Loading

“என்ன நவி உன் பிரண்டு பெருசா எதுவும் ரியாக்ட் பண்ணல?”

“என்ன ரியாக்ட் பண்ணனும்னு எதிர்பார்க்கிற? நீ கன்சீவா இருக்கன்னு சொன்னா. ஹெல்த் பார்த்துக்கோ. ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டு சொல்லுன்னு சொல்லி இருக்கா அவ்வளவுதானே! அப்புறம் என்ன  இன்னும் எதிர்பார்க்கிற?”

“போ டா” என்றவள் அதன் பிறகு தன் தாய்க்கு அழைத்து விவரத்தை கூறினாள். அன்று மாலையே மருத்துவமனைக்குச் சென்று கர்ப்பத்தை உறுதி செய்தார்கள்.

அதன் பிறகு நிவேதா தினமும் வனிதாவுக்கு அழைத்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டாள்.. அப்படி உட்காரு. எப்படி உட்காரு, இதை பண்ணாத, இதை சாப்பிடு, இந்த வேலை செய், அந்த வேலை செய்யாத.. என்று தினமும் அவளிடம் பேசுவதை ஒரு வேலையாக வைத்துக் கொண்டாள்.

இப்போது எல்லாம் நவிலனிடம் பேசுவது குறைந்திருக்க..அதிக நேரம் இப்பொழுது எல்லாம்  வனிதாவிடம் தான் பேசுகிறாள் .

இப்படி இருக்கும் பொழுது  நிவேதா பையனுக்கு  அதிக காய்ச்சலின் காரணமாக  உள்ளூரிலே பெட்டில் வைக்கும் படியாக இருந்தது.. அப்போது அந்நேரம் பார்த்து நிவேதாவின் தாய் ஊரில் திருவிழா வேறு போட்டு இருந்தார்கள். ஆகையால், அவளுடன் தங்கிக் கொள்வதற்கு யாரும் இல்லை. அருகிலே என்பதால் வசந்த் காட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு பகலில் வந்து அவளுக்கு உணவு மட்டும் கொடுத்துவிட்டு, அவளையே பார்த்துக் கொள்ளுமாறு கையில் பணத்தையும் கொடுத்துவிட்டு சென்று இருந்தான். அவள் குளிக்கும் நேரத்தில் மட்டும் வந்து குழந்தையை பார்த்துக் கொண்டான்.வேலையின் காரணமாக, மகள் தாய் வீட்டில் இருந்தாள்.

பேசும்பொழுது வனிதாவிடம் பையனுக்கு ஜுரம்  அடித்ததால் உள்ளூரிலே பெட்டில் வைத்திருப்பதாக கூறியிருந்தாள்.

மலை ஏழு மணி அளவில் வசந்த் வந்து குழந்தையை பார்த்துவிட்டு, வீட்டில் பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அவளுக்கு இரவு உணவையும் கொடுத்துவிட்டு சென்றிருந்தான்.

இரவு 8:30 மணி போல நவிலன் அவளுக்கு போன் செய்தான். போன் எடுத்த பிறகு,” எங்க இருக்கீங்க ?”என்று கேட்டான்.

எடுத்து எடுப்பில் ..

அவள் ஹாஸ்பிடலில் இருப்பதாக கூற. “அது தெரியும் டி. எங்க இருக்க?” என்று கேட்க.

” நிறைய பேருக்கு இப்ப வைரல் ஃபீவர் வந்திருக்கிறதால ரூம் கிடைக்கலடா. ஜென்ரல் வார்டுல்ல தான் இருக்கேன் “

” சரி” என்றவன்  பேசிக்கொண்டே அவள் இருக்கும் இடத்திற்கு வந்திருந்தான்.

” ஏன்டா என்ன விஷயம்?” என்று கேட்க .

“தம்பிக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று தொட்டுப் பார்த்தான் .

அவன் ஸ்ட்ரிப்ஸ் போட்டதில் மயக்கத்தின் வீரியத்தில் உறங்கி இருந்தான்.” ஜுரம் இப்ப பரவாயில்லையா ?”

“விட்டு விட்டு வருதுடா. ஈவினிங் போல தான் நிறைய இருக்கு.. வைரல் ஃபீவர் தான்.”

” கோல்ட் இருக்கா ?”

“சளி ,இருமல் இல்லை. இப்போ” என்ற பிறகு, சிறிது நேரம் பேசிவிட்டு, கையில் எடுத்துக் கொண்டு வந்த ஃப்ளாஷ்கை அவளிடம் கொடுத்தான்.

“என்னடா இது?”

” தம்பிக்கு பால்  வீட்டில் வாங்கி நல்லா கொதிக்க வச்ச பால் தான்.. பாக்கெட் பால் இல்லை”

“இருக்குடா. அவர் எடுத்துட்டு தான் வந்தார் “

இருக்கட்டும் பிடி..” என பேசிக்கொண்டு அவள் வைத்திருந்த ஃபிளாஸ்க்கை  கையில் எடுத்துக் கொண்டான்.

” ஏதாவதுனா போன் பண்ணு சரியா ?” என்று  பக்கத்து பெட்டியில் இருப்பவரிடம் குழந்தையை பார்த்துக்கொள்ள  சொல்லிவிட்டு அவளை கீழே அழைத்துக் கொண்டு வந்தான்.

கீழே இருந்த டீக்கடையில் டீ வாங்கி கொடுத்தான். “வேணாண்டா” என்று சொல்ல..

” ஒரு நாளைக்கு பத்து டீ கொடுத்தா கூட நீ குடிப்ப குடி”

“போன்ல சார்ஜ் இல்லடா. சார்ஜர் மட்டும் கிடைக்குமா ?அவர்கிட்ட சொல்லவும் மறந்துட்டேன். காலையில எடுத்துட்டு வருதா சொன்னாரு..”

” சரி” என்றவன் பிரேமுக்கு போன் செய்து விவரத்தை கூற ..

அவனும் சார்ஜர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். “காலையில வாங்கிக்கோ பிரேம்”

” சரி” என்றவன் நிவேதாவிடம் “பையனுக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று கேட்டுவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி இருந்தான்.

நவிலன் நேரமாவதை உணர்ந்து குழந்தை மேலே தனியாக இருப்பதால் , சொல்லிவிட்டு தான் வாங்கிக் கொண்டு வந்த சாக்லேட் அவளிடம் கொடுத்தான்.

“எதுக்குடா வேணாம் ..”

“தம்பி தூங்கிட்டு தானே இருக்கான் சாப்பிடு .. அவன் தூங்கும் போதே தூங்கு. போன் பார்க்காத..”என்று அவள் கையில் திணித்துவிட்டு கிளம்பி விட்டான்.

அதேபோல் காலை நான்கரை மணி போல் எல்லாம் மீண்டும் அவன் எடுத்துக்கொண்டு வந்த பிளாஸ்க்கில்  மீண்டும் பால் வாங்கி காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றிருந்தான்.

இரவு அவன் வந்து சென்ற பிறகு, நிவேதா வனிதாவிற்கு அழைத்தாள்.” அது வீட்டு மாட்டுப்பால் தான் வீட்டில் வாங்குனது தான் அண்ணி. பாக்கெட் பால் இல்லை..”என்றாள்

” தெரியுது. ஆனா, எதுக்கு?”

” எதுக்குனா என்ன கேள்வி. அண்ணா கொஞ்சமா தான் பால் காய்ச்சிட்டு வந்ததா நீங்க என்கிட்ட போன்ல பேசும்போது சொன்னீங்க. அது இல்லாம அவசரத்துக்கு எப்படியும் கீழே டீ கடையில பாக்கெட் பால் தான் வாங்கி இருப்பீங்க அதான்.. சரி தம்பியை பாருங்க..”என்று கூறி வைத்து விட்டாள்.

நாட்கள் உருண்டோடி வனிதாவிற்கு ஏழாவது மாதம் தொடங்கி இருந்தது.. ஏழாவது மாதத்தில் அவளுக்கு வளைகாப்பு வைத்திருந்தனர்.

வளைகாப்பிற்கு நிவேதா மட்டும் வந்திருந்தாள் . அவளது நண்பர்கள் யாரும் வரவில்லை..

” வாங்க அண்ணி!” என வரவேற்ற வனிதா “அண்ணா வரலையா?” என்று கேட்டாள்.

“இல்ல வனிதா .அவர் தான் கொண்டு வந்து விட்டுட்டு  போனாரு”

” இதுவரைக்கும் வந்தவர். ஃபங்ஷனுக்கு வந்தா என்ன?  அவருக்கு உங்க பிரண்ட்ஷிப் தெரியாதா? இல்ல  பிடிக்காதா ?” என்றாள் சற்று கோபமாகவே,

நிவேதா சங்கடமாக உணர..

“என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான் காட்டமாக நவிலன் .

அதே கேள்வியை தன் கணவனிடமும் கேட்டாள் வனிதா.

கணவன் ,மனைவி இருவரும் காரசாரமாக பேசுவது போல் தூரத்தில் இருந்து பார்த்த சுகந்தி..

அருகில் வந்து நிவேதாவை பார்த்து யார் ?என்று கேட்க.

தன் கணவனை முறைத்து விட்டு, “

என்னோட பிரண்டு “

“வாங்க போங்கன்னு பேசுற போல? ஆனா பிரெண்டுனு சொல்ற?”

“என்னோட சீனியர் அதுக்கு என்ன இப்போ?” என்று தன் அண்ணியிடம் எரிந்து விழுந்தாள்.

“சீனியர்னா பிஜியா ?யூஜி யா?”பிரச்சனை செய்ய ஏதாவது கிடைக்காத என்று நல்லெண்ணத்தில் கேட்டாள் அண்ணிக்காரி.

“யூ ஜி.. ஸ்கூல்ல இருந்து என்னோட சீனியர் தான். போதுமா? இப்ப என்ன உங்களுக்கு ?உங்க வேலை என்னவோ போய் பாருங்க.”

“என்னமோ போ.. ஏதோ கோவமா பேசின மாறி இருக்கேன்னு வந்தேன்”என்றபடி நகர்ந்தாள்.

நீ அங்க ஆளுங்க இருக்காங்க போ”  என்று தன் தோழியை அனுப்பி வைத்தான் நவிலன்.

அவளும் எதுவும் பேசாமல் வனிதாவை திரும்பி பார்த்துவிட்டு, நகர்ந்து இருந்தாள்.

அவள் நகர்ந்த பிறகு,  “உங்க அண்ணி கிட்ட என்னோட பிரண்டுன்னு சொல்லி இருக்க  வேண்டியது தானே ? ஏன் உன்னோட சீனியர்னு சொன்ன?”

“அது” என  தயங்கினாள்.

” இப்பவும் சரி. இங்கே அவளோட நலனையும் ,உன்னோட நலனையும் மட்டும் தான் யோசிக்கிறேன். மாமாவுக்கு எங்க பிரண்ட்ஷிப் பிரச்சினை கிடையாது. ஆனா, அவங்க பேமிலில நல்ல விதமா எடுத்துப்பாங்கன்னு கிடையாது. இங்கே எனக்கும்தான் உன்கிட்ட என் பிரண்ட்ஷிப்பை காட்டுறதுல எந்த பிரச்சினையும் கிடையாது.

ஆனா, உன்னோட பேமிலி அதை எப்படி எடுத்துக்கும்னு ஒன்னு இருக்கு மறந்துடாத.. இப்ப நீயும் அததான் யோசிச்ச.. மத்தபடி எல்லாருக்கும் எங்க பிரண்ட்ஷிப்பை காட்டணும்னு அவசியம் கிடையாது. எங்களோட துணைக்கு எங்க பிரண்ட்ஷிப் தெரிஞ்சா போதும்! புரியும்னு நினைக்கிறேன்..”

அவளும் அதன் பிறகு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அன்று ஒரு நாள் மட்டும், தன் தாய் வீட்டில் தங்கி விட்டு, வனிதா மறுநாள் காலையில் தன் கணவன் வீட்டுக்கு வந்து விட்டாள்.

ஒன்பதாவது மாதம் தொடங்கிய பிறகு தாய் வீட்டுக்கு வருவதாக கூறிவிட்டாள்.அருகில் தான் இருப்பதால், அவர்களும் மகளின் விருப்பத்திற்கு ஏற்ப சரி என அமைதியாகி விட்டார்கள்.

வனிதாவிற்கு ஒன்பதாவது மாதம் தொடங்கி இருந்தது ..அவள் தன் தாய் வீட்டிற்கும் வந்துவிட்டாள். அப்படி இருக்கும் சூழலில் தான் நிவேதாவின் குழந்தையை அவசரமாக இரவு வேளையில் சேலத்திற்கு அழைத்து சென்றாள். மூச்சுத் திணறல் பிரச்சனையால், ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த சிறிது நேரத்தில் குழந்தைக்கு உடல் தூக்கி போட ..

உடல்

பச்சை நேரத்தில் ஆகத் தொடங்க. மருத்துவர்கள் வெளியில் வந்தவர்கள். எதுவும் சொல்றதுக்கு இல்ல ,சாமியை வேண்டிக்கோங்க..  என்றவர்கள் வேறு ஏதும் கூறாமல் நகர்ந்து விட்டார்கள்.

வசந்த் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.. ..” நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன். இப்படி ஒவ்வொரு முறையும் என் புள்ள சாவோட விளிம்பு வரை போய் போய் வந்துட்டு இருக்கான்..” என.

மருத்துவர் சொல்லிச் சென்றதிலேயே பேய் அறைந்தது  போல் இருந்தவள். தன் கணவனின் கதறலில் உள்ளம் பதறியது .

ஐசியூ வார்டு வாசலையே  பார்த்தபடி இருவரும் நின்று கொண்டிருந்தனர்..

தன் கணவனை தேற்றியவள்.. கண்களில் நீர் வடிந்தது.. என்னதான் இறுகி கல்லாக மாறி இருந்தாலும் ,பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தை.. வருடமாக தூக்கி வளர்த்த குழந்தை. இப்போது உடல் அசைவு இல்லாமல் இருப்பதை பார்த்தவுடன் ஒன்றும் புரியாமல் வேதனையில் தவித்தாள்..

வீட்டில் இருப்பவர்களுக்கு கூறவும் பயமாக இருந்தது.. இரவு வேளை ..இருந்த இடத்தை விட்டு நகராமல் ஐசியூ வை பார்த்தபடி வசந்த் இருக்க..

மனதில் பாரம் குடிகொள்ள. யாரிடமாவது மனதின் பாரத்தை இறக்கி வைத்தால், பரவாயில்லை என்று எண்ணியவள் .. தன் நண்பனுக்கு அழைத்திருந்தாள் …

இரவு 9 மணி தாண்டி இருந்தது. இந்நேரத்துக்கு கூப்பிட மாட்டாளே? என்று யோசனை உடனே எடுத்தான்.

“நவி!” என்ற அவளின் அழுகுரல் மட்டும் கேட்டது.

“என்னாச்சு ?ஏதாவது பிரச்சினையா? தம்பி ஓகே தானே?” என்று அந்த பக்கம் பதட்டமானான்.

“தம்பியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்டா.. உடம்பு ஃபுல்லா கிரீன் கலர்ல ஆயிருச்சு, உடம்பு தூக்கி தூக்கி போடுது.. பயமா இருக்கு. டாக்டர் எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க.. ஒண்ணுமே புரியல. அவரு ரொம்ப உடைஞ்சி  போயிட்டாரு..” என்று மேலோட்டமாக  அழுதப்படியே கூறி முடிக்க..

” வீட்ல சொல்லிட்டீங்களா?”

“பாப்பா அம்மா வீட்ல தான் இருக்கா. அதனால யாருக்கும் போன் பண்ணியும் சொல்லல. வந்ததும் தெரியாது..”

“ஃப்ரீயா இரு. மாமாவை பாரு. கைல அமௌன்ட் எடுத்துட்டு போனீங்களா ? எதும் சாப்டீங்களா? டாக்டர் ஏதும் சொன்னாங்கன்னா போன் பண்ணு ,இல்லன்னா மெசேஜ் பண்ணு..”

” லூசா நீ ?நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன பேசிட்டு இருக்க..”

” சரி டி .அதுக்காக சாப்பிடாம இருப்பீங்களா ? டாக்டர் பாத்துட்டு தான் சொல்லி இருக்காரு அப்படின்னா. நீங்க முன்னேறத்தில இங்கிருந்து கிளம்பி இருப்பீங்க.. சாப்பிடுங்க தம்பி பாக்க உங்க உடம்புல தெம்பு வேணுமில்ல..”

அவனிடம் பேசிவிட்டு வைத்தவள் .தன் கணவனை பார்க்க ஆரம்பித்தாள். இரவு 12 மணிக்கு மேல் இப்பொழுது பரவாயில்லை என்று மருத்துவர் கூற, அவனுக்கு ஒரு மெசேஜ் மட்டும் தட்டிவிட்டு இருந்தாள்.

அவனும் தூங்காமல் இருந்ததால், மெசேஜ் பார்த்தவுடன் “சரி, நீ தம்பியையும் ,மாமாவையும் பாரு “என்று அமைதியாகி விட்டான்.

காலை 7 மணி அளவில் சேலத்தில் கௌசிக்கை அட்மிட் செய்திருக்கும் ஹாஸ்பிடலுக்கு தன் மனைவியுடன்  வருகை தந்திருந்தான் நவிலன் .அவனின் வருகையை கணவன், மனைவி இருவருமே எதிர்பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

அது கொரோனா பீரியட் வேறு, இருவரும் பெரிதாக கையில் பணம் எடுத்துக் கொண்டு வரவும் இல்லை .அவர்களிடம் கையில் பணமும் இல்லை என்று தான் கூற வேண்டும். விடிந்த பிறகு, வீட்டு உறுப்பினர்களுக்கு போன் செய்து பணம் எடுத்துக்கொண்டு வருமாறு கூறலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்.

இவ்வளவு நாள் தனியாக இருந்ததால், தோழிக்கு துணையாக வந்து இருக்க முடியாது என்று எண்ணியவன். திருமணம் ஆகி மனைவி இருக்க .. அதுவும் குழந்தையின் உடல்நிலை வேறு மோசமாக இருந்ததால், மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்து விட்டான்.

வசந்த் அமைதியாக பார்த்தான்.. ஒரு சில நொடிக்கு பிறகு நவிலன் வசந்தின் கையை பிடித்துக் கொள்ள.. அவன் தோளில் சாய்ந்தபடி வசந்த் அழுதான். வனிதா நிவேதாவின் கையைப் பிடித்துக் கொண்டாள் .

“ஒன்னும் இல்ல அண்ணி சீக்கிரம்  சரியாயிடும். இப்போ ஓகே தானே!” என்று அவளை தேற்றினாள்.

இருவருக்குமே அவர்களின் வருகை மனதில்  சிறு இதத்தை பரவியது போன்று தான் இருந்தது..

வீட்டு உறுப்பினர்களுக்கு இரவு மகனின்  உடல்நிலை சிறிது தேறிய பிறகு ,விடயத்தை கூறி இருந்தார்கள்.

நவிலன்  நாலரை மணி அளவில் தன் மனைவிக்கு போன் செய்து விபரத்தை கூற. அவளும் குளித்துவிட்டு ரெடியாகி இருக்க. அவர்கள் ஊரில் இருந்து 2 .30 மணி நேர டிராவல் என்பதால் உடனே பஸ் பிடித்து இங்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

நிறை மாதமாக இருப்பதால் வனிதாவின் தாய் கூட அனுப்ப மாட்டேன் என்று கூறினார். “நான் போவேன் “என்று வனிதா அடம்பிடித்து வந்திருந்தாள்.

“மாசமா இருக்க பிள்ளையை எதுக்கு கூட்டிட்டு வந்து இருக்க?” என்று வசந்த் நவிலனை பார்த்து கேட்ட.

” இப்போ உனக்கு உடம்பு பரவா இல்லையா மா? எப்ப தேதி கொடுத்திருக்காங்க ?”என்று கேட்டான் வசந்த்.

“பரவால்ல அண்ணா” என்றாள். முதல் முறையாக இன்று தான் வசந்தத்தை நேரில் பார்க்கிறாள்.

இதற்கு முன்பு போட்டோவில் மட்டுமே பார்த்திருக்கிறாள். இன்று தான் பேசவும் செய்கிறாள். நவிலன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவனிடம் பணத்தை எடுத்து கொடுத்தான்.

” இல்லடா வேண்டாம்” என்று வசந்த் கூற,

“என் கையில் இருந்தது தான் எடுத்துட்டு வந்து இருக்கேன் மாமா. செலவுக்கு வச்சுக்கோங்க. கையில எப்படியும் அமௌன்ட் எடுத்துட்டு வந்து இருக்க மாட்டீங்க. வீட்ல இருந்து வரவங்க வரும்போது எடுத்துட்டு வரட்டும்” என்று கொடுத்தான் ..

முதல் முறையாக இருவரின் நட்புக்கிடையில் பணம் இப்பொழுது தான் உள்ளே வருகிறது.

நிவேதாவை கண் காட்டிய வசந்த். “நைட்ல இருந்து பெருசா எதுவும் பேசல டா. அழவும் இல்ல .ரொம்ப இறுகிப்போயிட்டா. எனக்கு மட்டும் தம்பி தேறின பிறகு ,ஜூஸ் வாங்கி கொடுத்தா. அவ  குடிக்கல “என்று கூற ,

சரி என்று அவன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்ப..

வசந்த் நவிலனை பார்த்தபடி இருந்தான்.

” நான் பாக்குறேன் மாமா!” என்று அவன் கையில் அழுத்தம் கொடுத்தவன்.

“தம்பிக்கு ஒன்னும் ஆகாது பாத்துக்கோ” என்று பொத்தம் பொதுவாக கூறிவிட்டு , கௌசிக்கை ஐசுயூவில் சென்று இருவரும் இரண்டு நிமிடம் மட்டும் பார்த்துவிட்டு ,தன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் நவிலன்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்