Loading

 

 

 

இசை – 6

 

 

 

சுற்றியும் பார்வைதனை அலைபாய விட்ட பிறை சன்னக்குரலில் “இப்ப என்ன நடந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டராதீங்க” என்று பீதியை கிளப்பிட, அவளின் குரலின் மாற்றத்தை உணர்ந்து மற்றவர்களும் திகிலுடன் அவ்விடத்தை அளந்தனர்.

 

“ஏய் கருவாச்சி” – ஆத்ரேயன் 

 

“வாயை உடைப்பேன்” – பிறை

 

“ப்ச் என்னதான் ரெண்டு பேருக்கும் பிரச்சனை?” – மதன்

 

“டேய் அவ என்ன சொன்னாலும் புரியற மாதிரி சொல்ல சொல்லு.. நான் ஏன் இவ பேச்சுக்கு கட்டுப்படணும்” – ஆத்ரேயன்

 

“என்ன பேச வைக்காத எருமை.. இந்தம்மா என்ன என்னமோ சொல்லுதுனு பீதில எல்லாரும் நின்னா உனக்கு இப்பதான் வீம்பு தலை தூக்குதோ?” – மதன்

 

“நான் சொன்னதை எவனும் கேட்கணும்னு அவசியமில்லனு சொல்லு வேதா” – பிறை

 

பிறையின் கோவத்தை அதிகப்படுத்தும் விதமாக “நான் உன் பேச்சை கேட்கறேனு சொல்லவே இல்லயே கருவாச்சி” என்று ஆத்ரேயன் உரைத்திட, “வேதாஆஆஆஆ” என்று தம்பியிடமே சீறினாள்.

 

இவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கழுகுகள் கூட்டம் கூட்டமாக பறந்து வந்து அவ்விடத்தை சூழ்ந்து கொண்டு சுற்ற தொடங்க, அச்சத்தை கவ்விப்பிடித்த கண்களுடன் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்து கொண்டு தப்ப முயன்றனர்.

 

இவர்களுடன் அடித்து வரப்பட்டவர்களில் ஓரிரண்டு பேர் கழுகுகளிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்திருந்தனர். மதனின் அணைப்புக்குள் சிறைப்பட்டிருந்த தளிரின் விழிகள் வேதாவையே சுற்றி வந்தது அவனுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயத்தில்!

 

என்னதான் வேதா தன் அணைப்புக்குள் ஹாசினியை வைத்திருந்தாலும் அவனின் விழிகள் அடிக்கடி தளிரின் பாதுகாப்பை உறுதி செய்த வண்ணமே இருந்தது.

 

“மச்சான் முடிலடா” என்று வருண் கதற, அந்நேரம் சரியாக வேதாவை ஒரு கழுகு நெருங்கிட அதை அவன் கவனிக்கும் முன்பே கவனித்து விட்ட தளிர் “வேதா” என்று கத்தியபடி வேதாவை தள்ளி விட்டதும் தளிரின் குருதியை சுவைத்து விட்டு பறந்தது கழுகு ஒன்று!

 

நகக்கண்கள் கீறியதில் ரத்தம் கொப்பளித்த கையை பிடித்து கொண்டு  “ஸ்ஸ்ஸ்ஸ் அம்மா” என்று வலியில் தளிர் சுருண்டிட, மதன் பதறி “தளிர் தளிர்” என்றிட, “அவளை விட்டராதடா” என்ற ஆத்ரேயனும் எச்சரிக்கையை விடுக்க, மதனுக்கு உதறல் எடுத்தாலும் மயங்கிய தங்கையை தனக்குள் பாதுகாப்பாக வைத்து கொண்டான்.

 

தன்னால் தான் தளிருக்கு இந்நிலையோ? என்று வேதாவின் உள்ளம் கவலையில் விழ, தனியாளாக நின்றிருந்த பிறையை தனியே விட மனமின்றி தன்னிடம் இழுத்த ஆத்ரேயன் “ரொம்ப தைரியசாலினு நினைப்பு” என்று காய்ந்தான்.

 

“நீ சொல்லலனாலும் நான் தைரியசாலி தான்” – பிறை 

 

“வாயை அடக்கு கருவாச்சி” – ஆத்ரேயன் 

 

“பல்லை உடைப்பேன்” – பிறை 

 

“அடேய்.. டேய் அந்த கலெக்டர் மேடத்தை விட்டுட்டு என்னைய காப்பாத்துடா” என்று பயத்தில் வருண் கதறிட, “அப்படியே நில்லு உன்னைய கழுகு எல்லாம் தூக்கிட்டு போய்ராது” என்றாள் பிறை.

 

திடீரென்று என்ன நினைத்தாளோ ஆத்ரேயனின் பிடியை உதறி தள்ளி “எல்லாரும் வாங்க” என்று அறிவிக்கை விட்டபடி நதியை நோக்கி பிறை ஓடிட, என்னமோ ஏதோவென்று நினைத்து தளிரை தூக்கி கொண்டு இவர்களும் அவள் பின்னே ஓடி ஆற்றில் குதித்தனர்.

 

இவர்கள் ஓடுவதை பார்த்து மற்றவர்களும் தன்னுயிரை காப்பாற்றி கொள்ள ஓடிட நினைக்க, அதற்குள் கொத்து கொத்தாக பறந்து வந்த கழுகுகள் பலரை கொத்தியது.. இருந்தும் ஒருசிலர் தப்பித்து ஆற்றில் குதித்தனர்.

 

அவ்வளவு நேரம் அமைதியாக ஓடி கொண்டிருந்த நதி இப்போது வேகமெடுக்க, “அய்யய்யோ” என்ற சத்ததுடன் கரையில் ஏற முயன்றவர்களுக்கு தோல்வியே கிட்டியது.. நதியுடன் சேர்ந்து இவர்களும் பயணித்தனர் அடுத்த ஆபத்தை நோக்கி!

 

அவ்விடத்தை வட்டமிட்டிருந்த கழுகுகள் கூட்டமும் அங்கிருந்து சென்று வானில் உயரத்தில் பறக்க ஆரம்பித்தது.. “அய்யோ அம்மே” என்று வருணின் கதறலும் “ஆதி ஆதி தளிரை பிடிடா” என்று மதனின் கத்தலும் அடங்காமல் எதிரொலித்தது.

 

 

********

 

 

சாதாரணமாக தான் லோகேஷ் அங்கு வந்தான். ஆனால் லேகாவுக்கு தான் சங்கடத்தில் வியர்த்து கொட்ட, “ஹாய் ஆண்ட்டி” என்றவனுக்கு சிறுதலையசைப்பை மட்டும் குடுத்து புன்னகைக்க முயன்றார்.

 

“ஆண்ட்டி நான் வந்ததுல ஏதாவது பிரச்சனையா?” – லோகேஷ் 

 

“அய்யோ இல்ல மாப்பிள்ளை” – லேகா

 

“அப்பறம் வொய் இப்படி நிற்கறீங்க” – லோகேஷ் 

 

“நீங்க முதன்முதலா வந்துருக்கீங்கல அதான் கொஞ்சம் பதற்றமா இருக்கு மாப்பிள்ளை” – லேகா

 

“ஹஹஹஹ.. அங்கிளை காணோம்” – லோகேஷ் 

 

“இதோ வந்துட்டேன் மாப்பிள்ளை.. எப்ப வந்தீங்க?” என்றபடி அன்பு சுந்தரம் மாடியில் இருந்து கீழறங்கி வந்தார்.

 

“இப்பதான் அங்கிள்.. நான் வந்ததை பார்த்து ஆண்ட்டி பயந்துட்டாங்க போல” என்று விட்டு லோகேஷ் சிரிக்க, “அவ கொஞ்சம் அப்படிதான்பா.. நீங்க உக்காருங்க” என்று சமாளித்தார் அன்பு.

 

நேரடியாகவே லோகேஷ் “நான் பிறையை வெளில கூட்டிட்டு போலாம்னு வந்தேன் அங்கிள்.. அம்மா சொல்லிருப்பாங்கனு நினைக்கறேன்” என்றவன் பிறையை தேடினான்.

 

என்ன சொல்வது என்று தெரியாமல் லேகா கையை பிசைந்தவாறு கணவனை ஏறிட, தொண்டையை செருமிக் கொண்ட அன்பு சுந்தரம் “சம்பந்தி சொல்றப்பவே இதைய சொல்லிருக்கணும் தான் மாப்பிள்ளை.. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் நடக்கு போகுது.. அதுக்கு அப்பறம் பிறை எங்கையும் வர மாட்டானு அவளை வற்புறுத்தி அவளோட ப்ரெண்ட்ஸ்க டூருக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க..”

 

“வர்றதுக்கு இன்னும் நாலு நாள் ஆகும் மாப்பிள்ளை..  என்னாலயும் போக வேணாம்னு சொல்ல முடில.. வேதாவும் அவகூட தான் போய்ருக்கான்.. உங்ககிட்ட இதைய சொல்லாததுக்கு என்னைய மன்னிச்சுருங்க மாப்பிள்ளை” என்று யோசித்து வைத்திருந்ததை லோகேஷ் நம்பும்படியாக கூறினார்.

 

அத்தனை எதிர்ப்பார்ப்புகளுடன் பிறையை அழைத்து செல்ல வந்தவனுக்கு இது ஏமாற்றமாக அமைந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் “இதுல என்ன அங்கிள் இருக்கு.. நானும் பிறையும் இன்னொரு நாள் கூட வெளில போய்க்கலாம் ஆனா ப்ரெண்ட்ஸூக கூட மேரேஜூக்கு முன்னாடி தானே என்ஜாய் பண்ண முடியும்” என்றான் சன்னமாக சிரித்தபடி.

 

“சாரி மாப்பிள்ளை” என்று வருத்தத்துடன் அன்பு சுந்தரம் மொழிந்திட, “இது எனக்கு தெரிஞ்சுருந்தாலும் நானும் அவங்க கூட போய்ருப்பேன் அங்கிள்.. அதுல மட்டும் தான் வருத்தம்.. மத்தபடி பிறை சொல்லாம போனதுக்கு எல்லாம் எந்த வருத்தமும் இல்ல அங்கிள்” என்று தன் ஏமாற்றத்திற்கான காரணத்தையும் மறைக்காமல் கூறினான்.

 

“சரி விடு்ங்க அங்கிள்.. பிறை வந்ததும் வெளில கூட்டிட்டு போலாம் தானே? அதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லயே?” – லோகேஷ் 

 

“தாராளமாக மாப்பிள்ளை.. அதுல எனக்கும் சந்தோசம் தான்” – அன்பு சுந்தரம் 

 

“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.. மறுபடியும் இன்னொரு நாள் வர்றேன்” என்று விட்டு கிளம்பினான். அவன் சென்றதும்  “இவரை உன் பொண்ணுக்கு ஏன்டி பிடிக்கல?” என்று காய, ‘அது எப்படிங்க எனக்கு தெரியும்’ என்று வாய்வரை வந்த வார்த்தையை உள்ளிழுத்து கொண்ட லேகாவுக்கும் இச்சந்தேகம் இருக்க தான் செய்தது.

 

“கிளம்பு அந்த வருண் பையன் வீட்டுக்கு போவோம்” என்று லேகாவையும் இழுத்து கொண்டு வருணின் தந்தை பிரதாப்பை தேடி சென்றார் அன்பு சுந்தரம். இவர் சென்ற நேரம் ஹாசினியின் தந்தையான விஸ்வேஸ்வரும் அங்கு இருக்க, “வாங்க அன்பு.. என்ன இந்த பக்கம்?” என்று பிரதாப் அவரை வரவேற்றார்.

 

காண்டான அன்பு “நான் ஒண்ணும் உங்க வீட்டுக்கு விருந்து சாப்பட வரல.. மொதல்ல உன் பையன் எங்கயா?” என்று கேட்க, ஒன்றும் புரியாத அவர் “வேதா தான் வந்து அவனை கூட்டிட்டு போனான்.. உங்க பையன் எங்க இருக்கானோ அங்கதான் இருப்பானு நினைக்கறேன்” என்றார் விட்டேந்தியாக.

 

“ப்ச்” என்று நெற்றியை நீவியவர் “பிரதாப் அவங்க எங்க போய்ருக்காங்கனு சொல்லிரு.. என் பொண்ணுக்கும் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்” என்று கோவத்தை கை விட்டு விட்டு  கூறினார் அன்பு.

 

“அதுக்கு நான் என்ன பண்ணணும் அன்பு.. அவங்க எங்க போறாங்கனு என்கிட்ட சொல்லிட்டு தான் போவாங்களா என்ன? உன் பையன் மாதிரி தான் என் பையனும்.. அவனும் எங்க போறான் வர்றானு தெரியாம புலம்பிட்டு இருக்கேன்..” 

 

“இதுல நீ வேற நான்தான் என்னமோ அவங்களைய ஒழிச்சு வெச்சு கண்ணாமூச்சி விளையாடற மாதிரி எங்கனு சொல்லுனு கேட்டுட்டு இருக்க?” என்று படபடத்து விட்டார்.

 

தலையை பிடித்து கொண்டு அன்பு அமர, ஆறுதலாக பிரதாப் “அவங்க எப்படியும் இன்னும் ரெண்டு நாளுல வந்துருவாங்கனு நினைக்கறேன் அன்பு.. கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வராது.. பயப்படாம இரு” என்றார் கனிந்த குரலில்.

 

“ம்ம்ம்ம் அவங்க வந்ததும் என்கிட்ட சொல்லு” என்றவாறு அன்பு வெளியேற, அவர் செல்லும்வரை அமைதியாக இருந்த விஸ்வேஸ்வர் “படவா உண்மையா அவங்க எங்க போய்ருக்காங்கனு உனக்கு தெரியாதா?” என்று கிண்டலுடன் கேட்டார்.

 

“தெரியும்னு சொல்லிருந்தா வேதாகிட்ட குடுத்த வாக்கு பொய்யாகிரும்டா.. பாவம் பிறை.. அவளுக்கு பிடிக்கலனு தெரிஞ்சும் இவனோட ஆசைக்காக கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கறான்.. அவன் வருத்தப்பட்டாலும் சரி காலுல விழுந்து கெஞ்சுனாலும் சரி அவங்க எங்க போய்ருக்காங்கனு எனக்கு தெரியவே தெரியாது” என்று முதலில் வருத்தமாக கூறியவர் பின்பு கேலியுடன் கண் சிமிட்டினார்.

 

பெருமூச்சுடன் “நல்லவேளை அந்த ஆளுக்கு என் பொண்ணும் அவங்க கூட போய்ருக்கானு தெரில.. தெரியாத வரைக்கும் எனக்கு நல்லது தான்” என்று விஸ்வேஸ்வர் வருத்தப்படுவது போல் நடிக்க, “உன் பொண்ணை நீதான் அனுப்பி வெச்சேனு அடிக்கடி மறந்தற விசு” என்று நக்கலாக உரைத்தார் பிரதாப். 

 

“ம்ம்ம்ம்க்க்கும் அவளை ஏதாவது சொல்லிட்டா போதுமே? உடனே சப்போர்ட்டுக்கு வந்தறது” – விஸ்வேஸ்வர் 

 

“என் மருமகளுக்கு நான் சப்போர்ட்டு பண்ணாம வேற யாரு பண்ணுவா?” – பிரதாப்

 

“நம்மதான் சம்பந்தியாக நினைக்கறோம் ஆனா என் பொண்ணு வேதாவை தான் பிடிச்சுருக்குனு சொல்றாளே?” – விஸ்வேஸ்வர்

 

“விசு வேதா நல்ல பையன் தான்.. வருண் மாதிரி தான் எனக்கு அவனும்.. ஹாசினி அவனை பிடிச்சுருக்குனு சொன்னதுமே அவன்கிட்ட நான் பேசுனேன் அதுக்கு அவன் எப்பவும் அவமேல எனக்கு காதல் வராதுபா.. எனக்கு அவ குழந்தை மாதிரினு தான் சொன்னான்” – பிரதாப் 

 

“இதுல ரொம்ப பாதிக்கப்பட்டது வருண் மட்டும் தான்டா.. நான் பண்ணுன தப்பு உனக்கு தான் என் பொண்ணு என் பொண்ணுனு சொல்லி அவன் மனசை கெடுத்து விட்டுட்டேன்ல” என்றார் விசு தேய்ந்த குரலில்.

 

“அதான் என் பையன் அவ மனசை மாத்தி காட்டறேனு சவால் விட்டுருக்கானே விசு.. வேதாவும் அவளை லவ் பண்ணிருந்தா இவன் விலகிருப்பான்.. வேதா தெளிவா இருக்கறப்ப என் பையன் ஏன் விட்டு குடுக்கணும்.. வேணாலும் பாரு ஹாசினி தான் என் வீட்டு மருமகள்” என்று பிரதாப் உறுதியாக உரைத்தார்.

 

அப்போதும் விஸ்வேஸ்வரின் முகம் தெளிவடையாமல் இருக்க, “இவ்வளவு நாள் நண்பனா இருந்தோம் இனி சம்பந்தியாகவும் இருக்க போறோம்” என்றவருக்கு “அப்படி நடந்தா அதைய விட வேற என்னடா வேணும்” என்று விசுவும் அவரை அணைத்து கொண்டார்.

 

வருணின் தந்தையும் ஹாசினியின் தந்தையும் சிறுவயது நண்பர்கள்.. என்னதான் அவர்களுக்குள் சண்டையும் சச்சரவும் எழுந்தாலும் இன்றுவரை இணைபிரியாத நண்பர்கள் தான்.. வருண் பிறந்த போதே அவனின் அன்னை இறந்திட, அன்றிலிருந்து மகனுக்கு தந்தையாய் தாயாய் இருப்பவர் பிரதாப்.

 

பலநேரம் தனக்கு நண்பராக திகழும் தந்தையிடம் வருணும் இதுவரை எதுவும் மறைத்ததில்லை.. கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் எப்போதும் கண்டிப்புடன் தான் இருப்பார் பிரதாப். தந்தையின் மீது வருணுக்கு சிறுபயம் இருந்தாலும் சரியோ? தவறோ? இரண்டையும் முதலில் அவரிடம் தான் கூறுவான்.

 

அப்படி கூறியது தான் ஹாசினியை காதலிக்கும் விசயம்.. என்னதான் வருணும் ஹாசினியும் நண்பர்களாக இருந்தாலும் இருவருக்குள்ளும் சிறு இடைவெளி இருக்கதான் செய்யும். வருணுக்குள் காதல் எப்படி வந்தது என்று கேட்டால் சத்தியமாக தெரியவில்லை என்றுதான் கூறுவான்.

 

அவன் செய்த ஒரே தவறு ஹாசினிக்கு பிறையையும் வேதாவையும் அறிமுகப்படுத்தியது தான்.. வேதா – வருணின் நட்பு பத்து வயதில் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. கல்லூரி படிக்கும் சமயத்தில் ஹாசினிக்கு இவர்களை அறிமுகப்படுத்த, வருணின் மேல் வராத காதல் வேதாவின் மீது வந்து தொலைந்தது.

 

வேதாவை தன்னவள் காதலிப்பதை அறிந்ததும் இதயத்தை தாக்கிய வலியை மறைக்க அரும்பாடு பட்டவன் இறுகிதான் போயிருந்தான்.. மகனின் காதலை பற்றி பிரதாப் விசுவிடம் பேசலாம் என்று நினைத்த நேரத்தில் வேதாவின் மீதான ஹாசினியின் காதல் தெரிய வர, இது அவருக்கும் பேரதிர்ச்சி தான்.

 

பிடிக்காத திருமணத்தினுள் ஹாசினியை நுழைக்க பிரதாப்புக்கு மனதில்லாமல் இதை பற்றி வேதாவிடம் பேச அவனோ “ஹாசினி மீது எப்போதும் எனக்கு காதல் வரவே வராது” என்று உறுதியாக கூறிட, இந்த முக்கோண காதல் எங்கு போய் முடியுமோ? என்ற பயம் அவரை ஆட்டி படைத்தது.

 

தன் காதல் தான் நிறைவேறவில்லை ஹாசினியின் காதலாவது நிறைவேறட்டும் என்று வருண் வேதாவிடம் பேசி பார்க்க, அவனும் அவன் முடிவில் உறுதியாக தான் இருந்தான். இருவருக்கும் இடையில் மாட்டி கொண்டது என்னவோ வருண் தான்.

 

ஹாசினி வேதாவை பற்றி கூறும் போதெல்லாம் தன் காதலை மறைத்து சகஜமாக உரையாடுவது தான் அவனுக்கு கொடுமையிலும் கொடுமை! இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்ததும் வேதாவே..

 

பிரதாப்பின் மூலம் வருணின் காதலை அறிந்தவன் “உன் காதல் உண்மைனா ஹாசினியை நீ மாத்து இல்லனா விட்டுரு.. நான் எப்பவும் ஹாசினியை ஏத்துக்க வாய்ப்பே இல்லை” என்றான் முடிவாக.

 

இவர்களை இணைக்கவே இருவரின் பெற்றோர் சம்மதத்தின் மூலமாக இந்த பயணத்தை  ஏற்படுத்தியதும் வேதா தான்! ஹாசினியின் அன்னைக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் வருணை திருமணம் செய்தால் மகள் தங்கள் பக்கத்திலே இருப்பாள் என்றுதான் சம்மதம் அளித்திருந்தார்.

 

அப்படியே பிறையும் சில நாட்கள் சந்தோசமாக இருக்கட்டும் என்று அவளையும் அழைத்து கொண்டு பிரதாப்பிடம் மட்டும் செல்லும் இடத்தை கூறிய வேதா தன் தந்தை கேட்டால் சொல்லவே கூடாது என்றிருந்தான் செல்லக்கட்டளையுடன்! 

 

“கண்டிப்பாக என் காதல் என் ஹாசுவை மாத்தும்” என்று சவாலுடன் வருணும் பயணத்திற்கு தயாராகி இருக்க, வேதாவும் வருகிறான் என்பதை அறிந்து தன் காதலை வெளிப்படுத்த இது நல்ல தருணம் என்று துள்ளலுடன் கிளம்பி இருந்தாள் ஹாசினி. 

 

உயிரை கேட்டாலும் 

குடுக்க தயாராக 

இருக்கும் ஒருவன்!

உயிரே போனாலும் 

ஏற்று கொள்ள மறுக்கும் மற்றொருவன்!

இந்த முக்கோண 

காதலில் ஜெயிக்க 

போவது யாரோ?

 

 

**********

 

நதியால் அடித்து செல்லப்பட்டவர்கள் ஓரிடத்தில் ஒதுங்க, முதலிலே மயங்கும் நிலையில் இருந்த தளிர் இப்போது முற்றிலும் மயக்க நிலையில் மதனின் கை வளைவுக்குள் கிடந்தாள்.

 

உடலெல்லாம் நடுங்கியது மதனுக்கு.. எப்படியோ கரை சேர்ந்தவர்கள் பெருமூச்சுகளை வெளியிட்டு தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டனர். “ஆதி தளிருக்கு என்ன ஆச்சுனு பாருடா” என்று மதன் பதற, “ப்ச் அவளுக்கு ஒண்ணுமில்ல ரொம்ப பதறாம இரு” என்றான் அசட்டையாக.

 

ஆனால் வேதாவுக்கு மனது கேட்காமல் இதுதான் சாக்கு என்று தன்னை ஒட்டியபடி கிடந்த ஹாசினியை விலக்கி விட்டு “இளா இளா.. இங்க பாருமா” என்று தளிரின் கன்னத்தை தட்டினான் அதுவும் மெல்லமாக!

 

“தன்னவன் வேறு ஒருவளை தொடுவதா?” என்று இயல்பாக தோன்றும் எண்ணம் ஹாசினிக்கும் எழ, சட்டென்று வேதாவை தன்பக்கம் இழுத்து “அவ அண்ணனே எனக்கு என்னனு இருக்கான் இதுல உனக்கு என்னடா வந்துச்சு.. அவ செத்தாலும் நமக்கு என்ன கவலை?” என்று வார்த்தையை விட்டவளின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது ஒரு கரம்!!

 

அடித்தது யாரோ?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Archana

   அடிச்சது அத்ரேயனா இருக்குமோ🤭🤭🤭 புரிஞ்சிடுச்சு இந்த முக்கோன காதல் இப்படி தான் சுழலே சுத்தின போல சுத்திட்டு இருக்குதுன்னு😂😂🤣🤣🤣

  2. Janu Croos

   இந்த லோகேஷு பயலும் பாக்க நல்லவனாதானே இருக்கான்…இருந்தாலும் பிறை அவன வேணாம்னு சொல்றாள்னா ஏதோ ஒரு காரணம் இருக்குனு தானே அர்த்தம்…

   வேதாவுக்கும் வருண் ஹாசினிய லவ் பண்றது தெரிஞ்சிருக்கு…அப்போ ஹாசினி வருணுக்கு முன்னாடி வேதா கிட்ட என்ன லவ் பண்ணுனு சொல்லும் போது அவனுக்கு எவ்வளவு சங்கடமா இருக்கும்…

   இந்த ஹாசினி ஏன் தான் இப்படி இருக்காளோ…எந்த ஒரு உறவையும் வற்புறுத்தி தங்கவச்சுக்க முடியாது…மீறி பண்ணாலும் அது நம்ம கூட ரொம்ப ழாள் சேர்ந்து இருக்காது….

   காதல் கண்ண மறைச்சா பறவாயில்லை கபாளத்தையும் சேத்துல மறைக்குது…
   இந்தாமா ஹாசினி பருந்து கொத்த வரும் போது காதல் காதல்னு பினித்திட்டு இருந்தியே நீயே அவன காப்பாத்த வேண்டியது தானே…நீ சொகுசா அவனோட பாதுகாப்புல இருந்துட்டு அவன காப்பாத்த வந்த தளின இப்போ அவன் காப்பாத்த போனா வாய்க்கு வந்தபடி பேசுவியா…அதான் செவிலுலயே யாரோ அறைஞ்சுட்டாங்களே…யாரு அந்த மகராசன்னு தான் தெரியல….

  3. Interesting ud sis nice hasini ne virumbaravana vida unna virumburavana mrg panniko life nalla iruku super ud sis yaru adichu irupa