Loading

அத்தியாயம் 4

“செம்ம டைமிங்!” வினயன், தன் பதறிய நெஞ்சம் மெல்ல அமைதியுற வியந்து பாராட்டினான்.

அவனது குரலில் தான் மௌனி சூர்ய சித்தாந்தனிடம் இருந்து விலக முயன்றிட, அவனும் பார்வையை மாற்றாது நிதானமாகவே மெல்லிடைக்கு விடுதலை கொடுத்தான்.

ஒரு நொடி அவனது பார்வை ருஹானாவையும் தீண்டி இருக்க, அவளோ இறுகிய முகத்துடன் நின்றாள்.

தனது நெஞ்சைத் துளைக்க எத்தனித்த அம்பை எண்ணிப் பயம் முளைத்தாலும், ‘உன் கையால் உயிர் வாழ்வதற்கு அந்த அம்பிற்கே இரையாகி விடலாம்.’ என்ற ஆணவம் நிறைந்த அழுத்தம் அவள் வதனத்தில் வெளிப்படையாகத் தெரிய, அதனை உணர்ந்து கண்ணிற்குத் தெரியாத அலட்டல் நகை கொடுத்தவன், அந்த அம்பைத் திரும்பிப் பாராது எய்தவன் மீதே எறிந்தான்.

அந்த அம்பு, அவனுக்கு மிக மிக அருகில் நிலத்தில் குத்தி நிற்க, அவனது முகத்தில் அச்சத்தின் எதிரொலிப்பு.

“அவ்வ்… ஜஸ்ட் மிஸ்!” தரையில் காலை உதைத்த மௌனி ஆதிரா, “பட் பார்க்காம த்ரோ பண்ணுனதுக்கே அவன் பக்கத்துல போயிடுச்சே…” என வியந்தவளைத் தனது குளிர் கண்ணாடியை மெல்ல இறக்கி விட்டு ஊடுருவினான் சூர்ய சித்தாந்தன்.

“ஹூ ஆர் யூ?” காந்தம் போல இழுக்கும் ஆழ்ந்த குரல் அவனுக்கு.

“ப்பா… என்னா வாய்ஸ் ஜி. நீங்க ஏன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா ட்ரை பண்ணக் கூடாது?” என இலவச ஐடியாக்களை வழங்கிட, ஜனனி தான் “டேய் வினய்… இவள் படம் எதுவும் எடுக்கப் போறாளா? இது ரொம்ப முக்கியம் பாரு.” என்று கடிந்து வைத்தாள்.

“விடு ஜன்னி… எனக்கு ஜியாவோட ஐப்ரோஸ் மேல கண்ணு. அவளுக்கு அவன் குரல் மேல ஒரு இஸ்கு!” என்றவனைத் திரும்பி முறைத்தவள், “அண்ணன்ற பொசிஷனை அப்ப அப்ப மறந்துடறடா!” எனப் புறங்கையால் இடித்தாள், மற்றவர்கள் அறியாது கவனமாக.

அதே ஊடுருவும் லேசர் பார்வையை மாற்றாத சூர்யா, இப்போது கண்ணாடியைக் கழற்றி விட்டு, “நீ யாருன்னு கேட்டேன்!” என்றான் அழுத்தத்துடன்.

“ஐ ஆம் மௌனி. மௌனி ஆதிரா…” எனக் கையை நீட்டித் தன்னை அறிமுகம் செய்ய முயல, அவன் அவளையும் அவள் கையையும் விழி இடுங்க ஏறிட்டான்.

“வாட் ஜி… சித்தாந்தன் க்ரூப் ஆப் கம்பெனிஸ் எம்.டி’ஸ்க்கு தான், திருப்பிக் கை குடுக்குற மேனர்ஸ் தெரியல, ஃபவுண்டருக்குமா?” அவளது நக்கல் நிறைந்த அதிகாரப் பார்வை மீண்டுமொரு முறை விழி உயர்த்த வைத்தது.

இரு கையையும் பின்னால் கட்டிக் கொண்ட சூர்ய சித்தாந்தன், அவளது பிறை நெற்றி தொடங்கி அடிப்பாதம் வரை ஆழமாக அலசினான்.

எடை போடும் கூர்மையை மாற்றாது, “செக்யூரிட்டி… எல்லாரையும் அனுப்பிடு! செலக்ட் ஆனவங்களுக்கு மெயில் வரும்…” என்று விட்டு அங்கிருந்து நகர முயல, “எனக்கு வருமாங்க ஜி!” என இடைமறித்தாள்.

அவளுக்குப் பதில் கூறாது அசட்டை செய்து விட்டுச் சென்றதில், நொடித்துக் கொண்டாள்.

“ரொம்பத் தான்… சேர்மன்னா விறைப்பா இருக்கணுமாக்கும்!” என முணுமுணுத்திட, அவளை இழுத்துக் கொண்டு சென்றனர் வினயனும் ஜனனியும்.

மூவரும் பிளாட்ஃபார்மில் கால் வந்த போக்கில் நடந்து கொண்டிருந்தனர்.

வினயன் வேறு அவ்வப்பொழுது நேர்முகத் தேர்விற்குக் கொடுத்த புது மின்னஞ்சலை நொடிக்கு ஒரு தரம் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன மௌனி… அப்படியே செலக்ட் பண்ணி, அந்தப் பாலஸ்ல நம்மளை இருக்க வச்சிருவானுங்கன்னு பார்த்தா, இப்படித் துரத்தி விட்டுட்டானுங்க.”

ஜனனியோ, “அப்படி மட்டும் செலக்ட் ஆனா கண்டிப்பா அந்த அர்னவ்க்கு நான் வேலை பார்க்க மாட்டேன்பா!” எனப் பின் வாங்க, “அப்படி எல்லாம் சொல்லாதடி தங்கையே… அவளுக்கு அவள் ஆளு வேணும், எனக்கு என் ஆளு வேணும்…” எனக் காலால் தரையில் கோலமிட்டு வெட்கப்பட, இருவரும் ஒருசேரக் காறி உமிழ்ந்தனர்.

“சைட்டு தானடா அடிச்ச, எப்ப ஆளு ஆனா?” மௌனி முறைத்ததில்,

“இப்போதைக்கு ட்ரையா இருக்குற லைஃப் கலர்ஃபுல்லா மாறனும்னா ஒரு கிரஷ் தேவை மௌனி. நீ இவ்ளோ தூரம் ஓடி வந்தப்ப புரியல. அங்க தட் ஐப்ரோ அழகியைப் பார்த்தப்புறம் தான், ஜொள்ளு விடவாச்சும் ஒரு ஆளு வேணும்னு புரிஞ்சுது. இங்க இருந்து போற வரை ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேணும்ல.” எனக் கண்ணடித்தான்.

“குட் டெசிஷன் தமையா… சேம் டூ யூ” என அவனுக்கு ஹைபை கொடுத்த மௌனியைக் கண்டு தலையில் அடித்த ஜனனி, “நீயும் என்னடி அவனுக்கு சப்போர்ட் பண்ற? அப்போ நீ அந்த கியூட் பாயை லவ் பண்ணல?” என்றாள் புரியாமல்.

“லவ்வா?” மலங்க மலங்க விழித்தாள் மௌனி ஆதிரா.

“ஆனாலும், உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை? டெட் பிட்ல நின்னுட்டு இருக்கேன்டி. உருகி உருகிக் காதலிக்க எல்லாம் நேரம் இல்ல. பொறுமையும் இல்ல. நானே அவன்கிட்ட அண்டமாக வந்தேன். இருக்குற வரை அவனைச் சிறப்பா சைட் அடிச்சுட்டுப் போயிட வேண்டியது தான். டோன்ட் டேக் இட் சீரியஸ், ரைட்!”

வினயனும், “ம்ம்க்கும்… அப்படியே லவ் பண்ணிட்டா மட்டும், நம்ம வீட்ல உடனே தட்டைத் தூக்கிட்டு வந்துடுவாங்க பாரு. நீயும் நானும் சந்நியாசியா போனால் கூடப் பிரச்சினை இல்ல ஜன்னி… ஆனா சம்சாரி ஆகணும்னா நம்ம டேடிஸ் பல கண்டிஷன்ஸ் வச்சுருக்காங்க. அதுல முதல் கண்டிஷனே, அரசியல்வாதி கூட சம்பந்தம் பண்ணனும்னு தான். அந்தக் கருமத்துனால தான இவளுக்கும் இவ்ளோ பிரச்சினை…” எனச் சலித்தான்.

“ம்ம், கரெக்ட் தான் வினை… ஹ்ம்ம், சுயமா தொழில் பண்றோம். இண்டிபெண்டண்டா இருக்கோம். ஆனா அதை நினைச்சுப் பெருசா சந்தோசப்படக் கூட முடியலைல. நமக்குப் பிடிச்ச லைஃப் பார்ட்னரைத் தேடக் கூடப் பயமா தான் இருக்கு.”

“ட்ரூ… கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியாவது நமக்கு டேடிஸ் மட்டும் தான் பிரச்சினை. ஆனா கல்யாணம் ஃபிக்ஸ் ஆனா, வரப்போற அரசியல்வாதி மாமனாரும் டபிள் பிரச்சினை. இருக்குறதுலயே நாறப் பொழப்பு, இந்த வி. ஐ. பி’க்குப் பசங்களா பொறந்தவங்க பொழப்பு தான்!” வினயன் கடுப்பாகக் கூறியதில் ஜனனி சிரித்தாள்.

மௌனி ஆதிரா தான் இவர்கள் பேச்சைக் கேட்டபடி வினயனின் தோள்மீது கை போட்டு, “பரவாயில்ல விடு தமையா. கல்யாணம் தான பிரச்சினை. இங்க கல்யாணமும் இல்ல, காதலும் இல்ல. கொஞ்சம் ஜலஜலா குளுகுளுன்னு என்ஜாய் பண்ணலாம். என் எதிரிங்க என்னைக் கண்டுபிடிக்கிற வரை, தட் சூர்யா மை ஆளு. தட் ருஹானா உன் ஆளு. டன்…” என டீல் பேச, “டபிள்!” டன் என ருஹானாவின் பெயரைக் கேட்டதற்கே குளுகுளுவென ஆனான் வினயன்.

அவர்களைக் கேவலமாகப் பார்த்து வைத்த ஜனனி, “ம்ம்ம், என்ஜாய் பண்ணுங்க.” எனப் பெருமூச்சு விட, “என்ன பண்ணுங்கன்னு சொல்ற. பண்றோம்னு சொல்லு…” என்ற மௌனி இப்போது அவள் தோள்மீதும் கை போட, “என்னது?” என விழித்தாள்.

“நீ வேணும்னா அந்த அர்னவை உன் ஆளா ஃபிக்ஸ் பண்ணிக்கோயேன்.”

“அதுக்கு நான் என் அப்பன் கையாலயே சாவலாம். எனக்குக் குளுகுளுவே வேணாம்பா!” எனக் கையெடுத்துக் கும்பிட, “இவள் இதுக்குலாம் சரிப்பட மாட்டா மௌனி…” என வினயன் கிண்டல் செய்யும்போதே மீண்டுமொரு முறை மின்னஞ்சலைச் சரிபார்க்க, அப்போது அவன் எதிர்பார்த்த மின்னஞ்சல் வந்தது.

“ஹே… மெயில் வந்துருக்கு மௌனி!” அவன் துள்ளிக் குதித்தான்.

உடனே மௌனி ஆதிராவும் சோதிக்க, அவளுக்கும் மின்னஞ்சல் வந்திருந்ததில் இதழ் வளைத்து நகைத்தாள்.

ஜனனி தான் திருதிருவென விழித்தாள்.

“நீயும் செக் பண்ணு!” என்ற தமையனின் கூற்றைக் கேளாது “ம்ம்ஹும்!” என மறுப்பாகத் தலையாட்ட, மௌனி ஆதிரா வலுக்கட்டாயமாக அவள் அலைபேசியைப் பறித்துச் சோதித்தாள்.

“யாஹூ… நம்ம பிளான் சக்ஸஸ். நம்ம மூணு பேரும் தான் செலக்ட் ஆகிருக்கோம். இன்னைக்கு ஈவ்னிங் ஆபிஸ்க்கு வரச் சொல்லி மெயில் வந்திருக்கு. பெர்சனல் இன்டெர்வியூ இருக்காம்…” எனக் குதூகலிக்க, “மம்மி… எனக்கு அவன் வேணாம்!” என்ற ஜனனியின் கதறலை எல்லாம் கேளாது இருவரும் அவளை இழுத்துச் சென்றனர்.

பக்கத்தில் ஒரு சிறிய லாட்ஜில் அறை எடுத்து ப்ரெஷ் ஆகி விட்டு, வேறு உடையுடன் மாலை நேரத்தில் அலுவலகத்திற்குச் செல்ல விழைய, மீண்டும் ஆட்டோ பிடித்தனர்.

அலுவலகத்திற்குச் சற்று முன்னேயே நிறுத்தச் சொன்ன மௌனி, “தனித் தனியா போகலாம். ஆல்ரெடி நம்ம மேல சந்தேகம் வந்திருக்கலாம். ஜன்னி, முதல்ல நீ போ!” என்றதில், “நான் வேணும்னா போகட்டா?” எனச் சட்டை பட்டனைச் சரி செய்தபடி கேட்டான் வினயன்.

“ச்சீ, அலையாத!” எனக் கடிந்தவள், “நீ போடி…” எனத் துரிதப்படுத்தினாள்.

“ம்ம்ஹும், ஆனா அவன்கிட்ட நான் அடங்கி எல்லாம் போகமாட்டேன், பார்த்துக்கோங்க…” என்று சிலுப்பி விட்டே ஜனனி உர்ரென்ற முகத்துடன் அலுவலகம் சென்றாள்.

‘கடவுளே… அந்த அர்னவ்க்கு மட்டும் நான் செக்கரட்டரியா போகக் கூடாது!’ தன்னியல்பு மீறி வேண்டிக் கொண்டவளின் மனு அப்போதே ரிஜெக்ட் செய்யப்பட்டது.

ஒன்பது மாடிகளைக் கொண்ட அலுவலகம். அருகிலேயே தொழிற்சாலையும் பரந்து விரிந்து காணப்பட்டது.

சொகுசு கார்களின் பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை மட்டுமே அங்கு. இன்னும் ‘சித்தாந்தன் அவியேஷன்’ தனியார் விமானம், ஜெட்களைச் சொந்தமாக நிறுவி, வி. ஐ. பி’களின் பயணத்திற்கு வாடகைக்கு விடுவதும், சொந்தமாக விமானங்களை வாங்கி விற்பதும், சித்தாந்தன் ஹாஸ்பிட்டாலிட்டி எனும், வி. வி. ஐ. பி’கள் மட்டுமே புழங்கக்கூடிய சொகுசு பங்களாக்களை உலக நாடுகளின் பல மூலை முடுக்குகளில் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். அதில் ஐந்து மற்றும் அதற்கு மேலான ஹோட்டல்களும் அடக்கம். இன்னும் வெளியில் தெரியாத பல வியாபாரங்கள் கொட்டிக் கிடக்கும் சாம்ராஜ்யம் தான்.

ஆட்டோவில் அமர்ந்தபடியே அந்த அலுவலகத்தையும், தொழிற்சாலையையும் அளந்து கொண்டிருந்தாள் மௌனி. தற்போது வினயனைப் போகச் சொல்ல, அவனும் ஆட்டோ கண்ணாடியில் தலை முடியைச் சரி செய்து விட்டுச் சென்றான்.

‘இதுக்கு இது ஒரு கேடு!’ என மௌனி துப்பவும் தவறவில்லை.

ரிசப்ஷன் பெண்மணி ஜனனியை ஏழாவது மாடியில் ஒரு அறைக்கு அழைத்துச் சென்றவள், “ப்ளீஸ் பி சீட்டட் மேம்” என்று நவீனத்திற்குப் பெயர் போன லாபியில் அமர வைத்துச் சென்றாள்.

டீப்பாயில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மேகஸின்ஸில் ஒன்றை எடுத்த ஜனனி, அதில் முகப்புப் படத்தில் அர்னவ் தேவின் புகைப்படத்தைக் கண்டாள்.

‘சி.ஈ.ஓ ஆஃப் சித்தாந்தன் க்ரூப் ஆப் கம்பெனிஸ்’ எனப் போடப் பட்டிருந்ததைக் கண்டு புருவம் சுருக்கினாள்.

‘காலைல பேசும்போது எம்.டி’ன்னு தான சொன்னான்?’ எனச் சிந்திக்கும்போதே, தொண்டையைக் கனைத்தபடி புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் அர்னவ் தேவ்.

அவனைக் கண்டதும் விழி நிமிர்த்தியவள் தானாக எழுந்து நிற்க, “மரியாதை மனசுல இருக்கட்டும் மிஸ் நூடுல்ஸ்… ஓ சாரி சாரி, மிஸ் ஜனனி…” என்று கிண்டல் செய்தபடி அவளை அமரும்படி கையால் சைகை காட்ட,

“போனால் போகுதுன்னு எந்திரிச்சா நக்கலைப் பாரு…” என்று பல்லைக் கடித்தாள்.

அவள் எதிரில் இருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்த அர்னவ், “சோ, டெல் மீ அபவுட் யுவர்செல்ஃப்” என்றதும் லேசாய் விழித்தாள்.

பின் மேலோட்டமாக எதையோ உளறிட, “ம்ம்… லுக்! பர்ஸ்ட் ஒன் வீக் உனக்கு ட்ரெயினிங் இருக்கும். வீட்ல, ஆபிஸ்ல, எல்லா இடத்துலயும் என்னைச் சுத்தி நடக்குற விஷயங்களை அப்சர்வ் பண்ணனும். அவசர நிலை ஏற்படும்போது, என்னை சேஃபா பாதுகாக்கிறது உன் வேலை. நீ அட்டாக் பண்ண வர்றவங்களை அடிப்பியோ, கொல்லுவியோ, இல்ல அடி வாங்குவியோ… அது உன் தலையெழுத்து! பயமா இருந்தா இப்பவே சொல்லிட்டுப் போயிடலாம்.” என்றான் அமர்த்தலாக.

அவளோ அதை எல்லாம் விட்டுவிட்டு, “இப்ப உங்க கூடவே இருக்கணும்னா, நான் எங்க தங்குறது? எனக்குத் தனி ரூம் குடுத்திடுவீங்கள்ல மிஸ்டர் அர்னவ்?” என அதிமுக்கியக் கேள்வியைக் கேட்க அவன் முறைத்தான்.

“இப்ப நான் உனக்கு முதலாளி… சோ கால் மீ சார்!”

“ஹலோ மிஸ்டர் அர்னவ் தேவ், உங்க உயிர் என் கையில. சோ இப்ப நான் தான் உங்களுக்கு பாஸ் மாதிரி… நீங்க வேணும்னா என்னை மேடம்னு கூப்பிட்டுக்கோங்க. பட் அந்த மரியாதை எல்லாம் எனக்கு வேணாம்.” என்று பணிவுடன் மறுக்க, அவனுக்கோ சுறுசுறுவெனக் கோபம் எழுந்தது.

*********************
தன்னெதிரே மடிக்கணினியில் புதைந்திருந்த ருஹானா ஜியாவைக் கன்னத்தில் கை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வினயன்.

அவன் செய்யப் போகும் வேலைகள் பற்றி எல்லாம் விவரித்து விட்டு, அவள் வேலையைக் கவனிக்க முயல அவன் பார்வை அவளது கவனத்தைத் தடை செய்தது.

“எதுக்கு இப்படிப் பார்க்குற?”

“நீங்க தான சொன்னீங்க மிஸ் ஜியா… உங்களைப் பார்த்துக்குறது தான் என் ஃபுல் டைம் ஜாப்னு, அதான் பார்த்துட்டே இருக்கேன்.” என்று வழிந்து தள்ள, “வெரி ஃபன்னி! இன்னும் உனக்கு வேலை கன்ஃபார்ம் ஆகலை… மைண்ட் இட்!” என்றாள் அதட்டலாக.

“மெதுவா ஆகட்டும். வேணும்னா நாலு பேரை விட்டு அடிக்க வரச் சொல்லுங்க. உங்களை அலேக்கா காப்பாத்துறேன். அப்படியே இம்ப்ரெஸ் ஆகி என்மேல சாஃப்ட் கார்னர் வந்து…” எனும்போதே “வாட்?” எனக் காட்டத்துடன் உறுமினாள் ருஹானா.

“அது… ஐ மீன், வேலை கன்ஃபார்ம் ஆகிடும்ல. அதைச் சொன்னேங்க பாஸ்!” என்று சமாளித்தான்.

“எனிவேஸ் பெஸ்ட் ஆஃப் லக்!” அவளிடம் சிறு நக்கல் தென்பட்டது.

“எதுக்கு, உங்களைக் காப்பாத்துறதுக்கா?”

“ச்சே ச்சே, இந்த வேலைல நீ உயிரோட ஆறு மாசமாவது தாண்டுறதுக்கு…” எனக் கேலி நகை புரிய, “வாட் டூ யூ மீன்?” என்றான் ஒரு மாதிரியாக.

“ஐ மீன், இதுவரை எங்களுக்கு வந்த பாடிகார்ட்ஸ், அசிஸ்டன்ட்ஸ்னு நிறையப் பேர் எதிரி கையால ஜீவசமாதி அடைஞ்சுட்டாங்க. அதுனால தான், மொத்தமா கூடவே இருக்குற மாறி இந்தப் போஸ்ட்டைக் கிரியேட் பண்ணோம். கூடவே இருந்தாலும், உன்னைத் தாண்டி எதிரி என்னைத் தொடும்போது, ப்ச்… நீ எங்க ஆவியாகி அலைஞ்சுட்டு இருப்பியோ… பாவம்ம்ம்ம்!” என வருத்தப்படுவது போலவே அவனது நிலையைத் தெளிவாக விளக்கிட, வினயன் எச்சிலை விழுங்கினான்.

“உங்களுக்கு அவ்ளோ எதிரியா இருக்காங்க. என்ன ஒரு நாலஞ்சு பேர் இருப்பாங்களா?” எனக் குத்து மதிப்பாகக் கேட்க,

“நாலஞ்சு பேரா, ஓ நோ வினயன்… எங்களுக்கு இருக்குறது எல்லாமே எதிரி தான்! குழந்தைப் பையனாவே இருக்க…” என்று உதட்டைப் பிதுக்கி அவனைப் பயமுறுத்தி விட்டதில் நிம்மதி அடைந்த மனத்துடன்,

“நான் மீட்டிங் போறேன். சமத்தா மீட்டிங் ஹால்ல வந்து நில்லு பார்க்கலாம். எதுக்கும் குனிஞ்சே நில்லு. ஸ்னைப்பர் கன்னோட யாரும் வெயிட் பண்ணிட்டு இருக்க வாய்ப்பு இருக்கு.” என ஹஸ்கி குரலில் மிரட்டி விட்டு நகர எத்தனிக்க, “ஸ்னைப்பர்ல ஷாட் பண்ற அளவு பெரிய ஆளா பாஸ் நீங்க…” என்று தலையைச் சொரிந்து கேட்டு வைத்தவனை இடுப்பில் கையூன்றி முறைத்தாள் ருஹானா ஜியா.

****************
‘இப்ப நம்ம என்ட்ரி குடுக்கலாம்…’ என நினைத்தபடி மௌனி ஆதிரா ஆட்டோவில் இருந்து இறங்கி அலுவலகம் நோக்கி நடக்க, எதிரில் வேகமாக வந்த கார் ஒன்று அவள் மீது சேறை அடித்து விட்டுச் சென்றது.

“ஹே இடியட்…” எனச் சாலையில் நின்று கத்தியவள், சேதாரமான உடையைக் குனிந்து பரிதாபமாகப் பார்த்தாள்.

“காலைல நல்ல ட்ரெஸ் போட்டப்பவே நின்னு ஒரு வார்த்தை பேசல அவன். இதுல இப்படியே போனா… மூஞ்சியைத் திருப்பிட்டுப் போயிடுவான்.” எனப் புலம்பினாலும் இப்போது வேறு உடை மாற்றி விட்டுச் செல்வது சாத்தியமில்லை.

“ஷிட்!” எனத் தரையில் காலை உதைத்திட, சரியாக முந்தைய நாள் பெய்த மழையில் குழியாகி இருந்த சாலையில் இருந்த சேறும் அவள் பேண்டில் பட்டுத் தெறித்தது.

“ஓ! நோ…” எனக் குமுறியபடியே அலுவலகம் சென்றாள்.

அங்கிருந்த அனைவரும் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தனர்.

அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், “கேன் ஐ மீட் மிஸ்டர் சூர்ய சித்தாந்தன்?” எனக் கேட்டு வைக்க, அவளுக்குச் சொல்லாது விழித்தபடி நின்றிருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண்மணியின் இன்டெர்காம் ஒலித்தது.

உடனே அவளிடம் ஒரு பரபரப்பு. “ஓகே சார், ஓகே சார்…” என வெகு பணிவுடன் பேசியவள், “மேம்… உங்களை சார் நயன்த் ப்ளோர் வரச் சொல்லிருக்காங்க. ரூம் நம்பர் 27” என அறை எண்ணை விளக்கி அனுப்ப, நன்றி சொல்லி விட்டு ஒன்பதாவது மாடியை அடைந்தாள்.

பெயருக்குக் கூட ஆள்நடமாட்டம் இல்லை. கீழிருந்த பரபரப்பு ஒன்பதாம் தளத்தில் முற்றிலும் இல்லை.

அலுவலக அறை, மீட்டிங் ஹால், லாபி, அறைகள் என அனைத்து வசதிகளும் இருந்த தளத்தின் ஒரு ஓரத்தில் அறை எண் 27 இருக்க, கதவைத் தட்டி விட்டுத் திறந்தாள்.

“எக்ஸ்கியூஸ்மீ சார்…” எனத் திறந்தவள், அங்கு அத்தனைப் பெரிய மீட்டிங் ஹாலை எதிர்பார்க்கவில்லை.

ப்ரொஜெக்டரில் தொழிற்சாலையின் வேலையமைப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சூர்ய சித்தாந்தன், விரல் நீட்டி உள்ளே வரப் பணிக்க அவளும் வந்து அவன் பின்னே நின்றாள்.

பென் போலான அமைப்பு கொண்ட பொருளை, தான் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பகுதியில் தட்டிக் கொண்டு தனது அழுத்த விழிகளால் ஸ்க்ரீனை உற்று நோக்கினான்.

பின், அந்தப் பென்னில் ஒரு பட்டனை அழுத்தியவன், “சூப்பர்வைசர் திலக்… கார் டோரோட வெயிட் 50 கிலோ இருக்கணும். ஆனா 49.200 தான் இருக்கு. ஏன்?” எனக் கேள்வி எழுப்ப,

திலக் சட்டெனப் பரபரத்து, “சார், அது பெரிய டிஃபரன்ஸ் இல்லையே. பெர்மிஸிபிள் டாலரன்ஸ்குள்ள தான் இருக்கும்னு நினைக்கிறன்…” என்றான்.

“நினைக்கிறதுக்கும், கன்ஃபார்ம் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு திலக். இந்த வேரியேஷன் எதுல இருந்து வந்துச்சுன்னு எனக்குத் தெரியணும். மெட்டீரியல் திக்னஸ்? ஆர் இன்டெர்னல் ரீஇன்போர்ஸ்மென்ட்ல எதுவும் சேஞ்சு இருக்கா? முழு பேட்சையும் மறுபடியும் இன்ஸ்பெக்ட் பண்ணுங்க. ரிப்போர்ட் நாளைக்கு மார்னிங் என் டேபிளுக்கு வரணும்.” எனத் திட்டவட்டமாக உரைத்தவன், திலக் பேசும் முன்னே பென்னின் பட்டனை அழுத்தி அழைப்பைத் துண்டித்தான்.

கூடவே ப்ரொஜக்டரும் அணைய, உள் அலங்காரங்கள் செய்திருந்த விளக்குகள் எரிந்தன.

மௌனி ஆதிரா தான் திகைப்பாக நின்றிருந்தாள்.

‘வெறும் 800 கிராம் டிஃபரென்ஸ்க்கு மறுபடியும் கார் டோரைப் பிரிச்சு மேயச் சொல்லுறான்… என்ன டிசைன் இவன்?’ என விழித்தபடி நிற்கும்போதே, “முன்னாடி வந்து நில்லு!” என்றான் அதிகாரமாக.

அதில் சேறு பட்ட உடையை அட்ஜஸ்ட் செய்தபடி அவன் முன்னே நின்றவள் அசட்டுப் புன்னகையுடன், “குட் ஈவ்னிங் ஜி…” என்றாள் நெளிந்து.

அவன் பேசத் தொடங்கும்போதே, “எனக்கு ஒரே ஒரு டவுட்டு… கேட்கட்டா?” என அவளே ஆரம்பிக்க, அவன் கையில் இருந்த பென்னால் ஒரு முறை சோபாவைத் தட்டி அமைதி காத்தான்.

அவ்வமைதி தான் அவள் பேச அனுமதிக்கும் உத்தரவு போலும்.

‘வாட் அ மேன்யா…’ என மனத்தினுள் சிலாகித்து விட்டு, “வெறும் 800 கிராம் குறைஞ்சதுக்குத் திரும்ப வேலை பார்க்கச் சொல்றீங்களே… 800 கிராம்ஸ்ல என்ன வந்துடப் போகுது. மோர் ஓவர், கார் டோர் 50 கிலோ வரை இருக்குமாஜி? ஃபர்ஸ்ட் டைம் கேள்விப்படுறேன்.” என்றாள் யோசனையாக.

பல்வேறு துறைகளில் புகுந்து விளையாடியவளுக்கு, இந்தக் கார் பாகங்கள் பற்றிய தொழில் முறைகள் புதிது. அதனைப் பற்றி ஆர்வம் மேலோங்க வினவினாள்.

அவனது கூரிய விழிகள் அவளைத் துளைத்தன. பின் அவனே ஆரம்பித்தான்.

“நீ ஒரு ஃபுட் அண்ட் பீவரேஜ் இண்டஸ்ட்ரி ஓனர்…” எனத் தலை சாய்க்க, “ஹான் வாட்?” அவள் அதிர்ந்தே விட்டாள்.

“அப்படின்னு வச்சுக்கலாம்…” என அடுத்த வரியைக் கூறியதும் தான், அவளது இதயத்துடிப்பு சீரானது.

“ஒரு கிலோ மசாலாப் பொருள் தயாரிக்கும் போது, அதுல ஆட் பண்ற இன்க்ரெடியன்ஸ் ஒரு கிராம் கம்மியானா என்ன ஆகும்?” அவன் ஆழமாய் அவளை அலசினான்.

“ஒரு கிராம் தானஜி…” அலட்சியமாகப் பதில் அளிக்க எத்தனித்தாள்.

ஒரு கிராம் அல்ல, அரை கிராம் குறைந்தாலும் பணியாளர்களைச் சுழற்றி எடுத்து விடுவாளே! தி கிரேட் மோனா க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸின் சி. ஈ. ஓ மௌனி ஆதிரா.

“ஃபைன்! இதே ஆயிரம் கிலோ தயாரிக்கும் போது?” அவன் இதழ்கள் மெல்ல வளைய, அவளது இதயமும் வளைந்து கொடுத்தது.

“டேஸ்ட் மாறும், தரம் மாறும். டேஸ்டும் தரமும் எதிர்பார்த்த கஸ்டமருக்கு எதுவோ மிஸ் ஆன ஃபீல் கிடைக்கும். அந்த ஃபீல் ப்ராடக்ட் மேல இருக்குற நம்பிக்கையைச் சிதைக்கும். ஆம் ஐ ரைட்?” சூர்ய சித்தாந்தனின் கம்பீரம் நிறைந்த விளக்கத்தில் தானாய் அவள் தலை அசைந்தது.

‘இவன் கொஞ்சம் டேஞ்சர் தான். தெரிஞ்சு பேசுறானா? இல்ல போட்டு வாங்குறானா?’ சின்னச் சந்தேகம் முளைத்தது மௌனி ஆதிராவிற்கு.

“நாளைல இருந்து வேலைல ஜாயின் பண்ணிக்கோ! பட், நீ நினைக்கிறதை விட ரிஸ்க் இருக்கும்.” என்றவனின் பேச்சை அசட்டை செய்து விட்டு, “இன்னைல இருந்தே கூட ஜாயின் பண்ணிக்கிறேன் ஜி. நான் எங்க ஸ்டே பண்ணனும்?” எனத் தீவிரமாக வினவ, “ஆர்வக்கோளாறு!” என முணுமுணுத்தான்.

மீண்டும் அந்த லாட்ஜிற்கே அழைத்துச் சென்றால், ஜன்னிக்கு உண்மையில் ஜன்னியே வந்து விடும் பாவம்!

“உன் திங்ஸ் எடுத்துட்டு வீட்டுக்கே வந்துடு, ஷார்ப் அட் 8” என்றிட, “டன் ஜி…” என வெற்றிக் குறியைப் போட்டவள், “அப்பாடா!” எனத் தப்பித்து ஓட முயல,

“நில்லு!” என்ற ஆண்மகனின் கனத்த குரலில் ஒரு கணம் சில்லிட்டு நின்றாள் மௌனி ஆதிரா.

சோபாவின் மீது கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த சூர்ய சித்தாந்தன், அவள் உடை முழுதும் சேறுடன் நின்ற கோலத்தை அழுத்தமாய் ஆராய்ந்து விட்டு, “இன்டர்வியூ வரும்போது சோப்புல தான் குளிக்கணும், நீ சேத்துல குளிச்சுருக்க?” என்றான் நக்கல் நகையுடன்.

அசட்டுப் புன்னகை உதிர்த்தவள், “எப்படியோ குளிச்சுட்டு வந்திருக்கேன்ல ஜி. மத்தவங்க மாதிரி போலி சென்ட் அடிச்சுட்டு வரத் தெரியாத அப்பாவி ஜி நானு…” எனத் தலை குனிந்து தன்னடக்கமாகப் பேசியவளைக் கண்டு விழி உயர்த்தினான்.

“இங்க இருக்குறதே நீயும் நானும் தான். யாரு போலி சென்ட் அடிச்சா?” சூர்யா அமர்த்தலாகக் கேட்டதில் திருதிருவென விழித்தவள், “அட என்னஜி நீங்க எக்ஸ்சாம்பிள் சொன்னா, எக்ஸ்ப்ளனேஷன் எல்லாம் கேக்குறீங்க. உதாரணத்தை ஊக்குவிங்க. உடைச்சு உள்ளர்த்தம் தேடாதீங்க…” என வெகு தீவிரமாகப் பேசியவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

“நீ பெர்சனல் செக்கரட்டரி ஜாபுக்குத் தான வந்துருக்க, பேச்சுப் போட்டிக்கு எதுவும் வரலையே… உன் பேருக்கும், உன் பேச்சுக்கும், உன் பாடி லாங்குவேஜுக்கும், நீ வந்துருக்க ஜாபுக்கும் ஏதோ இடிக்குதே…” எனத் தாடையைத் தடவியவனைக் கண்டு உள்ளுக்குள் எச்சிலை விழுங்கினாள்.

‘இவன் என்ன, நாலு வார்த்தை பேசினாலே என் வரலாறைத் தோண்டிடுவான் போல…’ எனப் பயந்தவள் ஏற்கெனவே உணவு இண்டஸ்ட்ரி பற்றிப் பேசியதில் நடுங்கிய இதயத்தின் அதிர்வுகளைக் காலில் மட்டுமே ஆட்டத்துடன் காட்டினாள். முகம் நிமிர்வாய் இருந்தது.

“மௌனின்னு பேர் வச்சதுனால மௌனமா இருக்க முடியுமாங்க ஜி. நீங்களும் தான் சூர்யான்னு பேர் வச்சிருக்கீங்க. அதுக்குன்னு சூரியனுக்குப் பக்கத்துல பாய் போட்டுப் படுக்க முடியாதுல…” எனச் சிரித்து வைக்க, சீறும் முறைப்புடன் ஏறிட்டவனைத் திரும்பிப் பாராது ஓடியே விட்டாள் மௌனி ஆதிரா.

சீறும் நெஞ்சில்
சித்திரமாய் நிறையும் நேரம்
சூரியத் தகிப்பில்
சிதைவாளா?
குளிர்வாளா?

ரசித்திட வருவாள்(ன்)
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
26
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. 2 set of brothers and sisters…PA வேலையோட life partner ஆகற வேலையும் சேர்த்து பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன் 😉😉😉😉😉