Loading

ஆட்சியர் கனவு 42💞

திவி தயாராகி வெளியில் வர, ஆதியும் கீழ் இறங்கி வந்தான். தன் மருமகள் மற்றவர் முன் எந்த வித அவப்பெயரையும் வாங்கி விட கூடாது என்பதற்காகவே தெய்வானை அவளை வர சொன்னார்.

சமையல் அறையில்…

கீதா “ஏன் அண்ணி, இவ்ளோ நேரம் ஆகுது. இன்னும் பாருங்க உங்க மருமக வரல. உங்களுக்கு நல்ல மரியாதை போங்க.” என்று சலித்து கொள்ள,

தெய்வானை “என்ன அண்ணி, இது கூட உங்களுக்கு புரியலயா.? ஆதியும் கூட போனான்ல. சின்ன சிறுசுங்க.. வர கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கும். இன்னும் அஞ்சு நிமிஷத்துல என் மருமக வருவா பாருங்க..” என்றார் புன்னகையூடே.

கீதாவிற்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘என்ன பேசுனாலும் இவ திவியை விட்டு கொடுக்காமா பேசுறாளே.’ என்று சிந்தித்து கொண்டு இருந்தார்.

தெய்வானை “அண்ணி, நீங்க இத பாத்துக்கோங்க.. நான் பின்னாடி போய் கொஞ்சம் கருவேப்பிலை பறிச்சிட்டு வரேன்.” என்று நகர்ந்தார்.

அப்போது திவி “தெய்வமே… தெய்வமே… நன்றி சொல்வேன் தெய்வமே… தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை…” என்று பாடிக் கொண்டு வந்தாள்.

கீதாவிற்கு தான் ஏகத்துக்கும் கடுப்பானது.. “என்னத்த தேடுன.?” என்று அவள் வாயை கிளற,

திவி “ஹான், அம்மா போல இருக்க என் அத்தையை தான். கொஞ்சம் தள்ளுறீங்களா, நான் என் வேலையை பாக்கணும்.” என்று முகத்தை ஒரு வெட்டு வெட்டி திருப்பி கொண்டாள்.

கீதா அமைதியாக அவள் செய்து கொண்டு இருப்பதை தான் பார்த்து கொண்டு இருந்தார்.

பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் சிறிது மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து அவள் கறியை கழுவிக் கொண்டு இருக்க, “வந்துட்டியா திவி. என்ன என்ன டிஷ் செய்யலாம் சொல்லு” என்று கூறி கொண்டே வந்தார் தெய்வானை.

திவி “எங்க தெய்வம் போனீங்க.? யூ நோ, ஹியர் சோ மச் ஆஃப் டிஸ்டபன்ஸ்” என்றாள் கீதாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

தெய்வானை “கறிவேப்பிலை இல்லடா. அதான் பின்னாடி தோட்டத்துக்கு போனேன். சரி சொல்லு என்ன சமைக்க போற.?”

கீதா “இவ சமைப்பாளா அண்ணி..?”

தெய்வானை “எப்போவும் சண்டே திவி தான் சமைப்பா. இன்னைக்கு நீங்க எல்லாம் வந்து இருக்கீங்க.. என் மருமக சமையல் தான்.” என்றார் அவளின் தோளில் கைகளை போட்டபடி.

திவி “அச்சோ… அவ்ளோ நல்லாலாம் என் சமையல் இருக்காது.. நீங்க ரொம்ப சொல்றீங்க அத்தை. சித்தி எனக்கு சமைக்கவே வராது. நீங்க தான் இன்னைக்கு சோதனை எலி” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

கீதாவோ “என்னது.? அண்ணி, தயவு செஞ்சு நீங்க சமைங்க. ரொம்ப சுதந்திரம் கொடுத்து வச்சு இருக்கீங்க. கண்டிப்பா இவளே உங்களை வீட்டை விட்டு அனுப்ப போறா பாருங்க.” என்று கூற,

தெய்வானை “என்ன அண்ணி, நீங்க.? அவ முன்னாடி.? என்று அவரை அடக்கி விட்டு, நீ சொல்லு டி என்ன டிஷ்.?”

திவி அவரை கொலைவெறியில் முறைத்தாலும் தெய்வானை கேள்விக்கு பதில் கூறினாள் “மட்டன் சுக்கா, மட்டன் கிரேவி, மட்டன் குழம்பு, மட்டன் பிரியாணி வித் மின்ட் ரைத்தா. சிக்கன்ல சிக்கன் குருமா, பெப்பர் சிக்கன், சிக்கன் கிரேவி. அப்ரோம் அத்தை நீங்க எனக்கு மீன் குழம்பு மட்டும் செஞ்சு கொடுத்துட்டுங்க. நான் வறுவல் பண்ணிடுறேன். சாதம் வச்சிடலாம். திப்பிலி ரசம், அப்ரோம் ஆதிக்கு பிடிச்ச இளநீர் பாயாசம், தேவ்க்கு டெஸர்ட் ஷேர் குர்மா. அவ்ளோதான்” என்றாள்.

கீதாவோ பே வென இவளை தான் பார்த்து கொண்டு இருந்தார். இவள் கூறியதை கேட்க, கேட்க அவரின் நாவில் எச்சில் ஊறாத குறை தான். இருந்தும் அதை மறைத்து கொண்டு “இது எல்லாம் நீ எப்போ செய்றது? எல்லாரும் எப்போ சாப்டுறது.?” என்றார் நக்கலாக.

திவியோ தெய்வானையிடம் “அத்தை அவங்களுக்கு பசிக்குது போல, அந்த முந்திரி பருப்பை கொஞ்சம் குடுங்க கொறிச்சிக்கிட்டு ச்சீ.. சாப்பிட்டுட்டு இருக்கட்டும். அப்ரோம் சத்தி சீ சித்தி நீங்க கொஞ்சம் வெளியே இருங்க, நான் சீக்கிரம் செஞ்சிட்டு கூப்டுறோம்” என்று அவரை வெளியே அனுப்பினாள்.

 

“இன்னைக்குன்னு பாத்து என் நாக்கு ரொம்ப ரோலிங் ஆகுது.” என்று தெய்வானையிடம் கூற,

அவர் “திவி மா, நீ அவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.” என்றார் வெளியில் கவனத்தை பதித்தபடி.

திவி “ஏன் அத்தை, என்ன சொன்னாங்க.?” என்றால் சிரித்து கொண்டே..

தெய்வானை அவர் தன்னிடம் கூறியதை கூற, திவி “என்கிட்ட கூட,

உன் அத்தைக்கு ரொம்ப கோவம் வரும். இப்போ இருக்க மாமியார்களாம் ரொம்ப விவரம். நல்லா பேசுற மாதிரி பேசி துரத்தி விட்டுடுவாங்க. அப்பரோம் குழந்தை எல்லாம் இப்போ வேண்டாம். படிப்பு எல்லாம் முடியட்டும்னு சொன்னாங்க. ஏன் அத்தை உங்களுக்கு ரொம்ப கோவம் வருமோ.?”

தெய்வானை “அதுலாம் வரும் டா. எனக்கு பிடிச்சவங்களை தவறா பேசினா மட்டும்.” என்றார் சிரித்து கொண்டே.

திவி “சரி சரி.. அத்தை.. நாம சீக்கிரம் வேலைய பாக்கலாம்..” என்று சிரித்து கொண்டே தங்கள் பணியை செய்ய, அவ்வழியே வந்த சந்தனாவின் கண்கள் இவர்களின் நெருக்கத்தைக் கண்டு வெறியோடு இருந்தாள்.

இதனை கண்ட தெய்வானை, “பாக்குற பார்வையை பாரு.. அந்த கண்ணுல கொல்லிய வைக்க..” என்று கூற,

திவி “என்ன அத்தை.. என்ன ஆச்சு.?”

தெய்வானை “திவி மா.. இவங்க பார்வையே சரி இல்லை.. நாம ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்.” என்றார்

திவி “ரொம்ம்ம்ம்பபபப அத்தை.” என்று விட்டு இருவரும் அவர்களின் பணியை தொடர்ந்தனர்.

தேவ் சக்தியுடன் பேசி கொண்டு இருக்க, இருந்தும் அவனின் பார்வை பாரதியையே மொய்த்தது.

ஆதி பாரதியை எண்ணி கொண்டே அவளிடம் பேச தோட்டத்திற்கு அழைத்தான்.

பாரதி “மாமா…”

ஆதி “கேட்குற கேள்விக்கு சரியா பதில் சொல்லுவன்னு நம்புறேன். காலேஜ்க்கு எதுக்கு போன.? ஸ்கூல் முடிஞ்ச உடனே வீட்டுக்கு வராம.?”

பாரதி “அது.. அது.. மாமா.. நான்..நான்.. ஹான் நோட்ஸ்.. நோட்ஸ் வாங்க தான் மாமா போனேன்.” என்றாள் திக்கி திணறி.

ஆதி “அப்டியே, அறைஞ்சேனா வையேன்.” என்று அதட்டும் தொனியில் கத்த,

பாரதி உறைந்து அவனையே பார்த்தாள். “ஹான் சொல்லு. எதுக்கு போன..? யார் அவன்..?” என்று கேட்டான் ஆதி.

பாரதி அரண்டேவிட்டாள். தன்னை சரி செய்து கொண்டு “மாமா.. அவங்க அவங்க பேர் கார்த்திக் மாமா.. “

ஆதி “ஓ.. என்ன பன்றான்.?”

பாரதி “பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்.. நம்ம வீட்டுக்கு பக்கத்து வீடு தான்.. அப்பா தான். அம்மா இல்லை.. அவருக்கு ஒரு தங்கச்சி இருக்கு.. அவர் தான் வீட்டுக்கு மூத்த பையன்..”

ஆதி “ஹான்.. போதும்.. என்ன பண்ரான்னு தான கேட்டேன்.. நீ விட்டா பயோ டேட்டாவே சொல்லுவ போல.. இங்க பாரு மா.. உனக்கு நான் அட்வைஸ் பண்ணனும்னு இல்ல.. இது படிக்குற வயசு.. படிப்புல மட்டும் தான் கவனம் இருக்கணும்.. இந்த வயசுல நாம செய்றது எல்லாம் அட்வெஞ்சர் மாதிரி தான் இருக்கும். எதை செய்ய கூடாதுன்னு சொல்றோமோ அதை தான் செய்ய தோணும். உன் அக்கா தான் உன் ரோல் மாடல். அவளும் லவ் பண்ணா தான் இல்லன்னு சொல்லல. ஆனா அவ படிப்புல கவனமா இருந்தா. நீ ஒழுங்கா படி. நானே இந்த விஷயத்தை பேசி முடிக்குறேன். இனிமே காலேஜ்லாம் போகாத..” என்று அறிவுறுத்தினான்.

பாரதி “உண்மையாலுமே நான் நோட்ஸ் தான் வாங்க போனேன்.”

ஆதி “பக்கத்து வீடு தானே.. ஏன் காலேஜ் வரை போனும்..?”

பாரதி “அம்மா அவர் கிட்ட பேச கூடாதுன்னு சொல்லி இருக்காங்க..”

ஆதி அவளை கேள்வியாய் நோக்கிட, “அன்னைக்கு சும்மா பவி அவர் கிட்ட பேசுனதுக்கு அவங்க அப்பா அவரை ரொம்ப அடிச்சிட்டாரு. அதான் அம்மா பேச வேண்டாம்னு சொன்னாங்க.” என்றாள்.

ஆதி தன் புருவங்களுக்கு இடையில் தேய்த்து “பேர் என்ன சொன்ன.?” என்று கேட்டான்..

பாரதி “கார்த்திக்..”

ஆதி “சரி.. உள்ள போ.. நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்..”

பாரதி தலையை ஆட்டி விட்டு “மாமா, அக்கா கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்.. நான் கண்டிப்பா ஒழுங்கா படிப்பேன்..”

ஆதி “ஹ்ம்ம்.. எல்லாம் உன் கைல தான்..” என்று விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

திவி தெய்வானை இருவரும் தன் பணியை முடித்து இருக்க, அனைவரையும் உணவருந்த அழைத்தாள்.

அனைவரும் உணவு பதார்த்தங்களை கண்டு விழி உயர்த்திட, தேவ் “என்ன மா, இன்னைக்கு ஸ்பெஷல்.? செம செம டிஸ்சா இருக்கு.” என்றான்.

தெய்வானை “ஒரு ஸ்பெஷலும் இல்ல.. புது சொந்தம் எல்லாம் வந்து இருக்காங்க. அதான், அது மட்டும் இல்ல.. இது எல்லாம் திவி தான் செஞ்சா” என்றார்.

சுப்ரியா தான் தன்னை நொந்து கொண்டாள்.. “அக்கா, கண்டிப்பா நாம சாப்பிடனுமா..? அதுவும் இவை கையாள சமச்சது.?”

சந்தனா “எனக்கு மட்டும் என்ன தலையெழுத்தா? எல்லா ஆட்டமும் கொஞ்ச நாள் தான். அமைதியா சாப்டு.” என்றாள்.

ஆதி தான் தன்னவளின் கைப்பக்குவத்தில் கிறங்கி போனான். ‘என் குட்டச்சிக்கு இவ்ளோ நல்லா சமைக்க தெரியுமா.? இன்னைக்கு இவளை வச்சு செய்ய வேண்டியது தான். என் செல்லாகுட்டி.’ என்று மனதில் செல்லம் கொஞ்சினான்.

சக்தி “திவி மா.. எல்லாம் சூப்பர்.. அந்த மட்டன் கிரேவிய இன்னும் கொஞ்சம் போடு. ப்ப்ப்பா வேற லெவல். எனக்கு வர போறவ எப்டி சமைக்க போறாளோ.?” என்று நொந்து கொண்டான் பொய்யாய்..

கீதா தான் ‘இவ்ளோ நல்லா சமைப்பாளா.?’ என்று எண்ணி தட்டில் முகத்தை புதைத்தார். (பாவம் நல்ல சோற இப்போ தான் சாப்டுறாங்க போல..)

திவி தேவ்விற்கு பறிமாற வர, ஆதி அவளின் இடையை கிள்ளிட, அவள் கிரேவியை செய்தால் தேவ் சட்டையில் அபிஷேகம். திவி அவனை பாவமாக பார்க்க, தேவ் “இது எத்தனை நாள் பிளான் அண்ணி.?” என்று விட்டு மீண்டும் உணவில் கவனமானான்.

ஆதி “டேய்.. போய் வாஷ் பண்ணிட்டு வா டா… “

தேவ் “இப்போ போய்ட்டு நான் திரும்ப வரப்போ இருக்குறதும் காணாம போய்ட்டும். நான் சாப்பிட்டு போறேன்.” என்றான்.

அங்கு மெல்லிய சிரிப்பலைகள் உருவாக, பாரதி தான் தனி உலகில் இருந்தாள். இதை தேவ் திவியும் கவனித்து கொண்டு தான் இருந்தனர். தேவ் திவியிடம் கண்களால் என்ன என்று வினவ, திவி தோளை குலுக்கியபடி தெரியாது என்றாள்.

அனைவரும் உண்டு முடித்து அமர, பெரியவர்கள் ஒரு புறமும், இளையவர்கள் ஒரு புறமும் இருக்க, அவர்களோடு சென்று அமர்ந்தனர் சந்தனாவும் சுப்ரியாவும்.

சக்தி “என்ன டா, ஷைத்தான் நம்மள தேடி வருது.?” என்று ஆதியின் காதை கடித்திட,

ஆதி “நம்மள இல்ல சகோ, உன்னை…”

சக்தி “என்னயா.? “

ஆதி “ஆமா யா..”

சக்தி “ஏன்.. ஏன்.. ஏன்..?”

ஆதி “நீ தான டா அவளோட மாமா…”

என்று சொல்லி அவன் சிரிக்க, சக்திக்கு நெஞ்சு வலி வராத குறை தான்.

இதை அனைத்தையும் கோகுல் அமைதியாக கவனித்து கொண்டு இருந்தானே தவிர, எந்த வித செயலும் வரவில்லை அவனிடம் இருந்து.

இதனை எல்லாம் திவி கேட்டு கொண்டு இருக்க, “அப்போ நானும் உங்களை மாமான்னு தான் கூப்டனுமா.?” என்றாள் சிரிப்பினூடே..

இதில் ஆதிக்கு தான் கடுப்பானது. சக்தி பதில் கூற வருவதற்குள், ஆதி “அதுலாம் ஒன்னும் வேணா.. நீ அவன எப்டி வேணா கூப்பிடு. பேர் சொல்லி கூட கூப்பிடு.. ஆனா மாமான்னு கூப்பிட வேண்டாம்.. என்ன டா உனக்கு ஓகே தான?” என்றான் திவியிடம் ஆரம்பித்து சக்தியிடம் கேள்வியாய்..

சக்தி என்ன பதில் சொல்வது என்று புரியாமல் பார்க்க, ஆதி கண்களால் மிரட்ட, “நீ அண்ணன்னே கூப்டு.. இதுல என்ன டா.. என்றவன் நிறுத்தாமல், ஏன் திவி மா.. இங்க எங்கேயோ புகையுதுல.. ” என்றான் கேலியாக…

திவியும் “ரொம்ப ஹெவியா புகையுதுண்ணா…  ஃபயர் இன்ஜீன் வந்தா கூட அணைக்க முடியாது போல..” என்றாள்.

ஆதியோ அவள் காதில் “ஆமா டி பேபி.. என் சூட்ட தணிக்க தான் நீ இருக்கியே. அப்ரோம் எதுக்கு ஃபயர் இன்ஜீன்.?” என்றிட, திவியோ இவனின் பேச்சில் சிலையாகி போனாள்.

சந்தனா சுப்ரியா வந்து விட, இவர்களின் பேச்சு நின்று விட்டது. இதில் தேவ் தான் அமைதியாய் இருக்கும் பாரதியை யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்தான். ‘இந்த முட்டக்கண்ணிக்கு என்ன ஆச்சு.? இந்நேரம் ஏதாவது அலப்பறை செஞ்சி இருப்பாளே.?’ என்று யோசித்து கொண்டு இருந்தான்.

சந்தனா வந்ததும் ஆதி எழுந்து செல்ல, சக்தி அவன் பின்னே சென்று விட்டான்.

திவி அமைதியாய் தன் அலைபேசியை பார்த்து கொண்டு இருந்தாள். பாரதியை தெய்வானை அழைத்திட சென்று விட்டாள். தேவ்வும் ஆதியை தேடி சென்று விட, கோகுலோ ராஜரத்தினத்துடன் அமர்ந்து இருந்தான்.

திவியின் அருகில் சந்தனா “ஆதியை மட்டும் தான் கைக்குள்ள வச்சு இருக்கன்னு பாத்தா, எல்லாரையும் கைக்குள்ள வச்சு இருக்க. அப்டி எதை காட்டி டி மயக்குன..?” என்று வார்த்தைகளை விட,

திவியோ ஏளன புன்னகையை சிந்தி “அன்பு ஒன்னு போதும். தேவை இல்லாத காட்டி மயக்க நான் ஒன்னும் பிராஷ்டியூட் தொழில் பண்ணல மிஸ் சந்தனா.” என்றதும் அவள் ஆடிப்போனாள்.

சந்தனா அதை வெளி காட்டி கொள்ளாமல் “ஓ..  இதுவும் கண்டு பிடிச்சிட்டியா.? நீ என்ன கண்டு பிடிச்சாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது மிசஸ் ஆதித்யா.”

திவி “ஹான்.. யெஸ்.. என்னால ஒன்னும் பண்ண முடியாது.. பட் இப்போ சொன்னியே.. மிசஸ் ஆதித்யா அவ நினைச்சா என்ன வேணா பண்ணலாம். காட் இட்.” என்று கூறினாள் அவளின் பலத்தை.

சந்தனா “உன்னோட பலம் தான் உன்னோட பலவீனம் திவ்யா. ஐ நோ, எந்த ஆதி உன்னை தலைல தூக்கி வச்சிட்டு சுத்துறானோ அவனே உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புவான். அதுவும் சந்தேகப்பட்டு.”

திவி ஏளனமாக சிரித்து “ஹான்… ஆதி… என்னை சந்தேகப்பட்டு வெளிய அனுப்புவானா.? எங்களுக்குள்ள இருக்க காதல், புரிதல் பத்தி எங்களுக்கு தெரியும். சந்தேகம்.? அது எங்க வாழ்க்கைல வராது. அதுவும் என் ஆதியால நோ வே. நல்லா கற்பனை பண்ற சந்து பேபி.. குட்..” என்றால் அவளின் கன்னத்தை தட்டியபடி.

சந்தனா அவளின் கைகளை தட்டி விட்டு “சவால் திவ்யா. அவனே உன்னை வெளியே போ சொல்லுவான்.” என்றாள் திமிராக.

திவி “ஓ.. சொல்லுவான்.. சொன்னாலும் அடுத்த நிமிஷம் அவனும் என் கூட வந்துடுவான். இதுவும் சவால் தான். மேக் அ நோட் ஆஃப் இட். மறந்துடாத” என்று இவளும் சவால் விட்டாள்.

பாவம் டா ஆதி நீ. உன்னை வச்சு ரெண்டும் விளையாடுத்துங்க. நீ மாட்டிக்கிட்டு முழிக்க போற.

இவர்களின் சம்பாஷணை எல்லாம் பெருமாளின் குரலில் அவர் பக்கம் அனைவரின் கவனமும் வந்தது.

பெருமாள் “அப்ரோம் டா, பொண்ணுக்கு மாப்பிள்ளை எல்லாம் பாத்துட்டியா..?” என்று கேட்க,

ராஜரத்தினம் “அதான் மச்சான்… எப்டி ஆரம்பிக்குறதுன்னு தெரியல.”

பெருமாள் “என்னன்னு சொல்லு டா.”

ராஜரத்தினம் சந்தனாவை அழைத்து “இவ தான் டா என் மூத்த பொண்ணு. உனக்கே தெரியும். ஆதி கம்பெனில தான் ட்ரைனிங்ல இருக்கா. என்னோட சொத்து எல்லாத்துக்கும் வாரிசு இவளும் சுப்ரியாவும் தான். மூத்தவளுக்கு சக்தியே மாப்பிள்ளையா வந்தா, விட்ட சொந்தம் தொடரும்னு டா. இதான் என்னோட ஆசை.”

கீதாவும் “ஆமா அண்ணா, ராணி அண்ணியும் சரவணன் அண்ணாவும் இருந்து இருந்தா அவங்களே பொண்ணு கேட்டு வந்து இருப்பாங்க. இப்போ அவங்க இடத்துல நீங்க தான் இருக்கீங்க. சக்திக்கும் கோகுலுக்கும் நீங்க தான் நல்லதை செய்யணும். என் பொண்ணு இங்க வந்தா கண்டிப்பா நல்லா இருப்பா.” என்றார் கண்ணீர் மல்க.

இதை கேட்டு இடிந்து விழுந்தது சக்தியும் ஆதியும் தான். திவி தன் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாது நிற்க, ஆதி அவள் அருகில் சென்று நின்று கொண்டான்.

சக்தி அமைதியாக இருக்க, ஆதி தான் என்ன செய்வது என்று அறியாமல் இருந்தான்.

தெய்வானை “நாம முடிவு எடுத்தா மட்டும் போதுமா அண்ணி.? வாழ போறது அவங்க ரெண்டு பேர் தான். அவங்க விருப்பம் கேட்க வேண்டாமா.?” என்றார். தெய்வானைக்கு இந்த சம்மந்தத்தில் துளியும் விருப்பம் இல்லை. காரணம் கீதாவின் பேச்சு மற்றும் சந்தனாவின் பார்வை.

ரத்தினம் “இதுல என்ன இருக்கு தங்கச்சி. கேட்டுட்டா போச்சு. சந்தனா உனக்கு இதுல விருப்பம் தான டா.?”

சந்தனா பொய் சிரிப்புடன் தலையை ஆட்ட, திவி தான் ‘கருமம்… இதை எல்லாம் பாக்கணும்னு என் தலையில எழுதி இருக்கு.’ என்று மானசீகமாக அடித்து கொண்டாள். அவள் அறிந்தது தான் இவை அனைத்தும் இவளின் வேலை. இந்த வீட்டிற்குள் நுழைய இவள் தேர்ந்தேடுத்து இருக்கும் ஒரு வழி என்று.

பெருமாள் “சக்தி உனக்குப்பா..?” என்றிட, ‘இத்தனை நாள் கிடைத்த சொந்தம் சொல்வதை கேட்பதா, இல்லை தன்னவளுக்காக நான் காத்து கொண்டு இருக்கிறேனே? ஒரு வருடம் கழித்து காதல் வந்தால் அவளின் கதி? என் கதி..?’ என்று இருதலைக்கொல்லியாய் தவித்தான்.

ஆதி “அப்பா.. செல்வி அம்மா வரட்டும்.. அவங்க தான் இத்தனை வருசமா சக்தியை வளத்தாங்க.. அவங்க வரட்டுமே..”

சக்தி மனது தான் நிலையில்லாது இருந்தது.. ‘இவள் ஆதியை தான் காதலித்தாள்.. தன் சகோதரன் என்றும் பாராமல் அவனின் வாழ்க்கையை அழித்தவள்.. கோகுல் இவளின் பேச்சை கேட்டு தான் ஆடிக்கொண்டு இருக்கிறான்.. இவளுக்காக தன்னவளை நான் மறப்பதா..?’ என்று யோசித்து கொண்டு இருக்க, ஆதியின் கூற்றில் முகம் மலர்ந்தான்.. நிச்சயம் இவர்களை எதிர்த்து தன் பதிலை கூற இயலாது.. தன் அன்னை என் விருப்பத்தையே முன்னிறுத்தி கொள்வார்.. என்று எண்ணியவன் “ஹான் ஆமா பெரியப்பா.. அம்மா வரட்டும்.. அவங்க விருப்பம் தான் என் விருப்பம்.” இதில் சந்தனா தான் சற்று ஆடிப்போனாள். இருந்தும் தன்னை மீட்டெடுத்து கொண்டவள் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அப்போது “எதுக்கு அம்மா வரணும்டா சக்தி…?” என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தார் செல்வி.

அனைவரும் அவரை நோக்க, ஒரு நிமிடம் தன் கண்களை அவரால் நம்பிடவே இயலவில்லை.

தன் கணவன் வேறு ஒரு குடும்பத்தினரோடு. தன் மகள் இவரோடு… அப்போது என் மகன்.? என்று அவரின் கண்கள் மதியை தான் தேடியது. ஆம் இவரை காதலித்து ஏமாற்றி சென்றவன் தான் இன்றைய ராஜரத்தினம்.

தனக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருப்பதை மறைத்து செல்வியிடம் பழக்கம் கொண்டார். காதலில் காமம் சேர எல்லை மீறினர் இருவரும். அதில் தான் இன்னிசைமதி பிறந்தான். அப்போதே பெயருக்கு அவர் கழுத்தில் தாலி கட்டியவர், கீதாவிடம் சொத்துக்காவும் செல்வியிடம் சுகத்திற்காகவும் உறவை வைத்து கொண்டார். இன்னிசைமதி முற்றிலும் அன்னையை போலவே. அன்பு பாசம்.

இரண்டு வருட இடைவெளியில் செல்வி மீண்டும் கருவுற சந்தனா பிறந்தாள். அவள் பிறந்த நேரம் ரத்தினத்திற்கு அமைச்சர் பதவி, தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் கண்டிட, அவருக்கு செல்ல குழந்தை ஆகிப்போனாள் சந்தனா. அதே நேரம், சுப்ரியா பிறந்தாள் கீதாவிற்கு.

என்ன தான் மூன்று குழந்தைகள் இருந்தாலும் சந்தனா தான் ரத்தினத்திற்கு முதல். மதியை அவர் கண்டு கொண்டதே இல்லை.

ரத்தினம் இங்கு தன் முதல் விளையாட்டை துவங்கினார். கீதாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது என்று கூற சொல்லி சான்றிதலும் பெற்றார். சட்டப்படி சந்தனா ராஜரத்தினம் கீதாவின் மகள்.

சந்தனா அப்படியே தன் தந்தையை போல, குணத்திலும் சரி, உருவத்திலும் சரி. அதனாலேயே ரத்தினம் அவளின் உண்மையான பிறந்த தேதியை மறைத்து சுப்ரியாவை விட மூத்தவளாக மாற்றினார். அவளும் அவ்வாறே வளர்ந்தாள்.

செல்வி உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த சமயம், தன்னிடம் பணம் இல்லாததால் மருத்துவம் பார்க்க இயலாது என்று கூறி விட்டார் ரத்தினம். இன்னிசைமதியையும் தானே பார்த்து கொள்கிறேன் நீ அவனை விட்டு விலகி விடு என்றதில் மகனின் எதிர்காலத்தை எண்ணி தனிமையை நாடினார் செல்வி.

ரத்தினம் மதியை அனாதை ஆசிரமத்தில் விட, பெற்ற தாய் தந்தை இருந்தும் அனாதை ஆகி போனான் மதி.

செல்வி உடல் நிலை மோசமடைய, ஒரு நாள் கோவிலில் இவரை பார்த்தார் செல்வியின் ஆருயிர் தோழி ராணி. பிறகு ராணியே செல்விக்கு எல்லாம் ஆகி போனார்.

ராணி சரவணனிடம் கூறி, செல்விக்கு மருத்துவம் பார்த்து அவரை குணப்படுத்தினார்.  தன் நிலை அனைத்தையும் கூறி அழுது கரைந்த செல்வியிடம் தன் மகன் சக்தியை அவ்வப்போது விட்டு வந்தார். இறுதியில் அவனின் எல்லாமும் செல்வி தான் என்று அறியாமல்.

இன்று தன் குடும்பத்தை காண, செல்விக்கோ பேரானந்தம். இவரை பற்றி அனைத்தும் சந்தனா அறிந்ததே.  ஆனால் இந்த சுகபோக வாழ்க்கையை விட்டு அவருடன் இருக்க இவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. பாவம் இன்னும் எந்த உண்மையும் அறியாத பேதையாய் செல்வி கண்ணீர் வடிக்கிறாள் தன் காதல் கணவனை கண்டு.

பெருமாள் எல்லா விஷயங்களையும் செல்வி இடத்தில் கூற, கேட்கவா வேண்டும் ஆனந்தம் தான். தன் முழு விருப்பத்தையும் சொல்லிட, சக்தி தான் உடைந்து போனான்.

இருக்குடும்பமும் வெற்றிலை பாக்கு மாற்றி கொள்ள, விடைபெற்றனர் அனைவரும்.

ஆதியின் அறையில்…

ஆதி “என்ன யது நீ பேசாம இருக்க.? இந்த கல்யாணம் வேண்டாம் டி..”

சக்தியும்  “என்ன திவி நடக்குது இங்க.?” என்றான்  கலங்கிய கண்களுடன்.

திவி “அச்சோ. என்ன இது.. அழுத்துட்டு.. நடக்காத கல்யாணத்துக்கு எதுக்கு இவ்ளோ பீல் பண்றீங்க?”

ஆண்கள் இருவரும் அதிர்ச்சி ஆகிட, சக்தி அவளின் கை பற்றி “என்.. என்ன திவி சொல்ற..”

திவி “அட. ஆமா.. நீங்க கவலையே படாதீங்க.. கண்டிப்பா கல்யாணம் நிக்கும்.. நாம எதுவும் செய்ய வேண்டாம்.. சந்தனாவே நிறுத்துவா..”

சக்தி “நிஜமா வா.?”

திவி “நிஜமா தான். நீங்க போய் ரவீணா கூட ட்ரீம்ல என்ஜாய் பண்ணுங்க” என்று சொல்ல, பெரிய பாரம் இறங்கியதில் மகிழ்ச்சியுடனும் ஒரு வித குழப்பத்துடனும் சென்றான் சக்தி.

ஆதி “என்ன டி சொல்ற.. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு செய் டி.. நானும் உன் கூட தான இருக்கேன்.” என்றான் பாவமாக..

திவி சிரித்து விட்டு “சந்தனா உன்னை லவ் பண்ணா.. பட் கல்யாணம் செய்துக்க முடியல.. அவள் பெரிய பிளான் வச்சு இருக்கா. அவளுக்கு இந்த வீட்டுக்குள்ள வரணும்.. வருவா.. ஏதோ ஒரு வகையில.. அது மட்டும் இல்ல ஆதி.. இவ இன்னும் பெருசா ஏதோ செய்றா… அன்னைக்கு சக்தி அண்ணா கேரளா போனாங்கல.. குழந்தைங்கள காப்பத்தினாங்க இஸ் இட்?”

ஆதி ஆம் என்று தலையை ஆட்ட,

திவி “பட்.. அகையின் அந்த குழந்தைங்க அதே ஆசிரமத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுட்டாங்க. இதுக்கு காரணம் சந்தனா…”

ஆதி அதிர்ச்சியாக “என்னது..?”

திவி பெரு மூச்சு ஒன்றை விட்டு “ஹ்ம்ம்.. இன்னும் எவ்ளோவோ இருக்கு..” என்றாள் யோசனையாக..

ஆதி தான் சிரித்துவிட்டு “போதும் டி.. இந்த குட்டி மூளையை வச்சுக்கிட்டு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஏத்திக்காத.” என்று அவளின் பிறை நெற்றியில் ஆழ்ந்த ஒரு முத்தம் பதித்து தன்னோடு இணைத்து கொண்டு உறங்க வைத்தான்.

திவியும் அவனின் அருகாமையில் மெய் மறந்து நித்திரையை தழுவினாள்….

கனவு தொடரும் 🌺🌺🌺

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்