
இரண்டு நாட்கள் கொட்டமடித்தும் தீராத மோகமும் வேகமும் குருபரனுடையது. அவளை சக்கை போன்று உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவனது இளமை வேகம் அவளுக்கு புரிந்து தான் இருக்கிறது. ஆனால் ‘இதெல்லாம் தவறு தம்பி ‘என்று சொல்ல வேண்டிய நாக்கு அதை சொல்ல வழி இன்றி மனதிற்குள்ளேயே அந்த வார்த்தைகளை சொல்லிக் கொண்டு ஊமையாகிப் போனது. முப்பதுகளில் இருக்கும் ராக்காயியை பொறுத்தவரை பத்தொன்பது வயது குரு சிறுவனே.
அவள் மனமும் ஊமையாய் அழுதது. அவளால் வேறொன்றும் செய்ய முடியாது. ராக்காயி கிடைக்கவில்லை என்றால் இன்னொரு பெண். அவளுக்கு தேவை பணம். அது இவனிடம் தாராளமாகவே கிடைக்கிறது. இரண்டு நாட்களும், தன்னால் முடிந்தவரை அவனை வாடாமல் பார்த்துக்கொண்டாள் ராக்காயி.
பற்றாக்குறைக்கு, குரு சரக்கு பாட்டில்களை வேறு ஒரு வாரத்திற்காக வாங்கி வைத்திருக்கிறான். அவன் ஒரு முடிவோடு தான் இங்கு வந்து குடியிருக்கிறான். யாராலும் தடுக்க முடியாது.
ராகாயி பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன் என்று கதை போக்கில் புரிந்து கொள்வீர்கள்.
தோப்பிற்குள் நடக்கும் இந்த அலங்கோலம் வீரனுக்கும் தெரியும். முதல் விஷயம் வீரன் கண்டிப்பாக பெரிய இடத்து சமாச்சாரங்களில் தலையிட முடியாது. இன்னொன்று அருணாச்சலம் மிகக் கண்டிப்பாக சொல்லி வைத்திருக்கிறார், குருபரனின் திருவிளையாடல்கள் எந்த நிலையிலும் அன்னபூரணிக்கு தெரியக்கூடாது என்று. இந்நிலையில் வீரன் எவ்வாறு அன்னபூரணியை எதிர் கொள்வான்?
அவன் சங்கடத்துடன் நெளிவதை அன்னபூரணி வேறு விதமாக எடுத்துக் கொண்டாள். எப்பொழுதும் நேராகவே யோசித்துக் கொண்டிருக்கும் அவள் மனம் வீரனுக்கு வேறு ஏதேனும் வீட்டில் பிரச்சினையா என்று யோசித்தது. உங்கள் வீட்டு பிரச்சனையை உங்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வேன் என்று தவித்தது வீரனின் மனம் .
அன்னபூரணி தோண்டி கேட்க கேட்க வீரனால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியாமல், ‘இளநீர் வெட்டிக்கொண்டாறேன் அம்மா’என்று சென்று விட்டான்.
அவன் பின்னாடியே சென்ற சிவன்,
‘ ‘என்ன விஷயம் வீரா, உன் முகமே சரியில்லையே, ஏதாச்சும் பிரச்சனையா…’ ‘என்று விசாரிக்க, இப்பொழுது உள்ள தோப்பின் நிலவரம் பற்றியும் குருபரனுடன் தங்கி இருக்கும் பெண் பற்றியும் எல்லாவற்றையும் சொல்லி விட்டான் வீரன். குரு ஓரிரு நாட்களாக,வீட்டிற்கு வரவில்லை என்றதுமே சிவனுக்கு சந்தேகம்தான். இங்குதான் தங்கி இருக்கிறான் என்பது நிச்சயமாக தெரிந்திருந்தால் கண்டிப்பாக அன்னபூரணியை கூட்டிக்கொண்டு வந்திருக்க மாட்டார். ஆனால், அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்றது எல்லா தோப்புகளையுமே ஒரு பார்வை பார்த்து விட்டு வா என்று. கணவர் சொல்வதை என்றுமே மீறி நடக்காத அன்னபூரணி இந்த இடத்திற்கு தான் சென்றாக வேண்டும் என்றால் அன்னபூரணியி டம் வேலை செய்யும் சிவனால் இதை மறுக்க முடியாது.
ஒருவழியாக வீரனிடம் எல்லா தகவல்களையும் கேட்டறிந்த சிவன், இப்பொழுது அன்னபூரணியை எவ்வாறு வீட்டிற்கு திரும்ப கூட்டி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அருணாசலத்திற்கு
அழைத்தவர், உள்ளதை உள்ளவாறு சொல்ல, சென்னையில் முக்கிய நபரை சந்திப்பதற்காக சென்றிருந்த அருணாசலத்திற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. உடனே குருவுக்கு அழைத்து அன்னபூரணி வந்திருக்கும் தகவலை சொல்லிடு சிவா… மேற்கொண்டு அவனுக்கு தெரியும் என்ன செய்யவேண்டும் என்று என பேசி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார். சிவன் நிலைமைதான் மோசமாகிவிட்டது. குருவுக்கு போன் அடித்தால் குருவோ பேசும் நிலையிலேயே இல்லை. ராக்காயி தான் அழைப்பை எடுத்தாள்.
சிவனிடமிருந்து விஷயத்தை கேட்டு அறிந்து கொண்டவள், தனது சாமான்களை எல்லாம் மூட்டை கட்டி மாடியில் இருக்கும் பழைய சாமான்கள் போடும் டஞ்சன் அறையில் போட்டுவிட்டு, வீட்டு வாயிலில் வந்து அமர்ந்து கொண்டு விட்டாள். தன்னால் முடிந்தது இவ்வளவுதான். தோப்பில் இருந்து வெளியேற கண்டிப்பாய் வழி இல்லை. அப்படி முயன்றால் அன்னபூரணியிடம் சிக்கிக்கொண்டு பதில் சொல்ல வேண்டியது வரும். அதில் திருட்டுத்தனம் நிச்சயமாக வெளிப்படும். அதைவிட இங்கேயே வாசலில் அமர்ந்து கொண்டிருந்தால் சமையல் வேலை செய்ய வந்ததாகவாவது சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தவளாக வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டு, அன்னபூரணி யையும் சிவனையும்,
எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அவளுக்குள் முழுதாக மது அருந்திவிட்டு மட்டையாகி சாய்ந்து இருக்கும் குருவை கண்டால் அன்னபூரணி என்ன நினைப்பாளோ என்ற பயம் வேறு. இதிலெல்லாம் அவள் என்ன செய்ய முடியும்? நல்லவேளை, மேலூர் காரியான ராக்காயியை அன்னபூரணிக்கு தெரியாது.
ஆனால், நடந்ததோ முற்றிலும் வேறு. அன்னபூரணி தோப்பு வீட்டிற்குள் வரும் முன்னரே, ஆடிட்டர் அழைத்து தனது அலுவலகம் வந்து சேருமாறு அழைப்பு விடுக்க, சிவன் ‘அன்னபூரணியை நீங்களும் வாங்கம்மா’என்று கூட்டி சென்று விட்டார்.
சிறிதுநேரம் ராக்காயி அன்னபூரணிக்காக காத்திருந்து பார்த்துவிட்டு, அவர்கள் வரவில்லை என்றானதும் பெருமூச்சு விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றவளுக்கு அங்கே முட்ட குடித்து விட்டு மல்லாந்து கிடக்கும் குருவை நினைத்து கோவம் ஒரு புறமும், வருத்தம் ஒருபுறமுமாக. பணம் ஒரு மனிதனை இவ்வளவு சீராழிக்க முடியுமா என்று அவளுக்கு ஆற்றமை. பெருமூச்சு விட்டு நகர்ந்து சென்றாள்.
இன்று எப்படியோ தப்பித்தாகி விட்டது. ஒருவழியாக போதை குருபரனும் அவன் கண்கள் கோவைப் பழம் போல சிவந்து கிடந்தன. இன்னும் ரெண்டு நாள் இங்கேயே தங்கிடு ராக்காயி என்று இளித்து கொண்டு நின்றான் குரு.
உள்ளுக்குள்ளே பயப்பந்து உருள , நடந்தவற்றை சுருக்கமாக சொன்னாள் ராகாயி.
தாடையை சொறிந்து கொண்டவாரே’ சரி அப்ப நீ கிளம்பு ‘ என்றுவிட்டு தனது பாக்கெட்டிலிருந்து ஒரு கட்டு நோட்டை எடுத்து அவள் கையில் அழுத்திவிட்டு தனது சகாக்களுடன் போனில் பேசிக் கொண்டு மாடிக்குச் சென்று விட்டான். ராக்காயி தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று அங்கிருந்து சென்றுவிட்டாள். வழியில் வீரனை பார்த்தவுடன் ராகாயியின் கண்கள் கலங்கின.
இதே வீரனை ஒரு காலத்தில் தன் கணவனாகவே நினைத்து இருந்தாள் ராக்காயி. அப்பொழுதெல்லாம் வீரனும் ராக்காயியும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவருக்கும் மனது ஒன்று பட்டாலும் ராக்காயி சினிமாத்துறைக்கு சென்றபிறகு இருவருக்குமான தொடர்பு நிரந்தரமாகவே விட்டுப் போயிற்று. சில காதல் கதைகள் கண்ணீர் கதைகள் தான். வீரன் தேடியது காதல் மனைவியை… நடிகையை இல்லையே… வீரனுக்கு குடும்பம்?
**************
தில்லியில் இருந்து ஐந்தாம் வகுப்பு விடுமுறைக்காக நமது சாதுர்யா தன் அம்மா அப்பாவுடன் ஸ்ரீரங்கம் வந்திருக்கிறாள். முழு இரண்டு மாதங்களுக்கான விடுப்பும், அவளுக்கு இங்கு தான் கழிய போகிறது. அவளது பெற்றோர் அவளை மட்டும் ஸ்ரீரங்கத்தில் விட்டுவிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிளம்பிவிடுவார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்கள் விடுப்பு முழுவதும் அவள் ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் தான் இருந்தாக வேண்டும்.
அது அவளுக்கு பிடித்த விஷயமும் கூட. திருச்சி,ஸ்ரீரங்கத்தில் இருக்கும் எந்த விஷயமும் நிச்சயம் தில்லியில் இல்லை என்பது அவள் எண்ணம். ஆர்ப்பாட்டங்கள் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எல்லாவற்றையும்விட எப்போதும் உடனிருக்கும் ரங்கன் அங்கு இல்லை.
ரங்கன் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு. நெடுநெடுவென்று ஐந்தரை அடிக்கும் கூடுதலாகவே வளர்ந்து விட்டான். வசீகரப் புன்னகை ஏந்திய உதடுகளுக்கு மேலே மெல்லியதான இளம் மீசை அரும்பு விட்டு இருந்தது அவனுக்கு. அந்த ரோஜா நிற உதடுகள் எப்பொழுதும் கூட இருப்போரையும் சேர்ந்து சிரிக்க அழைக்கும்.
வயலூரில் இருந்து ரேணுகாவும் ரங்கனும் காரை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வர, ரங்கனை பார்த்த வெங்கடேசன் மலைத்து தான் போனார். இந்த வயதில் இவ்வளவு அற்புதமாபிள்ளையா, இன்று அவருக்கு ஆச்சரியம். அவனிடம் பேசிக் கொண்டிருந்த இரண்டு நாட்களில் ரங்கனை பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம். அவனது பொறுமை, நிதானம்,அறிவு கூர்மை,அவரை அவன் பால் ஈர்த்தது.
தங்கையிடம் ” ரேணு உன்னோட புள்ள தங்கம், அம்மா கிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போட சொல்லு ” என்றார். ரங்கனை நினைத்து அவர் மனம் பெருமையில் பூரித்தது.
இரண்டு நாட்களில் வெங்கடேசனும் அவர் மனைவியும் தில்லி சென்றுவிட சாதுர்யா ரங்கனை பிடித்துக் கொண்டு சுற்றளானாள்.
வாழ்நாள் முழுவதும் ரங்கனுடன் அவள் பயணம் தொடர என் பிரார்த்தனைகள்.
ரங்கன் தன்னுடன சாதுர்யாவை விளையாட கூட்டிக்கொண்டு அலைவதும், பாட்டியோ தாத்தாவோ துணைக்கு ஒருவர் வர, ரங்கனிடம் ஏதேனும்
வளவளத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் கல்லணைக்கும் சுற்றி விட்டு வருவதும், நண்பர்கள் புடை சூழ அம்மா மண்டபத்தில் விளையாடுவதும், காவிரியுடன் போட்டிபோட்டுக்கொண்டு தானும் ஓடி விளையாடுவதும், லக்ஷ்மி அம்மாள் வீட்டில் பின்பக்கம் வளர்க்கும் பசு மாடுகளுடன் கொட்டிலில் அமர்ந்து கொஞ்சி கொண்டிருப்பதும், தாத்தாவை கூட்டிக்கொண்டு அவர்களுக்கு சொந்தமான கிராமங்களில் இருக்கும் நிலங்களுக்கு சென்று நானும் நாற்று நடுகிறேன் களை எடுக்கிறேன் என்று அங்கு வேலை செய்யும் பெண்களுடன் வம்படித்துக்கொண்டு அவர்களுடைய குழந்தைகளை தூக்கிக்கொண்டு கொஞ்சி தெரிவதும் திருச்சி மலைக்கோட்டை, உச்சி பிள்ளையார் கோவில் செல்வதும்,
சுற்றியிருக்கும் கிராமங்களில், அருகில் இருக்கும் ஊர்களில் பஸ்ஸில் தாத்தாவுடன் பயணம் செய்வதும் என்று அவளது நேரம் அவளிடம் இல்லாமல் பறந்து கொண்டே தான் இருக்கிறது. நடுவில் இருபது நாட்கள் வயலூரில் அத்தை ரேணுகாவின் வீட்டில்
சாதுர்யாவின் இருப்பு, ரேணுகாவிற்கு தன் அண்ணன் மகள் தங்கள் வீட்டில் வந்து தங்குவதில் சொல்லொண்ணா மகிழ்ச்சி. சாதுர்யாவுக்கு எப்போதுமே கால் ஒரு இடத்தில் தங்காது. நிற்காமல் எப்பொழுதுமே ஓடிக்கொண்டே இருப்பாள்.
அவள் ஒரு இடத்தில் உட்கார வேண்டும் என்றால் ஒன்று படிக்க உட்காரும் நேரம், இல்லையென்றால் யாராவது அவளுடன் கதை பேசிக் கொண்டிருக்க வேண்டும். அது என்னமோ கதை கேட்பதில் அதிலும் சரித்திர கதை கேட்பதில் அவளுக்கு அலாதி பிரியம்.
அவளுக்கு விடுமுறையில் ரங்கன் சதுரங்கம் சொல்லிக் கொடுப்பதிலும் பரமபத விளையாட்டு சொல்லி தருவதிலும் நேரத்தை கடத்தினான். சாதுர்யாவுக்கு கணக்கு பாடம் ரொம்பவுமே தகராறு. ரங்கனுக்கு கணக்கு என்றால் இனிப்பு அளவுக்கு பிரியம். கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று அவளை ஒரு வழி ஆக்கி விட்டான். கதற கதற கணக்கு கொடுத்து கற்றுக் கொண்டாள் சாதுரியா. ரங்கன் வீட்டில் ரேழியில் இருக்கும் பெரிய மர ஊஞ்சலின் மீது சாதுர்யாவுக்கு ஏதோ ஒரு மோகம். வருடாவருடம் வருவதுதான்.
ஆனால், இந்த வருடம் கொஞ்சம் விபரம் புரியும் அளவில் பெரிய பெண்ணாக வளர்ந்திருந்தாள் சாதுர்யா. வளர்ந்திருந்தாள் என்றால் ஆமாம் நிச்சயம் அவள் இப்போதே நல்ல உயரம் தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ரங்கனின் காது அளவிற்கு வந்திருக்கிறாள். அழகிதான். மாநிறத்திற்கு சாற்றே கூடுதல் நிறம்,துருதுருவென்று பேசும் கண்கள். எப்பொழுதும் குறும்பு.
அதீத கோபம், கோபத்தின் சமயம் ஜொலிக்கும் முகம், வாய் ஓயாத பேச்சு, என்று பேசுவதற்கு அவளுக்கு ஆள் தேவையில்லை கேட்பதற்கு தான் ஆள் தேவை. மற்றவர்கள் யாரும் அருக்காதே என்று சொன்னால் கூட அது என்னமோ அவள் பாட்டி லட்சுமியும், அவளது ரங்கனும் எப்போதுமே அவள் பேசுவதை கேட்க தயார்தான்.
ஒருவழியாக விடுப்பு முடிந்து,பெண்ணும் அப்பா அம்மாவுடன் ரங்கனை விட்டு பிரியும் துன்பம் தாங்க முடியாமல், எப்பொழுதும் போல, சிறு சிறுமியாக பாட்டி வீட்டை விட்டு வரமாட்டேன் என்று ஒரே அழுகை. அவளுக்கு என்னமோ போலி முகங்கள், ரொம்ப சாமர்த்தியம் மிகுந்த நட்பு சூழல் பிடிக்கவில்லை. அவளுடன் பயிலும் எல்லா மாணவர்களுமே சாமர்த்தியம் தான். குழந்தைப் பருவத்தை மீறிக்கொண்டு வெளிப்படும் அந்த குணம் அவளுக்கு பிடிப்பதில்லை.
இதோ ஊருக்கு சென்றவுடன் ஆறாம் வகுப்பு,கல்வி சாலைக்குச் சென்று புத்தகங்களுடன் மல்லுக் கட்ட வேண்டும். நினைக்கும் போதே தலை பாரமாக உணர்ந்தாள் சாதுர்யா. ஒருவழியாக வெங்கடேசனும், சாதுவின் அம்மா மாலாவும் மகளை சமாதானப்படுத்தி தில்லிக்கு கூட்டிச் சென்றார்கள். திரும்பவும் அடுத்த விடுமுறைக்கு வர வேண்டும் என்று பேரம் பேசி தான் சென்றாள்.
ஆனால் மாலாவுக்கு, தன் மகளை விடுமுறை வகுப்புகளில் சேர்த்து விட வேண்டும். சம்மர் கேம்ப் வகுப்புகளுக்கு மற்ற குழந்தைகள் செல்வது போல இவளும் செல்லவேண்டும், அப்பொழுது தான் மற்ற குழந்தைகளுடன் ஈடுகட்ட முடியும் தன் மகளால் என்ற எண்ணம் உள்ளூர இருந்து கொண்டிருக்கிறது. சாதுர்யா அடங்கும் ரகம் அல்ல.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

