Loading

        சித்து, மகிழை அழைத்துச் செல்ல முடியாது எனவும் அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க, கவின்தான், “நான் பேசிக்கறேன் என்றவன் அவனை தனியாக அழைத்து வந்து, “என்ன மச்சி பேசற. இவ்ளோ நாள் கழிச்சு மகிழ் அவங்க குடும்பத்தோட சேர்ந்திருக்கு. இப்ப ஏன் இப்படி சொல்ற? நீ என்ன சொல்ல வர?” எனக் கேட்டான்.

“அது சந்தோஷம்தான்டா. ஆனா அவளை இப்ப விட்டுட்டா மறுபடி எப்ப பார்க்கிறது. என்கிட்ட இன்னைக்கு காதலை சொல்றேனு சொன்னா. இப்ப அவங்களோட கிளம்பிட்டா நான் என்ன பண்றது?” என்றான் சித்து பாவமாக. “டேய் இங்க இருக்கிற சென்னைக்கு போறது அவ்ளோ கஷ்டமா. எப்படியும் மகிழ் போய்தானே ஆகனும்.” என்றான் கவின்.

“நான் போக வேண்டாம்னு சொல்லல. ஒரு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு அப்பறம் போகட்டும்னு தான் சொல்றேன்.” எனவும் கவினும் யோசித்தான். வெளியில் வந்து கவின் ஏதோ கூற வர, இசை அவனை இடைமறித்து, “அண்ணா  நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு நல்லா தெரியும். அக்காவை விட்டுட்டு மாம்ஸ் இருக்க மாட்டேனு சொல்றாரு அதானே” என்றாள்.

அவன் திருதிருவென முழிக்க, “மகி, பேசாம இரு.” என்றான் ஆகாஷ். பெரியவர்களுக்கு விசயம் தெரிந்து விடுமோ என்ற பயத்தில். அவனை பார்த்தவள், “அதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. இவங்க சொல்லிட்டாங்க.” என அகல்யாவை காட்ட, “இவ வாயை வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டாளா?” என முணுமுணுத்த மகிழ், “அப்படில்லாம் இல்லப்பா” என்றாள் மெதுவாக.

உடனே வேகமாக முன்னே வந்த சித்து, “என்ன இல்ல. எல்லாமே இருக்கு அங்கிள். ஆமா நான் உங்க பொண்ணை லவ் பண்றேன். அவளை மட்டும்தான் லவ் பண்ணுவேன். நீங்க எங்க வேணா கூட்டிட்டு போங்க.” என படபடத்தவன் மகிழிடம், “நீ என்னை லவ் பண்றீயான்னு உன்கிட்ட கேட்கல. அதை ஒருமுறை உன் வாயால கேட்கனும்னு ஆசைப்பட்டேன் அவ்ளோதான். நீ சொன்னாலும், இல்லனாலும் அதுதான் உண்மை” என்றவன் வேகமாக வெளியேறி விட்டான்.

“எதுனாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம். இப்ப நாம கிளம்பலாம்” என மீனாட்சி உறுதியாக கூறி விட, எல்லோரும் அறையை காலி செய்துவிட்டு புறப்பட்டனர். அவர்கள் வெளியில் வரும்போது சரியாக வாசலில் இரு கார்கள் நிற்க, சிறிய காரில் சித்து அமர்ந்திருந்தான். அதைக் கண்டு மகிழின் இதழ்களில் புன்னகை பூத்தது.

மகிழின் வீட்டினரோடு அகல்யாவும், ஆகாஷூம் ஒன்றில் ஏறிக் கொள்ள, மற்றவர்கள் சித்துவின் காரில் ஏறினர். சித்து, “உன்னை எங்க டிராப் பண்ணட்டும் சிந்து?” எனக் கேட்கவும் தான், ‘ஆமா இவ இங்க என்ன பண்றான்னு கேட்க மறந்துட்டமே’ என யோசித்தான் கவின். அதற்குள் அவள் பதில் கூறியிருந்தாள்.

அதை கவனியாமல், “இது என்ன கேள்வி. சந்துருவோட கிளம்பி ஊருக்கு போக வேண்டியதுதானே?” என்றான் கவின். சிந்து, “ஏன் நான் இங்க இருக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை. உன் கேர்ள் பிரண்ட்ஸ்கிட்ட கடலை போட முடியாதுன்னா?” என்றதும் இருவருக்கும் சண்டை தொடங்கியது.

உடனே சந்துரு, “அட கொஞ்ச நேரம் சும்மாயிருங்க. அண்ணா அவ இங்கதானே படிக்கறா. அப்பறம் எப்படி ஊருக்கு வருவா.” எனக் கேட்க, கவின் குழப்பமடைந்து, “நீ என்ன சொல்ற. இவ இங்க படிக்கிறாளா? அப்ப உனக்கும் தெரியுமாடா சித்து” எனக் கேட்டான்.

“ஆமாடா. இங்க இருக்கிற அந்த பேமஸ் யுனிவர்சிட்டில எம்.பி.ஏ படிக்கனும் அவளுக்கு ஆசையாம். இவ்வளவு நாள் சொல்லவே இல்ல. இப்பதான் கொஞ்ச நாள் முன்னாடி சொன்னா. அதான் சேர்த்து விட்டேன்” என்றான் சித்து. “அப்பறம் என்கிட்ட ஏன் சொல்லவே இல்ல” என்றான் கவின்.

“நீ கேட்கவே இல்லையே. உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்” என சித்து இலகுவாக கூற, “ஆமா மச்சி, சென்னைல இல்லாத காலேஜ் இங்க இருக்கு. இவ சொன்னான்னு நீயும் சேர்த்து விடு. ஆக மொத்தம் எல்லாம் ஒரு பிளானிங்ல தான் இருக்கிங்க.” என்றான் கவின். “ஆமா சந்துரு, கவின் சித்து அண்ணாவை மச்சினு கூப்பிட்டுறாரு. நீ அவரை அண்ணானு கூப்பிடற. நீயும் மச்சானே கூப்பிடு ” என்றாள் சிந்து.

“அது அண்ணாவை கூப்பிடற மாதிரியே கூப்பிட்டு பழகிடுச்சு. மேரேஜ்க்கு அப்பறம் வேணா மாத்திக்கறேன்.” என்றான் சந்துரு. “ஹேய். அவன் என் ஃப்ரண்ட். நாங்க பழக ஆரம்பிச்சுதுல இருந்து அப்படி தான் கூப்பிடறேன். நீ ஓவரா கற்பனை பண்ணாத. சந்துரு உனக்கும்தான்.” என்றான் கவின்.

“எனக்கென்னவோ, இவனை கடத்திட்டு போய்தான் நான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கறேன்” என யோசித்தாள் சிந்து. “அப்பக் கூட தாலி கட்டுவாரா?” எனக் கேட்டான் சந்துரு. “கட்டினா பார்க்கலாம் இல்லனா நானே கட்டி வாழ்க்கை குடுக்க வேண்டியதுதான்” என்றாள் சிந்து.

அதற்கு கவின், “நான் பேசாம அந்த கார்ல போயிருக்கனும். நல்ல குடும்பமா சேர்ந்து என் உயிரை வாங்குதுங்க. ஆமா உங்க அம்மா என்ன ரொம்ப நாளா சத்தமே காணோம். ஏதாவது பாரீன் டூர் அனுப்பிட்டீங்களா?” என்றான். “அப்படில்லாம் போய்டுவாங்களா என்ன. இப்போதைக்கு அண்ணா கல்யாணம் தான் அம்மாவோட அடுத்த புராஜக்ட்” என சலித்துக் கொண்டாள் சிந்து.

“ஆமாமா. அந்த நிரஞ்சனி தானே பொண்ணு. அவளும் இங்கதான் சுத்திட்டு இருக்கா. இருந்தாலும் உங்க அண்ணா பெரிய ஆளுதான் இல்ல.” என்க, “டேய் பேசாம வாடா. நல்ல நேரத்துல யாரைப் பத்தி பேசனும்னு இல்ல உனக்கு, அந்த லெப்ட் போங்க.” என்றான் சித்து. “அதுவும் சரிதான். ஆமா இப்ப எங்க தங்கி இருக்க?” என்றான் கவின்.

அதற்குள் அவள் தங்குயிருந்த விடுதி வந்துவிட, “ஓ அதான் அன்னைக்கு என் ஹாஸ்டல் ரூம்க்கு போறேனு சொன்னீயா?” என கவின் கேட்க, “ஓ அதெல்லாம் நியாபகம் இருக்கா. அப்பறம் அடிக்கடி என்ன பார்க்க வராத. எங்க வார்டன் ரொம்ப ஸ்டிரிட்டு. சரியா” என்றபடியே இறங்கவும் கவின், “ஆமா நான் சொன்னனா. பேசாம போய் ஒழுங்கா படி” எனக் கூறவும் வண்டி கிளம்பியது.

சற்று நேரத்தில் மகிழின் வீடு வந்துவிட, சரியாக இரு கார்களும் ஒன்றாக நின்றது. மகிழும், அகலும் முதலாக இறங்கி வீட்டிற்குள் செல்ல, யாரும் எதிர்பாராத விதமாக அங்கு சந்தேஷ் இருந்தான். “நீ இங்க என்னடா பண்ற?” என மகிழ் கேட்க, “உன்னை பார்க்கத்தான் வந்தேன் செல்லம்” என்றான் குழைவாக.

அவனை கண்டதில் பழைய நினைவுகள் தாக்க, அவளது கையை பற்ற வந்தவனை பின்னால் வந்து சித்து ஓங்கி ஒரு அறை விட்டான். அதில் தடுமாறியவன் கீழே விழப்போக, “நீ யார்டா. ஓ அடுத்த புருஷனுக்கு ரெடி பண்ணீட்டாளா?” எனக் கேட்டான் சந்தேஷ்.

“எதுக்கு இப்படியெல்லாம் பேசற. ஓனர் வந்தா பிரச்சனை ஆகிடும். முதல்ல கிளம்பு” என்றாள் அகல்யா கோபமாக. அதைக்கேட்ட சித்துவோ அகல்யாவை கதவை திறக்க சொல்லி அனைவரும் உள்ளே நுழைந்தபின் கதவை சாத்தினான்.

மகிழையும், சந்தேஷையும் தவிர மற்றவர்களை ஒரு அறையில் வைத்து தாழிட்டவன், “இப்ப சொல்லு. என்ன உனக்கு பிரச்சனை” என்றான் சந்தேஷை பார்த்து அழுத்தமாக. அவனோ, “எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நான் தப்பிச்சிட்டேன். இப்ப பிரச்சனை உனக்குதான். இதுவரை எவ்ளோ குடுத்துருக்க?” என்றான் எகத்தாளமாக.

“எனக்கு என்னடா பிரச்சனை.?” என சித்து கேட்க, “அபி விடுங்க. நீங்க உள்ள போங்க. டேய் ஒழுங்கா இங்க இருந்து கிளம்பிடு. இல்லனா நடக்கறதே வேற” என மிரட்டினாள் மகிழ். சந்தேஷ், “ஏன் நான் இருந்தா உன் வண்டவாளம்லாம் தண்டவாளத்துல ஏறிடுமா? போக முடியாது. என்ன பண்ணுவ?” என்றான்.

“நீ என்ன இவன்கிட்ட பேசிட்டு இருக்க. டேய் நீ சொல்லுடா” என சித்து எகிறவும், “இவளை பத்தி உனக்கு என்ன தெரியும். இந்த ஊருக்கு வந்து கொஞ்ச நாள்தானே ஆகுது. இதுக்கு முன்னாடி இருந்த இடத்துல என்ன பிரச்சனைன்னு தெரியுமா?” என்றான் சந்தேஷ்.

“நீதான்டா பிரச்சனை. உன்னால தான் அங்கிருந்து வந்தா. எனக்கு எல்லாம் தெரியும்” என்றான் சித்து. சந்தேஷ், “ஓ என்ன சொன்னாங்க இந்த மேடம். நான் இவள தப்பா பார்த்தேன். ரோஷமா கிளம்பி வந்துட்டேனா? பண விசயத்தை பத்தி வாயே திறந்திருக்க மாட்டாளே?” எனவும், சித்து குழப்பமாக மகிழை பார்க்க, அவளோ செய்வதறியாது தவித்தாள்.

சித்துவின் குழப்பான முகத்தை கண்ட சந்தேஷூக்கு அவனுக்கு முழுதாக எதுவும் தெரியாது என தெரிந்து கொண்டவன், “ஒரு ரூபா இல்ல முழுசா பத்து இலட்சம் என்ன மிரட்டி பணம் வாங்கியிருக்கா. ஆதாரம் என்கிட்ட இருக்கு. முடிஞ்சா இப்பவே தப்பிச்சிடு. இவளோட தொழிலே இதுதான். ஆம்பளைங்களை ஏமாத்தி பணம் பறிக்கறது” என்றான்.

உடனே மகிழ், “இல்ல அபி. நான் எந்த தப்பும் பண்ணல.” என அவசரமாக மறுக்க, சந்தேஷோ, “இதைப்பாரு” என அவனது அலைபேசியை காட்டினான். அதில் சந்தேஷூம், மகிழும் ஒன்றாக  இருப்பது போல புகைப்படங்களும் அதனைத் தொடர்ந்து பத்து இலட்சம் கொடுத்தால் தான் விடுவேன் என பேரம் பேசும் உரையாடல்களும் இருந்தன.

அவனது அலைபேசியில் மகிழ் என பதிவு செய்யப்பட்டிருந்த எண்ணில் இருந்து அந்த புகைப்படங்களும் உரையாடல்களும் இருந்ததை கண்ட சித்து கோபமாக மகிழை கண்டதோடு அவளை இழுத்து கன்னத்தில் ஒரு அறை விட அவள் சுருண்டு விழுந்தாள். அதைக் கண்டு சந்தேஷ் புன்னகைத்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்