மாதிரியே சாமியார் உனக்கு மோட்சம் தந்திடுவார் புரியுதா…!” என்றான். எல்லாவற்றிற்கும் தலையாட்டினாள்  தேவான்ஷி.

சேலத்திற்கு சென்றவர்கள் தேவான்ஷியின் வீட்டிற்கு சென்றனர்.

போகும் வழியிலேயே ஜீவன் தன் சந்தேகத்தைக் கேட்டான். 

“ஏன் தேவா உன் பேரண்ட்ஸ்க்கு நீ தெரிவியா இல்லை நான் தான் உன்னைப் பத்தி சொல்லனுமா…?”

“அதெல்லாம் வேண்டாம் … என் சிஸ்டரைப் பார்த்து பேசினாப் போதும்  அதுவும் இப்போ போக வேண்டாம் நைட் ல போகலாம்” என்றாள்.

“ஏன்…?”

“சார் பேய் எங்கேயாவது பகல்ல வருமா ராத்திரியில் வந்தா தான் ஆவி, இல்லாட்டி மனுசங்க தான்” என்று சொல்ல ஜீவன் சிரித்தபடியே .,”விவரமான ஆவி தான் நீ…  ஆமா நீ எப்படி இறந்த…?” 

“ஆக்ஸிடன்ட் ஆகி விட்டது…என்னுடைய கல்யாணத்திற்காக பேச போன போது தான் அது நடந்தது “என்று அமைதியாகினாள்.

“சாரி மா..!” என்று விட்டு தன் வீட்டிற்கு வண்டியைத் திருப்பினான் ஜீவன்.

“ஏன் வேற பாதையில் போறீங்க… ?”

“நீ தானே உன் சிஸ்டரை நைட்ல பார்க்கனும் னு சொன்ன அதுவரை என்ன பண்றது…  ஸோ என் வீடு பக்கத்தில் தான் போகலாம்” என்றதும் .,”சரி” என்றாள்.

அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே யாரும் இல்லை .

“கொஞ்சம் குப்பையா தான் இருக்கும் அப்பா இருந்தப்ப அவ்வளவு நீட்டா பராமரிச்சார்… நான் தான் கவனிக்காம போட்டு வச்சிருக்கேன்…  அதனால் என்ன நீ தானே வா போகலாம்” என்று அழைத்து சென்றான்.

வாசலிலையே நின்று கொண்டாள் தேவான்ஷி.

“ஏன் என்ன ஆச்சு…? வா உள்ளே… இங்கே எந்த மந்திரக்கட்டும் இல்லை ஆவி எல்லாம் உள்ளே வரலாம்” என்றான் கிண்டலாக.

“ப்ப்ச் அதெல்லாம் இல்ல “என்றவள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைய, ஜீவன் சிரித்தபடியே .,”ஓய் நீ என்ன இந்த வீட்டு மருமகளா…?,  வலது காலை எடுத்து வச்சு உள்ளே வர்ற… வா ஆமா ஆவிக்கு எல்லாம் கால் இருக்காது னு சொல்வாங்க உனக்கெப்படி இருக்கு…  உன்னை இப்பவும் என்னால ஆவினு நம்ப முடியலை” என்று பேசிக் கொண்டே உள்ளே சென்றான்.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறிங்களா ஜீவன்…?” என தேவான்ஷி திடீரென கேட்டதும் அதிர்ந்து நின்றான் ஜீவப்ரியன்.

….. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. Janu Croos

   ஜேபி….உனக்கு மட்டும் இல்ல எல்லாருக்குமே தேவா ஆவிதானானு ஒரு டவுட்டு இருக்கு ராசா….இவள் கூட அந்த வேதாவும் கூட்டுக்களவானியோனும் தோணுது….

   நரத்தனா….கோணமூக்கி…நீ பண்ண நாரதர் வேலை எப்படி நன்மையில முடிஞ்சிருக்கு பாத்தியா….பேச்சா பேசாற…நீ பேசுற பேச்சுக்கு உன் மூக்குலயே குத்தனும் போல இருக்கு…ஆளும் மூஞ்சியும்….இதுக்கு மேல எதாவது பேசு…மணியே உன் மூஞ்சிய பேத்திடுவாள்….

   1. Bambara Vedi
    Author

    மிக்க மகிழ்ச்சி மா கண்டிப்பாக மணிமேகலை செய்வா காத்திருங்க

  2. Sangusakkara vedi

   Enakum antha doubt iruku jp.. ennada pei ellam propose pannuthu…. Super kathir manusula ilamala veliya varum… Nee kalaki… Mega enna solla porangalo… Me waiting….