மாலை பாலனை சந்திக்க திவ்யாவும் மஞ்சுளாவும் சென்றனர். அவர்கள் சென்றது ஒரு தனியார் உடற்பயிற்சி கூடத்திற்கு. அதில் பாலன் பங்குதாரர். பாதி முதலாளி என்றும் கூறலாம்.
அங்கு திவ்யாவை வரச் சொல்ல அவளும் சென்று சேர்ந்தாள். உள்ளே பெரிதாக யாரும் இல்லை. அங்கு வேலை செய்யும் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். பாலன் வேகமாக வந்து வரவேற்றான்.
“வாங்க வாங்க..” என்று இன்முகமாக வரவேற்று உள்ளே இருந்த அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றான். கூடவே அவர்களுக்கு பழச்சாறும் வந்து சேர்ந்தது.
திவ்யா மஞ்சுளாவுடன் அமர்ந்து இருக்க முன்னால் பாலன் மட்டுமே அமர்ந்து இருந்தான்.
“எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” – பாலன்
“நல்லா இருக்கேன். ஏன் என் படம் எதையும் பார்க்கலையா?”
“பார்த்தேன் பார்த்தேன். நேருல விசாரிக்க முடியல இல்லையா அதுக்கு சொன்னேன்”
திவ்யா தலையசைத்து புன்னகைத்தாள்.
“சோ நேரா விசயத்துக்கு வரேன். என்னோட நெக்ஸ்ட் மூவிக்கு உங்கள நடிக்க வைக்கனும்னு ஆசை படுறேன்”
“ம்ம்.. கால் பண்ணவரு சொன்னாரு.. ஆக்ட்சுவலி இனி எந்த ப்ராஜெக்ட் ஒன்னா பண்ண வேணாம்னு முடிவு பண்ணி இருந்தோமே?”
“ஐ நோ.. பட் இது நிச்சயமா உங்களுக்கு பொருந்துற கேரக்டர். எனக்கு கதைய படிச்சதுமே நீங்க தான் நியாபகம் வந்தீங்க. அவ்வளவு ஸ்ட்ராங் கேரக்டர்”
“யாரோட கதை?”
“ஒரு ரைட்டரோட கதை. படத்துக்காக சில சீன்ஸ் மட்டும் மாத்தி இருக்கேன். ஸ்கிரிப்ட் இதுல இருக்கு.. நல்லா படிச்சு பாருங்க. உங்க ரோல் எதுனு நீங்களே கெஸ் பண்ணுங்க”
பாலன் ஃபைலை அவள் பக்கம் நகர்த்த எடுத்துக் கொண்டாள்.
“ஓகே.. கண்டிப்பா படிச்சு பார்க்குறேன்.”
“வெயிட் பண்ணுறேன். கண்டிப்பா நீங்க ஓகே தான் சொல்லுவீங்க”
“அவ்வளவு நம்பிக்கையா?”
“எஸ்.. அந்த ரோல் மேல நம்பிக்கை”
“ஓகே.. பார்க்கலாம். ப்ரடியூஸர் யார் கிட்டயாச்சும் பேசி இருக்கீங்களா?”
“கதைய கொடுத்ததே ஒரு ப்ரடியூஸர் தான். இத நீங்க பண்ணா நல்லா இருக்கும்னு வந்து கேட்டாரு. படிச்சுட்டு உடனே ஒத்துக்கிட்டேன்.”
“வேற இதுல நடிக்க யார எல்லாம் அப்ரோச் பண்ணி இருக்கீங்க?”
பாலன் விபரங்களை கூற திவ்யான்ஷி பொறுமையாக கேட்டுக் கொண்டாள்.
மேலும் அவளுக்கு தோன்றிய கேள்விகளை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
“ஓகே.. வேலை விசயம் இதோட போதும். நான் படிச்சுட்டு சொல்லுறேன். இப்போ உங்கள பத்தி பேசுவோம். உங்க வொய்ஃப் எப்படி இருக்காங்க?” என்று திவ்யா கேட்க “ரொம்ப நல்லா இருக்காங்க…” என்றான்.
“பசங்க?”
“அவங்களும் நல்லா இருக்காங்க. செந்தில் சார் எப்படி இருக்கார்? பார்க்க முடியல.. உள்ளூர்ல இல்லை போல”
“ஆமா.. பக்கத்து ஸ்டேட்டுக்கு போயிருக்கார். அங்க அவரோட ப்ராப்பர்டில எதோ ப்ராப்ளம் போல. அத பார்க்க போயிருக்கார்”
“ஓ.. ஓகே ஓகே.. நீங்க இப்ப எத்தனை படம் பண்ணிட்டு இருக்கீங்க?”
“ஒன்னு தான்..”
“ஒன்னு தானா? ஒரு நாலஞ்சு படமாச்சும் நடிக்க வேணாமா?”
“அப்படி இருந்தா இங்க உட்கார்ந்து பேச நேரம் கிடைக்குமா என்ன?”
“அதுவும் சரிதான். நீங்க இந்த கதைய படிச்சுட்டு சரினு சொல்லுங்க. உடனே டேட்ஸ வாங்கி சூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்”
சில நிமிடங்கள் இப்படியே பேச்சு நீண்டு கொண்டிருந்தது. பிறகு திவ்யாவும் மஞ்சுளாவும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர்.
காரில் அமர்ந்ததும் “எவ்வளவு நல்ல மனுசன் இல்ல?” என்றாள் மஞ்சுளா.
“எதுல?”
“இவ்வளவு நடந்தப்புறமும் வெறும் தொழில மட்டுமே பார்க்குறாருல.. அதுல சொன்னேன்”
“ம்ம்… இப்போ போய் நான் டைரக்டர் பாலன பார்த்துட்டு வரேன்னு அர்ஜுன் கிட்ட சொல்லனும்”
“எதுக்கு?”
“சும்மா அவன வெறுப்பேத்த.. அன்னைக்கு இவர பார்த்துட்டு வந்து அந்த பேச்சு பேசுறான். உன் எக்ஸ் லவ்வர்.. ஓடி போக போறீங்களாமே அப்படி இப்படினு.. இப்போ நான் பார்த்து பேசிட்டு வந்துருக்கேன். அடுத்த படம் அவர் டைரக்ஷன்ல தான்னு சொல்லி கடுப்பேத்தனும்”
“வெயிட் வெயிட்.. எனக்கு ஒன்னு புரியல.. பாலன் சார் உனக்கு எக்ஸ்னு அர்ஜுன் ஏன் சொன்னான்?”
“அவன் சினிமா புடிக்காது புடிக்காதுனு சொல்லிட்டு என்ன பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்கான் மஞ்சு. லாஸ்ட்டா நான் பண்ண இன்டர்வியூ கூட பார்த்துருக்கான். ஃப்ராடு பையன். ஐ தின்க் இப்போ ரிலிஸ் ஆன படத்த கூட கண்டிப்பா பார்த்து இருக்கனும்”
“இது எல்லாம் உனக்கெப்படி தெரியும்? லெனின் எதுவும் சொன்னாரா?”
“அர்ஜுனே உளறி வச்சான். ஊர்ல இருக்கப்போ”
“ஓ..” என்றவள் சிரிப்போடு அமைதியாகி விட்டாள்.
இருவரும் வீட்டுக்கு வந்து சேர அர்ஜுன் இல்லை. மற்ற விசயங்களை பற்றி பேசி விட்டு மஞ்சுளா கிளம்பி விட்டாள்.
திவ்யாவும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். ஆனால் மனம் மட்டும் அர்ஜுனை எதிர் பார்த்துக் கொண்டே இருந்தது. அவன் இரவு வரை வரவேயில்லை.
மணி இரண்டை தொட்ட பின் திவ்யா எழுந்து வந்து பார்த்தாள். பக்கத்து அறையில் அர்ஜுன் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
“என்ன அவாய்ட் பண்ண வேற எங்கயும் தங்கிட்டானோ?” என்று யோசித்தாள்.
லெனினுக்கு அர்ஜுனை பற்றிக் கேட்டு குறுஞ்செய்தி ஒன்றை தட்டி விட்டாள். அரைமணி நேரத்திற்கு பிறகு பதில் வந்தது.
எதோ வேலையாக சென்றவர்கள் கிளம்பும் போது தாமதமானதால் அங்கேயே இரவு தங்கி விட்டு காலையில் வருவதாக கூறினான்.
அதை கேட்ட பின்பே திவ்யாவிற்கு நிம்மதியாக இருந்தது. ஆனாலும் மனம் ‘இத்தன வருசமா அவன் என்ன பண்ணான் எங்க இருந்தான்னு தெரியுமா? இப்ப மட்டும் என்ன அக்கறை?’ என்று கேட்டது.
அதற்கு பதில் அவளுக்கும் தெரியவில்லை என்பதால் பதில் சொல்லாமல் படுத்து தூங்கி விட்டாள்.
அதிகாலையிலேயே அர்ஜுன் வந்து விட்டான். ஆனால் அவன் வரும் நேரம் திவ்யா விழித்திருக்கவில்லை. காலையில் எழுந்தவள் அர்ஜுன் இன்னும் வரவில்லையோ என்று கவலை பட்டாள்.
வேகமாக கீழே இறங்கிச் சென்றவள் ஹாலில் அமர்ந்து வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து இருந்தவள் ‘இல்ல.. இது அவனுக்கு வெயிட் பண்ணுற மாதிரி இருக்கே’ என்று யோசித்தாள்.
‘இப்படியே உட்கார்ந்தா மாட்டிக்குவோம். காபி போடுற மாதிரி பில்டப் கொடுப்போம்’ என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.
எவ்வளவு தாமதிக்க முடியுமோ அவ்வளவு தாமதமாக காபியை போட்டுக் கொண்டிருந்தாள். கவனம் முழுவதும் வாசலில் இருந்தது. ஆனால் அர்ஜுன் வரவேயில்லை.
‘எங்க போய் தொலைஞ்சான்’ என்று திட்டிக் கொண்டே வெளியே வந்தாள். ஹாலில் அமர்ந்து இதை குடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க “ம்மா.. ஸ்விம்மிங் பூல்ல தண்ணி மாத்திட்டேன் மா” என்று வேலையாள் சொல்லி விட்டுச் சென்றான்.
உடனே மாடிப்படி ஏறிச் சென்று விட்டாள். மேலே இருந்து தண்ணீரை சரி பார்க்கலாம். அதே நேரம் அர்ஜுன் வருகிறானா என்று அங்கே நின்று பார்க்கலாம்.
அங்கு நின்று பார்த்தால் அவள் காத்திருப்பதையும் யாராலும் கண்டு பிடிக்க முடியாதல்லவா?
மூன்றாம் மாடிக்கு சென்று தண்ணீரை பார்த்தாள். சுத்தமாக இருந்தது. அதை விட்டு விட்டு வாசலையும் சாலையையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“யார தேடுற?” என்ற குரல் பின்னாலிருந்து வர அதிர்ந்து போனாள்.
‘இவன் எப்போ வந்தான்? வாசல்ல செருப்பு கூட இல்லையை’ என்று யோசித்தவள் காபியை உறிஞ்சி தன்னை நிதானபடுத்திக் கொண்டு திரும்பினாள்.
“தேடுறனா? யார?”
“அது உனக்கு தான் தெரியும்”
“ம்க்கும்”
“இங்க நின்னு என்ன பண்ணுற?”
“இப்ப தான் ஸ்விம்மிங்பூல்ல தண்ணி மாத்துனாங்க. அத சரியா இருக்கானு பார்த்துட்டு இருக்கேன்”
“ஓஹோ..”
“ஆமா நீ என்ன அவாய்ட் பண்ணிட்டு ஓடுன.. திடீர்னு என்ன முன்னாடி வந்து நிக்கிற?”
“அவாய்ட் இல்ல… இருக்க கோபத்துக்கு உன்ன கொன்னுடுவேன்னு தோனுச்சு அதான் போயிட்டேன்”
“நல்ல காமெடி.. நீ என்ன கொல்ல போற… ம்ம்ம்”
அர்ஜுன் பதில் சொல்லாமல் முறைத்து வைத்தான். திவ்யா கண்டு கொள்ளாமல் இருக்க அவனும் திரும்பி சாலையை வேடிக்கை பார்த்தான்.
காபியை மெதுவாக உறிஞ்சிக் கொண்டிருந்தவள் “உன் கிட்ட ஒரு விசயம் சொல்லனும்” என்றாள்.
“என்ன?”
“நேத்து என் எக்ஸ் லவ்வர்… அதான் நீ பார்த்ததா சொன்னியே அவர்.. அந்த டைரக்டர் பாலன பார்த்தேன்”
அர்ஜுன் கை விரல்களை மூடி சட்டென்று எழுந்த கோபத்தை அடக்கினான்.
“என்ன விசயமா தெரியுமா? அடுத்த படத்துல அவர் கூட தான் வொர்க் பண்ண போறேன்”
அர்ஜுன் அவளை பல்லைக்கடித்துக் கொண்டு பார்க்க அவளோ கூலாக காபியை உறிஞ்சினாள்.
“இதுல ஹை லைட் என்ன தெரியுமா? அவருக்கு அந்த கேரக்டர பார்த்தும் என் நினைப்பு தான் வந்துச்சாம். அதான் நானே நடிக்கனும்னு ரெக்வஸ்ட் பண்ணுனார்”
“ச்சே… போதும்” என்று அருவருப்போடு அர்ஜுன் கூற திவ்யாவிற்கு சிரிப்பாக இருந்தது.
“அட முழுசா கேளு டா”
“தேவையில்ல.. போயும் போயும் அந்த ஆள பத்தி என் கிட்ட பேசுற பாரு.. உன்னலாம்..”
“ஏன் பா.. கோபம் வருது.. நீ கூட தான் அன்னைக்கு அவர பார்த்தேன் அவர பத்தி பேசனும்னு வந்து நின்ன.. இப்போ மட்டும் என்ன வந்துச்சு?”
“திவ்யா…”
அர்ஜுன் அதட்ட திவ்யாவின் பார்வை மாறியது.
“இனி அவன பத்தி என் கிட்ட பேசாத”
“பேசுனா?”
“அவன தேடிப்போய் கொண்ணுடுவேன்”
“ட்ரை யுவர் பெஸ்ட்” என்று கூறியவள் திரும்பி நடக்க “நில்லுடி” என்றான்.
திவ்யா அப்படியே நின்று விட்டாள்.
“உன்ன பார்க்க கூடாதுனு ஓடினேன். ஏன்னா என் பாசம் உன்ன கட்டி போட்ருமோனு. பட் அந்த பாசத்துக்கு நீ தந்த மரியாதை இருக்கே.. உன்ன எல்லாம் என்ன சொல்லி திட்டனு கூட தெரியல.. ஆனா நீ பண்ண எத வேணா மன்னிச்சுடுவேன்.. ஏற்கனவே கல்யாணமானவன உன் எக்ஸ்னு சொல்லி பேசிட்டு இருக்க பாரு இத மட்டும் செத்தாலும் மன்னிக்க மாட்டேன்”
“நீ தான் இத ஆரம்பிச்ச.. அவர் என்னோட எக்ஸ்னு சொன்னது நீ தான? என்ன நீ என்ன மன்னிக்கிறது? நான் தான் உன்ன போனா போகுதுனு மன்னிக்கனும்”
“நீயா? எதுக்காம்? என் கூட நிச்சயம் பண்ணிட்டு நாலு பாய் ஃப்ரண்ட் கூட சுத்துறியே அதுக்கா?”
“அர்ஜுன்”
“கத்தாத… நீ எனக்கு பண்ணதுக்கெல்லாம் உன்ன என்ன வேணா நான் பண்ணலாம். ஆனா பண்ண மாட்டேன். அண்ட் செத்தாலும் உன்ன மன்னிக்க மாட்டேன்.”
“அப்படியா ?”
கையிலிருந்த காபி கோப்பையை உற்று பார்த்துக் கொண்டே திவ்யா கேட்க, “ஆமா.. உன்ன பார்த்தாலே வெறுப்பு தான் வருது” என்று அழுத்தமாக கூறினான்.
ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு அர்ஜுன் நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கண்ணில் கோபம் பொங்க அவன் நிற்க திவ்யா அருகில் சென்றாள்.
அவன் அசையாமல் நிற்க “அப்போ செத்து போயிடு” என்று அர்ஜுன் மீது கை வைத்துத் தள்ளி விட்டாள்.
மொட்டை மாடியிலிருந்து அவனை தள்ளி விட்டு விட தடுமாறி பின்னால் விழுந்தான். பின் பக்கம் தடுப்பு எதுவும் இல்லை. அவன் இதை எதிர் பார்க்கவும் இல்லை. திடீரென தள்ளி விட்டதும் நிலையில்லாமல் விழ ஆரம்பித்தான்.
திவ்யா காபியை உறிஞ்சிக் கொண்டு அர்ஜுன் விழுவதை எட்டி பார்த்தாள். அவனும் பார்வை மாறாமல் அவளை பார்த்துக் கொண்டே கீழே சென்று கொண்டிருந்தான். நேராக சென்று நீச்சல் குளத்தில் பொத்தென விழுந்தான். விழும் முன்பு ஒரு நொடி திரும்பி பார்த்தவன் தண்ணீரை பார்த்ததும் உடலை திருப்பி குதிப்பது போல் விழுந்தான்.
அடிவரை சென்று தரையை தொடுவதற்கு ஒரு இன்ச் இடைவெளியில் சுதாரித்து தண்ணீரில் இருந்து மேலே வந்து விட்டான்.
முகத்திலிருந்த தண்ணீரை வழித்து எடுத்து விட்டு வேகமாக நிமிர்ந்து மாடியை பார்க்க திவ்யா அங்கு இல்லை. தலையில் வழிந்த தண்ணீரை துடைத்துக் கொண்டு தண்ணீருக்கு வெளியே வந்து அமர்ந்தான். கால் இரண்டும் தண்ணீரில் இருக்க காது மட்டும் திவ்யா நடந்து வரும் சத்தத்தை கவனித்தது.
கோபம் போய் அதிர்ச்சி வந்திருந்தது. இப்படி தள்ளி விடுவாள் என்று எதிர் பார்க்கவில்லை. அதனால் சில நொடிகள் தன்னை நிதானபடுத்திக் கொண்டான். பெரிய பெரிய மூச்சுகளை எடுத்து அமைதியான பின்பு திவ்யா அருகில் வந்து விட்டாள்.
அவனுக்கு நேர்மாறாக காபியை உறிஞ்சிக் கொண்டே நிதானமாக நடந்து வந்தாள் திவ்யா. அர்ஜுன் திரும்பாமல் இருக்க காபியை முழுவதுமாக குடித்து முடித்து கப்பை ஒரு ஓரமாக வைத்தாள்.
“ச்சே… ஜஸ்ட் மிஸ் இல்ல. ஏன் டா தண்ணி பக்கத்துல நின்ன? தரை பக்கத்துல நின்னு இருந்தா இன்னேரம் பல கடவுள நேரா பார்த்து ஹாய் சொல்லிட்டு இருந்துருப்ப. நீயும் ஆசை பட்ட மாதிரி செத்தாலும் என்ன மன்னிச்சு இருக்க மாட்ட. அடுத்த தடவ சரியா நில்லு என்ன? அப்போ தான் உன் ஆசை நிறைவேறும்” என்று அவனிடம் குனிந்து சொல்லி விட்டு அவனை கடந்து நடக்க ஆரம்பித்தாள்.
வேகமாக தண்ணீரில் இருந்து எழுந்தவன் அவளை நோக்கி ஓடினான். மெதுவாகவே நடந்து கொண்டிருந்த திவ்யாவை பின்னால் இருந்து அணைத்தவன் அவளை தூக்கிக் கொண்டு பொத்தென மீண்டும் தண்ணீரில் விழுந்தான். இதை திவ்யா எதிர் பார்க்கவில்லை. முதல்கட்ட அதிர்ச்சியில் அவனோடு மூழ்கத்தொடங்கினாள்.
இருவரும் தண்ணீருக்கு அடியில் போக அர்ஜுனின் பிடி தளர்ந்தது. அந்த இடைவெளியில் அவசரமாக திவ்யா மேலேறி வந்தாள். அவனும் மேலே வந்து விட முகத்தை துடைத்துக் கொண்டு முறைத்து பார்த்தாள்.
“செத்தாலும் மன்னிக்க மாட்டேன்னு சொன்னேன். யாரு செத்தானு நான் சொல்லவே இல்லையேடி” என்று சிரிப்போடு கூறி விட்டு தன் முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு நீச்சல் குளத்தில் இருந்த நீரை திவ்யாவின் முகத்தில் தெளித்தான்.
திவ்யாவிற்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. கோபத்தோடு அவனை முறைத்து விட்டு நீந்திப் போக பார்க்க அர்ஜுன் விடவில்லை. கையை பிடித்து இழுத்தவன் இடையை பிடித்து தன்னோடு சேர்த்து நிறுத்தினான். திவ்யா தண்ணீருக்குள் அவனுடன் போராட ஆரம்பித்தாள்.
“டேய் விடுடா…” என்று அவனது கையை தட்டி விட பார்த்தாள். முடியவில்லை.
“நீ இனிமே தனியா கொல்ல முயற்சி பண்ணாத. எட்டு வருசத்துக்கு முன்னாடியே நான் செத்துட்டேன்”
அர்ஜுன் உணர்ச்சியே இல்லாமல் கூற திவ்யாவின் முகம் சுருங்கிப் போனது. அவள் அமைதியாகி விட உடனே விடுவித்தான். வேகமாக நீந்தி திவ்யா வெளியே வர அவள் பின்னாலே அர்ஜுனும் வெளியே வந்தான்.
தண்ணீரில் நனைந்து எழுந்து வரும் இருவரையும் குறுகுறு பார்வை பார்த்துக் கொண்டே மஞ்சுளா வந்தாள்.
“என்ன.. காலையிலயே உங்களுக்கு மட்டும் தனியா மழை பேஞ்சுருக்கு போல?” என்று மஞ்சுளா கேட்க “உன்ன கொல்ல போறேன்” என்று திவ்யா பல்லை கடித்தாள்.
வேகமாக வந்து திவ்யாவின் தோளில் கை போட்டுக் கொண்டு நின்ற அர்ஜுன் “அந்த மழைய பத்தி நீ என்ன நினைக்குற?” என்று கேட்டு வைத்தான்.
அவனது கையை திவ்யா தட்டி விட பார்க்க அவளது மறு கை அர்ஜுனிடம் மாட்டிக் கொண்டது.
“என்னென்னவோ நினைக்கலாம்.. ஒரு வயசு பொண்ணும் வயசு பையனும் ஸ்விம்மிங் பூல்ல ஒன்னா குளிச்சுட்டு வந்தா நினைக்க எவ்வளவோ இருக்கு”
மஞ்சுளா இழுக்க “மண்ணாங்கட்டி” என்று திவ்யா கத்தினாள்.
அவள் கத்தியதும் அர்ஜுன் சிரிக்க அவனை பிடித்து தள்ளி விட்டு விட்டு வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டாள்.
திவ்யா போவதையே மஞ்சுளா பார்த்துக் கொண்டிருக்க “ஓய்..” என்று அர்ஜுன் அழைத்தான்.
“சொல்லுங்க சார்” என்க “எப்ப இந்த சார்ர விடுவ?” என்று முறைப்போடு கேட்டான்.
“எப்போ திவ்யா உங்கள மன்னிக்குறாளோ அப்போ”
“நல்ல ஃப்ரண்டு..” என்று கடுப்போடு சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
தொடரும்.
இதில் ட்வீஸ்ட் எங்க டா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
அவன்சாகாம பொழச்சது தான் 🤭 அவங்களுக்கு நிச்சயமாகிடுச்சு அதுக்கு அப்புறம் தான் திவ்யா அவன வேணாம்னு சொல்லிட்டு சினிமாக்கு போயிட்டா.. அத தான் யாரும் கெஸ் பண்ணீங்களானு கேட்டேன் 😛
ஓ நான் இதை விட பெரிய ஆப்பாக உன்னிடம் எதிர்பார்த்தேன் டா , நான் ரேவதி ன்னு ஒரு பொண்ணு இவன் கிட்ட காதல் சொல்ற மாதிரி ஒரு நிகழ்வு இருந்ததே அது தான் வரப்போகுதுன்னு இருந்தேன் டா
மேகா லவ் பண்ணுறது.. அது லேட்டா தான் வரும்.
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.