“டேய் இப்போ எங்கடா போறோம்…. ??”
“சுடுகாட்டுக்கு சாரி சாரி இடுகாட்டுக்கு …!”
“எதேய்… ???”
“ஆமா இடுகாட்டுக்கு தான்… !!”
“ஆனா எதுக்கு அப்பா நினைவு வந்திடுச்சா ??”நண்பனவனை பரிதாபமாக கேட்டான் வேதாந்த் .
“இல்ல… ஆமா.. அது வந்து..!!” என்று நாலாபுறமும் தலையாட்டினான் .
“யப்பா ரெண்டு திசையில் தலையாட்டினாலே எனக்கு அல்ஜீப்ரா சம்மை விடிய விடிய க்ளியர் பண்ண மாதிரி இருக்கும் இதுல நீ எல்லா பக்கமும் ஆட்டுறியே…. கணக்கு புக்கை கைல தந்த மாதிரியே ஒரு ஃபீல் ஆகுது டா… ஒழுங்கா சொல்லு எதுக்கு போறோம்… “
“நண்பன் மேல நம்பிக்கை வேணும்டா… ” வேக வேகமாக நடந்தான்.
“ப்ப்ச் நம்பிக்கை இல்லாமலா நடுராத்திரியில் கெஞ்சிட்டு இருக்கேன்… ” சொல்லுடா கிட்டதட்ட கெஞ்சினான்.
நண்பனவனை மேலும் கெஞ்ச வைக்காமல் பெரிய அணுகுண்டை தூக்கி போட்டான்.
“என் அப்பாவை திரும்ப உயிரோட கொண்டு வரப் போறோம்….” என்றான் அதிரடியாக
நடுரோட்டில் ஆணியடித்தாற் போல நின்றிருந்தான் வேதாந்த்.
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
“ஏய் யார் நீ…?? நீ எப்படி உள்ள வந்த…?? ஆமா எல்லாத்தையும் பார்த்துட்டியா… ” அவசரமாய் குளியலறைக்குள் மறைந்தான்.
“ஆமா பார்த்துட்டேன்… எனக்கு என்ன தெரியும் நீ இப்படி அலைவனு… ப்ப்ச் நீ தானே கூட்டிட்டு வந்த அப்போ ரூம் நீ தான் தரணும்… நீ தரலை… நான் உன் கூடவே தங்கிட்டேன்… ஆமா எதுக்கு என்னை எழுப்பின…. “
குளியலறைக்குள் இருந்து அவசரமாக வெளியே வந்தவன்… “உன் மூஞ்சியை மூணாஞ்சாமக் கனவுல கூட பார்த்த ஞாபகம் இல்லை… உன்னை வந்து நான் எழுப்பினேனா… ???”
“ஏய் பொய் சொல்லாத… நீயும் உன் ஃப்ரெண்டும் வந்து சுடுகாட்டுல நிம்மதியா தூங்கிட்டு இருந்த என்னை ஏதேதோசொல்லி எழுப்பி விடல…. இப்படி குங்குமம் எல்லாம் போட்டியே…. ” அதிர வைத்தாள் அவள்.
“அப்போ நீ யாரு…. நிஜமாவே… ??”
“பேங்க் மேனேஜர் பொண்ணு …தேவான்ஷி … “
“ஓஓஓ சரி சரி…ஆமா நீ எப்படி இங்க வந்த… ???
லூசாப்பா நீ எத்தனை தடவை சொல்றது….. நீ தான் கூட்டிட்டு வந்த..
ஜேபி எனும் ஜீவப்ரியன் அதிர்வாய் அவளைப் பார்த்தான்.
இங்கே தேவான்ஷியின் புகைப்படத்திற்கு படையல் போட்டு கொண்டிருந்தனர் அவளது பெற்றோர்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
சும்ம தூங்கிட்டு இருந்த ஆவியே என்ன மந்திரம் பண்ணி எழுப்பி விட்டானோ 🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️ படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் 🥳🥳🥳🥳.
நன்றி டியர்
எதே சுடுகாட்டுல இருந்து இறந்தவள உயிரோட கூட்டிட்டு வந்தானா? டீசர் சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
ஹீஹீஹீ ஆமா சிஸ்டர் நன்றி மா