ஆனந்த பாகம் 2
குணா யாரிடமும் சொல்லாமல் விளையாடப் போயிருக்கான், என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
ஏம்மா!…. நிர்மலா உள்ள போய் நல்லா பாரு, உள்ளே தான் இருப்பான். நான் எல்லா இடத்திலும் பார்த்துட்டேன்….. மா… இல்ல
என்னடி சொல்ற உண்மை தான் அவன் இல்லை.
உடனே மரகதம் அது என்ன பழக்கம், யாரிடமும் சொல்லாமல் செல்வது, நேற்று இத்தனைக்கும் சத்தம் போட்டோம், அப்படி இருந்தும் சொல் பேச்சைக் கேட்கவே மாட்டிக்கான்….. இன்னிக்கும் வரட்டும் இனிமேல் நான் அடிச்சா!… தான் அவன் கேட்பான்…… இவ்வளவு நாளா நானும் சின்ன பையன் நம்ம அன்பா சொன்னா கேட்பான் என்று நினைச்சேன்….. ஆனால் அவன் வரட்டும் வரட்டும்…… என்று கோபத்துடன் உட்கார்ந்து இருந்தாள்…..
.
வேலாயுதம் வேலையை முடித்து வீட்டுக்கு வரும் போது வழியில் கோபுவைப் பார்த்தான்……..வேலாயுதம் எப்படி இருக்கிறாய்? என்று கேட்டான். இருக்கேன் கோபு,என்ன…கோபு உன்னைப் பார்க்கவே முடியல எங்க போன என்று கேட்டார் வேலாயுதம்.
அதற்கு கோபு நான் ஊருக்குப் போய்ட்டு நேற்று தான் வந்தேன்….
ஆமாம்!…. உன்னுடைய பையன் பேரு என்ன? அவன ஹோட்டல்ல பார்த்தேன். என்னப்பா night work பார்க்குறான். நீ ஒரு வார்த்தை அவனுக்கு வேலை ஏற்பாடு பண்ணி தாங்க என்று சொல்லிருந்தா…
..
நான் ஒரு நல்ல வேலை வாங்கி கொடுத்துருப்பேன்….. அந்த ஹோட்டல்ல ரொம்ப வேலை பார்க்க சொல்லுவாங்க,!….. அதான் சொன்னேன்…. இப்ப கூட ஒரு பிரச்சினையும் இல்லை.
….என்னிடம் வேலை இருக்கிறது. நீ வீட்டுக்குப் போய் கலந்து பேசிட்டு நாளைக்கு
சொல்லுப்பா!…… நான் வர்றேன். இதைக் கேட்டு வருத்தத்துடன் வீட்டிற்கு சென்றான்….. வீட்டுக்குப் போய் கை, கால்களைக் கழுவி விட்டு போய் உட்கார்ந்தான்….
என்னங்க!….. இன்னிக்கும் விளையாடப் போய்ட்டாங்க,.. அதுவும் என்னிடம் சொல்லாம வீட்டுக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு கச்சேரி…… என்று கூறினாள்….. அவனை ஒன்றும் சொல்ல வேண்டாம்…. ஏன்? எதுக்கு சொல்லக்கூடாது…
என்னாச்சுங்க!… ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க……
குணா விளையாடப் போகல்ல…… அவன் வேலைக்குப் போய் இருக்கான்……. என்ன …அப்பா சொல்றீங்க….. தம்பி வேலைக்குப் போயிருக்கானா, யாருப்பா சொன்னாங்க!….. ஆமாம்….. நிர்மலா நான் வேலை முடித்து விட்டு வரும் போது கோபுவைச் சந்தித்தேன்.குணா வேலை பார்த்ததை அவர் பார்த்திருக்கிறார் …. நிர்மலா ,குணா…….
எதுக்காக இந்த சின்ன வயதில் அவன் கஷ்டப்படனும்….. நீங்கள் இந்த வயதில் கஷ்டப்பட கூடாது தானே….. நாங்க கஷ்டப்படுறோம்…. அது ஏன் அவனுக்கு புரியமாட்டிக்கும்மா….. நான் என்ன சொல்ல ரொம்ப கவலையாக இருக்கிறது…..
குணா வந்தான், அம்மாவிடம் இனிமேல் சொல்லிட்டு போகிறேன்…. எங்கடா போய்ட்டு வந்த நீ இப்படி கஷ்டப்பட்டு வேலை பார்க்கனும் என்பது தலையெழுத்தாடா…… ஏன் இப்படி எங்களைக் கஷ்டப்படுத்துற….
ஜே…. .. .போடா….. என்னிடம் பேசாதே….
அம்மா நான் ஏன் வேலைக்குப் போனேன் தெரியுமா?….. அப்பாவ பார்க்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது…. அன்னைக்கு நம்ம வீட்டில் வந்து காசு கேட்டு சண்ட போட்டாங்களே….. அப்போம் நீ அப்பாட்டா நாங்க படிக்கணும் என்பதற்காக நீ காசு சேர்த்து வைத்திருந்தாய்…..அந்த காச கொடுத்து கெளரவம் தான் முக்கியம்னு சொன்னியே!…. அப்போம் புரிந்தது… வேலை பார்க்கிறது எவ்வளவு கஷ்டம் என்பது நாம வேலை பார்த்தா தான தெரியும். அதான் நான் வேலைக்குச் சென்று என்னால முடிந்த சின்ன சின்ன வேலைகளை செய்தேன் ….. அது தப்பாம்மா!….
உடனே வேலாயுதம், எழுந்து பெற்றவர்களுக்குத் தெரியாமல் நீ வேலைக்குப் போனது…. தப்பு தான் ….
நீ ஒன்னும் பெரியவனாடா , இல்ல சின்ன பையன்,வேலை பார்க்கக் கூடிய வயது இருக்குடா, எங்களோட ஆசையே நீங்கள் நல்லா படித்து நல்ல வேலை பார்க்கனும். அது தான்.,ஆனால் நீ இப்போ போய் வேலைபார்க்கிறது…. அப்பாவுக்கு பிடிக்க வில்லை. இனிமேல் நீ வேலைக்குப் போக கூடாது. பள்ளிக்குச் சென்று படிக்கனும் புரியுதா?….. எங்களோட கஷ்டம் அது எங்களோட போகட்டும் சரியா……
ம்ம்ம்… சரிப்பா…. போ… சாப்பிட்டு தூங்கு…
மரகதம் குணாவிற்கு சாப்பாடு வைத்தாள்.
அப்போது வேலை பார்த்த காசை அம்மாவிடம் கொடுத்தான் …
அதற்கு மரகதம் குணா இந்த காசை ,நீயே வைத்துக் கொள் !….உனக்கு ஏதாவது வாங்கிக் கொள்….. இல்லை இத நீங்களே வைத்திருங்கள்….. என்று கூறி கையில் கொடுத்தான்…..
அடுத்த நாள்…..
நிர்மலா காலையில் சீக்கிரம் எழுந்தாள்….. வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்தது. அவள் எழுந்ததைப் பார்த்த மரகதம் போ நிர்மலா…. போய் குளித்து விட்டு வா…. என்று கூறினாள்….
என்னம்மா…! இன்றைக்கு என்ன விசேஷம் ? இன்று மிக முக்கியமான நாள்” சஷ்டி விரதம்’
ஓ…. அப்படியா!…. இன்று கோவிலுக்குப் போகணும் …….
எப்போது போகனும்.. சாயங்காலம் தானம்மா…… நீ இப்போது போய் குளித்து விட்டு வா…… சரிம்மா…..
மரகதம் சீக்கிரமாக சமையல் வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிடட்டாள்……. பின்பு குணாவை எழுப்பி பல் துலக்கு தம்பி ,எழுந்து குளித்து விட்டு வா, நம்ம வீட்டில் விளக்கு ஏற்றி …. சாமி கும்பிடனும்……. போ…..
மரகதம் பூஜை அறையில் எல்லா படத்திற்கு பூ போட்டுக் கொண்டிருந்தாள்…. அனைவரும் சுத்தமாக பூஜை அறைக்குள் வந்தனர். வீட்டில் ஒரு பக்கம் சஷ்டி பாடல் ஒலித்தது….. விளக்கு ஏற்றி முருகனை நினைத்து மனம் உருகி வேண்டினர்……
பின்பு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர். ஆனால் மரகதம் மட்டும் சாப்பிட வில்லை. ஏனென்றால் அவள் விரதம்…… நீங்கள் எல்லோரும் சாப்பிட்டு கிளம்புங்க. …. நான் கோவிலுக்குச் செல்லனும்….. அதான்….
உடனே நிர்மலா அம்மா என்கிட்ட சாயங்காலம் போவோம் சொன்ன…. இப்போது கோவிலுக்கு போற….. என்று கேட்டாள்…..
காலையில் அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடக்கும்…… மாலையில் சூரசம்ஹாரம் நடக்கும்…. நீ இப்போம் வரவேண்டாம். சாயங்காலம் கூட்டிட்டு போறேன்…..
ம்ம்ம்….. சரிம்மா….
நிர்மலா hall ticket வாங்கிட்டு எப்போது வருவாய்….. அம்மா நான் சீக்கிரம் வந்துருவேன்….. சரிம்மா…. நான் பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்து விட்டு செல்கிறேன்….. சரி நாங்க போய்ட்டு வாரோம்…..
வேலாயுதமும் கிளம்பும் போது சாப்பாடு கொடுத்துவிட்டாள்…. ஏங்க…. நீங்கள் வருவீங்களா!,,, கோவிலுக்கு, இல்ல மரகதம் நீங்கள் எல்லாம் போய்ட்டு வாங்க….. என்று கூறினாள்….
நான் கிளம்புறேன்…… மரகதம்…..
மரகதமும் சீக்கிரமாக கோவிலுக்குப் போகனும் என்று சொல்லிக் கொண்டே கிளம்பினாள்….
எப்படியோ! கோவிலில் பூஜை முடிவதற்குள் சென்று விட்டாள்…. கோவிலில் நெரிசல் அதிகமானது….. தரிசனத்தைச் சிறப்பாக நடந்தது….. அதையும் .நன்றாக பாரத்தாள்…. பின்பு கோவிலைச் சுற்றி வரும் போது இவளை யாரோ கூப்பிடுவது போல் தோன்றியது. யாரென்று திரும்பி பார்த்தாள். அவளின் தோழி பரிமளா. அவளை பார்த்தாலே பிடிக்காது நம்ம மரகதத்துக்கு, ஏதோஅவள் கூப்பிட்டாளே ,….என்று அவளிடம் பேசினாள்…. எப்படி இருக்கிறாய்? மரகதம் நான் நல்லா இருக்கிறேன்?…..
நீ எப்படி இருக்கிறாய்?…..ம்ம்ம் நல்லா இருக்கிறேன்…… உன்னோட பொண்ணு எப்படி இருக்கா, பையன்,…. எத்தனை படிக்கிறான்….. என்று கேட்டாள்….. அதற்கு மரகதம் மகள் 12படிக்கிறாள்….பையன் 8படிக்கிறான்…..என்று கூறினாள். பிறகு பரிமளா பேசிக் கொண்டே இருந்தாள்…. சரி பரிமளா எனக்கு வீட்டில் வேலை இருக்கிறது. நான் கிளம்புறேன்…… என்று கூறினாள் மரகதம்….
……பள்ளியில் Hall ticket வாங்கிட்டு தோழிகளுடன் விளையாடிட்டு வீட்டிற்கு வந்தாள்…..
அவள் வீட்டை திறந்து உள்ளேசென்றால் அதற்குள்ளும் மரகதம் வந்து உட்கார்ந்தாள்…..
என்னம்மா!…. கோவில்ல கூட்டம் அதிகமாக இருந்துச்சா,! ஆமாம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்…..
நான் கொஞ்ச நேரம் படுத்துருக்கேன்…..
மரகதமும் கொஞ்ச நேரம் கண் அசந்து தூங்கி விட்டாள்…. மணி 3ஆனது …
பின்பு எழுந்து சமையல் செய்யஆரம்பித்தாள்…. அந்த சத்தத்தில் நிர்மலா எழுந்து வந்து அம்மாவுக்கு காய்கள் வெட்டி கொடுத்தாள். சீக்கிரமாக சமையல் வேலை முடிந்தது….
நிர்மலாவை கோவிலுக்குக் கிளம்ப சொன்னாள்….. அவளும் போய் கிளம்பினாள். குணாவும் வீட்டிற்கு வந்தான்… அவனையும் கிளம்ப சொன்னாள்….. எல்லோரும் கோவிலுக்குச் சென்றனர்…. அங்கே கூட்டம் அதிகம். சூரசம்ஹாரம் நடந்தது….. அதைப் பார்த்து விட்டு கூட்டத்தில் நிற்க கூட முடியல இருவரின் கையை நன்றாக பிடித்து கொண்டாள்….. எப்படியோ சாமியைப் பார்த்தாச்சு!… வாங்க வீட்டிற்கு போவோம்….. என்று கூறினாள் மரகதம்.. போகிற வழியில் அம்மா எனக்குபானிபூரி வேணும்மா…..
சரிம்மா… வாங்குவோம்…. என்று கூறி இருவருக்கும் வாங்கி கொடுத்தாள் …..
பார்சலில் வாங்கி விட்டு.,பழங்கள் வாங்கிச் சென்றனர்…. வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு சாமி கும்பிட்டு விரதத்தை முடித்தாள்மரகதம். பிறகு ஓய்வு நிலையில் உட்கார்ந்து இருந்தாள்.. …. அவங்க அப்பாவும் வந்து விட்டார்கள்… இருவரும் அப்பாவுக்கு பானிபூரி கொடுத்தனர்…. அவங்க அப்பா நீங்க, சாப்பிடுங்க என்று கூறினார்…… சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கரண்ட் போயிடுச்சு…. பிறகு வெளியில் வந்து உட்கார்ந்தனர்… அப்போது நிர்மலா அவங்க அம்மாகிட்ட நாங்க சின்ன பிள்ளையாக இருக்கும் போது நீங்கள் தாலாட்டு பாடி தூங்க வைத்தீர்களா!…. மா.. என்று இருவரும் கேட்டனர்… உடனே வேலாயுதம் ஏய் !….நீங்க அம்மா தாலாட்டு பாடினால் தான் நீங்கள் தூங்குவீர்கள்….. ஓ….. அப்படியா! அப்போம் இப்போது பாடுங்கள் எனக்கு தூக்கம் வருகிறதா என்று பார்ப்போம்…. என்றாள் நிர்மலா.
மரகதம் பாடத் தொடங்கினாள்,
அவர்கள் இருவரும் அம்மா மடியில் படுத்தனர்…….
….. “கண்ணே கண்ணுரங்கு…….
கண்மணியே கண்ணுரங்கு
ஆரோ ஆரிரரோ ஆரோ ஆரிரரோ!….
செல்லம் நீ உறங்கு…!
செல்லக்குட்டி நீ உறங்கு….!
ஆரோ ஆரிரரோ ஆரோ ஆரிரரோ ……!
பூவே நீ உறங்கு……!
என் பூ மகளே நீ உறங்கு….. !
கண்ணனே நீ உறங்கு. ……!
என் பூ மகனே நீ உறங்கு….!
தன்னானே தானனே தானனே தானனே…….’
இந்த பாடலைக் கேட்டு இருவரும் தூங்கி விட்டனர்…….. கரண்டும் வந்துவிட்டது…… இருவரையும் எழுப்பி உள்ளே போய் படுக்க வைத்தனர் .
காலையில் சீக்கிரமாக எழுந்து, படிக்கத் தொடங்கினாள்…. அதை பார்த்த வேலாயுதம் என்னம்மா!…. விடிந்ததும் படிக்க
வேண்டியதுதானே!…. இல்லப்பா இப்போ படிச்சா நல்லா மனசில் பதியும் அதான் படிக்கிறேன்.. ..ம்ம்ம்…. சரி நீ படி…
வேலாயுதம் தன் மகள் படிப்பதைப் பார்த்து அவளுக்கு காபி போட்டு கொடுத்தார்…. நிர்மலா நீங்கள் ஏம்ப்பா காபி போடுறீங்க! நீங்க போய் தூங்குங்க,,,,,, சரிம்மா அதனால ஒன்றும் இல்ல நீ குடித்து விட்டு படி……. என்று கூறினார் …. …..
**************************************************