Loading

காதல் -66

 

அஸ்வதி மற்றும் விஹான் இருவருக்கும் தங்களின் காதல் பொழுதுகள் மீண்டும் தொடங்கி விட்டது…….

 

விஹானுக்கு அஸ்வதி வேலை பார்க்கும் கல்லூரியிலே முதல்வர் பதவி கிடைத்து விட அஸ்வதிக்கு மகிழ்ச்சி தாளவில்லை…….

 

முதன் முதலாக இருவரும் இணைந்து   கல்லூரிக்கு சென்றனர்………

 

அங்கு புதிதாக பேராசிரியர் வேலைக்கு சேர்ந்திருக்கும் துவாரகா அஸ்வதியின் நெருங்கிய தோழி ஆகி போனாள்……

 

அஸ்வதி தன்னுடைய வகுப்புகளை முடித்துவிட்டு ஆசிரியர் அறையில் அமர்ந்து கொண்டு இருந்தாள் அப்பொழுது அவள் பின்னால் யாரோ நிற்பது போன்று தோன்ற அவள் திரும்பிப் பார்த்தாள் அங்கு ,  குடிபோதையில் அவளிடம் தவறாக நடந்து கொண்ட துருவ் நின்று கொண்டிருந்தான்……..

 

அவனைப் பார்த்ததும்  அஸ்வதிக்கு பயம் தொற்றிக் கொண்டது, அந்த நேரம் பார்த்து ஆசிரியர் அறையில் இவளைத் தவிர வேறு யாரும் இல்லை ……

 

அவள் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் அவளுக்கு புரை ஏறியது…….

 

அவன் அவள் அருகினில் வந்து அவள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் இரு கைகளையும் பிடித்து அவள் முகத்தின் அருகே வந்து என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான்…….

 

அதில் அவள் பயந்து போய் கண்களையும் காதுகளையும் மூடி கொண்டு குனிந்து கொண்டாள்…..

 

அப்பொழுது அங்கு டமாரென்று ஒரு சத்தம் கேட்டது அந்த  சத்தத்தில்  அஸ்வதி நிமிர்ந்து பார்த்தாள்…….

 

துவாரகா கையில் ரெகார்ட் நோட்டோடு நின்று கொண்டிருந்தாள், துருவ் கீழே தள்ளி போய் விழுந்து கிடந்தான்…….

 

யாரு அஸ்வா இவன்?  உன்கிட்ட தப்பா நடந்துட்டு இருக்கான்…..

 

அஸ்வதி ஓடி சென்று துவாரக்காவை கட்டி அணைத்து கொண்டு அழுதாள்…..

 

அதற்குள் விஹான் அங்கு வந்து விட்டான்……

 

துருவைப் பார்த்து பயந்ததாலும் நீண்ட நேரம் அழுதாலும் அஸ்வதிக்கு வீசிங் வந்துவிட்டது அதனால் அவள் மயங்கி கீழே சரியும் நேரம் சரியாக விஹான் அவளை கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டான்……..

 

என்னாச்சு மிஸ் துவாரகா?

 

சார் நா கிளாஸ் முடிச்சுட்டு இங்க வரும்போது இந்த ஆளு அஸ்வதி கிட்ட தப்பா பிகேவ் பண்ணிட்டு இருந்தான் அதான்  ரெகார்ட் நோட்ட வச்சி அவன் முதுகுலயே நாலு சாத்து சாத்தினேன்……

 

ஹே நா யாருன்னு தெரியாம என்ன அடிசிட்டல்ல உன்ன என்ன பன்னுறேன்னு பாரு என்று துருவ் கோபத்தில் கத்தினான்…….

 

சார் இவன் கிடக்குறான் லூசுப்பய, நீங்க முதல்ல அஸ்வதிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க என்று துவாரகா கூறவும் விஹான் அஸ்வதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்…….

 

விஹான் அஸ்வதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகு துவாரகா துருவிடம்  வந்து அவனின் சட்டையை பிடித்து ஆசிரியர்களின் அறைக்கு வெளியே தள்ளி விட்டாள்……….

 

ஏய் நா யாருன்னு தெரியுமா?

 

யாருடா நீ ?? அப்பவே இருந்து நா யாருன்னு தெரியுமா ?! நா யாருன்னு தெரியுமான்னு !? கேட்டுட்டே இருக்கீயே சொல்லு , நீயே சொல்லு நீ யாருன்னு கேப்போம் என்று துவாரகா ஒரு நாற்காலியை இழுத்து  போட்டு அதில் அமர்ந்து கொண்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்…….

 

நா தான் இந்த காலேஜோட கரஸ்பாண்டன்ட்…….

 

அவன் அவ்வாறு கூறியவுடன் அவள் பயந்து நடுங்கி விடுவாள் என்று துருவ் நினைத்தான் ஆனால் துவாரகா அவள் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு அவனை பார்த்து ஏளனமாக சிரித்தாள்………..

 

என்னடி நா அவ்ளோ சொல்லியும் என்ன பார்த்து சிரிச்சிட்டு இருக்குற ஒரு போன் , ஒரே ஃபோன் போட்டா போதும் உன்ன வேலையில இருந்து தூக்கிருவேன் பாத்துக்கோ என்று அவன் மிரட்டும் தொனியில் கூறவும் அவளிடம் மீண்டும் அதே மாறா புன்னகை………

 

ஏய் என்னடி நா என்ன சொன்னாலும் சிரிச்சிட்டே இருக்குற?

 

ஹலோ மிஸ்டர் கரஸ்பாண்டன் கரடி சார் நீங்க என்னைய வேலைய விட்டு தூக்கிக்கோங்க ஆனா என்ன நீங்க வேலைய விட்டு தூக்குன அடுத்த நிமிஷம் நீங்க ஜெயில்ல இருப்பீங்க பரவாயில்லையா???

 

நா எதுக்கு ஜெயிலுக்கு போனும் ?நா என்ன தப்பு செஞ்சேன்?

 

அப்படி கேளுங்க மிஸ்டர் கரஸ்பாண்டன்ட் கரடி……

 

ஏய் என்ன கரடி கிரடின்னு கூப்பிட்டன்னு வை வாய  ஒடச்சிடுவேன்……….

 

நீ  என்னோட வாயை உடைக்கிற வரைக்கும் என்னோட கை என்ன புளியங்கா பறிச்சிட்டு இருக்குமா?கைய தூக்கின அடுத்த நிமிஷம் உன்னுடைய கையை உடைச்சு உன் கையிலேயே கொடுத்துடுவேன் ராஸ்கல் , ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி தப்பா நடந்துட்டு எதுவுமே நடக்காத மாதிரி எப்படி இப்படி பேசுற?உன்னோட அம்மாகிட்ட யாராவது தப்பா நடந்தாலும் நீ இப்படித்தான் சும்மா இருப்பியா?  என்று துவாரகா கேட்ட அடுத்த நொடி அவன் அவளை கழுத்தோடு  அவன் உயரத்திற்கு தூக்கி அவள் முகத்தை அவன் முகத்தின் அருகே கொண்டு வந்து……..

 

ஏய் என்னோட அம்மாவ பத்தி நீ ஒரு வார்த்தை பேசின உடம்புல உயிர் இருக்காது பாத்துக்கோ என்று அவன் கோபமாக கூறவும் துவாரகா அவனின் வயிற்றில் தன் முட்டியால் ஒரு குத்து விட்டு அவனை கீழே தள்ளி விட்டாள் அவன் கீழே விழுந்ததில் அவன் மேலே இவளும் சேர்ந்து விழுந்து விட்டாள்……

 

எப்படி எப்படி உன்னோட அம்மாவ பத்தி சொன்னா மட்டும் கோவம் வருதுல்ல? அதே மாதிரி தானே என்னோட ஃப்ரெண்ட் அஸ்வதியும் நீ ஆம்பள பையன் என்னனாலும் பண்ணிட்டு அப்படியே தூசி தட்டி விடுற மாதிரி  தட்டி விட்டுட்டு போயிருவ அஸ்வதி பொண்ணுடா யாராவது அஸ்வதிய உன் கூட இப்படி தனியா பார்த்தா அவளதான தப்பா பேசுவாங்க? அறிவில்லையா உனக்கு? என்று துவாரகா துருவை கிழித்து நார் நாராக தொங்க விட்டாள்…….

 

துவரக்கா இவ்வளவு நேரம் துருவின் மேல் படுத்து கொண்டு தான் இத்தனை கிழியும் திட்டும் அவனை திட்டிக் கொண்டிருந்தாள்……..

 

துருவ் எதுவும் பேசவில்லை அவன் மேல் படுத்துக்கொண்டு முகம் சிவக்க கோபத்தில் அவனை திட்டிக் கொண்டிருக்கும் துவாரகாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்………

 

சிறிது நேரம் கழித்து தான் அவளுக்கு அவள் அவன் மேல் படுத்து கொண்டு இருப்பது நினைவு வர சடாரென்று அவன் மேல் இருந்து எழுந்து தள்ளி நின்று கொண்டு அவனை மேலும் திட்ட ஆரம்பித்தாள்……..

 

துவாரகா அவனை திட்டி திட்டி டயர்ட் ஆகி நாற்காலியில் அமர்ந்து ஒரு பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்……..

 

வெளிய போடா ராஸ்கல் என்று அவள் அவனை வெளியே தள்ளி விட்டாள்…..

 

துருவ் அவள் தள்ளி விட்டதில் சுவற்றில் மோதி தலையில் லேசாக அடி பட்டு ரத்தம் வழிய அப்படியே நின்று கொண்டு இருந்தான்……..

 

ரொம்ப வேகமா தள்ளி விட்டமோ?என்று துவாரகா வெளியில் எட்டிப் பார்த்தாள் துருவ அங்கேயே தான் திரும்பி நின்று கொண்டிருந்தான்…….

 

ஹலோ மிஸ்டர் என்று அவள் அவனை திருப்பினாள் அவன் தலையில் வழியும் ரத்தத்தை பார்த்து பதறிப் போய்…..

 

அச்சோ என்ன இவ்வளவு ரத்தம் வருது நீங்க வாங்க என்று அவள் அவனை கைப்பிடித்து அழைத்து கொண்டு ஆசிரியர்கள் அறைக்கு சென்று ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்து அவனின் தலையில் ஏற்பட்ட காயத்தை பஞ்சால் துடைத்து ஆயின்மென்ட் போட்டுவிட்டு அதற்கு மேல் ஒரு பிளாஸ்டர் ஒட்டிவிட்டாள்…….

 

ஹலோ நா கொஞ்சம் வேகமாக தள்ளி விட்டுட்டேன் சாரி…….

 

அவனுக்கு அவளை புரிந்து கொள்ள முடியவில்லை சிறிது நேரம் முன்புதான் அவனை காதில் ரத்தம் வரும் அளவிற்கு திட்டி தீர்த்தாள் ஆனால் தன் மேல் தவறு என்று அறிந்த பின்பு மறுக்காமல் அவனிடம் மன்னிப்பு கேட்கும் அவளின் குணத்தை எண்ணி அவன் வியந்தான்………

 

துவாரகா பேசப்பேச அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்…….

 

ஹலோ மிஸ்டர் கரஸ்பாண்டன்ட் ரொம்ப வலிக்குதா?

 

அவன் இல்லை என்று தலையசைத்தான்………..

 

வலி இல்லல்ல உங்க ஏசி ரூமுக்கு கிளம்புங்க போங்க என்று அவள் கூறிவிட்டு அவளின் அடுத்த வகுப்புகளுக்கு சென்று விட்டாள்…..

 

துருவ் சிறிது நேரம் அமர்ந்து விட்டு அவனின் அறைக்கு சென்று விட்டான்…..

 

அஸ்வதியை விஹான் மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்றான்…….

 

மருத்துவர்கள் அஸ்வதியை சோதித்து பார்த்துவிட்டு அவளுக்கு மூச்சு விட முடியாமல் சிரமப்படுவதை பார்த்துவிட்டு அவளுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தி அவளுக்கு சிகிச்சை அளித்தனர்……..

 

முக்கால் மணி நேரம் நடந்த சிகிச்சைப் பிறகு அஸ்வதி கண் திறந்து பார்த்தால் அவள் அருகினில் விஹான் சோகமாக கண் மூடி அமர்ந்து கொண்டிருந்தான்……..

 

ஆக்சிஜன் மாஸ்க் முகத்தில் போடப்பட்டதால் அஸ்வதியால் பேச முடியவில்லை அதனால் அவள் விஹானின் கைகளை பிடித்தாள்…..

 

அவனவளின் ஸ்பரிசத்தில் அவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே அவளை கட்டி அணைத்துக் கொண்டான்……..

 

அஸ்வதி கொஞ்ச நேரம் இரும்மா டாக்டர் கூட்டிட்டு வரேன் என்று அவளிடம் கூறிவிட்டு மருத்துவர்கள் அழைக்க விஹான் ஓடினான்…….

 

மருத்துவர்கள் வந்து அஸ்வதியை சோதித்துப் பார்த்துவிட்டு இப்ப அவங்கள நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று அவர்கள் கூறவும் ஹாஸ்பிடல் பில்லை கட்டி விட்டு அவளை அழைத்து கொண்டு வீட்டிற்க்கு செல்ல போனான்…….

 

விஹான் நம்ம காலேஜுக்கு போவோம், இப்போ எனக்கு ஒன்னும் இல்ல என்று அவள் அவனைப் பார்த்து அழகாக சிரித்தாள்……..

 

ஏய் உனக்கு என்ன லூசா? இவ்வளவு நேரம் நீ கண் மூடி படுத்து இருக்கும் போது எனக்கு எப்படி மனசு வலிச்சது தெரியுமா நீ அசால்ட்டா காலேஜுக்கு போகலாம்ன்னு சொல்ற?? இன்னும் ஒரு வாரம் நீ லீவு போடு நானும் லீவ் போடுறேன் உடம்ப பாத்துக்கணும்டி…….

 

இல்ல விஹான் எனக்கு ஒன்னும் இல்ல என்னை காலேஜுக்கு கூட்டிட்டு போங்க…..

 

ஏய் என்னடி மிரட்டுற?

 

அப்படித்தான் மிரட்டுவேன் என்னை காலேஜ் கூட்டிட்டு போங்க என்று அஸ்வதியே அவன் கையைப் பிடித்துக் கொண்டு காலேஜுக்கு சென்றாள்……

 

அவர்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஆசிரியர்கள் அறையில் நடந்ததை அஸ்வதி அவனிடம் கூறிக் கொண்டே வந்தாள்…….

 

பிறகு அஸ்வதி அவளின் வகுப்பிற்கு சென்று விட்டாள்……..

 

விஹானுக்கு அப்போது இருந்த கோபத்திற்கு நேராக கரஸ்பாண்டன்ட் அறைக்குள் சென்று துருவை அடிக்க சென்றான் ஆனால் துருவின் நல்ல நேரம் என்னவோ அவன் அறையில் இல்லை……..

 

இருந்த கோபத்திற்கு விஹான் அங்கிருந்த பூ  ஜாடியை போட்டு உடைத்து விட்டு அவன் அறைக்குள் வந்தான் அங்கு அஸ்வதி நின்று கொண்டிருந்தாள்……..

 

விஹான் எங்க போனீங்க?லஞ்ச டைம் ஆகுது சீக்கிரம் சாப்பிடுங்க நா துவாரகா கூட போய் சாப்பிடுறேன் என்று அஸ்வதி அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றாள்……..

 

அஸ்வதியின் ஒரு முத்தம் அவனின் கோபம் மொத்தத்தையும் கரைத்தது விஹான் அவனின்  லன்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு அஸ்வதியை தேடி சென்றான் அவள் ஆசிரியர்கள் அறையில் இல்லை அவளைத் தேடி அவன் சென்று கொண்டு இருந்தபோது அவள் துவாரகாவோடு மரத்தடியில் அமர்ந்து   இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர் ……….

 

விஹானை அங்கு பார்த்ததும் துவாரகா மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள் அவளைப் பார்த்து அஸ்வதியும் எழுந்து நின்று  அவனைப் பார்த்து யாரும் அறியாமல் கண்ணடித்தாள்……..

 

ஹலோ கேர்ள்ஸ் எனக்கு தனியா ரூம்ல உட்கார்ந்து சாப்பிட்டு போர் அடிக்குது உங்க கூட சேர்ந்து சாப்பிடலாமா?

 

தாராளமா சார் , வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று துவாரகா  கூறவும் விஹான் அஸ்வதி அருகில் அமர்ந்து கொண்டு மூவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டனர்………

 

ஆமா  அஸ்வதி  அந்த கரஸ்பாண்டன்ட் குரங்கு உன்கிட்ட ஏன் வம்பு பண்ணிட்டு இருந்தது? அவன் உன்கிட்ட பிரச்சனை பண்றானா?

 

ஏய் துவரக்கா அவங்க இந்த காலேஜோட கரஸ்பாண்டன்ட் அவங்கள பத்தி இப்படி பேசாத அவங்க கேட்டா உன்னை வேலையை விட்டு தூக்கிருவாங்க…..

 

நீ சொல்ற இதே டயலாக்க தான் அந்த கரஸ்பாண்டன்ட் குரங்கும் சொல்லுச்சு…..

 

துருவ்க்கிட்ட பேசினியா?

 

பேசுறதா நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போன பிறகு அவன மிதிச்சி தள்ளி அவன கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டுட்டேன்……

 

ஏதே என்று அஸ்வதி துவாரகாவை அதிர்ச்சியாக பார்த்தாள்……

 

தொடரும்…….

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……….

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்