
அவ் அறையை நெருங்கிய ரிஷிகேஷ் கதவைத் திறந்து சகுந்தலாவை முதலில் உள்ளே தள்ளி விட்டு பின் உள்ளே சென்றான்.
ரிஷிகேஷ் தள்ளி விட்டதும் நிலை தடுமாறிய சகுந்தலா கஷ்டப்பட்டு தன்னை சமன் செய்து கொண்டு நிமிர, அவளை சுற்றி எல்லாப் பக்கமும் கணினித் திரைகள் காணப்பட, அனைத்திலும் வெவ்வேறு நாட்டு ஆண்கள் நூறுக்கும் மேட்பட்டோர் நேரலையில் தொடர்புபட்டு இருந்தனர்.
சகுந்தலாவிற்கு ஏதோ தவறாக நடக்கப் போவதாக இதயம் எச்சரித்துக் கொண்டே இருந்தது.
சுற்றியும் பயத்துடன் நோக்கியவள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக திரும்பி ஓட முயல, அவளின் கரத்தைப் பற்றி இழுத்து கட்டிலில் தள்ளி விட்டான் ரிஷிகேஷ்.
“ப்ளீஸ் வேணாம். தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.” எனக் கெஞ்சினாள் சகுந்தலா.
“விடவா? இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லையே.” என்ற ரிஷிகேஷ் அவ் அறையே அதிரச் சிரித்தான்.
அவன் சிரிக்கவும் திரையில் இருந்த அவனின் பங்காளிகளும் கூடவே சிரித்தனர்.
சகுந்தலாவிற்கு பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது.
“எ…என்ன பண்ண போறீங்க?” எனக் கேட்டாள் சகுந்தலா கண்ணீருடன்.
“அது தான் மேட்டர். இன்னைக்கு நான் உன்ன ஒன்னுமே பண்ண போறது இல்ல. எல்லாமே நீ தான் பண்ண போற. இவங்க எல்லாரும் தான் உன்னோட ஆடியன்ஸ்.” என்றான் விஷமமாக.
சகுந்தலாவிற்கு ரிஷிகேஷின் பேச்சு குழப்பத்தைத் தந்த அதேவேளை பயத்தையும் விளைவித்தது.
திரையில் இருந்த மனிதர்களோ பார்வையாலேயே சகுந்தலாவைத் துகில் உரிந்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் கரத்தில் மட்டும் சகுந்தலா கிடைத்தால் அவள் எஞ்சுவதே அதிசயம் தான்.
சகுந்தலா அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு ஏதாவது வலி இருக்கிறதா என ஆராய்ந்து கொண்டிருக்க, அவளின் தாடையைப் பற்றி முகத்தை அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்த ரிஷிகேஷ் உச்சுக் கொட்டினான்.
“அச்சோ… என்ன உன் முகம் இப்படி வெளுத்துப் போய் இருக்கு? பார்க்கவே பாவமா இருக்கே. ப்ரெக்னன்ட்டா வேற இருக்க. இந்தத் தண்ணிய குடி முதல்ல.” என்ற ரிஷிகேஷ் அங்கிருந்த மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து சகுந்தலாவிடம் நீட்டினான் விஷமப் புன்னகையுடன்.
சகுந்தலா மறுப்பாகத் தலை அசைக்க, “இது தான் வேணாம்னு சொல்றது. புருஷன் ஏதாவது சொன்னா அதை அப்படியே கேட்டு நடந்துக்குறது தான் பொண்டாட்டிக்கு அழகு. எங்க குடி பார்க்கலாம்.” என்றான் ரிஷிகேஷ்.
சகுந்தலா தண்ணீரை வாங்காமல் மறுப்பாகத் தலை அசைத்தவள் ரிஷிகேஷிடம் இருந்து விலகி கட்டிலின் ஒரு மூலைக்குச் சென்று காலைக் கட்டிக் கொண்டாள் அச்சத்துடன்.
“ப்ச்... ஒழுங்கா சொன்னா கேட்க மாட்டேங்குற. உனக்கு என் வழி தான் சரி.” என்ற ரிஷிகேஷ் சகுந்தலாவின் தாடையைப் பற்றி அவளது தலையை உயர்த்தி தன் கையில் இருந்த தண்ணீரை சகுந்தலாவின் வாய்க்குள் சரித்தாள்.
நாக்கில் கசப்பாக ஏதோ உணரவுமே சகுந்தலாவின் புலன்கள் விழித்துக்கொள்ள, ரிஷிகேஷின் கரத்தைத் தட்டி விட முயன்றாள்.
ஆனால் ஆண் அவனின் பலத்தின் முன்னால் சகுந்தலாவின் முயற்சிகள் அனைத்துமே விழலில் இறைத்த நீர் போல் ஆனது.
சகுந்தலாவின் தொண்டையைத் தாண்டி தான் புகட்டிய நீர் செல்வதை வன்மத்துடன் ரசித்துப் பார்த்தான் ரிஷிகேஷ்.
ரிஷிகேஷ் தன் பிடியை விட்டதுமே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இறுமினாள் சகுந்தலா.
சற்று நேரத்திலேயே சகுந்தலாவின் தலை கிறுகிறுக்க, உடல் உஷ்ணம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
அரை மயக்க நிலைக்கு சென்று கொண்டு இருந்தவளோ பெருமூச்சுகளாக வாங்கினாள்.
சகுந்தலா படும் பாட்டை விஷமப் புன்னகையுடன் ரசித்துக் கொண்டு இருந்தான் ரிஷிகேஷ்.
தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலை விட்டு இறங்கிய சகுந்தலாவிற்கு கால்கள் வலுவிழந்தது போல் இருந்தது.
மயக்கத்திற்கும் போதைக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் இருந்தாள் பெண்ணவள்.
ரிஷிகேஷ் அங்கு ஒரு ஓரமாகப் போடப்பட்டு இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து அனைத்து விளக்குகளையும் ஒளிர விட்டான்.
அறையே பளிச் என்று ஆனது.
ஏதோ தவறாக நடப்பது சகுந்தலாவிற்குப் புரிந்தாலும் அவளால் தன்னையே தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க முடியவில்லை.
உடல் முழுவதும் வியர்த்து வழிய, தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே நிலத்தில் மண்டியிட்டு விட்டாள் சகுந்தலா.
அங்கிருந்த மதுக் கிண்ணத்தை எடுத்து தன் வாயில் சரித்துக் கொண்ட ரிஷிகேஷ், “ஸ்டார்ட்…” என்று சொல்ல, திரையில் இருந்த ஒருவன், “ரிமூவ் யுவர் ட்ரெஸ்.” என்றான்.
மறு நொடியே தடுமாறிக் கொண்டே எழுந்து நின்ற சகுந்தலா தான் அணிந்து இருந்த சேலையை உருவி வீசினாள்.
ரிஷிகேஷ் கண்களில் சிவப்பேற அவளை ரசிக்க, சகுந்தலாவோ ஒவ்வொரு உடையாக மொத்தமாகக் கலைந்து வீசினாள்.
சுற்றியும் திரையில் இருந்தவர்களோ உல்லாசச் சிரிப்புடன் பச்சையாக சகுந்தலாவை வர்ணித்தனர்.
இது எல்லாமே சகுந்தலாவின் மூளைக்குள் பதிந்தது.
ஆனால் அவள் அவளாகவே இல்லை.
ஒரு அரை மயக்க நிலையில் இருந்தாள் சகுந்தலா.
ஏனெனில் ரிஷிகேஷ் அவளுக்குக் கொடுத்த மருந்தின் வீரியம் அப்படி.
அம் மருந்தை எடுத்துக் கொள்பவர்கள் சற்று நேரத்திற்கு அவர்களாகவே இருக்க மாட்டார்கள்.
தலையாட்டி பொம்மை போல யார் எது சொன்னாலும் செய்வார்கள்.
போதாக்குறைக்கு உணர்வுகளையும் அளவுக்கு அதிகமாகத் தூண்டி விடக் கூடியது.
“டச் யுவர் செல்ஃப்.” என்றான் இன்னொருவன்.
உடனே சகுந்தலா தன்னைத் தானே தொட்டுக் கொண்டு முனங்கினாள்.
சகுந்தலாவையும் மீறி அவளது விழிகள் கண்ணீரை சிந்தின.
அதனைக் கண்டு அனைவருமே கை தட்டிச் சிரித்தனர்.
அடுத்த சில மணி நேரங்களுக்கு அவர்களின் கைப்பாவையாக அவர்கள் சொன்னது அனைத்தையும் செய்தாள் சகுந்தலா.
பின் சட்டென விளக்குகளை அணைத்து விட்ட ரிஷிகேஷ், “டுடேஸ் செஷன் இஸ் ஓவர்.” எனக் கூறவும் திரையில் இருந்தவர்கள் உல்லாசக் குரலுடன் ஏதேதோ கூறி விட்டு விடை பெற்றனர்.
மறு நொடியே ரிஷிகேஷின் கைப்பேசிக்கு தொடர்ந்து நோட்டிஃபிக்கேஷன் வர, அதனை எடுத்துப் பார்த்த ரிஷிகேஷின் இதழ்கள் புன்னகைத்தன.
அனைத்துமே பல லட்சங்களில் வந்த பண வரவு பற்றியது.
சகுந்தலாவை வைத்து இந்த சில மணித்தியாலங்களில் ரிஷிகேஷ் சம்பாதித்தது.
பின் அவ் அறையை வெளிப் பக்கமாகப் பூட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினான் ரிஷிகேஷ் அங்கிருந்த பெண்களுடன் ஆட்டம் போடுவதற்காக.
சற்று நேரத்திலேயே சுய நினைவுக்கு வந்த சகுந்தலாவிற்கு அனைத்துமே நினைவுக்கு வந்து உடல் கூசியது.
வாய் விட்டு கதறி அழுதவளோ அதன் பின்னர் தான் அங்கு ரிஷிகேஷ் இல்லாததைக் கவனித்தாள்.
உடனே அவளது மூளை விழித்துக் கொள்ள, சுற்றியும் பார்வையை ஓட விட்டவளின் பார்வையில் விழுந்தது அங்கிருந்த குளியலறை.
உடனே ஒரு ஓரமாக இருந்த தன் சேலையை அணிந்து கொண்டவள் கீழே விழுந்து கிடந்த தன் கைப்பையையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டாள்.
அவளின் நல்ல நேரத்துக்கு அங்கு சற்று உயரத்தில் ஒரு கண்ணாடி ஜன்னல் இருந்தது.
தன் வயிற்றைத் தொட்டுப் பார்த்தவளின் விழிகளில் கண்ணீர்.
இன்று நடந்தது எல்லாம் அநியாயத்தின் உச்சம்.
இதற்கு மேல் இங்கு இருந்தால் தனக்கோ தன் பிள்ளைக்கோ பாதுகாப்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்டாள் சகுந்தலா.
ஏன் என்றால் முன்பானால் அவள் மட்டும் இருக்கும் போது தன் மூச்சு நின்று விடாதா எனப் பலமுறை எண்ணி உள்ளாள்.
ஆனால் இப்போதோ தன் குழந்தைக்காகவே தான் உயிருடன் இருக்க வேண்டும் என முடிவு செய்தாள்.
உடனே அங்கிருந்து தப்பித்தால் போதும் என முடிவு எடுத்த சகுந்தலா பாத்டப்பில் ஏறி கஷ்டப்பட்டு அந்த ஜன்னலைத் திறந்தாள்.
அது சற்று ஒடுக்கமாக இருந்தாலும் ஒரு ஆள் செல்லக் கூடியதாகவே இருந்தது.
தன் கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணுக்கு தகவல் அனுப்பிய சகுந்தலா கண்ணை மூடிக்கொண்டு வெளியே பாய்ந்தாள்.
தன குழந்தைக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் வயிற்றைக் கரங்களால் அணைத்துக் கொண்டாள்.
கீழே விழுந்ததில் சகுந்தலாவிற்கு ஓரளவு சிராய்ப்புகள் ஏற்பட்டாலும் நல்ல வேளையாக அவளின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை.
கஷ்டப்பட்டு எழுந்து நின்றவளோ சுற்றியும் பார்த்தாள்.
தெரியாத ஊரில் தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்டவளின் இதயம் பல மடங்கு வேகத்தில் துடித்தது.
இருந்தும் ரிஷிகேஷிடம் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணமே சகுந்தலாவிற்கு பலத்தைக் கொடுத்தது.
அந்த உயர் ரக பாருக்குப் பின்னால் இருந்த ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடம் தான் அது.
ஆனால் தான் தப்பித்ததை அறிந்தால் நிச்சயம் அவ் வழியாக வந்து ரிஷிகேஷ் தன்னைக் கண்டு கொள்வான் என்பதால் வேகமாக அங்கிருந்து ஓடினாள் சகுந்தலா.
போதையில் உச்சத்தில் இருந்த ரிஷிகேஷோ இது எதையும் அறியாமல் தன் முன் இருந்த பெண்ணை ஆட்கொள்வதில் கருத்தாய் இருந்தான்.
வேகமாக ஓடி வந்த சகுந்தலாவிற்கோ நிற்க முடியாமல் மூச்சு வாங்கியது.
அடிக்கடி பயத்துடன் தன் வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.
பின் அங்கிருந்த மறைவான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டவளுக்கோ சுற்றி இருந்த இருள் வேறு அச்சம் ஏற்றியது.
சற்று நேரத்திலேயே அவளின் அருகில் காலடி ஓசைகள் சில கேட்க, ரிஷிகேஷ் தான் தன்னைத் தேடி வந்து விட்டான் என் நினைத்த சகுந்தலாவிற்கு பயத்தில் உடல் நடுங்கத் தொடங்கியது.
இன்னும் சற்றுத் தள்ளி சுவரோடு சாய்ந்து அமர்ந்தவள் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.
சட்டென அவளின் தோளில் ஒரு கரம் பதியவும் அதிர்ந்து இமைகளைப் பிரித்த சகுந்தலாவின் முன்னால் போலீஸுடன் நின்று இருந்தாள் கமலி.
மறு நொடியே பாய்ந்து கமலியை அணைத்துக் கொண்ட சகுந்தலா கதறி அழுதாள்.
ரிஷிகேஷிடம் இருந்து தப்பித்த சகுந்தலா முதல் வேலையாக கமலிக்குத் தான் தகவல் தெரிவித்தாள்.
கமலியும் மேற்படிப்புக்காக லண்டனில் இருப்பதால் தன் லைவ் லொக்கேஷனையும் சேர்த்தே அனுப்பி வைத்தாள்.
குறுஞ்செய்தி அனுப்பியவளுக்கு அழைப்பை ஏற்படுத்த பயமாக இருந்தது.
ஏனெனில் தன் குரல் கேட்டு ரிஷிகேஷ் வந்து விட்டால் என்ன செய்வது என அஞ்சினாள் சகுந்தலா.
சகுந்தலாவின் குறுஞ்செய்தி கிடைத்ததுமே ஒரு நொடியும் யோசிக்காது போலீஸுக்குத் தகவல் தெரிவித்தாள் கமலி.
ஏனெனில் தன் சகோதரிக்கு ஏற்பட்ட நிலைமை தன் தோழிக்கும் நடந்து விடக் கூடாது என விரும்பினாள்.
அதனாலேயே கமலியின் பெற்றோர் எவ்வளவு தடுத்தும் சகுந்தலாவைக் காப்பாற்ற வேண்டி வந்து இருந்தாள்.
“ஆர் யூ ஓக்கே மேடம்?” என்ற போலீஸ் அதிகாரியின் குரலில் கமலியை விட்டு விலகிய சகுந்தலா ஆம் எனத் தலை அசைத்தாள்.
பின் என்ன நடந்தது என விசாரித்தவர்களிடம் சகுந்தலா அனைத்தையும் விவரிக்க, கமலியால் தன் தோழிக்கு நேர்ந்த அநியாயங்களை எண்ணி தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அழுது கொண்டு இருந்த சகுந்தலாவை அணைத்துக் கொண்ட கமலிக்கு அவளுக்கு என்ன ஆறுதல் கூற என்றே தெரியவில்லை.
தன்னிடம் இருந்த ஒரு சில ஆதாரங்களையும் கமலி போலீஸிடம் வழங்க, பாரில் முழுப் போதையில் விழுந்து கிடந்த ரிஷிகேஷையும் அங்கிருந்தவர்களையும் கும்பலாக அள்ளிக் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர் போலீசார்.
