Loading

“பார்வைகளால் படம் வரைந்து
வார்த்தைகளால் பாகங்கள் குறிக்கும் சரியான தருணத்தில்
இதயத்தை காணவில்லை”

சங்கரி … சங்கரி…

இட்லி அவிச்சு வைச்சிருக்கேன்
உனக்கு பிடிச்ச மல்லாட்டை சட்னியும் தான் தயாராயிருக்கு..

சூடா இருக்கும் போதே சாப்பிட்டு போய் தூங்கு…

என்ற அம்மாவின் குரலுக்கு
செவிமடுத்து இதோ வந்துட்டேம்மா…
என்று அலைபேசியை ஞாபகமாக அணைத்து வைத்துவிட்டு வந்தாள் சங்கரி..!

அவள் சாப்பிட ஆரம்பித்த நேரம் ஏகாம்பரம் உள்ளே நுழையவும்

எப்படிடா இருக்க…

நல்லா இருக்கேன்ப்பா..

சரிடா நீ சாப்பிடு

நான் இதோ வந்திடறேன் என்று கொல்லைப்பக்கம் போனவர் சிறிது நேரத்தில் முகம் கைமற்றும் கால்களை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தார்.

பரிட்சையெல்லாம் நல்லா எழுதியிருக்கியாமா…

ம்ம் என்று சொல்லியவள்…
அம்மா நான் போய் படுக்கிறேன்.

என்ன எழுப்பாதீங்க…

என்று சொல்லிவிட்டு போய் அந்த வீட்டின் ஓரறையில் இருந்த மின்விசிறியின் பொத்தானை அழுத்தியவள்

தனது அலைபேசியில் வழக்கமாய் ஒலிக்கச் செய்யும் பாடலை ஒலிக்கவிட்டாள்

ஹர ஹர சிவமே
அன்பெனும் மனமே
திரிபுரம் எரியச் செய்தோனே
திருப்பத்தூரனே
உன் நாமமே … மனம் கூறுமே…

அப்பாடல் முடியும் முன்னரே
அப்படியே கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனாள்.

அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்த கணவனும் மனைவியும் ஒருவாறு சமாளித்து கொண்டு …

ஏங்க அவள இங்கே பக்கத்தில் இருக்கிற காலேஜ் எதுலயாவது சேர்த்திருக்கலாம் இல்ல. எப்படி இளைச்சி போயிருக்கா பாருங்க..

ஏகாம்பரம் எனக்கு மட்டும் ஆசையா..
அவதானே அங்கே படிக்க போறேன்னு ஒரேயடியா பிடிவாதமா இருந்தா…

அவ கூட படிச்சதெல்லாம் இங்கே பக்கத்தில் இருக்கிற காலேஜ் படிக்கும்போது இவமட்டும் தான்
ஏதோ பேருக்குன்னு படிக்கமாட்டேன்…
உபயோகமாக இருக்கணும் அதுஇதுன்னு.. என்னென்னவோ பேசிட்டு தனியா போயி படிக்கணும் என்று கேட்டா…

விடு பார்வதி…

அவ முடிவுல தெளிவாக இருக்கா…
நல்லாவும் படிக்கிறா…
கொஞ்சம் வெளியே போனாதான் உலகத்தைப்பற்றி தெரிஞ்சுக்க முடியும் என்று கூறியவர்…

செந்தில் ஏதாவது சாப்பிட்டானா என்க…

இல்லங்க… பால் மட்டும் தான் குடிச்சான்.

நீ சாப்பிட்டு போய் மதியம் சமைக்கற வேலையை பாரு. மீன் வாங்கி வந்திருக்கேன். என்றபடி தோளில் துண்டை உதறி போட்டபடி நகர்ந்தார்…

அங்கே தூங்கிக் கொண்டிருந்தவளின் காதில் ஏதோ ஒரு குரல் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்கிறது…

சற்று உற்று நோக்கினால் சிவா… சிவா.. என்ற பெயரில் வழக்கம் போலவே அலட்சியம் செய்தவள் உறக்கத்திலும் சிறிது உதட்டு சுழிப்புடன் தூக்கத்தை விடாது பற்றிக்கொண்டு இருந்தாள்…

மெலிதாய் காதில் ஒலிக்கும் குரலில்
மெஸ்மரிசமும் செயலிழந்து போகுமே
ஆனால் இந்த மென்னங்கை என்ன ஆவாளோ…??

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்