Loading

 

 

 

 

படப்பிடிப்பு ஆரம்பித்தது. ‘ஆக்ஷன்’ என்றதும் திவ்யா அதாவது மேகா ஓடி வந்தாள். மரங்களை சுற்றி இருந்த கல் இருக்கையில் எல்லோருடைய பைகளும் சிதறிக்கிடந்தது. அதில் அவளது தோழியின் புத்தகப்பையை திறந்தாள்.

 

அதற்குள் இருக்கும் ஒரு நோட்டை எடுத்துக் கொண்டு மூடப்போகும் போது எதோ கண்ணில் பட எடுத்துப் பார்த்தாள்.

 

உள்ளே இருந்த காகிதங்களை பார்க்க அதில் காதல் கவிதை எழுதி இருந்தது.

 

“ஓ… நமக்கு தெரியாம லவ் எல்லாம் பண்ணுறாளா… பிள்ள பூச்சினு நினைச்சா காதல் வர்ர அளவு வளர்ந்துடுச்சு.. யாரா இருக்கும்?” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு காகிதங்களை வேகமாக புரட்டினாள்.

 

உள்ளே பெயர் எதுவும் எழுதப்படவில்லை. உடனே “ச்சே” என்று வைத்தவள் எதோ தோன்ற வேகமாக வேறு புத்தகத்தை எடுத்து புரட்டினாள். அதிலும் எதுவும் கிடைக்காமல் இருக்க கடைசியாக இருந்ததை எடுத்து பார்த்தாள்.

 

உள்ளே கடைசி பக்கத்தில் மேகாவின் காதலனின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. மூன்று பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம். அதில் மேகாவை வெட்டி விட்டு இருவரை மட்டும் ஒட்டி இருந்தாள். அதை பார்த்து அதிர்ந்து போய் நிற்க “கட்” என்ற சத்தம் கேட்டது.

 

திவ்யா அந்த பையை அங்கேயே வைத்து விட்டு வர “ச்சே.. சான்ஸே இல்ல.. எப்படிங்க?” என்று அவளோடு நடிக்கும் நாயகி கேட்க திவ்யா புன்னகைத்து வைத்தாள்.

 

“ஓகே.. நெக்ஸ்ட் சீன் லேப்க் குள்ள..” என்றதும் எல்லோரும் லேப் பக்கம் நகர்ந்தனர். திவ்யா மட்டும் மஞ்சுளாவை தேடினாள்.

 

அவளது தேடலை உணர்ந்து மஞ்சுளா ஓடி வந்தாள்.

 

“அடுத்த சீன்க்கு மேக் அப் கொஞ்சம் மாத்தனும்னு சொன்னாங்க. என்னனு கேட்டுட்டு வா” என்று கூறினாள்.

 

அவளது முகம், அதிர்ந்த முகமும் ஓடி களைத்ததால் வியர்த்த முகமுமாக மாற்றப்பட்டது. அடுத்த காட்சி செய்முறை கூடத்தில் நடந்தது.

 

மேகா அவள் எடுத்து வந்த நோட்டை கொடுக்க அவளது தோழி சிரிப்போடு வாங்கிக் கொண்டு சென்றாள்.

 

திவ்யா அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க அந்த காட்சி முடிவுக்கு வந்தது. அங்கு மாணவர்கள் போல் நடித்துக் கொண்டு நின்றிருந்தவர்கள் சிலர் திவ்யாவை சூழ்ந்து கொள்ள அவர்களிடமிருந்து பிரித்து வெளியே அழைத்து வந்தனர்.

 

திவ்யாவும் மஞ்சுளாவும் கேரவேன் அருகில் வர அங்கு அர்ஜுன் நின்று இருந்தான்.

 

திவ்யா அவனை பார்த்து விட்டு அதிர்ச்சியில் நின்று விட்டாள்‌.

 

“மஞ்சு.. அங்க நிக்குறவனா பார்த்தா அர்ஜுன் மாதிரியே இல்ல?”

 

“மாதிரி எல்லாம் இல்ல அவன் தான். அவன் ஒருத்தனையே சமாளிக்க முடியல மாதிரி வேற கேட்குதா உனக்கு?”

 

“ஹே இல்ல பா.. என் கண்ணுக்கு தான் அப்படி தெரியுதோனு நினைச்சேன். இங்க என்ன பண்ணுறான்?”

 

“போய் கேளு தெரியும்.” என்று பேசிக் கொண்டே அருகில் வந்து விட்டனர்.

 

“ஹாய்..”

 

அர்ஜுன் புன்னகையுடன் கையாட்ட திவ்யா அவனை மேலும் கீழும் பார்த்து வைத்தாள்.

 

“ஏன் இப்படி பார்க்குற?” என்று கேட்டு தன்னைத்தானே குனிந்து பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் மஞ்சுளாவிற்கு சிரிப்பு வந்து விட திரும்பிக் கொண்டாள்.

 

“ஒன்னும் இல்ல.. நீ அர்ஜுன் தான? இல்ல வேற யாருமா?”

 

“நானே தான்”

 

“ஓ… சரி இங்க என்ன பண்ணுற?”

 

“உன்ன பார்க்க தான் வந்தேன்”

 

“என்னையா? என்ன விசயம்?”

 

“சாப்பிட்டியா?”

 

மஞ்சளா பக்கென சிரித்து விட திவ்யா அவளை முறைத்து வைத்தாள். அப்போதும் மஞ்சுளாவின் சிரிப்பு நிற்கவில்லை.

 

“வாய மூடுடி…” என்று அவளை அதட்டி விட்டு “என்ன நக்கலா?” என்று அர்ஜுனிடம் பாய்ந்தாள்.

 

“சாப்பிட்டியானு கேட்குறதுக்கு பேரு நக்கலா?”

 

“அர்ஜுன் பொறுமை ஒரு அளவுக்கு தான்”

 

“நாம உள்ள போய் பேசலாமா?”

 

“வந்து தொலை” என்றவள் வேனில் ஏறி உள்ளே சென்று விட்டாள். அர்ஜுன் மஞ்சுளாவிடம் கண்ணைகாட்டி விட்டு உள்ளே சென்றான். மஞ்சுளா வெளியே போன் பேசுவது போல் நின்று விட்டாள்.

 

“என்ன விசயம்?”

 

“சாப்பிட்டியானு கேட்டேன். இன்னும் பதில் சொல்லல நீ”

 

“சாப்பிடல.. வேற என்ன?”

 

“சும்மா உன்ன பார்க்க வர கூடாதா?”

 

“இத நான் நம்பனும்?”

 

“என்ன நம்ப மாட்டியா ?” என்று கேட்டவன் அங்கிருந்த மேசையில் அமர்ந்து கொண்டான்.

 

“டேய்.. என் கிட்டயே வா.. நீ சூட்டிங் நடக்குற இடத்துக்கு வந்துருக்கனா கண்டிப்பா விசயம் இருக்கு”

 

“உன்ன பார்க்கனும் போல இருந்துச்சு அதான் வந்தேன்னு சொன்னா நம்புவியா?”

 

அர்ஜுன் கண்சிமிட்டி கேட்க திவ்யா அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

 

“பார்த்தியா.. நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டிற”

 

“உண்மைய பேசேன்டா”

 

“சொல்லுறேன் சொல்லுறேன். நான் இப்போ மும்பை போறேன். அங்க ஒரு வேலை வந்துடுச்சு. முடிச்சுட்டு வர ரெண்டு நாள் ஆகும்.”

 

“அதுக்கு?”

 

“அத சொல்லிட்டு போக தான் வந்தேன். அப்பாவும் அவார்ட் பங்சன்னு பிசியா இருக்கார். வீட்டுல இல்ல. சரி உன் கிட்ட சொல்லிட்டு போகலாமேனு வந்தேன்”

 

“இப்பவும் நம்ப முடியல.. இத நீ போன்ல சொல்லி இருக்கலாம். இல்ல மஞ்சுக்கு மெஸஜ் பண்ணி இருக்கலாம். நேர்ல அதுவும் இங்க வந்து நிக்கிறியே”

 

“நான் வர கூடாதா?” என்று கேட்டவன் வேகமாக திவ்யாவின் அருகில் வர விழிவிரித்து பார்த்தாள்.

 

அர்ஜுன் புருவம் உயர்த்த அவளுக்கு சிரிப்பு வந்தது. உதட்டை கடித்துக் கொண்டு “சூட்டிங் இங்க தான்னு யார் சொன்னது?” என்று கேட்டாள்.

 

“காலையில மஞ்சு சொன்னா.. இந்த காலேஜ்ல தான் சூட்டிங் நடக்குதுனு”

 

“ஓ.. அதுனால சார் என்ன தேடி ஊருக்கு போற விசயத்த சொல்ல வந்துருக்கீங்க.”

 

“பின்ன உன்ன மிஸ் பண்ணி வந்தேன்னா நினைச்ச?” என்று கேட்டவன் வேகமாக அவளை அணைத்துக் கொள்ள இமைமூடித்திறந்து ஆச்சரியத்தோடு அவன் முகத்தை பார்த்தாள்.

 

“என்ன?” என்று ரகசிய குரலில் அர்ஜுன் பேச திவ்யாவிற்கு இப்போதும் சிரிப்பு வந்தது. கூடவே வெட்கமும் வர முகத்தை திருப்பிக் கொண்டு “நம்புற மாதிரி இருந்தா நம்ப மாட்டோமா?” என்று கேட்டாள்.

 

அவள் தலையில் வலிக்காமல் முட்டியவன் “வர ரெண்டு நாள் ஆகும். வந்தப்புறம் உன் கிட்ட ஒரு விசயம் சொல்லுறேன்” என்றான்.

 

அவனது கையை விலக்கி விட்டவள் “வெயிட் பண்ணுறேன்” என்றாள். அந்நேரம் கதவு தட்டப்பட்டது.

 

திவ்யா சென்று கதவை திறக்க “இந்தாங்கடா சோறு.. தின்னுட்டு அப்புறம் உங்க வேலைய கண்டினியூ பண்ணுங்க” என்று மஞ்சுளா கொடுக்க “நீயும் வா” என்றாள் திவ்யா.

 

“வேணாம்பா.. எனக்கு எதுக்கு நந்தி கரடி பட்டம் எல்லாம். நான் தனியாவே சாப்பிட்டுக்கிறேன்” என்று கூறி விட்டு சென்று விட்டாள்.

 

“இவ என்ன உள்ள வராம போறா..”

 

“நான் தான் வர வேணாம்னு சொன்னேன்”

 

“நீயா? ஏன்?”

 

“இதுக்கு தான்” என்றவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

 

நடிப்பதில் மட்டுமே நடந்த விசயங்களை மனதுக்கு பிடித்தவன் தரும்போது திவ்யா உறைந்து நின்றாள். கன்னங்கள் சிவந்து போக “நீ சாப்பிடு.. எனக்கு நேரமாச்சு கிளம்புறேன்” என்றான்.

 

“எப்போ ஃப்ளைட்?”

 

“நேரா ஏற்போர்ட் தான் போறேன்”

 

“சாப்பிடல?”

 

“ம்ஹும். கிளம்புறேன். பை” என்றவன் கன்னத்தை தட்டி விட்டு வெளியே சென்றான்.

 

திவ்யா கன்னத்தை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள். அவன் எங்காவது தூரமாக போகும் போதெல்லாம் இப்படி செய்கிறான் என்பது மனதில் பதிந்தது. அந்த இனிமையை விட்டு வெளியே வர பிடிக்காமல் சாப்பிடாமலே அமர்ந்து விட்டாள்.

 

வெளியே வந்த அர்ஜுன் சற்று தள்ளி நிற்கும் மஞ்சுளாவை அழைத்தான். அவளும் வேகமாக வந்தாள்.

 

“வர ரெண்டு நாள் ஆகும். எதுவும்னா கால் பண்ணு புரியுதா?”

 

“ம்ம்.‌..”

 

வேறு எதோ அவன் மஞ்சுளாவிடம் பேசிக் கொண்டிருக்க அபிமன்யு வந்து நின்றான். அவனை பார்த்து விட்டு மஞ்சுளா கதவை தட்ட கனவுலகத்திலிருந்து திவ்யா வெளியே வந்தாள். வேகமாக அவள் கதவை திறக்க அர்ஜுன் அபிமன்யு மஞ்சுளா மூவரும் நின்று இருந்தனர். அவளும் இறங்கி வந்தாள்.

 

“யார் இது?” என்று அர்ஜுன் கேட்க “ப்ரடியூஸரோட ஃப்ரண்ட்.” என்றாள்.

 

“ஓ.. நைஸ் டூ மீட் யூ”

 

அர்ஜுன் கை நீட்ட அபிமன்யுவிற்கு வெறுப்பாக இருந்தது. ஆனாலும் திவ்யா பார்ப்பதால் கை குலுக்கினான்.

 

“அர்ஜுன்”

 

“அபிமன்யு”

 

“அட என் மகனா ?”

 

அர்ஜுன் கேட்டதும் மஞ்சுளாவிற்கும் திவ்யாவிற்கும் சிரிப்பு வந்துவிட அவசரமாக உதட்டை கடித்து நிறுத்தினர்.

 

அபிமன்யு புரியாமல் பார்க்க “அர்ஜுனுக்கு பையன் தான அபிமன்யு. அத சொன்னேன்” என்றான்.

 

பல்லை கடித்துக் கொண்டாலும் புரிந்ததற்கு அடையாளமாக தலையாட்டி வைத்தான்.

 

“நீ சாப்பிடலையா? போய் சாப்பிடு போ” என்று திவ்யாவை அனுப்பி வைக்க அவளோடு மஞ்சுளாவும் உள்ளே சென்று விட்டாள்.

 

அர்ஜுன் அபிமன்யுவின் தோளில் கை போட்டு இழுத்துக் கொண்டு சென்றான். சுற்றி ஆட்கள் இருப்பதால் அபிமன்யுவால் அவன் கையை தட்டி விட முடியவில்லை. தனியாக வந்ததும் அர்ஜுனே எடுத்து விட்டான்.

 

“திவ்யான்ஷி பின்னாடி சுத்துறீங்க போல?” என்று சுற்றி வளைக்காமல் அர்ஜுன் நேரடியாக விசயத்திற்கு வர அபிமன்யு அவனை கூர்ந்து பார்த்தான்.

 

“ஆமாவா இல்லையா?”

 

“ஆமா”

 

“என்ன லவ்வா?”

 

“ஆமா”

 

“ம்ம் சூப்பர்.. அந்த பக்கம் ரெஸ்பான்ஸ் எப்படி?”

 

அபிமன்யு ஒரு நொடி அமைதி காத்தான். பிறகு “ஒரு நாள் திவ்யாக்கும் என்ன பிடிக்கும்” என்றான்.

 

இதை கேட்டதும் அர்ஜுன் சிரித்து விட்டான். அபிமன்யு அவனது சிரிப்பு தன்னை அவமான படுத்துவதாக உணர்ந்தான்.

 

“உனக்கு ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லனும்னு தான் எனக்கும் ஆசை. ஆனா அது கஷ்டம்”

 

“எது?”

 

“திவ்யாவ லவ் பண்ண வைக்கிறத சொல்லல.. அவள லவ் பண்ணுறதே கஷ்டம்”

 

“அப்படினா?”

 

“சரியா சொல்லனும்னா ஒன்பது வருசத்துக்கு முன்னாடி என் காதல சொன்னேன். உடனே ஏத்துக்கிட்டா.. ஆனா அதுக்கப்புறம் தான் பிரச்சனையே வந்தது.”

 

“அப்போ நீ அவளுக்கு பொறுத்தம் இல்லனு அர்த்தம்”

 

“மே பி.. பட் அவளுக்கும் என்ன பிடிச்சுருக்கே”

 

“பொருத்தம் இல்லனு தெரிஞ்சப்புறம் கண்டிப்பா மறந்துடுவா”

 

“இதுக்கும் மே பி. பட் அவள லவ் பண்ணுறதுல இருக்க ஒரு கஷ்டம் சொல்லட்டா?”

 

அபிமன்யு அமைதியாக இருக்க “கோபம் வந்துட்டா சண்டை எல்லாம் போட மாட்டா.. நேரா கொலை தான். என்ன இது வரை மூனு தடவ கொல்ல ட்ரை பண்ணி இருக்கானா பாரேன்” என்றான்.

 

அபிமன்யு அதிர்ந்து போய் பார்த்தான். பிறகு அவனது பார்வை சந்தேகமாக மாறியது.

 

“இத உன்ன பயமுறுத்த எல்லாம் சொல்லல. யாரு செஞ்ச புண்ணியமோ.. இல்ல அவளுக்கே கொஞ்சம் கருணை இருக்கோ.. இன்னும் உயிரோட இருக்கேன். நீ வேற அவள லவ் பண்ணுறேன்னு சொல்லுற. தைரியமா நேர்ல சொல்லிடு. அப்படி பண்ணாம கோப படுத்திட்டனு வை.. உனக்கும் அதே….” என்றவன் கழுத்துக்கு குறுக்காக விரலை வைத்து கொல்வது போல் சைகை செய்தான்.

 

“சோ.. பீ ப்ரேவ் மகனே..” என்று அவனது தோளில் தட்டி விட்டு சென்றுவிட்டான்.

 

அர்ஜுன் பேசிய மற்ற விசயங்களை புறம் தள்ளிய அபிமன்யுவால் ஒன்பது வருடமாக இருவரும் காதலிப்பதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில் திவ்யாவே அவனை கொலை செய்ய முயற்சித்து இருக்கிறாள்.

 

அப்போதே செத்து போயிருக்க கூடாதா என்று அவனுக்குள் இருக்கும் இரக்கமற்ற மனம் கூற காதல் மனமோ இவன் இருக்கும் போதே திவ்யாவை ஜெயித்து காட்டுகிறேன் என்று சவால் விட்டது.

 

அர்ஜுன் திவ்யாவோடு வேனுக்குள் செல்லும் போதே அபிமன்யு பார்த்து விட்டான். மஞ்சுளாவும் செல்வாள் என்று பார்க்க வெளியே நின்று விட்டாள். அபிமன்யுவிற்கு தான் நெருப்பில் நிற்பது போல் இருந்தது.

 

அவன் வெளிய வரும் வரை அபிமன்யுவால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. வந்ததும் ஓடிப்போய் திவ்யாவிடம் பேசலாம் என்றால் நடுவில் நின்று கொண்டான்.

 

அதன் பின்பு இப்படி தனியாக அழைத்து பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. அபிமன்யு அவன் சொன்னதையே நினைத்துக் கொண்டிருக்க திவ்யா படபிடிப்புக்கு சென்று விட்டாள்.

 

காரில் சென்று கொண்டிருந்த அர்ஜுன் “வேலை முடிஞ்சது” என்று மஞ்சுளாவிற்கு செய்தி அனுப்பி விட்டு அமைதியாகி விட்டான்.

 

*.*.*.*.*.*.

 

அன்று இரவு முழுவது தூங்காமல் யோசித்து அபிமன்யு ஒரு முடிவுக்கு வந்தான். முதலாவதாக அர்ஜுன் சொன்னதை முழுவதுமாக அவனால் நம்ப முடியாது. திவ்யான்ஷி இது வரை காதல் என்று எங்குமே பேசியது இல்லை. அதனால் அதை அவள் வாயிலேயே ஒப்புக் கொண்டால் தவிர அவன் யார் சொல்வதையும் நம்ப மாட்டான்.

 

இரண்டாவதாக திவ்யாவிடம் தன் காதலை வெளிபடுத்திவிடுவது. அதன் பிறகு அவள் மறுத்தாலும் கூட அவன் காத்திருக்கலாம். ஆனால் சொல்லாமல் இருந்து கடைசியில் வேறு எதுவும் நடந்து விடக் கூடாது.

 

கடைசியாக அந்த அர்ஜுன். அவன் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அவனுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும். 

 

அதன் படி வழக்கம் போல் திவ்யாவின் காட்சி முடியும் நேரம் வந்து சேர்ந்தான். திவ்யா வீட்டுக்கு கிளம்ப “உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசனும்” என்று கூறி நிறுத்தினான்.

 

திவ்யாவும் மஞ்சுளாவை அனுப்பி விட்டு அவன் பேசுவதை கேட்பது போல் நின்று கொண்டாள்.

 

“ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்”

 

“ஏன்?”

 

“ப்ளீஸ்”

 

“ஓகே.. கேளுங்க”

 

“நீங்க சிங்கிள் தானே?”

 

“அத சொல்லனும்னா ஏன் கேட்குறீங்கனு சொல்லுங்க”

 

“அது வந்து…”

 

“வந்து?”

 

“நான்… நான் உங்கள லவ் பண்ணுறேன். ஐ லவ் யூ”

 

“இத என்னோட எல்லா ஃபேன்ஸும் தான் சொல்லுவாங்க”

 

“இல்ல இல்ல.. இது அப்படி இல்ல.. நான் நிஜம்மாவே லவ் பண்ணுறேன்.. உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது? சீரியஸா…”

 

“போதும்” என்று கை காட்டி நிறுத்தினாள்.

 

“சோ நீங்க என்ன லவ் பண்ணுறீங்க. நான் சிங்கிளா இல்லையானு தெரிஞ்சுக்கனும்?”

 

“ம்ம்..”

 

“சாரி.. அத என்னால இப்போதைக்கு வெளிய சொல்ல முடியாது”

 

“அப்போ..”

 

“உங்க லவ்வா?”

 

“ஆமா.”

 

“அதுக்கும் சாரி.. எனக்கு உங்க மேல அப்படி எந்த அபிப்பிராயமும் இல்ல”

 

“இப்பவே முடிவு பண்ணா எப்படி?”

 

“வேற எப்போ முடிவு பண்ணனும்?”

 

“கொஞ்ச நாள்ல உங்க மனசு மாறலாமே”

 

“மாறலனா?”

 

“மாறுற வரை காத்திருப்பேன்”

 

“சப்போஸ் வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்டா?”

 

அபிமன்யு பதில் சொல்ல முடியாமல் நின்றான்.

 

“இங்க பாருங்க. இதெல்லாம் மறந்துடுங்க. ஜஸ்ட் நாலு நாள் பேசுனதுல வர்ரதெல்லாம் லவ் இல்ல”

 

“எனக்கு உங்கள பல வருசமா தெரியும்”

 

“சோ..”

 

“சோ இது நிஜம்மான காதல் தான்”

 

“என்ன உங்களுக்கு ஒரு நடிகையா தெரியும். ஒரு நடிகை மேல வர்ரதெல்லாம் ஜஸ்ட் க்ரஸ் தான். நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு இப்படி பேசாதீங்க”

 

“இல்ல திவ்யா.. நான் சரியா தான் பேசுறேன். உங்க முதல் படத்துல இருந்தே உங்கள எனக்கு தெரியும்”

 

“சரி வேற என்ன தெரியும்?”

 

“உங்க ஒரிஜினல் பேர் அம்ரிதானு தெரியும். உங்க குடும்பம் இருக்க ஊர்க்கு எல்லாம் நான் போய் பார்த்துருக்கேன். பட் உங்க அம்மாவ என்னால பார்க்க முடியல. ஆனா உங்க ஊர எல்லாம் சுத்தி பார்த்து உங்கள பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். உங்கள வெறும் நடிகையா பிடிச்சா நான் இதெல்லாம் செய்ய மாட்டனே”

 

அவன் சொல்வதை எல்லாம் கேட்டு முடித்தவள் “அப்புறம் ஏன் எனக்கு கொடுத்த ஃப்ரஸ்னர்ல கேமரா வச்சீங்க?” என்று கேட்டாள்.

 

அபிமன்யு வாயடைத்துப்போய் நிற்க “உங்க மனசுல காதல் இருக்குனு சொன்னீங்க. சரி.. காதலுக்கும் கேமராக்கும் என்ன கணெக்ஷன்? அது ஏன் என் வீட்டுக்கு வந்துச்சு? அதுக்கு எதுவும் ரீசன் இருக்கா?” என்று கேட்டாள்.

 

“அது..”

 

“சொல்லுங்க”

 

“அது வந்து.. தப்பா எதுவும் நான் நினைக்கல. உ.. உங்களோட பழக்க வழக்கம் தெரிஞ்சுக்கனும்னு..”

 

“அதுக்கு எங்க வேணா கேமரா வைப்பீங்களா? என் பழக்க வழக்கம் உங்களுக்கு எதுக்கு? அதெல்லாம் தெரிஞ்சுட்டு அத வச்சு என்ன இம்ப்ரஸ் பண்ணலாம்னா?”

 

மீண்டும் அபிமன்யு அமைதியாக நிற்க “அப்படி தான் இல்ல.. என்ன கண்கானிச்சு அத வச்சு எனக்கு பிடிச்சதெல்லாம் பண்ணி என் கவனத்த கவர்ந்து உங்க மேல காதல வர வைக்குற ப்ளான். ஆக்ட்சுவலி இது படத்துக்கு நல்லா செட் ஆகும். ஹீரோயின்க்கு பிடிச்சத அவ ஃப்ரண்ட் கிட்ட கேட்டு தெரிஞ்சுட்டு அத வச்சு இம்ப்ரஸ் பண்ணுறது… பட் நீங்க கொஞ்சம் அட்வான்ஸா கேமராக்கு போயிருக்கீங்க” என்றாள்.

 

அபிமன்யுவிற்கு தன் மீதே கோபம் வர அமைதி காத்தான்.

 

“நீங்க என்ன இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணதுல தப்பே இல்ல. ‌ஆனா அதுக்கு முன்னாடி என்ன தெரிஞ்சுக்க எடுத்த வே தப்பு. இத வேற யாரும் பண்ணி இருந்தா இன்னேரம் நடக்குறதே வேற. உங்கள அவ்வளவு சீக்கிரம் என்னால சந்தேக பட முடியல. அதான் விட்டு வச்சேன். இப்போ உறுதியானாலும் உங்கள தண்டிக்க எனக்கு மனசு வரல. காதல் நிஜம்மாவே பைத்தியகாரனா மாத்திடும். அதுல விழுந்தப்புறம் எல்லாரும் சுய புத்திய இழந்துடுவாங்த. எனக்கும் அனுபவம் இருக்கு. என் காதலுக்காக நானும் சில கிறுக்குத்தனத்த பண்ணிருக்கேன். பெட்டர் இத இதோட மறந்துடுங்க. திரும்ப ஆரம்பிச்சா விசயம் வெளிய போக ஆரம்பிச்சுடும். அப்புறம் யாராலையும் உங்கள காப்பாத்த முடியாது”

 

படபடவென பேசி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Meenakshi Subburaman

      💞 அஜ்ஜு என்ன டா அப்போ அப்போ வந்து அதிரடியா லவ் பண்ற 😜😜😜😜

      💞 எப்போ பாரு சண்டையே போடாமல் இப்படி இருப்பது கூட அழகாகத் தான் டா இருக்கு

      💞இந்த லூசு அபிமன்யு அஜ்ஜு வ கொலை பண்ண எதுவும் முயற்சி பண்ணுவான்னோ

      💞 அப்படி பண்ணிட்டு அம்ரி தான் பண்ணுணான்னு சொல்லிடுவானோ

      💞இவ நோ சொன்ன கோவத்தில் 🤔🤔🤔🤔🤔

      💞👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐👌டா ஹனி

      1. hani hani
        Author

        இந்த ஐடியா கூட நல்லா தான் இருக்கே 🤭🤭🤭🤭 ஆனா அதெல்லாம் பண்ண மாட்டான் . அவனும் கொஞ்சம் நல்லவன் தான் 😁

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.