
அத்தியாயம் 5
சரியாக எட்டு மணிக்கு சித்தாந்தனின் வீட்டை அடைந்தனர் மூவர் குழு.
“நேத்து நைட்டு முழுக்க கார் ஓட்டுனதுல தூக்கமே இல்ல. இன்னைக்கு நல்லா தூங்கிடணும்.” என கழுத்தைச் சுளுக்கெடுத்தபடி கூறினாள் மௌனி ஆதிரா.
மூவரின் கையிலும் ஒரு ட்ராலி இருந்தது.
உள்ளே சென்றவர்களை, அவ்வீட்டை நிர்வகிக்கும் சேத்தன் என்பவர் அவர்களது அறையைக் காண்பித்து விட்டுச் சென்றார்.
நான்கடுக்கு மாடி கொண்ட பங்களாவில் முதல் தளத்தில் ருஹானா ஜியாவும், இரண்டாம் தளத்தில் அர்னவ் தேவும், மூன்றாம் தளத்தில் சூர்ய சித்தாந்தனும் வசிக்கின்றனர்.
அதன்படியே, அவரவர் செகரெட்டரிகளுக்குத் தனித் தனி மாடியில் அறை கொடுத்திருக்க, அறைக்குள் நுழைந்த ஜனனிக்கு ஐயோ என்றிருந்தது.
மௌனி ஆதிராவும் அறையைப் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்தாள்.
சூட் ரூம் இல்லையென்றாலும், சூடு இல்லாத ஏசி அறையை எதிர்பார்த்திருந்தாள்.
அறை என்னவோ பெரியதாகத் தான் இருந்தது. ஆனால் கட்டில், மெத்தை, ஏசி போலான எதுவுமே இல்லை. துணி வைக்க வார்டரோப் இருந்தது. தரையில் விரிக்க, பார்க்கவே கடினமாக சிங்கிள் மெத்தை ஒன்றைச் சுவரோரம் சாய்த்து வைத்திருந்தனர், அவ்வளவே!
ஒரு ஓரத்தில் குளியலறை. அதுவும் பளபளக்கும் டைல்ஸ் இன்றி சிமெண்ட் தரையுடன் காட்சியளிக்க, ஷவர் கூட அங்கு இல்லை.
“என்ன மிஸ் ஜனனி… ரூம் வசதியா இருக்கா?” அறையைத் தன்னை நொந்து பார்த்திருந்த ஜனனிக்கு, அர்னவின் நக்கல் கேள்வி கடுப்பைக் கொடுத்தது.
“ஓ! இந்த ரூமுக்கு என்ன? பெருசா இருக்கு. படுக்க மெத்தை இருக்கு. அதோ பாத்ரூம் கூட இருக்கே. வச….தியா இருக்கு மிஸ்டர் அர்னவ். ரொம்ப தேங்க்ஸ்!” எனக் கடுகடுத்தாள்.
அவளது எரிச்சல் அவனுக்குக் குளுகுளுப்பைக் கொடுத்தது போலும்.
“வெல்கம்…” கேலிச் சிரிப்புடன் கூறியதில் அவளுக்கு ஆத்திரம் கூடியது.
‘பாலஸுக்கு ஆசைப்பட்டதுக்கு லாட்ஜ்லயே ராஜா மாறி இருந்திருக்கலாம்…’ வினயன் தான் பரிதாபமாக அறையைப் பார்த்தான்.
வாசல் கதவு, குளியலறைக் கதவு போக அங்கு இன்னும் ஒரு கதவு இருந்தது.
யோசனையுடன் அதனைத் திறக்க எத்தனிக்க அதுவோ திறக்கவில்லை.
“நான் லாக் பண்ணிருக்கேன் மிஸ்டர்…” பின்னால் இருந்து ருஹானாவின் குரல் கேட்க, அவனோ “இது என்ன டோர் பாஸ்?” என்றான்.
அவளோ ஒரு கடவுச் சொல்லைப் பதிந்ததும் அந்தக் கதவு திறந்து கொள்ள, அதனுள்ளே சென்றால் பிரம்மாண்டமான நவீன அறை, தரையில் பட்டுத் தெறித்த சீலிங் விளக்குடன் உறவாடி ஒளியைத் தந்தது.
“வாவ்! நான் கூட உங்களைத் தப்பா நினைச்சுட்டேன் பாஸ்… எனக்காக இப்படி ஒரு ரூமா?” அவன் குதூகலிக்க அவனை முறைத்து வைத்தாள் ருஹானா.
“ஹலோ, இது என்னோட ரூம்… இது வழியாவும் உன் ரூமுக்குப் போகலாம். எனக்கு ஒரு அவசர தேவை இருக்கும் போது, நீ சட்டுன்னு வரனும்ல… அதான் இந்த செட்டப்…” என்றதும் புஸ் என ஆனது.
“ஓஓ… சரி!” என முகத்தைச் சுளித்து விட்டு நகரப் போனவன் பின் நின்று, “அவசரத் தேவைக்குன்னு சொல்லிட்டு பாஸ்வோர்ட் போட்டு வச்சிருக்கீங்களே, உங்களை ஒருத்தன் கன் பாயிண்ட்ல வச்சிருக்கும்போது எப்படி பாஸ் நான் டக்குன்னு வர்றது?” என வெகு தீவிரத்துடன் கேட்க,
“லுக்… ஒரு வாரத்துல உன்மேல எனக்கு நம்பிக்கை வந்ததும், நானே பாஸ்வோர்ட் சொல்றேன். அதுவரை என் பிரைவசில நீ தலையிடக் கூடாது.” என விரல் நீட்டி எச்சரித்தாள்.
“உங்க பிரைவசிக்கு ஒரு பங்கமும் வராதுங்க பாஸ். நான் வேணும்னா இங்கேயே இந்த சோபால படுத்துட்டு உங்களைப் பார்த்துட்டே இருக்கேன். என் வேலையையும் கவனமா செஞ்ச மாறி இருக்கும்ல?” என அனைத்துப் பற்களும் தெரியச் சிரித்து வைக்க, “கெட் அவுட்!” என்று சீறியதில், “ரைட்டு, விடுங்க…” என்று சலித்துக் கொண்டு தனதறைக்குச் சென்றான்.
தனக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோட்டம் விட்ட மௌனி ஆதிராவின் யோசனையைக் கலைத்தது, அங்கு இருந்த இன்டெர்காம்.
அதனை எடுத்துக் காதில் வைத்ததும், “உனக்கு ரைட் சைட் ஒரு டோர் இருக்கும், அதை ஓபன் பண்ணி உள்ள வா…” சூர்யாவின் ஆழ்ந்த குரல் கேட்டதும், அவளும் அதே போல அந்தக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
சில்லென்ற ஏசி காற்று முகத்தில் மோத, நவீனத்தின் உச்சமாகக் காட்சியளித்த மெத்தையின் மீது கால் நீட்டி அமர்ந்திருந்தான் சூர்ய சித்தாந்தன்.
வெள்ளை நிற பைஜாமாவில், மேற்கூரை அலங்காரத்தில் விளக்கோடு அவன் முகமும் மின்னியது.
வந்ததும் வராததுமாக, அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், “உன் திங்ஸை செட் பண்ணிட்டு, உன் ரூம் பால்கனில நில்லு. இன்னைக்கு பர்ஸ்ட் டியூட்டி உனக்கு!” என்றதும் ‘என்னது டியூட்டியா?’ எனத் திகைத்தாள்.
“நீ வேலைக்குத் தான சேர்ந்துருக்க. டிஸைன் டிஸைனா ட்ரெஸ் போட்டு சாப்பிட்டுத் தூங்கிட்டுப் போக இல்லைல?” ஏளனமாகக் கேட்டதில், “இன்னைல இருந்தே டியூட்டின்னு தெரியாது.” என்றாள் உர்ரென்று.
“நான் நாளைக்குத் தான் உன்னை வரச் சொன்னேன். நீயா தான் இன்னைக்கே இங்க வர்றேன்னு சொன்ன…” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டான்.
“ஹி ஹி… சம்டைம் மை மௌத் பிகம் மை எனிமி ஜி…” என்றவள் வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தாள்.
அவனோ இறுகிய முகத்தை மாற்றாது, “லுக்… 24/7 நீ அலெர்ட்டா இருக்கனும். இடையில எப்பச் சாப்பிடுவியோ, தூங்குவியோ… அது உன் பிரச்சினை. உன் சாமர்த்தியம். நீ கொஞ்சம் பிசகுனன்னு தெரிஞ்சாலும்…” எனும்போதே, “வேலைல இருந்து தூக்கிடுவீங்களா?” என அசட்டையாகக் கேட்டாள்.
அதில் இதழ் வளைத்தவன், “நோ… என்னை டார்கெட் பண்ணிருக்குற எனிமி, உன்னையவே தூக்கிடுவான். அப்புறம், தேவை இல்லாம நான் மறுபடியும் இன்டெர்வியூ வைக்க வேண்டியது இருக்கும்.” என்றான் அவளைப் போன்றே அசட்டையுடன்.
“அதுக்கு முன்னாடி என் எனிமி கண்ணுல மாட்டாம இருக்கணும்.” எனக் காதைக் குடைந்தபடி வாய்க்குள் முணுமுணுத்தாள்.
“அது உன் திறமை!” அவனும் தக்க பதிலடி கொடுக்க, “ஹான், வாட்?” என விழித்ததில், “என் எனிமி உன்னைத் தூக்காமல் பார்த்துக்குறது உன் திறமைன்னு சொன்னேன் மிஸ் மௌனி ஆதிரா…” என்றான் அர்த்தப் பார்வையுடன்.
“இவன் வேற…” என நொந்து போனவளோ, “நான் பால்கனில நிக்கிறேன்.” எனக் கடுப்படித்து நகர முற்பட, அவளிடம் ப்ளூடூத் அடங்கிய பொருளைக் கொடுத்தவன், “இதுல நான் கால்லேயே இருப்பேன். பகல்ல எப்பவும் இதை ஆன் பண்ணிருக்கணும். நான் தூங்கும்போது மட்டும் இதை ஆஃப் பண்ணிடுவேன். இந்த ரெட் பட்டன் ப்ரெஸ் பண்ணுனா என் வாட்ச்ல இருந்து அலாரம் அடிச்சு என்னை அலர்ட் பண்ணும். காட் இட்…” என விளக்கம் கொடுத்தவன், வாகாகப் படுத்துக் கொண்டு விளக்கை அணைக்க, அவளுக்கோ கண்ணைச் சுழற்றியது.
‘பேசாம கட்டிலுக்கு அடியில போய் தூங்கிடலாமா?’ எனக் குதர்க்கமாகச் சிந்தித்தவளை இருளிலும் ஆடவனின் பார்வை காந்தமாகப் பாய, தலையெழுத்தை எண்ணியபடி பால்கனிக்குச் சென்றாள்.
பால்கனிக்கு அருகிலேயே அவனது அறை பால்கனியும் இருந்தது. கம்பியில் ஏறி குதித்தே அங்குச் சென்று விடலாம். கீழே எட்டிப் பார்த்தாள். கீழ் தள பால்கனியில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
உடனே உடன்பிறந்தவர்களை கான்பரன்ஸில் இணைக்க, அழைப்பை ஏற்றதுமே ஜனனி கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்கி விட்டாள்.
சூர்ய சித்தாந்தன் கொடுத்த ப்ளூடூத்தை அணைத்து விட்டு, தனது ப்ளூடூத்தை மாட்டிக் கொண்ட மௌனி, “ஏய் நிறுத்துடி! நானே பாவம்…” என்றிட,
“நீ பாவம் இல்லடி, பாவி…” எனக் குமுறினாள் ஜனனி.
“இந்த பெட் என் காலுக்குப் பத்தவே மாட்டேங்குது தெரியுமா… இதுக்குத் தரையிலேயே படுத்துடலாம்.” வினயனும் புலம்ப, “என்னது, நீங்க ரூம்ல படுத்திருக்கீங்களா? உங்க ஆளுங்க உங்களுக்கு டியூட்டி கொடுக்கல?” என அதிர்ந்தாள் மௌனி.
“டியூட்டியா? நீ எதையாவது பேசி சும்மா இருக்குறவங்களைச் சொறிஞ்சு விடாத மௌனி…” என ஜனனி மிரண்டாள்.
“அடிப்பாவி… இங்க நான் பால்கனில தேவுடு காத்துட்டு இருக்கேன் ஜன்னி…” எனக் கொந்தளிக்க,
“நீ தான அவன் வேணும்னு ஒத்தக்கால்ல நின்ன, அனுபவி!” என ஜனனி அழைப்பைத் துண்டித்ததில், மௌனி “பால்கனில சில்லுன்னு இருக்கா? பெங்களூர்ல குளிர் இருக்கும்னு சொல்றாங்க. இந்த ரூம் என்ன அடுப்புல வச்ச மாதிரி இருக்கு…” என வினயன் தீவிரத்துடன் சந்தேகம் கேட்டதில், “மூடிட்டு போனை வைடா வெண்ணை!” எனக் கோபத்துடன் அழைப்பைத் துண்டித்தாள்.
நேரம் செல்லச் செல்ல குளிர் ஊசியாகக் குத்தியது. ‘பேசாம, அவன்கிட்ட உண்மையை ஒத்துக்கிட்டு சரண்டர் ஆகிடலாமா?’ என்றெல்லாம் எண்ணினாள்.
‘உண்மை, கடுகளவு கசிஞ்சாலும் என்னைத் தேடிட்டு இருக்குறவனுக்கு விஷயம் போயிடும். கடவுளே! ஒரு கியூட் பாயை நம்பி வந்தேன். என்னைக் குளிர்ல நடுங்க விட்டுட்டானே!’ என நொந்தவள், ஒரு கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டாள்.
‘முதல் டியூட்டி வேற… சரியா செய்யாம வெளில அனுப்பிட்டா என்ன பண்றது?’ என்ற பீதி வேறு.
அமர்ந்திருந்தவள் எப்போது சுவரில் சாய்ந்து உறங்கினாள் என்றே தெரியவில்லை.
திடீரென கண்ணில் ஏதோ வெளிச்சம் அடிப்பது போல இருக்க, கண்ணைச் சுருக்கி விழித்தவளுக்கு விடியலே விருந்தாய் அமைந்தது.
‘அய்யயோ! தூங்கிட்டோமே… எவனும் உள்ள நுழைஞ்சு கியூட் பாயை போட்டுத் தள்ளிருப்பானோ?’ என்ற சந்தேகத்தில் தனது பால்கனித் திண்டில் ஏறி அவனது பால்கனி பக்கம் குதித்தவள், ‘ஆஆ’ எனக் கன்னத்தில் கை வைத்து நின்றாள்.
பால்கனி வழியே வரும் சூரியக்கதிர்களை உள்வாங்கியபடி தலைகீழாக நின்று கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருந்தான் சூர்ய சித்தாந்தன்.
அவளும் தலையை வளைத்து அவனைப் பார்க்க முயல, “அரை மணி நேரத்துல ஆபிஸ் கிளம்பனும், கெட் ரெடி…” என்றவனின் குரல் கேட்டுத் திடுக்கிட்டாள்.
‘கண்ணை மூடி தான இருக்கான். எப்படித் தெரிஞ்சுது?’ எனத் திருதிருவென விழித்து விட்டு, “ஜி… உங்களுக்கு கண்ணு கீழயும் இருக்கு போல.” என்றதில் அவன் தனது நிலை மாறாது கண்ணைத் திறந்து உறுத்து விழிக்க, அதன்பிறகே தான் கூறிய அர்த்தம் புரிந்ததில், “ஐ மீன் கால்ல சொன்னேன் ஜி…” என அசடு வழிந்து விட்டுத் தனதறைக்கு எகிறிக் குதித்து ஓடியே விட்டாள்.
“காலங்காத்தால 18 ப்ளஸ் கேட்குது உனக்கு…” எனத் தன்னைத் தானே அடித்துக் கொண்டவள், குளித்து உடை மாற்றித் தயாரானாள்.
தரையில் உருண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வினயனை, ஓங்கி மிதிக்க வேண்டும் போல இருந்தது ருஹானாவிற்கு.
காலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பச் சொன்னதற்கு, ஒன்பது மணி வரை உருண்டு கொண்டிருக்கிறான்.
“ஹே மிஸ்டர்… கெட் அப்.”
“பெட் காபி ப்ளீஸ்!” சோம்பல் முறித்தபடி கேட்டவனின் மீது ஜக்கில் இருந்த நீரை ஊற்றினாள்.
“ஐயோ மம்மி…” என்றபடி துள்ளி எழுந்தவன், அதன்பிறகே ருஹானாவைக் கண்டு நிஜம் உணர்ந்தான்.
“குட் மார்னிங் பாஸ்!” சல்யூட் அடித்தபடி கூறியவன், “குளிக்க வச்சுட்டீங்க அப்படியே சோப்பும் போட்டு விட்டா சிறப்பா இருக்கும். நானும் டக்குன்னு கிளம்பிடுவேன்ல…” என்றதில் கோப மூச்சுகள் அவளுக்கு.
“சோப்பு போடணுமா உனக்கு? நீ உன் வீட்டுக்குப் போய் பொறுமையா சோப்புப் போட்டுக் குளி. யூ ஆர் பயர்ட்!” எனக் கொந்தளித்து விட்டுச் செல்ல, “அய்யய்யோ பாஸ்… இதோ வந்துட்டேன்!” என ஐந்தே நிமிடத்தில் கிளம்பியவன், டீ ஷர்ட்டை அணிந்தபடி வேகமாக வெளியில் ஓடினான்.
ருஹானாவோ தனது காரில் ஏறிட, பின்னோடு வந்து தானும் ஏறிய வினயனை விரல் நீட்டி எச்சரித்தவள், “நீ வரத் தேவையில்லை!” என்றதில், “பாஸ் பாஸ்… பர்ஸ்ட் டே’ பழக்க தோஷத்துல தூங்கிட்டேன். ஒரு வாரம் ட்ரெயினிங் இருக்குல்ல. ப்ளீஸ் ப்ளீஸ்… இன்னொரு சான்ஸ் குடுங்க.” எனக் கண்ணைச் சுருக்கிக் கெஞ்சினான்.
“ஓகே பைன்…” அவள் சொன்னதும் வேகமாக கார் கதவைத் திறக்க முயல, “வெய்ட்! நீ கார் பின்னாடி ஓடி வா! அதான் நீ தூங்குனதுக்கு பனிஷ்மென்ட்” என்றாள் குளிர் கண்ணாடியை அணிந்தபடி.
“வாட்?” வினயன் திகைக்க, அவளோ அவனைக் கண்டு கொள்ளாது காரைக் கிளப்பிச் சென்றாள், எதிர்கொள்ளப் போகும் விளைவை அறியாது.
Epi 6 also posted drs 😍
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
7
+1
1
+1
1

