Loading

நேரத்தோடு எழுந்து ஆபிஸிற்கு தயாராகி கீழே வந்தவன் நேற்று ஊற்றிய தோசைகளை பேனில் வைத்து சூடாக்கி எடுத்தான்.

தோசைகளை தட்டில் எடுத்து கூடவே நேற்றைய நினைவுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

என்றும் இல்லாத அளவுக்கு இன்று அவன் முகம் மலர்ந்திருந்தது.

காரை எடுக்க வெளியில் சென்றவன் ஒரு முறை எதிர் வீட்டைப் பார்த்தான். ‘பேசாம நாமலே அவளை கூட்டிட்டு போவமா’ என்று யோசித்தவன் பின் ‘இத்தனை நாள் இல்லாம இப்போ என்ன ஞானோதயம் னு அசிங்கசிங்கமா கேட்பா தேவையா? நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம். நமக்கு மட்டும் ஏன் இப்பிடி?’ என்ற மனசாட்சியின் அழுகுரலுக்கு செவி சாய்த்து காரை எடுத்தான்.

ஆபிஸிற்கு வந்தவன் தன் சகாக்களுக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தான். இன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டான். ஆனால் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நேரத்தை பார்ப்பதும் வாயிலில் அவள் வரவை எதிர்பார்ப்பதுமாக இருந்தான்.

ஹுசைன் மெதுவாக நரேஷின் காதருகே குனிந்து “ஏன் மச்சான் இன்னைக்கேதும் முக்கியமான கிளையண்ட் வாராங்கலா?”

“இல்லையே மச்சான். ஏன்?”

“அப்பறம் ஏன் டா அவன் வாசலைப் பார்த்து சைட் அடிச்சிட்டு இருக்கான்.”

என்று மகிழை பார்த்தவாறு கேட்க 

நரேஷ் மகிழை திரும்பிப் பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தான். பாவம் மகிழ் இருந்த நிலைமையில் இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை.

“ஏன் டா லூசு மாதிரி சிரிக்கிற?”

“பயபுள்ள கவுந்துட்டான் போல டா” என்று தன் சிரிப்பை மட்டுப் படுத்தியவாறு சொன்னான்.

“யாரு இந்த மகிழானந்தாவா?

“டேய்….இப்போ லாம் சாமியாருங்கள தான் டா நம்ப முடியாது” என்றான் ஹுசைனின் தோளில் கை போட்டவாறு.

“நேத்து எப்பவும் போல சண்டை தானே டா போட்டாங்க னு மொழி சொன்னா. அப்பறம் எப்பிடி?”

“ஏன் னா இந்த மோதல் காதல்ல முடிஞ்சிருக்கு டா…இட்ஸ் ஓல் இன் த லவ் தியரி யு நோ?” 

“இவ்ளோ பேசுறியே…. அப்பறம் ஏன் டா சிங்கிளா இருக்க?”

“அ…அது…வந்து….ஹான்! இவ்ளோ கேக்குறியே நீ ஏன் டா சிங்கிளா இருக்க?”

“இவ்ளோ பேசுற உனக்கே கிடைக்கல. இதுல எனக்கு மட்டும் எங்க?” என்று பெருமூச்சு விட்டான்.

“ரைட்டு விடு” என்று வேலையை தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில் மகிழ் இவர்களை நெருங்குவதை கவனித்தவர்கள் மும்முரமாக வேலை செய்வது போல ஆக்டிங் விட்டனர்.

மகிழ்,” டேய் நரி!”என்க

அவனோ சுழல் நாற்காலியில் ஒரு சுற்று சுழன்று மகிழை பார்த்து திரும்பி

” யெ…ஸ்…வாட் கேன் ஐ டூ ஃபார் யு சார்?”

“அவ…இன்னைக்கு எதாவது மெஸேஜ் போட்டாலா?”

“யாரு?……பிச்ச மவளா?” 

“ப்ச் நான் மொழியை தான் கேக்குறேன்”

“ஓ….அவளா….அவ தான் ரெண்டு நாள் லீவ் னு மெயில் பண்ணிருக்காலே”

“என்ன? ரெண்டு நாள் லீவ் ஆ? இங்க அவ்ளோ வேலை இருக்கு இப்போ போய் லீவ் எடுத்துருக்கா?”என்று எகிறியவன். 

‘இங்க ஒரு மனுசன் அவளுக்காக வெயிட் பண்றது கூட புரிஞ்சுக்காம இருந்துட்டு இதுல என்னை லவ் பண்றது ஒன்னு தான் குறைச்சல்” என்று முணுமுணுத்ததை கேட்ட நரேஷும் ஹுசைனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

நரேஷ்,”அவதான் இனி செய்ய போற வீடியோக்கு ஸ்கிரிப்ட்டும் பிளானும் நேத்தே அனுப்பிட்டாலே. நாம செய்யப் போற வேலை தான் பென்டிங் ல் இருக்கு”

“ஓ…சரி.” என்று தன் இருக்கையில் தஞ்சமாகினான்.

ஹுசைன், “ஏன் மச்சான். இந்த மொழி புள்ள ஒரு சண்டைக்காக லாம் கோச்சிட்டு இருக்கவ இல்லையே”

“தெரில. ஆனா ஏதோ விளையாடுறா னு மட்டும் புரிஞ்சுது. பாப்போம் என்ன நடக்குது னு”

மகிழுக்கு மொழி அருகில் இல்லாமல் நேரமும் போகவில்லை. வேலையும் ஓடவில்லை. தன்னை ஒரு தனிமை உணர்வு தாக்குவது போல உணர்ந்தான். மகிழ், மொழியை பார்க்காமலும் ஒரு வார்த்தையேனும் அவளிடம் பேசாமலும் இருந்ததில்லை. இனியாவை காதலிக்கிறேன் என்று சுற்றிய போதும் மொழியோடு இருக்கும் நேரத்தை குறைத்தானே ஒழிய அவளிடம் பேசாமல் இருக்கவில்லை. இன்று முதல் முறை இவ்வாறு இருப்பது அவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.

இருக்கையிலிருந்து எழுந்தவன் ஆபிஸையே ஒரு சுற்றி நடந்து வந்தான். அப்போதும் அவளது நினைவுகள் தன்னை தாக்குவதை

தடுக்கமுடியவில்லை. 

ஸ்டூடியோவில் நுழைந்தவுடன் முதலில் தெரியும்  வரவேற்பு இடத்திற்கு மேலே தங்களது போட்டோக்களை பிரேம் செய்து அவற்றுக்கு கீழே அவர்களைப் பற்றி ஒரு வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது. 

மகிழ் ஒரு அடர் நீல டீசர்டும் டெனிமும் ஷூவும் அணிந்து தன் கைகளை ஸ்டைலாக டெனிமில் புதைத்து ஒரு காலை மடித்து சுவற்றில் பதித்து மறுகாலை நீட்டி நின்று சுவற்றில் சாய்ந்தவாறு அழகாக புன்னகைத்திருந்த போட்டோவை பிரேம் செய்திருந்ததிற்கு கீழே “தி பிஸ்தா ஒஃப் தி மாஸ்டர் மைண்ட்ஸ் மிஸ்டர். அகமகிழன்” என்றும்

கேமிராவின் பின் எதையோ தீவிரமாக யோசிப்பது போல கட்டம் போட்ட சட்டையும் ஜீன்ஸ், ஷூ அணிந்து நின்றிருந்தவன் கீழே “தி பிஸ்தாஸ் பிஏ எண்ட் சினிமேட்டோகிராஃபர் மிஸ்டர் நரேஷ்வர்” என்றும்

ஹெட்ஃபோன்ஸ் மாட்டி பெரிய எல்.ஈ.டி ஸ்கிரீன் கொண்ட கம்பியூட்டர் முன்னே, கழுத்தருகே வெள்ளையும் சாம்பல் நிற டீசர்டில் ஸ்கார்ஃபும் அணிந்து சுருட்டை முடியில் ஒற்றைக் கண்ணடித்து அமர்ந்திருந்த ஹுசைனின் படத்திற்கு கீழே “தி கிங் ஆஃப் டிஜிட்டல் மேஜிக் மிஸ்டர். ஹுசைன்” என்றும்

குறும்பு புன்னகையுடன் பேப்பரும் பேனாவும் வைத்து தலையில் ஒரு ஹேட் அணிந்து ஒரு கல் மேல் அமர்ந்திருந்த மென்மொழியின் படத்திற்கு கீழே “யெஸ்! ஐயம் தி ரைட்டர் மிஸ்.மென்மொழி”என்றும்

ஒரு லாங் ஃபிராக்கில் கைகளை கட்டியவாறு ஒற்றைப் புருவத்தை தூக்கி ஸ்டூடியோ முன்னால் நின்றிருந்தவளின் கீழே “ஐயம் தி பட்டிங் டிங்கரிங் சீஃப் எடிட்டர் மிஸ்.திரவ்யா” என்றும்

பியானோ வில் வாசிப்பது போல் கைவைத்து தலையை சற்று மேலே தூக்கி கண்மூடி அமர்ந்திருந்த ஜஸ்டினின் படத்திற்கு கீழ் “அப் கமிங் மியூசிக் டைரக்டர் மிஸ்டர்.ஜஸ்டின்” என்றும் 

அந்த படங்களோடு ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் மெம்பர்களினதும் குரூப் போட்டோக்களும் சுவற்றில் தீட்டப்பட்டிருந்த  ‘ ட்ரீ ஃபேமிலி’  பெய்ண்டிங்கில் மாட்டப் பட்டிருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலே ‘அவர் ஃபேமிலி’

என்று ஒரு மரப்பலகையில் பொறிக்கப் பட்டிருந்தது.

இதை ஒவ்வொன்றையும் இரசித்து பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு , ஒரு நாள் மொழியிடம் இதெல்லாம் எதற்கு என்று கேட்டதிற்கு ,”இதெல்லாம் மார்க்கட்டின் ஸ்ரெடர்ஜி தம்பி. அதோட இதைப் பாத்துட்டு ஆபிஸ் குள்ள நுழையும் போது நாம ஒரு ஃபேமிலின்ற ஃபீல் ல ஹேபி யா வேர்க் பண்ண முடியும்” என்றவள்

பின் அவனை சாவகாசமாக பார்த்து திரும்பி “இதெல்லாம் சின்ன புள்ளை உனக்கு புரியாதுடா”என்க மகிழ்”அடிங்க!” என்று அவளை அடிக்க துரத்திய நிகழ்வு நினைவிலாடியது. 

மீண்டும் மீண்டும் அவள் நினைவு தன்னை வாட்டுவதை உணர்ந்து முடியாமல் நரேஷிடம் சென்று “மச்சான்! அவளுக்கு கோல் பண்ணே”

“எதுக்குடா”

“கேள்வி கேக்குறதை விட்டுட்டு கோல் பண்ணுடா” என்று எரிந்து விழுந்தான்.

“இரு டா வரேன்.” என்று அழைப்பை அவளுக்கு தொடுக்க, அந்தப் பக்கம் ,”நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளரின் அழைப்பேசி சுவிட்சாஃப் செய்யப்பட்டுள்ளது என்று அந்த கோணமூக்கனிடம் சொல்லிவிட்டு ஃபோனை வைக்கவும் இல்லையெனில் தாங்கள் தர்ம அடி வாங்குவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்ற அசிரீரி காதின் வழியே கேட்க அழைப்பை துண்டித்து விட்டு “அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப் மச்சான்”

“ப்ச். நான் வீட்டுக்கு போறேன் மச்சான். பாத்துக்க”

“என்னாச்சு டா?”

“தலைவலிக்குது அதான்” என்றுவிட்டு காரை எடுக்கச் சென்றான்.

ஹுசைன்,”அவ ஃபோன் எடுக்காததுக்கு

இவனுக்கு ஏன் டா தலைவலிக்குது”

“நீர் மங்குனி அமைச்சர் என்பதை பல முறை நிரூபித்து விடுகிறீர்” என்க அவன் முறைத்தான்

“ஹா..ஹா இதெல்லாம் காதல் படுத்தும் பாடு அமைச்சரே”

“இந்த எழவுக்கு தான் நான் லவ்வே பண்ணல” என்று தோளைக் குலுக்கினான்.

“மொத உனக்கு பொண்ணு கிடைக்கல னு சொல்லு” என்று இவர்கள் வேலையை விட்டு அரட்டையை தொடர்ந்தனர்.

காரை வீட்டிற்கு செலுத்தியவன் இறங்கி முதலில் சென்றது மொழி வீட்டிற்கு தான்.

ஹாலில் அமர்ந்திருந்த பாரதியையை பார்த்து ” மொழி எங்க?” என்று சற்று காரம் தூக்கலாக கேட்டான்.

முதலில் விளையாட நினைத்தவள் பின் அவன் முகத்தில் இருந்த தீவிரத்தைப் பார்த்து “பிரெண்ட் வீட்டுக்கு போய் இருக்காடா”

“என்னை விட அவ பிரெண்ட் முக்கியமா போய்ட்டாளா? இதுல லவ்வு வேற” என்று கத்தியவன் திரும்பி தன் வீட்டிற்கு வந்தான்.

மீண்டும் மீண்டும் மனதை ஏதோ அழுத்துவது போல தோன்ற அப்பிடியே மல்லாக்க படுத்து விட்டான்.

அடுத்த நாளும் இதே தொடர சோர்ந்து போனான். வெட்கம் மானத்தை விட்டு அவளுக்கு விடுத்த அழைப்புகளும் செல்லாக் காசாகியது. 

அந்த தாக்கத்தில் தான் அவள் படத்தைப் பார்த்து புலம்பியது. அவளுக்காக தவிக்கும் மனதை பிடித்தாலும் அவளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கமே மேலோங்கி இருந்தது. 

நரேஷும் மற்ற நண்பர்களும் கடைசியாக யூ டியூபில் போட்ட வீடியோ ஆறு மில்லியன் விவ்ஸை தாண்டி குவித்திருக்க அந்த மகிழ்ச்சியில் மகிழை சூழ்ந்து அணைத்த போதும் கடமைக்காக புன்னகைத்தானே தவிர முகத்தில் அதன் வெளிப்பாடு இல்லை.

சிறிது நேரத்தில் மகிழின் மொபைல் சத்தம் போட அவளாக இருக்குமோ என்று ஆர்வமாக அதை காதில் வைத்தவன் எதிரில் ‘ஆக்சிடன்ட்’ என்று கேட்ட செய்தியில் உறைந்து போனான்.

தொடரும்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்