Loading

ஆட்சியர் கனவு 43💞

மேகமோ செம்மை பூசிட காத்து கிடக்க, பனிப்பகையானவன் இன்னும் வராமலிருந்தான். அலவன் மெல்ல மெல்ல தன்னை மறைத்துக் கொண்டிருந்தான், பகலவனிற்கு வழியை விட்டு.

விடியற்காலை மணி 4. ஆதி போர்வையை தலையில் முக்காடு போட்டுக் கொண்டு திவியின் செய்கையை வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்தான். திவியோ அவனை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்து கொண்டே நான்கு நாள் சென்னை பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

ஆதி “யது..”

திவி “ம்ம்…”

ஆதி ” யது…..”

திவி “ம்ம்ம்.. சொல்லு ஆதி.”

ஆதி “ப்ச்.. குட்டச்சி…”

திவி “சொல்லு டா.. காது கேட்குது. “

ஆதி “போகனுமா.?” என்றான் பாவமாக..

திவி “கண்டிப்பா டா.. உன்கிட்ட ஒரு வாரமா சொல்லிட்டு தான இருந்தேன். நாலே நாள் தான் எக்ஸ்டன்ஷன். முடிஞ்சிடும் ப்ளீஸ்.” என்று கெஞ்ச,

ஆதி “நாலே நாள் இல்ல யது.. நாலு நாள் டி.. நானும் கூட வரவா.?”

திவி இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து கொண்டே “ப்ச் ஆதி.. அப்ரோம் பிசினஸ் யார் பாக்குறது..?”

ஆதி “நான் அங்க வந்து ஹோட்டல்ல ரூம் எடுத்து ஸ்டே பண்ணிக்கிறேன். அங்க இருந்து நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் டி.. என் ட்ரஸ்ஸும் பேக் பண்ணு.. “

திவி “அட லூசு.. நீ இங்கேயே இரு.. ” எனும் போது சரியாக திவியின் அலைபேசி அலறியது..

ஆதி அதை எடுத்து திவியிடம் கொடுக்க “நீயே பேசு ஆதி.. இல்லன்னா ஸ்பீக்கர்ல போடு.  ஆமா யாரு போன்ல” எனும்போதே ஆதி அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டான்.

“என்ன மிசஸ் ஆதித்யா, எக்ஸ்டென்ஷன்க்கு பக்காவா கிளம்பிட்டீங்க போல..? எப்டி உங்க ஹஸ்பெண்ட்ட தனியா விட்டு போறீங்க.? பாவம்ல.?” என்ற நக்கல் குரலில் யாரென்று அறிந்த திவி, “ஹான்.. ஆமா மிஸ் சந்தனா… உங்களை மாதிரி பல கொசுக்கள் தொல்லை இங்க இருக்கு.. சோ அவரே அதை பாத்துகிறேன்னு சொன்னாரு.. ஆனா கொசுவ அடிக்க என் மாமா மெனக்கிடனுமா.. அதான் கொஞ்சம் கொசுக்கு ரெஸ்ட் விட்டுட்டு நானே பாத்துக்கலாம்னு கிளம்பிட்டேன்… ஏன்.. கொசு மருந்து குடிக்க, ச்சீ கொடுக்க போறீங்களா.?” என்றால் அதே நக்கல் தொனியில்.

சந்தனா “போ.. போ.. இந்த நாலு நாள் இனிமே உன் வாழ்க்கைல நீ என்னைக்கும் மறக்க முடியாத நாள் மிசஸ் ஆதித்யா. சவால் நியாபகம் இருக்குல்ல.? இல்ல புருஷனை விட்டு போற வருதத்துல மறந்தாச்சா.?”

திவி ‘அயோ, இவ வேற சொல்லிட்டாளே. இப்போ இவன் கத்துவானே.? இன்னைக்கு உனக்கு அடி நிச்சயம்…’ என்று நினைத்து கொண்டு இருக்க,

ஆதியோ பதில் கூறாமல் இணைப்பை துண்டித்தான்.

திவி “ஹப்பா.. நானே கட் பண்ணனும்னு நினைச்சேன்.  நீயே பண்ணிட்ட.. சரி நான் போய் மாடில இருக்க துணிய எடுத்துட்டு வரேன்” என்று நழுவ போக,

அவளை இழுத்து நிறுத்தி “என்ன சவால்.?” என்று கேட்டான் காரமாக. 

திவி “அதுலாம் ஒன்னும் இல்ல ஆதி.  அவ ஒரு லூசுன்னு தெரியாதா.? அவ சொல்றான்னு நீயும் கேக்குற.?”

ஆதி “அவ ஒன்னும் லூசு இல்ல யது.. ஒழுங்கா சொல்லு உனக்கும் அவளுக்கும் என்ன சவால்.?”

திவி “அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல…”

ஆதி “என் பொறுமையை சோதிக்காத யது..” என்று அவள் கையை அவன் தலையில் வைத்து, இப்போ சொல்லு ஒன்னும் இல்லையா.?” என்று கேட்டிட, அவள் அதிர்ந்துவிட்டாள்.

தலையில் இருந்து கையை எடுக்க போக, இழுத்து நிறுத்தியவன், ‘பதில் சொல்லு’ என்ற அழுத்தப் பார்வை பார்த்தான்.

திவி சிறிது பயத்துடன் அன்று சந்தனாவிற்கும் அவளுக்கும் நடந்ததை கூற, ஆதிக்கோ கட்டுக்கடங்கா கோபம் வந்தது. இதற்கு மேல் என்ன நடந்து இருக்கும் என்பது யாம் அறிந்ததே.  திவி கூறியதை கேட்ட மறு நொடி அவள் கன்னம் தீப்பற்றியது போல் எரிந்தது. ஆதியின் கைத்தடம் அவளின் கன்னத்தில்.

தன் கோபத்தை கட்டுப்படுத்த பின்னந்தலையை அழுந்த கோதியவன், “அவ தான் பைத்தியம் மாதிரி பேசி இருக்கான்னா, உனக்கும் பைத்தியமா யது..? அடுத்தவ புருஷன் மேல கண்ணா இருக்குறா.?  சொன்ன அவ வாயை கிழிக்காம, நீ என்ன பண்ண.? பதில் சொல்லு டி.  அவகிட்ட பேசி இருக்க மாட்டீயே.. அதுனால தான் அன்னைக்கு அப்சட்டா இருந்தீயா.?”  என்று கத்தலில் ஆரம்பித்து இறுகலுடன் முடித்தான்.

ஆனால் திவி தான், தான் சொல்ல வருவதை முழுவதுமாய் கேட்காமல் அடித்து விட்டானே என்று அவனையே வெறித்துக் கொண்டு இருந்தாள்.

ஆதி “பதில் சொல்லுடி.. இப்படியே நிக்காத.. கோவம் தான் வருது.. நீ வீட்டை விட்டு போனா நானும் இங்க இருப்பேன்னு நினைச்சியா.? நான் உன்னை வீட்டை விட்டு போ சொல்லுவேணா.? “என்று கத்த,

திவி “நான் சொல்றதை முழுசா கேளு ஆதி” என்று இவளும் கத்தினாள்.

ஆதி “ஹான்.. சொல்லு.. என்ன சொல்லப்போற.? சொல்லு.. எல்லாத்தையும் சொல்லு.. இன்னொரு கன்னமும் சிவக்க போது பாரு” என்றான்.

திவி சந்தனாவிற்கு பதில் கூறியதை கூற, இம்முறை அதிர்வது ஆடவனின் முறையாயிற்று.

“நான் பேசி இருக்க மாட்டேன்னு நீயா எப்படி நினைக்கலாம்.? நான் ஆதி பொண்டாட்டிடா..” என்றாள், அவன் முகத்தை நிமிர்த்தி.

அதில் சிரித்தவன் “ஹாஹான்.. அப்படியா.. சரி.. சரி.. இப்போ என் பொண்டாட்டி என்ன மன்னிச்சிடுங்க” என்று தோப்புக்கரணம் போட்டான்.

திவி “ஹான்.. போதும்.. போதும்.. மிஸ்டர். ஆதித்யா.. நீயும் கிளம்பு.. வந்து என்னை டிராப் பண்ணு.. டைம் ஆகுது..” என்று கூறினாள், தன்னவனின் பாவனையை உள்ளுற ரசித்து கொண்டே…

ஆதியும் கிளம்பி வர, அனைவரிடமும் கூறிவிட்டு புறப்பட்டனர்.

சக்தி தான் ரவீணாவின் நினைவிலும், சந்தனா செய்த சதியிலும் உழன்று கொண்டு இருந்தான்.

ஆதி திவிக்கு நூற்றியொன்றாவது முறையாக அறிவுரை கூறி, ஆயிராமாவது முறையாக  “யது நீ போணுமா.?” என்று கேட்டான்.

திவி கடுப்பாகிட “இது உனக்கு பனிஷ்மெண்ட்.. என்னை அடிச்சல.. நாலு நாள் தலகாணிய கட்டிட்டு படு.. “

ஆதி “இது ரொம்ப பேட் டி.. என்னை சொல்ற.. நீ மட்டும் எப்டி தூங்குவன்னு பாக்குறேன்.?” என்று இவனும் அவளை வார..

திவி “அதுலாம் நான் தூங்கிடுவேன்.. நீ நைட் கால் பண்ணி பொலம்பாம இருந்தா சரி.. ஹான், நான் சொன்னது  எல்லாம் நியாபகம் இருக்குள்ள.. சரியா சாப்பிடணும்.. சரியா டேப்லட் போடு.. அப்ரோம் நீ பயப்படாத நான் உன்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டேன்.. அண்ட்… ஹான்.. ரொம்ப முக்கியம் சந்தனா மேட்டரை ஹோல்டு ல வை.. நான் வந்ததுக்கு அப்ரோம் பாத்துக்கலாம்” என்றிட, இவன் அவளை இமைக்காமல் பார்த்து, அவளை நெருங்கிட பெண்ணவள் “என்.. என்ன..?” என்றாள் சற்று திணறியபடி..

அவன் மென்னகை புரிந்து அவள் பிறை நெற்றியில் இதழ் பதித்தவன் “நீ ஜாக்கிரதையா இரு… நீ வீட்டுக்கு வரப்போ ஒரு சர்பிரைஸ் இருக்கு..” என்றான்.

திவி “என்னது .?” என்று கண்கள் மின்ன கேட்டிட,

ஆதி “லூசு.. அது சர்பிரைஸ் டி.. நீ ஜாலியா எக்ஸ்டென்ஷன் முடி.. ” என்று கல்லூரியில் இறக்கி விட்டான்.

ரவி “வா திவி.  இன்னும் கொஞ்சம் பேர் வந்த உடனே கிளம்பலாம்.. கேர்ள்ஸ் எல்லாம் வந்துட்டாங்களான்னு மேம் செக் பண்ண சொன்னாங்க…” என்றிட, திவி அந்த வேலையை பார்க்க சென்றாள்.

மகிழுந்தை ஓரமாக நிறுத்தி விட்டு வந்த ஆதி “வந்த உடனே கரடி வேலையா… யதுக்கு வேலை வச்சுட்ட.?”

ரவீ “யாரு நானா..? டியூட்டர் தான் திவிக்கிட்ட சொல்ல சொன்னாங்க…” என்று ஆதியிடம் பதில் கூறினாலும், அவளின் கண்கள் ஒரு நிமிடம் சக்தியைத் தான் தேடியது அந்த மையிருட்டில் கூட…

ஆதி அதை அறிந்தாலும் எதுவும் பேசிடாமல், திவியிடம் கூறியதையே இவளுக்கும் கூறினான். “ரவீணா.. எங்கேயும் தனியா போகாதீங்க.. யது கூடவே இரு.. விஷ்ணு கிட்டயும் சொல்லிட்டேன்.. யதுவ கார்னர் பண்ணி உங்களுக்கும் பிரச்சனை வரலாம். என்கிட்ட எங்க போனாலும் இன்பார்ம் பண்ணிடுங்க..” என்று மேலும் அறிவுரை கூற, ரவீணா தான் டயர்ட் ஆகிவிட்டாள்.

தன் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி ஒரு கும்பிடு வைத்து போதும் என்றாள்.  அதில் சிரித்தவன் “ஆமா என்ன மேட்டர்…? விஷ்ணு சுப்ரியாக்குள்ள…” என்று கேட்டான்.

ரவீ சிரித்து விட்டு “உங்களுக்கு எப்டி..?”

ஆதி “ஆல் டீடைல்ஸ் ஐ நோ..” என்றான்.

ரவீ “ஹான்.. எனக்கு என்னன்னு சரியா தெரியல.  என் கெஸ் விஷ்ணு சுப்ரியாவை ரூட் விடுறான்…”

ஆதி “இது எப்போல இருந்து .?”

ரவீ “தெரியல…” என்றாள் தோலைக்குலுக்கியபடி …

ஆதி “திவிக்கு தெரியுமா.?”

ரவீ “இல்ல… தெரியாது.. எங்க, இங்க வந்தா ஃபுல்லா கிளாஸ் தான் கவனிப்பா.. இல்லன்னா உங்களை பத்தி தான் பேசுவா.  அப்ரோம் கிளாஸ் முடிஞ்சிடும்.  அவ வாட்ஸ் அப் வரது கூட ரேர்.  அண்ணா ஒன் ரெக்வெஸ்ட்…. “

ஆதி “என்ன டா.?”

ரவீ “அடுத்து நாங்க தேர்ட் இயர்.. அவ ஆஃபிஸ் வர வேண்டாமே.. எப்படியும் அவ இதை உங்க கிட்ட சொல்ல மாட்டா… அவ ஆம்பிசன்க்கு ரெடி ஆகட்டுமே… சொல்லணும்னு தோணுச்சு… சொன்னேன்.. தப்பா இருந்தா சாரி.. “

ஆதி சிரித்து விட்டு “அவள லவ் பண்ணிட்டு இது கூட நான் புரிஞ்சிக்கலன்னா எப்டி.. நீ சொல்லவே வேண்டாம்.  நானும் அதே ஐடியால தான் இருந்தேன்.. “

ரவீ புன்னகையுடன் தலையாட்ட, ஆதி திவி வருவதை பார்த்து “நீ அவகிட்ட ஏதும் சொல்லாத.. நான் கிளம்புறேன்.. ஹேப்பி ஜேர்னி..” என்றான்.

திவி “ரவீ எல்லாரும் வந்துட்டாங்க.. போ..” என்றிட..

ரவீ “ஏன் எங்களுக்கு நடுவுல நிக்குற கிளம்புன்னு தெளிவா சொல்லு திவி.. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. ” என்று சிரிக்க,

திவி “தெரியுதுல.. கிளம்புடி..” என்று விரட்டாத குறையாக விரட்டி அடித்தாள்.

ஆதி “ஓகே.. யது.. பாத்து போ… நான் கிளம்புறேன்..” என்று குறும்பாக அவளை ஆராய்ந்த படி கூற,

திவி “ம்ம்ம்…” என்றாள் அவனை பாராது..

அவன் குறுநகையோடு “ரொம்ப நேரம் அரட்டை அடிக்கக் கூடாது, சரியா.. கிளம்புறேன்..”

திவி “ம்ம்ம்..”

ஆதி “பஸ் ஏறுன உடனே தூங்கு.. நான் கிளம்புறேன்..”

திவி “ம்ம்ம்..” என்றாள் சுருதியே இல்லாமல்…

ஆதி “யது… “

திவி “ம்ம்ம்..”

ஆதி “ப்ச்… யது…”

திவி “ம்ம்ம்ம்…”

ஆதி அவள் பாவனையில் சிரித்து “கிளம்புறேன் டி” என்க,

திவி “நானும் வரேன்..” என்றாள்.

ஆதி “ஹாஹா.. எங்க..?” என்று சிரிக்க

திவி “வீட்டுக்கு…”

ஆதி “உதை வாங்காத.. நான் ஒரு வாரமா கெஞ்சினேன்.. அப்போலாம் போறேன்னு சொல்லிட்டு, இப்போ என்ன..?” என்று சீரியஸ்ஸாக பேச,

திவி தான் “போணுமா..?” என்றால் உதட்டை பித்துக்கியவாறு…

ஆதி “போறீயா..?”

திவி “இல்ல போல.. நீ தான் போ வேணா சொன்னல”

ஆதி “ஏய்.. லூசு குட்டச்சி.. நான் இப்போ சொல்றேன் கிளம்பு.” என்றிட,

திவி உம் என்று முகத்தை வைத்து இருந்தாள்.

ஆதி “கிளம்புடி.. நாலு நாள் கழிச்சு மீட் பண்ணலாம்.. போ ” என்றான்.

திவி “ம்ம் ” என்று திரும்பி நடக்க, பாதி தூரம் சென்றவளை, ஆதி சிறிது சத்தமாகவே ” ஏய்.. குட்டச்சி..” என்று அழைக்க,

அவள் திரும்பி அவனை நோக்கினாள். “வா” என்று தன் கைகளை அகல விரித்து அழைக்க, விரைந்து வந்தவள் அவன் நெஞ்சுக்குள் தஞ்சம் கொண்டு உகுநீர் உதிர்த்தாள்.

“ஏய்.. நாலு நாள் தான டி.. போய்ட்டு வா.. சரியா.. அப்ரோம் நீயே கேட்டாலும் உன்னை எங்கயும் விட மாட்டேன்.. லவ் யூ..” என்று மீண்டும் இதழ் ஒற்றினான் நெற்றியில்..

ஆதி “என் மேல கோவமா டி.?”

திவி அவனை குழப்பமாக பார்க்க, அவளின் கன்னத்தை வருடி “எனக்கு ரொம்ப கோவம் வருதுல.. உன்ன கொடுமைபடுத்துறேனா டி.. ” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்…

திவி “ம்ம்.. ரொம்ப கோவம் தான்… சரி பண்ணிடலாம்… ” என்றாள் கண்கள் சிமிட்டிய படி…

அதில் விழுந்தவன் “என்ன பண்ண போற..?” என்று குறும்பாக கேட்டான்.

திவி “பண்ணும்போது பாரு செல்லம்.. இப்போ நான் வரேன்.. லவ் யூ” என்றாள்..

ஆதி “சாரி டி…”

திவி “அட லூசு புருசா…  நீ முட்டாள் தான் டா… புரிஞ்சிக்கமா அடிச்சிட்டு இப்போ சாரி கேக்குற… அப்டி உன்ன நான் விட்டு கொடுத்துடுவேணா.? நீயே போ சொன்னாலும் உன்னை விட்டு போ மாட்டேன் டா. பிகாஸ் ஐம் யூவர்ஸ்… ” என்று கூறினாள் காதலாக…

ஆதி அதில் புன்னகைத்து அவளுக்கு விடை கொடுத்து சென்றான்.

விடியற்காலை நேரம் ஆதலால் இவர்களின் மோன நிலை யாரும் அறியவில்லை, இவர்களை பின் தொடர்ந்த கோகுலை தவிர…

திவி சென்று பேருந்தில் ஏறினாள். ஆதி கிளம்பி விட, சந்தனா சுப்ரியாவை இறக்கி விட்டு சென்றாள், தன் திட்டத்தை கூறி…

இவளின் திட்டத்தில் சுப்ரியா தான் அதிர்ந்து இருந்தாள். செய்ய மாட்டேன் என்ற நிலையில் இவளும் இல்லை.. செய்யவும் மனம் ஒப்பவில்லை.. பயணம் தொடங்கியது.. பிரிவின் தொடக்கமும் ஆரம்பித்தது…

சென்னைக்கு அனைவரும் பயணமாகினர். திவி ஆதியை நினைத்து பயணமாக, சுப்ரியா சந்தனா கூற்றில் பயத்துடனும், விஷ்ணு சுப்ரியாவை நினைத்தும், ரவீணா சக்தியை எண்ணிக்கொண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.. இவர்களின் வாழ்க்கை பயணம் மாறப்போவதை அறியாமல்.

அனைவரும் பேருந்தில் பயணத்தை தொடங்கினர்.. இவள் தூங்க வேண்டும் என்று ஆதி அழைக்காமல் இருக்க, அவன் அழைப்பான் என்று இவள் தூக்கத்தை தொலைத்தாள். ஏனோ இந்த பயணம் இருவருக்கும் சொல்ல முடியாத பாரத்தை தர, எண்ணங்களூடே பயணம் தொடர்ந்தது…

காலை பத்து முப்பது மணியளவில் தலைநகர் சென்னை எழும்பூர் பேருந்து நிலையம் வந்து அடைந்தனர். அங்கே ஒரு ரிசார்ட்டை கல்லூரி நிர்வாகம் புக் செய்திட, அனைவரும் ஓய்வு எடுக்க சென்றனர்.

திவியும் ரவியும் ஒரு அறையில் தங்க, இவர்களுடன் தான் தங்குவேன் என்று அடம்பிடித்து சுப்ரியாவும் இவர்களுடன் சென்றாள், தன் திட்டத்தை செயல்படுத்த….

ஆதி திவியை பேருந்து ஏற்றி விட்டு வீட்டிற்கு திரும்புகையில் மணி எட்டை தொட்டு இருந்தது. ஆதி வீட்டிற்கு வர, எப்போவும் போல் தெய்வானை அடுக்களைக்குள்ளும் சிவஞானமும் பெருமாளும் கூடத்தில் அமர்ந்து செய்தித்தாள் படித்து கொண்டு இருந்தனர்.

ஆதி “அம்மா… காப்பி… ” என்று சோபாவில் அமர,

பெருமாள் “ஆதி… திவி பஸ் ஏறிட்டாளா.? சுப்ரியாவை பாத்தீயா.?” என்று வினவினார்.

ஆதி “ஹான்.. யது கிளம்பிட்டா… அவள நான் ஏன் பாக்கணும்…? நான் இருக்குற வரை அவ வரல…” என்றான் சிறிது எரிச்சலுடன்..

பெருமாள் “ஓ.. சரி.. சக்தி சந்தனா நிச்சயத்துக்கு தேதி குறிக்கணும்..” என்றிட,

அப்போது தான் மாடியில் இருந்து வந்த சக்தி இதனை கேட்டு அதிர்ந்தான்.

ஆதி “என்ன நிச்சயத்தார்த்தமா? இப்போ தான பேசிட்டு போய் இருக்காங்க? அதுக்குள்ள என்ன அவசரம்? யது இருக்க வரை நீங்க எதுவுமே பேசாம… அவ போன அப்புறம் இந்த விசயத்த சொன்னா எப்படி?” என்று கர்ஜித்தான்.

பெருமாள் “எப்ப பாரு திவி… திவி…. திவி…. இது என் வீடு இங்க நான் எடுக்குறது தான் முடிவு… புரியுதா?” என்று கத்த, ஆதி தன் கையில் இருந்த டம்ளரை தூக்கி எறிந்துவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான். சக்தியும் அவன் பின்னே சென்று விட்டான்.

தெய்வானை “இப்போ ஆதி என்ன சொன்னான்னு நீங்க இப்படி கத்துறீங்க? சக்தி வீட்டுக்கு மூத்தவனா இருந்தாலும் இங்க ஆதி தான் மூத்தவன், திவி தான் மூத்த மருமக.. அவ விருப்பத்தக் கேட்காம நாம முடிவு எடுக்க முடியாது… இப்போ நான் சொல்றேன் இந்த கல்யாணத்துல எனக்கு சுத்தமா இஷ்டம் இல்ல” என்றார்.

பெருமாள் “உன் இஷ்டம் இங்க யாருக்கு முக்கியம்? கல்யாணப் பண்ணிக்க போறவனே அமைதியா தான இருக்கான். சக்தி அன்னைக்கே அவனோட சம்மதத்தை சொல்லிட்டான். அவ்வளவு ஏன் அவன வளர்த்த செல்விக்கு கூட இதுல சம்மதம்” என்றார்.

தெய்வானை “சரி… ஆனா திவி வந்த அப்புறம் தான் இதை பத்தி பேசணும்..” என்றார் முடிவாக,

தன் அறைக்குள் ஆதியும் சக்தியும் பேசி ஒரு முடிவை எடுத்துக் கொண்டு கீழே வர, அப்போது செல்வியும் அங்கு வந்தார் “அண்ணி சொல்றதும் சரி தானே அண்ணா, நாம எல்லாம் இப்போ ஒன்னா இருக்கோம்னா அதுக்கு காரணம் அவ தானே..” என்றார். அனைவரும் இருந்த மனநிலையில் செல்வி அழைத்த உறவு முறை யாரும் கவனித்து இருக்கவில்லலை. ஆதியைத் தவிர..

சிவஞானம் “இவ்வளவு நாளா திவியை பத்தி நீ இப்படி பேசினது இல்லையே? இன்னைக்கு என்ன நீ வித்தியாசமா திவியைப் பத்தி இப்படி பேசிட்டு இருக்க?” என்றார் புரியாமல். ஆதியும் அவரை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

கோகுல் நடப்பது அனைத்தையும் சந்தனாவிற்கு யாருக்கும் தெரியாமல் வீடியோ காலில் தெரிவித்துக் கொண்டு இருந்தான்.

தேவ்வோ திவி மேல் பயங்கர கோபத்தில் இருந்தான். அதனால் அவன் ஏதும் பேசவில்லை.

பெருமாள் “சின்ன வயசுல திவ்யா பண்ண தப்புக்கு தேவை இல்லாம நான் யதுவை தப்பா நினைச்சிட்டேன். திவ்யாவால தான் ஆதி நம்மள விட்டு போனான். இது உங்களுக்கு தெரியுமா?”

ஆதி ‘இவர் ஏன் இப்போ யது இல்லாத சமயத்துல பழச எல்லாம் பேசிட்டு இருக்காரு.?’ என்று எண்ணியவன், சக்தியிடம் கண்ணைக் காட்ட, அவன் பேசத் தொடங்கினான்.

சக்தி “இப்போ என்ன நிச்சயதார்த்தம் தேதி குறிக்கணும் அவ்வளவு தானே.. அதுக்கு ஏன் எல்லாரும் எங்கயோ ஆரம்பிச்சு பழசை எல்லாம் பேசுறீங்க… இன்னைக்கே சந்தனா வீட்ல வர சொல்லி நிச்சயத்துக்கு தேதி குறிங்க.. பெரியப்பா சொன்ன மாதிரி திவி ஒன்னும் இங்க இருக்கணும்னு அவசியம் இல்லயே… பெரியவங்க நீங்க இருக்கீங்க… இதுக்கு மேல என்ன வேணும்?’ என்றான்.

இவன் கூற்றில் அனைவரும் அதிர்ந்தனர், ஆதியை தவிர பேசசொன்னதே அவன் தானே..

இது எதார்த்தமாக இருந்தாலும், கோகுலிற்கும் சந்தனாவிற்கும் தாங்கள் போட்ட திட்டம் வேறு பாதையில் செல்வது போல் இருந்தது…

தெய்வானை ஏதோ பேச வர, அவரை தடுத்த ஆதி, அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.

பெருமாள் “இதான் என் இரத்தம்.. உன் விருப்பப்படியே செஞ்சிடலாம் சக்தி” என்று உடனே ராஜரத்தினத்திற்கு அழைத்தார்.

ஆதியோ வீட்டில் நடந்த நிகழ்வில் பயங்கர கோபத்தில் இருக்க, உடன் தன் துணை இல்லாதது எவ்வளவு பாரம் என்பதை மனதார உணர்ந்தான் மிகுந்த வலியுடன்….

……………………………………

கல்லூரி பேருந்து காலை 10.30 க்கு சென்னை எழும்பூர் பேருந்து நிலையம் வந்தடைந்தது. பேருந்தில் பேராசிரியை பேசத் தொடங்கினார்.  “லுக் ஸ்டுடென்ட்ஸ்.. நாம இப்போ நாசிக் காலேஜ் ஸ்டூடென்ட்ஸ் கூட கம்பைன்னா தான் நம்ம எக்ஸ்டென்ஷன் ப்ராஜக்ட்ட செய்ய போறோம். உங்களுக்கு பேட்ச் பிரிச்சு விட்டுடுவோம். இன்னைல இருந்து 4த் டே ஆல் ஆஃப் யூ சப்மிட் யுவர் ப்ராஜக்ட்.”

அங்கு ஒரு ஹோட்டலில் அனைவரும் குழும, V.K.  மேம் “ ஸ்டூடென்ட்ஸ் மீட் மிஸ்டர் பைரவ், இவர் தான் நாசிக் காலேஜ் ப்ரொபசர், அன்ட் ஹி இஸ் அன்வர், ரெப்ரெசன்டேட்டிவ், அன்வர் ஷீ இஸ் திவ்யதர்ஷினி ஹவர் ரெப்ரெசன்டேட்டிவ். இருவரும் ஒரு புன்னகையை சிந்தினர்.  எல்லாரும் போய் ரெடி ஆகுங்க, இன்னைக்கு நாம கவர்ன்மென்ட் மியூசியம் அன்ட் கன்னிமாரா லைப்ரரிக்கு போறோம். டே 2 நாளைக்கு எலியட் பீச், அஷ்டலட்சுமி கோவில், வள்ளுவர் கோட்டம். டே 3 கிண்டி நேஷனல் பார்க், டே 4 யூ சப்மிட் யுவர் ப்ராஜக்ட்.” என்று விட்டு சில பல அறிவுரைகளை வழங்கினார். 

அனைவரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் தஞ்சமடைய, திவியும் ரவீயும் ஒரு அறையில் தங்கினர். சுப்ரியா மேடமிடம் கேட்டு திவியின் அறையில் சேர்ந்தாள். திவிக்கு ஏதோ உறுத்தல் இருக்க, தன்னவனிடம் பேச அழைப்பு விடுத்தாள்.

ஆதி “ஹான் சொல்லு யது… என்னடி பன்ற என் பொண்டாட்டி?”

திவி “சென்னை ரீச் ஆகிட்டோம் டா…” என்று விட்டு மேடம் கூறிய அனைத்தையும் கூறிக் கொண்டு இருந்தாள்.

ஆதி அவளிடம் வீட்டில் நடந்த எதையும் கூறாமல் “சரி டி.. இன்னைக்கு எனக்கு இம்பார்டென்ட் மீட்டிங் இருக்கு.. அப்புறம் கூப்டுறேன். நீயும் கிளம்பு” என்று அழைப்பை துண்டித்தான், திவி கூற வருவதை கேளாமல். ‘இவனுக்கு என்ன ஆச்சு.? நான் சொல்றத கூட கேட்காம கட் பண்ணிட்டான். எருமை’ என்று விட்டு தன் வேலைகளை கவனிக்க சென்றாள்.

ப்ராஜக்ட்டிற்காக குழுக்கள் பிரிக்கப்பட்டது. திவி, ரவீ, நாசிக் கல்லூரியின் அன்வர், ரேஷ்மா என நால்வர் ஒரு குழுவில் பிரிக்கப்பட்டனர்.

முதல் நாள் பயணம் இனிதே தொடங்கியது.
………….

கனவு தொடரும்🌺🌺🌺🌺🌺

அப்டியே கொஞ்சம் உங்க கமென்ட்ஸ் சொல்லிட்டு போங்க… பிரண்ட்ஸ்…

கனவு தொடரும்…🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்