Loading

முத்தமிட்டு தனது கோபத்தீக்கு அணையிட்டவளிடம் கொஞ்சம் கொஞ்சமாய் மனம் கிறங்கிப் போயிற்று அர்ஜித் அகனுக்கு.

ஆகினும் தனது மனையாளை இன்னொருவரை அடிக்க விட்டு, அதனைத் தட்டிக் கேட்காமல் இருப்பது நல்ல ஆண்மகனுக்கு அழகில்லையே!

அர்ஜித் அகனாலும் அமைதியாக இருக்க இயலவில்லை. இருப்பினும், விஷ்ணுவிடம் நியாயம் கேட்க சென்றால், அவன் இவ்விஷயத்தை இன்னுமே கீறி விடுவான். ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருப்பவளுக்கு அது இன்னுமே வருத்தம் கொடுக்கும் என்ற நிதர்சனம் புரிந்ததால் தன்னை அடக்கிக் கொள்ள முயன்றவனுக்கு முழு கோபமும் மறையவில்லை.

அவளைக் கிளம்பச் சொன்னவன், தந்தையிடம் அகமொழியைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டுப் பின் வேலை முடிந்ததும் தாங்களே அவள் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டான்.

நடக்கவிருந்த அசம்பாவிதத்தை எண்ணி பெரியவர்களுக்கும் வருத்தம் தான்.

யாருக்கு ஆதரவாகப் பேசுவது என்று புரியாது, கேசவ நாயரும் “சம்பந்திக்காருடே வீட்டில் இருந்து லஞ்சிற்கு வர பரஞ்சிட்டோள்ளோ தம்பி!” என்றார்.

அவர்கள் வந்தால் விஷ்ணு மீண்டும் பிரச்சினையை ஆரம்பிக்கும் அபாயம் அதிகம் இருந்தது. அகமொழியின் கன்னம் வேறு கன்றிப் போய் இருந்தது. அதனைக் கண்டால் அவளது பெற்றோருக்கும் வருத்தம் தானே.

விஷ்ணுவும் வம்பிழுக்கும் விதமாக வேலையைப் பார்க்கச் செல்லாமல் அமையாவை பள்ளிக்கும் அனுப்பாமல் வீட்டினுள்ளேயே கோபத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்.

பின் சுஜாதாவே “சாரம் இல்லா (பரவாயில்ல) அச்சா! இவர் எந்தெங்கிலும் வொர்க் இருந்தா போகட்டும். (இவங்களுக்கு வேலை இருந்தா போகட்டும்) சம்பந்திக்காரங்க வந்துட்டு போகட்டே…” எனக்கூற,

கல்யாணி “அவர் மோள் வீட்டில் இல்லாதே அவர் மாத்ரம் வந்தா அவர்க்கும் சங்கடமாய் இரிக்கிலா சுஜாதா? (அவரது மகள் வீட்டில் இல்லாதபோது வந்தா அவங்களுக்கும் சங்கடமா இருக்காதா சுஜாதா) லன்ச் டைமில் வந்துட்டு போடா ரெண்டு பேரும்…” என்றார் பேரனிடம்.

“வேலை நேரத்தில வரான் பற்றில்லா(வரமுடியாது)” அர்ஜித் திட்டவட்டமாக மறுத்து விட்டான். பின் தானே வசந்தியிடம் பேசிக்கொள்வதாக சுஜாதா கூற,

அவனை ஓரிரு நாள்களேனும் அகமொழி வீட்டில் தங்கவும் அறிவுறுத்தினார் கோபால கிருஷ்ணன்.

அர்ஜித்தும் தலையாட்டி விட்டு அறைக்குச் சென்றான்.

அகமொழியிடம் விவரம் கூற, அவளும் நிலையை உணர்ந்து “நான் அம்மாட்ட அலைய வேணாம்னு சொல்லிடுறேன் அகன். வேலை இருக்குன்னா புருஞ்சுப்பாங்க…” என்றவள் உடனே தாயிடமும் கூற, அவர்களும் “நீ வீட்ல இல்லாம நாங்க அங்க வந்து எப்படி இருக்குறது அகா. ஆனா உங்களை நாங்க கூப்பிட வர்றது தான முறை…” என்றார் தயக்கமாக.

“நாங்களே வந்துக்குறோம்னு சொல்றோம்ல… நாங்க என்ன சின்னப் பசங்களா கையைப் பிடிச்சு கூட்டிட்டுப் போக…” கன்னம் வேறு எரிந்ததில், அந்த எரிச்சலை தாயிடம் காட்டி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அர்ஜித்திற்கு இன்னும் தான் எரிச்சல் மண்டியது.

இந்த விஷ்ணு ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? திடீரென என்ன பேய் பிடித்து ஆட்டுகிறது என்ற கோபம் அவனிடம்.

பின் ஆயின்மெண்ட்டை எடுத்து வந்து அவள் கன்னத்தை அழுத்தமாகத் திருப்பியவன், காயத்திற்கு மருந்திட்டான்.

விஷ்ணுவின் கைரேகை பதியும் அளவு அறைந்திருக்கிறான். அதனைப் பார்க்க பார்க்க சினமே பெருகியது அவனுக்கு.

அவனது வெப்ப மூச்சு உணர அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இன்னுமா நீ கோபமா இருக்க?” எனக் கேட்டதில், அவன் தீயாக முறைத்தான்.

“கொஞ்ச நேரத்துல சிவப்பு மாறிடும் அகன்…”

அவன் எதுவும் பேசாது, வீட்டாரிடம் சொல்லி விட்டு அவளையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றான்.

அன்விதாவிற்கு மகளை எண்ணி கலக்கம் எழுந்தாலும், அதைத் தாண்டி விஷ்ணு அகமொழியின் மீது வீசிய வார்த்தைகள் மனதை வாட்டியது.

தான் கிளம்பும்போது அவள் வெளியில் வராது போனதில் வருத்தம் மேலிட, அமைதியாகவே கோவிலை அடைந்தாள் அகமொழி.

இருவரிடமும் பேச்சு வார்த்தை அறவே இல்லை. தாடை இறுகி, சிடுசிடுவென இருந்தவனின் கோபம் இன்னுமும் குறையவில்லை எனப் புரிந்தாலும், அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

இருவரும் தத்தம் வேலைக்கு சென்று விட, கிளாம்பிங்கிற்கு சென்றதும் தான் அகமொழிக்கு மூச்சே விட முடிந்தது.

தலையில் கை வைத்து அமர்ந்து விட்டவளுக்கு இந்த சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கவே வேண்டாமென்ற வருத்தம் அதிகம் தாக்கியது.

அதை விட, அர்ஜித் அகனின் சீறல் நிரம்பிய வதனம் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

சிறிது நேரம் கழித்து மனம் கேளாமல், “அகன்…” என அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்ப, ரிசார்ட்டில் கடுங்கோபத்தில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த அர்ஜித்திற்கும் கோபத்தைக் குறைக்கும் வழி தெரியவில்லை.

விஷ்ணுவிடம் சண்டை பிடிக்காமல் வந்ததில் அவனுக்கே அவன் மீது கோபம்.

பின் கொஞ்ச கொஞ்சமாக மெல்லத் தன்னை நிதானப்படுத்திக்கொண்டவனுக்கு, அகமொழியின் வாடிய வதனம் கண்முன் தோன்ற… அவனும் அந்நேரம் அலைபேசியை எடுத்து “மொழி” என அனுப்பி இருந்தான்.

இரண்டு குறுஞ்செய்திகளும் ஒன்றாகவே இருவரையும் அடைய, இருவரின் புருவங்களும் மெல்ல உயர்ந்தது.

“சொல்லு…” என அவளும்,

“பரயு…” என அவனும் மீண்டும் ஒன்றாகவே அனுப்ப, இம்முறை ஆடவனின் இதழ்கள் மெல்ல இறுக்கம் தளர்ந்தது.

அகமொழிக்கும் கூடத் தான்.

“சேம் பின்ச்! சாக்லேட் குடு…” அவள் அனுப்பியதைக் கண்டு முறுவல் பிறந்தது அவனுக்கு.

“சாக்கலேட் வாங்கித் தரணோ? இல்ல ஊட்டி விடணோ?”

அக்கேள்வியில் தானாய் சிலிர்த்த தேகத்தினை அமைதிப்படுத்த தெரியாது, “ஆசைய பாரு…” என உதட்டைச் சிலுக்கும் எமோஜியை அனுப்பி வைத்தாள்.

“ஆசை தன்னே!”

அர்த்தம் பொதிந்த வார்த்தைக்குள் சிக்கித் திணறியவள், “கோபம் போய்டுச்சா?” என்றாள்.

“ஸ்டில்… கன்னம் எரிச்சல் குறைஞ்சோ?” கேள்வியுடன் கோப ஸ்மைலியும் வந்திட,

“ஆயின்மென்ட் போடவும் எரிச்சல் இல்ல. சிவப்பு கூட நல்லா குறைஞ்சுடுச்சு அகன்… கூல்!” என அவனை அமைதிபடுத்தினாள்.

“ம்ம்” என்ற பதில் மட்டும் வர, அவனை இன்னுமே அமைதிப்படுத்தும் பொருட்டு,

“ஒரு பல்லி என் வாழ்க்கைல விளையாடும்னு யாரும் சத்தியம் பண்ணி சொல்லிருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன். பொதுவா நான் தான் கோபம் வந்தா யாரையாச்சும் அடிப்பேன். இன்னைக்கு எனக்கே அடி வாங்கி குடுத்துருக்கு” அவள் இயல்பாக பேச முயல்வதை உணர்ந்த அர்ஜித்தும்,

“நீயல்லோ நான்-வெஜ் சோதிச்சது… அதான் எக்-பல்லி கறி ரெடி ஆயிருக்கு! நீ கொஞ்சம் டேஸ்ட் செய்திருக்கலாம்… பாவம் பல்லியை டிஸப்பாயிண்ட் செய்திட்ட காந்தாரி!” என்றான் கிண்டலாக.

“அடேய்…”

வாயைப் பொத்தி சிரிக்கும் ஸ்மைலி அவனிடம் இருந்து வர,

“கருமம் கருமம்… இனி முட்டை சாப்பிடவே தோணாது எனக்கு. அந்தப் பல்லியை குருமால பார்த்தது இருந்து குமட்டல் பீல்… உவேக்” என குறுஞ்செய்தி அனுப்பிட, அதில் இதழ் மடித்து புன்னகைத்தவன்,

“எடி… இன்னைக்கும் வாமிட் செய்து வைக்காதே! மீ பாவம்!” என்றான் குறும்பாக.

அதில் சட்டென சிவப்பு பரவ, “உனக்கு இந்த ஜென்மத்துல பர்ஸ்ட் நைட் கிடையாதுடா மிஸ்டர் மலையாளி” என வாரினாள்.

“நீ வாமிட் செய்தாலும் பரவாயில்லாடி… ஞான் அட்ஜஸ்ட் செய்துகொள்ளாம்!” அவளைச் சீண்டினான்.

“எனக்கு வேலை வந்துருச்சு. பை!” என அவசரமாக அனுப்பியவளுக்கு கைகள் காரணமின்றி நடுங்கியது.

“பயந்நோடி?”(பயந்துட்டியா?) அவனின் நக்கல் கேள்வியில்,

“நான் ஏன்டா பயப்படணும்?” எனக் கத்தியை அனுப்பினாள்.

“பயம் அல்லே… அப்போ செரி. நைட்டுக்குப் பார்க்கலாம் நின்டெ வீரத்தை”

அவளோ கீழுதட்டைக் கடித்து அடிவயிற்றில் எழுந்த திடீர் பரவசத்தை அடக்கினாள்.

அவள் டைப் செய்ய வருவதும் பின் அழித்து விடுவதுமாக இருந்ததை உணர்ந்தவனுக்கு சிரிப்பு பீறிட்டது.

பின், “உன்டே ஹேண்ட்பேக்கில் ஆயின்மென்ட் வெச்சிருக்கான். இன்னொரு தடவை இடூ…” என்றிட,

“ம்ம்” என்றாள்.

அவளது கைப்பையில் இருந்த ஆயின்மெண்ட்டை எடுத்தவள், ‘என் ஹேண்ட்பேக்குள்ள எனக்கே தெரியாம எதையாச்சும் போட்டு வச்சுடுறான் பைத்தியக்காரன்’ என முணுமுணுத்தாலும் மறக்காது மருந்திட்டுக் கொண்டாள்.

மாலை நேரம் தாண்டும்போதே வசந்தி மகளுக்கு அழைத்தார்.

“அகா… டின்னர்கு ரெண்டு பேரும் வந்துடுவீங்க தான?”

“வந்துடுவோம்மா!”

“மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. நான் சமைச்சு வைக்கிறேன்” என்றிட, மணியைப் பார்த்தாள். ஏழைத் தொட்டது.

“இல்லமா… அவருக்கு கேரளா டிஷ் தான் பிடிக்கும். நானே வந்து செய்றேன்” என்றவள், தான் வீட்டிற்கு செல்வதாக அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அவளை பிக்கப் செய்ய தினமும் அவன் அனுப்பும் காரிலேயே ஏறிக்கொண்டாள்.

அன்று கார் விபத்தை பற்றி அவள் கூறிய பிறகு, மறுநாளே பழைய ஓட்டுனரை மாற்றி இருந்தான்.

கோவிலுக்குச் செல்வதால் புடவையை அணிந்திருந்தவள், அவன் எட்டு முப்பது மணிக்கெல்லாம் வருவதாகக் கூறியதில், உடை மாற்ற நேரமின்றி சமையலறையில் புகுந்தாள்.

சூடான கோழிக்கறி கிரேவியுடன், அரிசி மாவில் கொழுக்கட்டை வடிவில் செய்திருந்த கேரளாவின் பிரபலமான ‘பிடி’யும் செய்தாள். கூடவே பீன்ஸ் தோரன், பீப் சுக்காவும் மடமடவென செய்தாள். அவர்கள் வீட்டில் ஒரு வேளைக்கே நான்கைந்து வகையான உணவுகள் இருக்கும்.

வசந்தி தான், “இதெல்லாம் நீ சாப்டுவியா. சிக்கன் கிரேவி, பீப் கூட ஓகே… மத்தது?” எனக் கேட்க,

“நான் தோசை ஊத்தி கிரேவி தொட்டுக்குறேன்” என்றாள்.

அந்நேரம், அர்ஜித் அகனின் கார் சத்தம் கேட்க, பாஸ்கர் வாசலில் வந்து வரவேற்றார்.

“வாங்க தம்பி…” வசந்தியும் புன்னகையுடன் அழைத்து விட்டு, “மாப்பிள்ளைய ரூமுக்கு கூட்டிட்டுப் போ அகா” என்றார்.

அவனோ அவளது உள்ளே நுழைந்ததுமே அவள் கன்னத்தை தான் ஆராய்ந்தான். சிவந்த கன்னம் நன்றாகவே மாறி இருந்ததை கண்டு நிம்மதி பிறந்தது.

அவனது பார்வை உறுத்த, தன் அறைக்கு அழைத்துச் சென்றவள், “அது வாஷ்ரூம்” எனக் கைகாட்டிவிட்டு, “உனக்கு சேஞ்ச் பண்ண ட்ரெஸ் எடுத்துட்டு வந்தியா?” என வினவினாள்.

“ம்ம்ம்” எனத் தனது மடிக்கணினி பையில் இருந்தே இரவு உடையை எடுத்தான்.

அதில் இருந்த இன்னொரு செட் துணியையும் வெளியில் எடுத்து வைத்தவள், “இதுக்குள்ள வச்சுருக்கியே கசங்கிடாது. என் பேக்ல வச்சுருக்கலாம்ல” என்று திட்டியபடி அதை எடுத்து கப்போர்டில் வைத்தாள்.

அவனோ குறும்பாக, “எனக்கு தெரியாத இடத்தில் டிரஸ் மாற்றான் பிடிச்சதில்லா அல்லோ காந்தாரி!(தெரியாத இடத்தில ட்ரெஸ் மாத்த பிடிக்காது)” என அவளைப் போலவே கூற,

“இவரு பெரிய மன்மதரு. இவரை வீடியோ எடுக்க தான் நாங்க கைல கேமராவோட அலையுறோம். ஓவரா பண்ணாதடா” எனும்போதே வசந்தி அழைக்கும் சத்தம் கேட்க, முந்தானையை இடுப்பில் சொருகியபடி வெளியில் சென்றாள்.

தானாய் அவன் விழிகளும் அவளது இடையசைவிற்கு தாவியது.

டீ- ஷர்ட், டிராக்கிற்கு மாறியவன் வெளியில் வந்து எட்டிப்பார்க்க, “உக்காருங்க தம்பி… சாப்பிடலாம். லேட் ஆகிடுச்சு…” என்றார்.

“நீங்க, அச்சன் எல்லாரும் சாப்பிட்டாயோ?” அக்கேள்விக்கு அகமொழியே,

“ரெண்டு பேரும் ஏழு மணிக்கே சாப்பிட்டு எட்டு மணிக்கு தூங்குற கேஸ். உங்களுக்காக தான் வெயிட்டிங்” என்றதும் அவன் தன்னருகில் வந்து அமர்ந்த மாமனாரை கண்டிப்பாக பார்த்தான்.

“எந்தா அச்சா, எனக்காக வெயிட் செய்யுன்னு? நீங்க உங்க ரொட்டீனை சேஞ்ச் செய்யாதீங்க!” உரிமையாகவே அதட்டியவனை கண்டு பாஸ்கர் விழித்தார்.

“நான் சொல்லிட்டேன். ரெண்டு பேரும் கேட்கல…” அகமொழி சொல்லும்போதே, “சும்மா இரு அகா… உங்களை நாங்களே வந்து கூப்பிட்டு இருக்கணும். இப்ப நீங்க முதல் தடவை வீட்டுக்கு வரும்போதும் நாங்க போய் தூங்க முடியுமா தம்பி…” என்று வசந்தி குறைபட்டார்.

அவனுக்கான உணவு வகைகளை எடுத்து வைத்ததில் புருவம் சுருக்கியவன், “எந்தா இது… ஒரே கேரளா டிஷ்ஷாயி இரிக்குன்னு? ஞான் ஒரு தமிழியன் டிஷ் சாப்பிடலாம்னு வந்தேனே!” என்றதும் இப்போது விழிக்கும் முறை வசந்தியுடையது ஆனது.

“உங்களுக்கு இது தான் பிடிக்கும்னு அகா தான் செஞ்சா மாப்பிள்ளை” என்றதும் ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், அவளைக் கடிந்தான்.

“இப்போதானே நீயும் வந்திருக்கும்… எதுக்காக இத்ரயும் செய்தது?(எதுக்காக இத்தனை செய்த)”

“நீங்க இப்படி தான சாப்பிடுவீங்க…” என்றவள் அவன் புறம் சரிந்து, “நீ சாப்பாடு சேராம நைட்டு வாமிட் பண்ணுனா… என்ன பண்றது?” என அவனைப் போலவே வாரினாள்.

“ஆமா… கஷ்டம்!” என அழுத்திக்கூறியதில், நாக்கைத் துருக்கியவள் வசந்தி கொண்டு வந்த லேசான முறுகல் தோசையில் ஐக்கியமாகி விட்டாள்.

பாஸ்கர் உடனே உண்டு விட்டு எழுந்து விட, தாயின் சமையலை மிஸ் செய்ததால், ஏழெட்டு தாண்டி கணக்கின்றி சென்றது.

“போதும்மா…” அரை மனதுடன் கூறியவளிடம், “இரு முட்டை தோசை ஊத்திட்டு வரேன்…” என்ற வசந்தி “உங்களுக்கும் தோசை ஊத்தட்டா தம்பி” எனக் கேட்க,

“வேண்டாம் அம்மே… மாவொக்கே இவள் தன்னே காலி செய்திருப்பாளே!(மாவை இவளே காலி செய்திருப்பாளே)” என்றான் கிண்டலாக.

“கண்ணு வைக்காதீங்க மிஸ்டர் மலையாளி!”

“கொஞ்சம் காய்கறியும் சாப்பிடு காந்தாரி… நினக்கு வெஜ்ஜே பிடிச்சதில்லாயோ?” எனக் கேட்க, வசந்தி பதில் அளித்தார்.

“காய் சாப்பிடுவா. ஆனா அதை சாப்புடுறதுக்கு முன்னாடியே மருந்து மாதிரி சாப்பிடுவா. கடைசியா சாப்பிட்டா டேஸ்ட் போய்டுமாம். ருசிக்கு சாப்புடுறவ…” என்று விட்டு அடுக்களைக்கு செல்ல, அசடு வழிந்தாள் அகமொழி.

பீன்ஸை தோரனை அவளுக்கு வைத்தவன், “பரவாயில்லா, மருந்து போலே கொஞ்சம் சாப்பிடு…” என்று கொடுக்க, “இப்பவா?” என்றாள் பாவமாக.

“இதை சாப்பிட்டு முட்டத்தோசை சாப்பிடு! நின்டெ டேஸ்ட் ஒன்னும் மாறான் போன்னதில்லா… சாப்பிடணும்!” என்று கண்டிப்பாக கூறியதில், ‘லபக் லபக்’ என உண்டு விட்டு நீரை குடித்தாள்.

அவளைக் கண்டு பொங்கிய சிரிப்பை அடக்கியவன், “டேஸ்டிற்காக சாப்பிடலாம்… தப்பில்லை. அதுக்கு முன்னாடி காய் சாப்பிட்டுட்டு எந்தா வேணெங்ஙிலும் சாப்பிடு, ஓகேவா?” என்று கண்டிப்பாய் கூற, “ஓகே” என்று அரைமனதாக சம்மதித்தாள்.

அதற்குள் அவளுக்குப் பிரியமான ஹாஃப் பாயில் தோசை வந்ததில் அதில் மூழ்கி விட,

“இதெந்துடி தோச மேல ஹாஃப் பாயில்?” என்றான் விசித்திரமாக.

“நல்லாருக்கும் ட்ரை பண்றீங்களா?” என அவள் தோசையைக் கொடுக்க, அவன் “நீ சாப்பிடு” என்று மறுத்தான்.

“பரவாயில்ல நீங்க ட்ரை பண்ணுங்க. நான் வேற ஊத்த சொல்றேன்” என்று மஞ்சள்கரு உடையாமல் அவனுக்கு வைத்தாள்.

அதனை எப்படி உண்ண வேண்டுமென்று அவனுக்கு விளக்கம் வேறு.

“முதல்ல சுத்தி இருக்குற தோசையை எல்லாம் சாப்பிடணும். அப்பறம் இந்த கிரேவியை லைட்டா மஞ்சள் கரு மேல போட்டு கொஞ்சம் சிக்கன் வச்சு, அப்படியே எடுத்து வாயில போடணும்…” என்று எடுத்து கொடுக்க, அவனும் அரைமனதுடன் தான் உண்டான்.

ஆனால் அந்த ருசி அவனுக்கும் பிடித்து விட, “நல்லாருக்கே!” என்றதில்,

“இதோட ஃபினிஷ் பண்ணா தான் எனக்கு தோசை சாப்பிட்ட ஃபீலே வரும்… சட்டினிக்கும் இந்த மாதிரி சாப்டா சூப்பரா இருக்கும்” என்றாள் ரசித்து.

“ம்ம்ம்… இப்படி சாப்பிட்டும் எப்படிடி ஒல்லியா இருக்க?” அவன் கிண்டலாக கேட்டான்.

அவளுக்கும் ஒரு முட்டை தோசையுடன் வந்த வசந்தி, “அந்த அளவு வேலையும் பார்ப்பா தம்பி. இருக்குற வேலையை எல்லாம் இழுத்து போட்டு செய்வா. இவ்ளோ அலைஞ்சுட்டு வந்தும், நைட்டு ஃபுல்லா வீட்டு வேலை பாருன்னு சொன்னாலும் பார்த்துடுவா” மகளை பெருமையாகக் கூற, அவளோ அந்தப் பெருமையை கண்டுகொள்ளாமல் முட்டை தோசையில் கவனமானதில் தலையாட்டிக் புன்னகைத்துக் கொண்டான் அர்ஜித் அகன்.

இரவு உணவு முடித்ததும், பாஸ்கரும் வசந்தியும் படுக்கச் செல்ல, இருவரும் பார்க்கிங் ஏரியாவில் சிறிது நேரம் நடந்தனர்.

“இது ஓன் ஹவுஸானோ?” அகன் அவள் கொண்டு வந்த சூடான சீரகத் தண்ணீரைக் குடித்தபடி கேட்டான்.

“ம்ம்ஹும். ரெண்ட் தான்.”

“உன்டே நேட்டிவ் ஏதா?”

“எனக்கு நேட்டிவ் போடிநாயக்கனுர் பக்கம். அப்பா அங்க தான் கவர்மெண்ட் எம்பளாயியா இருந்தாரு. அம்மாவும் அங்க கவர்மென்ட் ஸ்கூல் டீச்சர்.”

“ரெண்டு பேரும் கவர்மெண்ட் போஸ்ட்டில் இருந்தும் நீ ஏன் ட்ரை செய்ததில்லா?”

“நான் காலேஜ் முடிக்கும்போதே ரெண்டு பேருமே ரிட்டையர் ஆகிட்டாங்க. அப்பா வேலைல இருக்கும்போது தான் அடிமாலி பக்கம் இடம் வாங்கி போட்டாங்க. அதை விக்கலாம்னு தான் நான் காலேஜ் முடிச்சதும் இங்க கூட்டிட்டு வந்து காட்டுனாங்க. அதை பார்த்ததும் இங்க தான் பிசினஸ் பண்ண போறேன்னு, ரெண்டு பேரையும் கடத்தியாச்சு.”

“பட்சே மலையாளம் அறியுமோ?”

“ம்ம் என் ப்ரெண்ட்ஸ் சிலர் மலையாளி தான். பேசுனா புரியும். ஆனா டக்குன்னு பேச வராது. உனக்கு தமிழ் பேச வராதா. ப்ரோ தமிழ்ல தான பேசுறாரு” என பிரணீத்தை குறித்து கேட்டாள்.

“ம்ம் எனக்கும் நல்லாயி தன்னே புரியும். ஆனா சம்சாரிச்சான் வராது…”

மேலும் சில நிமிடங்கள் உரையாடி விட்டு, “ரொம்ப குளுருது உள்ள போகலாம்” என்று அவனிடம் கிளாஸை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவள், அறைக்கு வந்ததும், மாற்றுடை எடுத்தாள்.

அவளையும் உடையையும் ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன், “இது எதுக்கு?” என வினவ,

“சேஞ்ச் பண்ண. தூங்கும்போது சேரி கம்ஃபர்டபிளா இருக்காது…” அவள் கூறியதில்,

“எனிக்கு சேரி தான் கம்ஃபர்ட்டபிள்!” என்றான் ஆழ்குரலில்.

அதில் திகைத்து நிமிர்ந்தவள் அவனது விழிமொழி கண்டு தடதடத்த இதயத்தை நிறுத்தும் வழி தெரியாது நிற்க, அவளை நெருங்கினான் அர்ஜித் அகன்.

அவளது கால்கள் தானாய் பின்னோக்கி நகர்ந்திட, இறுதியில் சுவரில் முட்டி நின்றாள்.

ஒற்றை விரலால் நெற்றி மத்தி தொடங்கி கழுத்து வளைவு வரை கோடிழுத்தவன், விரல் தொட்ட இடங்களுக்கு மென்முத்தங்களைக் கொடுத்துக்கொண்டே சென்றான்.

அகமொழிக்கு எதையும் தடுக்கவும் இயலவில்லை. ஒவ்வொரு முத்தத்திலும் அவள் மேனி அதிரும் உணர்வு.

அவனது நெருக்கத்தை மனம் விரும்புகிறதா என்ற நிலை புரியவில்லை என்றாலும் கூட, தேகம் விரும்பிச் சிலிர்த்தது.

பல பெண்களுடன் சுற்றித் திரிந்தவனுடன் எப்படி படுக்கையைப் பகிர இயலும்? என திருமணத்தன்று அருவருத்த மனம், வசமாய் அதனை மறந்து போனது. தொட்டதும் தளர்ந்து விடும் தேகத்தின் மொழிகளில் அவனின் கிறக்கமும் அதிகரிக்கத் தொடங்கியது.

அதற்குள் அவன் இதழ் முத்தத்தில் புதையத் தொடங்கிட, ஆண்மகனின் நீண்ட விரல்களும் அவள் இடையில் பதிந்து நெருக்கம் கொண்டது.

அகமொழியின் கால்கள் நடுங்கி, தனது பிடிமானதை இழக்க முற்பட, அவனையே இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

அவளைத் தன்னுடனே தாங்கிக் கொண்ட அகன், அவளைக் கையில் அள்ளிக் கட்டிலில் இட்டு, வியர்வை கலந்து வெண்ணிலா பெர்பியூமின் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தான்.

போதை தலைக்கேறியது. இவ்வாசத்தை வெறுத்து முதல் சந்திப்பிலேயே உடை மாற்றச் சென்றவன் தான். தற்போது இவ்வாசமே சுவாசமாய்!

“என்னை சகிச்சுக்க ஓகேவா மொழி…” என்றான் மோகத்துடன்.

சகித்துக் கொள்வதா? மொத்தமாக அவன் தீண்டலை சுகிக்கும் மனதினை எப்படி அணை போட்டு தடுப்பாள்.

முயன்று மேனியில் இறுக்கம் காட்ட முயன்றாள்.

ஆனால், அவனோ அவள் பாதத்தின் கட்டை விரலில் ஆரம்பித்த முத்தத்தில் மீண்டும் மொத்தமும் மறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள் அகமொழி.

ஏனிப்படி மென்மையில் தன்னை சிதைக்கிறான்? வன்முத்தங்களில் தனது வெறுப்பைக் காட்டிக்கொள்ளலாமே! உடைகள் ஒவ்வொன்றாய் கலைக்கப்படும்போதும், துடித்து தவித்தவளை அடக்கும் வித்தை தெரிந்திருந்தான்.

அவனின் ஒவ்வொரு செயலிலும் ஈர்க்கப்பட்டு தூண்டப்பட்ட உணர்வுகளிடம் தன்னையே தொலைத்து விட்டவளின் மனமும் அவனின் நெருக்கத்தை ரசிக்கத் தொடங்கிய நேரம், அவனும் அவளுள் முற்று முழுதாய் புதைய முற்பட்டு, தாம்பத்தியத்தை தொடங்கும் போதே சுருக்கென வலி ஒன்று தாக்கியது அகமொழிக்கு.

“ஸ்ஸ்ஸ்…” சத்தமாக கத்தியவள், முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொள்ள, அதில் நிதானித்தவன் “பெயின் ஆனோ?” என்றான் மென்மையாக.

“ம்ம்ம்ம்ம்…” தலையை ஆட்டியவளுக்கு வலி தாள இயலவில்லை.

அவன் உடனே அவளிடம் இருந்து எழுந்து கொள்ள, அவ்ளோ அவனுக்கு முகுது காட்டி திரும்பி உடலைச் சுருக்கி வயிற்றைப் பிடித்து கொண்டாள்.

முகமும் சுருங்கிப் போயிற்று.

“பெயின் ஆனோ மொழி?” மீண்டும் அவள் காது வளைவில் வந்து கேட்டதில், அவளும் தலையாட்டினாள்.

“கன்டினியூ செய்ய வேண்டாம் அல்லே?” சிறு நக்கல் மிதந்ததோ என்ற சந்தேகம் வந்தாலும்,

“வேணாம் அகன் வலிக்குது ரொம்ப…” என்றாள்.

“ஓ… ஏதோ ஒரே நாள் நைட்டில் நமக்குள்ளே எல்லாம் கழிஞ்சுன்னு (முடிஞ்சுதுன்னு) பரஞ்சல்லோ. இப்போ எங்கனே கழிஞ்சிருக்கும்… ஞான் நின்னே ரேப் செய்யாத வரை!” அடக்கப்பட்ட கோபத்துடன் குத்திக் காட்டினான்.

அதில் இறுகிப் போனவள், “உனக்கு ரேப் தான் பண்ணனும்னா பண்ணிக்கோ. ஐ டோன்ட் கேர்!” என்று வார்த்தைகளைக் கடித்து துப்ப, “தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன்!” என வெப்ப மூச்சில் அனலடிக்க உடையை மாற்றிக்கொண்டு வெளியில் சென்றான்.

அவளுக்கோ ஏனென்று அறியாத திடீர் நீர்த்துளி விழிகளில்.

அவன் தொடராததால் வலி கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தாலும், அடிவயிற்றில் சொல்லொணா உணர்வு.

‘ரேப் பண்ணனும்னு தான கல்யாணம் பண்ணுன. பண்ணிட்டு போ! உன்னை யாரு என்னவோ லவ் பண்ணி கல்யாணம் பண்ணுன மாதிரி லவ் மேக் பண்ண சொன்னது?’ மனதினுள் அவனைக் குத்தி கிளறியவளுக்கு, ஒரு பக்க விழிகளில் கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது.

அதனை அழுந்தத் துடைத்துக் கொண்டவள் இன்னும் வயிற்றை பிடித்தபடியே படுத்திருந்தாள்.

கதவைத் திறந்து கொண்டு அவன் வரும் அரவம் கேட்க, கண்ணை இறுக்கி மூடினாள்.

அவனோ அவளை நேராய் படுக்க வைப்பது உணர்ந்து கண்ணைத் திறவாதவளுக்கு மேனி இறுகியது.

போர்வையை இறுக்கப் பற்றிக்கொண்டாள். அவன் தேவையை முடித்துக்கொள்ளட்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளிடம்!

ஆனால் அடிவயிற்றில் சூடாக ஏதோ பட, கண்ணை விழித்துப் பார்த்தவள் திகைத்தாள்.

ஒரு சட்டியில் சுடுநீர் இருக்க, துணி கொண்டு அவள் அடிவயிற்றிலும் இடுப்பிலும் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“என்… என்ன பண்ற?” நா குழறியது அவளுக்கு.

அவளை விழி நிமிர்த்தி பார்த்தவன், “ஹீட் கம்ப்ரெஷன் கொடுத்தா, மசில் லூஸாயி பெயின் குறையும்” என்றவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு, “ஹாட் பேக் இல்லே?” என வினவினான்.

அர்ஜித் அகனையே கண்ணெடுக்காது பார்த்திருந்தவள், “அம்மா வச்சிருப்பாங்க. ஆனா அவங்க ரூம்ல இருக்கும்” எனத் தயக்கமாக கூற, “செரி இதுவே மதி…(போதும்)” என்று சிறிது நேரம் ஒத்தடம் கொடுத்தான்.

“இப்ப ஓகே தான்!” அவள் கூறியதும்,

அதனை ஓரமாக வைத்தவன், அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட, அகமொழிக்கு உறக்கமே பறிபோன நிலை.

ஒத்தடம் கொடுத்து விட்டபிறகும் விட்டதைத் தொடர்வான் என்றே எண்ணினாள். அவள் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவன் அவளின் மனம் கவர்ந்தவனென்ற உண்மை எப்போது உறைக்குமோ?

அகன் வசமாவாள்(வான்)
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 61

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
61
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அகன் வசமாவாள் (வான்) – ரெண்டு பேரும் வசமாகிட்டாங்க தான்… அகன் மனசுல அவள் மேல் வேற ஏதோ கோபம் இருக்கு.. காதலும் கோபமும் கலந்து திண்டாடுறான்..💖💜💛💕💞