Loading

சாதுர்யா கிளம்பிய மறுநாள், ரங்கனுக்கு பத்தாம் 

வகுப்புக்கான வகுப்புகள் ஆரம்பம் ஆகிவிட்டது. காலை எது மாலை எது என்று தெரியாத அளவிற்கு ரங்கன் ஓடிக்கொண்டிருந்தான். அவனின் அப்பா தீர்மானமாகச் சொல்லிவிட்டார்,

‘எனக்கும் வயசு ஆகுது ரங்கா… நீ படிப்பை முடித்து என்னோடு கூட வந்து, தொழில் கத்துக்கணும். நம்ம தொழில இப்ப இருக்கிற மாதிரி இன்னும் ஒரு மடங்கு பெருக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. உனக்கு தொழில் கத்து கொடுக்கணும்,உலகம் முழுக்க நம்ம தொழில பரப்பணும்.அதுதான் என்னுடைய ஆசை… இப்ப ஸ்பெயின்ல உங்க அத்தை, நம்ம தொழில பார்த்துக்கறாங்க. 

அவங்களால, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு குடும்பத்தை விட்டுட்டு போய் வர முடியல. அங்க எல்லாம் நம்ம தொழில் பரவணும். அதுக்கு உன்னை நீயே தயார் படுத்திக்கோ’.

தந்தையின் சொற்கள், ஒவ்வொரு நொடியும்

அவனது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே பொறுப்பானவன்தான். 

இப்பொழுது இன்னும் தன்னை செதுக்கி கொள்ள முனைந்தான் அந்த சிறுவன். எப்படியும் குடும்ப தொழில்  தான் அவன் வேலை என்றாகிவிட்டது. அது சம்பந்தமாக  தெரிந்து கொள்வதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்தையுடன் சென்று, அவர்களது தொழிலை புரிந்து கொள்ள முயற்சி செய்யலானான்.

நிலங்களுக்கு சென்று விவசாயம் பற்றிய அறிவை வளர்த்து கொள்ள முனைந்தான்.

சிறுவனுக்கு இவ்வளவு பெரிய பாரத்தை சுமத்தி இருப்பது தாமோதரன் -லட்சுமி தம்பதிக்கு  மிகவும் சுத்தமாக ஏன் என்று புரியவில்லை. ஆனால் மருமகனிடம் இதை நேரடியாக கேட்டுவிட முடியாது. ஆனால், ரங்கனின் அப்பா மனது முழுவதும் ‘தனது தம்பி குடும்பத்தை,குடும்ப தொழிலை விட்டுவிட்டு கேவலம் காதலித்து பின்னால் சென்று விட்டானே தன் மகனும் அதுபோல தவறுகள் செய்து விடக்கூடாது’. இந்த வயதிலேயே ரங்கனின் புத்தி புல் மேய  போகாமல், சீராக அவனது பொறுப்புகளை ஏற்க  பழக வேண்டும்’ என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள், நிகழ்வுகள் தான் அவனுடைய தீர்மானங்களை செயல்வடிவமாக மாற்றுகிறது.கற்று தருவதுடன் பிறருக்கு பாடம் சொல்லவும்

பயிற்றுவிக்கிறது.

ரங்கன் தலையில் படிக்கும் வயதில் இப்பொழுது வேண்டுமானால், இது பெரிய பாரமாக தெரியலாம். ஆனால் இன்னும் பல பெரிய குடும்பங்களில், குடும்பத் தொழிலில் சிறுவயதிலேயே பழக்குவது வழக்கத்தில் இருப்பதுதான். இது சரியா தவறா என்பதை விட, அதன் போக்கில் அந்த விஷயங்களை விட்டு விடுவது தான் சரி. ரங்கனும் நன்றாக படிப்பதும் மதிப்பெண்கள் வாங்குவதும் எவ்வளவு முக்கியமோ தொழிலை கற்றுக் கொள்வதும் அவ்வளவு முக்கியம் என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறான். பருவ வயதிற்கு உரிய எந்த ஆசைகளும் இதுவரையும் அவனது மனதில் பதியவில்லை. அவன் அப்பா விரும்புவது இதைத்தான்.

காலையும் மாலையும் பத்தாம்வகுப்புக்காக சிறப்பு வகுப்புகளுக்கு செல்வதும், விடி காலையிலேயே எழுந்து படிக்க அமர்வதுமாக, ஒரு பக்கம் அவன் நேரம் அவனை விழுங்க, இன்னொரு பக்கம் அப்பாவுடன் கற்றுக்கொள்வது, அம்மாவிற்கு வீட்டு நிர்வாகத்தில் உதவி செய்வது என்ற மெனக்கெடல் அதிகமாக இருந்தது. ஒருவேளை அவனிடம்  பொறுமை குறைவு மட்டும் இருந்தால் நிச்சயம் வெடித்திருப்பான்.

ரேணுகாவுக்கு உள்ளூர வருத்தம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. 

ஆனால் ரேணுகாவின் மாமனார் மாமியாருக்கு தன் மகன், பேரனை பயிற்றுவிப்பது சரியே என்ற எண்ணம்.

 நடுவில் பத்து நாள் விடுப்புகாக தில்லியில் தன் வீட்டில் ரகளை செய்து ஸ்ரீரங்கம் செய்வேன் என்று வந்து சேர்ந்தாள் சாதுர்யா. ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் தோழன் தன்னை பார்ப்பதற்காக, முதல் நாள் சிறப்பு வகுப்புகள் முடிந்து இவளுடன் நேரம் செலவிட்டு விட்டு, அடுத்தநாள் வீடு காலையிலேயே கிளம்பி விட்டான் தன் வகுப்புகளுக்கு. 

அவனது நிலையை புரிந்து கொள்ளும் நிலையில் சிறுமி இல்லை. அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவன் சென்று விட்டதால்,  காலையில் தூங்கி விழித்து  கொண்டவள் ஒரே ஆர்ப்பாட்டம் தான். தாமோதரன் லக்ஷ்மியால் கண்டிப்பாய் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை.

ரங்கனுடன் விளையாடலாம், வெளியே சுற்றலாம் என்று ஆயிரம் கனவுகளுடன் வந்தவளுக்கு ரங்கன் பெரிய வகுப்பில் படிக்கிறான் என்பது சுத்தமாகப் புரிபடவில்லை.

மதியம் ரேணுவுக்கு அழைத்து, லட்சுமி அம்மாள் ‘ ரங்கனை வரச் சொல்லு ரேணு, என்று சாது செய்யும் அனைத்து ரகளைகளையும் மூச்சு விடாமல் சொல்லிவிட்டார்.’சரி, வர சொல்றேன் மா… இன்னும் அவன் க்ளாஸ் முடிஞ்சு வீட்டுக்கு வரல என்று சொல்லி வைத்து விட்டாள். ரங்கனும் இரவு வகுப்பு முடிந்து வருவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது. ரங்கன் வந்துவிடுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சாதுர்யாவுக்கோ, அழுது அழுது ஜுரமே வந்துவிட்டது. மறுநாள் காலை வகுப்புகளை முடித்துவிட்டு மதியதிற்கு மேல்தான் ரங்கன் வந்தான். சிறுமியை பார்த்தவனுக்கு மனது தாங்கவில்லை.  அவள் முகத்தை பார்த்து அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

ஒரு வழியாக அவளுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி ‘எனக்கு இந்த வருஷம் பெரிய கிளாஸ்  சாது, ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் போகாம இருக்க முடியாது, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா ‘ என்று அவளிடம் கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி விட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலை நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு  அன்றைய மாலைநேர வகுப்புகளுக்கு விரைந்தான் ரங்கன்.

சிறுமிக்கு எதுவும் புரியாவிடினும், ரங்கன் கண்கள் உதித்த நீர் தனக்காக தான் என்பதை மனதில் வைத்து சமாதானம் அடைந்தாள் சிறுமி.

விடுமுறை முடிந்து

சாதுர்யாவை தானே தில்லியில் கொண்டுபோய் விட்டுவிட்டார் தாமோதரன்.

அவரும் டில்லி சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது.

ரங்கன் -சாதுர்யா பள்ளி நாட்கள் அதன் போக்கில் விரைந்தன.

நிமிடம் போல் ஆறு மாதங்கள் ஓடி விட, முழு ஆண்டு பரீட்சை முடிந்து ரங்கனுக்கும்  பதினோரம் வகுப்பு சேர்க்கை ஆரம்பிக்க அவன் தொழிற்கணிதம் எடுத்துக் கொண்டான். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவன் அப்பாவின் ஆசைக்கு இணங்க குடும்பத் தொழிலிலேயே நுழைவது எனும் எண்ணம்   அவன் மனதில் ஆழமாக.

இங்கு தில்லியில் சாதுர்யாவின் அம்மாவோ, விடுமுறை காலத்தில் நடன வகுப்பு செல், வரைய கற்றுக்கொள், கணினி வகுப்பில் சேர் என்று வரிசையாய் பட்டியல் நீட்ட நொந்து போனாள் மகள். அவளை தேற்றும் வகையில் லட்சுமியும் தமோதரனும் பத்து பத்து நாட்கள் வந்து செல்ல, அவள் மனமோ ரங்கனை நாட அலைபேசியில் அவனை அழைத்து பேசினாள்.அவனோ ‘அம்மா -அப்பா சொல்றது நாம நல்லதுக்குத்தான் சது… அவங்க பேச்சு கேளு’ என முடித்துவிட்டான்.

மனம் ஏக்கம் இருந்தாலும் பிடிவாதம் மிக தான் அம்மா சொல்படி நடக்க ஆரம்பித்தாள் மகள்.அவனுக்கு உள்ளுர வருத்தம் மிகுந்தாலும் வளரும் பருவத்தில் சில விஷயங்கள் கற்க வேண்டும் என தன்னை தேற்றிகொண்டான்.அவள் தனக்காக உருகி அழுதது அவன் கண் முன்னே வந்து செல்ல கண்களை இறுக மூடிக்கொண்டான். 

அதிலிருந்து ஓரு சொட்டு கண்ணீர் அவன் கன்னத்தை முத்தமிட்டு சென்றது.

அவர்கள் மீண்டும் சந்திக்கும் த

அருணாச்சலம் சென்னை சென்று வந்து ஒரு மாதம் ஆகி விட்டது. விஷயம் பழம்தான். முக்கிய கட்சியின் ஒன்றிணைப்பாளர் எனும் பதவி. கவுன்சிலர் பதவிக்கான ஆதரவு என்று மனிதர் மிகுந்த சந்தோஷத்தில். அவரது நட்பு ராமேஸ்வரம் ‘இப்போ இந்த பதவி, சீக்கிரம்

எம் எல் ஏ ஆகணும். அதுக்கு வழிய பாரு’என்று வாழ்த்துடன் அருணாச்சலம் செய்ய வேண்டியவற்றை கோடிட்டு காட்டி அனுப்ப ஊருக்கு வந்த பிறகும் அவர் மனம் அதை சுற்றியே. மகன் குரு பற்றிய எண்ணம் அவரை அணுகவில்லை.

மனைவியிடம் ஆடிட்டர் சொன்னவற்றை கேட்டு கொண்டவர்,’இனி நீதான் எல்லாத்தையும் பாக்க பழகணும் அன்னம் ‘என்று சென்னை விஷயங்களை சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ராகாயியை அனுப்பி விட்டு இரவு தனிமை தாளாது குருபரன் தோப்பு வீட்டிலேயே முழு போதையில் முழுகி விட்டான். தனது தோழர்களுக்கு கூட தான் தங்கியிருப்பது பற்றி சொல்லவில்லை.

வீட்டுக்கு மகன் வரல என்பது அந்த தாயின் மனது தவிக்க, தந்தையோ எதிர்கால அரசியல் எண்ணி கோட்டைகள் கட்ட, எதிர் காலம் பற்றிய எண்ணமே இன்றி குரு குப்புற படுத்து கிடைக்கிறான்.

அருணாச்சலத்துக்கு அரசியல் எதிர்காலம் நன்றாக இருக்கு. ஆனால், அவர் குடும்பம்?

ராகாயி மனதில் குரு சீராழிகிறானே, என்று வருத்தம். அவள் வாழ்க்கை பிரண்ட பதினேழு வயதை  வெறுத்தவாறே எண்ணி பார்த்தாள்.

சதுரங்க கட்டத்தில் முதல் காயை நகர்த்தி விட்டேன்.போர் நிச்சயம் ஆகிவிட்டது. வேகமாக உருளும் காலமான என்னோடு நீங்களும் வாருங்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

“சில சமயங்களில் நாம் தேடிப் போகும் விஷயங்கள் நல்லவைகளாக இராது. ஆனால் காலப்போக்கில் சமூகரீதியில் அதை சரியானதாக விஷயங்களாக பார்க்கப் பழகிக் கொள்கிறோம்.”

இப்பொழுது, அருணாச்சலம் அரசியலில் தொபுக்கடீர் என்று குதித்துள்ளது நல்லவைக்கா இல்லை கெட்டவைக்கா என்பது குறித்து எனக்கு மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது.

மனைவியிடம் பொறுப்புகளை கொடுத்து சொத்து விவகாரங்களில் கவனிக்க சொல்வதும் சரிதான். ஆனால் வயது வந்த மகனை கண்டுகொள்ளாமல் தன் அரசியல் பாதையில் செப்பனிடும் வேலை செய்வது எந்த விதத்தில் சரியாகும்?

அருணாச்சலம் செய்து கொண்டிருப்பது அதைத்தான். அன்று காலையில், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் அருணாச்சலம் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதற்காக சில கட்சிக்காரர்கள் வீடு ஏறி வந்திருக்க, அவர்களுடன் உரையாடிக்கொண்டே அவர்களுக்கும் காலை நேர உணவை பரிமாறும்படிக்கு மனைவியிடம் சொன்னவர், சாப்பிடும் பொழுது, வெகு நாட்களாய் வீடு வந்து சேராத மகன் வந்து நிற்க, அதை சிறிது கூட கண்டுகொள்ளாத பாவனையில் தனது பேச்சை தொடர்ந்தார் அருணாச்சலம்.மகன்

இத்தனை நாள் எங்கு தங்கி இருந்தான்,  என்ன செய்து கொண்டிருந்தான் என்பது பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனிடம் கேட்கவும் இல்லை.

சிவனிடம் சொல்லி குருபரனை கண்காணிப்பதற்கு வைத்திருக்கிறார் அருணாச்சலம். ஆனால் இதுபற்றியெல்லாம் குருவுக்கு ஒன்றும் தெரியாது.

குருவுக்கு மனதில் அப்பா தன்னை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆத்திரம் ஒரு புறமும், வேதனை மறுபுறமுமாக அழைக்கழிக்க அமைதியாக நின்று கொண்டிருந்தான்.  

மகனுக்கோ  தன் அப்பாவிடம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம். முன்பெல்லாம் அப்பாவும் மகனும் காலை வேளையில், அன்னபூரணி உணவு பரிமாற சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டே சாப்பிடுவார்கள். அவர் வேலையை கவனிப்பதற்கு செல்வதற்குமுன் மகனிடம் நேரம் செலவழிப்பதை ஒரு கட்டாயமாக்கி கொண்டிருந்தார். மகனும் பள்ளி கிளம்புவதற்கு முன் முதல் நாள் பள்ளியில் நடந்தது முதல் இன்று அவன் செய்யவிருப்பது வரை சொல்லிக் கொண்டிருப்பான். இருவருக்கும் தட்டில் உள்ள உணவு காலியாவதே தெரியாமல் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க அன்னபூரணியும் சளைக்காமல் தட்டில் உணவு போட்டுக் கொண்டே இருப்பார். அப்போதெல்லாம் குருபரன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தான். அம்மாவின் கைப்பக்குவம் அவனை நல்ல வளர்த்தியாக்கி விட்டிருந்தது. (இப்போ எப்படி இருக்கானு கேக்கப் படாது)சிறுவனின் மனம். பால் மனம் மாறவில்லை. 

அம்மாவின் தலைப்பில் ஒளிந்து கொள்ளும், அப்பாவின் சலுகைகளை எதிர்பார்க்கும் சராசரி ஒற்றை பிள்ளை அவன்.

பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும், அவனின் உலகம் அவனின் அப்பா அம்மாவை சுற்றி மட்டுமே இருந்தது. ஆனால் என்று ராமேஸ்வரம் அரசியல் என்ற கூர்மை மிக்க ஆயுதத்தை ஏந்தி அருணாச்சலத்துடன் பேசிக்கொண்டிருந்தாரோ, அன்று மையம் கொள்ள ஆரம்பித்தது இவர்கள் வீட்டில் புயல். அன்னபூரணிக்கு தனது கணவன் அடுத்த நிலையை நோக்கி முன்னேறுவது பெருத்த மகிழ்ச்சி. கணவனுக்கு என்றும் துணை நிற்க அவர் தயார்.

ஆனால் விடலை பருவத்தில் இருக்கும் தனையனுக்கு அப்பாவின் அருகாமை தான் மகிழ்ச்சி. அப்பாவின் பணம் பதவி தராத மகிழ்ச்சியை அவரின் உடனிருப்பு கொடுத்துக் கொண்டிருந்தது. அன்று வரை பெரிதாக நட்பு வட்டம் என்று சேர்த்துக் கொண்டு ஊர் சுற்றி அறியாதவன், தான்  பணக்கார வீட்டுப் பிள்ளை  எவ்வளவு செலவு செய்தாலும் தாங்கும் என்று யோசித்திராதவன், புதியதாக இம்முறை நட்புகள் என்று சேர்த்து கொண்டவர்கள் அனைவரும்  தீய பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பவர்களாகவும் குருபரனின்  பணத்தை வைத்து  சொந்த கொண்டாட்டங்களை வைத்துக் கொண்டிருப்பாவராயும் அமைந்தது முழுக்க முழுக்க சாபக்கேடு. கரந்த பாலின் தூய்மையில் ஒரு சொட்டு நாக விஷம் சேரும்போது?

விஷ முறிவு சிகிச்சை செய்து அவனை திருத்த வேண்டிய,மகனை கண்டிக்க வேண்டிய தகப்பனும் தனது சுய முன்னேற்றத்தில் குறியாக இருக்கிறார். நாற்பதுகளில் இருக்கும் அருணாசலத்திற்கு  திடீரென்று அரசியல் மோகம் அணை கடந்துவிட்டது.

அதேபோல் மகனது  விஷயங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தன் மனைவியின் காதுகளை எட்டவே கூடாது என்று வேறு போற்றிப் பாதுகாத்து வருகிறார் சிவனுடைய துணையுடன்.ஆனால் விஷயங்களின் அளவு கை மீறிப் போகும் போது எந்த ஒரு நபரும் இதை தடுக்க இயலாது.

 நேரே உள்ளே வந்த குருபரன், சாப்பாட்டு மேசையின் மீது அமர்ந்து கொண்டு இருந்த மற்றவர்கள் முன்னால் பேசத் தயங்கியவாறே ‘அப்பா’என்று அழைத்தான்.

 ‘வா தம்பி இப்பதான் வீடு தெரிஞ்சதா’ என்று குரலில் சிறிதாக நக்கலை கலந்து கோவத்தை மறைத்து கேட்க, அது புரியாத அளவுக்கு மட்டியல்ல குருபரன்.

 ‘வாங்க தம்பி,வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க பிறகு பேசிக்கலாம்.’ என்று பிறர் முன் மகனைக் கடிய இயலாது அப்புறம் பேசிக்கலாம் என்பதைப்பற்றி நாசுக்காக சொன்ன தந்தையை வெறித்த பார்வை பார்த்துவிட்டு, வெளில போயிட்டு வந்தது கசகசன்னு இருக்கு பா… இந்தா போய் குளிச்சிட்டு வரேன், நீங்க சாப்பிடுங்க’என்று விட்டு தன் அறையை நோக்கி சென்றான். குருபரன் மனதிற்குள் அப்படி ஒரு பேராழி அடித்துக் கொண்டிருந்தது. முன்புபோல் தன் தந்தை தன்னுடன் பேசிக் கொண்டிருப்பதில்லை. அதிகமாய் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த அம்மாவோ இப்போதெல்லாம் கணக்கு வழக்குகளை பார்ப்பதில்  நேரம் குறைந்து அவதிப்படுகிறார்கள் என்று தெரிகிறது. என்னதான் பெண் சிநேகிதங்களும் நண்பர்களும் மாற்றி மாற்றி  அவனை சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டிருந்தாலும் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் அப்பா -அம்மா என்ற உணர்வு அவ்வபோது தலைதூக்க தான் செய்கிறது. ஏக்கம் அவன் உள்ளே ஆழமாய் ரணமாய்.அவன் தேடி செல்லும் சமயம் அப்பா அம்மா இருவருமே கையில் அகப்படுவதில்லை. ‘சை, என்ன வாழ்க்கை இது என்று மனதிற்குள் பொங்கினான் குருபரன். அவன் மன உணர்வுகளுக்கு வடிகால் இல்லை.ஆனால் பிறகும் தந்தை தன்னை கூப்பிட்டு பேசுவார் என்று எதிர்பார்த்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே!

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதில் தொடங்கி, கவுன்சிலர் தேர்தலும் முடிந்து, அந்த பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு அருணாச்சலம் அவரது போக்கே மாறிவிட்டது. வேண்டுமென்றே செய்யவில்லை.ஆனாலும் அவரால் குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்க முடிவதில்லை. பொது வாழ்க்கை அவரை சுருட்டிக் கொண்டது என்பதே நிஜம்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்