Loading

“ அடியேய் கார மிளகா.. இப்படி பேசி ஏத்தி விட்டால் உடனே பாய்ஞ்சி கவ்விடுவேன்னு நினைப்பா?.. அது நடக்காதுடி.. எனக்கு தேவை உன் உடம்பா இருந்தால் நான் எப்பயோ என் தேவையை பூர்த்தி செய்துட்டு போய்கிட்டே இருந்துருப்பேன்.. ஆனா அது இல்லை.. உன் மனசுல முற்று முழுவதுமாக என் மேல நம்பிக்கை வைத்து நான் உன் புருஷனா இடம் பிடிக்கணும்.. வெளி உலகத்துக்கு நான் தான் உன் புருஷன்னு சொல்ற அளவுக்கு நீ என்னை ஏற்றுக் கொள்ளணும்.. அப்பத்தான் நம்ம காதலுக்கு ஒரு மரியாதை கிடைக்கும்.. அப்புறம் வச்சுக்கலாம் இந்த தொடுகை கிஸ் எல்லாம்.. ” என்றான்..

 

 

“ அட மக்கு சாம்பிராணி புருஷா.. என் மனசுக்குள்ள நீ வராம தானா இப்படி நெருக்கமா உன் பக்கத்துல வந்து நானே கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணுவேன்.. இது கூட புரிஞ்சுக்க தெரியாம என்ன நீ பெரிய அப்பாடக்கர் ராம்.. ” என்றாளே சிரித்துக்கொண்டு..

 

 

“ என்னடா லக்ஷ்மி சொல்லுற?. நிஜமா நான் உன் மனசுக்குள்ள வந்துட்டேனா?.. இது கனவு இல்லையே.. ஒருவேளை நான் இப்ப அந்த அயோக்கியன் கிட்ட இருந்து உன்னை காப்பாத்துனதுக்கு பீல் பண்ணி அப்படி பேசுறியா?.. ” என்றான்..

 

 

 அவனுக்கு தேவை அவளது உண்மை காதலும் பாசமும் தான்..

 

 

 எங்கே அப்படி இல்லாமல் அவளை தனக்கு கட்டாயப்படுத்தி தந்து அவன் காதலை கொச்சைப்படுத்தி விடுவாளோ என்று பயம் வந்து விட்டது..

 

 

“ அடேய் மக்கு புருஷா.. அப்படி ஏதும் நீயே கற்பனை பண்ணிக்காத.. கொஞ்சம் கொஞ்சமா இந்த ஹேண்ட்ஸம் மேன் பிடிச்சு போய் உன்னை விட்டு என் கண்ணு அகற்ற முடியாமல் என்னை கவர்ந்து இழுத்து வெச்சிருக்க.. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ முழு மனசா என் முத்துவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இந்த ஜென்மத்துல வாழ்ந்தால் நான் முத்து கூட மட்டும் தான் வாழ்வேன்.. உன்னை மாதிரி என்னை யாராலயும் பார்த்துக் கொள்ள முடியாது என்று எனக்கு தெரியும்.. உன்கூட இருந்தா மட்டும்தான் நான் எப்பவுமே நானா இருப்பேன்.. ரியலி ஐ லவ் யூ சோ மச் டா புருஷா.. இப்பவே நம்ம வாழ்க்கையை ரெண்டு பேரும் சந்தோஷமா ஆரம்பிச்சுட்டு ரெண்டு பேரும் சந்தோஷமா ஊருக்கு போவோம்.. நம்மளை அப்படி ஜோடியா பார்த்தா மாமா எங்க அம்மா அத்தை எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க..” என்றாள்..

 

 

 

“ அதெல்லாம் சரி டா லக்ஷ்மி.. இன்னைக்கு வேண்டாம்.. நமக்கு கசப்பான சம்பவம் நடந்த நாள்.. அப்படியான ஒரு நாளில் நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சதா இருக்க வேண்டாம்.. ஊருக்கு போய் இரண்டு பேரும் கல்யாண விருந்து வைத்து பெரியவங்கள வச்சி நல்ல நாள் பார்த்து வாழ்க்கையை ஆரம்பிப்போம்..” என்றான்..

 

 

“ நீங்க இப்ப லக்ஷ்மின்னு என்னை கூப்பிட்டிங்க தானே.. அப்படித்தான் எங்க அப்பா என்னை லக்ஷ்மி என்று கூப்புடுவார்.. நீங்க அப்படி கூப்பிட்டு எங்க அப்பாவை நினைவு படுத்துறீங்க.. எங்க அப்பாவும் அடுத்து விஐபி அத்தனையும் எனக்கு பிடிக்கும்.. அவங்க ரெண்டு பேருக்கும் மேல இனி உங்களை எப்பவுமே ரொம்ப ரொம்ப எனக்கு பிடிக்கும்.. என் கட்டழகன் சொன்ன சரியா தான் இருக்கும்.. உங்க விருப்பப்படியே ஊருக்கு போய் பெரியவங்க ஆசீர்வாதத்தோட நம்ம வாழ்க்கை ஆரம்பிப்போம்.. ” என்று கூறி விட்டு அவன் கைவளைவில் அவனை அணைத்துக் கொண்டு படுத்துவிட்டாள்..

 

 

 அடுத்த நாள் காலையில் எழுந்து காலை உணவு செய்து வைத்து விட்டு அவளுக்காக காத்திருந்தான் ராம்..

 

 

 அவளும் எழுந்து குளித்துவிட்டு கீழே இறங்கி வந்தாள்..

 

 

 இருவரும் டைனிங் டேபிள் போய் அவள் அவனுக்கு உணவு எடுத்து வைக்க அவன் அவளுக்கு உணவு எடுத்து வைக்க சாப்பிட்டுவிட்டு எழுந்து அறைக்கு சென்று ஊருக்கு செல்வதற்காக உடைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தார்கள்..

 

 

 உடைகளை அடக்கி முடித்ததும் ஊரில் அங்கே யாருக்கும் அழைத்து சொல்லாமல் சர்ப்ரைசாக செல்வோம் என்று முடிவு எடுத்துக் கொண்டு வீட்டை நன்றாக பூட்டிவிட்டு அவர்களுக்கு மீரா பரிசாக கொடுத்த காரில் ஏறி ராம் கார் ஓட்ட கார் அங்கிருந்து புறப்பட்டது..

 

 

“ ஏங்க நமக்கு நேற்று உதவி செய்த அந்த அண்ணனை நான் கொஞ்சம் பார்த்து நன்றி சொல்லணும்.. அவருக்கு கால் பண்ணி வரவைங்க..” என்றாள்..

 

 

 அவனும் மனைவி சொல்லை தட்டாமல் கமலுக்கு அழைத்து அவர்கள் ஊருக்கு செல்வதாகவும் அதற்கு இடையில் வருமாறும் கூறி ஒரு இடத்தின் லொக்கேஷன் அனுப்பி வைத்தான்..

 

 

 இவர்களும் அங்கே போய் சேர கமலும் ஆட்டோவில் அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கி விட்டார்..

 

 

“ எனக்கு ஒரு சந்தேகம் என்றாள்..” சீதா..

 

 

“ கேளுடா..” என்றான்..

 

 

“ அந்த தெரு நாய் மோசமானவன் என்று ஒரு பார்வையில் தெரிந்துவிட்டதா சொன்னீங்க சரி.. ஆனால் அந்த அண்ணனை எப்படி நீங்க நம்பி பழக்கம் பிடிச்சீங்க?.. ” என்றாள்..

 

 

“ இது பெரிய சீன வித்தையா என்ன?. சிலரை பார்த்தா தெரியும்.. சிலரோட பேசி பழகினா தெரியும்.. அப்படி அந்த பொறுக்கி முதல் கட்டம்.. இந்த அண்ணன் இரண்டாவது கட்டம்.. பார்க்க பேச பழக நல்ல எளிமையா இனிமையாக இருந்தார்.. எனக்கு உடனே புடிச்சிருச்சு.. நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆயிட்டோம்.. என்னை மாதிரி அவரும் உண்மையான நேர்மையான மனுஷன்..” என்றான்..

 

 

“ நான் இதெல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கணும்.. ” என்று கூறிவிட்டு காரை விட்டு இறங்கி அருகே இருந்த ஒரு கடைக்கு சென்று சுவீட் பழங்கள் மிக்ஸர் என கொஞ்சம் அதிகமாகவே வாங்கி வந்தாள் சீதா..

 

 

 அதைப் பார்த்ததுமே ராம் புரிந்து கொண்டான்.. கமல் குடும்பத்திற்கு என்று.

 

 

 சற்று நேரத்தில் கமல் வந்துவிட அவர் அருகே சென்று “ ரொம்ப நன்றி அண்ணா.. நீங்க என் வாழ்க்கையை காப்பாத்திருக்கீங்க.. நேற்று நான் இருந்த சூழ்நிலையில் உங்களை கவனிக்கல… உங்களுக்கு மூணு பொண்ணுங்க இருக்கிறதா முத்து சொன்னார்.. நாங்க மதுரைக்கு போகணும்.. திரும்ப சென்னை வரும்போது கட்டாயம் வீட்டுக்கு வருவோம்.. நீங்க மதுரைக்கு வந்தா கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும்.. கோவிக்காம உங்க தங்கச்சி கொடுக்குறதா நினைச்சு இதை வாங்கிக்கோங்க.. வீட்டுக்கு கொண்டு போய் பாப்பாக்களுக்கு கொடுங்க.. அண்ணியை கேட்டேன் என்று சொல்லுங்க..” என்று கூறினாள்..

 

 

 

 அவரும் மறுத்து பேசாமல் சிரித்துக் கொண்டு சரி என வாங்கினார்..

 

“ ரொம்ப சந்தோசம்.. கவனமா ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.. ஊருக்கு போயிட்டு போன் பண்ணுங்க..” என்று கூறி அவர்கள் கார் அங்கிருந்து சென்றதும் அவரும் ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்..

 

 

காரில் விஐபியின் குரலில் காதல் பாடல்கள் ஒலித்தது..

 

 

 மதிய உணவு நேரம் வரை அவன் காரை ஓட்டினான்..

 

 

 ஒரு ஹோட்டலில் முன் காரை நிறுத்தி உள்ளே சென்று இருவரும் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தார்கள்..

 

 

 சீதா கார் ஓட்டினாள்..

 

 

இருவரும் சிரித்து பேசி சந்தோஷமாக அந்த பயணத்தை தொடர்ந்தார்கள்..

 

 

 மாலை நன்கு இருட்ட தொடங்கியதும் ராம் காரை ஓட்டினான்..

 

 

 

 ஒரு வழியாக அவர்கள் முதல் முதலில் சந்தித்த அதாவது ஆக்சிடென்ட் நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்..

 

 

 அங்கே காரை நிறுத்தி விட்டு இருவரும் அன்று நடந்ததை நினைவு படுத்தி பார்த்தார்கள்..

 

 

 

 வரும் வழியில் ராம் பிளாஸ்கில் காபி வாங்கிக் கொண்டு வந்தான்..

 

 

 அதை கப்பில் ஊற்றி சீதாவின் கையில் கொடுத்துவிட்டு அவன் ஒன்றை எடுத்துக் கொண்டு அவள் அருகே வந்தான்..

 

 

 அந்த இரவு நேர ஏகாந்த பொழுதில் காற்று சில்லென்று வீச சுடச்சுட இருவரும் காபியை குடித்துக்கொண்டு பழையதை நினைவு பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள்..

 

 

“ நான் அன்னைக்கு அவ்வளவு திமிரா நடந்து இருக்க கூடாது.. இப்ப அது தவறுன்னு புரியுது நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க.. ” என்றாள்..

 

 

“ ஹேய்.. காரமிளகா உனக்கு இந்த மன்னிப்பு எல்லாம் கேட்கிறது சரிவராது டா.. நீ எப்பவுமே உன்னுடைய இயல்போடு இருப்பதுதான் எனக்கு சந்தோசம்.. நான் அப்பவே அதை மறந்துட்டேன்.. ” என்றான்..

 

 

 காபி குடித்துவிட்டு கப்பை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு இருவரும் கைகோர்த்து கொஞ்ச தூரம் நடந்தார்கள்..

 

“ இனிமே இங்கயிருந்து சென்னை போறதோ சென்னையில் இருந்து இங்க வருவதா இருந்தாலும் இந்த இடத்துக்கிட்ட வந்தா எத்தனை வருஷம் கடந்து போய் இருந்தாலும் இங்க நிறுத்தி இப்படி கை கோர்த்து நடந்து அந்த முதல் சந்திப்பை பற்றி பேசிட்டு தான் போகணும்.. ” என்றாள்..

 

“ சரி அம்மணி நீங்க சொன்னா மறு பேச்சி இருக்கா?. அப்படியே பண்ணிடலாம்.. முதல் சந்திப்பை நம்ம பசங்களுக்கு செல்லுவோம்.. அப்புறம் நம்ம பேர பசங்களுக்கும் சொல்லுவோம், சரிங்களா?..” என்றான் ராம்..

 

 

“ எனக்கு டபுள் ஓகே.. அப்போ நான் பணக்கார வீட்டு ஒரே பொண்ணு சீதா கல்யாணராமனா இருந்தேன்.. ஆனா இப்ப வாழ்க்கைன்னா என்ன?.. சந்தோசம்னா என்ன?.. காதல்னா என்னன்னு?.. புரிஞ்சுகிட்ட முத்து லக்ஷ்மியா இருக்கிறேன்.. இனிமே எனக்கு எப்பவுமே இந்த முத்துலக்ஷ்மி தான் புடிக்கும்.. அதாவது முத்துவோட லக்ஷ்மியா இருக்க ரொம்ப பிடிச்சி இருக்குடா என் கட்டழகு புருஷா..” என்று கூறி அவன் கன்னத்தைப் பிடித்து இழுத்து கொஞ்சினாள் 

 

 

“ என்னால இன்னும் நம்ப முடியல டி.. இவ்வளவு சீக்கிரம் என் வாழ்க்கை உன் கூட நல்லபடியாக அமையப் போகுதா?.. என் வாழ்க்கையிலும் ஒரு மேஜிக் நடந்திருச்சு..” என்று கூறி சிரித்துக்கொண்டு அவளை அங்கேயே நிறுத்திவிட்டு அவன் கார் அருகே சென்று காரை எடுத்துக் கொண்டு வந்து அவளை ஏற்றிக்கொண்டு மீண்டும் அவர்கள் பயணம் தொடர்ந்தது..

 

 

 

 ஒரு வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்தார்கள்..

 

 

  24 மணி நேரமும் திறந்திருக்கும் கடையில் அதாவது ராம் துர்கா கல்யாணத்திற்கு பொருட்கள் வாங்க வந்த கடைக்கு சென்று இரண்டு வீட்டுக்கும் தேவையான பழங்கள் உணவு பொருட்கள் என வாங்கிக்கொண்டு ராம் ஊர் நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்தது..

 

 

 

இந்த பயணம் அவர்கள் வாழ்க்கையில் வசந்தத்தை தருமா?..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்