Loading

நவிலன் வீடியோ கால் வர சொல்லி கெஞ்ச.

சிறிது போக்கு கட்டி விட்டு அவனிடம் வீடியோ காலில் பேசினாள்.

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ,இருவரும் ஒருவரை  ஒருவர் வீடியோ காலில் பார்த்து பேசிக் கொள்கிறார்கள்..

” எதுக்குடா இவ்வளவு காசு போட்டு போன் வாங்கி இருக்க?” என்று கேட்டாள் .

“அது என்ன வாரம் வாரம் வாங்குற பொருளாடி..?” என்றான்.

“அது சரி ..!” என்று புன்னகை பூத்தாள்.

அதன் பிறகு, சிறிது காதல் பேச்சு வார்த்தைகள் செல்ல.. நேரத்தை பார்த்த வனிதா..” சரிடா டைம் ஆகுது.. நீ காலைல வேலைக்கு வேற கிளம்பனும். தூங்கு.. நேரம் கிடைக்கும்போது போன் பண்ணு..” என்றாள்.

“அது என்னடி நேரம் கிடைக்கும்போது? நீ போன் பண்ணு.. என்னால பேச முடிஞ்சா பேசுவேன் .இல்லனா வேலை இருக்குன்னு சொல்லிடுவேன். சரியா ? நான் இப்ப இல்ல எப்பவும் உன்னோட நவி தான்..!” என்று போனில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தவன்..

சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்திருந்தான்..

நிவேதாவிற்கு வனிதாவிடம் பேசிவிட்டு வைத்த உடன் மெசேஜ் செய்திருந்தான்.. “ப்ரீ ஆயிட்டு நாளைக்கு போன் பண்ணு!”என்று,

அவளும் மறுநாள் கால் பண்ணி இருக்க..

நிச்சயம் நடந்ததிலிருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் கூறினான். அவளுக்கு போன் வாங்கி கொடுத்ததை கூறியவன். அவளது நம்பரையும் நிவேதாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு,” டைம் இருந்தா பேசு !” என்றான்.

“நான் அவ கிட்ட பேசி என்னடா பண்ண போறேன்.. ?நீ பேசு .!” என்றாள் சிரிப்புடன்..

“சரி ஓகே ! அது உன் விருப்பம் பேசு பேசாட்டி போ…ஆனா நம்பர் வச்சுக்கோ!” என்றவன் வேறு எதுவும் கூறவில்லை..

மற்றபடி திருமணத்தை பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு, அவளின் மகன் கௌஷிக்கின் உடல்நிலை பற்றி பேசிவிட்டு வைத்திருந்தான்.

தினமும் இப்படியே நவிலன் , வனிதா இருவரது காதலும் போன் வழியாக வளர்ந்தது..

தினமும் இங்கே இவர்கள் தங்களின் காதலை வளர்த்துக் கொள்ள ..

நிவேதா வனிதாவிற்கு போன் செய்யலாமா ?வேண்டாமா? என்று யோசனையில் இருந்தாள் ..

ஆனால், வனிதாவாகவே ஒரு நாள் போன் செய்து இருந்தாள்.

” சொல்லு வனி எப்படி இருக்க? நிச்சயதார்த்தம் எப்படி போச்சு ?இப்ப சந்தோஷமா இருக்கியா?” என்று எடுத்த எடுப்பியிலே நான் ஸ்டாப்பாக நிறுத்தாமல் குதூகலத்துடன் இத்தனையும் கேட்டு முடிக்க ..

“ஃபர்ஸ்ட் மூச்சு விடுங்க அண்ணி. தண்ணி குடிங்க..” என்றாள் சிறுப் புன்னகையுடன்…

அவளும் சிரித்துக் கொண்டே,” இப்ப ஹாப்பியா ?”என்றாள்.

” நம்பர் இருக்குல்ல கூப்பிட்டு இருக்கலாம் இல்ல..”

“கூப்பிட லேசா யோசனையா இருந்துச்சு ..அதான்..”

” இது எனக்கு அவர் வாங்கி கொடுத்த போன்  அண்ணி.இப்ப என்ன வீட்ல யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க”

“தெரியுது தான். இருந்தாலும்,..” என்று தயங்கினாள்.

” சரி விடுங்க!” என்று இத்தனை நாட்கள் நடந்த அனைத்தையும் மேலோட்டமாக அவளிடம் சொல்ல கூடிய விஷயத்தை மட்டும் கூறியிருந்தாள்..

அவ்வப்போது நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நிவேதாவும் , வனிதாவும் பேசிக்கொண்டார்கள்..

திருமண நாளும் அருகில் நெருங்கியது.. திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான். நிவேதா மகனை சேலத்தில் பெட்டில் அட்மிட் செய்யும்படியாக இருந்தது..மூச்சுத் திணறல் பிரச்சினையின்  காரணமாக.

அப்போது வனிதா போன் செய்திருந்தாள்.

“சொல்லு வனி!” என்றாள்..

“ஹலோ! “என்றவளுக்கு வெறும் குழந்தைகளின் அழு குரலாக கேட்க…

“எங்க இருக்கீங்க?” என்றாள் கேள்வியாக,

“ஹாஸ்பிடலில் தம்பியை சேலம் கூட்டிட்டு வந்து இருக்கேன் ..”

“என்ன ஆச்சு ? இப்ப எப்படி இருக்கான் ?”என்றாள்.

” ஓகே டா.இப்போ பரவாயில்ல.. நீ சொல்லு ?கல்யாண பொண்ணு பிஸியா இருப்பீங்க ..இந்த டைம்ல என்னை கூப்பிட்டு இருக்கீங்க?”

” கல்யாணத்துக்கு வருவீங்க தானே?”  என்றாள் கேள்வியாக…

” நான் வ…” என்று கூறும் பொழுதே அங்கு வசந்த் கூப்பிட..

” சரி அண்ணி அப்புறமா பேசுறேன். அண்ணன் கூப்பிடுறாரு போல நீங்க தம்பியை பாருங்க. ப்ரீ ஆயிட்டு கூப்பிடுங்க .இல்லனாலும் , பாருங்க!” என வைத்து விட்டாள்.

திருமணத்திற்கு முன்னாடி நாள் காலை 11 மணியளவில் பெண் அழைப்பு வைத்துக் கொண்டார்கள்.

இங்கிருந்து பழனி செல்ல வேண்டும். தூரமாக இருப்பதால் இங்கு சீக்கிரமாக கிளம்பினால் தான் அங்கு சென்று ரூம் எடுத்து தங்கி, திருமணத்திற்கு தேவையான வேலைகளையும் பார்க்க சரியாக இருக்கும் என்று யோசித்தார்கள்.

பெண் அழைப்பு முடிந்து வனிதாவை நவிலன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். அவளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்துவிட்டு, இருக்கும் இரண்டு அறையில் ஒரு அறையில் தங்க வைத்துக் கொண்டார்கள்..

நவிலனை பார்க்கும் சூழல் ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவன் திருமண வேலையாக அலைந்து கொண்டு இருந்தான்.

பழனிக்கு இரு வீட்டில் இருந்தும் ட்ராவல்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள். மிக நெருக்கமான உறவினர்களும், அக்கம் பக்கம் இருக்கும் ஒரு சிலர் மட்டுமே அழைக்கப்பட்டார்கள்.. திருமணத்திற்கு,

போகும்போது இருவரும் ஒரே டிராவல்ஸில் சென்றாலும், தனித்தனியாக உட்கார வைக்கப்பட்டு இருந்தார்கள். மெசேஜில் பேசிக் கொண்டார்கள். போன் பேசும் படியாக இல்லை… உறவினர் கூட்டம் இருக்க, போன் பேசக்கூடிய சூழ்நிலை அமையவில்லை…

திருமண நாளும் வந்தது… பழனி முருகன் சன்னதி.

இருவரும் ஆசாரி சமூகம் என்பதால் ,அவர்கள் சமூகத்தில் திருமணத்தின் போது , மணப்பெண் மஞ்சள் நிற உடை அணிவது தான் வழக்கம்..

ஆகையால், அவள் மஞ்சள் நிற  பட்டு சேலையில் மிளிர்ந்தாள் … மங்கல மணம் வீசும் மேனியில் நாணம் பூத்திருந்தது.

தங்க நகைகள் ஒளி வீசியது .

அவளைப் பார்வையால் விழுங்கியபடி அவளின் முன் நின்றான் அவன்.

வெள்ளை பஞ்சகச்சத்தில் நேர்த்தியாக கட்டிய மரபின் பெருமையுடன். தோளில் அங்கவஸ்திரத்துடன் மணமகனுக்கே உரித்தான தோரணையில் இருந்தான்..

ஓர விழி பார்வையால் அவனை நாணம் கொள்ள செய்தாள்.

ஐயர் மாங்கல்யத்தை அவனிடம் நீட்ட..அவள் விழிகளை ஊடுருவி பார்த்தான்…தன்னவளின் சம்மதத்தை வேண்டி, அவனின் அந்த பார்வை மெதுவாக அவள் இதயத்தைத் தொட்டு இதம் பரவுவது போல உணர்ந்தாள்..

அவள் கண்களை மெதுவாக மூடி,

சிறு புன்னகையை உதட்டில் உதிர்த்தாள்… கண்கள் ஆனந்தத்தில் பனித்தது..

பழனி முருகனை மனதார வேண்டி, அவளின் சங்கு கழுத்தில் மஞ்சள் மணம் கமழும் மாங்கல்யத்தை கைகள் நடுங்க மெதுவாக அணிவித்தான்.

திருமணமும் நல்ல முறையில் நடந்தேற .. அடுத்தடுத்து ஒவ்வொரு சடங்குகளாக முடியவும்… திருமணம் முடித்த கையோடு அங்கவே நல்ல ஹோட்டலில் உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தால், உணவை முடித்துக் கொண்டு, சாமியை தரிசித்து விட்டு கிளம்பி விட்டார்கள்..

இங்கே மாலை 7:00 மணி போல் தான் வீட்டிற்கு வந்து இறங்கினார்கள்..

நேராக வனிதா வீட்டிற்கு சென்று இறைவனை வழிபட்டு விட்டு, பாலும் பழமும் கொடுத்தார்கள். அனைத்தையும் முடித்துக் கொண்டு, நவியின் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்..

அப்பொழுது இருவரையும் தனித்தனி அறையில் தான்  இருக்கக் கூறினார்கள்.

ஒரு சில உறவினர்கள் மட்டுமே இருக்க ..இரவு வனிதா இருந்த அறைக்குள் நுழைந்த சுந்தரி..

“குளிச்சிட்டு உனக்கு தோதான  புடவையை கட்டிக்கோ வனிதா ..”என்று கூறிவிட்டு சென்றார்..

அதன்படி அவளும் குளித்து,உடை மாற்றிக் கொண்டு வர ..இருவரையும் தனித்தனியாக உட்கார வைத்து சாப்பிட வைத்தார்கள் ..பெரிதாக யாரும் ஹாலில் கூட இல்லை.. ஆகையால் ,அவளுக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை..

இரவு 9 மணி போல நல்ல நேரம் பார்த்து ,அவனது ரூமுக்கு அவளை அனுப்பி விட ..

சிறிது தயங்கினாள்.

“என்னதான் பேசி பழகி இருந்தாலும் ,இப்போ கொஞ்சம் கூச்சமா தான் இருக்கும்.. பார்த்து  நடந்துக்கோ …! “என்று தன் மருமகளிடம் கூறிவிட்டு,  தான் இருப்பதாலே கூட தயங்கலாம் என்று இவர் அவளுக்கு முன்பாகவே தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் சென்று கதவை மூடிக்கொண்டார்..

தயக்கத்தை உடைத்து எறிந்தவள். ரூமுக்குள் நுழைந்தாள் . அவள் நுழையும் போது ,அவன் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

கல்யாண செலவுகளை பற்றி , அவளைப் பார்த்தவன்..” ஒரு நிமிடம்!” என்று அவளிடம் கைகாட்டி விட்டு , சிறிது நேரம் எதிரில் இருப்பவர்களிடம் பேசி விட்டு, அவளிடம் வந்தான் ..

அந்த சில நொடிகளில், அவள் தன் தயக்கத்தை உடைத்து ,அவனை ரசிக்க ஆரம்பித்து இருந்தாள் ..

“என்ன மேடம் வரும்போது நர்வஸா வந்த மாதிரி இருந்துச்சு ?இப்போ சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல ..?”என்று அவளை சீண்ட…

” என் புருஷனை நான் சைட் அடிக்கிறேன்… அதுக்கு எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு!” என்று தன் கழுத்தில் மின்னிய புது மாங்கல்யத்தை  தூக்கி காட்டினாள்..

அவள் அருகில் வந்த வேகத்தில் அவள் கன்னத்தில் தன்னையும் மீறி இதழ் பதித்தவன்.. “அச்சோ என் அழகு பொண்டாட்டி ! உனக்கு இல்லாத உரிமையாடி…!” என்று கூற ..

அவளுமே அவன் நெற்றியில் இதழ் பதித்து இருந்தாள் காதலாக..

அவளை தன் அருகில் அமர வைத்து, அவள் காதோரம் மெதுவாக அந்தரங்கமாக சில வார்த்தைகள் கிசுகிசுத்தான்…

“போடா பொறுக்கி நாயே…!” என்று வெட்கத்தை மறைக்கத் துடித்தவள், கண்ணில் சின்ன கோபம் காட்டினாலும்,அவனின் வார்த்தையில் கன்னம் சிவப்பேற,

அவனது நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.

தன்னவளின் அவஸ்தையை ரசித்தவன்.. அவளுள் புதைய ஆரம்பித்தான்..

இவர்களின் நெருக்கத்தை பார்த்து

நிலவுக் கூட நாணத்தில் மேகத்துள் ஒளிந்து கொண்டது.

அதன் பிறகு ,அங்கே அவர்களுக்கான நேரமாகியது…

காலை 6:00 மணி இருக்கும் அப்பொழுதும் வனிதா அசதியில் உறங்கிக் கொண்டிருந்தாள்..நவி இரண்டு முறை அழைத்துப் பார்த்தான் ..

“கொஞ்ச நேரம் தூங்க விடு… நவி… ப்ளீஸ்…!”

என்று அவன் மார்பில் முகம் புதைத்தபடி கெஞ்சினாள்.

அவள் குரலில் சோர்வு இருந்தது,

ஆனால் ,அதைவிட அதிகமாக அவனிடம் கொண்ட நெருக்கம் தெரிந்தது…

எத்தனை வருட  ஆசை, ஏக்கம்..

தன்னவனின் கை வளைவுக்குள் இருக்க வேண்டும்  என்பது..

இன்று அந்த ஆசை நனவாகி,

அவன் அணைப்பில் அவனின் பாதியாக இருக்கிறாள்..ஆனால்,

இது உண்மையா…?இல்லை விழித்தவுடன் கலைந்து போகும் கனவா…? என்று மனம் அச்சத்துடன் லேசாக துடிக்க…

“இது மாயையில்லை…”என்று உறுதிப்படுத்திக் கொள்ள,

அவனது மார்பில் மீண்டும் மீண்டும் முகம் புதைத்தாள்.

அவள் விரல்கள் அவன் சட்டையை இறுகப் பற்றி, அவனின்  சுவாசத்தை  உள்வாங்கிக் கொண்டு இருந்தாள்..

.அவனது நெருக்கத்தை உள்ளுக்குள் ரசித்தாள்..

கனவாய் தொடங்கிய காதல்,

இன்று அவன் கை வளைவுக்குள்

நிஜமாகத் தஞ்சம் அடைந்திருந்தது.

ரொம்ப நேரமாக அவளை எழுப்பி எழுப்பி பார்த்தவன். அவள் வசதியில் உறங்கவும், சரி சிறிது நேரம் தூங்கட்டும் என்று எண்ணியவன் குளிக்க சென்றான்.

அவன் குளித்துவிட்டு வந்து அவளை எழுப்பினான் ..

அப்பொழுதும் அவள் எழுந்து கொள்ளவில்லை..” கதவை அப்படியே திறந்து போட்டுட்டு  நான் போயிடுவேன்.. யாராச்சும் வந்தா எனக்கு தெரியாது…”  என்றவுடன்…

“சடார் “என்று அடித்து பிடித்து எழுந்தவள் ..அவனை முறைக்க ..

“சும்மாடி… அப்படியா விட்டுவிடுவேன்.. பதறாதே.. ஆனால் நேரம் ஆகுது பாரு..யாராவது தப்பா நினைப்பாங்க இல்ல… “

“போடா !”என்று முகத்தை திருப்பியவள் எழுந்து கொள்ள..

அவளைப் பார்த்து மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்..

சரி நீ வெளியே போ நான் குளிச்சிட்டு வரேன் “என்று சொல்ல…

“ஏனாம்.. நான் இங்க இருந்தா என்னவாம்?” என்று நாக்கை உள் கன்னத்தில் வைத்து சுழற்றியபடி புருவம் ஏற்றி,கேட்க..

“நான் புடவை கட்டணும் நவி பாத்ரூமில் கட்ட முடியுமா? ரூம்ல தான் வந்து கட்டணும் ப்ளீஸ் போ!” என்றாள்..

“நேத்தே மொத்தமா முழுசா பார்த்தாச்சாம்… அப்புறம் இன்னும் என்ன ? வேறு எதுவும் நான் பார்க்காதது  பாக்கி இருக்கோ?”

என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் அருகே நெருங்கி காதில் கிசுகிசுத்தான்..

அவள் இதயம் நின்று துடித்தது. அவன் அருகாமையில்,

“அதெல்லாம் வேற… இது வேற…. போடா ”  என நாணத்தில் நெளிந்தாள் ..

அவன் வெளியே சென்று விட.. இவள் குளித்து முடித்து வரவும்.. இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்றார் சுந்தரி..

  இறைவனை தரிசித்து விட்டு, இருவரும் டீ குடித்தபடி இருந்தார்கள்..

அவன் டீ குடித்துவிட்டு வெளியே கிளம்ப..

” எங்கடா போற? இப்போ?” என்றார் சுந்தரி…

” மா கொஞ்சம் வேலை இருக்குமா.. நாளைக்கு ரிசப்ஷன் இருக்கு இல்ல..?”

“அதுக்கு ?..” என்றார்.

திருமணம் முடிந்த இரண்டாவது நாள் மாலை ரிசப்ஷன் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆகையால் ,வேலை இருப்பதை குறிப்பிட்டான் ..

“அதை யாரையாவது வச்சு பாத்துக்கலாம்.. அதுக்காக கல்யாணம் ஆன  மறுநாளே இவளை இங்க வீட்டுல தனியா விட்டுட்டு வெளியே போவியா ?” என்று கூற..

அவளோ ,சிரித்துக் கொண்டு “அவர் போகட்டும் அத்தை.. ஒன்னும் பிரச்சினை இல்லை. நானும் இங்க பழகனும் இல்லையா..?” என்றாள்.

” ஜாடிக்கேத்த மூடி தான் போங்க..!”என்று சிரித்தவர் எதுவும் பேசவில்லை ..

அதன் பிறகு சுந்தரியிடம் கேட்டு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று தனக்கு தெரிந்த வேலைகளை செய்தாள் ..

“வனிதா உங்க வீட்டுக்கு எப்ப போறீங்க?” என்று கேட்டார் …

இவ்வளவு நேரம் சிரித்த முகத்துடன்  இருந்தவள் .. அடுத்த நொடியே முகம் சுருங்கிப் போனாள்..

“என்ன வனிதா நான் கேட்டுட்டு இருக்கேன் அமைதியா இருக்க?”

” அங்க போகணுமா அத்தை?”என்று கேட்டாளே பார்க்கலாம்..

“என்ன ?” என்றார் அதிர்வாக..

” இல்ல அங்க போனா  அண்ணி ஏதாவது பேசுவாங்க… அது மட்டும் இல்லாம … சொந்தக்காரங்க யாராவது இருப்பாங்க ஏதும் பேசிட கூடாது இல்லையா அவரை..” என்று தயங்கினாள்.

“இவ்வளவுலாம் யோசிக்காத வனிதா. நீ பொறந்து வளர்ந்த வீடு.  உனக்கும் எதிர்பார்ப்பு , ஆசை எல்லாம் இருக்கும்.. அங்க அண்ணனுக்கும், அண்ணிக்கும் கூட தன் மகளுக்கு நிறைய செய்யணும்னு எதிர்பார்ப்பு இருக்கும் இல்ல..உன் அண்ணியை மட்டும் மனசுல வச்சு யோசிக்காத..

நான் உங்க கல்யாணத்தை முடிவு பண்றதுக்கே இதுக்கு தான் யோசிச்சேன்.. ஆன,எனக்கு இப்ப எந்த  யோசனையும் கிடையாது .. நவி இந்த அளவுக்கு எல்லாம் யோசிக்க மாட்டான். அவங்க ஏதோ பேசினா பேசிட்டு போகட்டும்.. அவங்க பேசுறாங்கனு கணக்குல எடுத்துட்டா வாழவே முடியாது .. அப்பா அம்மாவ பாரு. அப்படி யாரையாவது பேச விட்டுருவாங்களா? அவ்வளவு சீக்கிரம் அண்ணனும் ,  அண்ணியும் நம்ம நவியை பேச விட்டு விட மாட்டாங்க.. சொந்தக்காரங்க கூட பேசிட முடியாது..” என்று தன் மருமகளை தேற்றியவர்..

“காலை சாப்பாடு சாப்பிட்டுட்டு கிளம்புறீங்களா?”என்றார்..

அவளோ யோசனையில் ஆழ்ந்தாள்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்