
அகமொழி தொடங்கிய முத்தத்தை அவளே முடித்து வைக்கும் நிலை.
எத்தனை நேரம் மூச்சை அடக்கி அவனுக்கு ஈடு கொடுப்பது?
முகம் சிவக்க அவனிடம் இருந்து விலகியவளுக்கு அவனைப் பார்க்கவே ஏதோ தடுத்தது.
தானாய் முத்தமிட்டதில் அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ஆடவனின் பார்வை தன்மீது மொய்ப்பது உணர்ந்து, “நீ ரெஸ்ட் எடு… நான் வேணியை பார்த்துட்டு வரேன்” என்று வெளியில் ஓடி விட முயல, அவள் கையைப் பிடித்து தன்மீது மோத வைத்தவன்,
“இவிடே சுடுவெள்ளம் வைக்கான் பற்றில்லா. அதுகொண்டு விடுந்து…(இங்க சுடுதண்ணி வைக்க முடியாது. அதுனால விடுறேன்)” என்றான் ரசனைப் புன்னகையுடன்.
கூடலின் பொழுதில் அவளது அடிவயிற்றில் ஒத்தடமிட்டதைக் குறித்துக் கேட்டிருக்கிறான்.
ஒரு நொடி புரியாது விழித்தவள், புரிந்தபின் விழிகளைத் தரையில் புதைத்தாள். இதழ்கள் வேறு மலர்ந்து அவளைக் காட்டிக் கொடுக்க, “சுடுவெள்ளம் வேணோ?(சுடுதண்ணி வேணுமோ)” என அவளை நெருங்க, “போடா” என்று கன்னத்தைத் தட்டி விட்டு ஓடியே விட்டாள்.
அதில் மந்தகாசப் புன்னகை அவனிடம்!
மறுநாள் அர்ஜித்தின் காயத்தைக் கண்டு பிரணீத் பதறி விட்டான்.
“டேய் என்னடா இது?”
“ஒன்னுமில்லாடா ப்ரணீ”
“இப்படி அடிபட்டு இருக்கு. என்ன என் சிஸ்டர் உன் கையை உடைச்சுட்டாளா?” எனக் கேட்டதில், அர்ஜித் முறைத்தான்.
“செய்ய கூடிய ஆளு தான சேட்டா…” எனக் கிண்டல் செய்தவன் பின் தீவிரமாக வினவ, நடந்ததை கேள்விப்பட்டு அதிர்ந்தான்.
“சேட்டைய பார்த்தியாடா. குடிச்சுட்டு வண்டி ஓட்டி மேல வந்து ஏத்துவானுங்களா…” என காய்ந்தவனுக்கு, இரண்டாம் முறையாக அவனுக்கு அடிபட்டதில் மிகவும் வருத்தமாகி விட்டது.
“சாரிடா. நீ இன்னைக்கே வந்துருக்கலாம். நான் போர்ஸ் பண்ணதுனால தான ரெண்டு தடவையும் உங்களுக்கு உயிருக்கே பிரச்சினை ஆகுற மாதிரி வந்துடுச்சு…” பிரணீத்தின் முகம் வாடி விட,
“ஆமா நீ வர பரஞ்ஞு அடம்பிடிச்சது பைலட்டுக்கும், ஆ குடிகாரனுங்களுக்கும் அறியாம் போயிற்று நோக்கு! லூசு மாதிரி சம்சாரிச்சாதடா…” எனக் கண்டித்தான்.
வீட்டிலேயே நிச்சயதார்த்தம் ஏற்பாடாகி இருக்க, மாப்பிள்ளை வீட்டார் வரும் நேரம். உறவினர்கள் சூழ வீடே பரபரப்பாக இருந்தது.
அர்ஜித் குளிக்கச் செல்லும்போதே அகமொழி கிளம்பி வேணி அறைக்குச் சென்றிருந்தாள்.
பிரணீத்திடம் பேசிக்கொண்டிருந்தாலும் அவனது விழிகள் அவளைத் தான் தேடிக்கொண்டிருந்தது.
“சிஸ்டரை தேடுறியா சேட்டா பாய்?” பிரணீத் கேலியாய் வினவ,
“இல்லா… சும்மா வீட்டை சுற்றி நோக்கியதா…” என்றான்.
“ஓ! நீ இந்த வீட்டை பார்த்ததே இல்ல?”
உதட்டைப் பிதுக்கித் தலையாட்டியவனைக் கண்டு சிரிப்பை அடக்கிய பிரணீத்திடம், “இன்னைக்கு லன்ச் எந்தாடா? வெஜ் இட்டன்னா உன் சிஸ்டர் உன்னை கறியாக்கி பிரியாணி இட்டுடுவா…” எனக் கிண்டலாக சிரித்தான்.
“தெரியுமே. அதுனால இன்னைக்கு வெஜ் நான்-வெஜ்னு ரெண்டும் வச்சாச்சு. உன் பொண்டாட்டிட்ட திட்டு வாங்க முடியாதுடா…” பரிதாபமாக உரைத்ததில்,
“நீ திட்டு வாங்குறது பிரச்சினை இல்லடா. அவள் நைட்டு வாந்தி எடுத்து என்னை டீல்ல விட்டுடுவா…” என்றான் தலையைக் கோதியபடி.
“கஷ்டம் தான் சேட்டா பாய். அநியாயமா பர்ஸ்ட் நைட் தான் போச்சு… செகண்ட் நைட் வேஸ்ட் ஆகாதுடா…” குறும்பாய் கூற,
“ம்ம்க்கும்… செகண்ட் நைட்டும் வேஸ்ட் தான்…” என முணுமுணுத்துக் கொண்டான்.
“டா… அவள் பர்ஸ்ட் நைட்ல வாமிட் செய்ததை உன்கிட்ட பறஞ்சதே இல்லையே எங்ஙனெ அறியூ?”
“ஹி ஹி… சிட்டு தான் சொன்னா.”
“ஏடத்திக்கு எங்ஙனெ அறியூ?”
“உன் பொண்டாட்டி தான் சொல்லிருப்பா…” என வாயைப் பொத்தி சிரிக்க,
‘என் மானத்தை எடுக்குன்னா…’ எனப் பல்லைக்கடித்தான் அகன்.
அந்நேரம், வேணியின் அறையில் இருந்து வெளியில் வந்த அகமொழியின் மீது பார்வை படிய, விழிகளும் வேலை நிறுத்தம் செய்தது.
முந்தைய நாள் அவன் வாங்கி கொடுத்த க்ராண்டான மேக்சியைத் தூக்கிப் பிடித்தபடி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தவளைக் கண்டு இமைக்கவும் மறந்தான்.
தோள்களில் தடையின்றி பரவிய கூந்தலினுள் வாசம் பிடிக்க உந்தியது உள்ளம்.
அவளோ, அமுதினியிடம் வேலையைப் பிரித்து வாங்கி, அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் முகம் சிவந்த வேணியை வம்பிழுக்கும் பணியை சிறப்பாக செய்தவள், இருவரும் மோதிரம் மாற்றும் நேரம் வரும் வரை துள்ளித் தான் திரிந்தாள்.
சரியாக மோதிரம் மாற்றும்பொழுது அவள் முகம் இறுகி விட்டது. அர்ஜித் அகனுக்கும் தான்.
தந்தை அறைந்த நொடி நினைவிலாடிட, அவனும் அதே காட்டத்துடனே மனையாளை பார்த்திருந்தான்.
ரிவியூவில் ஆரம்பித்து அனைத்தும் அவளது நினைவடுக்கில் உதயமாக, ஏதோ ஒரு இனிமை சட்டென கலைந்தது போல் நெஞ்சம் பாரமானது.
நியாயமாக கோபம் தானே வரவேண்டும்?
சண்டை போடத் தானே தோன்ற வேண்டும்?
‘நினைவில் வந்து தொலைக்காதே’ என அனைத்தையும் மனதின் அடியாழத்திற்கு இருவரும் துரத்தி அடித்தனர்.
இருவருக்குமே நிஜத்தை ஏற்றுக்கொள்ள பிரியமில்லை. இந்தக் கனவு நிலை பிடித்திருந்தது. திருமணத்திற்கு முன்னான இருவரது முரண் செயலின் மீதிருந்த அதிருப்தியை மனம் படபடப்புடன் மறைத்தது.
ஒருவரை ஒருவர் பார்த்தாலே சண்டை வந்து விடுமோ என்றெண்ணினார்களோ என்னவோ, அகமொழி அமுதினியுடனே நேரத்தைக் கழிக்க, அர்ஜித்தும் பிரணீத்துடனே மற்ற வேலைகளில் ஈடுபட்டான்.
நிச்சயதார்த்தம் நன்முறையில் நடைபெற, மாலை நேரம் தாண்டி இருவருமே அடிமாலிக்கு கிளம்பினர்.
“நீங்க வந்தது ரொம்ப ஹேப்பி சேட்டா…” வேணி மகிழ்வாய் கூறினாள்.
திருமணத்திற்கு இரு நாள்கள் முன்னேயே வந்து விட வேண்டுமென கண்டிப்பாக கூறி இருந்தாள்.
இருவரும் விடைபெற்று கிளம்பிட, “நீங்க எப்ப ப்ரோ வர்றீங்க?” என வினவினாள்.
“ரெண்டு நாள்ல வந்துடுவேன்…” என்றவன், அர்ஜித்திடம் எதையும் கூற வேண்டாமென மீண்டுமொரு முறை கெஞ்சலாக கண்ணைச் சுருக்க, “சொல்ல மாட்டேன்…” என்று வெகு தீவிரமாக சொல்லிச் சென்றாள்.
விமானத்தில் ஏறும்போதே, “டேய் மிஸ்டர் மலையாளி… இந்த பைலட்க்கு அன்னைக்கு பகல்லயே பசு மாடு தெரியல. இருட்டிடுச்சு வேற. கரெக்ட்டா கூட்டிட்டுப் போய்டுவானா?” எனத் திகிலாக கேட்டாள்.
“ஆர்க்கு அறியாம்! இருந்தா பூமிக்கு, இல்லெங்கில் சாமிக்கு!” என நக்கல் சிரிப்புடன் இருக்கையில் அமர்ந்ததில்,
“நீ வேற பயமுறுத்தாதடா…” என அனைத்து சாமியையும் கும்பிட்டுக் கொண்டாள்.
நல்லவிதமாகவே கொச்சின் விமான நிலையத்தில் வந்து இறங்கியவர்கள் அங்கிருந்து காரில் வீட்டை நோக்கி பயணித்தனர்.
“ட்ரைவரை வர சொல்லிடு. கை வலி வந்துடும். எனக்கும் தூக்கமா வருது…” என்று முதலிலேயே சொல்லி விட்டதில், ஓட்டுநர் விமான நிலையத்தில் காத்திருந்தார்.
இருவரும் பின்னால் ஏறிக்கொள்ள, சிறிது நேரத்திலேயே அவன் தோளில் சாய்ந்து உறங்கி விட்டாள்.
அவளது விரல்களை பற்றிக்கொண்டு, அணைத்தபடியே வீடு வரைக்கும் வந்தவனுக்கு அயர்ந்து உறங்குபவளை எழுப்ப விருப்பமின்றி, கையில் அள்ளிக்கொண்டான்.
நல்லவேளையாக அனைவருமே அவரவர் அறையில் இருந்தனர்.
அவளை கட்டிலில் கிடத்தி விட்டு அவளருகில் தானும் படுத்து விட்டவனுக்கு, அவளுடன் முழுதாய் செலவழித்த ஒன்றரை நாளும் தேனாய் தித்தித்தது.
உணர்வுகள் வேறு அவன் பேச்சை கேளாது சோதிக்க, அவளருகில் நெருங்கி படுத்தவன், உதடு நோக்கி குனிந்து விட்டுப் பின் தலையை இழுத்துக் கொண்டான்.
“இவள் மாத்ரம் எங்ஙனெ தான் நிம்மதியா உறங்ஙுன்னாளோ… மனுஷ்யண்டே அவஸ்தை புரியாதே…(‘இவள் மட்டும் எப்படி தான் நிம்மதியா தூங்குறாளோ… மனுஷனோட அவஸ்தை புரியாம…’)” எனப் புலம்பியபடி உறங்கிப்போனான்.
மறுநாள் அகமொழிக்கு அன்விதாவை சந்திப்பது சற்றே சங்கடமாகவே இருந்தது.
பல்லி பிரச்சினைக்கு பிறகு, அவளிடம் பேசவே இல்லையே.
தயக்கத்துடன் கீழே இறங்கி வந்தவளிடம், சுஜாதா, அனகா, கோபாலகிருஷ்ணன், கேசவ நாயர் என அனைவருமே நலம் விசாரித்தனர். அவர்களிடம் இன்முகத்துடன் பேசி விட்டு அடுக்களைக்குள் நுழைய, அன்விதா அவளைக் கண்டு புன்னகைத்தாள்.
“அங்க எல்லாரும் நல்லாருக்காங்களா அகா? சென்னை எப்படி இருந்துச்சு?” என இயல்பாகப் பேச, சிறு முறுவலுடன் தலையை ஆட்டினாள்.
“அமையா ஸ்கூலுக்குப் போய்ட்டாளாக்கா?” சங்கடமாக கேட்க,
“ம்ம் ஆமா… இன்னைக்கு நீ வந்துடுவியா அகா? ஸ்பீச் தெரபி போக…” என அவள் தயக்கம் புரிந்து கேட்டாள் அன்விதா.
அதில் “கண்டிப்பா வரேன்கா. சாரி…” என்றாள் வருத்தமாக.
“நீ வருத்தப்படாத அகா. விஷ்ணு பேசுனதும் தப்பு தான். நீங்க ரெண்டு பேரும் வீட்ல உண்மையை சொல்றது பெட்டர்.”
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அர்ஜித் அகனின் தவறான பழக்கத்தையும் அல்லவா சொல்ல வேண்டும். என்னவோ அதை நினைக்கவே அவளுக்கு உவப்பாக இல்லை.
“விடுங்ககா பாத்துக்கலாம்…” என்று நைசாக நழுவி விட்டாள்.
அதன்பிறகு வேலையில் புதைந்து விட்டவளின் நாள் எப்போதும் போலவே சென்றது.
அர்ஜித்தின் காயம் கண்டு தான் வீட்டினர் துடித்து விட்டனர். சுஜாதாவிற்கும் வருத்தம் தான். அதே நேரம் அவன் செய்த அத்தனை சீக்கிரம் மன்னிக்கவும் மனம் வரவில்லை.
இரவு உணவுடன் அனகாவையும் சுஜாதாவையும் வம்பிழுத்து விட்டு, வீட்டிற்கு திரும்பிய அர்ஜித்தையும் கிண்டல் செய்து விட்டு அறைக்கு சென்றவளுக்கு, மடமடவென தேகம் சிவந்து விட்டது.
கட்டிலுக்குப் பக்கவாட்டிலேயே இருந்த மேஜை மீது ஹாட் பேக் தயாராக இருக்க, அடிவயிற்றில் மெல்லியதொரு அவஸ்தை.
அகமொழியைப் பின்னிருந்து கட்டிக்கொண்ட அர்ஜித் அகன், “ஆவஷ்யமுண்டு அல்லோ?” எனக் கிசுகிசுப்பாகக் கேட்க, “உனக்கு அடிபட்டுருக்கு அகன்…” என்றாள் தவிப்பாக.
“சாரமில்லேடி(பரவாயில்லடி)… ப்ளீஸ்ஸ்ஸ்! நீ வகை வகையா ட்ரெஸ் சேஞ்ச் செய்துட்டு வரும்போதே நின்னை அள்ளிட்டுப்போகான் தோணுந்து.. யூ டெம்ப்ட் மீ மொழி!” என்றவனின் குரலில் தாபம் வழிந்தோடியது.
“ஏதோ எந்த ட்ரெஸ்ஸும் பிட்டாகாதுன்னு சொன்ன?” உள்ளுக்குள் குளுகுளுவென வெட்கம் நிறைந்தாலும், ‘உன்னை பிளாட் ஆக வச்சது நான் தான்டா’ என்ற இறுமாப்பில் கூறியவளை, ஒரு சுற்று சுற்றி அவன் புறம் திருப்பியவனின் விரல்கள் இடையில் ஊர்வலம் போனது.
“ம்ம்… ஏது ட்ரெஸ்ஸும் ஃபிட் ஆகிண்டெ… சோ…(ம்ம் எந்த ட்ரெஸ்ஸும் ஃபிட் ஆகலை)” என நிறுத்தியவனின் சில்மிஷக் கூற்றில் கொந்தளித்த உணர்வலைகளுக்குள் சிக்கிக் கொண்டாள் அகமொழி.
“அகன். வாய மூடு!” அவன் அடுத்து பேச வருவது புரிந்து வாயை மூடினாள்.
“ஃபிட் ஆகாத ட்ரெஸ்ஸை ஈ டைம்ல போடான் பாடில்லா காந்தாரி!” குறும்பாய் நகைத்தவன், அவளைக் கொள்ளையடிக்கத் தொடங்கினான்.
முதன்முறை இருந்த தயக்கமும் தவிப்பும் கூட அவளுக்கு இருக்கவில்லை.
முதல் முத்தத்தில் இருந்தே தன்மீது அவன் கொண்ட நாட்டத்தினை ரசித்தாள்.
“ஓய் காந்தாரி…” கிசுகிசுப்பாக அவள் செவியில் ஓத,
“ம்ம்…” மட்டுமே அவளின் ரீங்காரமானது.
“ஞான் கொடுத்த கிஸ்ஸ எல்லாம் திருப்பி தாடீ…” விஷமமாகக் கேட்டதில் ஏற்கனவே நெஞ்சை அடைக்கும் நாணத்தில் தன்னை மறைக்கவும் இயலாமல் தவித்திருந்தவள், மறுபுறம் திரும்பி முகத்தை மூடிக்கொண்டு “அகன் ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.
“பிளஷ் ஆயோ?” கேலியாக நகைத்து புரிந்தாலும், அக்கேள்வியிலும் அல்லவோ தடதடவென இரத்தம் அவள் கன்னத்தில் பாய்ந்தது.
பெண்ணின் மீது மோகத்துடன் பரவியவன், சிவந்த வதனம் முழுக்க முத்தமிட்டான்.
“மொழி!”
“ம்ம்…”
“ஓகே அல்லோ?” முதன்முறை கேட்க மறந்த, மறுத்த கேள்வியை இப்போது கேட்டான்.
அக்கேள்வி அவளை இன்னும் இளக்கியதோ என்னவோ, தானாகவே அவள் விரல்கள் அவனது முதுகில் கோலமிட்டது.
அத்துடன் வினவலுக்கு விடுதலை கொடுத்து, அவளிடமே விடை தேட விழைந்தான் ஆடவன்.
ஆனால், சுரீரென வலி தோன்ற “ஸ்ஸ்ஸ்…” என அவன் நெஞ்சைப் பிடித்து தன்னிச்சையாக தள்ளி விட்டவளின் பூ முகம் சுருங்கிப் போனது.
அதனைக் கண்டு கொண்டவன், “பெயின் ஆனோ?” என மென்மையாக வினவ,
“ம்ம்ம்ம்…” என வேகமாக தலையாட்டினாள்.
மறுநொடி அவளை விட்டு விலகியதில், அவளோ அன்றும் சுருண்டு படுத்து விட்டாள்.
“காலை நீட்டு மொழி. இட் வில் பீ ஃபைன்!” என்றவன் அவசரமாக இரவு உடையை அணிந்து விட்டு, தயாராக இருந்த ஹாட் பேக்கை எடுத்து அடிவயிற்றில் ஒத்தடம் கொடுக்கத் தொடங்கினான்.
போர்வையில் தன்னை மூடிக்கொண்டவளுக்கு வலி மட்டுப்பட்டதும் தான் அவனது நிலையும் புரிந்தது.
“இப்ப ஓகே தான் அகன்!” தயக்கமாக கூறியதும்,
அவனும் அதனை வைத்து விட்டு அவளது போர்வைக்குள் புகுந்து கொண்டான். மேலும் தொடர முற்படாதவன், அவளை அணைத்தபடி உறங்கிப் போக, வெகு அருகில் அவன் முகம் பார்த்திருந்தாள் அகமொழி.
அவனது மூச்சுக்காற்று ரீங்காரமாக அவளது கன்னம் தொட்டு சுட்டது.
‘கோவிச்சுருப்பானோ?’ எனச் சின்னதொரு வருத்தம் எழ, அவன் தன் மீது கை போட்டு படுத்திருந்த கோலமே இல்லையென தான் சொல்லியது.
மறுநாள் அகமொழி எழும்போதே அவன் அறையில் இல்லை.
“அர்ஜன்ட் ஒர்க் மொழி… குட் மார்னிங்!” என நோட் பேடில் எழுதி வைத்துச் சென்றிருந்தான்.
அதனைக் கண்டு தானாய் புன்னகைத்தது அகமொழியின் இதழ்கள்.
மணி எட்டு தான் ஆனது. ‘அதற்குள் என்ன வேலையாம் இவனுக்கு?’ எனத் திட்டிக்கொண்டாள்.
பின் மடமடவென கிளம்பித் தயாரானவள், கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த அனகாவைத் தனியே பிடித்து விட்டாள்.
“என்ன இது?” பிரணீத் அட்டைப்பெட்டியில் பதுக்கி அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த அவனது சின்னங்களைத் திருடிக்கொண்டு வந்தவள், அனகாவிடம் காட்ட, அவளோ திகைத்துப்போனாள்.
“இது எங்ஙனெ உங்களுடே கையில்?”
“முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு அனு… என்ன இதெல்லாம்?”
முணுக்கென கண்ணில் நீர் நிறைந்தது அனகாவிற்கு.
நடந்ததை சொல்லி முடித்ததும் அகமொழி அவளைக் கோபப்பார்வை பார்த்தாள்.
“ஏடத்தீ ப்ளீஸ் அங்ஙனெ நோக்கல்லே… எனிக்கு பிரணீயை வளரே இஷ்டமா, பட்சே…(“ஏடத்தி ப்ளீஸ் அப்படி பார்க்காதீங்க… எனக்கு பிரணீயை ரொம்ப பிடிக்கும் ஆனா…”)”
“உங்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல அனு!”
“ஏடத்தி…”
“ப்ரோ டிசர்வ் பெட்டர் லைஃப்…” என அவளைத் தீயாக முறைத்து விட்டுச் செல்ல, அனகா உடைந்து அமர்ந்தாள்.
இதே யோசனையுடன் கிளாம்பிக்கிற்கு சென்றவளுக்கு தலை வலித்தது.
‘அகனிடம் சொல்லி விடலாமா?’ என்ற எண்ணம் கூட உறுத்தியது. ‘சொல்லி மட்டும்!’ எனப் பெருமூச்சு விட்டவளுக்கு, எண்ணத்தின் நாயகனே குறுஞ்செய்தி அனுப்பினான்.
“கிளாம்பிங் போயோ காந்தாரி?”
அதில் வலியெல்லாம் பறந்து போக, “வந்துட்டேன் அகன்…” என்றவளுக்கு முந்தைய இரவின் தயக்கம் வேறு குடைந்தது.
“செரி நைட் காணாம்(நைட்டு பாக்கலாம்)… பை… லாட்ஸ் ஆஃப் கிஸ்” என அனுப்பி இருக்க, அதனைப் படித்து வெட்கம் நிறைந்தது.
“பிளஷ் ஆயோ?”
“போடா!” என அனுப்பி விட்டு முகத்தை மூடிக்கொண்டாள்.
“நீ போடீ…” அர்ஜித்தும் மந்தகாசப் புன்னகையுடன் கேசத்தைக் கோதிக்கொண்டான்.
ஆனால், அதன்பிறகான மூன்று நாள்களும் தினமும் இரவு இதே கதை தான்.
முதலில் வலிக்கு பயந்தவள், பின் வலிக்குமோ எனப் பயந்தே ‘ஆன்சைட்டி’ என்ற நிலைக்கு வந்து விட்டாள்.
“பெயின் ஆனோமொழி?” அவ்வார்த்தை மட்டும் அத்தனை பயத்திலும் நெஞ்சம் தொட்டு நிறைக்கும் மாயம் மட்டும் புரியவில்லை.
“பேடிச்சோடி(பயந்துட்டியா)? ஐ வோண்ட் ஹர்ட் யூடி…” என மென்மையாக அணுக முயன்றும் அவள் தன்னிச்சையாகவே தடுத்து விடுவதில் அவனும் நாசுக்காக விலகி விடுவான்.
ஆனால் அதற்காக கோபப்படுவதோ, அவளிடம் குத்திக் காட்டுவதோ எதுவுமே இருந்ததில்லை.
“டிவின்னிங் செய்யாம்னு ட்ரெஸ் வாங்ஙியது… எப்போடி அது?” என வெகு இயல்பாக அவளிடம் பேசிக்கொள்வான்.
அவ்வப்பொழுது சில்மிஷங்களை செய்து அவளை சிவக்க வைப்பான்.
அன்று அவன் எழும் முன்னே எழுந்து விட்டவளை, “வா சேர்ன்னு குளிக்காம்!(சேர்ந்து குளிக்கலாம்)” என்று குளியலறைக்கு கதற கதற தூக்கிச் சென்று விட்டான்.
“விடுறா மலையாளி. ஐயோ… விடுன்னு சொல்றேன்!” என்றதை எல்லாம் காதில் வாங்காமல் ஷவரின் அடியில் அவளை நனைக்க வைத்து கேலி நகை புரிந்தான்.
அவன் பார்வை வேறு பல கதைகள் பேச, “எதுக்கு இப்படி பார்க்குற?” என ஒற்றைப்புருவம் உயர்த்தினாள் அகமொழி.
“எவிடே இருந்து கிஸ் செய்யாம்னு தான்…” என்றவன் கை விரல்களில் இருந்து முத்தத்தை தொடர, தவித்துப் போனாள்.
முத்தங்கள் வலுப்பெறும்போதே, “ஏடத்தி…” என அனகாவின் குரல் கேட்க, திருதிருவென விழித்தாள்.
“அய்யயோ உன் தங்கச்சி குட்டி சாத்தான்டா!” சத்தம் வராது பேசினாள்.
கூடவே “அகா…” என்ற அன்விதாவின் குரலும் கேட்க, ‘ஐயோ போச்சு’ என்று முகத்தை மூடினாள்.
பொங்கிய சிரிப்பை அடக்கியவன், “செரி செரி போ… ஆ கரடிகளால் என்டே மூட் ஸ்பாயில் ஆயி கழிஞ்ஞு…” என்ற முணுமுணுப்பு வேறு.
“எதே நான் போகவா? ஈர ட்ரெஸ்ஸோட! நீ போ.”
“ஏய் ஏடத்திலாம் இருக்காங்க. ஞான் எப்படிடி போக?”
“நீ தான் ட்ரெஸ் எடுத்துட்டு வந்துருக்கல்ல. போடா… அவங்க கேட்டா நான் மொட்டை மாடிக்கு போயிருக்கேன்னு சொல்லு. ப்ளீஸ் ப்ளீஸ் என் செல்ல ஹஸ்பண்ட்ல…” எனக் கொஞ்சினாள்.
“அப்போ என்டே முதுகுக்கு கீழ இருக்கிற மச்சத்துல கிஸ் செய்!”
“எந்த நேரத்துல எதைடா கேக்குற…?”
“அப்போ செரி, ஞான் போய் நீ இவிடே தான் இருக்க, சேர்ந்து குளிக்கிறோம்னு பரயாம்…” என்று நகரப்போக, அவன் கையைப் பிடித்தவள் “அடேய்… உங்க தங்கச்சி பிசாசு… என்னைக் கலாய்ச்சே கொன்னுடும். ப்ளீஸ் ப்ளீஸ்… நைட்டு கண்டிப்பா தரேன்… என் செல்லம்ல என் தங்கம்ல…” என்று அவன் தாடையைப் பிடித்துக் கெஞ்ச, அவளது அசைவுகளை எல்லாம் ரசித்துக் கொண்டான்.
“செரி ஓகே…” எனப் பெரிய மனது செய்து உடை மாற்றி விட்டு வெளியில் வந்தவனை அனகா, “ஏடத்தி எவிட?” எனக் கேட்க,
“அவள் உள்ள குளிச்சுக்கொண்டு இருக்கிறது…” என்றான் அசட்டையாக.
‘அடப்பாவி!’ வாயில் கை வைத்துக் கொண்ட அகமொழி, ‘ஐயோ ஐயோ’ என சுவரில் முட்டிக்கொண்டாள்.
“எந்தா இது… நீ இப்ப தான் பாத்ரூம்ல இருந்து வந்த. ஞாங்ஙள் வந்தப்ப ஏடத்தி உள்ள போன மாதிரி இல்லையே?” அனகா புரியாமல் விழிக்க, விஷயம் புரிந்த அன்விதா தான் பேந்த பேந்த விழித்தாள்.
“அனு வா…” என அவளை பிடித்து இழுக்க, “நில்லு ஏடத்தி… இவன் தான் பொய் பரயுன்னு! அகா… ஏடத்தி…” என அழைக்க, ‘பைத்தியக்காரனுக்கு கூட பொறந்த பைத்தியக்காரச்சி…’ என அனகாவை மனதினுள் திட்டித் தீர்த்தாள் அகமொழி.
அர்ஜித்தோ மனையாளின் மைண்ட்வாய்ஸ் புரிந்தவன் போல, “அவள் உள்ள ஈரத்துல நின்னுட்டு இருக்கா. நீங்ஙள் போயா தான் ட்ரெஸ் சேஞ்ச் செய்யான் பட்டூ…(செய்ய முடியும்)” எனப் புளி போட்டு விளக்க, அன்விதாவோ அங்கு நிற்க சங்கடம் கொண்டு, அனகாவை தரதரவென இழுத்துப்போக அதன்பிறகே அனகாவிற்கு விஷயம் புரிந்தது.
“ஒரு சிங்கிள வச்சுட்டு இவன் பண்ற அட்டூழியம் தாங்க முடியல ஏடத்தி…” எனப் போலி கண்ணீர் வடித்தவளைக் கண்டு முறுவலித்தாள் அன்விதா.
அவர்கள் சென்றது தெரிந்ததும், குளியலறையில் இருந்து ஈரத்துடனே வெளியில் வந்த அகமொழி, “டேய்ய்ய்ய்… உன்னை…” என அடிக்கத் துரத்த, அதுவரை வெகு கடினப்பட்டு சிரிப்பை அடக்கியவன், “பௌ பௌ” எனச் சத்தமாக சிரித்தபடி, அவளிடம் இருந்து தப்பித்து ஓடினான். தப்பிக்க இயலா, நேசச் சிக்கலில் இருவரும் இணைந்து கொண்டதை ரசித்தபடியே!
அகன் வசமாவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
79
+1
2
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அனு ப்ரணீ சேருவாங்கதானேடா
இருவரின் காதலும் அழகு 💕💞💛💜💖