Loading

தணிக்கையும் ஏனோ?? 4

 

“அடி மீது அடி வைத்து நெருங்கி வருகிறாய்

அடங்கிப் போன கோபமெல்லாம்

ஆர்ப்பரித்து காத்திருக்கின்றன

தன் விரதம் முடிப்பதற்கு..”

 

செல்லக்குட்டி எந்திரிடா…

 

மதியம் சாப்பிடுற நேரமாயிடுச்சு

சாப்பிட்டு விட்டு வந்து தூங்கு…

 

என்ற தன் அண்ணனின் குரலில் முழித்தவள்

 

அவனை ஒரு மார்க்கமாக பார்த்தபடி எழுந்து அமர்ந்தாள்…

 

என்னம்மா இப்படி பார்க்குற?

 

ஒன்னுமில்லை… திடீர்னு பாசம் ஓவரா பொங்குதே…

 

இது என்னோட அண்ணன் தானான்னு பார்க்கிறேன்

 

ஒழுங்கு மரியாதையா வந்து சாப்பிடு…

 

நான் வயலுக்கு கிளம்பணும் என்று செந்தில் அந்த அறையில் இருந்து வெளியேறிவிட்டான்…

 

பிறகு அப்பா அண்ணனுடன் சாப்பிட்டு முடித்தவள்

 

 ‘அம்மா ‘நீ சாப்பிடு

நான் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு வருகிறேன் என்று கூறவும்…

 

வேணாமா … நீ போய் தூங்கு… அவ பார்த்துப்பா.. என்று ஏகாம்பரம் கிளம்பி விட்டார்.

 

முறைத்தபடி இருக்கும் சங்கரியை அழைத்த பார்வதி 

 

சங்கரி உன்னோட பள்ளிக்கூடத்தில் படிச்ச பையனோட அக்காக்கு கல்யாணமாம்…

பத்திரிகை வச்சிட்டு போனான்…

 

நாளைக்கு நைட்டு அண்ணன கூப்பிட்டு கிட்டு போய் வந்துடும்மா…

 

அம்மா அப்பாக்கு தெரியுமா??

 

அவர்தான் சொன்னாரு… பையன் நேர்ல வந்து அப்பாகிட்ட பத்திரிகை வைச்சுட்டு போயிருக்கான்

 

நான் போகலம்மா…

 

இங்கே பாரு… உன்னோட பிரண்டு எல்லாம் வருவாங்க

 

இரண்டு நாளைக்கு முன்னாடி அந்த மலர் பொண்ண பார்த்தேன்..

 

அவகிட்ட நீ வரபோறத சொல்லி இருந்தேன்.. 

நீ வேணும்னா அவகூட போய் வாம்மா…

 

வீட்டிலேயே எவ்வளவு நேரம் இருப்ப…

போரடிக்கலையா…

 

உனக்கு போரடிக்குதாம்மா…

 

சரி…சரி அம்மா வருத்தப்படாத…

நான் அவளுக்கு போன் பண்ணி விட்டு வருகிறேன்…

 

தனது அறைக்கு சென்று அவளுடைய தோழியின் தந்தைக்கு போன் செய்தாள்…

 

எப்படி அப்பா இருக்கீங்க?

நான் சங்கரி பேசறேன் என்றாள்

 

நல்லா இருக்கியாம்மா..

படிப்பெல்லாம் எப்படி போகுது..

 

நல்லா போகுதுப்பா…சங்கரி

 

இரண்டு வருஷம் கழிச்சு இப்போது தான் பேசற…

 

இல்லப்பா இன்னிக்கு காலைல தான் ஊருக்கு வந்தேன்…

 

நான் மலரோட பேசணும்..

 

இரும்மா தர்றேன்…

 

மலரு… மலரு…

 

 சங்கரி லைன்ல இருக்கு…

 

பேசும் மா.. என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் ராகவன்…

 

ஹேய் மலர் நல்லா இருக்கியா…

 

இன்னிக்கு தான் ஊருக்கு வந்தேன்…

 

ஹேய் லைன்ல இருக்கியா…

 

மலரு ..மலரு…

மறுமுனையில் மௌனமாய் இருக்கவும்…

 

சரிடி உனக்கு என்ன தெரியல போல..

நான் போனை வைக்கிறேன்

என்றதும்…

 

எரும.. நாயே… அறிவில்ல…

ஒரு வாரமாக கூப்பிட்டு கொண்டு இருக்கிறேன்…

போன எடுக்க மாட்டீங்க…

இப்போது நீங்க கூப்பிட்ட உடனே நான் பேசணுமா..

 

சரி ..சரி…

நாளைக்கு நைட்டு மகி அக்கா ரிசப்ஷன்…

கிளம்பி வா போயிட்டு வரலாம்…

அண்ணா வேண்டாம்…

சைக்கிள் எடுத்துக் கொண்டு வா…

 

என்ன மேடம் ஆறு மணிக்கு வர்றீங்களா என்று மலர் கேட்க

 

நான் வர்றலடி அப்படின்னு ஏதாவது சொல்ல போறீங்களா??

 

அடியேய் வர்றேன்…

ஆனால் சைக்கிள் வேண்டாம்… அண்ணனோட வர்றேன்… என்றாள் சங்கரி

 

பிச்சிடுவேன்… போன அண்ணன் கிட்ட கொடு 

நான் பேசறேன்…

சைக்கிள் ஓட்டுறது கூட மறந்திடுச்சா என்றாள் மலர்..

 

சரிடி கோபப்படாமல்..இரு

நான் வர்றேன்…

அப்படி வா வழிக்கு

நான் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லிடறேன்…

 

ஒன்னும் வேணாம்…

அவங்க யாரும் என்னை எதிர்பார்க்க மாட்டாங்க..

போன வைச்சிடறேன் என்று அமர்ந்து விட்டாள் சங்கரி…

 

அவளுக்கு தெரியும் நடக்க வேண்டிய நிகழ்வு நடந்தே தீரும்… அதை தடுக்க முடியாது

ஆனால் தட்டிக்கழிக்காமல் தள்ளி நிற்கலாம்..!

 

நினைத்தது போலவே மலர் அவர்களின் நட்பு வட்டத்திற்கு அவள் வரும் தகவலை குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தி விட்டு படிக்க அமர்ந்தாள்…!

  1.  

“ஏக்கம் நிறைந்த விழிகள் இரண்டும்

மனமொன்றும் காத்திருக்கிறது

ஏனிந்த புறக்கணிப்பென 

புரிதலற்று”

 

_ தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்