
அத்தியாயம் 25
அன்று அனகாவிற்குப் பிறந்தநாளாக இருக்க, கோவிலுக்குச் சென்று விட்டு, பின் ஷாப்பிங் செல்வதாக முந்தைய நாள் இரவே முடிவெடுத்திருந்தனர் பெண்கள் குழு. அதற்காக அவளை அழைக்கவே, அனகாவும் அன்விதாவும் அர்ஜித்தின் அறைக்கு வந்தனர்.
‘இப்படி மானத்தை வாங்கிட்டானே!’ எனப் புலம்பியவள், அவனைப் பிடித்துத் தலையிலேயே கொட்டினாள்.
“எடீ, இப்போ தன்னே ஞான் ட்ரெஸ் சேஞ்ச் செய்யுனு. தள்ளிப்போடி…”
அவளது ஈரம் தன்மீது படுவதால், அர்ஜித் அவளை விலக்கி நிறுத்த, வேண்டுமென்றே அவனை வந்து கட்டிப்பிடித்து உரசி ஈரம் முழுதையும் ஒட்டி விட்டாள் அகமொழி.
“என்னை அவங்ககிட்ட மாட்டி விட்டல்ல… உனக்கு பனிஷ்மென்ட்!” என அழகு காட்டி விட்டு, அவன் அடிக்க வரும் முன் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
“காந்தாரி…” எனப் போலிக் கோபத்துடன் திட்டியபடி வேறு உடையை மாற்றியவன், கீழே சென்றான்.
அனகா அவனைப் பார்த்து நக்கலாகச் சிரிக்க, அன்விதா வேறு இருந்ததில் அவனுக்கே வெட்கமாகி விட்டது.
“மூடுடி…” தங்கையைக் கடிந்தவன், தலையைக் குனிந்தபடி உண்ண, சில நிமிடங்களில் இளஞ்சிவப்பு நிற காட்டன் புடவையில் கீழிறங்கி வந்தாள் அகமொழி.
அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்குத் தடை செய்யப்பட்ட உணர்வுகள் சோதனை புரிய, ‘இவள் வேற…’ என நொந்து கொண்டான்.
அதன்பிறகே அனகாவும் அன்விதாவும் ஒரே போலப் புடவை அணிந்திருப்பதைக் கண்டவன்,
“எந்தாடி இன்னைக்கு பெண்குட்டியாட்டம் இருக்கா?” எனத் தங்கையை வாரினான்.
“ஈ கலாய் எனிக்கோ? அல்லா…” என இழுத்தபடி அகமொழியைக் கிண்டலாகப் பார்க்க, அவளோ ஆடவனை முறைத்து வைத்தாள்.
“நினக்கு இன்னைக்கு பர்த்டேக்கு ஜூவெல் வாங்கித் தரலாம்னு விச்சாரிச்சேன்…” அவனும் இழுத்ததில், “ஞான் பெண்ணானென்று என்னைக்குடா பரஞ்சது? கிஃப்ட் ப்ளீஸ்…” என இளித்து வைத்தாள்.
“ஏய் லூசு… கிப்ட் எல்லாம் சர்ப்ரைஸா தரணும், கேட்டு நீயா வாங்கக் கூடாது!” என அகமொழி கிண்டல் செய்ய,
“ம்ம்க்கும்… நிங்கள்டே கணவனோடேடுத்து சர்ப்ரைஸ் பிரதீட்சிச்சால் ஞான் அறுபது வயசில் தான் பிறந்த நாள் கொண்டாடணம் ஏடத்தி…(“ம்ம்க்கும்… உங்க கணவர்கிட்ட சர்ப்ரைஸ் எதிர்பார்த்தா நான் அறுபது வயசுல தான் பிறந்த நாள் கொண்டாடணும் ஏடத்தி…”)” என்றாள் நக்கலாக.
“சுத்தம்!”
“இவள் பர்த்டே பர்த்டேனு ஒரு வாரம் முன்னெ வரை ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சுட்டு, பர்த்டே அன்னைக்கு காலேஜில் போவான்னு… இல்லெங்கில் பிரெண்ட் வீட்டில் போய் இருப்பான்னு… பின்னே எங்கனெ சர்ப்ரைஸ் கொடுக்கும்…”
“அப்ப நீங்க ஒரு வாரம் முன்னாடியே ப்ரீ பர்த்டே செலிப்ரேட் பண்ணிடுங்க!”
அகமொழியும் அகனும் பேசிக் கொண்டிருக்க, கோபால கிருஷ்ணன், “இன்னு அவளுக்கு லீவ் தானாம். லஞ்சினு வீட்டில் வருமோ அர்ஜி?” என வினவினார்.
“இல்லா அச்சா… இம்பார்ட்டண்ட் மீட்டிங். லஞ்சும் டின்னரும் என்டே க்ளையண்ட்ஸ் கூட. நைட்டும் ஞான் வரான் மிட்நைட் ஆக்கும்…” என அகமொழிக்கும் சேர்த்துப் பதில் சொல்ல, ‘ஓ… சாருக்கு மீட்டிங்கா… செத்தடி!’ எனத் தனக்குள் ஒரு திட்டம் ஊறியது அவளுக்கு.
“அட்லீஸ்ட் லஞ்சினு எங்கிலும் வாடா அர்ஜி…” என அனகா ஆசையாகக் கேட்டதில், சரியென ஒப்புக்கொண்டான்.
பின், பெண்கள் மூவரும் கோவிலுக்கும் ஷாப்பிங்கிற்கும் சென்ற பிறகு, அகமொழி அவளது கிளாம்பிங்கிற்கு அழைத்துச் சென்றாள்.
“வாவ் ஏடத்தி… செம்ம பிளேஸ். இதுவரை என்டே கண்ணில் இது படவே இல்லா!”” என சிலாகித்தாள் அனகா.
“வியூ சூப்பரா இருக்கு அகா…” அன்விதாவும் இயற்கையின் அழகை ரசித்தாள்.
“க்ளாம்பிங் ரூமும் செம்ம…” ஒரு அறைக்கு இருவரையும் அழைத்துச் சென்று காட்டியதில் இருவருமே புகழ்ந்து தள்ளினர்.
“நன்றி நன்றி…” என குனிந்து நன்றி உரைத்தவளைக் கண்டு இருவரும் சிரித்தனர்.
பின் தனது ஹாபிட் ஹவுஸ் திட்டத்தையும் விவரித்தவள், “லோன் அப்ளை பண்ணிருக்கேன். கிடைச்சதும் அதுவும் ஸ்டார்ட் பண்ணிடுவேன்…” என்றிட, அனகா முறைத்தாள்.
“எதுனு ஏடத்தி லோன் எல்லாம்? அர்ஜியோடே கேட்டால் அவனே எல்லாம் செய்து தருமே!” என இயல்பாகக் கூற, அகமொழியின் முகம் இறுகியது.
“எனக்கு யாரோட ஹெல்ப்பும் தேவை இல்லை…” எனப் பட்டெனக் கூறியதில் அனகாவும் விழித்தாள்.
அன்விதா தான், “அவள் அவளோட சொந்த முயற்சியில பண்ணணும்னு நினைக்கிறா அனு…” எனச் சமாளிக்க, அரைமனதாக ஒப்புக்கொண்டாள்.
பின் பேச்சை மாற்ற, “இங்கேயே ரெஸ்டாரண்டும் கொண்டு வர ட்ரை பண்ணலாம்ல அகா?” என வினவினாள்.
“அதுக்கு நிறைய செலவு ப்ளஸ் செஃப் வேணும்லகா. வர்றவங்களுக்குப் பிடிக்கிற டேஸ்ட்ல பண்ணணும். இல்லன்னா அதையும் ஒரு குறையா ரிவ்யூல போடுவாங்க. இங்க கொஞ்ச தூரம் தள்ளி ரெஸ்டாரண்ட் இருக்கு. முன்னாடியே ஆர்டர் பண்ணிட்டா, கொண்டு வருவாங்க.”
“ஆமா தான். பட், பொதுவா இந்த மாதிரி இடத்துக்கு வர்றவங்க ஜஸ்ட் இந்த இடத்தை மட்டுமே ரசிக்க வரலாம். அப்போ இங்கேயே நம்ம எல்லாம் ப்ரொவைட் பண்ணிட்டா, வர்றவங்களுக்கு செகண்ட் ஆப்ஷன் தோணாது…” என்றவளைச் சிறு வியப்புடன் பார்த்தவள்,
“நீங்க சொல்றதும் கரெக்ட் தான். நான் கண்டிப்பா இன்பியூஸ் பண்ண ட்ரை பண்றேன்…” என்றாள் புன்னகையுடன்.
மூவரும் மதிய உணவிற்குத் தான் வீட்டிற்குச் சென்றனர். விஷ்ணுவும் கொடைக்கானலுக்குச் சென்றிருந்ததால், அன்விதா மகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தாள்.
தங்கை கேட்டதற்கிணங்க, அவளுக்குப் பரிசோடு வீட்டிற்கு வந்தான் அர்ஜித்.
“ப்ரோ வரலையா?”
“ஞான் அங்க இல்லேல்லோ… அவனைத் தான் விட்டுட்டு வந்துருக்கேன். சீக்கிரம் போகணும்…” என்றபடி உணவு மேஜையில் அமர்ந்தவன், “ஹேப்பி 40’த் ஹேப்பி பர்த்டே முத்தச்சி!” எனக் கிண்டல் செய்தபடி பரிசைக் கொடுத்தான்.
சுஜாதா வேலையை முடித்து விட்டு அப்போது தான் குளிக்கச் சென்றிருக்க, இளையவர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.
“டா… ஐ ஆம் ஜஸ்ட் 21!” என முறைத்திட, அன்விதா அவனுக்கு உணவைப் பரிமாறினாள்.
அகமொழியோ மேலும் கிண்டலில் இறங்க, அனகா தான், “அர்ஜி இன்னு (இன்னைக்கு) ஏடத்தியோடே கிளாம்பிங் போயி… செம்மயா இருன்னு அறியுமோ?” என தமையனிடம் கூற, அகமொழி சட்டென அமைதியாகி விட்டாள்.
ஒரு நொடி உணவு உண்பதை நிறுத்தியவன், பின் தோளைக் குலுக்கி விட்டு உண்பதைத் தொடர்ந்தான்.
‘யாரோட பிசினஸ் விஷயமும் எனக்குத் தேவை இல்லை’ எனக் கூற வந்தவன், அனகா தவறாக எண்ணுவாள் என்றெண்ணி அமைதி காத்தான்.
“”ஏடத்தி லோன் வாங்ஙான் போவுன்னுர… நின்னோடே கேட்டால் நீ கொடுக்கான்னு இல்லையா என்ன? அதே சோதிச்சதினு…(ஏடத்தி லோன் வாங்கப்போறாங்களாம். உங்கிட்ட கேட்டா நீ தர மாட்டியா என்ன? அதை கேட்டதுக்கு…)” எனப் போட்டு விட, ‘இவள் வேற…’ என எரிச்சலுற்ற அகமொழி,
“எதுக்கு உன் சேட்டன்கிட்ட எல்லாம் கேட்டுக்கிட்டு, எனக்குத் தேவைன்னா நானே எடுத்துக்க மாட்டேனா. அதான் ஒன்றை வண்டி நகை இருக்கே. அதை வச்சுட வேண்டியது தான்…” எனப் பேச்சை மாற்ற முயன்றாள்.
அவனிடம் தான் வங்கி லோன் வாங்குவதைப் பகிர விருப்பமில்லாததால் வந்த பதில் அது.
கூடவே ‘அதுக்கு தான கல்யாணமே பண்ணிருக்கேன்’ என்று குறும்பாக அவன் மட்டும் கேட்கும் வண்ணம் கூறிட, அவனோ ஓர் கணம் நிமிர்ந்து அவளை முறைத்து விட்டுப் பின் மீண்டும் தனது வேலையில் கவனமானான்.
‘உனது வேலை விஷயமாக எந்தப் பேச்சும் எனக்குத் தேவையில்லை!’ என்ற தொனி அதில் இருக்க, இந்தப் பேச்சில் கலந்து கொள்ளாமல் கிளம்பியும் விட்டான். அவளும் அவனைக் கண்டுகொள்ளவில்லை.
மாலை நேரம் தாண்டியதில், கிளாம்பிங்கில் இருந்து கிளம்பப் போனவள், சின்ன சில்மிஷத்துடன் அர்ஜித் அகனுக்கு அழைத்தாள்.
மீட்டிங்கில் இருந்தவனோ, அவளது எண்ணைக் கண்டு சுருங்கிய புருவத்துடன் அழைப்பை ஏற்றான்.
“பரயு மொழி?” சற்றே ஹஸ்கி குரலில் கேட்க, வெகு முக்கியமான வேலையில் இருக்கிறான் எனப் புரிந்து கொண்டவள்,
“இன்னைக்கு நீ வர லேட் ஆகுமோ?” என்றாள் கிண்டலாக.
“அதான் ஞான் காலைலயே பரஞ்சது?”
“இல்ல… நீ சீக்கிரம் வந்தன்னா, நீ கேட்டதைக் கொடுக்கலாம்னு பார்த்தேன்…” என இழுத்தாள்.
“எந்தா?” அவன் புரியாது வினவ,
“அதான்… முதுகுக்கு கீழ இருக்கிற மச்சத்துல முத்தம்!” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
அவனோ ஒரு கணம் பேச்சிழந்து போக, தன்னையே பார்த்துக்கொண்டிருந்த க்ளையண்ட்டின் முன்பு முகத்தை மாற்றாமல் இருக்க அரும்பாடுபட்டான்.
“காந்தாரிய்ய்ய்…”
அவன் பற்கள் அரைபடும் சத்தம் கேட்க, பொங்கிய சிரிப்பை அடக்கியவள், “உனக்கு சேரி தானே கம்ஃபர்ட்டபிள்! சரி சேரியோட உனக்கு முத்தம் கொடுக்கலாம்னு நினைச்சேன். சரிப்பா உன் வேலையைப் பாரு…” என அவனைத் தூண்டி விட்டு அழைப்பைத் துண்டித்தவளோ கெக்க பெக்கவென சிரித்தாள்.
‘என்னையவா கோர்த்து விட்ட… இப்ப உன் மூஞ்சிய க்ளையண்ட்ஸ் முன்னாடி எப்படி வச்சுப்பன்னு நானும் பார்க்குறேன்…’ என்று தனக்குள் பேசி அவனைச் சீண்டியதில் உல்லாசமாக வீட்டை அடைந்தாள்.
சொன்னது போன்றே அர்ஜித் அகனுக்கு மூளையே வேலை நிறுத்தம் செய்த நிலை.
‘காந்தாரி மூடே மாற்றிட்டா!” எனத் தட்டுத் தடுமாறி பேசியவனை ஒரு மார்க்கமாகப் பார்த்த பிரணீத் தானே மீட்டிங்கை நடத்திச் செல்ல, அகமொழியின் முத்தம் கேட்டு அடம்பிடித்தது அவனது மொத்த மச்சங்களும்!
‘சோதிக்கிறா!’ நெற்றியைத் தேய்த்துக் கொண்டவனுக்கு கோபத்தை விட தாபமே அதிகரித்தது.
ஒன்பது மணி வரை, வீட்டினரிடம் அரட்டை அடித்து விட்டு அறைக்கு வந்தாள் அகமொழி.
அவன் வரத் தாமதமாகும் என்றான் தான். ஆனாலும் அவனது வாசம் அவளிடமே தங்கி நொடிக்கொரு முறை அவனை நினைவுபடுத்தியது.
புடவையை மாற்றவும் மனம் இல்லை. “எனக்கு சேரி தான் கம்ஃபர்ட்டபிள்” என்ற அவனது குரல் காதில் ரீங்காரமிட்டு சிவப்பைக் கொடுத்தது.
‘ம்ம்ஹும் இதுலாம் நல்லதுக்கு இல்லை’ எனத் தலையை உலுக்கிக் கொண்டவள், அறைக்கதவை அடைக்கப் போகும்போதே திகைத்தாள்.
அந்நேரம் அர்ஜித் அகனும் உள்ளே வந்ததில் பேந்த பேந்த விழித்தவள், “நீ என்ன பண்ற?” என்றாள் தடுமாற்றத்துடன்.
அவனோ காலால் கதவை அறைந்து அடைத்து விட்டு, “நீ தானடி போன் செய்து வர பரஞ்சது… கொடு!” என்று வந்ததும் வராததுமாக சட்டை பட்டனைக் கழற்றினான்.
“டேய் டேய்… நான் சும்மா உன்னைக் கிண்டல் தான் பண்ணேன். இதுக்காக க்ளையண்ட்ஸ் எல்லாம் அம்போன்னு விட்டுட்டு வந்துட்டியா?” என மிரண்டாள்.
“கிண்டலுக்கு பரஞ்சதா… இன்னும் ஏன் சேரியே சேஞ்ச் செய்யான்னு இல்லா?” என ஒற்றைப்புருவம் உயர்த்திக் கேட்க, கன்னங்கள் சூடானது அவளுக்கு.
“அது… அது… இப்ப தான் நான் ரூமுக்கே வந்தேன்…” எனத் தட்டுத் தடுமாறிட,
“ஏய் பொய் பரயாதே! ஞான் வருவேன்னு தான வெய்ட் செய்து?” என அவளைத் தனக்குள் அடக்கிக் கொள்ள,
“ஐயோ இல்லை…” எனப் பதறினாள்.
“அல்லே?(இல்லையா)” அவனது ஒற்றைக்கேள்வியில் உள்ளம் உருகத் தொடங்க, மெல்ல மெல்ல தேகமும் உருகியது.
மொத்த தாபத்தையும் ஒரே நாளில் காட்டுபவன் போல, முத்தத்தால் அவளைக் கிறங்கடித்தான்.
எப்போதும் கொஞ்சம் நிதானம் காட்டுபவனின் முத்தம் கூட அன்று நிதானமின்றி அழுத்தமாகப் பதிய, அவள் மேனியும் ஆடவனின் கட்டளைகளுக்கெல்லாம் செவி சாய்த்தது.
இறுதியாக அவளுடன் கலக்க முற்படும்போது, கண்ணை இறுக்கி மூடிக் கொண்டவள் அவனது நெஞ்சில் கை வைத்துத் தடுத்தாள்.
“பெயின் ஆனோ?” வெப்ப மூச்சுடன் கேட்டவனை, அன்றும் ஏமாற்ற விருப்பமின்றி மறுப்பாய்த் தலையசைத்தவளுக்கு வலியில் தானாய் விழிகளும் கலங்கியது.
அத்தனை மயக்கத்திலும் அவளது ஒற்றை நீர்த்துளியை உணர்ந்து கொண்டவன், நெற்றியை அவளது தோள்பட்டையில் வைத்து அழுத்தி சற்றே தனது உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அவளது கன்னத்தில் தாபம் வடிய அழுந்த முத்தமிட்டு விலகினான்.
தனக்குப் பக்கவாட்டில் படுத்திருந்தவனைக் கழுத்தைத் திருப்பிப் பார்த்த அகமொழிக்குத் தர்மசங்கட நிலை.
அவனே வேலை இருப்பதாகச் சென்றிருந்தான். அவள் தானே தேவையின்றி அவனைத் தூண்டி விட்டது! அதில் சின்னதாய் ஒரு குற்ற உணர்வு தாக்க, “சாரி…” என்றாள் முணுமுணுப்பாக.
அதில் சட்டென அவள் புறம் விழிகளைத் திருப்பியவன், “எத்தினு?(எதுக்கு)” எனப் புருவம் சுருக்கி வினவ,
“நான் வேணும்னு பண்ணல அகன். ஒரு மாதிரி ஆன்சைட்டியா இருக்கு…” என்றாள் பரிதாபமாக.
அவளை இழுத்து தனது நெஞ்சில் போட்டுக்கொண்டவன், “இட்ஸ் காமன் மொழி… இத்ரயொன்றும் யோசிக்கண்டா. இதுக்கும் சேர்த்து நின்னே பழி வீட்டிடுறேன்!(“இட்ஸ் காமன் மொழி. ரொம்ப ஆலோயிக்காதே. இதுக்கும் சேர்த்து உன்னைப் பழி வாங்கிடுறேன்…”)” என அவளை இயல்பாக்கக் குறும்பாய்க் கூறினான்.
“ஹைய… பழி வாங்குற மூஞ்சிய பாரு!” என அவன் கன்னத்தில் குத்தியவள், “இப்ப ஓகே தான் அகன்…” என்றாள் தயக்கத்துடன்.
“ரொம்ப ஸ்ட்ரெஸ் செய்யாதே காந்தாரி! இட் டேக்ஸ் டைம். கூல்…” என அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதிக்க, மீண்டும் மீண்டும் அவனிடமே வழுக்கிச் சென்ற மனத்தினைத் தடுத்து நிறுத்தத் தெரியாமல் திணறினாள்.
அவளது அரவணைப்பிலேயே அர்ஜித் உறங்கியும் விட, அவளுக்குத் தான் உறக்கமே இல்லை.
மற்ற விஷயங்களைப் போன்று இவ்விஷயத்திலும் அவன் கோபத்தைக் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?
பிடிக்காத திருமணம் பிடிக்காததாகவே இருந்திருக்கும்! இப்போது பிடித்துத் தொலைத்து அல்லவா வதைக்கிறது.
‘கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கிற குணம் உண்மையா? இல்ல இப்ப காட்டுற இந்த முகம் உண்மையா? நீ தப்பானவன் தான்னும் மனசைத் தேத்திக்க முடியல. நீ நல்லவன்னும் நம்பி முழுசா என் மனசைக் கொட்ட முடியல. படுத்தி எடுக்குறடா பைத்தியக்காரா!’ என்று மனத்தினுள்ளேயே வறுத்து எடுத்தாள்.
அடர்ந்த புருவ மத்திக்கு அடியில் அழகாய்ப் பதுங்கி இருந்த மூடிய விழிகளும் கூட அவளை அத்தனை வசியப்படுத்தியது நிஜம்.
‘கொஞ்சமே கொஞ்சம் அழகன் தான்…’ தானாகச் சிரித்துக்கொண்டவளுக்கு இப்படியே படுத்திருந்தால் நிச்சயம் தனக்குப் பைத்தியம் பிடித்து விடும் எனத் தோன்ற, அவன் நெற்றியில் முத்தமிட வந்து விட்டுப் பின் ஏதோ தடுக்க, அவனைத் தள்ளிப் படுக்க வைத்து விட்டு எழுந்தாள்.
உடை மாற்றி விட்டு, நீர் எடுப்பதற்காக பாட்டிலுடன் கீழே சென்றவள், தோட்டத்துப் பக்கம் விளக்கு எரிவதைக் கண்டு அங்கு சென்றாள்.
மேகம் மூடிய நிலவைச் சலனமின்றி வெறித்துக்கொண்டிருந்தது அன்விதாவின் விழிகள்.
அகன் வசமாவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
62
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


💕💞💛💜💖
அகன் மொழி அழகு.