Loading

அத்தியாயம் 33

வாகனங்களின் இரைச்சலுக்கும், ஜன நெரிசலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது ஏ-ஸ்கொயரின் தொழிற்சாலை… 

அங்கே தனது கிளை,அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் அபி… அவனது பார்வை முழுக்க மடிக்கணினியில் இருந்தாலும் கவனம் முழுக்க ராமின் பேச்சில் தான் இருந்தது…

“இன்னைக்கு ஸ்பின்டில்ஸ் முத்தாயிரம் வந்திருக்கு சார்… டுவென்டில இருபதாயிரம் வந்திருக்கு சார்…போர்ட்டில ஏழாயிரமும், எயிட்டில மூவாயிரமும் வந்திருக்கு” 

 “காட்டன் எயிட்டியும், வேஸ்ட் டுவென்டியும் ஆயிருக்கு” என்றதும், ஒரு நிமிடம் கைகள் நின்று பின் மீண்டும் மடிக்கணினியை தட்டினான் அபி.. 

“அப்பறம், நாளைக்கு காட்டன் சப்ளையர்ஸ் மீட்டிங் இருக்கு சார்…” 

“அண்ட் உங்களுக்கு வந்த மெயிலெல்லாம் ஷாட் லிஸ்ட் எடுத்து அனுப்பி இருக்கேன். ஒன்ஸ் செக் பண்ணிடுங்க சார்…” பள்ளி மாணவன் ஆசிரியரிடம் பாடம் ஒப்பிப்பது போல் அனைத்தையும் ஒப்பித்து முடித்திருத்தான் ராம்..

 

“ஓகே ராம்,முக்கியமான மீட்டிங்கெல்லாம் ஒன்ஸ் ரீமெண்ட் பண்ணிடுங்க. பர்சேஸ் மேனேஜர் கிட்ட சேலத்தில ஏலத்துக்கு எடுத்த பருத்தி பில்லெல்லாம் வாங்கிட்டீங்களா? அந்த பில்லெல்லாம் ரீ செக் பண்ணிட்டு எனக்கு அனுப்புங்க…அப்பறம்” என ஆரம்பித்தவன் அடுத்தடுத்த வேலைகளை கூறினான்… 

அபி சொல்ல சொல்ல அனைத்தும் குறித்துக் கொண்டவன் சற்றே தயங்கி “நாளைக்கு எனக்கு ஹாஃப் டே லீவ் வேணும் சார்” என்று கேட்டான்..  

“ஏன்” என்பதை போல் புருவத்தை உயர்த்தி பார்த்தவனிடம்  

“கொஞ்சம் பெர்சனல் ஒர்க் சார்” என்றதும் நீண்ட நெடிய பெருமூச்சுடன் “எது பண்ணாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க ராம். இதுல உங்க இரண்டு பேர் வாழ்க்கை மட்டும் அடங்கி இருக்கல, பசங்க வாழ்க்கையும் அடங்கியிருக்கு ” என்றான்…   

அபியின் பேச்சில் விழிகள் தன்னாலேயே விரிய “சார் உங்களுக்கு.. எப்படி” அதற்கு மேல் கேட்க முடியாமல் தடுமாறினான் ராமன். 

அவனை அழுத்தமாக பார்த்தபடி “நம்ம வக்கில் தான் சொன்னாரு” என்றான்.  

அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பெருமூச்சுடன் தன் முதலாளியை பார்த்தவன் “என்னால அவளை மன்னிக்க முடியல சார்…” என்றான்.

“நீங்க அவங்களை மன்னிக்க வேண்டாம்…மறந்துடுங்க ராம்…” என்றதற்கு பதில் பேசாமல் அமைதியாக நின்றான். 

மறக்க கூடிய விஷயமா அது? தன்னை அவமானப்படுத்தி பேசி இருந்தால் கூட இத்தனை தூரம் சென்றிருக்க மாட்டானோ என்னவோ… ஆனால் அவள் அவமானப்படுத்தியது தன் தங்கையை அல்லவா? தாய், தந்தையில்லா பெண்ணை ஒரு தாயை போல் பார்த்துக் கொள்வாள் என்று தானே அவளை மணம் முடித்து அழைத்து வந்தான்.

ஆனால் அவள் செய்தது என்ன? என் தங்கையை ஊரார் முன் அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் அவளது நடத்தையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அழைத்தது எல்லாம் எப்படி அவனால் ஏற்றுக் கொள்ள முடியும்.

உண்மையை சொல்லப்போனால் இன்றைக்கு வரைக்கும் அந்த நாளின் இரவை அவனால் மறக்க முடியவில்லை… கண்களை இறுக மூடித் திறந்தான்.

அதே நேரம், ராமனின் அமைதியில் மேலும் தொடர்ந்தான் அபிநயன் “அன்னைக்கு அவங்க நடந்துக்கிட்டது தப்பு தான் இல்லைன்னு சொல்லல. அதுக்காக அவங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்க வேண்டாம்…” 

“ அப்படியே அவங்களுக்கு தண்டனை கொடுக்க நினைச்சா? கொஞ்ச நாள் பேசாம இருங்க… இல்லையா கோபம் போற வரைக்கும் சண்டை போடுங்க.. அதை விட்டுட்டு டைவர்ஸ் வரைக்கும் போறது சரியா தோணலை…” என்றதற்கு துளியும் பதில் பேசவில்லை ராமன்… 

அவனது பதிலை இவனும் எதிர்பார்க்கவில்லை என்பதை போல, மடிக்கணினியில் பார்வையை திருப்பிக் கொண்டான்… 

“சரிங்க சார், நான் மேனேஜருக்கு கால் பண்ணி பில் டீடெயில்ஸ் மொத்தமா அனுப்ப சொல்றேன்” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.. 

செல்லும் ராமை ஒரு பார்வை பார்த்தவன் “அண்ணனும், தங்கச்சியும் என் பேச்சை கேட்கவே கூடாதுன்னு இருப்பாங்க போல” என முனகி கொண்டே வேலையில் ஆழ்ந்தான். 

****

அதுவொரு சந்தியாக் காலப் பொழுது… சூரியன் மெல்ல அடிவானை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

அதே நேரம், பள்ளி முடிந்து சிறக்கில்லா பறவைகளைப் போல வெளியில் ஓடி வந்தனர் மாணவர்கள். அவர்களுள் குந்தவியும், சோழவும் அடக்கம்.

கைப் பையோடு ஓடி வந்த பிள்ளைகளை சிரிப்போடு நெருங்கினாள் ஆனந்தி… 

“குளோரி எங்களுக்கு ஒன் வீக் லீவ் தெரியுமா? லீவுக்கு நாங்க எந்த ஊருக்கு போனோமோ அதை பத்தி சொல்லணும்னு எங்க மிஸ் சொன்னாங்க” குதித்துக் கொண்டே கூறிய பிள்ளைகளிடம் பள்ளிப் பையை வாங்கியவள் 

“அப்படியா? அப்ப குந்தவியும், சோழவும் எந்த ஊருக்கு போலாம்னு பிளான் பண்ணி இருக்கீங்க?” எனக் கேட்டதும் இருவருமே “டோலக் பூர்” என்றனர்… அவர்களது பதிலில் வெறும் வாயிலேயே புரையேறியது அவளுக்கு…  

தலையை தட்டிக் கொண்டே“என்ன டோலக் பூரா?” அதிர்ந்த குரலில் கேட்டாள். மங்கையின் அவளது அதிர்ந்த முகத்தை பார்த்து பிள்ளைகள் இருவரும் வாயில் கை வைத்து சிரித்தனர். 

இருவரும் தன்னை கேலி செய்கின்றனர் என்பது தாமதமாகவே புரிய “அடிங்க…உங்களை” என இருவரையும் பிடிக்க முயன்றாள். கிளிக்கி சிரித்தபடி இருவரும் ஆனந்தியின் ஸ்கூட்டியை நோக்கி ஓடினர். 

“ஹேய் பார்த்து போங்க” என சிரித்துக் கொண்டே அவர்களின் பின்னால் ஓட, அங்கே சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து இறங்கி நின்றான் அபிநயன்.  

அவனைக் கண்டதும்மூவரும் சடன் பிரேக் போட்டு நின்றனர். ‘இவரு எங்க இங்க ‘ என்பதை போல் ஆனந்தி பார்க்க, இளையவர்கள இருவரும் தந்தை திட்டுவாரோ என்ற அச்சத்தில் நின்றனர்  என்றால் ஆனந்தியோ ‘ கழுதை வயசாகுது நடு ரோட்டுல ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்க? கொஞ்சமும் அறிவில்லையா?’ என்ற திட்டை எதிர்ப்பார்த்து நின்றாள்… 

இங்கு அவனோ முகத்தை கடுமையாக வைத்தபடி

“கார்ல ஏறுங்க” என்றான். பேச்சு பிள்ளைகள் இருவரிடத்தில் இருந்தாலும் பார்வை ஆனந்தியின் மேல் அழுத்தமாக பதிந்தது.

ஆனந்தியை திரும்பி பார்த்துக் கொண்டே இளையவர்கள் இருவரும் காரில் ஏறிக் கொள்ள, இங்கு அவளோ, “ஓடு டா கைப்புள்ளை” என முனகி கொண்டே தனது வண்டியை நோக்கி நடந்தாள். 

“உங்களையும் சேர்த்து தான் சொல்றேன் மேடம். கார்ல ஏறுங்க” கைகளை கட்டியபடி கூறியவனின் தொனி இவளுக்கு ஒரு பக்கம் கடுப்பையும், ஒரு பக்கம் கிளியையும் கொடுத்தது. 

“இல்லை சார், பரவாயில்ல, நீங்க முன்னாடி போங்க… நான் உங்க பின்னாடியே ஸ்கூட்டில வரேன்…” கைகளை அலையலையாக ஆட்டியபடி கூறினாள். 

“எதுக்கு? என் காருக்கு பின்னாடியே வந்து நான் எங்கெல்லாம் பிரேக் போடறனோ அங்கெல்லாம் நீயும் பிரேக் போட்டு, வண்டியை பேலன்ஸ் பண்ண  முடியுமா கீழே விழறதுக்கா?” என்று கேட்க கண்களை அகல விரித்து பார்த்தாள்.

‘இவருக்கு எப்படி நான் கீழே விழுந்தது தெரியும்’ என்று யோசித்தவளுக்கு சில மாதங்களுக்கு முன்பு தன்னை கீழே தள்ளிய கார்க்காரன் இவன் தானோ என்ற சந்தேகம் தாமதமாக கிளம்பியது… 

அந்த சந்தேகம் “ஒரு தடவை விழுந்தா போதும்… சும்மா சும்மா என் காருக்கு பின்னாடி வந்து விழனும்னு இல்லை… சோ எல்லாரும் சேர்ந்தே போலாம்.  வண்டியில ஏறுங்க மேடம்” என்றவனை கடுப்போடு பார்த்தாள் பெண். 

அன்றைய கோபம் இன்றைக்கு இல்லையென்றாலும் தான் கீழே விழுந்ததை பார்த்தும் கண்டுகொள்ளாமல் சென்றிருக்கிறான் என நினைத்தவளுக்கு அத்தனை எரிச்சலாக இருந்தது. 

ஆனந்தியின் கடுகடு முகத்தைப் பார்த்தவன் கேசத்தை கோதிக் கொண்டே “உங்க வண்டியை டிரைவரை எடுத்துட்டு வர சொல்றேன் மேடம்… இப்ப எங்களோட வரீங்களா?” என்றவனை முறைத்துக் கொண்டே வாகனத்தில் ஏறினாள் பெண். 

அவளது முறைப்பில் “இந்த முறைப்புக்கொன்னு குறைச்சல் இல்லை” முனகிக் கொண்டே டிரைவருக்கு அழைத்து ஆனந்தியின் ஸ்கூட்டியை எடுத்து வர கூறியவன் வாகனத்தில் ஏறினான்.

அங்கே காரில் அமர்ந்திருந்த மூவரிடத்திலும் அத்தனை அமைதி… “நடு ரோட்டுல ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க? என்ன பழக்கம் இது? ஸ்கூல் ரோடா இருந்தா கூட பரவாயில்லை இது மெயின் ரோடு…” என்றவனின் குரலை “இனிமே ஸ்கூல் ரோட்டுல ஓடி பிடிச்சு விளையாடறோம் சார்” என்ற ஆனந்தியின் குரல் அவசரமாக இடைமறைத்தது… ஆனந்தியின் பேச்சில் பிள்ளைகள் இருவரும் வாயில் கைவைத்து சிரிக்க, அபியோ அவளை முறைத்தான். 

ஆடவனின் முறைப்பில் “நீங்க தானே சார் சொன்னீங்க…” அவசரமாக ஆரம்பித்து பின் மெதுவாக சொல்லவும் இவளிடம் பேச முடியாது என நினைத்துக் கொண்டானோ என்னவோ பதில் பேசாமல் வாகனத்தை உயிர்ப்பித்தான்…

அடுத்த சில நிமிடத்தில் மூவரும் ஏதோ ரகசிய குரலில் பேசுவது போல் இருந்தது… ஆழ்ந்து கவனித்தால் மட்டுமே கேட்க முடியும் என்பதால் அதனை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை அபி… 

நிமிடங்கள் கடந்தும் அவர்களது ரகசிய சம்பஜனை நீடிக்க ‘அப்படி என்ன தான் பேசுவாங்க’ என நினைத்தவன் சென்டர் மிரரை சரி செய்தபடி மூவரையும் பார்த்தான்.

மூவரும் ஏதோ காதில் ரகசியம் பேசிக் கொண்டும், பின் சிரித்துக் கொண்டும் வந்தனர்.. எதிரில் யார் வந்தாலும் எந்த விலங்குகள் சென்றாலும் அது இவர்களுக்கு பேச்சு பொருளாகி போனது…  

அதுவும் கையை ஆட்டி, கண்களை அகல விரித்து, மெல்லிய சிரிப்போடு பிள்ளைகளிடம் பேசியபடி வந்தவளின் மேல், ஒரு நொடி அழுத்தமாக பதிந்து பின் அவசரமாக விலகியது அபியின் பார்வை… 

****

அடுத்த அரைமணி நேரத்தில் வீடு வந்திருக்க, ஒரு வாரம் லீவ் என்ற செய்தியை சீதாவிடம் கூற வேண்டுமென்ற முனைப்பில் பிள்ளைகள் இருவரும் முதல் ஆளாய் இறங்கி ஓடினர்.

இருவரையும் மெல்லிய புன்னகையோடு பார்த்தவள் பிள்ளைகளின் பள்ளிப் பையை கையில் எடுத்தபடி இறங்க, அங்கே அவளை நகர விடாமல் நெருங்கி நின்றிருந்தான் அபி… 

நெருங்கினான் என்றால் அவனது மூச்சுக் காற்று பெண்ணின் மேல் படுமளவிற்கு நெருங்கி நின்றான்.. அந்த ஒரு நிமிட தடுமாற்றம் அவனை அவளிடம் நெருங்க செய்திருந்தது.

சட்டென்று இப்படி நெருங்கி நிற்பான் என்று எதிர்பார்க்காதவள் கண்களை அகல விரித்து அவனைப் பார்த்தாள்… அவளது விழி விரிப்பை கண்டுக் கொள்ளாமல் கொஞ்சமே கொஞ்சம் நெருங்க, அவனது வாசம் அவளது நாசியை நிறைத்தது…

அக்கணம் பெண்ணவளின் இதயம் படபடவென அடித்துக் கொள்ள, கண்கள் அவனது உருவத்தை மொத்தமாய் உள் வாங்கி இருந்தது… 

“என்னாச்சு சார்” தட்டி தடுமாறி வெளிவந்த வார்த்தைகளில் தன்னிலைக்கு வந்தவன் “பசங்க பேக்கை என்கிட்ட குடு” என்றான்…

“ஹான்…” விழித்தாள் பெண்

“பசங்க பேக்கை என்கிட்ட குடு” என்றான் மீண்டும்… 

“ம்ம்…” என்றவள் அவனிடம் பேக்கை நீட்டினாள். பட்டென்று அதனை வாங்கியவன் திரும்பியும் பாராது அங்கிருந்து நகர்ந்து விட, செல்லும் அவனையே பார்த்தது பார்த்தபடி நின்றாள் பெண்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 55

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
49
+1
5
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்