
சமுத்திரா – 26:
அன்று தான் வாரத்தில் முதல்நாள். திங்கட்கிழமை எதையாவது உருப்படியான செய்தியை சேகரிக்க வேண்டுமென்ற முனைப்புடன் வேலைக்கு வந்திருந்தாள் ஷிவன்யா.
ஆனால் அவளை உள்ளே அழைத்த எடிட்டர், பிரபல சினிமா நடிகரின் வீட்டில் நடக்கும் திருமணத்தை பற்றி பேட்டி எடுக்க சொன்னார்.
அதில் கடுப்பானவள், “அந்த காலேஜ் இஷு ரொம்ப சீரியஸ் விலோ. ஆனா இவரேன்னனா ஒன்னுத்துக்கும் உதவாத நியூஸை கலெக்ட் பண்ண சொல்லுறாரு..” என விலோவிடம் புலம்பியபடி அமர்ந்திருந்தாள் ஷிவன்யா.
அந்நேரம் கோபமாக உள்ளே நுழைந்த சக்தி கையில் இருந்த செய்தி தாளை விலோவின் மேசை மேல் பட்டென்று வீசினான். ஆனால் அருகில் அமர்ந்திருந்த ஷிவன்யாவின் மடியில் சென்று விழுந்தது.
“யார் போட்ட நியூஸ் விலோ அது?” என கழுத்து நரம்பு புடைக்க சக்தி கேட்க,
“ஹலோ! மிஸ்டர் மன்னர்ஸ்னா என்னனு தெரியாதா.. என்ன இது கொஞ்சம் கூட மரியாதை இல்லாம..” என கோபமாக ஷிவன்யா அவனை முறைத்தாள்.
ஏற்கனவே கடுப்பில் இருந்த சக்தி, ஷிவன்யாவை பார்த்துவிட்டு, “நீ ரிப்போர்ட்டர் தான? உனக்கு இது போதும்” என நக்கலாக சொன்னான்.
“மைண்ட் யுவர் வார்ட்ஸ் மிஸ்டர்..”என ஷிவன்யா எச்சரிக்க,
“நீங்க மைண்ட் பண்ணீங்களா? தேவையே இல்லாம எங்க பர்சனல் லைஃப்ல தலையிடுறது தான உங்க வேலை.” என யாரின் மீதோ இருந்த கோபத்தை ஷிவன்யாவின் மேல் இறக்கினான்.
“பேப்பர்ல போடுற பாதி நியூஸை கொடுக்குறதே, பிரபலமா இருக்க நீங்க தான? என்னமோ நாங்களே தேடி தேடி போடுற மாதிரி சொல்லுறீங்க?” என்ற ஷிவன்யா,
“உங்களுக்கு தேவை லைம்லைட். அதுக்கு நீங்க மீடியாவை யூஸ் பண்ணிக்குறீங்க.. கடைசில எங்களையே குறை சொல்லுறீங்களா,? கொஞ்சமாவது எதிக்சோட இருங்க..”
“ஷிவ். என்ன நியூஸ் னு தெரியாம பேசாத..” என விலோ அவளை தடுக்க முயல,
“ஓ.. உங்களுக்கு எதிக்ஸ் பத்தி தெரியுமா? சரி சொல்லுங்க.. ஒருத்தரோட பர்சனல் விஷயத்தை எதோ பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி நியூஸ் உங்க பத்திரிக்கைல தான வந்துருக்கு. அதுக்கு என்கிட்டே பர்மிஷன் வாங்குனீங்களா? என்னோட கன்சர்ன் கேட்டிங்களா..” என அடுக்கடுக்காய் கேட்டபடி அவளை நெருங்கினான்.
“அ.. அது உண்மையில்லாத விஷயத்தை நாங்க போடமாட்டோம்” என ஷிவன்யா திணற,
“உண்மையோ பொய்யோ.. ஒருத்தரோட பர்சனல் விஷயத்தை போடுறப்ப அவங்களோட ஆட்சேபனையை கேட்க கூட மாட்டீங்களா?” என நக்கலாக கேட்டான்.
‘எதாவது சாதிக்க வேண்டும் என்று இந்த வேலைக்கு வந்த ஷிவன்யாவிற்கு அவனின் பேசுச்சு கோவத்தை தான் வரவழைத்தது.
“என்ன மேடம் பேச்சை காணோம்? இது தான் உங்க தொழில் தர்மமா?” என சக்தி மேலும் சீண்ட,
“போதும். ரொம்ப பேசாதீங்க சார். நாங்க நியூஸ் போடனுன்னு தான நீங்க எல்லாமே பண்ணுறீங்க. அப்புறம் அப்படியே நல்லவராட்டம் என்ன பேச்சு?” என ஷிவன்யாவும் விடாமல் பேச அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் தொழிலை வைத்து தாக்கிக்கொண்டனர்.
“இதெல்லாம் ஒரு வேலைன்னு பார்க்குறீங்க பாருங்க..”என சக்தி மேலும் சொல்லும் முன்,
“சக்தி ப்ளீஸ் வா..” என அவனின் கையை பிடித்தபடி இழுத்துக்கொண்டு சென்றாள் விலோ.
“என்னை பத்தி என்னவேணா எழுதிட்டு போறாங்க. ஐ டோன்ட் கேர் விலோ. பட் மாம்..மாம்மை பத்தி எழுதிருக்காங்க விலோ..” என்றவனின் நரம்பு முருக்கேற அங்கிருந்த சுவற்றை ஓங்கி குத்தினான். “நீ இப்ப கிளம்பு சக்தி. நான் எடிட்டர் கிட்ட சொல்லி உன்கிட்ட பேச சொல்லுறேன்.”
இங்கு பாய்லர் போல் கொதித்துக் கொண்டிருந்த ஷிவன்யாவிடம் வந்தாள் விலோ. “அவங்க நம்ம மீடியாவை எப்படி பேசுறாங்க.. நீயும் சும்மா இருக்க விலோ. ச்ச..” என அவள் முகத்தை திருப்ப,
“அதில்லை ஷிவ். அவங்கள பத்தி என்ன நியூஸ் வந்ததுன்னு..”
“எனக்கு அதை பத்தியெல்லாம் கவலையே இல்லை விலோ. தெரிஞ்சிக்கவும் இஷ்டம் இல்லை. ஆனா ஒன்னு, இன்னொரு முறை அவரை நான் பார்க்க கூட விரும்பல.” என முடித்துக்கொண்டாள்.
சக்தியின் அம்மாவும் ஒரு நடிகை தான். அதை வைத்து அவரை சற்று தரை குறைவாக எழுதியிருந்ததற்கு தான் சக்தி சண்டையிட வந்தான். ஆனால் அது வேறாக முடித்துவிட்டது. அதன் பிறகு ஷிவன்யாவும் சக்தியும் சந்திக்கும் வாய்ப்பு இன்று தான் கிடைத்தது.
அனைத்தையும் யோசித்த சக்தி ஷிவன்யாவின் முகத்தை பார்க்க, உதடுகள் துடிக்க குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாள். அவளிடம் சென்று தொட்டு பார்த்தவனுக்கு அவனின் கையே சூடாகியது.
*****
“மேல யாரும் இல்ல டா. கயிறை தூக்கிப்போட்டு ஏறிவாங்க..” என ப்ரதீப் கொள்ளைக்காரர்களின் கப்பலில் இருந்தப்படி அமரனுக்கும் ரங்காவிற்கும் செய்தி அனுப்பினான்.
இங்கே மார்ட்டினையும், விக்டரையும் தயாராக இருக்க சொன்னவர்கள், கையோடு கொண்டுவந்த கயிற்றை உபயோகித்து அமரனும் ரங்காவும் கொள்ளைக்கார கப்பலுக்குள் நுழைந்தனர்.
கயிற்றின் மூலம் மேலே ஏறும் பொழுது அவர்களுக்கு அன்று மாலையில் அனைவரும் குதூகலத்துடன் ஏறியது தான் நினைவுக்கு வந்தது.
“இப்ப எங்கடா போகணும்?” என்ற அமரனின் குரல் அங்கிருந்த அமைதியை விரட்ட, “டேய் எதுக்கு டா கத்தி நீயே ஊரை கூட்டுற? நான்லாம் எவ்ளோ சைலண்ட்டா போய்ட்டு வந்தேன் தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் அமைதியா என் பின்னாடியே வாங்க..” என ப்ரதீப் சொன்னான்.
“டேய் நாயே.. நீயே எங்க கண்ணுக்கு தெரியமாட்ட. இதுல உன் பின்னாடி நாங்க எப்படி டா வர்றது..” – ரங்கா.
“ஆமால..” என்ற ப்ரதீப், “நான் சொல்ல சொல்ல குத்து மதிப்பா வாங்க டா.” என முன்னே நடந்தான்.
அவர்களும் ப்ரதீப்பின் குரல் வரும் திசையை வைத்து சென்றனர்.
“டேய் இங்க தான் அந்த கொள்ளைக்காரங்க எல்லாரும் குடிச்சிட்டு இருப்பாங்க டா. நீங்க ரெண்டு பேரும் சத்தம் போடாம அப்படியே அமைதியா இந்த இடத்தை கடந்து வந்துடுங்க..” என ப்ரதீப் சொல்ல அமரனும் ரங்காவும் மெதுவாக நடந்து அவ்விடத்தை கடந்தனர்.
பின் அங்கே சில பெண்கள் நடந்து சென்றுக்கொண்டிருக்க, “டேய் டக்குனு ஒளிஞ்சிக்கோங்க டா..” என ப்ரதீப் சொன்னதும் அங்கிருந்த பாய்மரத்தில் இருவரும் மறைந்துக் கொண்டனர்.
பின் அவர்கள் சென்றதும் இருவரும் வெளிவந்தனர். “சீக்கிரமா வாங்க டா. இந்த படில இறங்கிட்டா அந்த கள்ளிராணி ரூம் வந்துடும்.” என அவர்களை துரிதமாக அழைத்து சென்றான் ப்ரதீப்.
“இதோ இந்த ரூம் தான் டா. இங்க தான் சமுத்திரா பெட்டியை அந்த கள்ளிராணி மறைச்சு வெச்சிருக்கா..”
அமகிருந்த மேசையின் மேலே சமுத்திரா பெட்டி இருந்தது. “நான் போய் எடுத்துட்டு வரேன் டா..” என உள்ளே செல்ல முயல, “டேய் இருடா. யாராவது உன்னை பார்க்க போறாங்க..” என்ற ப்ரதீப் அங்கு வேறு யாரும் இருக்கிறார்களா என பார்த்துவிட்டு வந்தான்.
“அந்த கள்ளிரணியையும் காணோம். நீ போய் எடுத்துட்டு வந்துடு ரங்கா..” என அவனை மட்டும் உள்ளே அனுப்பினர்.
ரங்கா உள்ளே வந்து அந்த சமுத்திரா பெட்டியை எடுத்ததும், “டேய் ரங்கா சட்டுனு திரும்பிடாத அந்த கள்ளிராணி உன் பின்னாடி தான் இருக்கா.” என ப்ரதீப்பின் குரல் முடியும் முன் திரும்புவிட்டான் ரங்கா.
“டேய் உன்னை திரும்பாதனு தான சொன்னேன்..” – ப்ரதீப் சொல்ல,
“நீ எப்படி இங்கு வந்தாய்?” என கேட்ட ரங்காவின் கழுத்திலே சிறு கத்தியை வைத்தாள் கள்ளிராணி.
“ஓ.. இந்த விளையாட்டை எடுக்க தான் வந்தாயா..?” என கேட்டபடியே பட்டென்று அவனிடமிருந்து அந்த பெட்டியை பறித்துவிட்டாள்.
எதிரில் ஆண் இருந்திருந்தால் சரிக்கு சமமாக ரங்கா சண்டை செய்திருப்பான். ஆனால், பெண் என்பதால் அவன் அழுத்தமாக நின்றிருந்தான்.
“இந்த பெட்டி உனக்கு வேண்டுமென்றால்.. எனக்கு ஒரு உதவி நீ செய்ய வேண்டுமே! உன்னுடைய நண்பனை என்னிடம் கொடுத்துவிட்டு நீ இதை தாராளமாக எடுத்து செல்லலாம்..” என சலுகையாக கூறினாள்.
அங்கிருந்த திரை சேலையின் வழியே அமரனும் அனைத்தையும் கவனித்தப்படி தான் இருந்தான். “என்ன டா உன்ன பண்டம் மற்றும் முறையை யூஸ் பண்ணி வாங்க பார்க்குறா..” என ப்ரதீப் காற்றிலே சொல்ல, “நீ அடங்கவே மாட்டியா..” என கேட்டவன் கள்ளிரணியின் அறைக்குள் சென்றான்.
“எங்களுக்கு இது ரொம்ப அவசியம். நீங்க தான் எங்கக்கிட்ட இருக்க மது எல்லாத்தையும் எடுத்துக்குட்டீங்களே அப்புறமும் என்ன?” என ரங்கா கேட்க,
கண்ணாடி வழியே அமரன் நுழைந்ததை பார்த்த கள்ளிராணி, “எனக்கும் இது வேண்டாம். நீயே வைத்துக்கொள்.” என ரங்காவிடம் கொடுத்தவள், “அதற்கு பதிலாக இவன் என்னிடம் இருக்கட்டும்.” என அமரனை இழுத்துக் கொண்டவள் கத்தியினால் அவனின் கழுத்தை வளைத்து பிடித்தாள்.
“எனக்கு எதுவும் ஆகாது டா. நீ இந்த பெட்டியை எடுத்துட்டு போ. இவளை நான் பாத்துக்குறேன்.” – அமரன்.
“டேய் உன்ன விட்டுட்டு நான் எப்படி டா தனியா போறது..?”
“ப்ளீஸ் ரங்கா.. நீ போ முதல்ல..” என அமரன் சொல்ல,
“ஹே அங்க பாரு..” என ரங்கா சொல்ல உடனே கள்ளிராணியும் திரும்பினாள். ஆனால் அங்கு எதுவும் இல்லை. அவள் மீண்டும் திரும்பும் முன் ரங்காவும் அமரனும் அவளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஓடினர்.
“அடேய் போலீஸ்காரா உன்னோட மூளை கூட வேலை செய்யுது டா..” என்ற ப்ரரதீப்பும் அவர்களுடனே அவர்களுக்கு வழிகாட்டியபடி காற்றிலே மிதந்தான்.
அங்கிருந்த சங்கை எடுத்து கள்ளிராணி ஊதிவிட, அவர்களிடம்
ரங்காவும், அமரனும் மாட்டிக் கொண்டனர்.
*****
மெதுவாக அங்கிருந்த டேபிளில் இருந்து கீழிறங்கிய விலோ. அவ்வறையில் இருந்து வெளியே வந்தாள். அந்த தளத்தில் இருந்த மற்றொரு அறைக்குள் வழி கிடைக்குமா என அவள் செல்ல, அங்கே கண்ட காட்சி அவளின் உயிரையும் உறைய வைத்தது.
அவர்களுடன் பயணித்த அலெக்ஸின் சடலம் முதலையால் வேட்டையாட பட்டு சிதைந்திருந்தது.
அதை பார்த்தவளிற்கு தலை சுற்றி வாந்தி வர அங்கிருந்த கழிவறையை நோக்கி ஓடினாள்.
அங்கிருந்த பாத்டப்பில் ஏதோ சத்தம் கேட்க, அதனை எட்டிப்பார்த்தாள். அங்கு பெயர் தெரியாத சில மீன்கள் துள்ளியபடி இருக்க, அருவருப்புடன் அதனை பார்த்தவள் கழிவறையில் இருந்து வெளியே வந்தாள்.
“ஷிவ், சக்தி, எப்படி இருக்காங்கனு தெரியலையே.. என்ன இருந்தாலும் நான் அப்படி ஓடி வந்திருக்க கூடாது? இப்ப எப்படி அங்க போவேன்? ரங்கா, அமர் வந்திருப்பாங்களை? வந்திருந்தா என்னை தேடுவங்களா?” என அவளின் கேள்விகள் அனைத்தும் அவளிற்குள்ளே உதயமாகி கொண்டிருந்தது.
‘நீ இங்க தான் இருக்கனு அவங்களுக்கு எப்படி விலோ தெரியும்? எப்படியாவது நீ மேல போக பாரு..’ என அவளின் மூளை அவளிற்கு கட்டளையிட்டது.
மனதை ஓரளவு சமன்படுத்தியவள் கனத்த உடலை மெல்ல அசைத்து அந்த அறையிலிருந்து வெளியேற்றினாள்.
– சமுத்திரா வருவாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1
