
New York City – North America
விடிந்தும் விடியாததுமாய் இருந்த அந்த அதிகாலைப்பொழுதில் குளிர் காற்று முகத்தை இதமாக வருட கையில் ஆவி பறக்கும் காபி கோப்பையுடன் பால்கனியில் வந்து நின்றாள் அவள்.
அந்த பரந்து விரிந்த வானில் வெய்யோனின் உதயத்தை ரசிப்பதில் அவளுக்கு ஒரு அலாதிப் பிரியம். மேற்படிப்புக்காக வேண்டி நியுயார்க் வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. வந்த முதல் நாளிலே ஆரம்பித்த பழக்கம் இது. எழுந்ததும் சூரிய உதயத்தை ரசிக்கும் போது ஏனோ அந்த நாளே நன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் என ஒரு எண்ணம்.
இன்றும் அதற்காகவே பால்கனியில் வந்து காத்துக்கொண்டு இருக்கிறாள் அவள். சிதாரா…
பேரழகு என்று வர்ணிப்பதற்கு இல்லாவிட்டாலும் பார்ப்போரை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. அந்த இதமான காலை வேளையின் எழிலை ரசித்துக் கொண்டு இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவளின் கைப்பேசி ஓசை.
“இந்த நேரத்துல யாரு கால் பண்றது..” என நினைத்தபடி மொபைலை எடுத்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சி.
ஏனென்றால் அழைத்திருந்தது அவளுடைய ஆருயிர் தோழிகளல்லவா.
“ஹேய்.. வாட் அ சப்ரைஸ்டி.. ரொம்ப நாள் கழிச்சி ரெண்டு பேரும் சேர்ந்து வீடியோ கால் பண்ணி இருக்கீங்க.. ஆமா ரொம்ப அதிசயமா இருக்கு.. ரெண்டு கும்பகர்ணிகளும் முழிச்சிட்டு இருக்கீங்க.. இந்தியால இப்போ டைம் ஆஃப்டர்நூன் 3.30 ஆ இருக்குமே.. இது ரெண்டு பேரும் வயிறு முட்ட சாப்ட்டு தூங்குர டைம் ஆச்சே…” என விடாமல் பேசிக்கொண்டு இருந்தவளை தடுத்தாள் அக்ஷரா.
“அம்மா தாயே.. தயவு செஞ்சி அந்த வாய மூடுறியா.. எங்களையும் கொஞ்சம் பேச விடும்மா.. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த சொல்லத்தான் கால் பண்ணோம்.. முதல்ல நீ எப்போ இந்தியா வர போறாய் அத சொல்லு..” என்றவளின் கேள்விக்கு பதிலில்லை.
“என்னடி பதில காணோம்.. ஏதாச்சும் சொல்லு..” “நீ தானே வாய மூடிக்கிட்டு இருக்க சொன்னாய் அச்சு..” என அப்பாவி போல் பதிலளித்தவளை வெட்டவா குத்தவா என பார்த்தாள் அக்ஷரா. அதற்கு ஒரு படி மேலே சென்று தலையிலே அடித்துக் கொண்டாள் லாவண்யா.
“நீ இன்னுமே இந்த மொக்க ஜோக் அடிக்கிற பழக்கத்த விடலயா சித்து” என கடுப்பாக கேட்டவளிடம், “ஈஈஈ…அதெல்லாம் ஜீன்லயே இருக்கிறது வனி… மாத்திக்க எல்லாம் முடியாது..சரி நேரா விஷயத்துக்கு வாங்க…ஆமா எதுக்காக எப்போ இந்தியா வரேன்னு கேட்டீங்க.. இப்போ செமஸ்டர் லீவ்.. நான் கூட வந்து கொஞ்சம் நாள் ஸ்டே பண்ணிட்டு போலாம்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன்.. இன்னும் டேட் ஃபிக்ஸ் இல்ல” என்றதும் தான் அவர்களுக்கு எதற்காக அழைத்தோம் என்பதே ஞாபகம் வந்தது.
“ஆஹ்.. நல்லதா போச்சி அப்போ.. நம்ம ஃப்ரென்ஸ் எல்லாம் சேர்ந்து ஊட்டிக்கு டூர் போலாம்னு ப்ளேன் பண்ணி இருக்கோம்.. எல்லாரும் சந்திச்சி ரொம்ப நாள் ஆகுது.. அதனால் எல்லாருக்குமே ஓக்கே தான்.. நீ மட்டும் தான் மிஸ்ஸிங்..” என லாவண்யா அழைத்ததற்கான விளக்கம் அளிக்க சிதாரா யோசிப்பதைக் கண்டதும் அக்ஷரா அவசரமாக, “இதுல யோசிக்க எதுவுமே இல்ல சித்து.. நீ ஆல்ரெடி இந்தியா வர தானே ஐடியா பண்ணாய்.. சோ நெக்ஸ்ட் ஃப்ரைடே இங்க இருக்கிற மாதிரி கிளம்பி வா.. ஓக்கே தானே உனக்கு” என்க, “வர முடியாதுன்னு சொன்னா மட்டும் விடவா போறீங்க.. நான் இன்னைக்கே டிக்கட் புக் பண்ணுறேன்.. ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு எல்லோரையும் பார்க்க..” என கேலியில் ஆரம்பித்து பின் சந்தோஷமாக பேசி மூவரும் பொழுதைக் கழித்தனர்.
அரட்டை அடித்து முடித்து காலை கட் பண்ணும் போது நன்றாகவே விடிந்து இருந்தது. பின் ஏனைய வேலைகளை முடித்துவிட்டு ஆன்லைனில் இந்தியா செல்வதற்கான டிக்கட்டை புக் செய்தவள் வீட்டாருக்கு அழைத்து வரும் தகவலை தெரிவித்தாள்.
பின் “2 யேர்ஸ் கழிச்சி இந்தியா போறோம். முதல்ல ஷாப்பிங் போய் எல்லாருக்கும் கொண்டு போக ஏதாச்சும் பர்ச்சேஸ் பண்ணலாம்” என நினைத்தவள் தயாராகி கிளம்பினாள்.
Chennai – India
பூஞ்சோலை கிராமம்
காலையிலிருந்தே அந்த வீடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பெண்கள் அனைவரும் ஓடியோடி வேலை செய்து கொண்டிருந்தனர். முற்றத்தில் நின்று மொபைலில் யாருடனோ தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தவனை நோக்கி வந்தாள் லாவண்யா. அவள் வந்தது அறிந்ததும் “நான் அப்புறம் பேசுறேன்.. நீங்க எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சிருங்க…” என்று விட்டு மொபைலை பாக்கட்டில் வைத்தவாறு திரும்பினான் ஆதர்ஷ்.
“நீ இன்னும் கிளம்பலயா ஆது” எனக் கேட்டவளிடம், “எங்க கிளம்பலயான்னு கேக்குற நியா” என வினவினான் ஆதர்ஷ்.
தன்னால் இயன்ற மட்டும் அவனை முறைத்த லாவண்யா, “உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லயா ஆது.. நைட் அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன் தானே.. சித்து யூ.எஸ்ல இருந்து த்ரூவா இங்க தான் வரா.. சோ அவள பிக்கப் பண்ணிக்க போன்னு…” என்க தலையில் கை வைத்தவன், “ஓஹ்…. சோரி நியா முக்கியமான வேலையொன்னு வந்திடுச்சி..அதான் மறந்துட்டேன்.. இரு நான் இப்பதே யாரு கிட்டயாச்சும் சொல்றேன்” என அவசரமாக மொபைலை கையில் எடுத்தான்.
” நீ இப்ப சொல்லி என்ன ஆக போகுது.. அவள் ஆல்ரெடி ரீச் ஆகிட்டாள்.. ஏர்போட்ல இருந்து வெளிய வந்து கால் பண்றதா சொன்னாள்..” என கோவமாக பேசினாள் லாவண்யா.
ஆதர்ஷ், “சரி சரி நீ கோவபடாதே நான் ஏதாச்சும் பண்ணுறேன்..” எனக் கூறியும் லாவண்யா சமாதானம் ஆகவில்லை. அந்நேரம் “என்ன மச்சான் ப்ராப்ளம்” எனக் கேட்டவாறு வந்தான் அபினவ்.
அவனிடம் விஷயத்தை விளக்க தான் பார்த்துக் கொள்வதாக கூறிச் சென்றான். பின் யாரையோ மொபைலில் அழைத்த அபினவ், “மச்சான் நீ மீனம்பாக்கத்துக்கு தானே ஏதோ வேலையா போனாய்.. ஏர்போட்ல ஒருத்தங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க.. நீ அவங்கள பிக்கப் பண்ணி இங்க கூட்டிட்டு வரியா” என்க “சரி நீ நேம் என்ட் எப்படி இருப்பாங்கன்னு சொல்லு” எனக் கேட்டவனுக்கு அபினவ் பதில் சொல்லப்போக அதற்குள் அவனை யாரோ அழைக்கவும், “மச்சான் நீ போய் கால் ஒன்னு தா.. அவங்களே வருவாங்க.. சரிடா இங்க சின்ன வேலையொன்னு.. பாய்…” என அழைப்பைத் துண்டித்து விட்டான்.
அந்தப்பக்கம் இருந்தவனின் கத்தல் எதுவும் அபினவ்வின் செவியை அடையவில்லை. “ப்ச்.. இவன் வேற யாருன்னு டீட்டைல்ஸ் சொல்லாம கட் பண்ணிட்டான்.. எல்லாம் முடிஞ்சி கடைசில என்ன ட்ரைவர் வேலையையும் பார்க்க வெச்சிட்டான்.. எல்லாம் என் தலையெழுத்து..” எனக் கூறிவிட்டு காரை உயிர்ப்பித்தான் பிரணவ்.
Chennai International Airport
இரண்டு வருடங்களுக்கு பின் தாய் மண்ணை மிதித்த சிதாரா மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள்.
இந்த காலத்து பெண் என்பதை நிரூபிக்கும் விதமாகவே உடனே செல்ஃபி எடுத்து Back to India என்ற மெசேஜ்ஜுடன் யாருக்கோ அனுப்பியவள் கையோடு வாட்சப்பில் ஸ்டேட்டஸும் வைத்து விட்டாள்.
பின் லாவண்யாவுக்கு அழைத்தவள் அழைப்பு ஏற்கப்பட்டதும் “நான் ஏர்போட்டுக்கு வெளிய வந்துட்டேன் வனி.. தர்ஷ் அண்ணா எங்க இருக்காரு” என்க “சித்து சோரிடி.. ஆதுக்கு அவசரமா வேலையொன்னு வந்திடுச்சி.. சோ ஆதுவோட ஃப்ரென்ட் யாரோ தான் உன்ன பிக்கப் பண்ணிக்க வந்திருக்காரு… XXXXX இதான் கார் நம்பர்.. ப்ளீஸ்மா கோச்சிக்காதே…” என லாவண்யா கெஞ்ச, “உன்ன வந்து கவனிச்சிக்குறேன்..” எனக் கடுப்புடன் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் சிதாரா. பின் கார் எண்ணைக் கண்டுபிடித்து அதனை நோக்கி சென்றவளின் நடை அங்கிருந்தவனைக் கண்டதும் தடைப்பட்டது.
ஏர்போட்டை அடைந்தவன் அபினவ்வுக்கு அழைத்து, “நான் வந்துட்டேன்..எங்க இருக்காங்கடா” என்க “உன்னோட கார் நம்பர் குடுத்து இருக்கேன்டா.. வெய்ட் பண்ணு வருவாங்க..” என்றான் அபினவ்.
பின் காரிலிருந்து இறங்கி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் தன் முன் நிழலாட மொபைலிலிருந்து பார்வையை அகற்றியவன் தன் முன்னே யாரென்றே அடையாளம் தெரியாதவாறு லக்கேஜ்ஜுடன் விரித்து விட்ட கூந்தல், கண்ணில் சன் கிளாஸ் அணிந்து மாஸ்க் போட்டு கறுப்பு ஷேர்ட், ஜீன்ஸ் அணிந்து கையில் ஓவர்கோட், ஹேன்ட்பேக் சகிதம் நின்றிருந்தவளை கேள்வியாய் நோக்கினான்.
❤️❤️❤️❤️❤️
Hi friends… முதல் அத்தியாயம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. ஏதாச்சும் தவறு இருந்தா சொல்லுங்க.. திருத்திக்குறேன்.. vote & comment பண்ணுங்க.. உங்க சப்போர்ட் இல்லாம என்னால நிச்சயம் முன்னேற முடியாது… நன்றி…
– Nuha Maryam –
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.










வாவ், செம ஸ்டார்டிங் சிஸ்… எல்லா கேரக்டர்ஸ் நேமும் சூப்பர்…
Thank you ☺️
அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!
Thank you ☺️☺️ Keep supporting…
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
Thanks a lot sis.. keep supporting ☺️
Sema starting sis… Sithu, akshu, laavi friendship cute aa irukku…
Thanks ma ☺️
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.