Loading

 

 

 

 

 

 

 

அலுவலகத்தில் அமர்ந்து இருந்தான் அர்ஜுன்.‌ அவன் முன்னால் அமர்ந்து இருந்தவன் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான். அதை வாங்கி அர்ஜுனும் கையெழுத்து போட்டு விட ஒப்பந்தம் நிறைவுற்றது.

 

“ஃபார்மாலிட்டி முடிஞ்சது. எதாவது சாப்டுறீங்களா?” என்று கேட்க அர்ஜுன் சம்மதித்தான்.

 

இருவருக்கும் காபி வந்து சேர்ந்தது.

 

“உங்களுக்கு இப்போ எந்த வேலையும் இல்லையே ?” என்று அர்ஜுன் கேட்க “இப்போதைக்கு எதுவும் இல்ல” என்றான் யஷ்வந்த்.

 

“யஷ் உங்களுக்கு இந்த கம்பெனி பத்தி தெரியுமா?” என்று கேட்டு அபிமன்யுவின் நிறுவனத்தின் விவரங்களை கூறினான்.

 

“ம்ம்.. தெரியுமே”

 

“உங்க கூட எதுவும் டீல் இருக்கா?”

 

“இருக்கு..”

 

“உங்க பெரிய டீலரா?”

 

யஷ்வந்த் லேசாக புன்னகைத்து விட்டு “அவங்களுக்கு நாங்க பெரிய கஸ்டமர்னு வேணா சொல்லலாம். எங்களோட பெரிய க்ளைன்ட் எல்லாம் வேற” என்றான்.

 

“குட்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?”

 

“சொல்லுங்க பண்ணிடலாம்”

 

“அந்த கம்பெனி பாஸ்ஸ கொஞ்சம் பதற வைக்க முடியுமா?”

 

யஷ்வந்த் கேள்வியா பார்க்க “திவ்யாக்கு அந்த பையன் எதோ தொல்லை கொடுத்துருக்கான். ” என்றான்.

 

யஷ்வந்த் தான் முதல் நாளே வேலையை முடிந்ததும் சினிமா சூட்டிங் பார்க்க ஓடும் அளவு திவ்யான்ஷியின் ரசிகன் ஆயிற்றே.. இதை கேட்டதும் அவனுக்கு கோபம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

 

அது மட்டுமில்லாமல் முதலில் அவனுக்கு அர்ஜுன் யார் என்று தெரியாது. செந்தில் குமாரின் தலையீட்டால் அவன் யார் என்பதை தெளிவாக அறிந்து கொண்டான். அவ்வளவு பெரிய மனிதரின் மகன் தன்னிடம் இயல்பாக பேசி தான் அழைத்த இடத்துக்கு வந்தது அவன் மனதை தொட்டு விட்டது.

 

அவன் மீது மிகப்பெரிய மரியாதையே வந்திருந்தது. அவனோடு தொழில் செய்யவும் அவனுக்கு பிடித்து இருந்தது. இப்போது திவ்யாவின் நெருங்கிய உறவினன் அவன். அவனே சொல்கிறான் எனும் போது இதை நம்பாமல் இருக்கவே முடியாது அல்லவா?

 

“ரியலி?”

 

“எஸ்.. திவ்யா செம்மயா இரிட்டேட் ஆகிட்டா. அதான் எதாவது பண்ணி விட்ரலாமானு தோனுது. பெருசா பண்ணா திவ்யா பேரு வெளிய வந்துடுமே.‌ சோ உங்க கிட்ட பேசுனேன்”

 

“ஐ அண்டர்ஸ்டான்ட். அவங்க வச்சுருக்கது ஒரு எலக்ட்ரானிக் மெடிரியல் கம்பெனி தான்.‌ ரீசண்ட்டா பனிரெண்டு கோடிக்கு ப்ராஜெக்ட் கூட சைன் ஆச்சு. வெயிட்” என்றவன் யாரையோ அழைத்து வேலை கூறினான்.

 

அவன் கேட்டது வந்து விட அந்த கோப்பை பிரித்து படித்து பார்த்தான் யஷ்வந்த்.

 

“இதோ.. இன்னும் மூனு மாசத்துல அவங்க இந்த கம்பெனிக்கு சாம்பிள் மெட்டிரீயல் எல்லாம் அனுப்பி ஆகனும்.”

 

“சோ.. அத நாளைக்கே கேட்கலாமே?” என்று அர்ஜுன் குறும்பு புன்னகையுடன் கேட்க யஷ்வந்த் உடனே புரிந்து கொண்டான்.

 

“கேட்டுருவோமே” என்றவன் தனக்கு கீழே வேலை செய்யும் ஒருவரை அழைத்து அந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பக் கூறினான்.

 

“அங்க இருந்து கால் வந்தா நான் மீட்டிங்ல இருக்கேன்.. ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொல்லிடு”

 

யஷ்வந்த் கட்டளையை பார்த்து விட்டு அர்ஜுன் புன்னகையோடு காபியை உறிஞ்சினான்.

 

அடுத்த பத்து நிமிடத்திற்குள் அபிமன்யுவின் அலுவலகம் அல்லோலப் பட்டது. மூன்று மாதத்தில் செய்ய வேண்டியது திடீரென நாளைக்கே முடி என்று கூறினால்?

 

அபிமன்யுவிற்கு இதை கேட்டு தலைவலியே வந்து விட்டது. அவன் அடுத்தடுத்து யஷ்வந்தை தெடர்பு கொள்ள முயற்சிக்க ஒரே பதில் தான் கிடைத்தது. மீட்டிங்கில் இருக்கிறான் என்ற பதில்.

 

அவனை அலற விட்டு விட்டு அர்ஜுனும் யஷ்வந்த்தும் நிம்மதியாக காபி குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

 

“தாங்க்ஸ்”

 

“அட.. அவங்க உங்க வீட்டு பொண்ணு தான். பட் நான் அவங்க ஃபேன். அவங்கள டென்சன் பண்ணி இருக்கான்னா.. பதிலுக்கு இவ்வளவு கூட பண்ணாம விட முடியுமா?”

 

அர்ஜுன் புன்னகைத்து வைத்தான்.

 

“ஒன்னு கேட்கட்டா…?”

 

“ம்ம்..”

 

“நீங்க பர்ஸ்ட் யாருனு தெரியாது. அப்பா திடீர்னு சைன் பண்ணாதனு சொன்னதும் என் வேலையில தலையாடிதீங்கனு சொன்னேன். அப்ப தான் அப்பா நீங்க யாருனு விவரம் சொன்னார். அதுக்கு மேல அப்பா பேச்ச மீற முடியல. அதுக்காக என் மேல கோபம் எதுவும் இல்லையே?”

 

“இல்ல.. இது இல்லனாலும் என்ன பெத்தவரு வேற வகையில லாக் பண்ணி இருப்பார்”

 

“ம்ம்… குடும்ப பிரச்சனைக்குள்ள போக வேணாம். எனக்கு வேற ஒரு டவுட் இருக்கு. நீங்களும் திவ்யா மேடமும்…”

 

“மேடமும்?”

 

“கப்பிள்ளானு கேட்க வந்தேன்”

 

அர்ஜுன் புன்னகைக்க அதில் யஷ்வந்த்திற்கு பதில் கிடைத்து விட்டது.

 

“வாவ்… உங்கள விட ஒரு நல்ல பேர் திவ்யா மேடம்க்கு கிடைக்க மாட்டாங்க. உங்கள எனக்கு பர்ஸ்னலா தெரியாது. அவங்களையும் ஒரு ஆக்டரா தான் தெரியும். பட் கண்டிப்பா நீங்க தான் பெஸ்ட் பேர்”

 

“தாங்க்யூ”

 

அதன்பிறகு இரண்டு மணிநேரமாக பேசிக் கொண்டே இருந்தனர். இருவருக்கும் நேரம் போவதே தெரியவில்லை. யஷ்வந்த்க்கும் அவசர வேலைகள் எதுவும் இல்லை. அதனால் பேசிக் கொண்டே இருந்தான்.

 

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அர்ஜுனுக்கு அழைப்பு வர விடை பெற்றுக் கொண்டு எழுந்தான்.

 

“அண்ட் உங்க ஹெல்ப் தாங்க்ஸ். இத பெருசா எடுத்துட்டு போக வேணாம். முடிச்சுடுங்க” என்று கூறி விட யஷ்வந்த் புரிந்து கொண்டான்.

 

அர்ஜுன் கிளம்பிதுமே அபிமன்யுவிடமிருந்து யஷ்வந்த்க்கு அழைப்பு வந்தது. யஷ்வந்த் கோபமாக இருந்தாலும் நிதானமாகவே பேசினான். கடைசியில் யாருக்கோ அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை வேலை செய்பவர்கள் தெரியாமல் உங்கள் நிறுவனத்துக்கு அனுப்பி விட்டனர் என்று கூறி முடித்து விட்டான்.

 

இத்தனை கதையையும் மாலை மஞ்சுவை அமர வைத்து அர்ஜுன் கூற கடைசியாக சொன்னதை கேட்டு முழித்தாள்.

 

“என்னது? என்ன சொன்னீங்க?”

 

“சும்மா லொலாய்க்கு பண்ணோம்னு சொல்லிட்டோம்” என்று கூறி விட்டு அர்ஜுன் தண்ணீரை குடிக்க மஞ்சுளா வாயை பிளந்தாள்.

 

திடீரென சிரிக்க ஆரம்பித்து விட்டாள். சில நிமிடங்கள் வரை அவளது சிரிப்பு அடங்கவில்லை.

 

“அடப்பாவி.. உனக்கு பொழுது போகலனா ஒருத்தன வச்சு விளையாடுவியா? எல்லாத்தையும் பண்ணிட்டு ப்ரான்க் பண்ணோம்னு முடிக்கிறதுல நீயும் திவ்யாவும் பர்ஃபெக்ட் ஜோடி. அந்த பையன் ரெண்டு மணி நேரத்துல என்ன ஆனானோ”

 

“கிட்டத்தட்ட பைத்தியமே ஆகி இருப்பான்.”

 

“அப்புறம் ஏன் ப்ரான்க்னு முடிச்சீங்க?”

 

“அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு கீழ வேலை பார்க்குறவங்க என்ன செய்வாங்க? அதான் போனா போகுதுனு அவன மட்டும் டென்சன் பண்ணி விட்ரலாம்னு முடிவு பண்ணேன்”

 

“அடுத்தவன் பிபி ஏத்தி பார்க்குறதுல உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு சந்தோசம்.”

 

“அவன யாரு கேமரா வைக்க சொன்னது?”

 

“இது வரை அவன் தான் வச்சான்னு ப்ரூஃப் ஆகல இல்ல. அவன் கையால கொடுத்ததுக்காக அவன சந்தேகபட கூடாதே. சப்போஸ் அவன் வைக்கலனா தேவையில்லாத இஸ்யூ ஆகிடும்னு தான் திவ்யா அமைதியா இருக்கா. அவன் செஞ்சான்னு தெரிஞ்சுட்டா பார்ப்போம்”

 

“எனக்கு அவன் தான் வச்சுருப்பான்னு தோனுது”

 

“ஏன்?”

 

“அவன் உங்க திவ்யான்ஷியோட பெரிய ரசிகன்னாம்.”

 

“இது எப்போல இருந்து?”

 

“அவன் சொல்லி தான் அவங்க அப்பா திவ்யாவ ஆட்க்கே கூப்பிட்டாறாம்”

 

“அட .. இதெல்லாம் உனக்கு யார் சொன்னது?”

 

“விசாரிச்சேன்”

 

“யார் கிட்ட?”

 

“அது எதுக்கு உனக்கு?”

 

“சொல்லுறியா இல்ல திவ்யா கிட்ட போய் நீ இப்போ பண்ண காரியத்த சொல்லவா?”

 

“சொல்லு எனக்கென்ன பயமா?”

 

“ஓகே..” என்று மஞ்சுளா எழுந்து விட “ஹேய் ஹேய்.. உட்காரு” என்று கையை பிடித்துக் கொண்டான்.

 

“அப்போ சொல்லு..”

 

“மேனேஜர்”

 

“அவரா? அவருக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்?”

 

“அவருக்கும் எனக்கும் ஆயிரம் சம்பந்தம் இருக்கும். அது எதுக்கு இப்போ… அவன் தான் திவ்யா வாட்ச் பண்ண இந்த காரியத்த பண்ணி இருக்கனும். நான் அவர் கிட்ட சொல்லிட்டேன். அவரும் இத அப்பா கிட்ட சொல்லுறேன்னு சொல்லிட்டாரு. திரும்ப அவன் எதாச்சும் பண்ணுனா வசம்மா மாட்டுவான்.”

 

“காலையில டீடைல் கேட்கும் போது உனக்கெதுக்குனு யோசிச்சேன். ஒருத்தன வச்சு விளையாடிட்டு வந்துருக்க”

 

“இது சும்மா.. ஆல்ரெடி மேனேஜர் விசாரிச்சு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் அவன் கம்பெனி டீடைல்ஸ் கொடுத்தாரு. அவனோட பெரிய க்ளைண்ட் எல்லாரும் எங்க கம்பெனியோட க்ளைண்ட். நாளைக்கு பாரு.. ஒரு பத்து கோடி ஆச்சும் அவனுக்கு லாஸ் ஆகும். ஆக்காம விடவும் மாட்டேன்”

 

“பார்த்து பண்ணுபா.. பாவம் யார் பெத்த பிள்ளையோ… உங்க ரெண்டு பேருக்கும் இடையில மாட்டிக்கிச்சு”

 

“ஆமா இப்போ நல்லா பேசுறியே.. கோபம் போயிடுச்சா?”

 

“அதுக்கு திவ்யாக்கு தான் நீ தாங்க்ஸ் சொல்லனும்”

 

“ஏனாம்?”

 

“அவ‌தான்‌ சொன்னா உன் மேல தப்பு இல்ல. அவன் மேல கோபப்பட தேவை இல்லனு. அதான மன்னிச்சுட்டேன்”

 

“தப்பு இல்ல.. ஆனா மன்னிச்சுட்ட? நக்கலா? தப்பே பண்ணாத என்ன நீ என்ன மன்னிக்குறது?”

 

“ஹலோ.. அவ பார்வையில உன் மேல தப்பு இல்ல. ஆனா அன்னைக்கு நீ கோச்சுக்கிட்டு போயி இவ அழுதப்போ எனக்கு கோபம் தான் வந்துச்சு. அதுக்கு தான் இப்போ வரை கோபம். பட் அவளே உன்ன மன்னிக்குறா.. அதான் நானும் விட்டுட்டேன்”

 

“நல்லா வருவ.. ஓர வஞ்சனை”

 

“யாரு? நான் பார்க்குறனா?”

 

“பின்ன? நீ எனக்கும் தான ஃப்ரண்டு.. அவளுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணுற.. நான் போனப்புறம் நீ போன் பண்ணி பேசக்கூட இல்ல. லெனின் மட்டும் தான் பேசுனான்”

 

“நான் தான் உன் மேல கோபமா இருந்தனே”

 

“ஆமா ஆமா.. அந்த கோபம் அவ மேல எல்லாம் வராதே.. இதான் ஓர வஞ்சனை… “

 

மஞ்சுளா முகத்தை சுழித்து விட்டு “போடா டேய்” என்று எழுந்து சென்று விட்டாள்.

 

*.*.*.*.*.*.

 

அடுத்த நாள் அபிமன்யுவின் நிறுவனம் பதினைந்து கோடி லாபத்தை இழந்தது. காரணம் ஒரு பெரிய நிறுவனம் அவர்களது பொருளில் குறையை கண்டு பிடித்து விட்டனர். அதிக லாபம் இல்லாமல் தயாரிப்பு விலைக்கே விற்க வேண்டி வந்தது. அதில் அவன் கலங்கிப்போய் அமர்ந்து இருக்க வேறு நிறுவனம் பொருட்களை திருப்பி அனுப்பி வைத்தது.

 

அடுத்த ஒரு வாரத்திற்கு அவன் வேறு எதையும் யோசிக்க முடியாமல் இருந்த இடத்திலிருந்தே வேலையை முடித்து விட்டு அர்ஜுன் மீண்டும் வெளிநாடு கிளம்பிக் கொண்டிருந்தான்.

 

அன்று வேலை எதுவும் பெரிதாக இல்லாததால் மஞ்சுளா வேறு சில விசயங்களை பற்றி பேச வந்திருந்தாள். இன்று செந்தில் குமாரும் வந்து விடுவார். அவரிடமும் பேச வேண்டும் என்று இருந்தாள். நேற்றே வர வேண்டியவர் விமானத்தை விட்டு விட்டதால் இன்று வருகிறார்.

 

அர்ஜுன் எங்கேயோ கிளம்புவது போல் தெரிய “எங்கயும் போறானா? பரபரப்பா இருக்கானே” என்று கேட்க திவ்யா எழுந்து வந்து அர்ஜுனின் அறையை எட்டிப் பார்த்தாள்.

 

“சார்‌ எங்க கிளம்பிட்டீங்க?”

 

“எங்க போனா உனக்கென்ன?”

 

“ஓஹோ… சரி போயிடு..”

 

“நக்கலு… ஆனா இனி உன் தொல்லை இல்லாம நிம்மதியா இருப்பேன். உன்ன எப்படி தான் இத்தன நாளா சகிச்சுட்டு இருந்தேன் னு நினைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு. எப்படியோ நாளைக்கோட எனக்கு விடுதலை” என்று அர்ஜுன் கூறியதும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள் திவ்யா.

 

உருண்டு புரண்டு வயிற்றை பிடித்துக் கொண்டு அவள் சிரிக்க அர்ஜுன் முறைத்து வைத்தான்.

 

“போதும் . இப்போ எதுக்கு லூசு மாதிரி தனியா சிரிச்சுட்டு இருக்க?” என்று அவன் அதட்ட மேலும் சிரித்தவள் சிரிப்பை சற்று கட்டு படுத்தினாள்.

 

“நான் தனியா சிரிச்சேன்னு யாருடா சொன்னது? இங்க பாரு இவ சிரிக்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்கத.. ஹேய்.. சும்மா சிரிச்சுடு.. உடம்புக்கு நல்லது” என்று கூறியதும் அர்ஜுன் மஞ்சுளாவை பார்த்தான்.

 

உண்மையில் மஞ்சுளா சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் நின்று இருந்தாள்.

 

“இவ தான் பைத்தியம்னா இவ கூட சேர்ந்து நீயும் பைத்தியம் ஆகிட்டியா?” என்று கேட்க “அப்படி இல்லங்க சார். திவ்யா சிரிச்ச காரணத்த நினைச்சு தான் நானும் சிரிச்சேன்” என்றாள்.

 

“நண்பி டி” என்று அவள் தோளில் தட்டிக் கொடுத்தாள் திவ்யான்ஷி.

 

“இவனுக்கு நீயே சொல்லு. நான் விட்டா சிரிச்சுட்டே இருப்பேன்”

 

“நீ… நீங்க திவ்யாவ சகிச்சுட்டு இருந்தேன் னு சொன்னீங்கள்ள?”

 

“ஆமா.. ஏன்…? ஓ.. உன் ஃப்ரண்ட என்னை சகிச்சுட்டு இருந்தாங்களா?”

 

“இதுக்கு தான் சிரிச்சேன்” என்று கூறி விட்டு திவ்யா மீண்டும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

“அது இல்ல. உன் வாயில இருந்து இப்படி ஒரு வார்த்தைய நாங்க எதிர்பார்க்கல. திவ்யா சகிச்சுட்டு இருந்தேன்னு ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டா. அப்படி சகிச்சுக்க வேண்டிய அவசியமும் இல்ல. ஒரு சின்ன சண்டைக்கே நீ இப்படி விடுதலைனு எல்லாம் சொல்லவும் சிரிச்சுட்டா”

 

‘சின்ன சண்டையா?’ என்று அவன் தான் அதிர்ந்து போனான்.

 

“உன் ஃப்ரண்டுக்கு அடுத்தவங்க வாழ்க்கையோட விளையாடுறது சின்ன விசயம் தான். மாடில இருந்து தள்ளி விடுறது.. தூக்க மாத்திரை கொடுக்குறது எல்லாம் சின்ன விசயம் தான். இவள எல்லாம் எந்த பக்கம் பார்த்து ஹீரோயினா செலக்ட் பண்ணானுங்க? சீரியல் கில்லர் கெட்அப் கேரக்டர் எதுவும் கிடைச்சா நடிக்க சொல்லு பிச்சுகிட்டு போகும். கொலை காரி”

 

“நீ இவ கிட்ட அந்த பாலன் பத்தி பேசாம இருந்திருந்தா இது நடந்துருக்காது. ஆரம்பம் உன் கிட்ட இருந்து தான் வந்துச்சு. வீண் வம்புக்கு ஒன்னும் அவ வரல”

 

“அதெல்லாம் அந்த மரமண்டைக்கு புரியாது. விட்ரு மஞ்சு”

 

“இல்ல திவ்யா.. இவனுக்கு தான் பண்ண தப்பே புரியல. யாராவது சொல்லி தான ஆகனும்”

 

“இத விடு. நீ போய் வேலைய பாரு” என்று மஞ்சுளாவை அனுப்பியவள் அர்ஜுன் அருகில் வந்தாள்.

 

“ப்ச்.. ரெண்டடி தள்ளியே இரு” என்று கூற “நீ சொன்னா கேட்ரனுமா?” என்று கேட்டு மேலும் அருகில் வந்து நின்றாள்.

 

பிடித்து தள்ள முடியாமல் அர்ஜுன் விரல்களை மடக்கி நின்றான்.

 

“என்ன சொன்ன? என்னலாம் ஹீரோயின் னு எந்த பக்கம் பார்த்து எடுத்தாங்கனா? நான் ஹீரோயின் னு உனக்கு யாருடா சொன்னது? நான் வில்லி. அதுவும் உனக்கு பக்கா வில்லி.”

 

“இத நீ சொல்லி தான் தெரியனுமா? என் வாழ்க்கையோட மிகப்பெரிய வில்லி திவ்யான்ஷி தான்”

 

“அதுனால விடுதலை வாங்கிட்டு போற?”

 

“ஆமா”

 

“சரி திரும்ப வராத.. அங்கயே இருந்துக்கோ பை”

 

கோபமாக தன் அறைக்குச் சென்று விட்டாள். அவள் சென்ற பின்பே அர்ஜுனுக்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. மிக அருகில் அவள் வந்து நிற்கும் போது தாறுமாறாக துடித்த இதயத்துடிப்பை அவள் கேட்டு விடக் கூடாது என்று அவன் பதறியது அவனுக்கு மட்டுமே தெரியும்.

 

‘இம்சை.. உன் வந்து கவனிக்கிறேன்டி’ என்று நினைத்துக் கொண்டான்.

 

திவ்யாவோ முகத்தை முழு நீளத்துக்கு தூக்கிக் கொண்டு அமர்ந்து இருக்க “என்ன? கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் சூட்டிங் முடிஞ்சதுனு சந்தோமா இருந்த.. இப்போ அர்ஜுன் போறான்னு கோபமா?” என்று கேட்டாள்.

 

“ஆமா.. நாலு மாசம் இருப்பேன்னு சொல்லிட்டு உடனே போறான்”

 

“ஏன்னு கேட்க வேண்டியது தான?”

 

“அதெல்லாம் கேட்க மாட்டேன்”

 

“ஏன் கேட்டா அறை அடி குறைஞ்சு உன் கிரீடம் இறங்கிடுமோ?”

 

“அ.. அப்படிலாம் இல்லையே”

 

“போடி… ஓவர் ஈகோ உடம்புக்கு ஆகாது”

 

‘எனக்கு ஈகோ எல்லாம் இல்ல.. பட் இவன் ஏன் போறான்?’ என்று சோகமாக நினைத்துக் கொண்டாள்.

 

“எனக்கு வேற வேலை இருக்கு. நான் ஸ்க்ரிப்ட் படிக்க போறேன். மாமா வந்தா கூப்பிடு” என்று கூறி விட்டு படிக்க அமர்ந்து விட்டாள்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.