252 views

ஆட்சியர் கனவு 21 💞

இருவரும் அவரவர்களுக்கு ஒரு முடிவை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றனர்.

தன் ராயல் என்பீல்டு வண்டியை, எவ்வாறு திவியை சீண்டலாம் என சிந்தித்துக் கொண்டே ஓட்டினான் ஆதி.

பேருந்தில் எவ்வாறு ஆதியில் இருந்து விலகலாம் என சிந்தித்துக் கொண்டே பயனமானாள் திவி. ஆனால் விதியின் சிந்தனை எவ்வாறு இருக்கும் என இருவரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.

எப்போதும் போல் திவி வந்து கல்லூரி முன் இருக்கும் விநாயகரிடம் புலம்பி கொண்டு இருந்தாள். “நீ உன் மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்கனு எனக்கு தெரியல விநாயகா…  சின்ன வயசுல என்னால தான் அவன் வீட்டை விட்டு போனான்…  அதான் அவன அவங்க அப்பா அம்மா கிட்ட சேக்கனும்னு நினச்சுட்டு இருக்கேன்…  அதுக்கான முயற்சில 90 சதவீதம் முடிச்சுட்டேன்…  கண்டிப்பா முழுசா முடிப்பேன்… 

ஆனா… அதுக்குள்ள அந்த எருமை காதல் கீதல்னு என்கிட்ட வர கூடாது சொல்லிட்டேன்.. அவன் யதுவ தான் காதலிக்கிறான். அவளும் காதலிச்சா…  ஆனா.. இப்போ அவ இல்ல…  அதுக்காக என்னலாம் நீ அவன் கூட ஜாய்ண்ட் பண்ணி விட்றாத…  ஓகே வா…  சின்ன வயசுல ஒரு கிரஷ் இருந்துச்சு இல்லன்னு சொல்லல.. அதுக்கு அவன் அப்டி கிட்ட கிட்ட வரான்…  இட்ஸ் டூ மச் கணேஷா… சொல்லி வை…  நான் நல்லா படிச்சு ஜ.ஏ.எஸ் ஆகனும். மத்தது எல்லாம் எதுவும் எனக்கு வேணாம் ஓகே…  இது மட்டும் நீ நிறைவேத்திட்ட உனக்கு 100 தேங்காய் உடைக்குறேன்… ” என ஒரு நீண்ட புலம்பல் புலம்பி வைத்தாள்.

பிறகு தூரத்தில் ஆதி வருவதை கண்டவள் வேகமாக அவ்விடத்தை விட்டு அகன்றாள்… 

தன் வண்டியை நிறுத்தி விட்டு விநாயகரிடம் சென்றான் ஆதி. “கடவுளே…  என் கண்ணுல யதுவ காட்டுன நீ…  அவளே வந்து காதல சொல்ல வை…  இதுவரை உன் கிட்ட நான் எதுவும் கேட்டது இல்ல…  நான் நினைக்குற யது திவின்னு அவ உணரணும்…  அவ என் கூடவே இருக்கனும்…  அவள கரெக்ட் பண்ண…  (சுற்றி முற்றி பார்த்தவன்…  மெல்லிய குரலில்) ஒரு நல்ல சுட்சுவேஷன் அமைச்சு குடேன்…  நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது…  யது…  அதான்…  திவ்யதர்ஷினி தான் என் வருங்காலம் சொல்லிட்டேன்…  நீ மட்டும் இதை செஞ்சிட்டா…  கண்டிப்பா நான் சொன்னதை செய்வேன்…” என இவனும் தன் பங்கிற்கு ஒரு வேண்டுதலை வைத்தான்… 

இவ்வளவு நேரம் அப்படி என்ன வேண்டிட்டு இருக்கான்…  இவன் வேண்டுறத பார்த்தா…  கணேஷன் நம்ம வேண்டுதல டீல்ல விட்றுவாரோ?? என்று சிந்தித்தவள். ச்சே ச்சே…  அவர் ரொம்ப நல்ல கடவுள்… .  அப்டிலாம் பண்ண மாட்டாரு” என தனக்குள்ளே பேசிக்கொண்டு இருந்தாள். தன் முன் ஆதி வந்ததை கூட உணராமல்… 

அவள் முன் சொடக்கிட்டவன் “ஹலோ.. மேடம்.. என்ன பலத்த யோசனை? ” என்றான்.

அதில் தன்னிலை உணர்ந்தவள் அவனை பார்த்து ஒரு நிமிடம் சொக்கித்தான் போனாள்.. இளம் நீல நிற மேல் சட்டை அணிந்து அதற்கு ஏற்றாற்போல் ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தான்.. தன் கண்ணாடியை சட்டையின் கழட்டி விடப்பட்டு இருந்த முதல் பொத்தானிற்கு இடையில் மாட்டி, தன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டி, ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வி கேட்பவனை யாருக்கு தான் ரசிக்க தோன்றாது.

மீண்டும் தன்னிலை மறந்தவளை “ஏய்…  குட்டச்சி.. உன்னை தான்…  என்ன யோசிக்கிற..? ” என்றான் ரசனையாக.

“ஹான்… அது… அது.. ஒன்னும் இல்ல…” என்று விட்டு “என்ன நீ இப்போ என்னன்னு கூப்ட? ” என்றாள் கேள்வியாக.

ஆதி”ஒன்னும் இல்ல… என்ன யோசனை? “

திவி”அதான் ஒன்னும் இல்லனு சொல்றேன்ல” என்று அவனை முறைத்து விட்டு சென்றாள்.

ஆதி “ஒன்னும் இல்லாம தான், என்ன ரொம்ப நேரம் பார்த்துட்டு இருந்தியா..? ” என்று நக்கலாக கேட்டான். 

அதில் திவி தான் “அவ்ளோ கேவலமாவா சைட் அடிச்சோம்.. கருமம்…  திவ்யா நீயே ஏன்டி உன்னை அசிங்தப்படுத்திக்குற..? ” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள். பிறகு ஆதியிடம் “உன்னை நான் ஒன்னும் பாக்கல.. சில பல விஷயங்கள் திங்க் பண்ணிட்டு இருந்தேன். அதான் நீ வந்தது கவனிக்கல” என்றாள்.

ஆதி “ஓஓ…  அப்படி என்ன திங்கிங்..?”

திவி “அதுலாம் உன் கிட்ட சொல்ல முடியாது” என்று நடந்தாள்.

ஆதி அவளை தொடர்ந்து கொண்டே “உன் கிட்ட ஒன்னு கேக்கனும் யது” என்றிட,  திவி தான் என்ன கேட்க போகிறான் என பயந்த படியே அவனை பார்த்தாள்.

ஆதி “அது…  நேத்து உன் ரூம்ல” என்று இழுத்தவனை, பாதியில் நிறுத்தி.

“உன் ரூம்ல எதுக்கு என் போட்டோவை வெச்சு இருக்க. எதுக்கு உன்னை பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி வச்சு இருக்கேனு தான கேக்க போற..? ” என்று அவள் பாட்டிற்கு பேச, ஆதி தான் நமட்டு சிரிப்புடன் அவளை பார்த்தான்.

ஆதி”நான் சொல்றத கொஞ்சம் கேளு” என்று மெதுவாக கூற,

எங்கே திவி இதனை காதில் வாங்கினால் தானே, அவள் பாட்டிற்கு “நான் சொல்றேன்…  நல்லா கேட்டுக்கோ…  இதுக்கு மேல உன் கிட்ட என்னால உண்மையை மறைக்க முடியாது ஆதி…  சொல்றேன்…  எல்லாத்தையும் சொல்றேன்…  ஆனா…  சொன்னதுக்கு அப்றம் நீ என்ன யதுனு கூப்ட கூடாது… ” என்றாள்

ஆதி தான் இவளை சுவாரஸ்யமாக பார்க்க “நான்.. நான்.. டிஸ்டன்ஸ் எஜூகேஷன்ல ஜர்னலிசம் படிக்றேன்.. அதுக்கு பிராஜெக்ட்காக ஒரு செலிபிரிட்டி பத்தி டீடெயில்ஸ் கேதர் பண்ண சொன்னாங்க…  அதுக்கு தான்…  அந்த போட்டோஸ் அண்ட் டீடெயில்ஸ் போதுமா…  அண்ட் ஒன் மோர் திங்…  நான் யது கிடையாது.. யதுவோட சிஸ்டர் திவ்யதர்ஷினி… ” என்று அழுத்தமாக கூறி அவன் முகத்தை ஆராய்ந்தாள்.

அவன் எங்கே இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான்.. எல்லாம் யாம் அறிவேன் என்ற தோரணையில் நின்று கொண்டு அவள் கன்னத்தில் இருக்கும் இரண்டு மச்சங்களை தான் ரசித்துக் கொண்டிருந்தான். அதை ரசித்தவனின் மனம் அவள் செவிகளில் நடனமாடிக் கொண்டிருந்த காதணிகளில் கவனமானது.

“நான் அந்த தோடா இருக்க கூடாதா… ம்ம்.. அதுக்கு வந்த லக்க பாத்தியாடா ஆதி…  உன் ஆளோட கன்னத்துல எத்தன தடவ தொட்டு தொட்டு விளையாடுது…  இருடி…  ஒரு நாள் உன்ன அவ கிட்ட இருந்து தூக்குறேன்… ” என சபதம் மேற்கொண்டான்.

நான்  தொடாத
அவள் கன்னத்தை
நீ முத்தமிடுவது
நியாயமா?
என் மூச்சு படாத
அவள் கழுத்தில்
உன் காற்று படுவது
அடுக்குமா?

உன்னை களவாடிய 
பின்னரே
என் காதல் சொல்வேன் அவளிடம்… 

 
ஆதியின் முகம் எதையும் பிரதிபலிக்காததை கண்டு தான் கூறியதனைத்தும் அவன் நம்பி விட்டான் போலும் என நினைத்து கொண்டாள் பெண்ணவள்.

திவி”என்ன புரிஞ்சுதா? ” என்று கேட்ட

ஆதி தான் “அய்யய்யோ…  அவ என்ன சொன்னானு கேக்கலயே…  மறுபடியும் கேட்டா.. சொல்லுவாளா? ” என திருதிருவென விழித்தான். எந்த பக்கம் தலையை ஆட்டுவது என்று வேற தெரியாமல் எல்லா பக்கமும் மெதுவாக ஆட்டினான்.

திவி”இவன் மண்டைய ஆட்டுற மாடுலேஷனே சரியில்லையே ” என்று நினைத்து “ஓகே…  பைன்.. ” என கூறிவிட்டு நகர்ந்தாள்.

இருவரும் வகுப்பிற்கு வந்தனர். வழக்கம் போல் வகுப்பு சிறப்பாக நடந்தது.

அனைவரும் க்ரௌண்டில் கூடினர்.

பிரவீன் “எருமை…  உன் ரூம்ல என்ன அவ்ளோ புக்ஸ் இருக்கு…  எல்லாம் படிப்பியா என்ன? “

கவி”பின்ன…  உன்ன மாதிரி எடைக்கு போடவா .. வாங்கி வெச்சு இருக்கா.. “

சபரி”அப்படி இருந்தா கூட நல்லா தான் இருக்கும்…  கைல பத்து பைசா இல்ல…  கொஞ்சம் உன் புக்ஸ் எல்லாம் கடனா குடுத்தா நல்ல இருக்கும்” என்றான்.

கனகா”எனக்கு பசிக்குது” என்று கூற,

அனைவரும் கனகா புறம் திரும்ப “நான் என்ன இப்போ தப்பா கேட்டேன்.. எல்லாரும் என்ன இப்படி பாக்குறீங்க…  நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்.. ” என்று கேட்க,

அனைவரும் ஒருசேர அவள் முகத்தில் தூ என துப்பினர்.

கவி விழுந்து விழுந்து சிரிக்க, கனகா அவளை பார்த்து முறைத்தாள்.

விஷ்ணு “இப்போ எதுக்கு நீ இப்படி சிரிக்கற..”

கவி”இல்ல…  எப்பவும் நான் தான் எதாவது சொல்லி இப்டி அசிங்கப்படுவேன்…  ஆனா.. இன்னிக்கு எனக்கு பதிலா என் அருமை தோழி நல்லா அபிஷேகம் வாங்கிட்டா.. அதான் சிரிப்பு வந்துடுச்சு ” என்றாள்

சுப்ரியா தான் அனைவரும் திவி அறைக்கு சென்றார்களா என்று பலத்த யோசனையில் இருந்தாள்.

ரவீ”என்ன யோசிக்குற பிரியா”

“எல்லாரும் நேத்து எங்க போனீங்க” என்றாள் கேள்வியாக

கவி”வேற எங்க திவி வீட்டுக்கு தான்.. அவ ரூம்கு கூட போனோம் ” என்று அவள் கூறவும், சுப்ரியா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

திவி அருகில் விஷ்ணு அமர்ந்து இருக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த ஆதி அனைத்தையும் கேட்டாலும் திவி யை தான் ரசித்துக் கொண்டிருந்தான்.

ரவீ”திவி.. அவன் உன்ன தான் பாக்குறான்” என அவள் காதில் கூற,

திவி”தெரியுது ரவீ ” என்றாள் அவனை பாராமல்… 

விஷ்ணு “டேய்.. ரொம்ப வழியுற டா ஆதி…  போதும்”

ஆதி”ஏன் டா…  உன் தங்கச்சிய சைட் அடிக்குறேனு கோவமா”

விஷ்ணு “ம்ம்.. ஆமா…  இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சது…  உன்ன மட்டுமில்ல…  என்னையும் சேர்த்து திட்டுவாடா” என கதறினான்.

ஆதி”அப்போ.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு”என்றான்

விஷ்ணு “சொல்லு” என்றான் தடுப்பாக,

ஆதி”நீ இந்த பக்கம் வா.. நான் அவ பக்கம் உட்காறேன்” என்று கூற

விஷ்ணு தான் தலையில் அடித்து கொண்டான். ஆதி திவி அருகில் அமர, திவி தான் விஷ்ணுவை கொலை வெறியில் முறைத்தாள்.

ரவீ “ம்ம்ம்… திவி என்ஜாய்”

திவி “ரவீ.. நீ என்கிட்ட அடிவாங்கி இருக்க? ” என்று கேட்க,

ரவீ தன் இரு கன்னங்களையும் கைகளால் மறைத்துக் கொண்டு இல்லை என்று தலையாட்டினாள்.

ஆதி அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான் “யது.. யது.. “

திவி அவனை முறைத்தாள் விட்டு அவள் வேலையில் கவனமானாள்.

ஆதி”ப்ச்.. ஏய்…  குட்டச்சி..” என்று மெதுவாகவும் அழுத்தமாகவும் அழைக்க

திவி”நான் சொன்ன கண்டிஷன் மறந்துட்டியா ஆதி” என்றாள் அதே அழுத்தத்துடன்.

அதன் பிறகு தான் ஆதி உணர்ந்தான் அவளின் தியா என்ற அழைப்பு முற்றிலும் காணாமல் போனதை… 

ஆதி”என்ன கண்டிஷன்” என புருவம் உயர்த்தி கேட்க

திவி தான் அவனை பயங்கரமாக முறைத்தாள்.. “அப்போ…  காலையில் நான் சொன்னத கேட்கல”

ஆதி”ஓஓ.. ஏதோ சொல்லி இருக்க…  நான் எங்கடி குல்பி அதுலாம் கேட்டேன்.. உன் மச்சம்…  அச்சோ…  கொல்லுது டி.. அதான் பார்த்துட்டு இருந்தேன்” என முணுமுணுத்தான்.

திவி”உன்ன தான் ஆதி…  நான் சொல்லும்போது என்ன பண்ணிட்டு இருந்த ” என்று ஆரம்பித்து,

திவி”சுத்தம்…  அப்போ.. நான் சொன்ன எதுவும் நீ.. கேக்கல… உன்னை.. ” என்று நிறுத்தினாள்.

ஆதி”என்ன பண்ண போற யது.. ” என்றான் ரசனையாக,

அவன் கேள்வியில் சிவந்தவள் அதனை மறைக்க அரும்பாடு பட்டாள். கடினப்பட்டு வெட்கச் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனை முறைத்தாள்.

அனைவரும் கிளம்ப, ரவீயுடன் பேசிக்கொண்டே முன்னே சென்று கொண்டிருந்தாள் திவி. ஆதி விஷ்ணுவிடம் பேசிக்கொண்டே அவர்களை பின் தொடர்ந்தான்.

விஷ்ணு “டேய்…  ஆதி.. என்ன டா”

ஆதி”என்ன டா மச்சான்… “

விஷ்ணு “ரொம்ப பண்றடா நீ”

ஆதி”என்ன பண்ணேன்”

விஷ்ணு “போதும் டா என்னால முடியல…  நீ அவள சைட் அடிக்குற…  இதெல்லாம் நல்லதுகில்ல பாத்துக்கோ”

ஆதி அசடு வழிந்துக்கொண்டே அவன் வேலையை செவ்வனே செய்தான். விஷ்ணு தலையில் அடித்துக் கொண்டே ‘இவன் அவ கிட்ட அடி வாங்காமல் திருந்த மாட்டான்’ என நினைத்துக் கொண்டான்.

திவி”ரவீ.. இதுக்கு மேல என்னால உண்மைய மறைக்க முடியாது.. சோ..”

ரவீ”சோ”

திவி “ஆதி கிட்ட நான் உண்மையில் சொல்ல போறேன்… “

ரவீ “அவன் உன்ன வெறுத்துடுவான் திவி”

திவி”ம்ம்ம்.. எனக்கு தெரியும் ரவீ.. ஆனா.. இப்போ அவன் தேவை இல்லாமல் மனசுல ஆசைய வளர்த்துக கூடாது ரவீ.. நான் தான் யது இல்லைல.. சோ…  சொல்லிடுறது பெட்டர்”

ரவீ “ம்ம்ம்.. சரி திவி எதுவாக இருந்தாலும் ஜாக்கிரதை” என்று அறிவுறுதினாள்.

ஆதி வண்டியை எடுக்க சுப்ரியா அவன் பக்கம் விரைந்து வந்தாள்.

சுப்ரியா “ஆதி.. ஆதி.. ” என கத்திக் கொண்டே வர நால்வரும் திரும்பி பார்த்தனர்.

திவி “இவ ஏன் இப்படி ஓடி வரா” என நினைத்துக் கொண்டு இருக்க,

விஷ்ணுவும் ரவியும் “இன்னைக்கு என்ன பிரச்சனை கொண்டு வர போறாளோ???” என்ற ரீதியில் அவளை பார்த்தனர்.

ஆதி”ஏய்…  என்ன ஆச்சு.. எதுக்கு இப்டி ஓடி வர”

சுப்ரியா மூச்சு வாங்க அவனிடம் வந்தவள் கண்ணீருடன் “ஆதி.. அப்பாக்கு உடம்பு சரியில்லனு போன் வந்துச்சு.. கொஞ்சம் என்ன வீட்ல டிராப் பண்றியா.. பிளீஸ்” எனக் கேட்க

ஆதி உடனே திவி யை தான் பார்த்தான். அவன் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டவள் மனமோ இறக்கையில்லாமல் பறக்க, அது தனக்கான இடம் இல்லை என புத்தி அறிவுறுத்த ‘பொத்’ என கீழே விழுந்தது.

சுப்ரியா மேலும் அவனை அவசரப்படுத்த, திவி அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.

ரவீ “பிரியா…  விஷ்ணு ஆதி கூட வரட்டும்.. நாம ஆட்டோல போலாம்” என்று கூற

சுப்ரியா, இதற்கு மேல் ஒன்றும் பேச முடியாது என நினைத்தவள் வேண்டா வெறுப்பாக அவர்களுடன் சென்றாள்.

திவி ஆட்டோ கண்ணாடியில் வண்டியில் வரும் ஆதியையே பார்த்துக் கொண்டு வர “திவி.. நீ ஏன் அமைதியா இருந்தனு எனக்கு தெரியும்” என்று ரவீ கூற

திவி அவளை புரியாமல் பார்த்தாள்.  “ப்ரியா, ஆதி கிட்ட வண்டில வரேன்னு சொன்னப்போ.. ஆதி உன்ன பார்த்தான்ல” என்க. திவி ஆம் என தலையசைத்தாள். “அவன் ஏன் அப்டி பார்த்தானு எனக்கு தெரியும்”

திவி தனக்குள் புன்னகைத்துக் கொண்டு, ஒன்றும் அறியாதவளாய் “ஏன்? ” என்றாள்.

ரவீ”இதுவரை யாரையும் அவன் வண்டில ஏத்துனது இல்ல.. உன்ன தான் முதல்ல ஏத்தனும்னு அவன் நினைச்சு இருப்பான். அதான் ப்ரியா கேட்டவுடனே உன்ன பார்த்தான்” என்று கூற, பின் அவளே தொடர்ந்து “நீ என்னடான அவன் யதுவ தான் அப்டி நெனச்சு இருப்பான். சோ அந்த பார்வை அண்ட் அந்த இடம் உனக்கு இல்லனு.. நீ அமைதியா இருந்த.. சரிதான” என்றாள்.

திவி மெலிதாக ஒரு புன்னகை சிந்திவிட்டு ஆதியை கவனித்தாள். உண்மை தானே.. அவன் பார்வையும்.. இவள் எண்ணங்களும்..

ஐவரும் சுப்ரியா வீட்டிற்கு செல்ல அவள் தந்தை ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்து இருந்தார்.

சுப்ரியா “அப்பா.. அப்பா.. உங்களுக்கு என்ன ஆச்சு” பதற்றத்துடன் வினவ

அவளின் அம்மா “அப்பாக்கு மைல்டு அட்டாக்” என்று கூற

சுப்ரியா “ஐயோ…  அப்பா இப்போ எப்படி பா இருக்கு…  வாங்க ஹாஸ்பிடல் போலாம்”

அவளின் அப்பா ராஜரத்தினம் “அதுலாம் என்னும் வேண்டாம் மா…  டாக்டர் டேப்லெட் குடுத்து இருக்காரு.. அது சாப்டா சரி ஆகிடும்” என்றார் வாஞ்சையாக.

கீதா”ஏங்க இப்டி…  சீக்கிரம் இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வெச்சுடலாங்க” என்று கூற

 
சுப்ரியா தான் அதிர்த்தாள். “மா…  எத்தன தடவ சொல்றது…  இந்த மாதிரி பேசாதீங்கனு” என்று கத்தி விட்டு சென்றாள்.

மற்ற நால்வரும் அமைதியாக இருக்க ஆதி தான் ரத்தினத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

விஷ்ணு “அம்மா…  ஏன் அவர் கல்யாணம் சொன்னா…  இப்டி கத்திட்டு போறா? “

கீதா “நீங்க எப்போ வந்தீங்க.. சாரிப்பா நான் கவனிக்கல” என்று விட்டு “அவ அவனோட மாமா பையன தான் கல்யாணம் பண்ணிப்பேனு ஒத்த கால்ல நிக்றா… ஆனா அதுலாம் நடக்காது” என்றார் வருத்தமாக

திவி”ஏன் மா…  நடக்காது”

கீதா”அவங்க குடும்பத்துல இப்போ யாரும் உயிரோட இல்ல திவ்யா” என்கிறார் அனைவரும் அதிர்ந்தனர்.

ரவீ “என்ன மா சொல்றீங்க”

ரத்தினம் பெருமூச்சு விட்டு “ஆமா மா…  தி கிரேட் பிஸ்னஸ் மேன் சரவணகுமார்… நீங்க கேள்வி பட்டு இருக்கீங்களா” என்று கூற

ஆதி “நீங்க ராணி அம்மாவோட அண்ணா தான? ” என்றான் கேள்வியாக

ரத்தினம் முகத்திலோ அத்தனை மகிழ்ச்சி,  ஆனால் அனைத்து மறைந்து மீண்டும் சோகமாக உருவாகியது “ம்ம்…  ஆமா பா.. உனக்கு எப்டி தெரியும்?”

ஆதி கண்களிளோ வலியின் தடம் “நான்.. நான்.. அவங்க பையன் ஆதி” என்றான் உடைந்த குரலில்.

ரத்தினம் கீதாவிற்கோ பெரும் மகிழ்ச்சி. ரத்தினம் அவனை ஆரத்தழுவிக் கொண்டார். “உன்ன ரொம்ப நாள் தேடுனேன் ஆதி… ஆனா.. என்னால கண்டுபிடிக்க முடியல” என்றார் வருத்தத்துடன்.

கீதாவோ இனி சுப்ரியா திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாள் என பேருவகை கொண்டார். “சின்ன வயசுல இருந்தே ஆதினா பிரியாக்கு ரொம்ப இஷ்டம்…  அதான் கடவுளே கொண்டு வந்து சேர்த்துட்டான்” என்றார் கண்ணீர் மல்க.

இதைக் கேட்ட உடனே திவியை தவிர அனைவரும் அதிர்ந்தனர். கீதாவின் உள் அர்த்தம் அனைவரும் அறிந்திட ஆதி தான் வலிமிகுந்த பார்வையில் திவி யை நோக்கினான். அவளோ ஆதிக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியை மட்டும் முகத்தில் தேக்கி அவனைப் பார்த்தாள். மற்ற வலிகளை மனதினுள் புதைத்து விட்டு.

ரத்தினம் “அப்பறம் என்ன.. என் பொண்ணு கல்யாணம் நடக்கும்” என்று கூறினார்.

ஆதி ஏதோ கூற வர, திவி”சூப்பர் மா.. அவ கல்யாணத்துக்கு சம்மதிப்பா… இல்லனாலும் நான் சம்மதிக்க வெக்கிறேன்” என்றாள்.

கீதா”ரொம்ப சந்தோஷம் திவ்யா” என்றவர் “இருங்க சாப்ட ஏதாவது கொண்டு வரேன்” என்றிட.

திவி”இல்லமா.. இன்னொரு நாள் வரோம்…  இப்போ டைம் ஆச்சு” என்று கிளம்ப எத்தனிக்க.

ஆதியும் “ம்ம்…  ஆமா ஆண்டி”

கீதா”இன்னும் என்ன ஆண்டி…  அத்தைனு கூப்டு ஆதி” என்க.

அவனுக்கு தான் கடுப்பாகியது.  கட்டுப்படுத்திக் கொண்டவன் சிறு தலையசைப்பை மட்டும் தந்து விட்டு சென்றான். அவன் பின்னேயே அனைவரும் கிளம்பினர்.

அனைவரும் அவரவர் இல்லத்தை அடைந்தனர். தன் வீட்டை அடைந்த ஆதி வேகமாக கதவடைத்து கட்டிலில் சென்று அமர்ந்தான்.

செல்வி தான் என்னவாயிற்று என்று அறியாமல் சக்தியை அழைத்து விஷயத்தை கூறினார். அவன் வருவதாக கூறி அழைப்பை துண்டித்தான்.

விரைந்து வந்த சக்தி ஆதி அறைக்கு செல்ல இறுகிய முகத்தோடு அமர்ந்து இருந்தான் அவன்.

“ஆதி என்னடா ஆச்சு”

“அவ பெரிய தியாகியாடா.. அவங்க கேட்ட உடனே என்கிட்ட கூட விருப்பத்தை கேட்காம, இவ பாட்டுக்கு மண்டைய ஆட்டுறா” என்று கத்தினான்.

சக்தி”என்ன டா நடந்துச்சு… யாருக்கு என்ன ஆச்சு”

ஆதி கோபமாய் அனைத்தையும் கூற, சக்தி தான் “இவ எதுக்கு இப்டி எல்லாம் பண்றா” என தலையில் அடித்து கொண்டான். உண்மையில் ஆதியை பார்க்க சக்திக்கு பாவமாக தான் இருந்தது.

சக்தி”டென்ஷன் ஆகாத டா…  நான் பேசறேன் டா.. அவகிட்ட”

ஆதி”என்னடா பேச போற…  ஹான்…  என்ன பேச போற…  திவி…  ஆதி உன்ன லவ் பண்றான் நீ ஏன் சுப்ரியா கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னனே கேட்க போறியா.. இல்ல அவனுக்கு எல்லாம் தெரியும் சொல்ல போறியா?” என கத்த, சக்தி தான் அவன் கோபத்தை கண்டு ஆடி போனான். பின்னே, சிறு வயதில் இருந்தே அவன் கோபத்தை அறிந்தவன் ஆயிற்றே.!

“நீ சொன்னா கூட அந்த லூசு இதுலாம் புரிஞ்சுக்க மாட்டா…  ஏன்னா? அவள் பொறுத்தவரை நான் அவள லவ் பண்ணல…  யதுவ தான் லவ் பண்றேன்… நான் தேவையில்லாமல் என் மனசுல ஆசையை வளர்த்துட்டு இருக்கேன்…  உண்மை தெரிஞ்சா நான் அவள வெறுத்துடுவேன்.. அதான் மேடம் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கறாங்க” என்றான் ஆதங்கம் தாளாமல்… 

இவையனைத்தும் வாயிலில் இருந்து கேட்ட திவி தான் சிலையாகி இருந்தாள்.

கனவு தொடரும்!!, 🌺🌺🌺🌺

கமெண்ட் பண்ணிட்டு போங்க பிரண்ட்ஸ்…  இந்த யூடி எப்படி இருக்கு..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்