Loading

அத்தியாயம் – 24

காவ்யாவை முறைத்த அசோக் “அவளுக்கு பிடிச்சா எனக்கு பிடிக்கணும்னு இல்லயே.? அவங்க எப்ப கேட்டாலும் என் பதில் நோ தான்” என்று அழுத்தமாக கூற, “மனசு மாற வாய்ப்பு இல்லயா.? புள்ள பாவம்ண்ணே..” என்றாள் ஆதிரா.

வெறும் பார்வையாளராக அமர்ந்திருந்த ரூபனிடம் “அண்ணே கொஞ்சம் உங்க நண்பன்கிட்ட எடுத்து சொல்லுங்களேன்.. மீ பாவம்.. ரொம்ப வருசமா பின்னாடி சுத்திட்டு இருக்கேன்” என்று காவ்யா உரைத்ததும் திருதிருவென முழித்தவன் “பேசறேன்மா” என்றதோடு முடித்து கொண்டான்.

இந்த பேச்சை தவிக்கும் பொருட்டு “உனக்கு எப்படிடா திராவை தெரியும்.?” என்று அசோக் கேட்க, “சிவா அண்ணாவோட அத்தை பொண்ணு இவங்க தான்டா.. திருவிழாவுக்கு வந்திருந்தாங்க அப்ப பார்த்தேன்..” என்று கூறினான் ரூபன்.

“ஹலோ அண்ணா நீங்க பாட்டுக்கு…” என்று ஏதோ கூற வந்த காவ்யாவை விடாமல் தடுத்து அவளின் வாயை ஆதிரா மூட, அப்போதும் திமிறி “நீங்க பாட்டுக்கு இவளை பார்த்துட்டு போய்ட்டீங்க.. இவகிட்ட மாட்டிட்டு நான் பட்ட பாடு இருக்கே.. அது கொஞ்சநஞ்சமில்ல அண்ணா..” என்றாள் நொந்து கொண்டு.

அவள் என்ன கூறினாள் என்பதே ரூபனுக்கு புரியாமல் போனாலும் சின்ன சிரிப்பை சிந்திட, தோழியை முறைத்து விட்டு ஆதிராவோ “அண்ணா வர்றப்ப பார்த்தேன் அக்காவை காணோம்.? எங்க போனாங்க.?” என்றிட, “இருந்தாங்களேடா.. இப்ப எங்க போனாங்கனு எனக்கும் தெரில” என்றான் யோசனையுடன்.

அம்மாவின் மூலம் விசயத்தை அறிந்திருந்தவள் “கண்டிப்பா அக்காக்கு நல்லது நடக்கும் அண்ணா.. நம்பிக்கையை விட்டராதீங்க.. முதல்ல அக்காகிட்ட பேசுங்க” என்று நம்பிக்கை அளித்தாள்.

“அதுக்கு தான்டா வந்தோம்.. பேசணும்.. வந்ததும் பேச வேணாம்னு தான் அமைதியா வந்துட்டோம்..” – அசோக்

“அக்கா விருப்பம் என்னவோ அதைய பண்ணுங்க அண்ணா..” – ஆதிரா

“கண்டிப்பாடா..” – அசோக்

“அப்ப நான் மட்டும் என்ன பிடிக்கலனாலும் பிடிச்சு கட்டி வைக்கவா சொன்னேன்.?” – காவ்யா

“நீ ஏன்டி லூசு தனமா இடைல வந்து கத்தற.?” – ஆதிரா

“ம்ம்ம்ம்க்க்கும்” – காவ்யா

“ஆமா உங்க ப்ரெண்டு பேச மாட்டாங்களா.?” என்று கிண்டலுடன் தன்னவனை பார்க்க, செல்லக் கோலத்துடன் அவளை ரூபன் முறைத்தாலும் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான்.

“நீ பேசற அளவுக்கு எல்லாம் உன் ஆளு பேச மாட்டான்மா.. ரொம்ப அப்பாவி அவன்.. கண்கலங்காம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று அசோக்கும் நண்பனை கேலி செய்தான்.

அப்போதும் எதிர்மொழி இல்லை அவனிடம்.. இதற்கும் சின்ன சிரிப்பு மட்டுமே.. “துருவினி நல்லா இருக்காங்களா.?” என்று ஆதிராவிடம் கேட்டான் ரூபன்.. “ம்ம்ம் சூப்பரா இருக்கா.. நீங்க வந்துருக்கீங்கனு தெரிஞ்சா முதல் ஆளா ஓடி வந்துருப்பா..” என்றாள் கிண்டலுடன்.

இதற்கும் செல்ல முறைப்பு மட்டுமே அவனிடம்.!! இவனும் ஒரே மகன்.. சித்தப்பாவிற்கும் இரண்டு மகன்கள்.. அக்கா தங்கை இல்லாமல் வளர்ந்தவனுக்கு திடீரென்று இவர்களுடன் பேச ஒரு மாதிரியாக இருந்தது.

தன்னவள் மட்டும் இருந்திருந்தால் அவன் சாதாரணமாக பேசி இருப்பான்.. அவளிடம் மட்டும் இவனின் தயக்கம் காணாமல் போய் விடுகிறதே.!! கூடவே காவ்யாவும் இருப்பதால் அவ்வளவாக அவன் பேசவும் முனையவில்லை.. துருவினியிடம் பேசும்போதே அவனிடம் சிறு தயக்கம் இருந்ததும் உண்மையே.

காவ்யாவின் அன்னை அழைத்ததில் பெண்கள் இருவரும் செல்ல வேண்டிய கட்டாயம்.. போன் பண்றேன் என்று அவளின் அபியிடம் சைகை காட்டியவள் தோழியுடன் கிளம்பினாள்.

அவர்கள் சென்றதும் “உனக்கு ஆதியை தெரியுமாடா.?” என்று ரூபன் கேட்க, “ம்ம்ம் சின்ன வயசுல இருந்தே தெரியும்டா.. பக்கத்து தெருவுல தான் இருக்காங்க..” என்றான் பதிலாக.

“உன்னைய தெரியும் சரி.. நான் வந்ததை எப்படிடா கண்டுபிடிச்சுருப்பாங்க..” என்று தன் மனதை உறுத்திய வினாவை கேட்டிட, சத்தமாக சிரித்த அசோக் “டேய் உன் போட்டோவை காவ்யா கிட்ட திரா காட்டிருப்பாடா.. அவ பார்த்துட்டு தான் திராகிட்ட சொல்லிருப்பா..” என்று நடந்ததை சரியாக கணித்து கூறினான்.

உண்மையாக நடந்ததும் இதுதான்.. மாடியில் நின்றிருந்த ரூபனை முதலில் பார்த்ததும் காவ்யா தான்.. ‘இது ரூபன் அண்ணாவாச்சே.!! இங்க எப்படி.? அதுவும் என் மாமியார் வீட்டுல.?’ என்று யோசித்து நின்ற சமயம் அசோக் வந்து ரூபனுடன் பேசிவிட்டு இருவரும் உள்ளே சென்றதையும் கண்டாள்.

உடனே ஆதிராவுக்கு அழைத்து விசயத்தை கூறாமல் “சீக்கிரம் வீட்டுக்கு வா” என்று அவசரப்படுத்த, முதலில் சோம்பேறித்தனத்துடன் “போ காவு நானே இப்பதான் வேலையை முடிச்சேன்” என்றதில் கடுப்பான காவ்யா கேவலமாக திட்டினாள்.

பின்பு ரூபன் அண்ணனை பார்த்ததை கூறியதும் ‘வாய்ப்பு இல்லயே..’ என்று அவளின் மூளை எடுத்துரைத்தாலும் “இதோ ஒரு நிமிசத்துல அங்க இருப்பேன்..” என்றதோடு நில்லாமல் மின்னல் வேகத்திலும் வந்திருந்தாள்.

முதலில் ரூபனை பார்த்ததும் ஆதிராவுக்கும் அதிர்ச்சியே.!! ‘ஓஓஓஓ இதுதான் உன் சர்பிரைஸ்ஸா.?’ என்று நினைத்து சிரித்து கொண்டு அவர்களிடம் வந்தது.!!

ரூபனும் ஆதிராவும் தனியாக வெளியில் வந்திருந்தனர்.. உடன் துருவினியும் வருவதாக முதலில் அடம்பிடிக்க, அவளிடம் “நம்ம எல்லாரும் ஒருநாள் போலாம் பேபி.. ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சி தங்கையை சம்மதிக்க வைத்திருந்தாள். இல்லையென்றால் பெற்றவர்களிடம் போட்டு குடுத்து விடுவாளே.!!

முருகன் கோவிலுக்கு சென்று மனதார வேலவனை தரிசித்து விட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் அப்படியே காரை ஓட்டி கொண்டிருந்தான் ரூபன்.

அவனையும் சாலையையும் மாறி மாறி பார்த்திருந்த ஆதிரா “உண்மையாவே உங்க சர்பிரைஸ் வேற லெவல் தான்.. நீங்க வருவீங்கனு நான் எதிர்பார்க்கல” என்று கூறினாள் இன்னும் அவன் வந்ததை நம்ப முடியாமல்.!!

“நானே வருவேனு நினைக்கல ஆதி.. திடீர்னு எல்லாம் நடந்துருச்சு..” என்றவன் அவன் வந்ததற்கான உண்மையான காரணத்தை கூறாமல் மறைத்தான்..

“எப்படியோ நீங்க வந்ததே போதும் அபி.. உங்களைய பார்க்க இன்னும் ரொம்ப நாள் ஆகுமோனு பயந்தேன்..” – ஆதிரா

“ம்ம்ம்ம்ம்” – ரூபன்

“ஹோய் என்ன சிரிப்பு.? பிச்சு பிச்சு..” – ஆதிரா

“ஹஹஹஹ சிரிக்கல ஆதிமா..” – ரூபன்

“கிளம்பிருவீங்களா.?” – ஆதிரு

“ம்ம்ம்ம் அதான் வந்த வேலை முடிஞ்சுருச்சே..” என்றான் அவளை வம்பிழுக்கும் விதமாக.

“அசோக் அண்ணா இருப்பாங்களே.?” – ஆதிரா

“அவன் வந்த வேலை முடியணும்ல.?” – ரூபன்

“அது வரைக்கும் நீங்களும் இருங்களேன் ப்ளீஸ் அபி..” – ஆதிரா

“ஆதிமா அது எப்படி முடியும்.? அது நல்லா இருக்காது..” என்று சிரிப்புடனே மறுத்திட, அவனின் சிரிப்பில் “போங்க உங்களுக்கு என் ஃபீல் புரில..” என்று சிறுபிள்ளை போல் முகத்தை திருப்பி கொண்டாள் பெண்ணவள்.

அதே சிரிப்புடன் காரை ஓரமாக நிறுத்திய ரூபன் “சும்ம்மா விளையாண்டேன் ஆதிமா.. அசோக் கிளம்பறப்ப தான் நானும் கிளம்புவேன்.. எனக்கும் என் ஆதி கூட இருக்கணும்னு தோணாதா.?” என்று கண்சிமிட்டி வினவினான்.

பெண்ணவள் திகைத்து “அபி நீயா இது.?” என்று கேட்க, ஏன்டா.? என்று ரூபனும் எதிர்கேள்வி கேட்டான்.. “என்னால நம்ப முடியல அபி.. நீ இவ்ளோ பேசுவீயா என்ன.? பட் எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்றவள் ஆடவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

இதில் ரூபனுக்கு ஏதோவொன்று தாக்கியது. அவளிடம் பேசும் போதெல்லாம் கன்னத்தை கிள்ளி கொஞ்ச வேண்டும் என்ற நினைப்பை இப்போது நிஜமாக்கி உரிமையுடன் இரண்டு கன்னத்தையும் வலிக்காதவாறு கிள்ளினான்.

“நானும் கிள்ளுவேன்” என்று ஆதிராவும் ரூபனின் கன்னத்தை பிடித்து இழுத்து சிரிக்க, வலித்ததில் ஆஆஆஆ என்று கன்னத்தை தேய்த்தவன் “அசோக் தேடுவான் ஆதிமா.. கிளம்பலாமா.?” என்று கேட்டான்.

மனசே இல்லாமல் “கிளம்பணுமா.?” என்று ஆதிராவும் கேட்க, “வேற வழி இல்லயே..” என்று ரூபனும் கையை விரித்திட, “அபி பேசாம நம்ம ரெண்டு பேரும் இப்படியே ஓடி போய்ரலாமா.?” என்று இரு புருவத்தையும் உயர்த்தி வினவினாள்.

‘எதே.?’ என்று திகைத்து “உன்னைய” என்று செல்லமாக அவளின் தலையில் தட்டி “நம்ம எல்லாரோட சம்மதத்தையும் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு ஓடி போலாம் ஆதிமா..” என்றான் அவளை போலவே.

உம்மென்று முகத்தை சுருக்கியவளை பார்த்தவாறு காரை எடுத்தான். விடாமல் அவளை வம்பிழுத்துக் கொண்டே ரூபன் வர, செல்லமாக சிணுங்கி முறைப்பவளை அப்படியே அள்ளி கொஞ்சலாம் என்றிருந்தாலும் மனதை கட்டுப்படுத்தி அவளின் சிணுங்கல்களை மட்டுமே ரசித்தான்.

அவனை மொத்தமாக கொள்ளை கொண்டிருந்தாள் அவள்.!!! அவனவளை காணும் போதெல்லாம் சொல்லவொண்ணா ஆனந்தமே.!! வேணுமென்றே அவளை சீண்டும் போது சுருங்கி முறைக்கும் கருமணிகளும் பாவனைகளும் வெகுவாக கவர்ந்தது அவனை.!!

பேருந்து நிலையத்தில் இறக்கி விட கூறி இருந்தாள் ஆதிரா.. இவ்வளவு நேரம் ஓயாமல் பேசிய அதரங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மௌனமாகி விட, “கிளம்பட்டுமா.?” என்றாள் சுருதியே இல்லாமல்.

“ஆதிமா நான் இங்க தான்டா இருக்க போறேன்.. இதுக்கே இப்படினா நான் பெங்களூர் போய்ட்டா என்ன பண்ணுவ.?” – ரூபன்

“நானும் உங்க பின்னாடியே வந்துருவேன்..” – ஆதிரா

“ஆஹான் வருவ வருவ.. காலை உடைச்சுருவேன்..” – ரூபன்

“காலை உடைச்சா நீங்க தான் என்னைய பார்த்துக்கணும் பரவால்லயா.?” – ஆதிரா

“என் ஆதியை பார்க்க எனக்கு என்ன கஷ்டம்.? அப்பவும் நீ என் ஆதி தான்..” என்றிட, மௌனமாக அவனை ஏறிட்ட கருமணிகள் சாலையில் பதிந்தது.

வலுக்கட்டாயமாக “ஆதிமா இங்க பாரு” என்று தன் முகம் பார்க்க வைத்தவன் “உன்னைய எனக்கும் ரொம்ப பிடிக்கும்டா.. உன்கூட வாழணும்.. கடைசி மூச்சு வரைக்கும் உனக்காக மட்டும் வாழணும்.. அவ்ளோதான்.. காதலிச்சோம் உடனே கல்யாணம் பண்ணுனோம்னு இருந்தா எப்படிடா.?

எல்லாம் நடக்க கொஞ்ச காலமாகும்.. அது வரைக்கும் இந்த பிரிவு கூட சுகமா தான் இருக்கணும்.. இப்படி சின்னப்பிள்ளை மாதிரி மூஞ்சியை வெச்சிருந்தா எப்படி.? ம்ம்ம் என் ஆதியா இது.?” என்று கேட்டவனின் தோளில் பதிலின்றி சாய்ந்தாள் ஆதிரா.

பெண்ணவளின் உச்சந்தலையில் அழுத்தமாக இதழை பதித்து “போன் பண்றேன்டா.. பார்த்து போடா” என்று கூறிட, ம்ம்ம்ம் என்ற ஆதிரா நிமிர்ந்து “எனக்கும் உன்னைய ரொம்ப பிடிக்கும் அபி.. அதுவும் உன் ஸ்மைலும் கன்னங்குழியும் என்னைய மொத்தமா உன்பக்கம் இழுத்துருச்சு” என்றாள்.

இதில் ரூபன் இதழை விரித்ததில் அவளை கவரும் கன்னங்குழியும் அழையா விருந்தாளியாக வந்து பெண்ணவளின் விழிகளுக்கு காட்சியளித்திட, அதில் பஜக்கென்று முத்தத்தை பதித்து “கிளம்பறேன் அபி” என்றவள் அவனை பார்க்க வெக்கம் தடுத்ததில் ஓடியே விட்டாள்.

கன்னத்தில் கையை வைத்தவனுக்கு சிரிப்பே மேலோங்கிட, இடவலமாக தலையை அசைத்து சிரித்து கொண்டவன் கிளம்பினான். ஆதிராவிற்கும் நடந்ததை நினைத்து அதரங்கள் புன்னகைக்க முயல, அதனை கட்டுப்படுத்தி நின்றிருந்தவளுக்கு அவளவனை நினைத்து வெக்கச் சிரிப்பே.!!!

உன் முதல் பார்

வையும்

உன் முதல் தீண்டலும்

உன் முதல் முத்தமும்

எனக்குள் என்றுமே

அழியாத அழகிய

பூகம்பமேடா(டி)!!

தொடரும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்