Loading

காதல் – 63

 

அஸ்வதி விஹான் மற்றும் விஹான்னா மூவரும் மாணவர்களை அந்த பதினைந்து நாட்களும் காஷ்மீரின்  நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றனர்……..

 

மாணவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்……

 

அவர்களின் பதினைந்து நாட்கள் ட்ரிப் முடிவுக்கு வரும் நேரம் வந்தது……

 

இன்னும் இரண்டு நாட்களில்  அஸ்வதி மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு திரும்பியாக வேண்டும் அவளின் காதலனை விட்டு பல்லாயிரம் மையில் தூரம்  சென்றாக வேண்டும் இதெல்லாம் நினைத்து ஒரு வாரமாக அஸ்வதிக்கு தூக்கம் இல்லாமல் தவித்தாள்…….

 

ஏய் அஸ்வதி மணி ரென்டு ஆகப்போகுது இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க நாளைக்கு ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு ஸ்னோல ஸ்கேட்டிங் பண்ண போகனுமில்ல சீக்கிரம் தூங்குடி…..

 

அப்பொழுது அவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு அவன் நெஞ்சினில் முகம் புதைத்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்……..

 

தன்னுடைய ஆசை காதலி திடீரென்று அவ்வாறு அழுகவும் விஹான் பதறிப்போய்……

 

என்னாச்சு  அஸ்வதி?

ஏன் அழுகுற?

 

விஹான் இன்னும் ரெண்டு நாள் தான் உங்க கூட இருக்க முடியும் அப்புறம் நா சென்னை போய் ஆகனும்……

 

அட செல்லம்மா இதுக்கா அழுதுட்டு இருக்க?

 

என்ன நீங்க அசால்ட்டா சொல்லுறீங்க?ஏன் உங்களுக்கு என்ன விட்டு பிரியறத நினைச்சா கவலையா இல்லையா?

 

அதெல்லாம் டன் கணக்குல நெறய கவலை இருக்கு , ஆனா அதையே நினைச்சிட்டு இருந்தா இப்போ இருக்குற சந்தோஷமும் போயிடும் சோ இப்போ இந்த நொடிய என்ஜாய் பண்ணு தங்கமே……

 

என்னால அப்படி நினைக்க முடியலையே என்று அவள் மீண்டும் அழுக ஆரம்பித்தாள்……

 

சரி சரி உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லட்டா?அதை கேட்டா நீ ஹாப்பி ஆகிருவ…..

 

அப்படி என்ன ஹாப்பி நியூஸ்?

 

நா சென்னைல இருக்குற உன்னோட  காலேஜ்க்கு பிரின்சிபால் வாக்கன்ஸிக்கு அப்ளை பண்ணிருந்தேன்……

 

ஹே நிஜமாவா?  கிடச்சிருச்சா?  ஆமா எங்க காலேஜ்ல பிரின்சிபால் ரிடயர் ஆக போறாங்க?நீங்க செலக்ட் ஆகிட்டீங்களா ?என்று அவள் அவனின் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தி கொண்டு கண்கள் மின்ன ஆசையாக கேட்டு கொண்டு இருந்தாள்…….

 

செல்லமே எனக்கு இன்னும் ரிசல்ட் சொல்லல பட் கண்டிப்பா எனக்கு அந்த போஸ்ட் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்குது என்று அவன் அவளை இறுக்கமாக அனைத்து கொண்டான்……

 

கண்டிப்பா உங்களுக்கு அந்த போஸ்ட் கிடைக்கும் என்று அவள் அவனின் மார்பினில் சாய்ந்து கொண்டே உறங்கி போனாள்…….

 

இவ்வாறு இரண்டு நாட்களும் சந்தோஷமாகவும் , அதே சமயம் இருவரும் இருவரை விட்டு பிரித்து தூரமாக செல்ல போகிறோம் என்ற சிறு சோகமும் அவர்கள் மனதில் மாறி மாறி ஆட்டிப்படைத்து கொண்டு இருந்தது…….

 

இரண்டு நாட்களில் ஒன்றரை நாள் முடிந்து விட்டது நாளை  காலை அஸ்வதியும் மாணவர்களும் சென்னைக்கு கிளம்பியாக வேண்டும் …..

 

மாணவர்கள் அனைவரும் சோகமாக தங்களின் உடைமைகளை பேக் செய்து கொண்டு இருந்தார்கள்…….

 

அஸ்வதி எப்பொழுதும் போல சோகத்தில் தன் காதலனின் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டு இருந்தாள்…..

 

விஹான்னா தான் அவளின் உடைமைகளை பேக் செய்து கொண்டு இருந்தாள்……

 

அனைத்தும் பேக் செய்து விட்டாகியது….

 

அன்று இரவு சித்திக் அப்பா கேம்ப் ஃபயர் வைக்க அதை சுற்றி மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருந்தார்கள்……

 

சித்திக் அப்பா தான் முதலில் பேசினார்……

 

நா நெறய டிரிப்புக்கு கைட்டா இருந்துருக்கேன் ஆனா இந்த ட்ரிப் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஏன்னா என்னோட மருமக பொண்ணோட ஸ்டூடன்ட்ஸ் நீங்க அண்ட் என்னோட பையனும் பொண்ணும் நா இல்லாம தனியா ஒரு டிரிப்ப ஆர்கனைஸ் பண்ணி உங்க எல்லாரையும் நல்லபடியா எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வந்திருக்காங்க அதனால விஹான்னுக்கும் விஹான்னாவுக்கும் நம்ம ஒரு பெரிய கைதட்டல் குடுப்போம் என்று அவர் கூறவும் அங்கு பலத்த கரகோசம் கேட்டது…….

 

உங்களுக்கு இந்த டிரிப் எப்படி இருந்துச்சுன்னு சொல்லுறீங்ளா?என்று சித்திக் அப்பா கேட்கவும் அனைத்து மாணவர்களும் அந்த டிரிப்பில் அவர்களுக்கு கிடைத்த பயன அனுபவம் பற்றி கூறினார்கள்……

 

பிறகு அனைவரும் சித்திக் அப்பாவிடமும் பீவி அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கி விட்டு உறங்க சென்றனர்……

 

அஸ்வதி கவலையில் தன் காதலன் நெஞ்சினில் சாய்ந்து கொண்டு இருந்தாள்…….

 

விஹான் சீக்கிரம் எங்க காலேஜ் பிரின்சிபால் ஆகிடுங்க , சீக்கிரம் என்கிட்ட சென்னை வந்துருங்க என்று அவள் அவனின் சட்டையை பிடித்து கொண்டே உறங்கி போனாள் …….

 

மறுநாள் காலை அஸ்வதி மாணவர்களை அழைத்து கொண்டு ஏர்போர்ட் சென்றாள்…..

 

அவள் அங்கு செல்வதற்கு முன்பே விஹான் அங்கு நின்று கொண்டு இருந்தான்…..

 

விஹான்னா மாணவர்களையும் அவர்களின் உடைமைகளையும் சரி பார்த்து கொண்டு இருந்தாள்…….

 

அஸ்வதி விஹான்னின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களில் வழியும் கண்ணீரோடு அவனை பார்த்து கொண்டு இருந்தாள்……

 

என்னோட கண்ணம்மால்ல, செல்லகுட்டில்ல இப்படி அழுக கூடாது என்று அவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……

 

உங்களை விட்டு நா பிரிஞ்சி எப்படி இருக்க???

 

சீக்கிரம் நா உன்கிட்ட வந்துடுவேன்,இப்போ நீ அழுகாம ஊருக்கு போகனும் புரியுதா???

 

அவள் சரி என்பது போல தலை ஆட்டினாள்…….

 

அப்பொழுது அங்கு அர்ச்சனா மற்றும் ஹர்ஷா வந்து விட்டனர்……

 

அர்ச்சனா அஸ்வதியை கட்டி அணைத்து கொண்டு அழுதாள்…..

 

அஸ்வா ஐ மிஸ் யூ…..உங்கிட்ட பழகின கொஞ்ச நாளிலே எனக்கு உன்ன ரொம்ப புடிச்சி போயிடுச்சு, இப்போ நீ என்னோட பெஸ்ட் பிரன்ட் ஆயிட்ட, உன்னை நா ரொம்ப மிஸ் பண்ணுவேன் அஸ்வதி என்று அவள் அவளை கட்டி பிடித்துக் கொண்டு அழுதாள்……

 

ஹே ஹே அச்சு ஆமா அன்னைக்கு லாங் டிரைவ் போனீங்களே என்னாச்சு??

 

அஸ்வா அதை நா உனக்கு போன்ல சொல்லுறேன் என்று அர்ச்சனா வெக்கப்பட்டாள்…….

 

அடடே கெமிஸ்ட்ரி ப்ரொபசர்  வெட்கமெல்லாம் படுறாங்களே என்று அஸ்வதி ஹர்ஷாவிடமும் அர்ச்சனாவிடவும் சந்தோஷமாக பேசிவிட்டு தன்னுடைய காதலனை நீண்ட நேரம் இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு அவனின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்துவிட்டு அவர்கள் அனைவரிடமும் இருந்து விடை பெற்றுக் கொண்டு சென்னை நோக்கி சென்றாள்…….

 

பிறகு மீண்டும் அஸ்வதிக்கும் விஹானுக்கும் தொலைதூர காதல் போனில் தொடர்ந்தது…….

 

இவ்வாறு மூன்று மாதங்கள் இருவரும் போனில் தங்களின் காதலை வளர்த்து வந்தனர்……….

 

அஸ்வதி அவளவனை நினைத்து தனியாக உருகி கொண்டு இருந்தாள்…..

 

அன்று ஒரு நாள் அர்ச்சனா அஸ்வதிக்கு போன் செய்து பேசினாள்…..

 

என்ன பிசிக்ஸ் வாத்தியாரே எப்படி இருக்கீங்க?

 

நல்லா இருக்கேன் கெமிஸ்ட்ரி வாத்தியாரே நீங்க எப்படி இருக்கீங்க?உங்க ஆசை காதலன் எப்படி இருக்காரு?

 

எல்லாரும் சூப்பர்டி…..

 

ஆமா அச்சு அன்னைக்கு லாங் டிரைவ் போனீங்களே என்ன ஆச்சு? எப்படி ஓகே ஆச்சு?

 

அஸ்வா அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் ரோடு நீண்டுட்டு  போற வரை நாங்களும் போயிட்டே இருந்தோம் அப்போ ……

 

அப்போ???

 

ஹர்ஷா ஒரு காஃபி ஷாப்ல கார நிறுத்தினாரு…..

 

சரி ரெண்டு பேரும் அங்க போயி ஃபில்டர் காஃபி குடிச்சீங்களா?

 

ஆமா எப்படி கரெக்ட்டா சொல்லுற?

 

அந்த ஹர்ஷா கழுதைக்கு ஃபில்டர் காஃபிதான் ரொம்ப பிடிக்கும் அதான் உனக்கும் அதே வாங்கி குடுத்துருப்பான்……

 

ஓஹோ நீ அப்படி சொல்லுறியா??

 

ஆமா நெக்ஸ்ட் என்ன ஆச்சு?

 

ஹர்ஷா நீங்க சின்ன வயசுல எப்படி ஒன்னா இருந்தீங்கன்னு சொன்னாரு அப்புறம் ஃபாத்திமா அம்மா அண்ட் சுல்தான் அப்பா பத்தியும் நிறைய நிறைய சொன்னாங்க அப்புறம் விஜய் அப்பா, வாணி அம்மா, ஆக்னஸ் சிஸ்டர், மரியா சிஸ்டர் பத்தியும் நிறைய சொன்னாரு……

 

அடியே எங்கள பத்தி நா கேக்கல, உங்க ரெண்டு பேர பத்தி என்ன பேசுனீங்க?

 

சரி நா ஃப்ளாஷ்பேக் சொல்ல போறேன் அப்படியே மேல பாரு…..

 

கொடுமை என்று அஸ்வதியும் ஒன்றும் தெரியாத விட்டத்தை வெறித்து கொண்டு அவள் கூறுவதை கேட்டாள்……

 

வாங்க நம்மளும் மேல பாத்து ஃப்ளாஷ்பேக்க தெரிஞ்சிப்போம்……

 

அர்ச்சனா எனக்கு உங்களுக்கு என்ன பதில் சொல்லனும்னு தெரியல…..

 

ஓகேன்னு சொல்லுங்க ஹர்ஷா சார்…..

 

அவள் அவ்வாறு கூறவும் அவன் சிரித்து விட்டான்…….

 

நா இதுக்கு முன்னால யாரையும் லவ் பண்ணது இல்ல , அதனால எனக்கு நீங்க என்ன லவ் பண்றதா சொன்ன உடனே எனக்கு ஆச்சரியம் தான் வந்துச்சு, நம்மளயும் ஒரு பொன்னு விரும்புறான்னு…….

 

ஹலோ மிஸ்டர் ஹர்ஷத் கான் நாங்க மட்டும் நாளைக்கு ஒரு ஆளுன்னு லவ்  பண்ணிட்டு திரியுறமோ??

 

இல்ல ….இல்ல நா அப்படி சொல்லல…..

 

சார் நீங்க என்ன தப்பா நினைக்கிறீங்கன்னு புரியுது , இப்படி ஒரு பொன்னே லவ் சொல்லுறாளேன்னு என்ன தப்பா நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது…..

 

இல்ல ….

இல்ல….அப்படி இல்ல அர்ச்சனா , எனக்கு இந்த உணர்வு புதுசா இருக்குன்னு சொன்னேன் , அண்ட் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அண்ட் உங்க பேச்சு என்ன மாதிரியே துறுதுறுன்னு இருக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு அண்ட் நம்ம ரெண்டு பேரும் ஒன்னா சேந்தா ஜாலியா இருக்கலாம் ……

 

அதான் நானும் சொல்ல வந்தேன் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலியா வாழ்க்கைய வாழலாம்ன்னு…….

 

அண்ட் எனக்கு உங்க அம்மா அப்பாவ பாக்கனும் போல இருக்கு , நீங்க சொல்லுறத பாத்தா அவங்களும் உங்கள போலவே ஜாலியா இருப்பாங்க போல…..

 

ஆமா அச்சு எங்க அம்மா அப்பா ரொம்ப ஜாலி டைப் , உன்ன அவங்களுக்கு ரொம்ப புடிக்கும்…..

 

என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா?

 

கண்டிப்பா என்று அவன் அவளை அவன் வீட்டிற்க்கு அழைத்து சென்றான்…..

 

அங்கு அவனின் தாயாரும் தந்தையும் அவளை தங்களது மகளாக பாவித்தனர்…..

 

இதான் அஸ்வா என்னோட ஃப்ளாஷ்பேக்……

 

ச்சே செமடி ஒரே நாளிலேயே லவ் ஓகே பண்ணி மாமனார் மாமியாரயும் ஓகே சொல்ல வச்சிட்ட கலக்குடி……

 

இவ்வாறு அர்ச்சனா , ஹர்ஷா அஸ்வதியிடம் அடிக்கடி பேசுவதுண்டு ……

 

அஸ்வதி தனியாக விஹான்னை நினைத்து உருக , விஹான்னோ ஹர்ஷத்தை வாட்டி வதைத்தான்….

 

அன்று ஒரு நாள் நண்பர்கள் இருவரும் இரவு நேரத்தில் ரோட்டில் நடந்து கொண்டு இருந்தார்கள்…….

 

அப்பொழுது அங்கு போடப்பட்டிருந்த விளக்குகள் மின்னி மின்னி எரிந்தது…..

 

மச்சான்……

 

என்னடா விஹான்???

 

இந்த லைட் எல்லாம் என்ன பாத்து கண்ணு அடிக்குது, என்னோட அஸ்வி மட்டும் தான் என்ன பாத்து கண்ணு அடிக்கனும்……

 

அடேய் இவனே பேய் வர போற சிக்னல் இது சும்மா இருடா பேய் கீய் எதும் வந்துற போகுது……

 

வரட்டும்டா பேச்சு துணைக்கு பேசிட்டே போலாம் , ஆமா ஹர்ஷா

“காதல் அழகானதா?

இல்லை அறிவானதா ?

காதல் சுகமானதா ?

இல்லை சுமையானதா?”……..

 

எனக்கு கடுப்பானது , நானே பேய் எதும் வந்துருமோன்னு பயந்துட்டு இருக்கேன் நீ வேற சும்மா வாயேன்டா……

 

ஹர்ஷா ……

 

என்னடா…..

 

என்னோட அஸ்வி எப்படி தெரியுமா??

 

எப்படி??

 

அவ தீ போல் பூச்செடி

போனதே என் மூச்சடி

அவளால் தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி”……..

 

சரி ரைட்டு நெக்ஸ்ட்டு……

 

அவ மூச்சாகி போனாளே உயிருல

எனக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைபுல

நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு”……..

 

சரி ரைட்டு நெக்ஸ்ட்டு……

 

அப்பொழுது ஹர்ஷாவிற்க்கு அர்ச்சனா போன் செய்தாள்…….

 

ஹலோ சொல்லுமா……

 

என்னங்க பண்ணுறீங்க?

 

இந்த விஹான் அவனோட ஆள பத்தி நினைச்சி பாடிட்டு வாரான் , எனக்கு தான் கேட்டு கேட்டு காது புளிச்சி போச்சு…….

 

விஹான் சார் அஸ்வாவ நினைச்சி பாடுறாங்க உங்களுக்கு நா பக்கத்துலயே இருக்குறதுனால என்னோட அருமை உங்களுக்கு தெரியல…….

 

அடியே அப்படி இல்ல,இவன் பாட்டு , புலம்பல் கேட்டு கேட்டு காது புளிச்சி போச்சுடி………

 

சரி சரி ரெண்டு பேரும் ரொம்ப நேரம் குளிருல சுத்தமா சீக்கிரம் வீட்டுக்கு போங்க……

 

சரிம்மா , லவ் யூ…..

 

ஹான் லவ் யூ……

 

இவ்வாறு அவர்களின் நாட்கள் மகிழ்ச்சியாக சென்றது……

 

ஒரு நாள் அஸ்வதி விஹானிடம் பேசிவிட்டு வெளியே ஹாலுக்கு வந்தாள் அங்கே அவள் கண்ட காட்சி அவளை மிரள வைத்தது………..

 

தொடரும்……..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…………..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்