Loading

ஆட்சியர் கனவு 20 💞

அதிகாலையில் மெல்லே மேல் எழுந்த சூரியன் தன் ஒளிகதிர்களை வீசி தன் வரவை தெரியப்படுத்த, அனைத்து ஜீவ ராசிகளும் தத்தமது பணியை செய்ய விரைந்தன.

தன் படுக்கையில் இருந்து எழுந்த திவி குளியலறைக்குள் சென்று குளித்து விட்டு வந்தாள்.

ஹாலில் ஏதோ சத்தம் கேட்பதுபோல் இருக்க, தன் கூந்தலின் ஈரத்தை துடைத்து கொண்டவளின் காதில் ஆதியின் குரல் தான் ஒலித்தது. “இவன் எங்க காலைலயே இங்க வந்து இருக்கான். எப்டியும் வெளில போனா ஏதாவது வம்பு இழுப்பான்.. நாம அமைதியா இங்கேயே இருப்போம்.” என்று  விட்டு தன் வேலையில் கவனமானாள்.

ஆதி “இவ என்ன இன்னும் வெளில வராம இருக்கா.. வந்தா ஏதாவது சீண்டலாம்னு பாத்தா.. என்று நினைத்துவிட்டு , ஆண்டி!  இன்னுமா அவ தூங்குறா.? நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்குறீங்க!” என்று கூற,

ரோஜா”இல்ல ஆதி.. இந்நேரம் அவ எந்திரிச்சு இருப்பா. வெளில வர தான் லேட் ஆகும்.”

ஆதி”ஓஓ.. நான் வந்தது அப்போ அவளுக்கு தெரியுமா.. மேடம் தப்பிக்குறாங்களாமா.. இரு டி..  என்று மனதில் அவளை நினைத்து கொண்டு, அப்போ நான் போய் அவள பாக்குறேன் ஆன்டி” என்று திவியின் அறைக்கு சென்றான்.

திவி அமைதியாக சாளரத்தின் வழியே சூரியனை ரசித்து கூந்தலை காயவைத்து கொண்டு இருக்க, பூனை நடை போட்டு அங்கு சென்றவன் ஒரு நிமிடம் சொக்கி தான் போனான்.

இளஞ்சிவப்பு நிறத்தில் சுடிதார் அணிந்து அதில் மஞ்சள் நிறத்தில் பூ வேலைப்பாடு செய்து இருக்க, எந்த வித மேல்பூச்சும் இல்லாமல் அவள் முகம் இருந்தது. கூந்தலில் இருந்து வடிந்த நீர் அவளின் மேலாடையையும் சிறிது நனைக்கத்தான் செய்தது.

அனைத்தையும் ரசனையாய் பார்த்த ஆதி, மெல்ல அவளருகில் சென்று மொத்த கூந்தலையும் எடுத்து அவள் முன் போட்டு, அவள் கழுத்தில் முகம் வைத்து “குட் மார்னிங் திவி” என்றான் மென்மையாக.

அதில் அதிர்ந்தவள், அவன் ஸ்பரிசத்தில் நடுங்கியே போனாள். அவனை நோக்கி திரும்பி, “நீ.. நீ.. இங்..இங்க என்ன பன்..பண்ற.?” என்று வார்த்தை தந்தியடிக்க, அவளுக்கே ஏன் என்று புரியவில்லை.

அதில் சிரித்தவன் “உன்னை பாக்கதான் டி வந்தேன் குட்டச்சி”என்று ஒற்றை புருவம் உயர்த்தி கண் சிமிட்டி கூற, அதில் அவள் தொலைந்து தான் போனாள்.

திவி எதுவும் பேசாமல் அவனை முறைத்தாள்.  அவன் அவளை அளவெடுக்க, அதில் அவள் தான் நடுங்கிப்போனாள். “ஏ.ஏன் அப்டி பாக்குற.?” என்று முடிந்த மட்டும் கோவமாய் கூறியவள் அதற்கு மேல் முடியாமல் தலையை குனிந்து கொண்டாள்.

ஆதி அவளை மேலும் நெருங்க, திவிக்கு தான் இதயம் படபட என்று அடித்துகொண்டது. அவளை நெருங்கிய ஆதி, தன் ஆட்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையே திவியின் இதழ்களை சிறை செய்தான். திவி தான் விழிவிரித்து அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.

ஆதி”உண்மைய மறைச்ச இந்த லிப்ஸ்க்கு என்ன பனிஸ்மெண்ட் தரலாம்..ம்ம்.?” என்று அதை மேலும் இருக்க,

திவியின் இதழ்கள் சிவந்து விட்டன. அந்த சிவப்பில் தன்னை மறந்தவன், அவள் இதழ்களை நோக்கி நெருங்க, பயத்தில் திவி கண்களை இறுகி மூடிக்கொண்டாள்.

அந்த சிவந்த இதழ்களை தன் இதழ்கள் மூலம் சிறை செய்தான் ஆதி. திவி அவனை விலக்க முயல, அவளின் இரு கைகளையும் பிடித்து கொண்டு மேலும் அவள் இதழ்களில் தேன்பருகி கொண்டே “லவ் யூ யது” என்றான் காதல் பொங்க.

திவி தன் முழு பலத்தையும் திரட்டி ஆதியை தள்ளிவிட்டாள். “நான் யது இல்ல! யது இல்ல இல்ல.. இல்ல.. ” என்று அறை அதிரும்படி கண்களில் நீர் வழிய கத்தினாள்.

சத்தம் கேட்டு அறைப்பக்கம் வந்தனர் ரோஜாவும்..  திவியின் சகோதரிகளும்..

ரோஜா”என்ன ஆச்சு மா?” என்று பதட்டத்துடன் கதவை தட்ட,

திவி தான் படுக்கையில் இருந்து அவசர அவசரமாக எழுந்தாள். “நாம கண்டது கனவா.? அந்த எருமை ஒரு நாள் பக்கத்துல வந்ததுக்கு கருமம் இப்படிலாம் கனவு வருது.. ச்சை” என்று தலையில் அடித்து விட்டு, தன்னை சமன்படுத்திக் கொண்டு வெளியில் வந்தாள்.

ரோஜா”என்ன ஆச்சு திவ்யா?”

திவி”ஓ.. ஒன்னும் இல்லமா.. ஒரு கெட்ட கனவு.. அதான்” என்று கூறினாள்.

ரோஜா அவளை நம்பாத பார்வை பார்த்து விட்டு “ம்ம் சரி திவ்யா. சீக்கிரம் கிளம்பு.. காலேஜ்க்கு டைம் ஆச்சு..” என்றார்.
.
.
.

இரவு அந்த டயரியை எடுத்தவன் முதல் பக்கத்தை பார்த்து விட்டு இறுகிய முகத்தோடு மூடி வைத்தான். அப்போது அதில் திவியும் யதுவும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் மற்றும் ஆதியின் சிறு வயது புகைப்படமும் இருக்க, அதனை எடுத்தவன் முகத்திலோ மனதில் பல வித குழப்பங்கள்.

“இவ யது வா.. ஆனா மீனா அறிமுகப்படுத்துறப்போ நான் பாத்தது திவிய தான.? மத்த பொண்ணுங்களும் திவிய தான யதுன்னு கூப்டாங்க.. ஏதோ அவன் மனதில் பொறி தட்ட மீண்டும் அந்த டயரியை எடுத்தான். அதே கவிதை..

என்னால் சென்றாய்..
என்னாலே வருவாயாடா.. என்னவனே…
உனக்காக உன்னவள் உயிராக காத்துகொண்டு இருக்கிறேன்.. உன் வரவுக்காக மட்டும்..

திவி – தியா பிரியாத பறவைகள்

அவளால வெளில போனேனா.?.. அப்போ அப்போ.. பாரதி சொன்ன ஆதி நான் தான் என்றவனின் முகத்தில் அத்தனை ஆனந்தம்.

அவளாலே வருவேன்.. ம்ம் ஆமா இன்னைக்கு அவ வீட்டுக்கு அவளால தான் போனேன்..

என் வரவுக்காக மட்டும்னா.. அப்போ எனக்காக தான் அவ இத்தனை வருஷம் காத்துகிட்டு இருந்தாளா என்றவனின் விழிகள் விரிய, இதயமோ தாறுமாறாக துடித்தது.

நான் அனாதை இல்ல.. எனக்காக தான் என் யது எல்லாம் டீடைல்லும் கலெக்ட் பண்ணி வச்சி இருக்கா..  அனைத்து குழப்பத்திற்கும் விடை கிடைக்க, இப்போது ரசனையுடன் அந்த டயரியின் அடுத்த பக்கத்தை திருப்பினான்.

டியர் தியா…

இன்று
உன்னைக் கண்டுகொண்டேன்..
உன் முகத்திலோ
வலியின் சாயல்
என் மனதிலோ
கீறல்களின் ரணம்..
மருந்திற்கும் உன் முகத்தில்
புன்னகை இல்லை..
காரணம் ஏனோ நான் தான்
என்பதை நீ அறிந்து இருக்கவில்லை..
அன்பால் உன்னைக் களவாடி..
உன் அன்னையின் அகம் சேர்க்கும்
வித்தாரக்கள்ளியாடா நான்!..”

உண்மையாலுமே நீ கள்ளி தான் டி.. அப்போ நான் உன்னை ஸ்கூல்ல பாத்தப்போவே நீ என்ன கண்டுபுடிச்சிட்ட.. கேடி..

அடுத்த பக்கத்தை திருப்ப,

ஏனடா.?
என் மனதிலும் குடிகொண்டு..
அவளின்
மனதிலும் வித்திட்டாய்..
இரு கண்களில்
எது வேண்டும் என்று கேட்டால்
மனித பிறவி நான்
என்ன டா செய்வேன்..
இதயத்தில் ரணம்..
கண்களில் ரத்தக்கண்ணீர்..
அதில் வற்றியதடா
என் காதல் கடல்..
வடு மட்டும் ஏனோ ஆழமாய்..!”

அப்போ யது ஐ மீன் யதுவர்ஷினி கூட என்னை… ஆனா நான் திவிய தான லவ் பன்னேன்.. இல்ல பன்றேன்.. “

உடனே சக்தியின் அறைக்கு விரைந்து அவனை அழைத்தான்..”டேய் சக்தி.. சக்தி.. கதவ தொற டா” என்று கத்த,

சக்தி அரை தூக்கத்தில் கதவை திறந்தான்”ஆஆஆஆ… என்ன டா.. இந்நேரத்துல எழுப்புற.?”

ஆதி”உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டா”

சக்தி”எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் டா.. மணிய பாரு 2.00 ” என்று கடுப்பாக கூற,

ஆதி”திவி யது வ பத்தி பேசணும்..” என்றான்.

அவன் குரலில் என்ன கண்டானோ “உ..உள்ள வாடா” என்றான்.

ஆதி”நான் திவியை லவ் பன்றன் டா”

சக்தி”அதான் ஏற்கனவே சொன்னியே டா”

ஆதி”நான் யதுவ லவ் பண்ணல.. திவிய லவ் பன்றேன்.. அவ தான் என் யது” என்றான் அழுத்தமாக,

சக்தி”என்ன டா குழப்புற.? இப்போ நீ என்ன தான் சொல்ல வர.?”

ஆதி”யது யாரு.?” என்றான் அவனின் முகத்தை ஆராய்ந்தபடி,

அதில் அதிர்ந்தவன்”யது.. யது.. யது தான் டா திவி திவ்யதர்ஷினி” என்றிட,

ஆதி”நான் கேட்டது யதுவர்ஷினிய பத்தி” என்றான் குரலில் சற்று கடுமையை காட்டியபடி.

சக்தி”அ..அது யாரு.?”

ஆதி”மறைக்காத சக்தி.. உண்மைய சொல்லு” என்று கத்தினான்.

சக்தியும் நடந்த அனைத்தையும் கூறினான். அவன் தான் தொலைந்த ஆதி என்பதும், யது அவனை காதலித்தாள் என்பதும், தற்போது அவள் உயிரோடு இல்லை என்பது என அனைத்தையும் கூறினான்.

ஆதி தான் தான் எவ்வாறு உணர்கிறோம் என்பதே அறியமுடியவில்லை. அப்படியே மெத்தையில் சரிந்தான். அவனருகில் விரைந்து சென்ற சக்தி ஆறுதலாக அவன் தோளை தொட, ஆதி அவனை அணைத்துகொண்டான்.

“நான்.. நான்.. அனாதை இல்லல டா.. எனக்கும் எ..எல்லாரும் இருக்காங்க. யது.. யது என் அத்தை பொண்ணா.?” என்றவனுக்கு அத்துணை மகிழ்ச்சி.

சக்தி அவனை வாஞ்சையுடன் பார்த்து அனைத்திற்கும் ஆம் என்று தலையசைத்தான். பிறகு சக்தி “நீ யதுவ அவ்ளோ லவ் பண்ணியா டா.?” என்றான் உடைந்த குரலில்.

ஆதி”இப்போவும் பன்றேன் டா.. ஐ லவ் யது. என் கூடவே இருக்குறவள, எனக்கானவள எப்டி டா லவ் பண்ணாம இருக்க முடியும்?” என்று கூறிய ஆதியை புரியாமல் பார்த்தான் சக்தி.

அவனின் பார்வையை உணர்ந்த ஆதி”நீ நினைக்குற யது ஐ மீன் யதுவர்ஷினி ய நான் லவ் பண்ணல.. என் யது என் திவ்யதர்ஷினிய தான் நான் லவ் பன்றேன்” என்றான் முகத்தில் புன்னகையை சூட்டியபடி.

சக்திக்கோ மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை. இத்தனை நாட்கள் நான் யதுவை காதலிக்குறேன் என்று ஆதி கூறியபோது உண்மை அறிந்தால் அவன் முற்றிலும் திவியை வெறுத்து விடுவான். ஆறு வருடங்களாக திவியின் உழைப்பு அவளின் காதல் என்னவாகும் என்றே பயந்து கொண்டு இருந்தான். ஆனால் இப்போது அனைத்து உண்மையும் அறிந்த பிறகு, திவியின் மேல் கோவம் கொள்ளாமல் அவளை நேசிக்கிறேன் என்கிறானே என்று உணர்ந்தவனுக்கு அத்துணை ஆனந்தம்.

ஆதி”இன்னும் உனக்கு புரியலையா.? அவ தான் டா என் குட்டச்சி.. நான் பாத்தது அவளோட கண்களை தான் டா.. உணர்ந்தது அவளோட ஸ்பரிசத்தை.. அவளோட வார்த்தைகள் தான் இப்போ நான் உயிர்ப்போட இருக்க காரணம்.. என்ன வீட்ட விட்டு துரத்துனால.. சோ பனிஸ்மெண்ட்டா வாழ்க்கை முழுக்க அவ என் கூட தான் இருக்கணும்” என்றான் காதலாக.

சக்தி அவனை அணைத்து கொண்டு “ரொம்ப சந்தோசம் டா.. போய் தூங்கு.. குட் நைட்”

ஆதி”ம்ம் குட் நைட் டா மச்சான்” என்று விட்டு உறங்க சென்றான்.

மறுநாள் பொழுது ஆதிக்கு சிறப்பாக தான் விடிந்தது.. என்றும் இல்லாத புத்துணர்ச்சி அவனிடம்..

எழுந்து கல்லூரிக்கு தயாரானவன் கண்ணாடி முன் நின்று
“ஓய் குட்டச்சி.. சீக்கிரம் உன்ன என்கிட்ட காதல சொல்ல வைக்கபோறேன் டி.. உன் ஆதி மாமா வ தான நீ பாத்து இருக்க, உன்னோட தியாவ நீ பாத்தது இல்லயே.. இனிமே பார்ப்ப” என்று விட்டு ஸ்டைலாக கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு கல்லூரிக்கு சென்றான்.

அதே நேரம் திவி கண்ணாடி முன் நின்று “இனிமே ஆதி பக்கம் போகவே கூடாது.. முக்கியமா அவன் கண்ணு.. பப்ப்பா.. அத மட்டும் பார்க்கவே கூடாது. டேய் மாமா.. என்ன நீ யதுவா தான பாத்து  இருக்க, அட்ராசிட்டி திவிய பாத்தது இல்லயே இனிமே பார்ப்ப” என்று விட்டு தான் அணிந்து இருந்த சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட்டு கல்லூரிக்கு விரைந்தாள்.

கனவு தொடரும்..🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்