Loading

ஆட்சியர் கனவு 47 💞

இன்றைய நாள் அழகான விடியலாக அமைந்தது. தன்னவன் உடன் உறங்கியதால் திவிக்கும் தன்னவளின் ஸ்பரிசம் இருந்ததால் ஆதிக்கும் அன்றைய இரவு சுகமான நித்திரையாக அமைந்தது என்பதில் ஆச்சர்யம் இல்லை.

திவி கண் விழித்ததும் கண்டது ஆதியை தான். மூன்று வருடங்கள் கழித்து அமைந்த இத்தருணத்தை அவள் ரசித்து கொண்டு இருக்க, எங்கே கண் சிமிட்டினால் கணவாகிடுமோ என்ற எண்ணமே அவளுள்.

ஆதி அவள் பார்க்கிறாள் என்பதை அறிந்து அவளை இன்னும் தன்னுள் புதைத்து கொள்ள, அப்போது தான் கடிகாரத்தை பார்த்தவள் அடித்து பிடித்து எழுந்தாள்.

ஆதி அவளை கேள்வியாய் பார்க்க, “டைம் ஆச்சு ஆதி. எழில் எந்திரிச்சி இருப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல வருவா பாரு” என்று சொல்லி முடிக்கையில்,  கண்ணை கசக்கி கொண்டே ஆரா தன் அன்னையை தேடி அறைக்குள் வந்தாள்.

ஆரா “மா…” என்று திவியின் காலை கட்டிக்கொள்ள,

கட்டிலில் இருந்து ஆதி அப்படியே ஆராவை தூக்கி தன் மேல் போட்டு கொண்டான்.

ஆரா “பா..” என்று அவள் விட்ட உறக்கத்தை தொடர, அந்த அழைப்பு அவனை உயிர் வரை தீண்டியது.

அவளை மெல்ல தட்டிக் கொடுத்தவன், “யது.. நாம ஊருக்கு போறோம்”

யது அவனை கேள்வியாய் நோக்க, “இன்னும் ரெண்டு நாள்ல. ரெடி யா இரு..” என்றவனும் எழில் உடன் தன் நித்திரையை தொடர்ந்தான்.

யது தயாராகி வெளியே வர, மொழியன் “சித்தி.. குட் மார்னிங்” என்று அவள் அருகில் வந்தான்.

திவி “மார்னிங் டா செல்லம். எங்க உன் அம்மா.?”

அவன் சமையல் அறையை நோக்க, உள்ளிருந்து அனைவருக்கும் குழம்பியுடன் வந்தாள் ரவீணா.

ரவீ “மீனா, இன்னைக்கு யாரும் வேலைக்கு போக வேண்டாம் ன்னு சொல்லிடு. அப்ரோம் லக்கேஜ்லாம் பேக் பண்ணிட சொல்லிடு மீனா” என்று மீனாவிற்கு கட்டளையை பிறப்பிக்க, அவளும் சரி என்றாள்.

ஏனோ இதை திவியால் பொறுக்க இயலவில்லை.

திவி “மீனா, ஒன்னும் இங்க வேலைக்காரி இல்ல. இது அவளோட வீடு. நாங்க தான் இங்க இருக்கோம். அவளுக்கு யாரும் வேலை வைக்க கூடாது” என்றவள் மீனாவிடம் “யாரு என்ன சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி மண்டைய மட்டும் ஆட்டு சரியா. சொல்றவங்க சொல்ல வரத காதுல கூட வாங்காத” என்று எரிந்து விழ, பொங்கிய கண்ணீரை அடக்கி விட்டு, சமையல் செய்ய உள்ளே சென்றாள். மற்றவர்களும் திவியிடம் பேச பலவாறு முயற்சி செய்து கொண்டு இருக்க, ஆதி, மொழியினை தவிர அவளும் மற்ற யாரிடமும் பேசவில்லை.

அனைவரும் உண்டு விட்டு ஒன்றாய் அமரும் வேளையில் கூட, திவி குழந்தைகளோடே தன் நேரத்தை செலவழித்தாள்.

ஒரு விதத்தில் ஆதிக்கும் கவலையாகவே இருந்தது மற்றவர்களை இவள் ஒதுக்கி வைத்தது. இருந்தும் அவள் இடத்தில் நின்று பார்த்தால் அவளின் வலி எவ்வளவு பெரியது என்றே அவனுக்கு உரைக்க, ஏதும் பேசாமல் இருந்தான்.

மீனா வந்து இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு சென்று விட, பாவம் இவள் தான் அறைக்குள் செல்லவும் முடியாமல் ஹாலில் அமரவும் முடியாமல் இருந்தாள்.
ஒரு கட்டத்தில் தேவ் திவியின் மடியில் புதைந்து அழ தொடங்கி விட்டான்.

தேவ் “சாரி அண்ணி. நான் அப்டி பேசி இருக்க கூடாது. சந்தனா சொல்ல சொல்ல எனக்கு கோபம் வந்தது. ஆனா நீங்க பாரதி விஷயத்தில அப்படி செஞ்சிட்டிங்கன்னு கோவம், வலி அதான் அண்ணி. சாரி அண்ணி. ப்ளீஸ் அண்ணி பேசுங்க அண்ணி. நீங்க எனக்கு வேணும் அண்ணி.. ப்ளீஸ் அண்ணி.. ” என்று கதற,

பவி “சாரி அக்கா.. நான் அன்னைக்கு பேசி இருக்கனும். எங்க ரெண்டு பேருக்கும் நீங்க தான அக்கா எல்லாம். அன்னைக்கு அதிர்ச்சி ல இருந்தே எங்களால வெளி வர முடியல. யது அக்காவையும் உங்களையும் நாங்க பிரிச்சு பாத்தது இல்ல கா.. சாரி கா.. பேசாம இருக்காதீங்க கா.. எனக்கு என் அக்கா வேனும். திவ்யா அக்கா வேணும் கா.” என்று இவளும் ஒரு புறம் அழுது கரைந்தாள்.

சக்தி “நானும் ரவீணாவும் அந்த இடத்துல இல்ல டா. இருந்து இருந்தா உன்னை போக விட்டு இருக்கவே மாட்டோம் டா” என்றவன் சொல்லில் என்னை நம்பேன் என்ற வலியே மேலோங்கி இருந்தது.

ரவீ “நான் சாரி லாம் கேட்க மாட்டேன். எப்படி நீ போலாம்.? அவலாம் ஒரு ஆளு. அவ சொன்னான்னா நீ போயிடுவ அப்படி தானே.? நாங்கலாம் உன் கண்ணுக்கு தெரியல.. உன்னை நம்பி தானே நாங்க கல்யாணம் செஞ்சோம். அப்ரோம் இப்படி தனியா அம்போன்னு விட்டுட்டு போய்ட்டல நீ?” என்று ஆதங்கப்பட்டாள்.

திவி ஏதும் பேசாமல் அமர்ந்து இருக்க,
பாரதி “இப்போ என்ன நாங்க இங்க இருந்து போனும் அதானே.? சரி கா. உங்களுக்கு இன்னும் கஷ்டம் தர நாங்க விரும்பல. போறோம். ஆனா நீங்க கண்டிப்பா அங்க வந்து ஆகணும். நிறயை விஷயம் நீங்க தான் கா சரி பண்ணனும். இல்லன்னா, ஆதி மாமா இவ்ளோ நாள் உனக்கு காத்திருந்ததுல அர்த்தம் இல்லாம போயிடும்” என்று கூறியவள் அங்கிருந்து செல்ல முற்பட, திவி அவளின் கையை பிடிக்க, பாரதி அவளை அணைத்து கொண்டாள்.

“சாரி கா.. உங்க கூட நான் இருந்து இருக்கணும் கா.” என்று தேம்ப,

திவி “சரி விடு” என்றபடி அவளை சமாதானம் செய்தாள்.

அங்கு ஒரு அப்பாவி ஜீவன் தான் இன்னமும் நின்று கொண்டு இருக்க, “என்ன டா அண்ணா நீ வந்து சமாதானம் செய்ய மாட்டியா?” என்றது தான் தாமதம் தான் இருந்த இடத்திலே அமர்ந்து அழ தொடங்கி விட்டான் விஷ்ணு.

பின் அனைவரும் சகஜ நிலைக்கு வர, ரவீ கூறிய விஷயம் திவிக்கு கண்கள் விரிய ஆச்சர்யத்தை கொடுத்தது.

கனவு தொடரும் 🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்