Loading

மல்லிகை மலர்களும் ரோஜா இதழ்களும் கட்டிலை அலங்கரிக்க பொருத்தி வைத்திருந்த ஊதுபத்தியின் ஜவ்வாது வாசனை  நாசியைத் துளைக்க அந்த அறையே  மனதை மயக்கும் படி இருந்தது. ஆனால் கட்டிலில் அமர்ந்திருந்தவனுக்கோ அதிலெல்லாம் மனம் லயிக்கவில்லை. நடந்து முடிந்த தன் திருமணத்திலும் இதற்கு பின் தன் வாழ்க்கை எப்படிப் போகும் என்றவாறு யோசனையில் இருந்தான்.

வெளியே கேட்ட சலசலப்பில் கதவை நோக்கி திரும்பியவன் அங்கே அன்ன மயிலென கையில் பால் செம்புடன் வந்து நின்றவளைக் கண்டு ஆவென பார்த்து இவ இம்புட்டு அழகா.. சேலை கட்டுனா கொஞ்சம் அடக்கமாத் தான் தெரியுறா என்று நினைத்துக் கொண்டிருக்கையிலே கதவைத் தாளிட்டு விட்டு வெடுக்கு வெடுக்கென நடந்து வந்து பால் சொம்பை பால் வெளியில் தெறிக்கும் அளவிற்கு பட்டென டேபிளில் வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

இப்ப இங்க என்ன நடந்தது என்று நினைத்து விட்டு ஏன்டி உனக்கு இந்த அச்சம் மடம் நாணம் அந்த மாதிரிலாம் இருக்குறது தெரியுமா தெரியாதா?

தெரிஞ்சு என்று புருவம் சுருக்கி விட்டு.. இல்ல தெரிஞ்சு என்ன பண்ணனும். அப்படியே தலையைக் குனிஞ்சுக் கிட்டே வந்து என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமான்னு உன் காலுல விழனுமாடா காட்டான். அதெல்லாம் என்னால பண்ண முடியாது. நான் இப்படி தான். ஏதோ வாழ்க்கை குடுக்குறவன் மாதிரி கல்யாணம் பண்ணேல அனுபவி என்றாள்.

உங்கிட்ட அதெல்லாம் எதிர்பார்க்குறது தப்பு தான். எல்லாம் என் தலையெழுத்து என்று அவன் புலம்பிக் கொண்டிருக்கையிலே காலையில் இருந்து ஒரே டயர்டு எனக்குத் தூக்கம் வருது என்று கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.
———-

ஏ புள்ள நில்லு..

என்ன எதுக்கு கூப்புடேக.

ஏன் எதுக்குன்னு சொன்னா தான் நிப்பேகளோ.. நானும் மாமன் முறை தான் உனக்கு.

அதுக்கு என்ன பண்ணனும்.

ம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ.

என்னாது..

உன்னை எப்போ எப்படி எதுக்கு புடுச்சதுனுலாம் தெரியலை. ஆனால் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். இந்த கிரீட்டிங் கார்டு வாங்கி முட்டி போட்டு பூக் கொடுத்து காதலைச் சொல்லலாம் எனக்குத் தெரியாது. உனக்கு புடுச்சதுனா புடுச்சுருக்குனு சொல்லு இல்லயா புடிக்கலனு பட்டுனு சொல்லிடு.

அவள் திருதிருவென முழிப்பதைப் பார்த்து என்ன படிக்காதவன். இவன் எப்படி நம்மள நல்லா வச்சுப் பாத்துப்பானு நினைக்கிறியா. உங்க வீட்ல இருந்ததை விட நூறு மடங்கு நான் உன்னை சந்தோஷமா வச்சுருப்பேன்..

——

FIEO(Federation of Indian Export Organisations) அமைப்பு ஏற்றுமதி தொழில் ஆரம்பிக்குறவங்களுக்கு கிளாஸ் எடுக்குறாங்க. காய்கறி பழங்கள் ஏற்றுமதி பண்ற தொழில்ல நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிக்கிட்ட இருந்து கம்மியா வாங்கி காய்கறியெல்லாம் அதிக விலைக்கு இந்த மாதிரி தான் விற்குறாங்க. எப்படி ஆரம்பிக்கனும் என்னென்ன பண்ணனும் என்னென்ன லைசன்ஸ் வாங்கனும்னு அவங்களே சொல்லித் தருவாங்க. அதற்காக அரசே நிதி உதவி லோன் மாதிரி தர்றாங்க. நம்ம நாட்டுத் தேவைக்குப் போக மீதத்தை நாமளே ஏற்றுமதி பண்ணலாம் வெளிநாடுகளுக்கு என்றாள் மதிவதனி.

அதெல்லாம் சரி தான்டி. ஆனால் நாம அதை எடுத்து பண்ண முடியுமா என்றான் எங்கு தெரியாத காரியத்தில் இறங்கி தான் மட்டுமல்லாமல் தன்னை நம்பியவர்களும் கஷ்டப்படுவார்களோ என்று.

எம்எஸ்சி படிச்சிட்டு நீயே பயந்தா மத்தவங்கலாம் எப்படி இதை பண்ணுவாங்க என்றாள் புருவம் உயர்த்தி.

அவள் கொடுத்த தைரியத்தில் ம் நான் முயற்சி பண்றேன். தேங்கஸ் அல்லிராணி என்று புன்னகைத்தான்.

——
மக்காச்சோளத்துல பட்டைப்புழுக்கள் தாக்கி எல்லாம் சேதமாயிடுச்சுனு விவசாயிகள் நஷ்ட ஈடு கேட்டா உங்களுக்கு எல்லாம் பிச்சை கேட்குற மாதிரி இருக்கா. விவசாயிகள்லாம் விளைச்சல் அதிகமாக வரும்னு பேராசைப்பட்டு கண்ட விதையை வாங்கி பயிரிட்டா இப்படி தான் போகும்னு அசால்டா சோஷியல் மீடியாவில் கமென்ட் பண்றாங்க நிறைய பேரு. ஏன் நீங்கலாம் இன்னொரு கம்பெனில சம்பளம் அதிகம் தர்றேனு சொன்னா அங்க போறதில்லையா. அது மாதிரி விவசாயியும் நல்ல விதை விளைச்சல் அதிகம் வரும்னு சொன்னா நம்பி வாங்கி பயிரிட தான் செய்வான். இந்த மாதிரி விதைகள் லாம் நம்ம நாட்டுக்கு வர்றதுக்கு யார் காரணம்?. அதை டெஸ்ட் பண்ணாம நம்ம நாட்டுக்கு வர அனுமதி கொடுத்தது யாரு?. என்று ஆக்ரோஷமாக வெற்றி கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

இதுக்கு கவர்மென்டே விதைகளை நல்ல முறைல பாடம் பண்ணி விற்கலாமே. யூனியன்ல இருக்குமேனு மட்டும் சொல்லிடாதிங்க. அங்க எல்லா விதைகளுமே இருக்குறது இல்லை. அங்க வச்சுருக்குற விதைகளை ஏக்கர் கணக்குல நிலம் வச்சுருக்குற விவசாயி நிலம் புல்லா அதையே பயிரிட முடியாது. பயிர்க்கு போடுற மருந்துல இருந்து விதைகள்ல போடுற மருந்து வரைக்கும் கலப்படம் பண்றது நாங்க இல்லை. அதை நாங்க யார்கிட்ட வாங்குறோமோ அவங்க தான் பண்றாங்க. எங்களுக்கும் இயற்கை உரம் போட்டு பண்ணனும்னு ஆசை தான். ஆனால் விதைகள் சரியில்லையே.

அப்படியே முட்டி மோதி வெள்ளாமையை நல்லபடியாக் கொண்டு வந்து அதை அறுவடை பண்ற நேரம் விலை இருக்குறதில்லை. நீங்கலாம் வெங்காயம் இவ்வளோ ரேட் தக்காளி இவ்ளோ ரேட் விற்குதுனு புலம்புறேங்க. ஆனால் எங்க கிட்ட எவ்வளவு ரேட்டுக்கு வாங்குறாங்கனு தெரியுமா?. பத்து ரூபா பிளாஸ்டிக் பொருள் விக்குறவன் கூட அவன் பொருளுக்கு விலையை நிர்ணயம் பண்றான். ஆனால் நாங்க விளைவிச்ச காய்கறிகளுக்கு விலையை நிர்ணயம் பண்ண முடியலை எங்களால என்று ஒட்டு மொத்த விவசாயிகளின் ஆதங்கத்தை தனக்கு முன் அமர்ந்திருந்த மீடியாவில் இருந்து வந்த ஒருவனிடம் கொட்டிக் கொண்டிருந்தான்.

நான் இந்த எக்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பிக்கிறது விவசாயிகளுக்காக மட்டும். நீங்க விவசாயிங்க தற்கொலை பண்ணிக்கிறதையும் நஷ்ட ஈடு கேட்டு ராப்பகலா கஷ்டப்பட்டு போராட்டம் பண்றவங்களை பிச்சைக்காரங்க மாதிரி காண்பிக்கிறதையும் விட்டுட்டு இந்த மாதிரி விவசாயிகளை என்கரேஜ் பண்ற மாதிரி செய்திகளை மீடியாவில் காண்பிங்க. அப்போ தான் விவசாயத்தையும் விவசாயிகளையும் தாழ்வா நினைக்குறவங்களுக்கு சாட்டை அடியா இருக்கும் என்றான் வெற்றிமாறன்.

—–

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. அருமை அருமை, நல்ல கதை களம்,

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.