ஆவி-2
தனது தந்தைக்கு சர்ப்ரைஸ் தரலாம் என தன் தங்கை குடும்பத்துடன் கிளம்பி இருந்தான் ஜீவன்.
ஆனால் அவனுக்கு முன்பாக அவனது தந்தை மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்து விண்ணுலகை அடைந்திருந்தார் அவனது தந்தை.
அதிகாலையில் சேலம் சென்று சேர்ந்திருந்தவர்களோ வீட்டில் பந்தல் போடப்பட்டு இருப்பதை கண்டு.,” பாரு விழி , எல்லாம் ரெடி பண்ணி இருக்காரு…!! நான் எப்படியும் கல்யாணம் பண்ணிப்பேன் னு நம்பிக்கை அவருக்கு… சீக்கிரம் வா உள்ளே போகலாம்… “என்று கதவைத் திறந்து அவரது அறைக்கு சென்றான்.
“நல்லா தூங்குவார் போல நானே எழுப்பி விடுறேன் !!”என உள்ளே சென்றவன்.,” டாட் மேரேஜை வச்சுக்கிட்டு இப்படி தூங்கினா எப்படி…? , எழுந்துக்கங்க… டாட்… இது என்ன இவ்வளவு நேரம் தூக்கம்… ?? ப்ப்ச் அப்பா…!! “என்று உலுக்கிட அவரது உடலில் அசைவே இல்லை..
த
“விழி விழி சீக்கிரம் வா அப்பா… ப்பா… எழுந்திருங்க” என ஜீவனின் குரலில் பதறிய விழி உள்ளே ஓடி வர அவளுக்கும் நிதர்சனம் தெரிந்தது தன் தந்தை இவ்வுலகில் இல்லை என்று.
“அண்ணா அப்பா !!” என்று விழியின் கதறலில் ஊரே கூடி விட்டது.
நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது ராமமூர்த்தியின் உடல் . ஊரார் எல்லாம் கூடி விட்டனர். இறுதி சடங்கிற்கான ஏற்பாடு எல்லாம் துரித கதியில் நடந்து கொண்டிருக்க ,
ஜீவனுக்கு பெண் தர சம்மதித்த அந்த பெண்ணின் பெற்றோர் மட்டும் வந்திருந்தனர்.
ஜீவன் இறுக்கமான முகத்துடன் இறுதிச் சடங்குகளை முடித்தவன், அறையிலேயே முடங்கி கிடந்தான். ஒரு துளி கண்ணீரை கூட சிந்தவில்லை அவன்.
“என்னை விட்டு போக அவ்வளவு அவசரமா ப்பா…!! நான் உங்க கிட்ட சம்மதம் சொல்லி இருக்கணுமோ… ??” மனதின் புழுக்கம் விழியில் தெரியும் முன்பே அடக்கி கொண்டான்.
சென்னையும் திரும்பி விட்டான் காரியங்களை எல்லாம் முடித்துக் கொண்டு .
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நினைவு வந்தது தனக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணம் பற்றி….
“அத்தை…”
“சொல்லு ஜீவ்… ஏதாவது வேணுமா ??” மணிமேகலை சோர்ந்து போய் கேட்டார்.
“அப்பா பார்த்து இருந்த பொண்ணு யார் டீடெயில் எதுவும் உங்களுக்கு தெரியுமா… ???”
“இல்ல ஜீவ் தெரியாது… அன்னைக்கு அந்த பொண்ணோட அப்பா வந்திருந்ததா சொன்னாங்க….அவங்களும் நம்ம ஊர் தான்… ஆனா சென்னையில இருக்கிறதா சொன்னாங்க… நான் சரியா கவனிக்கலை… ” என்றார் மணிமேகலை.
“ஊர்க்காரங்க யாருக்காவது தெரிஞ்சு இருக்குமா …? விசாரிச்சு பார்க்கலாமா…?” என்றான்.
“ஆனா ஜீவ்…. !!”
“இல்ல அத்தை அப்பாவோட கடைசி ஆசை அது நான் கண்டிப்பாக நிறைவேத்துவேன்…”என்றான் உறுதியாக
“ஓகே ஜீவ் கண்டிப்பாக விசாரிக்கலாம் நானே அதைப் பண்றேன்…” என்ற மணிமேகலையிடம் வேதாந்த்…”மேகா ஆன்ட் அதை நான் பார்த்துக்கிறேன் நீங்க எனக்கு ஒரு ஃபேவர் பண்ணனுமே??” என்க
“டேய் ஆன்ட்டி ன்ன அடி விழும் பார்த்துக்க கால் மீ மேகா அக்கா… ” என்றார் வேகமாக
“ஆன்ட்டியை ஆன்ட்டினுதான் கூப்பிட முடியும்…அரை வேக்காடு னா கூப்பிட முடியும் “என்று முணுமுணுத்தவன், காரியம் ஆக வேண்டுமே என்ற நினைவில் சாதாரணமாக பேசினான்.
“நம்ம ஷோரூம் ல புதுசா வந்திருக்கிற ஏர் ஃப்யூரிஃபையர் லாஞ்ச் பண்ணலாம் னு இருக்கோம் அது புதுசா வந்திருக்கிறதால டீலர்சிப் ஒரு பெரிய ஆள் எடுத்திருக்கார்… பர்ஸ்ட் ஆர்டர் நாம தான் வாங்கணும் அதுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்… “
“இதுல நான் என்ன டா பண்ண முடியும்… !!”
“அத்ஸ் (அத்தையோட சார்ட் ஃபார்மாம்) உங்கள் திறமை உங்களுக்கே தெரியலை… நீங்க எல்லாம் பேசினா கல்லு கூட கரையும் அந்த கதிர்வேலன் கரைய மாட்டாரா…!! ப்ளீஸ் அத்ஸ்…. “என்றான் வேதா.
மேகா, “ஆமா அது யாருப்பா கதிர்வேலன்… ??”
“அந்த டீலரோட பேரு அத்ஸ்… இது உங்க திறமைக்கு ஒரு சவால் அத்ஸ் ப்ளீஸ் டூ இட்…. ” ஐஸை தூக்கி வைத்தவன் ஜீவன் கொடுத்த காரியத்தை பார்க்க சென்று விட்டான்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இப்போதெல்லாம் ஜீவன் தன் நண்பனுக்கே தெரியாமல் வெளியே சென்று வந்து கொண்டிருந்தான்.
இதை வேதா கவனிக்காமலும் இல்லை… எங்கே செல்கிறான் என்பதை கண்காணித்து கொண்டு தான் இருந்தான். அவ்வாறு கவனித்ததில் அவனுக்கு ஜீவனின் செயல்கள் கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
வேதா கடுப்பாக “ஜீவா நில்லு… நீ அடிக்கடி எங்க தான் போற… ? நட்ட நடு இரவில் போற வர்ற அப்படி எங்க தான் டா போற ….??” என்றான்.
“உனக்கு சொல்லாம எதுவும் செய்ய போறது இல்ல !! சரி அதை விடு நான் கேட்டிருந்தேனே அந்த பொண்ணு பத்தின டீடெயில் கிடைச்சதா?? ” கேட்டான்.
வேதா அமைதி காத்தான்.
“என்னடா ஏதாவது டீடெயில் கிடைச்சதா…. ??” என அதட்ட
“சாரி ஜேபி உனக்கு பார்த்தப் பொண்ணு ஆக்ஸிடன்ட் ஆகி இறந்து போயிட்டதா தகவல் கிடைச்சது சாரி டா… “என்றான் வேதா கவலை தோய்ந்த முகத்துடன்.
ஜீவனுக்கு மனதில் வலித்தாலும் காட்டிக் கொள்ளாமல் வெளியே.,” சரி விடு அவரோட கடைசி ஆசையை கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு பாவி ஆக்கிட்டு போயிட்டாரு அந்த மனுசன்…” என்ற பெரு மூச்சுடன் அங்கிருந்து கிளம்பினான்.
“சாரி மச்சான்!!” என்று முணுமுணுத்த வேதா ஷோரூமிற்கு கிளம்ப மீண்டும் திரும்பி ,”ஆமா நீ கொஞ்ச நாளா சரி இல்லையே…!!, எங்கேயோ போற வர்ற, என்ன உன் கணக்கு …?”புருவம் உயர்த்தி கேட்ட வேதாவிடம், தான் செய்த வேலையை சொல்லி விட்டான் ஜீவன்.
வேதாவிற்கு கண்மண் தெரியாத கோபம் வர அடித்தே விட்டான் நண்பனை.
கன்னத்தைப் பிடித்து நின்றவன்,” என் நம்பிக்கையை கெடுக்காதே ப்ளீஸ் வேதா” என்று விட்டு அங்கிருந்து சென்றான் ஜீவன்.
வேதாவோ, “இது எங்கேப் போய் முடியப் போகுதோ தெரியலையே …!!”என்று முணுமுணுத்தவன், ஷோரூமிற்கு கிளம்பி விட்டான்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
அந்த நீண்ட சாலையின் இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்து படர்ந்திருந்தன புளிய மரங்கள்… ஒரு மரம் விட்டு ஒரு மரத்தில் சிறு சிறு விளம்பரப் பதாகைகள் தொங்கிக் கொண்டிருக்க ஆங்காங்கே சிறு பறவைகள் சத்தமிட்டபடி தங்களது கூடுகளில் அடைந்து கொண்டிருந்தன. இருள் கவிழ்ந்து வெகு நேரம் ஆகிய நிலையில் அடர்ந்த மஞ்சள் நிற ஒளியை பாய்ச்சியபடி காற்றைக் கிழித்து கொண்டு சீறிப் பாய்ந்தது அந்த ஹூண்டாய் கார்.
உள்ளே வேதாந்த் பதறி தவித்துக் கொண்டிருந்தான்.
“டேய் இப்போ எங்கடா போறோம்…. ??”இதோடு பத்தாவது தடவையாக கேட்டு விட்டான் வேதாந்த்.
ஜீவனோ, “சுடுகாட்டுக்கு சாரி சாரி இடுகாட்டுக்கு …!” என்றான் படு கூலாக
“எதேய்… ???”அதிர்ச்சியில் காருக்குள்ளேயே எழுந்த வேதா இடித்துக் கொண்டான்.
“ஆமா இடுகாட்டுக்கு தான்… !!” என்றான் ஜீவன் இயல்பாக.
“ஆனா எதுக்கு அப்பா நினைவு வந்திடுச்சா… ??”நண்பனவனை பரிதாபமாக கேட்டான் வேதாந்த் .
“இல்ல… ஆமா.. அது வந்து..!!” என்று நாலாபுறமும் தலையாட்டினான் .
“யப்பா ரெண்டு திசையில் தலையாட்டினாலே எனக்கு அல்ஜீப்ரா சம்மை விடிய விடிய க்ளியர் பண்ண மாதிரி இருக்கும் இதுல நீ எல்லா பக்கமும் ஆட்டுறியே…!! கணக்கு புக்கை கைல தந்த மாதிரியே ஒரு ஃபீல் ஆகுது டா… ஒழுங்கா சொல்லு எதுக்கு போறோம்…? ” என்று அழுத்திக் கேட்டான் வேதாந்த்.
“நண்பன் மேல நம்பிக்கை வேணும்டா… ” வேக வேகமாக நடந்தான் ஜீவன்.
“ப்ப்ச் நம்பிக்கை இல்லாமலா நடுராத்திரியில் கெஞ்சிட்டு இருக்கேன், சொல்லுடா..!!” கிட்டதட்ட கெஞ்சினான் வேதா .
நண்பனவனை மேலும் கெஞ்ச வைக்காமல் பெரிய அணுகுண்டை தூக்கி போட்ட ஜீவன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நடக்க , வேதாவும் பின் தொடர்ந்தான்.
ஜீவன் “என் அப்பாவை திரும்ப உயிரோட கொண்டு வரப் போறோம்….” என்றான் அதிரடியாக
நடுரோட்டில் ஆணியடித்தாற் போல நின்றிருந்தான் வேதாந்த்.
“டேய் மச்சான் நீ பண்றது எதுவும் சரி இல்லைடா…!!, டேய் நான் சொல்றதை கேட்குறியா இல்லையா ??” வேதா நின்ற இடத்திலிருந்தே கத்தினான்.
“மச்சான் உனக்கு வர விருப்பம் இல்லை என்றால் வராதே … ஆனா என் நம்பிக்கையை கெடுக்காதே ப்ளீஸ்… எனக்கு என் அப்பா வேணும் அவ்வளவு தான்… நான் இதை செய்யத் தான் போறேன் உனக்கு விருப்பம் இல்லை என்றால் தாராளமாக போய்க் கொள்ளலாம் “என சடாரென நடையை நிறுத்தி விட்டான் ஜேபி .
“உன் ஆதங்கம் எல்லாம் புரியுது மச்சி… ஆனா நீ பண்றது உனக்கே சரினு படுதா…? எப்படி டா இது சாத்தியம் ..?, எனக்கு புரியலை ஏதோ மந்திரவாதி சொன்னான்னு நீயும் மண்டையை மண்டையை ஆட்டி விட்டு வந்திருக்க…. இதை எல்லாம் செய்யக் கூடாது டா…!! நான் சொல்றதைக் கேளு மச்சி… !! இது சட்டப்படியும் ,மனுநீதி தர்மப்படியும் , தப்பு டா நான் சொல்றதைக் கேளு… இப்படியே திரும்பிப் போயிடலாம்… வா… ” நண்பனவன் கெஞ்சிக் கொண்டிருக்க, அவனோ ஸ்டியரிங்கில் குத்தி விட்டு.,” ஐ வாண்ட் மை டாடி பேக்… ஜஸ்ட் வான்ட் ஹிம் ப்ளீஸ் என்னை இரிடேட் பண்ணாத வேதா…” என்ற ஜேபி கண்களை சுழற்றி பார்த்தபடி வந்தான்.
“உன்னை யாரும் இரிட்டேட் பண்ணலை… நீயே ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு… படிச்சவனா, நல்ல அறிவுள்ள மனுசனா, திங்க் பண்ணிப் பாரு நீ பண்றது சரியா தவறா னு புரியும் … “
“எனக்கு சரி தவறு எல்லாம் என் அப்பா விஷயத்தில் தெரியாது… ஐ ஜஸ்ட் வான்ட் மை ஃபாதர்…. இப்ப நீ வர்றியா இறங்குறியா , இட்ஸ் கெட்டிங் லேட்…!! “என சொல்லவும் வேதாவிற்கு கோபமாய் வந்தது.
இறங்கிக் கொள்ளலாம் என்றால் நண்பனை தனியாக விட மனதில்லை நடப்பது நடக்கட்டும் என்று நினைத்து கொண்டு ,”சரி வண்டியை எடு போகலாம் ஆனா ஒரு விஷயம்… இந்த ஒரு டைம் மட்டும் தான். நீ இதை செய்யணும் மறுபடியும் இதை பண்ண நான் ஒத்துக்க மாட்டேன்… உனக்கு ஓகே வா…!!” என்று வேதா கேட்டதும், அவனும் சரி என்று சம்மதித்தான்.
மீண்டும் அவர்களின் பயணம் தொடர்ந்தது. அவர்கள் சென்று நின்ற இடம் ஒரு இடுகாடு …… நள்ளிரவு பனிரெண்டு மணி ஆக இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது.
அவசரமாக கீழே இறங்கியவனோ, சட்டை பேண்ட்டை கழற்றி விட்டு சிவப்பு வேஷ்டியை மாற்றிக் கொண்டான். கழுத்தில் மந்திரவாதி கொடுத்த தாயத்து ஒன்றை அணிந்து கொண்டு நெற்றியில் திருநீறு பட்டையை போட்டவன் உடலிலும் அதைப் போலவே செய்தான்.
பனிரெண்டு மணிக்கு அலாரம் அடித்ததும் பரபரவென தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்த பொருட்களை சமாதியின் மேல் பரப்பி விட்டு… குங்குமமும் , அரளிப்பூவையும் கலந்து ஏதேதோ மந்திரங்கள் ஜபித்தபடி சமாதியின் மேல் போட்டவன் சில நிமிடங்கள் கழித்து தன் தந்தையின் சமாதியை பார்த்தபடி நின்றிருந்தான்.
தூரத்தில் இருந்து ஒருவர் கத்தும் சத்தம் கேட்டது.
“ஏய் யப்பா இந்த நேரத்தில் யாருடா அது சுடுகாட்டுல…? ஏலேய் போங்கடா… இல்ல போலீஸை கூப்பிடுவேன் . எவனையும் கொலை பண்ணிட்டு யாருக்கும் தெரியாமல் புதைக்க வந்திருக்கிங்களா ???” என்று கேட்க நண்பனவன் பயந்து போய் ஜீவனை இழுத்து கொண்டு வர., வெட்டியானும் வந்து விட்டார்.
ஜீவனைப் பார்த்த வெட்டியான் “தம்பி நீ அந்த கொஞ்சநாள் முன்னாடி இறந்து போனாரே ராமமூர்த்தி அவர் மவன் தானே… !!!”என்றார்.
“ஹான்… ஆமா ஆமா… !!” என்றான்.
“ஏன் தம்பி அப்பா நினைவு வந்து சமாதியை பார்க்க வந்தியா… ?அதுக்கு இந்த நேரத்திலா வர்றது… நேரங்கெட்ட நேரத்தில் வரக் கூடாது ப்பா காத்து கருப்பு அடிச்சிடும் படக்குனு வீட்டிற்கு போங்க…!! “என்று விரட்டினார்.
அவர்களும் அங்கிருந்துவேறு வழியின்றி விரைந்து செல்ல… வெட்டியானோ வேகமாக சமாதிக்கு சென்று பார்த்தார்.
“இதென்ன பூ குங்குமமா கெடக்கு…!! அதுவும் இந்த சமாதியில்… இது கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆக்ஸிடன்ட் ல செத்துப் போன பேங்க் மேனேஜர் மக தேவான்ஷியோட சமாதி ஆச்சே… இதுல ஏன் இப்படி கிடக்கு… “என்று அங்கே கிடந்த பொருட்களை தள்ளி விட்டு அங்கேயே கையை தட்டி விட்டு சென்றார்.
சூறாவளி காற்று திடீரென வீச வெட்டியான் பயந்தபடி அங்கிருந்து ஓடி விட்டார் பயத்தில்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
சூறாவளி சுழன்றடிக்க மகிழுந்தை வேகமாக இயக்கியவர்கள் வீடு வந்து சேர்ந்ததே தெரியவில்லை. வந்த களைப்பில் உறங்கிப் போயிருந்தனர்.
அந்திவான சூரியன் அமைதியாக ஓய்வெடுத்து விட்டு மெல்ல மெல்ல கீழ் திசையில் இருந்து மேலெழும்பி கொண்டிருந்தான்.
ஜீவன் மெதுவாக கண் விழிக்க , அவன் எதிரே முழு அலங்காரத்துடன் ஒரு பெண் அமர்ந்து அவனையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏய் ஏய் யார் நீ…. ?? ஆமா எப்படி வந்த…?? ” போர்வையோடு பதறிக் கொண்டு பின்னாடி ஓடினான்.
“நான் தேவான்ஷி… நீங்க தானே என்னை கூட்டிட்டு வந்தீங்க… ??? இப்போ இப்படி கேட்குறீங்க?? ” என்று சொல்ல புரியாமல் விழித்தான்.
சட்டென்று ஜேபி அவளுக்கு பதில் தராமல்.,” டேய் வேதா… வே… தா… வேதா… அத்தை… எங்க இருக்கீங்க… ? அச்சோ… யாராவது வந்து தொலைங்களேன்…!! “கத்த , அவனது வாயை அவசரமாக பொத்தினாள்.
மை போட்ட கண்ணை அங்குமிங்கும் உருட்டியவளோ.,” ஸ்ஸ்ஸ் கத்தாதீங்க…!! ஏன் இப்படி கத்துறீங்க…? அப்புறம் நான் என்ன பண்ணுவேன் னு எனக்கே தெரியாது… ” என்று மிரட்டல் விடுத்தாள்.
ஜீவன் அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு “உண்மையை சொல்லு நீ யார்… ? வீடு மாறி வந்துட்டியா…?, ஏதாவது பேய்ப்பட சூட்டிங் கிளம்பிட்டு அட்ரஸ் மாறி எதுவும் வந்துட்டியா , இது சினிமா எடுக்கிற இடம் இல்லை மா…”என்றான்.
“சார் நான் ஹீரோயின் மாதிரி இருக்கேனா நிஜமாவா…? எங்க அம்மா கூட அப்படி தான் சொல்வாங்க… ” என்று நெளிந்தாள் சம்மந்தமே இல்லாமல்.
படக்கென்று தள்ளி விட்டு எழுந்தவன் ,குளியல் அறைக்குள் புகுந்து விட்டான். அவளோ கட்டிலுக்கு அடியில் விழுந்து விட்டாள்.
பாத்ரூமிற்குள் சென்றவன், மீண்டும் வந்து பார்க்க , அங்கே ஒருவரும் இல்லாமல் இடம் வெற்றிடமாக இருந்தது.
‘எங்கே யாரையும் காணோம்…? , ஒரு வேளை நாம கனவு ஏதும் கண்டிருப்போமா… ?’ என்றெண்ணியவன், வந்தது கனவு தான் என்று உறுதி செய்து கொண்டு குளிக்க சென்றான்.
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
குளித்து விட்டு வெளியே வந்த ஜீவனைப் பார்த்து ‘ ஹீஹீஹீ’ என்று சிரித்தபடி நின்றிருந்தாள் தேவான்ஷி.
ஜீவன் அதிர்ந்து போய், “ஏய் யார் நீ…?? நீ எப்படி உள்ள வந்த…?? ஆமா எல்லாத்தையும் பார்த்துட்டியா… ” அவசரமாய் மீண்டும் குளியலறைக்குள் மறைந்தான்.
வந்தவளோ சாவகாசமாக, “ஆமா பார்த்துட்டேன்… எனக்கு என்ன தெரியும் நீ இப்படி அலைவனு…!! ப்ப்ச் நீ தானே கூட்டிட்டு வந்த, அப்போ ரூம் நீ தான் தரணும்… நீ தரலை… நான் உன் கூடவே தங்கிட்டேன்… ஆமா எதுக்கு என்னை எழுப்பின…? “என கேட்டாள்.
குளியலறைக்குள் இருந்து அவசரமாக வெளியே வந்த ஜீவனோ., “உன் மூஞ்சியை மூணாஞ்சாமக் கனவுல கூட பார்த்த ஞாபகம் இல்லை… உன்னை வந்து நான் எழுப்பினேனா… ???” பல்லைக் கடித்தான்.
“ஏய் பொய் சொல்லாத…!! நீயும், உன் ஃப்ரெண்டும் வந்து சுடுகாட்டுல நிம்மதியா தூங்கிட்டு இருந்த என்னை ஏதேதோ சொல்லி எழுப்பி விடல…!! இப்படி குங்குமம் எல்லாம் போட்டியே…!!” அதிர வைத்தாள் அவள்.
“அப்போ நீ யாரு…? நிஜமாவே… ??”என ஜீவன் குழப்பமாக கேட்டான்.
அவளோ “பேங்க் மேனேஜர் பொண்ணு …தேவான்ஷி … “என்றாள்.
ஜீவனோ “ஓஓஓ சரி சரி…ஆமா நீ எப்படி இங்க வந்த… ??” என்று கேட்டான்.
தேவான்ஷி முறைத்துக் கொண்டு, “லூசாப்பா நீ…? , எத்தனை தடவை சொல்றது….. ?, நீ தான் கூட்டிட்டு வந்த.. !!!” என்றாள்.
ஜேபி எனும் ஜீவப்ரியன் அதிர்வாய் அவளைப் பார்த்தான்.
அவளோ சாவகாசமாக வந்து பெட்டில் அமர்ந்தாள்.
ஆனால் அவனுக்கோ குழப்பமாக இருந்தது.
‘நாம நம்ம அப்பா சமாதியில் தானே எல்லாம் செய்யப் போனோம். அதுக்குள்ள அந்த சுடுகாட்டில் இருக்கவர் வந்துட்டாரு…!! ஆனா இவ எப்படி…? இது ஏதோ பைத்தியமா தான் இருக்கணும்…’ என்று நினைத்தவன், அவளைப் பார்த்தான்.
தேவான்ஷியோ, சாதாரணமாக அமர்ந்திருந்தாள்.
மண்டை சூடேறியது ஜீவனுக்கு .
ஜீவனோ “ஏய் எழுந்திரு முதல்ல… டேய் வேதா எரும மாடே, எங்க இருக்க …?, வந்து தொலைடா…. ஏதோ மென்டல் ஹாஸ்பிடல் ல இருந்து ஒரு பைத்தியம் தப்பிச்சு வந்திடுச்சு போல டா, சீக்கிரம் வாடா…” என்று கத்தினான்.
தேவான்ஷி பயந்து போய் பக்கத்தில் இருந்த அலமாரியில் ஏறி அமர்ந்து விட்டாள்.
“அட வாலில்லாத குரங்கு குட்டி எறங்கு கீழ …. ” ஜேபி கத்த., வேதா வேகமாக உள்ளே நுழைந்தான்.
வேதாந்த் பயத்தில் “யம்மா.. பேய்… பிசாசு…!! காஞ்சனி…ச்சே காஞ்சனா .. .அடேய் யார் டா இது ??? நேத்து சுடுகாட்டுக்கு போக வேண்டாம் னு சொன்னேன் கேட்டியா…? இப்ப பாரு ஏதோ ஒண்ணு வந்து நிக்குது…!!” என உளறி கொட்டினான்.
மணிமேகலை .,”டேய் ஜீவ் என்ன சத்தம் அங்க ??” என்று மேலே வர ,பயத்தில் அலமாரி கதவை சாத்தி விட்டான் வேதாந்த்.
…… தொடரும்.
வேதா உன்னோட அத்ஸ்,அரைவேக்காடு எல்லாம் வேற லெவல் பா🤣🤣🤣🤣…இந்த வேதா ஏதாவது பிளான் போடறானா??..அடே ஜீவா ராம் மூர்த்தியை உயிரோட கொண்டு வரனு இடுகாடு,மந்திரவாதினு போய்ட்டு தேவான்ஷி சமாதியை பூஜையை போட்ருக்கியேபா🙄🙄🙄🙄
அப்பாவ கூட்டிட்டு வரேன்னு போய் ஆவிய கூட்டிட்டு வந்திருக்கியே ஜேபி….ஏன்டா டேய் உங்கப்பா சமாதியில கொட்ட வேண்டியது பண்ண வேண்டியது எல்லாம் ஏன்டா தேவான்ஷி சமாதில பண்ண….எதையும் ஒழுங்கா பண்ண மாட்டியாடா….
ஆனாலும் இந்த வேதா மேல லைட்டா சந்தேகம் வருதே….ஏன்னே தெரியாம இந்த வேதா பண்றதெல்லாம் ஒரு சந்தேகத்தையெ உண்டு பண்ணுது….பாக்கலாம் என்ன நடக்த போகுதுனு…..
Achaoooo heroine iranthuttala…. Apo pei thn heroine ah… Ennada ithu… Ellar kannukum terivala ila vedha , jp kannuku mattum terivala teriyalaye… Atha solla ma thodarum potta epdi sis…. Seekaram adutha ud podunga…. Unga comedy la ultimate… Keep it up sis .. waiting to read more….
நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.
ARUMAI . EXCITING