இது மாயவலை அல்லவா… (பாகம் – 1)
மாயமாய் போவாளோ…
டீசர் 2 – டிரெய்லர்
“அப்பாவோட நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் உனக்கு எப்டி தெரியும்?” என அவள் வியப்பாய் கேட்க,
“உங்க டாடிக்கு மெமரி பவர் ரொ……ம்ப ஜாஸ்தி. அதான், பாஸ்வேர்ட மறக்கக் கூடாதுனு மொத்தமா டைப் பண்ணி, ஒரு எக்ஸல் ஷீட்ல போட்டுருந்தாரு. நா அத பி.டி.எஃபா கன்வர்ட் பண்ணி, இந்த பென்ட்ரைவ்ல ஏத்திட்டேன்” எனக் கூலாக சொன்னாள் மற்றவள்.
“ஆனா, அத ஹைட் பண்ணிருப்பாரே…” அவள் குழப்பம் விலகாமல் கேட்க,
“ஃபோல்டர ஹைட் பண்ணத் தெரிஞ்சவருக்கு, ஃபைல ஹைட் பண்ணத் தெரில போல. ரீசண்ட் ஃபைல்ஸ்ல போய் எடுத்துட்டேன்…” என்ற பதிலும் அதேபோல் கூலாகவே வந்தது.
“யப்பா ஜெய், பக்கா ஃப்ராடுடி நீ…” எனப் புன்னகையுடன் அவள் தோளில் தட்டியவளுக்கு, இதழில் குறுநகை அரும்பியது.
____________________________________________________________________________________
“உனக்கு லூசு ஏதும் புடிச்சுருக்காடி? வண்டிய ஆஃப் பண்ணிட்டு ஒதைச்சா எப்டி ஸ்டார்ட் ஆகும்?” என அவன் கேட்க,
“உன் அறிவு அவ்ளோ தான். இப்ப பாரு…” என்றவள் சாவியைப் போட்டுவிட்டு உதைக்க, வண்டி ஒரே கிக்கில் ஸ்டார்ட் ஆனது.
“ஏறு வா… எப்டி ஸ்டார்ட் ஆச்சுப் பாத்தியா? சோட்டா பாய், என்னைப் பாத்துக் கத்துக்கோ…” எனக் கூறியவள் வண்டியைக் கிளப்ப,
“எல்லாம் என் நேரம்டி…” எனத் தலையில் அடித்துக்கொண்டு அவள் பின்னே ஏறி அமர்ந்தான் அவன்.
____________________________________________________________________________________
“கன்ஃபார்மா?” என அவள் கேள்வியாகப் பார்க்க,
“ஷ்யூரா அவ எனக்கு ஃப்ரெண்டு தான்…” அலுத்துக் கொண்டான் அவன்.
“ஓ…” என்றவாறு அவனின் அருகில் வந்தவள், எதிர்பாரா விதமாய் அவனை அணைத்துக் கொள்ள, அதிர்ந்து போனவனாக, வாயைப் பிளந்திருந்தான் அவன்.
அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவாறே, “போய் அவகிட்ட சொல்லு. என்னை ஹக் பண்ற ரைட்ஸ், ஒருத்திக்கு தான் இருக்கு. சோ, நீ இனிமே என் பக்கத்துல வந்தா, அவ உன் பல்ல உடைச்சுருவான்னு” எனக் கூறியவள் விலக,
திருதிருவென விழித்தவாறே, “ஹான்…” என்றான் அவன்.
“என்ன லுக்கு, சொல்லலைனா உன் பல்ல உடைச்சுருவேன்…” என ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள் அவள்.
_____________________________________________________________________________________
“உன்னப் பொருத்தவர அவ அக்கா, தங்கச்சி, மக, ஃப்ரெண்டு, லவர்… ஆனா, இங்க அவ வெறும் ‘ப்ராடக்ட்’… அவ்ளோ தான். அவ வேல்யூ எப்டியும் எழுவத்தஞ்சு லட்சத்துல இருந்து அப்டியே மேல போய்கிட்டே இருக்கும்…” என அலட்சியமாகக் கூறினான் அவன்.
“அவ எங்க இருப்பா?” என்றவனின் கேள்விக்கு,
“எங்க வேணா இருக்கலாம். வேர்ல்டு பூராம் இந்த நெட்வொர்க் இருக்கு… ரொம்ப பெருசு… நீ, நான்லாம் நெனைச்சுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு…” மீண்டும் அலட்சியமாகவே வந்து விழுந்தது பதில்.
“அவள எப்டி கண்டுபிடிக்கிறது?” நிதானத்தை இழுத்துப் பிடித்தபடி கேட்டான் அவன்.
“கடல்ல நம்ம எதுனா போட்டாலே கண்டுபுடிக்க முடியாது. இதுல அதுவே வந்து வாரி எடுத்துனு போச்சுனா… எப்டி திரும்ப வரும்?” மீண்டும் மீண்டும் அலட்சியம் தெறித்தது அவன் பதிலில்.
____________________________________________________________________________________
“உனக்குப் பைத்தியம் எதுவும் புடிச்சுருக்கா? ஏண்டி இப்டி நடந்துக்குற?” என்றவளின் கேள்விக்கு,
“ஆமா, பைத்தியம் தான் புடிச்சுருக்கு…” என்று பதிலளித்தவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
“ப்ச், இப்போ எதுக்கு இதெல்லாம் ஒட்டிட்டு இருக்க? எல்லா அக்கவுண்டையும் லூசு மாதிரி, லாக் அவுட் பண்ணி வேற விட்டுட்ட… இப்ப நான் மறுபடி எல்லாத்தையும் லாகின் பண்ணனும்…” சலிப்புடன் அவள் கூற,
“ஜஸ்ட் ஷட் அப். உன் மொபைல் ஃப்ரன்ட் அண்ட் பேக் கேமரா, லேப்டாப் கேமரா, வெப் கேமரா எல்லாம் இதே மாதிரி ஸ்டிக்கர் ஒட்டி தான் இருக்கணும். உனக்கு வேணும்கறப்போ எடுத்துட்டு, அப்புறம் திருப்பி ஒட்டிர்ற. அதே மாதிரி எல்லா அக்கவுண்டும், நீ பார்க்கும்போது லாகின் பண்ணிட்டு, பார்த்து முடிச்சதும் லாக் அவுட் பண்ணி வைக்கிற. நா சொல்றத நீ மதிக்கலைன்னா, மனுஷியா இருக்கமாட்டேன், சொல்லிட்டேன்” எனப் பல்லைக் கடித்தபடி கூறியவளின், விழிகளில் தெரிந்த ரௌத்திரத்தில், இன்னொருத்தியின் பேச்சு தடைபட்டுப் போனது.
_____________________________________________________________________________________
“இது ஒன்னும் அம்மாம்பெரிய விஷயம் இல்ல. சப்ப மேட்டரு. நமக்கு ஒருத்தன் பேரு, மெயில் ஐடி மட்டும் தெரிஞ்சா போதும். அவனப் பத்தி ஃபுல் டீட்டெயில்ஸும் தெரிஞ்சுக்கலாம்” எனக் கூறினான் அவன்.
“எப்டி?” ஒற்றை வார்த்தையில் வந்தது அடுத்த கேள்வி.
“அந்த மெயில் ஐடி வச்சே அவனோட எல்லா சோஷியல் மீடியா அக்கவுண்ட்டோட ஐடியும் தெரிஞ்சுரும். அதுல அவன் போட்ட போஸ்டு, லைக்கு, கமெண்டு எல்லாம் இங்க அஞ்சு நிமிஷத்துல லோட் ஆயிரும். அத வச்சு அவன் பேரு, ஊரு, அட்ரஸு, ஃப்ரெண்ட்ஸு, அவனுக்கு புடிச்சது, புடிக்காதது, அவன் கேரக்டர் எப்டி, அதுக்கும் மேல அவன் எப்போ எப்டி நடந்துப்பான்றது வரைக்கும் சொல்லலாம். ஃபுல்லா டேட்டா… அதெல்லாம் நெட்டுக்குள்ள ஒரு தடவ வந்துருச்சுனா, லட்சம் வருஷம் ஆனாலும் இங்கயே தான் இருக்கும். எவனாலயும் அழிக்க முடியாது…” என வார்த்தைகளை ஆணியாய் அறைந்தான் அவன்.
____________________________________________________________________________________
“அவனுங்க பண்ணதையே நம்மளும் பண்ணா, அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?” எனக் கேட்டவனின் தோளைத் தொட்டவன்,
“இங்க பாரு, ஒருத்தன் நமக்கு கெட்டது பண்ணுறான்னு வை, நா அதே தப்ப பண்ணமாட்டேன். நல்லவனாவே இருந்து அவன ஜெயிப்பேன்னு சொல்றதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். அப்டி இருந்தா நல்……லவனா இருப்ப. ஆனா, சத்தியமா நல்லா இருக்க மாட்ட. சரியா?” என்றான்.
“இப்ப என்ன தான் பண்ணலாம்குற?” அவன் கேட்க,
“அவன் நமக்கு பண்ண கெட்டத, அவன விட பெட்டரா, அவனுக்குத் திருப்பிப் பண்ணா தான், அவனயும் ஜெயிச்சு, நம்ம பண்ண நெனச்ச நல்லத, எந்த கெட்டவனும் நம்மள நெருங்காத அளவுக்குப் பண்ண முடியும். அத தான் இப்போ நாம பண்ணப் போறோம்” என்றவனின் முகம் தீவிர பாவனையை வெளிப்படுத்தியது.
-மாயவலை சூழும்…