ஆவி-05
தேவான்ஷி மணிமேகலையுடன் ஷோரூம் செல்ல., அங்கிருந்த ஜேபியோ அவளைக் கண்டதும் அதிர்ந்து போனான்.
“இவ என்ன அத்தைக் கூட வர்றா…!! ஒரு வேளை அத்தைக்கு உண்மை தெரிஞ்சு இருக்குமோ…. !! இல்ல அவங்க கண்ணுக்கு தெரியாம இவ வர்றாளோ….!!” மனதில் குழம்பினான் ஜேபி.
மணிமேகலையின் பின்னால் வந்தவளோ.., அவனைப் பார்த்து கண் சிமிட்டிட., மூக்கு விடைக்க முறைத்தான் அவளை.
தேவான்ஷி தன் பின்னால் தான் வருகிறாள் என்ற நம்பிக்கையில் .,”ஜேபி…. அக்ரிமென்ட் சைன் பண்ணிட்டியா ..??அந்த டீலர் வந்தாச்சா..??” கேள்வி கேட்டபடியே அலுவலக அறைக்குள் நுழைந்தார் மணிமேகலை.
அவனோ அவருக்கு பதில் அளிக்காமல் தேவான்ஷியை இழுத்தான் வேகமாக.
“நீ இங்கே என்ன பண்ற…?? எதுக்கு அத்தைப் பின்னாடி வந்த…. ?? அவங்களை ஏதாவது தொல்லை பண்ணியா…??” வரிசையாக கேள்விகளை கேட்க.,
அவளோ உதடு குவித்து.,” உஸ்” என்று சத்தமிட்டு சலித்தபடி அலுவலக அறைக்குள் சென்றாள்.
“கேட்கிறேனே ஏதாவது பதில் சொல்லுறாளா இந்தப் பேயி” பல்லைக் கடித்தவன்… உள்ளே செல்ல முனைய., திடுமென ஏதோ சண்டையிடும் சத்தம் கேட்கவும் அங்கே விரைந்து சென்றான் .
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
“ஒரு பொண்ணைக் கண்டு பிடிக்க துப்பு இல்லை நீங்க எல்லாம் என்ன ரௌடிங்க… ??” உச்சஸ்தாயில் ஒருவன் கத்திக் கொண்டிருந்தான்.
“சார் அந்தப் பொண்ணு காணாமல் போய் கிட்டதட்ட ஒரு மாசம் ஆகப் போகுது… திடீர் னு வந்து கண்டுபிடிக்க சொல்றீங்க…. அதுவும் எந்த ஹெல்ப்பும் இல்லாமல்… “என்று சலித்துக் கொண்டான் அந்த கூட்டத்தின் தலைவன்.
“ஏய் ! யார் கிட்டயாவது ஹெல்ப் கேட்டுத் தான் நாங்க அந்தப் பொண்ணை கண்டு பிடிக்கணும்னா போலீஸ்க்கு போயிருப்போம்… கல்யாணம் ஆக வேண்டியப் பொண்ணு ஓடிட்டா… மாப்பிள்ளை நல்லப் பையனா இருக்க போய் இன்னும் ஒரு மாதம் கழித்து கல்யாணம் வைக்கலாம் னு சொல்லி இருக்கார்… ஸோ ப்ளீஸ் சீக்கிரம் கண்டுபிடிங்க பணத்தைப் பத்தி கவலைப்படாதே…. அவ்வளவு தான்… அட்வான்ஸா பத்து லட்சம் வாங்கிக்க தட்ஸ் ஆல்….” என்றார் எதிரில் இருந்தவர்.
“சரி சார் சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன் எனக்கென்னவோ பொண்ணு காணாமல் போனது நைட் டைம் அப்படிங்கிறதால., அந்த பொண்ணு ஏன் சேலத்தை விட்டு வேற எங்கேயும் போயிருக்க கூடாது …. ?” என்று சந்தேகத்தை கேட்டான் அவன்.
“இருக்கலாம் ஆனா எந்த ஊருக்கு போனான்னு எப்படி கண்டு பிடிக்கிறது…. ???”
“சார் சிம்பிள் அவங்க ஃப்ரெண்ட்ஸ் எந்தெந்த ஊரில் இருக்காங்க னு டீடெயில் குடுங்க ஈசியா முடிச்சிடலாம் ”என்றான்.
“சேலத்தை தாஅந்தப் பொண்ணு எங்கேயும் போனதில்லை.. !!” என்று தெளிவாக கூறினார் அவர்.
“சார் முன்னாடிப் போனதில்லை ஆனா இப்போ போயிருக்கலாம் இல்லையா…!! நாங்க சென்னை , மும்பை பக்கம் ஆள் விட்டு தேடுறோம்… ” என்றான் அந்த ரௌடி.
“ஏன் அண்ணே அவர் செலவுல இந்தியாவை சுத்தி பார்க்க ப்ளான் போட்டுட்டியா !!!”என்று கிசுகிசுத்தான் கூட்டத்தில் ஒருவன்.
கடுப்பாக முறைத்து விட்டு, “சும்மா இருடா இல்ல வாயிலையே சுடுவேன்…. ”
“பெரிய தோசை மாஸ்டரு …. சுடுவாராம்… ஹ்ஹாஹா எவ்வளவு பெரிய மாஸ்டரா இருந்தாலும் தோசைக் கல்லுல தான் தோசை சுட முடியும் வாயில எல்லாம் சுட முடியாது” என முணுமுணுத்தான்.
“என்னடா…??” அரைகுறையாக காதில் வாங்கிக் கொண்டு கேட்டான் ரௌடி.
“ஒண்ணுமில்லை ண்ணே சொந்த கதை சோகக்கதை பேசிட்டு இருக்கேன்… ”
“ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்… ”
“பயந்துட்டாலும்….!!”
“டேய்….!!”என்று அதட்டினான் தலைவன்.
மிரட்டல் குரல் தான் தலைவனுக்கு. ஆனாலும் அவர்கள் பயம் தான் கொள்ளவில்லை. இருப்பினும் காசு தருபவன் ஆயிற்றே பணிந்தே போயினர் அடியாட்கள்.
“சொல்லுங்கண்ணே… !!”என்றான் அந்த அடியாள் பதவிசாக
“போய் வண்டியை ரெடி பண்ணு சென்னை போகனும்” என கூறி விட்டு, தனக்கு வேலை கொடுத்தவரிடம் அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொண்டான்.
சென்னையை நோக்கி பயணித்தனர் அவர்கள்.
இங்கே தேவான்ஷி உதடு பிதுக்கி தலையைக் குனிந்து கொண்டே , விழிகளை மட்டும் உயர்த்தி எதிரில் இருந்த ஜேபியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன் வீடு எங்கிருக்கு …?, சொன்னா நான் அழைச்சுட்டு போறேன் நீயும் உன் அம்மாவைப் பார்த்து விட்டு பழைய இடத்திற்கே அதாவது சுடுகாட்டிற்கே போயிடு ” என்றான் விறைப்பாக
“ஃப்பூ இதுக்கா முகத்தை பிஎஸ் வீரப்பா மாதிரி வச்சிருந்தீங்க…!! ,நான் கூட பயந்து போயிட்டேன்… ”சலித்துக் கொண்டாள் தேவான்ஷி.
“உன் முகத்தைப் பார்த்தா பேய் மாதிரி தெரியலையே… !!” சந்தேகம் தொக்கி நின்றது அவனது வார்த்தைகளில்.
“சார் சும்மா சும்மா அதையே கேட்டுக்கிட்டு இருக்கீங்களே ..!!” என்றவள் கையில் காஃபியுடன் வந்து கொண்டிருந்த வேலைக்காரியை நோக்கி கையை நீட்ட., சற்று நேரத்தில் அவள் வாயில் ரத்தம் கசிய மயங்கி சரிந்தாள்.
“அச்சச்சோ… என்ன காரியம் பண்ணிட்ட..?? பைத்தியம் புடிச்ச பேயே..!!” என்று கத்தி விட்டு ஓடினான் வேலைக்காரியை நோக்கி.
“வேதா …!! அத்தை…!! யாராவது தண்ணி கொண்டு வாங்க…!! ”என்று விட்டு அவரை உலுக்கினான்.
வேதா ஓடி வந்து தண்ணீரை தெளித்து .,“என்ன ஆச்சு ஜேபி … ??” என்று தண்ணீரைத் தெளித்து எழுப்பினான்.
“ப்ப்ச் அந்த லூசு தான் டா இப்படி பண்ணிட்டா… ”என்று கூறியவன்.,“ அக்கா உங்களுக்கு ஒண்ணும் இல்லயே..??” என பதறிட… ,“இல்ல தம்பி எதுவும் இல்லை” என்று எழுந்தார்.
“அக்கா ஹாஸ்பிடல் எதுவும் போறீங்களா… ??” பரிதாபமாக கேட்டான் ஜீவன்.
“வேண்டாம் தம்பி கொஞ்ச நேரம் படுத்து எழுந்தா சரியாப் போயிடும் ”என்று சொல்ல .,
“சார் அதெல்லாம் எதுவும் ஆகாது… ” தேவான்ஷி சொல்லவும் ,அவளை முறைத்தபடி.,“ நீ வாயை மூடு !!! ”என்றான் கடுப்பாக
“தம்பி நான் என்ன பண்ணேன்..??” என்று பரிதாபமாக கேட்டார் வேலைக்கார பெண்மணி.
“அக்கா உங்களை சொல்லலை.. இதோ இவளைத் தான்.. !!” என்று கை காட்டினான்.
“தம்பி இங்க யாரும் இல்லையே நான், நீங்க ,வேதா தம்பி, மூணு பேரும் தான் இருக்கோம் ”என சந்தேகமாக சுற்றி முற்றி பார்க்க ஜேபிக்கு குழப்பமாக இருந்தது.
மனதிலோ .,’அப்போ இவ நிஜமாகவே ஆவி தானா ..!!!நாம தான் சந்தேகப் படுறோமோ …!!’என்று நினைத்துக் கொண்டவன் இந்த முறையாவது சாமியாரிடம் கூறி விட வேண்டும் என்று
….. தொடரும்
எனக்கு புரிஞ்சிடுச்சு இந்த பொண்ணு ஆவியே இல்ல🙊🤣🤣🤣 இதான் நேக்கு புரிஞ்சுது 🙈🙈 எப்பூடி நம்ம கண்டுபிடிப்பு💃💃💃💃
ஜேபி நம்பாத பா நம்பாத இதுங்க எல்லாம் சேர்ந்துட்டு ஏதோ பிளான் பண்ணுதுங்க….உன்னைய வச்சு நல்லு டைள் பாஸ் பண்ணுதுங்க….தேவா உண்மைறாவே ஆவியா இருக்கமாட்டாள்…..ஏதோ ஒண்ணு இருக்கு….அந்த ரௌடிங்க தேடுறதே தேவாவயா இருக்கலாம்…..உனா எதுக்கு ஆவியா நடிக்கனும்?
கதையோட ஹீரோ ஜேபி, அவனுக்கு தேவான்ஷியால ஏறுது பீபி…
தேவ் பண்ற சேட்டையில ஜேபிக்கு வருது கடுப்பு, அவ ஆவிதானான்னு ஒரே டவுட்டு…😊
Over performance ah iruke… Unmaiyileye aavi thana ila nadikuranka? Anga avunga theduratha Partha uyiruku payanthu ivunga uyira vankura mathi iruku… Ore oru spelling error iruku sis intha epi la change pannikonga…