Loading

நிச்சயத்திற்கு தேதி குறித்து,  வேலைகள் ஒவ்வொன்றும் இரு வீட்டு பக்கம் இருந்தும் கடகடவென்று செய்ய ஆரம்பிக்கப்பட்டது ..

நவிலன் வனிதா வீட்டில் பேசிவிட்டு வந்த ,அன்று  இரவே நிவேதாவிற்கு ,”நாளை ஃப்ரீயான பிறகு போன் செய்!” என்று மெசேஜ் செய்திருந்தான்.

அதேபோல் அவள் மறுநாள் காலையில் தன் வேலைகளை முடித்துவிட்டு, அவனுக்கு அழைக்க. நேற்று நடந்த அனைத்தையும் கூறியிருந்தான் ..

அவளும்,” சந்தோஷம்டா!” என்று கூறியவள் ..

“நிச்சய தேதி குறிச்சாச்சா ?”என கேட்டாள்.

அவனும் கூறிய பிறகு,” சரி..டா பணம் இருக்கா? நான் அவர்கிட்ட கேட்கிறதா ?”

” இல்லடி வேணாம் ..நான் இங்க பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டு இருக்கேன். வெளியே தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு இருக்கேன்”

“ஏன்? என்கிட்ட வாங்க மாட்டீங்களா சார் ?”என்றாள் சிறிது கோபத்துடனே ..

“லூசு.. அப்படி எல்லாம் கிடையாது. பணம் நம்ம ரெண்டு பேத்துக்கு நடுவுல வரக்கூடாது. ரிலேஷன்ஷிப் ரொம்ப முக்கியம் ?”

“ஏன்? மத்த பிரண்ட்ஸ் கிட்ட ,தெரிஞ்சவங்க கிட்ட  எல்லாம் தானே வாங்குற ?அப்போ அந்த ரிலேஷன்ஷிப் …”

“அதுவும் இதுவும் ஒன்னு கிடையாது சரியா? எனக்கு தேவையான போது தோள் கொடுக்க நீயும், உனக்கு தேவையான போது தோள் கொடுக்க நானும் இருப்போம்..அதான் நம்ப நட்பு.. பணம் காசு நமக்கு நடுவுல எப்பவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் வரக்கூடாது.. ஓகேவா!” என்றான் ..

அவளும் சிரித்த முகத்துடன் “சரி’ என்று அமைதியாகி விட்டாள்.

நிச்சயதார்த்தத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, நவிலன் சுந்தருக்கு ஃபோனில் அழைத்து இருந்தான் ..

மதிய உணவு நேரத்தில்,”சொல்லுடா நவிலா?” என்ற சுந்தர் கேட்க..

” அண்ணா வீட்லையா இருக்கீங்க?”

“இல்லடா கடையில இருக்கேன். சொல்லு ?”

“நான் இங்கே நகை கடையில இருக்கேன்.. மோதிரம் எடுக்க வந்திருந்தேன்.. அதான் ..”என்று தயங்கினான்..

” ஓ! சரிடா நான் வீட்டுக்கு போக கொஞ்சம் நேரமாகுமே.சரி நீ அனுப்பி விடு .. பார்க்கிறேன் ..”என்றான் ..

“அண்ணா !”என்றான் தயக்கமாக..

” நீ அனுப்பி விடுடா! நான் பார்க்கிறேன்..” என்றவன் வேறு எதுவும் பேசவில்லை..

இங்கு நவிலன் வைத்தவுடன் சுந்தர் தன் தாயின் போனுக்கு அழைத்திருந்தான்.

கோமதி ,” சொல்லு சுந்தர்.!”என்க.

“அம்மா வனிதா கிட்ட போன் குடுங்க ..” என்றான்.

அவரும் கொடுக்க,” வனிதா தனியாவா இருக்க ?”என்றான்..

  அவன் அவ்வாறு கேட்ட பிறகு ,பேசிக்கொண்டே தனியாக வந்தவள்..” சொல்லு  அண்ணா?” என்றாள்..

” சரி (whatsappல) வாட்ஸ் ஆப் ல போட்டோ அனுப்பி இருக்கேன் பாரு..” என்றான்..

அவனிடம் பேசிக் கொண்டே, தனது அண்ணன் கூறியது போல், வாட்ஸ் ஆப்பை ஓப்பன் செய்தாள்..

அதில் இருக்கும் இரண்டு போட்டோக்களைப் பார்த்தவள்.

” கடையிலையா இருக்க?”  என்றாள் .

“இல்ல அவன் எனக்கு போன் பண்ணான் ..”என்று நவிலன் போன் செய்ததை கூற.

” சரி “என்றவள் தனக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்தாள். அதன் பிறகு, அதை நவிலனனுக்கு அனுப்பி வைத்திருந்தான் சுந்தர்.

” சரி அண்ணா!” என்றவன் வேறு எதுவும் கூறாமல் வைத்து விட்டான்..

ஏற்கனவே ,அவளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று எண்ணிய புடவை ஒன்றை தேர்வு செய்து இருந்தான் ..

பெரியவர்களிடம் உடை எடுப்பதற்கு கேட்ட போது, அவர்களே உனக்கு விருப்பமானதையே எடுத்துக்கோ! என்று கூறி விட்டார்கள் ..

அவன் நிச்சயத்திற்கு தேவையான உடை எடுப்பதற்கு அழைத்த போது, தன் மகளை தான் சங்கர் ,கோமதி இருவரும் பார்த்தார்கள்.. அவள் ஒரே வார்த்தையாக உங்களுக்கு புடிச்ச மாதிரி எடுத்துக்கோங்க.. என்று முடித்துக் கொள்ள .

அவள் கூறுவதில் ,அவனது விருப்பம் தான் அவளுக்கு தேவை என்பதை உணர்ந்த பெற்றவர்களும் உனக்கு புடிச்ச மாதிரி எடுத்துக் கொடு டா என்று முடித்துக் கொண்டார்கள்.

ஆகையால் ,மோதிரம், புடவை மாலையில் இருந்து அனைத்தும் அவனது விருப்பமாகவே அமைந்தது..

மெ

ஜந்தா கலர் புடவை ..கோல்டன் கலர் பார்டர் வைத்த சரிகை என அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான்..

நிச்சயதார்த்த நாளும் வந்தது.. காலை 9:00 டு 12 என்று நேரம் குறித்து இருக்க..

எட்டரை மணி அளவில் தன் வீட்டில் இருந்து கிளம்பினான் நவிலன். நடந்து வரும் தூரம் தான் என்பதால் ,எந்த வாகனங்களும் வைக்க தேவையில்லை ..

ஒரு சிலர் மட்டும் பைக்கில் வந்தார்கள்.. சுந்தர் ஏற்கனவே எதுவும் பேசக்கூடாது நிச்சயம் முடியும் வரை என்று கூறி இருந்தான் மனைவி சுகந்தியிடம்..

சுந்தர் மட்டும் இல்லை.. சங்கருமே முதல்முறையாக தன் மருமகளிடம் குரலை உயர்த்தி தான் பேசி இருந்தார் ..

“நாலு பேருக்கு முன்னுக்க என் மகளுக்கு பேசி இருக்க நல்ல விசேஷத்தை கெடுக்கிற போல ஏதாவது வாய் திறந்தா உன் அத்தை சொல்றதெல்லாம் கிடையாது.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. உங்க அப்பா ,அம்மாவை வர வச்சு பேச வேண்டியது இருக்கும். ஞாபகத்துல வச்சுக்கோ! இப்ப மட்டும் கிடையாது…. கல்யாணம் முடியிற வரை வாய் திறக்க கூடாது. கல்யாணம் முடிஞ்சு என் மக இங்க வர போக இருக்கும்போதும் உன் அதிகாரத்தை எல்லாம் இங்க காட்டுற வேலை வேண்டாம்.. உன் புருஷன் ஓட எதுவா இருந்தாலும் வச்சுக்கோ. இப்ப வர என் பையனுக்காக தான் அமைதியா இருக்கேன்..என் பொண்ணோட விசேஷம் நல்லபடியா நடந்து முடியணும். எந்த ஏழரையும் கூட்ட மாட்டேன்னு நினைக்கிறேன். சொன்னது நினைவில் இருக்கட்டும். இல்ல நிச்சயதார்த்தத்துக்கு வர உங்க அப்பா அம்மா கிட்ட பேச வேண்டியது வரும்…”என்று கூறியிருந்தார்..

ஆகையால், வாய் இறுக்க மூடிக் கொண்டாள்.

‘சனியன் இந்த வீட்டை விட்டு ஒழிஞ்சு போனா போதும்! நமக்கு அதுவே.. அவ எப்படியோ போறா.. நமக்கு என்ன வந்துச்சு!’ என்று முனகிய படி அமைதியாகி விட்டாள்.

நிச்சயதார்த்தத்திற்கு இருவரையும் அருகருகே நிற்க வைத்தார்கள். மோதிரம் அணிவிப்பதற்கு முன், ஒரு நொடி அவளது இரு விழிகளையும் காதல் பொங்க தனது கூர்மையான விழிகளால் ஆழமாக நோக்கினான்…

காதல் துளிகள் தேங்கிய அவளது விழிகள் பனிக்க, முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் அவனை நோக்கினாள்.அந்த ஓர் பார்வை போதுமானது என்பது போல், அவன் மெதுவாக அவளது பட்டு போன்ற விரலில் மோதிரத்தை அணிவித்தான்.
நிச்சயதார்த்தமும் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் இனிதே நடந்தேறியது…

அருகருகே அமர்ந்திருந்த இருவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

அங்கு நிலவிய

சற்றே சங்கடமான அமைதியை உடைத்தபடி பிரேம்,

ஊட்டி விடுடா மச்சான்!” என்று குரல் கொடுக்க, அங்கு இருந்தவர்களின் முகங்களில் புன்னகை மலர்ந்தது…

அவளது கன்னம் லேசாக சிவந்தது…எதிர்பார்ப்புடன் அவனது முகத்தை ஓர விழிப் பார்வையால் ஏறிட்டாள்.

அவனது நெருக்கம் அவளை திக்கு முக்காட செய்தது.. அவஸ்தைக்கு உள்ளானாள். இனிமையான அவஸ்தையே..!

கிட்டத்தட்ட எத்தனை வருடங்களுக்கு பிறகு ,அவனது அருகாமையை உணர்கிறாள். அவனது அருகில் இருப்பதே அவளுக்கு வானத்தில் பறப்பது போல் தான் இருந்தது..

அவளின் ஏக்க சுமந்தப் பார்வையை உணர்ந்தான் தான். ஆனால் ,இந்த சூழலுக்கு சரிப்பட்டு வருமா? வராதா? என்று யோசனையில் என்ன செய்வது என்று புரியாமல் சிறிது தத்தளித்தான்.

அவளுக்காக அவளின் ஆசைக்காக என்று செய்ய போய்..அதை யாரும் பேசும் பொருளாக ஆகி விடக்கூடாது என்று எண்ணியவன்.. அமைதிக்காக இருக்க…

இருவரின் அருகில் வந்த சுந்தர்.. “ஊட்டி விடுடா ..இப்ப இதெல்லாம் சகஜம் ஆயிடுச்சு!” என்று அவன் தயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான் ..

சுற்றி அனைவரையும் பார்க்க.. சங்கரோ கை மட்டும் அசைத்தார். ‘ஊட்டி விடு!’ என்பது போல் ,அதன் பிறகு தயக்கத்தை உடைத்து தன்னவளுக்கு ஊட்டி விட்டான்..

கலங்கிய விழிகளை ஒற்றை விரலால் துடைத்தபடி, வாய் திறந்து அவன் ஊட்டிய உணவினை வாங்கிக்கொண்டாள் ..அவளும் அவனுக்கு ஊட்டி விட்டாள் ..

ஆரம்பத்தில் இருந்தே நவிலனின் போனிலும்,

தனது கேமராவிலும் ஒவ்வொரு நிகழ்வையும் தத்ரூபமாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பிரேம் , இப்போது இருவரும் உணவு பரிமாறி கொள்ளப்பட்ட நிகழ்வையும் போட்டோ எடுத்தான்…

நிச்சயதார்த்தம் நல்ல முறையில் நடந்து முடிய.. தன் உறவினர்களுடன் தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தான்.

வனிதாவிற்கு சொந்தத்தில் உள்ள வயதான ஒரு பாட்டியை மட்டும் துணைக்கு விட்டுவிட்டு மாலை 6:00 மணி போல் நவிலனனின் வீட்டிற்கு சங்கர் ,கோமதி இருவரும் தங்களது உறவினர்கள் படைச்சூழ மாப்பிள்ளை வீட்டை பார்க்க கிளம்பினர்..

அருகில் தான் உள்ளது. என்பதால் ஆறு மணிக்கு கிளம்பினால் போதும் என்று முடிவு செய்தார்கள்..

சுகந்தி எப்படியும் யாரையாவது வைத்து மட்டம் தட்டலாம் என்று எண்ணத்துடன் தான் இருந்தாள் .ஆனால், அங்கு சென்ற பிறகு அங்கு இருக்கும் வீட்டின் நேர்த்தியையும், சுத்தத்தையும் உணவின் சுவையையும் பார்த்த பிறகு அவளால் வாய் திறக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.

இரவு உணவு என்று கூறிய பின்பு கூட ,இட்லி ,தோசை மட்டும் தான் இருக்கும்  அதை தாண்டி வேறு என்ன போட்டு விடுவான் என்று எண்ணினாள். ஆனால், அவனோ , தன்னவளுக்காகவும், தன் தாயின் பெருமையையும் நிலைநாட்ட வேண்டும் என்று எண்ணியவன்.. எந்தக் குறையும் வைக்க கூடாது என்று எண்ணியே..

நிறைய உணவு பதார்த்தங்களை அடுக்கி இருந்தான். மினி இட்லி ,பொடி தோசை ,சப்பாத்தி நாண்,பன்னீர் குருமா. மூன்று வகையான சட்டினி..குலோப் ஜாமுன். ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வைத்து சிறிய பவுலில் ஒவ்வொருவருக்கும் போட்டுக் கொடுத்தான். காலிஃப்ளவர் சில்லி, காளான் பிரியாணி ,சிறிது தயிர் சாதம் அதில் திராட்சை மாதுளம் பழம் இணைத்து.. என பலவகை உணவு பதார்த்தங்களை அடுக்கவும்.

வீட்டிலும் தன்னால் முடிந்த அளவிற்கு ஓரளவிற்கு அனைத்தையும் ஒதுங்க வைத்து சுத்தம் செய்து இருந்தான்.. ஆடம்பரமாக எதுவும் செய்யவில்லை.

வீடு இரண்டு அறைகள் கொண்டது.. கீழே வீட்டு வாயிலில் காம்பவுண்ட் சுற்றி தரையாகவும் உள்ளே சிறிது டாப் போல டைல்ஸ்.. ஒரு பக்கம் செல்ப் அடுக்கப்பட்டிருந்தது ..சுந்தரி இடைப்பட்ட காலத்தில் தையல் தைக்க  ஆரம்பித்திருந்தார்..

தனிமையை போக்குவதற்காக..

ஆகையால், தையல் மெஷின் அதை ஒட்டி செல்ஃபில் தைக்கும் துணிகள் அடுக்கி இருந்தது.. அதற்கு எதிர்ப்புறம் வெளியே பாத்ரூம் இருந்தது.. அட்டாச் பாத்ரூம் தான் நல்லது கெட்டதுக்கு சென்று வந்தால் உபயோகிப்பதற்கு, ஓரளவுக்கு பெரிய ஹால்.. இரண்டு ஷோபா இருந்தது.. டிவி ஹாலில் ஒரு செல்ப் ..ஹாலை ஒட்டியவாறு கிச்சன், அங்கவே மளிகை பொருட்கள் செல்ஃபில்  அடுக்கிக் கொள்வதற்கு போல் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிச்சன் அடுத்து சாமி ரூம் .. அதேபோல் சாமி ரூமில் அரிசி மூட்டைகள் இறக்கி வைப்பதற்கு சிறிது இடமும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது ..

அதன் பிறகு, இரண்டு பெட்ரூம்.. ஒரு பெட்ரூமில் அட்டாச் பாத்ரூம். இன்னொரு பெட்ரூம் சாதாரணமாக இருந்தது.. மேலே மாடி.. அனைத்தையும் பார்த்தவர்கள். ஓரளவிற்கு அவர்களின் வசதிக்கு சிறிய வீடாக இருந்தாலும், நேர்த்தியாகவும் அதே நேரம் இந்த வயதில் அவனே சொந்த காலில் நின்று உழைத்து வீடு கட்டியிருக்கிறான் என்று எண்ணும்பொழுது அவனை பெருமையாகவே பேசிவிட்டு உறவினர்கள் கிளம்பி இருந்தார்கள்..

இவளுக்குத்தான் வயிறு எரிந்தது. இவனை மட்டம் தட்ட முடியவில்லை என்று.. நிச்சயதார்த்தத்தில் எந்த இடர்பாடுகளையும் செய்ய முடியவில்லை .இவனை குறை கூறவும் எதுவும் வழி இல்லை என்று எண்ணி மனதிற்குள் குமைந்தாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்