
சுகமதி, வீரமதி ஶ்ரீனிவாசனின் தந்தை தான் வீரமுத்து. மதுரையிலுள்ள ஒரு சிறு கிராமத்தின் ஊர் தலைவர்.
ஊர்மக்களின் நல்லது கெட்டது என அனைத்தையும் இவர் தலைமையில் தான் நடக்கும். இவர் அரசியல்வாதி இல்லை. ஆனாலும் ஆள் பலம் உண்டு. இவர் சொல்லும் தலைவருக்கு தான் அவ்வூர் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். ஊர் தேவைகளை கேட்டுக் கொண்டு அதை எப்படி அரசாங்கத்திடம் கேட்டு பெற முடியுமோ அதை அறிந்து வைத்து செயல் படுத்தி விடுவார்.
மோதலில் இருக்கும் இரு கட்சிகளில் ஒரு கட்சி, அந்த கிராமத்தில் நல்லது செய்வது போல செய்து அனைத்து ஓட்டையும் விலைக்கு வாங்கி விட்டது வீரமுத்து உட்பட, அவரும் அந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தார். இப்போ எதிர் கட்சியாக, நாளை ஆளுங்கட்சியாக மாறும் என்று அந்தக் கட்சி ஆட்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.
அவர் சொன்னது படியே, எதிர் கட்சி தான் ஆளுங் கட்சியாக மாறியது. பட்டித் தொட்டி எல்லாம் மாற்றம் வந்திருந்தது.
வருஷ கணக்காக எம்.எல். ஏ வாக இருந்த ஜெகதீஸ்வரரின் பதவி பறிப்போனது. எதிர்க்கட்சியின் பிரமுகர் ஒருவர் தான் எம் . எல். வாக பதவி ஏற்றார். இவருக்கு கோபம் பலியாக வந்தது.
அவர் டெபாசிட் இழந்தது அந்தக் கிராமத்தில் தான்.. யாரும் அவருக்கு ஓட்டுப் போடவில்லை. அதற்கு காரணம் வீரமுத்து தான். அவர் சொல்லி தான் மக்கள் ஓட்டுப் போட்டு எதிர்கட்சியை ஆளுங் கட்சியாக மாற்றியது.
அந்தக் கோபம் ஜெகதீஸ்வரருக்குள்ளே தீயாக கொழுந்து விட்டு எரிந்தது. ஆனால் இதை அறியாத வீரமுத்து இன்று தலைவராக ஐம்பமாக தான் அந்த ஊரில் இருக்கிறார். அவரை நெருங்க முடியவில்லை… ஊர் மக்கள் மத்தியில் இருப்பதால், அவரது பாதுக்காப்புக்கு எந்தக் குறையும் இல்லை… ஆனாலும் ஜெகதீஸ்வரர் அவரை பழி வாங்கும் எண்ணத்தை கைவிட வில்லை… வேறு எப்படி செயல் படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
பின் அவர் கண்ட ஒரே வழி சம்பந்தம் தான் என்று அறிந்தவர், பணம் அந்தஸ்து என்று எதையும் பார்க்காது , தனது ஒரே கொள்கை தான் முக்கியம் என்று அவர் வீட்டில் சுகமதியை பெண் கேட்க சென்றார்.
தாயின்றி மூன்று பிள்ளைகளை முத்தாக வளர்த்தெடுத்து விட்டார் வீரமுத்து. சுகமதி அவளது தாயை போல மிகவும் அன்பாக எல்லாரையும் அரவணைத்து போவாள்.. வீட்டில் சகலமும் அவள் தான். இளையவள் வீரமதி அப்படியே தந்தையை போல ஓங்கி பேசுவாள். அவள் பேசினாலே எதிரில் இருப்பவரின் வாதம் அடங்கி போய் விடும் அவள் அடங்கும் ஒரே நபர் சுகமதி தான். வீட்டிலே இருக்க மாட்டாள்… எங்கயாவது சென்று பிரச்சனையோடு வரும் சுட்டி. கடைசி பையன் வாசன் அமைதியானவன். அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை… அழகாக சென்றது அவர்களுடைய நாட்கள்…
ஜெகதீஸ்வரர் அவ்வீட்டில் கால் பதிக்க, அவர்களது சந்தோசமும் நிம்மதியும் அந்த நொடியே பறிப்போனது.
ஜெகதீஸ்வரருக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் பிரகதீஸ்வரர், இளையவன் விஸ்வேஸ்வரர்… பிரகதீஸ்வரருக்கு தந்தையை போல அரசியல் பதவிகளுக்கு அதிகம் நாட்டம் உண்டு. தந்தையுடன் சேர்ந்து பதவிக்காக பல வேலைகள் செய்தது உண்டு… ஆனால் விஸ்வேஸ்வரருக்கு அதெல்லாம் பிடிக்காது படிப்பு மட்டும் போது என்று அவனது அன்னையை போலவே இருந்து விட்டான். இருவரது செயலும் அவனுக்கு பிடிக்காது.. ஒதுங்கி விட்டான். அன்னையின் இறப்பில் அரசியல் செய்த தந்தையை கண்டு அவனுக்கு வெறுப்பு தான் வந்தது அதனால் அவர்கள் இருவருடனும் இவன் ஒட்டமாட்டான்.
ஜெகதீஸ்வரரின் அடுத்த திட்டம் பிரகதீஸ்வரருக்கு வீரமுத்துவின் மூத்த மகளை பெண் கேட்டு செல்வது தான். அவர் மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் போதும் , அவரை தனக்கு அடிமையாக்கி வைத்து காரியங்கள் சாதிக்கலாம் என்று திட்டம் போட்டு தாம்புழ தட்டுகளுடன் வீரமுத்துவின் வீட்டிற்கு படியேறினார்.
வீரமுத்துவோ ஜெகதீஸ்வரரின் வருகை கண்டு திகைத்தவர் , அவர்களை மரியாதையோடு வரவேற்றார்..
நடுக்கூடத்தை நிரப்பியது ஜெகதீஸ்வரரின் சொந்தமும் தாம்பூழ தட்டுகளும் மாப்பிள்ளையாக வந்த பிரகதீஸ்வரரின் கண்ணில் முதலில் சிக்கியது வீரமதி தான். அவள் தான் அனைவருக்கும் காபி கொடுத்தாள்.
“இதான் பொண்ணா?”என்று மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒருவர் கேட்கவும், வீரமுத்துவோ “இல்லைங்க இது என்னோட இளையமகள் வீரமதி . மூத்தவ சுகமதி உள்ள ரெடியாகிட்டு இருக்கா ! நீங்க வந்ததும் என்ன செய்யறது தெரியல… எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை “என்றார் வீரமுத்து.
“பரவாயில்லை வீரமுத்து பொறுமையா தயாராகி வரட்டும்”என்றார் ஜெகதீஸ்வரர்.
ஆனால் பிரகதீஸ்வரருக்கோ வீரமதியை தான் பிடித்திருந்தது. “எப்படி தந்தையிடம் இதை சொல்வது?”என்ற யோசனையில் இருந்தார்.
‘அறைக்குள் சுகமதி தயாராகி விட்டாளா?’ என்று பார்க்க வந்த வீரமதிக்கு அதிர்ச்சி. சுகமதி அழுது கொண்டிருந்தாள்.
பதறிபோய் அருகே சென்றவள்”என்னக்கா அழுதுட்டு இருக்க?”
“எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்டி”என்றாள் அழுதுகொண்டே.
“ஏன்?”
“நான் ஒருத்தர விரும்புறேன்”என்று அவளை அழைத்துக் கொண்டு ஜன்னல் அருகே நிறுத்தி வாசலில் ஜெகதீஸ்வரரின் மகிழுந்தில் சாய்ந்து கைகளை பிசைத்துக் கொண்டு தவிப்பாக பார்த்துக் கொண்டு நிற்கும் நெடுமாறனை காமித்து “அவரை தான் விரும்புறேன்”என்றாள்.
வீரமதியோ அதிர்ந்து “இவரையா? இவர் வேற ஜாதி ஆச்சே ! எப்படி அப்பா ஒத்துப்பார்? இப்போ வந்தவங்க கிட்ட என்ன பதில் சொல்றது? ஏன் கா உன் காதல்ல என் கிட்ட மறைச்ச? முன்னாடியே சொல்லிருந்தால் அப்பாவை சரிகட்டி உன்னை அவரோட சேர்த்து வச்சிருப்பேன். இப்போ இவங்க எல்லாரும் வந்திருக்கும் போது இந்த விஷயத்தை சொன்னா, அப்பாக்கு தான் அசிங்கம் வந்தவங்களும் அவமானம்… இப்போ என்ன பண்றது?”என்றாள் தலை கால் புரியாமல்.
“அப்பா கிட்ட சொல்ல பயம்டி அதான். தெரிஞ்சா எங்களை பிரிச்சி வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவார்னு பயம். அதான் மறைச்சுட்டேன்டி…”
” இப்போ தெரிஞ்சாலும் அதை தான் பண்ணுவார். ஆனா வேற வழியில்லை… இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்லிடு !”என்றாள் பட்டென்று.
“எனக்கு பயமா இருக்கு”என்று கைகளை பிசைய, “சரி வந்தவரை கட்டிக்க”என்றதும் அவளுக்கு சுருக்கென்று இருக்க, கண்ணீர் கொட்டியது.
“ஷ்… எதுக்கெடுத்தாலும் அழாதக்கா சமாளிக்க பாரு… என் கூடவா நான் இருக்கேன். உன் காதலை நான் சேர்த்து வைக்கிறேன். நீ கல்யாணம் வேணாம் சொல்லிடு”என்றாள்.
அவளும் தலையை ஆட்டிக் கொண்டு அவளுடன் வெளியே வந்தாள். அனைவரையும் வணங்கினாள். பிரகதீஸ்வரரை தவிர அனைவருக்கும் அவளை பிடித்திருந்தது.
“உனக்கு பிடிச்சிருக்கா தம்பி?”என்று மாப்பிள்ளை வீட்டிருந்து ஒருவர் கேட்க, அவருக்கோ” பொண்ணுக்கு விருப்பமா கேளுங்க” என்றார். அந்தக் கணம் வீரமதி அவனை ஆச்சரியத்தோடு பார்க்க, அவனது பார்வை அவள் மீது தான் படிந்து மீண்டது.
“நீ என்னமா சொல்ற?”வீரமுத்து கனிவாக கேட்க, அவளோ வீரமதியை பார்த்து விட்டு” எனக்கு இதுல சம்மதம் இல்லப்பா !”என்றாள்.
அங்கு வந்த அனைவருக்கு அதிர்ச்சி தான் ஆனால் பிரகதீஸ்வரர் மட்டும் உள்ளுக்குள் குதூகலம்…
“என்னடி இப்படி சொல்ற? எதுக்குடி உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல”என்று கேட்டு அவளை அடிக்க, அதை தடுத்தாள் வீரமதி.
கோபத்தில் எழுந்த ஜெகதீஸ்வரரை கண் ஜாடையில் அமைதியாக இருக்க சொன்னான் பிரகதீஸ்வரர்.
“அப்போ நாங்க கிளம்புறேன். இனி எங்களுக்கு இங்க வேலை இல்லை “என்று அவர் கிளம்பி விட, அவருடன் மன்னிப்பு கேட்ட படி பின்னே சென்றார் வீரமுத்து. அவர்கள் சென்று விட, உள்ளே வந்தவர் பேயாட்டம் ஆடிவிட்டார். அதுவும் நெடுமாறனை விரும்பிய விஷயத்தை கேட்டதும் கொதித்து போனவர் மகள் என்று பாராமல் வீரமதி தடுக்க தடுக்க அடி வெளுத்து விட்டார்.
“இனி நீ வெளியே போக கூடாது !”என்று வீட்டிலே அடைத்து போட்டார். சொந்தத்தில் உள்ளே முறைப்பையனை அவளுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்க, சுகமதியோ செய்வது அறியாது தற்கொலைக்கு முயற்சித்தாள்.
அதை தடுத்த வீரமதி, தந்தைக்கு தெரியாமல் தப்பிக்க விட்டு, இருவரும் ஊரை விட்டு ஓட வைத்து விட்டாள்.
விஷயம் தெரிஞ்ச வீரமுத்து தன் ஆட்களை அனுப்பி அவர்களை தேடச் சொன்னார். வீரமதி தான் காரணம் என்று அடி வெளுத்து விட்டார்.
ஓடி போன சுகமதியும் நெடுமாறனையும் ஜெகதீஸ்வரர் தான் ஆதரித்தார் மூத்த மகனின் பேச்சைக் கேட்டு. விஷயம் அறிந்த வீரமுத்து ஆட்களுடன் வந்து சண்டை போட , அது ஊர் சண்டையாகி போனது.
வீரமுத்து மகளை தலை மூழ்கி விட்டு தான் வீடு திரும்பினார். இங்கோ நெடுமாறனை ஆதரித்து, வீட்டை அமர்த்தி அவர்களை குடித்தனம் வைத்தார் பிரகதீஸ்வரர்…
சுகமதி நெடுமாறன் வாழ்க்கை அமைதியாக சென்றது. ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்க வில்லை…
சுகமதி கருவுற்று இருந்தாள். எட்டு மாதம் ஆகிருந்தது. அவளை கவனிக்க யாருமில்லை விஷயம் கேட்டு துடித்த வீரமதி தந்தையிடம் சென்று அவளை ஏத்துக்க சொல்லி மன்றாட, அவரோ மறுத்தார். இருவருக்குள்ளும் சண்டை முத்தி விட, வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள்…
வீரமுத்துவும் வாசனும் தான் தனித்து இருந்தனர்.
வீரமதி தந்தையை எதிர்த்து அக்கா வீட்டுக்கு வந்து அவளுக்கு துணையாக இருந்து பிரசவம் பார்த்தாள்.
சுகமதிக்கு ஆண் குழந்தையை பிறந்தது. பிரகதீஸ்வரர் தான் அவனுக்கு நிவாஸ் என்று பெயர் வைத்தார். அவர்களுடன் இருந்த வீரமதியை கண்டதும் அவளை தன் வசமாக்க, வீரமுத்துவை பழி தீர்க்க, பிரகதீஸ்வரர் திட்டம் போட்டு, அதை ஜெகதீஸ்வரரிடம் சொல்ல அதை அவர் நிறைவேற்றவும் செய்தார்.
வீரமதி, கண் முன்னே சுகமதியையும் நெடுமாறனையும் வெட்டிக் கொண்டனர். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு அதை அதிர்ச்சியுடன் பார்த்து நின்றாள்.
இருவரை வெட்டிக் கொலை செய்தது வீரமுத்துவின் ஆட்கள் தான். ‘தந்தையை தான் கோபம் தீராமல் இருவரையும் கொலை செய்து விட்டார்’ என்று நினைக்கும் படி செய்து விட்டனர் அந்த அரசியல் வாதிகள் இருவரும்.
வீர முத்துவின் ஆட்களில் இருவரை விலைக்கு வாங்கிய பிரகதீஸ்வரரும் ஜெகதீஸ்வரரரும் வீரமதி கண் முன்னே அவளது அக்கா சுகமதியையும் நெடுமாறனை கொல்லச் சொல்லி கட்டளையிட்டிருந்தனர்.
அன்று இரவு வீரமதியும் சுகமதியும் குழந்தையுடன் வீட்டில் இருந்தனர்.
“அடியே நான் ஒன்னு கேட்டா, மறைக்க மாட்டியே?”
“உன் கிட்ட நான் என்னக்கா மறைச்சிருக்கேன்? நீ கேளுக்கா நான் சொல்றேன்”என்றாள் குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டு.
“ம்ம்… இப்படி சொல்லு ! ஆனா நான் கேட்கும் போது உன் முட்டைக்கண்ண உருட்டுன அப்ப இருக்குடி உனக்கு…!”என்று மிரட்டியவள் ” நீ, பிரகதீஸ்வரர் ஐயாவ காதலிக்கற தானா?”எனக் கேட்டதும் அவளது கோலி குண்டு கண்ணை உருட்ட தான் செய்தாள்.
நமட்டுச் சிரிப்புடன் அவள் காதை திருகியவள், “எதையும் மறைக்கல சொன்ன?”என நாக்கை கடித்தாள் வீரமதி.
“வீரா, அக்கா சொல்றத கேட்பீயா?”
“சொல்லுக்கா கேட்கிறேன்”
“நீ அப்பா கிட்ட போயிடேன். கண்டிப்பா உனக்கு அவருக்கும் அவர் கல்யாணம் பண்ணி வைப்பார். இங்க இருந்தால், எப்படி ஒரு ட்ரைவரோட மச்சினிய கல்யாணம் பண்ணிக்கன்னு யோசனை வரும் ப்ளீஸ் டா ! உன் கல்யாணமாவது ஊரறிய நடக்கணும் டா “என்று அவள் தாடையை பிடித்துக் கெஞ்சினாள்.
“மாட்டேன் கா ! மறுபடியும் அவர் கால்ல போய் நான் விழ மாட்டேன் … அவருக்கும் ஜெகதீஸ்வரர் ஐயாக்கும் பகை அதிகம். நான் போனதும், உடனே வாம்மா சொல்லி அழைச்சி, நான் காதலிச்சவரோடா கல்யாணம் பண்ணி வைப்பார் நினைக்கறியா? உன் கதை போல தான் என் கதையும்.. நீ விடக்கா ! என்ன விதி இருக்கோ அது படி தான் நடக்கும்… ஆனா இன்னொரு வாட்டி எ
என்னை போக சொன்ன, அப்பறம் நான் மாமாவ கட்டிட்டு உனக்கு சக்காளத்தி வந்துடுவேன் பார்த்துக்க”என செல்லமாக மிரட்ட, அவள் காதை திருகி “பேச்சை பார்” என்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்க அவர்கள் வீட்டு வாசலில் மூச்சிரைக்க ஓடிவந்த ஒருவன் அவர்களிடம்
“அக்கா , உங்க புருஷன, உங்க அப்பா ஆட்கள் அடிச்சி கொன்னுட்டு இருக்காங்க… சீக்கிரமா போங்க அக்கா “என்றதுமே இருவரும் விழுக்கென எழுந்தார்கள் .
“எங்க?” என அவள் கேட்க இடத்தைச் சொல்லி விட்டு அவன் ஓடி விட்டான்.
இருவரும் அந்தக் காட்டுக்குள் விரைந்தனர். குழந்தையை வைத்துக் கொண்டு ஓட முடியாமல் ஓடி வந்தாள் வீரமதி.
அதற்குள் முன்னே ஓடிச் சென்ற சுகமதியையும் சேர்த்து கொன்று விட்டு ஓடி விட்டனர் கொலை செய்த இருவரும். அவ்விருவரில் ஒருவனை அவளுக்கு நன்றாக தெரியும் அவன் தந்தையின் ஆள் தான் அவன்.
இருவரையும் சரமாரியாக வெட்டி கொன்று விட்டு சென்றுவிட்டனர். குழந்தையுடன் அவளும் கதறி அழுதாள். மக்கள் ஒன்று கூடி விட்டனர்.
அங்கே பிரகதீஸ்வரரும்
ஜெகதீஸ்வரரும் வந்து சேர்ந்தார்கள். வன்மம் சிரிப்புடன் இருவரும் பார்த்துக் கொண்டனர்.
பிரகதீஸ்வரர் கண்கள் அங்கே வெடித்து அழுகும் வீரமதியிடம் சென்றன. அவளோ உயிர் அடி வரை கத்தி அழுக , அவள் தோளைத் தொட்டான். குழந்தையுடன் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள். அவர்களை யோசனையுடன் பார்த்தார் ஜெகதீஸ்வரர்.
மறுநாள் வீட்டிலே வைத்து அனைத்து காரியங்களும் நடக்க, மகளின் இறப்பு செய்தியை கேட்டதும் ஓடி வந்து விட்டார் வீரமுத்து வாசனுடன்.
“அக்கா”என அவன் விழுந்து அழ, மகளே என்று சுகமதி உடலின் அருகே வந்தவரை தடுத்தது வீரமதி குரல் தான்”எங்க வந்து நாடகமாடற? உன் முகத்திரை கிழிஞ்சுருச்சு… உன் சாதி வெறிக்காக பெத்த பொண்ண கொன்னுட்டு, அதை மறைக்க நடிக்க வேற வந்திருக்கேல… ச்சீ நீயெல்லாம் அப்பனா, உன்னை பெருமையா தான்டா இதுநாள் வரைக்கும் பார்த்தேன்.
ஆனா இப்போ உன்னை மனித கழிவ விட மோசமா பார்க்கிறேன். உன் மூச்சு காத்து கூட என் அக்கா ஒடம்ப தீண்ட கூடாது போடா இங்க இருந்து…” தந்தை என்று பாராமல் அவமானப்படுத்தி அனுப்பி வைக்க, அது அந்த நான்கு கண்களுக்கும் விருந்தாகிப் போனது.
“அக்கா ! அப்பா அப்படி செய்யற ஆள் இல்லைக்கா நீ தப்பா புரிஞ்சு வச்சிருக்க”வாசன் தந்தைக்காக பேசினான்.
“எல்லாம் அவர் நடிப்பு டா !நீ ஏமாந்திடாத என் கூட வந்திடு ! அவர் ஒரு கொலைக்காரர். அவர் ஜெயிலுக்கு போக வேண்டியவர், நீ அக்கா கூட வந்திடு !”என்றாள்.
“இல்லக்கா அப்பா இதை பண்ணல “என்று அடித்து சொல்ல நம்ப தான் ஆள் இல்லை.. ஊர் மக்கள் அனைவரும் அவரை அவமானம் செய்து வெளியே அனுப்பினார்கள். அவரோ தளர்ந்து வீட்டுக்கு வந்தார். காரியங்கள் எல்லாம் நடந்தேறியது. அத்துனைக்கும் துணைக்கு இருந்தது பிரகதீஸ்வரர் தான்.
மேலும் காரியங்கள் முடிந்ததும். தன் தந்தையின் மேல் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தாள் வீரமதி. அதை விசாரிக்கும் பொருட்டு வீரமுத்துவை காவலில் நிலையத்திற்கு அழைத்து காவல் அதிகாரிகள் விசாரிக்க ,’ நான் கொலை செய்ய வில்லை ‘என்று சொல்லிக் கொண்டிருந்தார் ., அதற்குள் கொன்ற இரண்டு ஆட்களும் சரணடைந்து, ‘நாங்க தான் கொன்றோம்’ என்றனர்.
“ஐயாவை ஏமாத்திட்டு போன ஓடுகாலியையும் அவ புருஷனை. கொல்லனும் நினைச்சோம் கொன்னுட்டோம்.
ஐயா சொல்லி செய்யல அவர் தலை குனியும் படியா செஞ்சதால கோபத்துல பண்ணிட்டோம்”. வழக்கை மேலும் தொடர்ந்து விசாரிக்க விடாமல் அதோடு முடிக்கத் தான் அந்த இரு அரசியல்வாதிகள் அவர்களை சரணடைய சொன்னார்கள்.
அவர்களும் சரணடைய கேஸ் முடிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கினார்கள். வீரமுத்துவை வெளியே விட்டார்கள்.
அந்தக் கிராமத்தில் முன்பு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை… அவரை ஒதுக்கி வைத்து விட்டனர் அந்த கிராமமக்கள்.
இடையில் எம் .எல் , ஏ இறந்து விட, இடைத்தேர்தல் வைக்க, அதில் ஜெகதீஸ்வரர் தான் மீண்டும் எம்.எல் ஏ வானார். அவரோட ஆட்சி தான் அங்கே கொடி பிடித்தது. அதுவே அவர்களது அடித்தளம்.
வீரமதி குழந்தையை வளர்ப்பதை தவிர வேற எந்த சிந்தனையும் மனதில் உட்புகுத்திக் கொள்ளாமல் வேலை பார்த்துக் கொண்டே மகனை வளர்த்தாள்.
பிரகதீஸ்வரர் எவ்வளவு கேட்டும் தன் காதலை மனதில் புதைத்து விட்டு வேறொரு பொண்ணுடன் திருமணம் செய்து கொள்ள சொல்லி விட்டாள்.
ஆனால் அவன் விடவில்லை அவள் மனதை கரைத்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் நிவாஸ் இருவருக்கும் இடஞ்சலாக இருந்தான். அவருக்கு கடுப்பாக இருந்தது. போக போக அவன் மீது கோபமாக மாறியது.
அதை அவனிடம் வீரமதி இல்லாத நேரம் காட்டி வந்தான். அவனை மிரட்டியும் வைத்தான்,’ வீரமதியிடம் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் ‘ என்று. அவனும் அவர் செய்யும் கொடுமைகளை பொறுத்து கொள்வான் வீரமதியிடம் சொல்ல மாட்டான்.
வீரமதி மகனுக்கு முன்னுரிமை காட்டுவது அவனுக்கு பிடிக்கவில்லை அவனை கொலை செய்ய முதலில் எண்ணினான். பின் அந்தத் திட்டத்தை கை விட்டுவிட்டு, ஊர் திருவிழாவில் தொலைந்து விட்டான் என்று கதை கட்டியவன்.
அவனை தன் கட்சியின் பிரமுகரிடம் கொடுத்து ‘ஏதாவது குழந்தை காப்பகத்தில் சேர்த்து விட்டுடு’ என்று பணத்தை கொடுத்து அனுப்பி விட்டான்.
அவரும் சென்னையில் ஜெஸி இருந்த குழந்தை காப்பத்தில் இவனை விட்டுவிட்டு வந்து விட்டார். நல்ல மனம் கொண்ட அவரால் அவன் காப்பகத்தில் சேர்ந்தான். இல்லை வேற ஒருவராக இருந்தால் இந்நேரம் என்னவாகி இருப்பானோ..!
குழந்தையை இழந்த சோகத்தில் இருந்த வீரமதியை தேற்றி காதலை கொட்டி அவரை தன் பக்கம் சாய வைத்து முதல் வாரிசை பெற்றெடுக்க வைத்தார்.
ஜெகதீஸ்வரருக்கு வயது ஏற இதயநோய் வர, அவர் படுத்த படுக்கை ஆகி விட்டார்.
பதவிகள் எல்லாம் பிரகதீஸ்வரரை தேடி வந்தன. இப்போ அவன் தான் அவரது கட்சியையும் பதவியையும் பார்த்துக் கொண்டு வருகிறான். தந்தைக்கு ஓய்வு கொடுத்து விட்டு.
இதற்கு இடையில் வீரமுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்க கடைசியாக மகளை பார்க்க வேண்டும் என்றார் மகனிடம் . அவனும் வீரமதியிடம் கெஞ்ச, அவரோ மறுத்து விட்டார்.
உயிர்போகும் நிலையில், வாசன் வீரமதியிடம் கெஞ்ச வீட்டிற்கு தெரியாமல் அவரை பார்க்க வந்தாள். அவள் கையை பிடித்துக் கொண்டவர்” மரண வாசல் நிக்கறேன் பொய் சொல்ல மாட்டேன் மா உண்மையை தான் சொல்றேன் நான் என் மகளை கொல்லல “என்றார் இவளுக்கு குழப்பமாக இருந்தது.
வீரமுத்துவும் பேரனை பார்த்த சந்தோஷத்தில் கண்களை மூடி விட்டார். வாசனை அனைத்து காரியங்களை செய்தான். அவனை தேனிக்கு அனுப்பி வைத்தாள். அம்மா வழி சொந்தமொன்று இருக்க அங்கே போகச் சொன்னாள். அவனும் அங்கே சென்று விட்டான்.
இவள் உண்மை அறிய முயன்றாள் கணவனுக்கு தெரியாமல்… சிறைக்கு சென்ற இருவரில் ஒருவனை மட்டும் நன் நடத்தை காரணமாக வெளியே விட்டிருக்க, அவன் வீட்டிற்கு வந்ததும் அங்கே மனைவி. வேறு ஒருவருடன் ஓடி விட்டத்தை கேட்டு அழுதான். பணம் முக்கியம் என்று உள்ளே சென்றவனுக்கு நாதி அற்று போனது.
அவன் பிரகதீஸ்வரர் தேடி வர அவர் இல்லை அவரது ஆட்கள் அடித்து அனுப்பி விட, வீரமதி யாரென கேட்க பிச்சைக்காரன் என்று சமாளித்து விட்டனர் அடியாட்கள்.
ஆனாலும் அவன் முகம் அவள் நெஞ்சில் பதிந்து இருந்ததால் எளிதில் அவளால் அடையாளம் கண்டு பிடிக்க முடிந்தது.
கோவிலுக்கு செல்வதாக தனியாக வந்தவள், அவனை கண்டு பிடித்து விசாரிக்க அவன் உண்மையை அனைத்தும் சொல்லி விட்டான். அக்காவையும் மாமாவையும் கொன்னது இவர்கள் தான் என்ற உண்மையை தெரிய வர, அவர்களை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தாள்.
போலீஸ் கோர்ட் எல்லாம் இவர்களுக்கு கால் தூசி என்பதால் இவளே தண்டனை கொடுக்க எண்ணினாள் . பிரகதீஸ்வரர் சென்னை சென்றிருப்பதால், வீட்டில் ருத்ரன், இவள், ஜெகதீஸ்வரர் தான் இருந்தனர். வேலையாட்கள் கொஞ்ச பேர் இருந்தனர்.
வேலை ஆட்களுக்கு இரவில் கொடுத்த பாயசத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்திருந்தாள். அனைவரும் தூங்கி விட, ஜெகதீஸ்வரர் அறைக்கு சென்று தலையணை வைத்து முகத்தில் அமுக்கி கொன்று விட்டு அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.
மறுநாள் வேலைக்காரனின் அலறியில் அவர் உயிர் பிரிந்த செய்தி கேட்டு மற்றவர்களை போல இவளும் அதிர்ந்து அழ ஆரம்பித்தாள். அத்தனையும் நடிப்பானது.
யாருக்கும் அது கொலை என்று சந்தேகமே வரவில்லை இயற்கையான சாவு என்று எண்ணிக் கொண்டு அவரை நல்லடக்கம் செய்தனர்…
அதன் பின் அவர்கள் அங்கிருக்கவில்லை சென்னைக்கு வந்து விட்டனர்.
கணவரை கொலை செய்ய முடியவில்லை… அரசியலில் அசுர வளர்ச்சி இருந்தான் பிரகதீஸ்வரர். அவரை கொலைகாரியா நெருங்க கஷ்டமாக இருந்தது. மனைவியாக மட்டுமே நெருங்க முடிந்தது. அதன் பலனாக அடுத்து நைதுருவனை பெற்றெடுத்தார்.
ஆனால் இந்த முறை காதலோடு இல்லை… பிரகதீஸ்வரர் மட்டுமே குறையாத காதலோடு இருக்கிறார். ஆனால் வீரமதியோ வன்மத்துடன் இருக்கிறாள்.
பிரகதீஸ்வரர் மினிஸ்டராகி விட்டான் மேலும் அவனுக்கு பலம் கூடி இருக்க, மரணம் அவனை நெருங்க பயந்தது.
அதீத பாதுக்காப்பு அவனுக்கு அதனால் அவரை கொன்றால் எளிதில் சிக்கி விடுவோம் என்று அமைதியாக இருந்தாள் வீரமதி.
தனக்கு ஒரு அடையாளம் வேண்டும் கணவனை இழந்த பின்னும் குழந்தைகளுடன் எந்தக் குறைவின்றி வாழவேண்டும் என்று நினைத்தவள், ஆரம்பித்தது தான் ‘ வீ ‘ புரொடக்ஸ். அதில் அவர் வெற்றியும் கண்டார். மனைவியின் வெற்றியில் இவனும் மகிழ்ந்தான். அந்த குடும்பத்தில் மூத்த மருமகளாக தன் கடமையை செய்தாள், வில்வேஸ்வருக்கு கல்யாணம் செய்து வைத்தாள். வீரமதிக்கு விஸ்வேஸ்வரர் மீது தனி பாசம் அவர் மீது வன்மமோ கோபமோ இல்லை . மாறாக தாயை போல நினைத்து பழகும் அவனை பிள்ளையாக தான் பார்த்தாள்.
வருஷங்கள் ஓடின பிள்ளைகளும் வளர்ந்து விட்டன ஆனால் பிரகதீஸ்வரரை தான் கொல்ல முடியவில்லை… அதற்கும் ஒரு நாள் அமைந்தது… வீரமதி , வாசனுடன் நிவாஸ்ம் சேர்ந்த நாள் அது…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
+1

