
அத்தியாயம் 6
“ஓடி வரணுமா? நான் என்ன கில்லி விஜயா?” எனத் தலையைச் சொரிந்த வினயன், ஒரு ஆட்டோவைப் பிடித்து அந்தக் காரை பாலோ செய்யச் சொன்னான்.
இங்கோ டையைக் கட்டிக் கொண்டிருந்த அர்னவ் தேவ், அலுவலகம் கிளம்பத் தயாரானான்.
முந்தைய நாள் கொடுத்த ப்ளூடூத் மூலம் ஜனனியை அழைத்தவன், “ஹே மிஸ் நூடுல்ஸ். உனக்கு பங்க்சுவாலிட்டின்னா என்னன்னு தெரியுமா?” என ஆரம்பிக்க, “எனக்குத் தெரியும் மிஸ்டர் அர்னவ், உங்களுக்குத் தான் தெரியலை. நான் கீழ தான் இருக்கேன்.” என்றாள் அசட்டையாக.
“காரை எடுத்து ரெடியா வை…”
“உங்களுக்கு ட்ரைவர் வேலையும் நான் தான் பார்க்கணுமா?” ஜனனி சலித்திட, “ஆல் இன் ஆல்… நீ இன்டெர்வியூ வரும்போது ஜாப் பத்திப் படிக்கலையோ?” என நக்கலாகக் கேட்க,
சட்டெனச் சுதாரித்தவள், “ஹான், படிச்சேன் படிச்சேன்…” என வேகமாகக் கூறியவள் அவன் அடுத்த கேள்வி கேட்கும் முன், “சரி நான் சாப்பிட்டுட்டு இருக்கேன், அப்புறம் பேசுறேன்.” என அழைப்பைத் துண்டித்து விட, ‘இவளுக்கு நான் பாஸா? இவள் எனக்கு பாஸா?’ எனப் பல்லைக் கடித்தான்.
அவன் கீழே வந்தும், உணவில் கவனமானவள் யூடியூபில் பரிதாபங்கள் வீடியோவை ஓட விட்டு அதனைப் பார்த்தபடி உண்டாள். அவளது ஆட்டிடியூட் அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
அலைபேசியைப் பிடுங்கியவன், “நீ வேலைக்கு வந்திருக்கியா, இல்ல ஷோ காட்ட வந்திருக்கியா… யூடியூப் பார்க்கணும்னா வேலையை விட்டுட்டுப் போய் பாரு. நீ சாப்பிட்டுக் கிழிச்சது வரை போதும், போய் காரை எடு!” என்று கத்தினான்.
திடீரென அவன் கோபம் கொண்டு கத்தியதன் காரணம் புரியாது விழித்தவள், “உங்ககிட்ட வேலைக்கு வர்றவங்க சாப்பிடக் கூடாதா என்ன?” என எதிர்கேள்வி கேட்க, “அப்போ நீ சாப்பிட்டு முடிச்சு இடத்தைக் காலி பண்ணு. இனி நீ இங்க வரத் தேவை இல்ல!” என்று கனலைக் கக்கி விட்டுச் செல்ல, ‘என்ன பொசுக்குன்னு சொல்லிட்டான்’ எனப் பதறியவளுக்குத் தமக்கையை நினைத்து தான் பயம்.
அதில் திடுதிடுவென ஓடியவள், அவன் காரை எடுக்கும் முன் பாய்ந்து அவள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அர்னவ் காட்டமாகப் பார்த்தான்.
“இறங்கு!”
“சாரிங்க மிஸ்டர் அர்னவ்… ஏதோ பூரி நல்லாருந்துச்சேன்னு அதுல மூழ்கிட்டேன். வேணும்னா என் சம்பளத்துல கழிச்சுக்கோங்க.”
“உன்னை இறங்குன்னு சொன்னேன்!” அவன் அதே அழுத்தத்துடன் நிற்க,
“நான் உங்க பாதுகாவலர் மிஸ்டர் அர்னவ். நான் ஒரு விஷயத்துல குதிச்சுட்டா அது நடந்து முடியிற வரை பின்வாங்க மாட்டேன்…” என முடிவாகக் கூற,
“அப்படி என்ன நடக்கணும்?” என்றான் விழியுயர்த்தி.
“உங்களைப் போட்டுத் தள்ள ஆள் வருவாங்கல்ல… அதைத் தடுத்து நிறுத்தணும்ல…” என ப்ரூஸ்லீ போலக் கையை மடக்க, அவனுக்குச் சற்றுக் கோபம் தணிந்தது.
“உன்னைப் பார்த்தா நீ என்னைக் காப்பாத்துவன்னு தோணல. போட்டுத் தள்ள நீயே ஐடியா குடுக்குற மாறி இருக்கு…” என அவளை அளந்திட,
“சான்ஸ் இருந்தா நான் ஏன் மிஸ் பண்ணப் போறேன்?” என்று முணுமுணுத்ததில், அவன் புருவம் நெறித்தான்.
அதில் “ஈஈ… எதுக்கு வெட்டிப் பேச்சு மிஸ்டர் அர்னவ். ஏறுங்க லேட் ஆகுதுல…” என்றதில்,
“கால் மீ சார். இல்லைன்னா இப்பவே இறங்கிப் போ!” என அவன் முடிவாய் கூற, அவளுக்கோ வாயில் கெட்ட வார்த்தையெல்லாம் வந்தது.
“ஓகே சார்ர்ர்ர்…” எனப் பற்களைக் கடித்ததில், இதழ் மீறா குறுநகை படர முன் இருக்கையில் அமர்ந்தான்.
காரை ஸ்டார்ட் செய்யும்போதே திணறத் தொடங்கி விட்டாள்.
க்ளட்சை மிதிப்பதும், பின் காரை அணைப்பதுமாக இருந்தவளை முறைத்து வைத்தவன், “உனக்கு கார் ஓட்டத் தெரியுமா, தெரியாதா?” என்றிட,
“தெரியும் சார். ஆனா ஆட்டோமேட்டிக் தான் தெரியும்.” என உள்ளே சென்ற குரலில் கூறியவள், “நீங்க அப்டேட்டே ஆகலையா? இன்னும் கியர் கார் வச்சிருக்கீங்க.” எனக் கேட்டு அதற்கும் முறைப்பைப் பரிசாக வாங்கிக் கொண்டவளைத் திட்டி விட்டே அவன் காரை எடுத்தான்.
முதல் நாள் அலுவலகம் வரும் முன்னே போதும் போதுமென்றாகி விட்டது மூவருக்கும்.
ஒன்பதாவது மாடியில் இருக்கும் சூர்ய சித்தாந்தனின் அறையில், தானும் அண்டி விட்ட மௌனி ஆதிராவிற்குத் தூக்கம் சொக்கியது.
“ஜி…” மெல்லமாய் அவனை அழைத்தாள்.
மடிக்கணினியில் எழுத்துக்களைத் தட்டிக் கொண்டிருந்த சூர்யா, தட்டச்சு செய்வதை நிறுத்து விட்டு விழியை மட்டும் வலப்புறம் திருப்பிப் பார்க்க, “எனக்கு ரொம்ப அமைதியா இருந்தா தூக்கம் வந்துடும். கேன் ஐ பிளே சம் மியூசிக்?” என அடக்கமாகக் கேட்டாள்.
ஒரு வெப்ப மூச்சை வெளியிட்டு விட்டு மீண்டும் மடிக்கணினியில் மூழ்கியதில், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஜஸ்ட் ஒன் சாங் ஜி…” அவள் மீண்டும் கேட்டதில் எரிச்சலடைந்தவன், “நான் நோ சொல்லல தான?” என்றான் விழி இடுங்க.
உடனே பரபரவென ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்தாள் மௌனி.
வேகமாக எதுவோ எழுதத் தொடங்க, அவனது நயனங்கள் அதிகமாய் சுருங்கியது.
“வாட்?”
சூர்யாவின் கேள்வியில், “உங்களைப் பத்தி ஒரு டிக்ஸனரி எழுதிட்டு இருக்கேன் ஜி. நீங்க பென்னை ஒரு தடவை தட்டுனா சொல்லுன்னு அர்த்தம், ரெண்டு தடவை தட்டுனா சொல்லாதன்னு அர்த்தம். பெருமூச்சு விட்டா ஆமான்னு அர்த்தம், கோபமா பார்த்தா மூடிட்டுப் போய் வேலையைப் பாருன்னு அர்த்தம். சைலண்டா இருந்தா நான் பேசுறதைக் கவனிக்கிறீங்கன்னு அர்த்தம்… எப்படி நம்ம அனலைசிங்?” என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுப் பெருமிதமடைந்தவளை எவ்வித உணர்வுமின்றி மேலும் கீழுமாக லேசர் பார்வை வீசியவன் மீண்டும் வேலையில் புதைய,
“இதுக்கு என்ன ஜி அர்த்தம்?” என்று கன்னத்தில் கை வைத்துக் கேட்டாள்.
“பிளர்ட் பண்றன்னு பச்சையா தெரியுதுன்னு அர்த்தம்…” என்றவனின் அனல் பார்வையில், அசடு வழிந்தபடி கன்னத்தில் இருந்த கையை எடுத்தவள், “அது அப்படி இல்ல ஜி. உங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சால் தான, உங்க எதிரி எப்படி இருப்பான், அவனை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியும். உங்களுக்கு ஒரு சீக்ரட் சொல்லட்டா?” என்றாள் ஹஸ்கி குரலில்.
“நம்ம ஆபிஸ்குள்ள நுழையும் போது, வாட்ச்மேன் உங்க கார் உள்ள வந்துட்டதா யாருக்கோ தகவல் சொன்னான். அநேகமா, இப்ப ஒரு பைட் சீன் இருக்கும்னு எதிர்பார்க்குறேன்…” என்று நாற்காலியின் பின்னால் சாய்ந்து சாவகாசமாகக் கூறும்போதே, சூர்ய சித்தாந்தனின் கைக்கடிகாரம் ஆபத்தின் அறிகுறியாக அலறியது.
“நான் எந்த பட்டனும் பிரெஸ் பண்ணலையே?” மௌனி ஆதிரா குழப்பமாகக் கேட்க, சூர்ய சித்தாந்தனின் விழிகள் அவசரமாக ருஹானாவின் அறையை அலசியது.
நினைத்தது போலவே அங்கு ஒருவன் அவளைத் தாக்க முயல, அவள் முயன்ற மட்டும் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தாள்.
“ஷிட்… நீ ருஹானா ரூமுக்குப் போ, பாஸ்ட்!” என்று சீறியதில், அவளும் நிலவரம் புரிந்து மின்னல் வேகத்தில் கீழிறங்கினாள்.
‘இந்த வினை எங்க போனான்…’ எனப் பல்லைக் கடிக்க, அவனது ஆட்டோ ஆடி அசைந்து அப்போது தான் அலுவலகத்தை அடைந்தது போலும்.
ருஹானாவைத் தாக்க முயன்றவன், அவள் அணிந்திருந்த கடிகாரத்தில் கத்தியால் அடித்ததாலேயே சூர்யாவிற்கும் அலர்ட் வந்தது.
அவர்களது அலுவலகத்திலேயே ப்ராஜக்ட் மேனேஜராகப் பணியாற்றியவன், கத்தியுடன் வருவானென்று ருஹானாவும் எதிர்பார்க்கவில்லை ஆதலால், அவளும் முதலில் திணறினாள்.
பின், அவன் கையை வளைத்துக் கத்தியைக் கைப்பற்ற முயல, அவனோ கத்தியைத் திருப்பி அவளது நெஞ்சிலேயே குத்த வரும் அரவம் புரிய, எவ்விதப் பதற்றமும் இன்றிப் பின்னந்தலையைக் கோதியபடி சிசிடிவியின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய சித்தாந்தன்.
மறுகணமே புயலாக உள்ளே நுழைந்த மௌனி ஆதிரா, ருஹானாவை நோக்கி இருந்த கத்தியைக் கண்ணிமைக்கும் நேரம் பறித்து, அவனது காலிலிருந்து நெஞ்சம் வரை சரமாரியாகக் கீறினாள், ஆழமாய் இறங்காதவாறு.
“ஆஆ!” என வலியில் அலறியவன் அங்கிருந்து தப்பித்து ஓட முயல, அவன் முடியைப் பிடித்து மௌனி ஆதிரா நிறுத்தும் போதே, வினயன் உள்ளே நுழைந்து திகைத்தான்.
தொழிற்சாலையில் மீட்டிங்கில் இருந்த அர்னவ் தேவும், தனக்கு வந்த அலர்ட்டில் பதறியடித்து அலுவலகம் வந்து சேர, அவனுடன் ஜனனியும் விஷயம் புரியாது ஓடி வந்தாள்.
அர்னவ் தேவ் ருஹானாவை அரவணைத்து, “ஆர் யூ ஆல்ரைட் சிஸ்ஸி. ஒன்னும் ஆகலைல?” என பதற்றமாகக் கேட்க, “ம்ம்ம்ஹும்” என்றவளின் முகம் இறுகியது.
கூடவே வினயனைக் கோபப்பார்வை பார்த்த அர்னவ், “இடியட்… இவள் கூட இருக்கத் தான உன்னை வேலைக்கு எடுத்திருக்கோம். எங்க போய் தொலைஞ்ச?” என்று எரிந்து விழுந்தான்.
வினயனுக்கும் சற்றே சங்கடமாகி விட்டது. ‘அவளுக்கு உண்மையில் ஆபத்து நேர்ந்திருந்தால்?’ நினைக்கவே நெஞ்சம் பதற அவள் தன்னை விட்டுச் சென்றதை விடுத்து, “சாரி சார்…” என்றான் தலை குனிந்து.
ஜனனி தான், “உங்க சிஸ்டர் தான் அவனை அவங்க கூட வர்றதுக்கு அலோ பண்ணிருக்கணும் சார்!” எனப் பொங்கிட,
மௌனி ஆதிரா தான், இன்னும் தனது கையில் சிக்கி இருந்த எதிராளியின் முடியை இன்னுமாக இறுக்கிப் பிடித்து, “ஜி, என்ன செய்ய இவனை?” என ப்ளூடூத்தின் வழியே சூர்யாவிடம் கேட்டதில், அவனோ ஒரு கணம் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்து, “லீவ் ஹிம்…” என்றான்.
“வாட்? விட்டுடவா?” எனும்போதே அவள் பிடி தளர, “ம்ம்ம்” என சூர்யா உறுமும் போதே அவன் தப்பித்து ஓடி விட்டான்.
“ஏய் இடியட், அவனை எதுக்கு விட்ட?” அர்னவ் மௌனியின் மீது கோபம் கொள்ள, “உங்க சேர்மன் தான் விடச் சொன்னாரு. நல்லவேளை! அவர் கரெக்ட் டைமுக்கு என்னை அனுப்பலைன்னா, இந்தக் கத்தி மிஸ் ருஹானாவோட பிளட்டை டேஸ்ட் பண்ணிருக்கும்…” எனக் கீழே கிடந்த கத்தியை எடுத்துச் சுழற்றினாள்.
ருஹானா தான் முகத்தை மாற்றாது தன்னைப் பிடித்திருந்த அர்னவின் கையை உதறி விட்டு, கடுங்கோபத்துடன் ஒன்பதாம் தளத்திற்குச் சென்றாள்.
அவள் வரவை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த சூர்ய சித்தாந்தன், அதனைப் பற்றிய அலட்டலின்றித் தனது வேலையில் புதைய, கதவை மடாரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ருஹானா ஜியா.
அவள் பின்னே அனைவருமே ஓடி வர அர்னவ் தான், “ருஹா, ப்ளீஸ் காம் டவுன். அந்தச் சாக்கடைகிட்ட பேசுனா நமக்கு தான் எனர்ஜி வேஸ்ட்…” என்று அவளை அடக்கிட, மௌனி ஆதிரா அர்னவை முறைத்தாள்.
“என்னடி, உன் கியூட் பாயை இப்படிச் சொல்றான்?” ஜனனி அவளிடம் முணுமுணுக்கும் போதே, ருஹானா சூர்யாவின் முன்னால் நின்றிருந்தாள்.
அவனோ சாவகாசமாக நிமிர்ந்து வினயனை ஒருமுறை பார்வையால் சுட்டான்.
“இன்னொரு தடவை இவளைத் தனியா விடக் கூடாது. அண்ட் யூ…” என ருஹானாவின் மீது பார்வையைத் திருப்பியவன், “உன் பாடிகார்ட் இல்லாம நீ ஆபிஸ் ரூம்ல கூட தனியா இருக்கக் கூடாது” எனக் கட்டளை கொடுக்க,
“நீ யாருடா எனக்கு ஆர்டர் போடுறதுக்கு? நீ மட்டும் இங்க வராம இருந்திருந்தா என் ரூமுக்குள்ள வந்து என்னை அட்டாக் பண்ற தைரியம் எவனுக்காவது வந்திருக்குமா? உன் வஞ்சத்துக்கு, எங்களைச் சுத்தி இருக்குறவங்களைப் பலியாடா ஆக்குன… இப்ப எங்களையே நேர்ந்து விட்டிருக்க. இன்னொரு தடவை நீயோ, உன் சம்பந்தப்பட்ட யாராவது என்னைக் காப்பாத்த ட்ரை பண்ணீங்க…” என விரல் நீட்டி எச்சரித்தவளின் கண்கள் ஆத்திரத்தில் சிவந்திருந்தது.
“என்னை எப்படிக் காப்பாத்திக்கணும்னு எனக்குத் தெரியும். நீ ஒரு ம*** புடுங்க வேணாம்!” என்று தனது கூந்தலைப் பிடுங்கிக் காட்டியவள், மௌனி ஆதிராவின் புறம் திரும்பி, “ஹே யூ… இனி என் கேபின்ல உன்னைப் பார்க்கவே கூடாது.” என்று கொதித்தாள்.
அவள் அத்தனைப் பேசியும், கோபப்பட்டுக் கிளம்பிச் செல்லாமல் கல் போல அமர்ந்து மடிக்கணினியை உபயோகித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு சுறுசுறுவெனக் கோபம் எழுந்தது அர்னவிற்கு. தனது தந்தையின் வார்த்தையை மதிக்கவே அமைதி காக்கிறான்.
ருஹானா திரும்பிச் செல்ல முயலும்போது, சொடுக்கிட்டு அழைத்தான் சூர்ய சித்தாந்தன்.
“இந்த ம***க்கு கூட நீ எனக்கு முக்கியம் இல்ல. இங்க என்னோட ப்ராஜக்ட் முடியிற வரை, சித்தாந்த குடும்பத்தோட வாரிசுகள் இங்க இருக்கணும்னு தான் இன்னும் உங்க ரெண்டு பேரையும் விட்டு வச்சுருக்கேன்…” என்றவன் பேசி முடித்ததன் காரணமாய் ஒரு விரலை ஆட்டி அவர்களைக் கிளம்பச் சொல்ல, அர்னவ் புயலாய் அவனை அடிக்க எத்தனிக்க, இம்முறை ருஹானா தடுத்தாள்.
“சாத்தான்கிட்ட மோதி நம்ம நிம்மதியைக் கெடுத்துக்க வேணாம்…” என இழுத்துச் செல்ல மௌனி, வினயன், ஜனனி தான் பேயறைந்தது போல நின்றனர்.
“என்னடி, இப்படி அடிச்சுக்குறாங்க. நம்ம வீட்டை விடப் பஞ்சாயத்து நாறும் போலயே…” வினயன் மௌனியிடம் கிசுகிசுக்க, “எக்ஸ்சாட்லிடா தமையா… இவனுங்களை எதிரிங்ககிட்ட இருந்து பாதுகாக்குறதுக்கு முன்னாடி, இவங்க மூணு பேரும் அடிச்சுட்டுச் சாகாம பாதுகாக்கணும் போல.” என மௌனி ஆதிரா சொல்லி முடிக்கும் முன், சூர்ய சித்தாந்தனின் “அவுட்!” என்ற கர்ஜனையில் முதல் ஆளாக வெளியில் ஓடி விட்டனர் வினயனும் ஜனனியும்.
மௌனி ஆதிராவோ, “நீங்க ரொம்ப பாவம் ஜி…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
அவனது கருவிழி ஒரு நொடி அவள் அதரத்தில் தங்கிப் பின் மீண்டிட, வளைந்த புருவங்கள் ஏனென உயர்ந்தது.
அவனது கேள்வி புரிய, “பின்ன என்னஜி, காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ் சொல்லலைன்னா கூடப் பரவாயில்ல. வந்து சண்டை போட்டுட்டுப் போறாங்களே உங்க சிஸ்டர். ஹ்ம்ம்ம், என் பைட் எல்லாம் வேஸ்ட்டா போச்சு. நெக்ஸ்ட் டைம் உங்களை அட்டாக் பண்ண வரச் சொல்லுங்க ஜி. நான் என் முழுத் திறமையைக் காட்டுறேன்.” என்று கையை மடித்து வெற்றிக்குறி காட்டியவளை, மெல்ல மெல்ல ஊடுருவியது ஆடவனின் பாறையுள்ளம்.
வேண்டுமென்றே நேரவில்லை
வேண்டுமென்ற நேசம்…
வேண்டாத நிலையில்
வெள்ளத்தில் நீந்தி
வெதும்ப வைக்கும்
வன்காதல் தாங்குமோ
வெண்மயில் நெஞ்சமும்!
ரசித்திட வருவான்(ள்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
1
+1
1

