Loading

ஆட்சியர் கனவு 45 💞

விடுதியில் மயங்கிய திவியை மருத்துவர் பரிசோதிக்க, “ஒன்னும் பயப்பட தேவை இல்லை. குட் நியூஸ் தான். ஷீ இஸ் பிரக்னன்ட்..”

ரேஷ் “வாவ்…! தாங்க்யூ டாக்டர். தாங்க் யூ சோ மச்” மகிழ்ச்சியில் துள்ள, அன்வரும் புன்னகையை ஏந்தினான். எதேர்ச்சையாக ஹரி அங்கு வந்ததால், அவனும் அங்கு  திவியோடு இருந்தான். ஹரிக்கும் மகிழ்ச்சி தான்.

திடீரென காவல் துறை அதிகாரிகளும், பத்திரிக்கை நிரூபர்களும் திவி, ரவீ தங்கியிருந்த அறையில் குழும, ஆசிரியரும் மற்ற மாணவர்களும் வந்தனர்.

திவியும் எழுந்த உடனே, சத்தம் வந்த திசை நோக்கி செல்ல, அங்கு கண்ட காட்சியினில் ஸ்தம்பித்து தான் போயினர்.

சந்தனா கூறியதை கேட்டு அன்றிரவு பலருக்கு தூக்கம் தூரமானது. பகலவன் தன் வருகையை உணர்த்த, அனைவரும் அதே நிலையில் தான் இருந்தனர். ஆதியோ எதுவும் பேசாது திவியின் வருகைக்கே காத்து இருந்தான்.

தன்னவள் பற்றி அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் தானும் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவனை மேலும் வருத்த, மனதோ ஏதோ தவறு நடக்க போகிறது என்ற நிலையில் தான் தவித்து கொண்டு இருந்தது.

வேண்டா வெறுப்பாக நிச்சயத்திற்கு வந்தனர் திவியின் பெற்றோர்களும் பவியும் பாரதியும்.

அனைவரும் கூடத்திலே இருக்க,
பாரதி “என்ன ஆச்சு.? ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க.?.. அத்தை.? என்ன ஆச்சு.?”

தெய்வானை பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருக்க, ஆதியிடம் சென்றவள், “மாமா.. இப்போ என்ன ஆச்சு..? ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க.? அக்கா போன் பண்ணாங்களா.? உங்களுக்கு ஒரு குட் நியூசோடா நான் வந்து இருக்கேன்” என்றாள், துள்ளி குதித்தபடி..

பெருமாள் “இனிமே யாரும் அவள பத்தி பேசவே கூடாது. இந்த நிமிஷம்ல இருந்து அவளுக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தமே இல்ல..!” என்று கத்தினார்.

ராஜா “என்ன சொல்றீங்க.? அப்டி என்ன நடந்துச்சு? மாப்பிள்ளை?”

பெருமாள் “அவன் கிட்ட என்ன பேச்சு.. நடத்தை கெட்டவள எல்லாரும் தலைல தூக்கி வச்சு ஆடுனோம் பாத்தீங்களா.. அதுக்கு சரியான பதில் சொல்லிட்டா”

ரோஜா “என்ன..? வார்த்தைய பாத்து பேசுங்க.. என் பொண்ண பத்தி என்ன பேச்சு பேசுறீங்க.? அதுவும் அவ எங்க வளர்ப்பு.” என்று பதிலுக்கு கத்தினார்.

பெருமாள் “நல்லா வளத்து வெச்சி இருக்கீங்க.. உன் பொண்ணா.? இல்ல.. திவி உங்க பொண்ணே கிடையாது.” என்றதில், அனைவருமே அதிர்ந்து தான் போயினர். பவியும் பாரதியும் என்ன சொல்வதென்று தெரியாமல் தான் நின்று கொண்டு இருந்தனர்.

தெய்வானையோ அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. ரோஜாவும் ராஜாவும் அமைதியாக இருக்க, தேவ்வும் அதிர்ந்து தான் போனான். சிவஞானம் அங்கு இல்லாததால் அவருக்கு விஷயம் தெரியவில்லை.

ராஜரத்தினம், சந்தனா அமைதியாக இருக்க, சுப்ரியா கூட அதிர்ந்து தான் போனாள்.

ஆதி “என்.. என்ன சொல்றீங்க.?”

பெருமாள் “ஆமா ஆதி.. நான் சொல்றது உண்மை தான். இந்த விஷயம் கூட எனக்கு இப்போ தான் தெரியும்.. யது தான் இவங்க பொண்ணு. திவி இல்லை”என்று கூறிக்கொண்டு இருக்கையில், வாயிலில் மகிழுந்து வந்தது. அனைவர் கவனமும் அங்கு திரும்ப, புன்னகை ததும்பும் முகத்தோடு, ஹரி, அன்வர், ரேஷ்மா மற்றும் திவி நால்வரும் இறங்கினர்.

திவிக்கு முகம் கொள்ளா புன்னகை. தான் தாய்மை அடைந்த பூரிப்பு. தன்னவனிடம் கூற வேண்டும் என்ற ஆவலில் உள்ளே நுழைந்தாள், அவள் அறியா பல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது என்பதை அறியாமல்.

உள்ளே நுழைந்தவள் அனைவரின் இறுக்கமான முகத்தைக் கண்டு, ஏதோ சரி இல்லை என்று வினவ, அனைவரும் அவளைத் தான் பார்த்து கொண்டு இருந்தனர்.

ஹரி வேறு நேரங்காலம் அறியாமல், “திவி, லக்கேஜ்ஜ உள்ள வைக்கவா.. இல்ல இங்கேயே வைக்கவா.?” என்று நுழைய,

சந்தனா “ஹோ.. இவனையும் நீ வளைச்சு போடுட்டியா.?” என்றாள் குரலில் ஏளனத்தை ஏற்றி.

திவி அவளை அனல் கக்கும் பார்வை பார்க்க, அதனை பொருட்படுத்தாத, சந்தனா “மாமா.. இன்னும் ஏன் மறைக்குறீங்க சொல்லிடுங்க மாமா..”

திவியின் பார்வை இப்போது பெருமாளை நோக்க, அவள் பார்வையை காணாது தவிர்த்தவர், “ராஜாக்கும் ரோஜாக்கும் பிறந்தது யது தான். இந்த திவியைத் தான் ராஜா சர்ச்ல இருந்து தூக்கிட்டு வந்தாங்க. அந்த விஷயம் இவளுக்கு கூட தெரியும். என்ன திவி பேசாம இருக்க, பதில் சொல்லு.?”

சந்தனா “எப்படி பேசுவா? அதான் உண்மைலாம் வெளில வந்துடுச்சே. அனாதைன்னு தெரிஞ்சிகிட்டனால தான் எல்லாரையும் வளைச்சு போட பிளான் போட்டு இருக்கா போல.”

திவிக்கு தான் என்ன கூறுவதென்றே தெரியவில்லை. ஆம் தான். தனக்கே இந்த விஷயம் நேற்று தானே தெரிந்தது. அதையும் கூறத்தானே வந்தேன். ஆனால் என் நிலை.? என்று யோசிக்க யோசிக்க, தலைவேறு வலித்தது.

ஆதி “அவங்க சொல்றது உண்மையா.?”

திவி மௌனத்தை பதிலாக தர, ஆதி “உன்கிட்ட தான் கேக்குறேன்.. உண்மையா.?”

தேவ் “இன்னும் என்ன என்ன மறச்சு வச்சு எங்களை ஏமாத்த போறீங்க.?”

திவி “தேவ்.. நான் என்ன மறச்சேன்.?”

தேவ் “போதும்.. நீங்க நடிச்சது. நான் சொன்னேன்ல.. ஆனா, நீங்க உங்க தங்கச்சிய அந்த பொறுக்கிக்கு கல்யாணம் செய்து கொடுக்க முடிவு எடுத்து இருக்கீங்க.? அப்டி தானே.? பின்ன அவளும் இங்க வந்தா சொத்து முழுக்க உங்களுக்கு கிடைக்காது. எப்படியோ சொத்து கிடைச்சா போதும். யார் எப்படி போனா என்ன.? அதனால தான என்னையும் அவளையும் கூட கடத்துனீங்க.?” இவனின் கூற்றில் பாரதி தான் அதிர்ந்து போனாள். இலைமறைகாயாய் அவன் கூறிய விஷயம் பாரதிக்கு புரிந்து தான் போனது.

திவி “தேவ்.. எனக்கு புரியல..”

கோகுல் “ஏ.. போதும் நிறுத்து. என்ன நடிப்பு.? நான் எங்க அண்ணன் கூட சேர கூடாதுன்னு உண்மைய சொல்ல கூட யோசிச்ச. உண்மைய சொன்ன அப்ரோம் சொத்துல பங்கு வந்துடும்ன்னு இப்போ என் அண்ணன் கூடவே ரூம் வரை போய் இருக்க. என்ன பண்ணி சக்திய மடக்குன?” என்றான் பேச்சில் கவனம் இல்லாமல்.

திவி “ஏ..என்ன பேச்சு பேசுற.? நீங்க எது சொன்னாலும் நான் கேட்டு இருப்பேனா.? ஆதி.. நீயுமா இதை நம்புற.?”

ஆதி “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல. அப்பா சொன்னது உண்மையா.?”

திவிக்கு தன்னவன் தன்னை நம்பவில்லை என்றே நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் இறங்க, தன் அத்தையை பார்த்தாள். தெய்வானை தன்னால் ஏதும் முடியாது என்பதை கண்களால் உணர்த்த, பெண்ணவள் உடைந்து போனாள்.

ஆதி இன்னும் அழுத்தமாய் திவியை பார்க்க, திவி “ஆம்” என்று தலையை மட்டும் அசைத்தாள்.

ஆதி குரலில் வலியினை தேக்கி, “இன்னும் என்கிட்ட என்ன என்ன மறைச்சு வச்சி இருக்க.?” என்ற ஒற்றை கேள்வியில் திவி மனதளவில் சிதைந்து போனாள். தனக்கு இனி யாரும் இல்லை என்ற எண்ணமே கொல்ல, ஆதியின் மேலே மயங்கி சரிந்தாள்.

இதுவரை நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த, அன்வரும் ரேஷ்மாவும் திவியை நோக்கி ஓட, ஆதி அவளை மடியில் தாங்கினான்.

“யது.. யது.. எந்திரி டி.. யது…”

ரேஷ்மா “அன்வர் தண்ணீ.. “

அன்வர் தண்ணீர் கொண்டு வர, திவியின் முகத்தில் நீரை தெளித்து கொண்டே,

ரேஷ்மா “திவி பிரக்னன்ட்டா இருக்கா. அதை சொல்ல தான் அவசரம் அவசரமா கிளம்பி வந்தா” என்றாள் அடக்கப்பட்ட கோவத்துடன்.

அனைவருக்கும் இது மகிழ்ச்சி கலந்த பேரதிர்ச்சி தான். ஆனால் அதை அனுபவிக்கும் நிலையில் தான் யாரும் இல்லை. சந்தனாவோ எல்லையில்லா கடுங்கோபத்தில் இருந்தாள். கோகுலும் அவளோடு இணைந்து திவியை சுட்டெரிக்க,

திவியோ ஆதியை வலியோடு பார்த்தாள்.

சந்தனா “ஓ.. இவ்ளோ தூரம் ஆகிடுச்சு.. இது யாரோட குழந்தை.?”
என்ற வினாவில், திவிக்கு அப்போது தான் நிலைமை கைமீறி சென்றுள்ளது என்பதே தெரியவந்தது.

தெய்வானை இக்கேள்வியில் மீண்டும் சந்தனாவை அடிக்க வர, “முதல அது யாரோட குழந்தைன்னு கேளுங்க அத்தை. ஆதியை கல்யாணம் செய்துகிட்டா, தேவ் கூட அன்னைக்கு ரூம்ல இருந்து வெளியே வரா. இன்னைக்கு சென்னைல சக்தி கூட, இப்போ கூட இந்த ஹரிஷ் தாங்குறான். எனக்கு என்னமோ சக்தி மேல தான் டவுட்டா இருக்கு.. இது யாரோட குழந்தை திவி.?”

திவி தான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். தன்னவன் உடனிருந்தும் ஒரு பெண் கேட்க கூடாத கேள்வியை அதுவும் அவன் கணவன் முன், திவி பதில் கூறாமல் ஸ்தம்பித்து நின்றாள்.

இவளுக்கு துணையாக கூட பேச அங்கு யாரும் இல்லை.

ஆதியும் மௌனம் காக்க, திவிக்கோ நடுக்காட்டில் தனித்து விடப்பட்ட உணர்வு.

சந்தனா, திவியை ஏளனப்பார்வை பார்க்க, சுப்ரியா கூட தன் அக்காவின் எண்ணத்தை கண்டு எரிச்சலுற்றாள். தானும் இதற்கு உடந்தை என்பதை அவளால் சகித்து கொள்ள இயலவில்லை.

பெருமாள் “இனிமே உனக்கு இங்க இடம் இல்லை. நீ போகலாம். “

ஆதியோ ஏதும் பேசாமல் தன் அறை நோக்கி செல்ல, திவி “ஆதி..!” என்றவளது அழைப்பில் ‘நீயாவது என்னை நம்பேன்’ என்ற உணர்வே மேலோங்கி இருந்தது.

ஆதி அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டு, விறுவிறுவென்று தன் அறைக்கு சென்றான்.

ஆதியின் பின்னே திவி செல்ல, அவளை தடுத்த சந்தனா “எங்க போற.? உன் கேரக்டர் பத்தி எல்லார்க்கும் தெரிஞ்சிடுச்சு. அனாதை நீ, என்னை என்ன பேச்சு பேசுன.? உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா யாருன்னு சொன்னா இங்க இரு.. இல்லைன்னா வெளிய போ.” என்று தன் சவாலை சாதித்த மகிழ்ச்சியில் எக்களிக்க,

திவிக்கோ கண்கள் இரண்டும் சிவந்து போய் இருந்தது. தன் பெற்றவர்களை (வளர்த்தவர்களை) காண, அவர்களோ அவளை காணவில்லை.

கடவுளான சீதையையே சந்தேகித்த ஊர் இது. இதில் தன்னை மட்டுமா, தன் கருத்தை மட்டுமா நம்புவார்கள்.? தன்னை கட்டியவனே தான் கூற வருவதை கேட்கவில்லை. சிங்கத்திற்கு நோய் வந்தால் சிறுநரிகள் கூத்தாடுமாம். அதே நிலை தான் இங்கும். தன் நிலையை எடுத்துரைக்க அவசியம் இல்லை. ஆதியே அறிந்து தன்னை தேடி வருவான், என்று வெளியேறினாள்.

‘மீண்டும் வருவேன். இதே வீட்டில் தன்னவனுடன். தன்னை சுற்றி இருக்கும் சூழ்ச்சி வலையை தகர்த்து, என் கனவை அடைந்து தன்னவனோடு, மீண்டும் வருவேன்’ என்று மனதில் சூல் உரைத்து அங்கிருந்து வெளியேறினாள் அன்வர் ரேஷ்மாவுடன்.

ஹரியும் அவர்களோடு சென்று விட, அவர்களின் மகிழுந்து வெளியேறிய தருணம், மற்றொரு மகிழுந்து உள்ளே வந்தது.

தன்னறையிலிருந்து வெளியே வந்த ஆதி, திவி அங்கு இல்லாததை கண்டு கலக்கமுற்றான். அவன் வந்த நிலையை கண்டு, அனைவரும் அவனை கேள்வியுடன் நோக்கினர்.

பெருமாள் “எங்க ஆதி போற.? அதுவும் பெட்டியோட.?”

ஆதி “அம்மா.. என் பொண்டாட்டிக்கு மதிப்பில்லாத இடத்துல நான் எதுக்கு இருக்கணும். நான் அவளை கூட்டிட்டு போறேன்.” என்றான் தெய்வானையை நோக்கியபடி.

தெய்வானை உள்ளம் குளிர்ந்து போனார் “உனக்கு அவ மேல கோவம் இல்லையா ஆதி.? நீ அவளை சந்தேகப்படுறேன்ன்னு நினச்சேன் டா”

ஆதி “என்னம்மா சொல்றீங்க? அவளை நான் எப்படி மா சந்தேகப்படுவேன். அதுவும் இந்த நிலையில. அவளை சந்தேகப்படுறது எங்க காதலை சந்தேகப்படுறதுக்கு சமம். அவன் ஏன் என்கிட்ட சொல்லன்னு தான் கோவம். அவ என் யது மா..” என்றான் குரல் கமற,

பெருமாள் “அந்த அனாதைய இன்னும் நம்புரியா ஆதி.?” என்றார் பல்லைக் கடித்தபடி.

ஆதி அவர் முன் விரலை நீட்டி, “அனாதயா.? நான் உயிரோட இருக்க வரை என் யதுக்கு நான் இருக்கேன்.. இவ்ளோ நேரம் நீங்க பேசுனது கேட்டது என் யது மேல இருந்த கோவத்துல இல்ல, ஒரு உயிரை காப்பாத்த மட்டும் தான். “

தெய்வானை “என்ன ஆதி சொல்ற.?”

அப்போது மகிழுந்தில் இருந்து, சக்தியும் ரவீணாவும் கணவன் மனைவியாக உள்ளே நுழைந்தனர்…

கனவு தொடரும்🌺🌺🌺

கதையை பத்தி கொஞ்சம் சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்… நாளைக்கு அடுத்த யூ.டி வரும்…

என்னை யாரும் திட்ட கூடாது. மீ எஸ்கேப்.. டாட்டா..🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்