டீசர்…
தொடர்ந்து ஒலித்த காரின் கோர்ன் சத்தத்தில் செக்கியூரிட்டி ஓடி வந்து கேட்டை திறந்து விட, திறந்த வாயிலின் ஊடாக வேகமாக உள்நுழைந்த அந்த கறுப்பு நிற கார் ஓடுபாதையில் வழுக்கிச்சென்று அந்த மாளிகை போன்ற வீட்டின் போர்ட்டிகோவில் சக்கரங்கள் தேயும் அளவு நிறுத்தப்பட அதனுள் இருந்து வேகமாக இறங்கினான் கார்த்திக்.
தனது விழிகளை பரபரப்பாக நாலாபுறமும் சுழற்றி தேடியபடி வேகமாக வீட்டுக்குள் அவன் நுழைய, அந்நேரம் கசங்கிய முகத்துடன் உள்ளிருந்து வாசலை நோக்கி வந்து கொண்டிருந்த அவனது தந்தை சுந்தரம் மகனை கண்டு விரைந்து வந்து அவனை தடுத்து நிறுத்தினார்.
அப்போது தான் அவரை கண்ட கார்த்திக் “அப்பா! பாப்பா.. பாப்பா எங்கப்பா? மேல ரூம்ல இருக்காளா?” என துள்ளலுடன் கேட்டுக்கொண்டே மாடிப்படி நோக்கி செல்லப்போக, அவனது கைபிடித்து தடுத்தவர் வேதனை அப்பிய முகத்தை முயன்று சாதாரணமாக மாற்றிக்கொண்டு “கார்த்தி! பொறுடா.. சுருதிமா அப்ப பார்த்த அதே சின்னப்பொண்ணு இல்ல.. இப்ப அவங்க வளர்ந்துட்டாங்க.. பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காங்க.. நீ அவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கனும்” என்று யதார்த்தத்தை புரியவைக்க முயல
தந்தையை பார்த்து அழகாய் புன்னகைத்தவன் “அப்பா.. அவ நம்ம பாப்பா ப்பா.. அவள கையிலயே தூக்கிட்டு திரிஞ்சவன் நான்.. அவகிட்ட பேச என்னப்பா தயக்கம் இருக்கபோது…. எனக்கு இப்பவே அவள தூக்கி சுத்தனும் போல கையெல்லாம் பரபரக்குது.. நான் பாப்பாவப் போய் பார்த்திட்டு வரன்பா..” என்றவன் நில்லாது மாடிப்படிகளில் தாவி ஏறி ஓட, சுந்தரமோ போகும் அவனையே கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
இங்கோ அவளது அறைக்கு விரைந்து வந்த கார்த்திக் உள்ளே அவளை காணாது சுற்றி முற்றி தேடியவன் பால்கனியில் பேச்சுக்குரல் கேட்டு எட்டிப்பார்க்க, அங்கே அவனது பாப்பா திரும்பி நின்று யாருடனோ போன் பேசிக்கொண்டிருக்க, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து தனது பாப்பாவை கண்டவனின் செல்கள் யாவும் சிலிர்த்து புல்லரிக்க ஆசையும் ஆவலும் போட்டி போட மெதுவாக எட்டு வைத்து அவளருகில் சென்றவன் குறும்பு புன்னகையுடன் பின்னிருந்து இரு கைகளாலும் அவளது கண்களை மூடிக்கொள்ள, திடீரென்ற எதிர்பாரா கரத்தின் தொடுகையில் உதட்டை சுழித்து ஷிட் என்று கரங்களை தட்டிவிட்டவள் திரும்பி எதிரே நின்றுகொண்டிருந்தவனை எரிச்சலுடன் பார்த்து “ஹேய் இடியட்.. ஹூ ஆர் யூ மேன்” என சீறலுடன் கேட்க,
அவளது கோபத்தில் திடுக்கட்டவன் தன்னை கண்டு கொள்ளாமையால் தான் இப்படி பேசுகிறாள் என நினைத்து முகத்தில் புன்னகையை வரவழைத்து கண்களில் ஆர்வத்துடன் “பாப்பா.. என்ன தெரியலயா.. நான் தான் கார்த்திக்.. உன் அப்பாவோட கார் ட்ரைவர் சுந்தரத்தோட பையன்…” என்று சொன்னது தான் தாமதம் விரலில் இருந்த மோதிரத்தின் அச்சு கன்னத்தில் பதியும் அளவு பளார் என்று அறைந்திருந்தாள் அவனை.
சில நொடிகளில் நடந்த நிகழ்வில் அதிர்ச்சியில் உறைந்து நின்றவனோ எரிந்த கன்னத்தை உள்ளங்கையால் தேய்த்துக்கொண்டு திகைத்துப்போய் அவளை பார்க்க,
அவன் முன் நின்றுகொண்டிருந்தவளோ “இந்த வீட்டு வேலக்காரனோட பையன் நீ… என் பக்கத்திலயே வர தகுதி இல்லாதவன்.. என் மேலேயே கைய வைக்கிறியா…” என்று எல்லையற்ற சினத்துடன் பேச, அவள் வார்த்தைகள் உருவாக்கிய வேதனையில் குளம் கட்டிய கண்களுடன் அவளையே வெறித்துக்கொண்டிருந்தான் அவன்.
தொடரும்…
கதைன்னு வரும்போது நான் கத்துக்குட்டி தான்..
ஆகவே எனது கதையை வாசித்து தவறுகளை சுட்டிக்காட்டி ஊக்கப்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
குரங்கு வெடி
வாழ்த்துகள் சகி 😊
Thank you sagi😁
வாழ்த்துக்கள் குரங்கு வெடி🥳🥳🥳🥳 டீசர் நல்லா இருக்கு.
Thank you akka💐💐
super da teaser
Thanks ka💐💐
ஆஹா கதையில சிறப்பான தரமான சம்பவங்கள் எல்லாம் எதிர் பார்க்கலாம் போல இருக்கே. Waiting for your story and all the best
Thank you akka💐💐
சின்ன வயசு அன்பா? சினம் கொண்டவளோட வம்பா? இது எதுல போய் முடியுமோ.. வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
Unga rhyming nalla iruku ka.. thank you💐💐
தோ பார்ரா … வேலைக்காரன் மகன் னா என்ன ஆகிட்டு… இந்த வேலைக்காரங்க இல்ல னா நீங்க எல்லாம் எதுவுமே இல்ல… அது என்னங்கடா… எப்பப்பாரு பெரிய இங்கிலீஷ் பீட்டர் விடுறீங்க… கார்த்தி பையா விடு விடு… கத்தரி முத்துனா சந்தைக்கு வந்துதானே ஆகணும்… அப்ப பாத்துக்கலாம்
இந்தா மா குரங்கு வெடி பட்டயக்கிழப்புற 😀😃😃👏👏👏👏👏
வெற்றி பெற்றிட வாழ்த்துக்கள்😜
தாங்க் யூ சகி.. உங்க கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது💐💐