Loading

தேடல் 23:

 

“டேய் மகனே… என்னடா நீ இப்படி பண்ணுற…” என தனா நெஞ்சை பிடித்துக் கொண்டு கத்த, அப்போதுதான் சுதாரித்தனர் அக்னியும் மிளிரும்.

 

“என்னடா பண்றான் அவன்…” என கேட்டபடியே எட்டபரும் அறையை நெருங்கிவிட, பாய்ந்து வெளியே வந்து வேகமாக கதவை வெளிப்புறமாக இழுத்து சாற்றினார் அவர்.

 

“இப்போது எதுக்கு நீ கதவ சாத்துற… தொர முதல… அவன்கிட்ட நான் முக்கியமான விசயம் பேசனும்…”

 

“இப்படியே பேசுங்க… அவனுக்கு கேக்கும்…”

 

“என்னடா கதவ புடிச்சுட்டு லொல்லு பண்ணறீயா… நகரு அந்த பக்கம்… டேய் அக்னி, என்னடா பண்ணற நீ இன்னும் உள்ள…”

 

“அண்ணா… சொன்னா கேளுங்க… இப்ப உள்ள போக வேண்டாம்…”

 

“டேய் யாருடா இவன்… இப்பவே நான் அவன பாத்தாகனும்… நகரு நீ முதல…” என்றபடி அவர் தனாவை இழுக்க,

 

“யோவ்… இப்ப போன உன் கண்ணவிஞ்சு போகும்…”

 

“டேய்… என்ன வார்த்த தடிக்குது… கொழுப்பா உனக்கு…”

 

“அண்ணா… சொன்னா கேளுங்க… அந்த தரித்திரியம் புடிச்ச நாயி குளிச்சுட்டு துண்ட கூட கட்டாம அப்படியே பப்பரப்பானு வந்து நிக்குது… பாத்த எனக்கே பக்குனு ஆகிப் போச்சு… நீங்க வேற ஹார்ட் பேசண்ட்… வாங்க நாம போய்ட்டு ஒரு நாலு நாள் கழிச்சு வந்து பேசிப்போம்… அதையும் மீறி நான் போய்தான் தீருவேனா… போங்களேன்… யாரு வேண்டானா…” என்றவர் கதவை விட்டு விலகி நிற்க,

 

“சீ… தூ… தூ…. ஏழு கழுத வயசாகுது… கதவ சாத்திட்டு குளிக்க என்ன கேடு அவனுக்கு…” என தலையில் அடித்துக் கொண்டவர், திரும்ப எத்தனிக்க, அந்த கதவு மெல்ல மெல்ல காற்றில் திறந்தது.

 

‘ஐய்யையோ… ஓவர் பர்ஃபாமன்ஸ் பண்ணி கதவ தொறந்து வுட்டுட்டோமே…’ என அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதே… மெல்ல தலையை மட்டும் நீட்டி, எட்டிப் பார்த்தார் ஜெயா. ஆனால் அங்கு யாரும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

 

குளியலறையில் இருந்து இப்போது தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, “டேய்… அக்னி… எங்கடா இருக்க நீ…” என இவர் கத்திக் கேட்க, “அப்பா… நான் குளிச்சுட்டு இருக்கேன்…” என உள்ளே இருந்து பதிலளித்தான் அக்னி.

 

“சனீயனே… வெளிய வந்தா ஒரு துண்ட கிண்ட கட்டிட்டு வரக்கூடாது… பாரு உன் சித்தப்பன் பேயறைஞ்ச மாதிரி நிக்கறான்…”

 

“அதான்ப்பா… அதேதான்… அந்த துண்ட எடுக்கலானு தான் நான் வெளியவே வந்தேன்…”

 

“நல்லா வந்த போ… ஆமான் பத்து நாளு மெடிக்கல் லீவு போட்டு இருக்கீயாமே ஏன்?”

 

“அதான் மெடிக்கல் லீவுனு நீங்களே சொல்லிட்டு ஏன்னு வேற கேக்கறீங்க…”

 

“அதான்டா நானும் கேக்கறேன்… தின்னுட்டு தின்னுட்டு  கோவிலுக்கு நேந்துவிட்ட கிடா மாதிரி தானே சுத்திட்டு இருக்க… அப்புறம் எதுக்கு மெடிக்கல் லீவு…”

 

“அப்பா… இப்ப என்ன வேணும் உங்களுக்கு…”

 

“இல்ல…. கால்ல அடிப்பட்டப்ப கூட லீவு போடலையே… அதான் கேட்டேன்… இல்ல இன்னும் கால எதுவும் வலிக்குதா… வேணா டாக்டர்கிட்ட போவோமா…” என்பதைக் கூட அவர் அதிகாரமாகவே கேட்க,

 

‘யோவ் எட்டப்பா… இதக்கூட பாசமா கேட்க வரதாய்யா உனக்கு…’ என்றெண்ணியவன், “அதெல்லாம் ஒன்னுமில்லப்பா… அன்அபிஷியாலா ஒரு கேஸ் விசாரிக்க வேண்டி இருக்கு அதுக்குதான்…”

 

“சரி… சரி… எங்கையாவது போய் மாட்டி செத்துகித்து தொலைஞ்சாலும் பரவாயில்ல… ஆனா அதுக்கு முன்னாடி ஶ்ரீ பொண்ணுக்கு பதினாறு கும்பிடறோம்… அதுக்கு மட்டும் வந்துட்டு போய்டு… ஏன்னா ஏற்கனவே பெரிசுக்கு உன் மேல கல்யாண விசயத்துல கொஞ்சம் வருத்தம்… இதுக்கும் வரமா இருந்தா நல்லா இருக்காது பாத்துக்கோ…”

 

‘யோவ்… எட்டப்பா… இப்பதான் என்மேல எம்புட்டு பாசமுனு நினைச்சு என் உடம்பெல்லாம் புல்லரிச்சுச்சு… ஆனா அஞ்சு நொடில அதுல ஒரு லாரி மண்ணள்ளி போட்டுட்டீயாப்பா…’

 

“என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்… பேச்சு சத்தத்தையும் காணும்… குளிக்கற சத்தத்தையும் காணும்… உள்ளவே படுத்து தூங்கிட்டியா நீ…?”

 

“அதெல்லாம் ஒன்னுமில்ல… சோப்பு போட்டுட்டு இருக்கேன்… நீங்க என்னைக்குனு சொல்லுங்க… நான் வந்துடறேன்…”

 

“கிழிச்ச… நீ எந்த லட்சணத்துல வருவேன்னு எனக்குத் தெரியாதா…? அண்ணன் கல்யாணத்துக்கே காலையில வந்தவன் தானேடா நீ…”

 

“அப்போ நீங்களே போய் சிறப்பா செஞ்சிட்டு வாங்க… நான் எதுக்கு…?”

 

“இங்க பாரு… எப்பவுமே எனக்கு என் தங்கச்சிங்க தான் முக்கியம்.. நீ வர… அதுவும் கரெக்டான டைமுக்கு வர… அப்படி இல்ல… அதுக்கு அப்புறம் நீ இல்ல… அவ்வளவு தான்…”

 

‘ஆரம்பிச்சுடாருய்யா தொங்கச்சி புராணத்த…’ என இவன் தகப்பனை திட்டிக் கொண்டிருக்கும் போதே, “அதெல்லாம் அவன் கரெக்டா வருவான்… நீங்க வாங்கண்ணே… ஏகப்பட்ட கணக்கு பெண்டிங் இருக்கு… போய் பாத்துட்டு லோடு ஏத்த வேற போகனும்…” என்று அவரை சமாதானப் படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றார் தனா.

 

அவர்கள் செல்லவும், இதுவரை அழுந்த தனது வாயை மூடியிருந்த அக்னியின் கரத்தினை எடுத்துவிட்டு, வேக வேகமாக சுவாசிக்க துவங்கி இருந்தாள் மிளிர்.

 

“அறிவிருக்கா உனக்கு… வாயோட சேத்து மூக்கையும் பொத்தற… சொத்து கித்து தொலைஞ்சிருந்தனா… என்ன பண்ணுவ…”

 

“ஸ்ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்ஸ்… பொறுமையா பேசுடி… ஏன்டி இப்படி கத்தற…” என அவன் கிசுகிசுப்பாக பேச,

 

“ம்ம்ம்… ஏன் இப்படி வாய பொத்துன…” என அவளும் அதே கிசுகிசுப்பான குரலில் வினவ,

 

“மாட்டி இருந்தோம் இரண்டு பேருக்கும் இன்னைக்கு சங்குதான்… அதான் ஏதாவது இடையில பேசிடுவீயோனு…” என்றவன் இப்போது தான் இருவரும் நெருங்கி நிற்பதையே உணர்ந்தான்.

 

பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சு சட்டென்று தடைபட்டு, பார்வையிலும் கொஞ்சம் கொஞ்சமாக மையல் குடியேற, அதை உணர்ந்துக் கொண்டவள், “அதான் உங்கப்பா போய்ட்டாரு இல்ல… இன்னும் என்ன… நகரு அப்படி…” என அவனை வேகமாக தள்ளிவிட்டு வெளியேற, “படுத்தறடி ராச்சசி…” என மெல்லமாக வசைபாடினான் அவளை. அவனவளை.

 

அடுத்த கொஞ்ச நேரத்தில் அவன் கிளம்பி அவளோடு தயாராகி வர அடுத்த சோதனை காத்திருந்தது. வேறென்ன வாசலிலேயே அவரின் ஆஸ்தான நாற்காலியில் அமர்ந்துக் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார் ஜெயா.

 

இனியும் அவருடன் போராட தெம்பில்லாதவனாக, வழக்கமாக அவன் வரும் மாற்று வழியில் மிளிரையும் அழைத்துச் செல்ல, வேறொன்றுமில்லை, மச்சு வழியாக பின்கட்டில் இறங்கி, அங்கிருத்து சுவரெறிக் குதிப்பது தான் அவனின் குறுக்குவழி. ஆகமொத்தம் வீட்டைவிட்டு வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிப் போனது அக்னிக்கு.

 

அங்கிருந்து நேராக ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றிற்கு வந்தவர்கள், ஆளுக்கு ஒரு ஐஸ்கீரிமை ஆடர் செய்துவிட்டு, அங்கே யாரும் கவனிக்க முடியாத ஒரு மூலையில் சென்று அமர்ந்தனர்.

 

“அம்மா… தாயே… இப்பயாவது சொல்லு… என்ன விசயமுனு…” என்றான் அக்னி. ஆனால் அவளோ எதுவும் பேசாது, அவனின் முன்பு தங்கத்தாலான சிறிய வேல் ஒன்றை வைத்தாள்.

 

“இது என்ன மிளிர்…” ஒற்றை புருவம் உயர்த்தி அவன் வினவ, “அன்னைக்கு மகி டெத் சர்டிபிகேட் வாங்க போனப்ப ஒருத்தன் என்ன கொல்ல ட்ரைப் பண்ணானு சொன்னேன் இல்ல… அவனோடது… அவன்கிட்ட இருந்து தப்பிக்க ட்ரைப் பண்ணும்போது இது கையோட வந்துடுச்சு… அப்போ இத பத்தி நியாபகம் வரல… ஆனா பொறுமையா யோசிக்கும் போதுதான் நியாபகம் வந்துச்சு… ஹேண்ட்பேக்ல தான் வச்சேனு… அதான் அந்த ஸ்கூட்டி விட்ட ஓர்க் ஹாப்க்கு போய் தேடி எடுத்துட்டு வந்தேன்…”

 

“என்கிட்ட சொல்லி இருக்கலாமுல நீ… தனியா ஏன் போன…”

 

“இல்ல… இனியன் கூடதான் போனேன்… அப்புறம் இது எனக்கு மகியோட டெத் சர்டிபிகேட் தாரேனு சொன்னானே அந்த ப்யூனோட நம்பர்… என் கஸ்டமர் ஒருத்தவங்க அங்க வேலை பாக்கற டாக்கரோட வெய்ப்… அவங்ககிட்ட மேலோட்டமா விசாரிக்க சொன்னப்ப… கொஞ்ச நாளா அவன் வேலைக்கு வரதில்லனு சொன்னாங்க… அவன பத்தியும் விசாரிக்கனும்…”

 

“ஏன் மிளிர் இப்படி பண்ணற… உனக்கு நிலைமையோட தீவிரம் புரியுதா இல்லையா… ஜெஸ்ட் ஒரு டெத் சர்டிபிகேட் கேட்டதுக்கே உன்ன கொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க… நீ என்னடானா சி.ஐ.டி சங்கர் வேலை பாத்துட்டு இருக்க… அறிவில்ல உனக்கு…”

 

“இங்க பாருங்க… நான் என்ன பண்ணனுமுனு நீங்க சொல்ல தேவையில்ல… முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க… இல்ல போய்ட்டே இருங்க… நானே என்ன பண்ணனுமோ பண்ணிக்கறேன்…”

 

“அப்படியே அறைஞ்சேனா தெரியும்… லூசு மாதிரி பேசன… என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது…”

 

“நான் இல்ல… நீங்க தான் லூசு மாதிரி பேசிட்டு இருக்கீங்க… எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன…”

 

“அதானே எனக்கு என்ன… நான் போறேன்… நீயே என்ன வேணாலும் பண்ணிக்கோ…” என வேகமாக எழுந்தவனை கைப்பற்றி இழுத்து அமர வைத்தாள் மிளிர்.

 

“நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்ட போல… சரிவிடு… எப்போ சென்னைக்கு கிளம்பறோம்…”

 

“எதுக்கு நான் சரிபட்டு வர மாட்டேன்…”

 

“அது உங்களுக்கே தெரியும்… எப்ப கிளம்பனும்… அத மட்டும் சொல்லுங்க… நான் வந்து ரொம்ப நேரமாகுது… வீட்டுல தேடுவாங்க…”

 

“அங்க மட்டும் என்ன வாழுதாம்… பெருசா வந்துட்டா என்ன சொல்ல…” என அக்னி முணுமுணுக்க,

 

“என்ன சொல்லறீங்க… தெளிவா கேக்கல எனக்கு…”

 

“கேக்க கூடாதுனுதான் அப்படி சொல்லறேன்… எட்டு மணிக்கு ட்ரைன்.. நானே வந்து கூப்பிட்டுக்கவா உன்ன…”

 

“அதெல்லாம்… ஒன்னும் தேவையில்ல… இனியன் வருவான் கூட… நீங்க கரெக்ட் டைமுக்கு வர பாருங்க…” என்றவள் எழுந்துக்கொள்ள,

 

“என்ன சொல்லிட்டு வருவ வீட்டுல…”

 

“ம்ம்ம்… உங்களோட ஊரவிட்டு ஓடி போக போறேனு சொல்லிட்டு வருவேன்… அது எதுக்கு உங்களுக்கு…” என்றவள் கிளம்பிவிட்டாள்.

 

“அதானே அது எதுக்கு எனக்கு…” என்றவனின் முகம் புன்னகையில் மிளிர்ந்தது. செல்லும் அவளின் முகத்திலுமே புன்னகை மிளிர்ந்தது.

 

அன்றிரவே இருவரும் ரயிலில் சென்னைக்கு கிளம்ப, மறுநாள் காலை பதினோரு மணிப் போல சென்னை வந்து இறங்கினர். அவசரமாக அருகிலேயே ஒரு விடுதியில் இருவருக்கும் அறையெடுத்து அதே அவசரத்தோடு கிளம்பி தவசீலனை காணத்தான் விரைந்தனர்.

 

நல்ல வேளையாக இவர்கள் வரும்முன் அவன் எங்கும் கிளம்பி இருக்கவில்லை. இவர்கள் சென்று வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, சற்று நேரம் கழித்து, கையில் கடிகாரத்தை அணிந்தபடியே வந்து திறந்தான் அவன்.

 

ஐந்தே முக்கால் அடி உயரம் இருக்கலாம். மாநிறத்திற்கும் சற்றே குறைவான நிறம். புருவங்கள் இருப்பது சந்தேகம் தான். அகன்ற நெற்றி. முன்னெறிருந்த முடியினால் கூட அப்படி தெரிந்திருக்கலாம். அகன்ற கண்களை மறைக்கும் விதமாக ஒரு கண்ணாடி அணிந்திருந்தான். கண்டவுடன் அவனைதான் அணுஅணுவாக அளவெடுத்துக் கொண்டிருந்தான் அக்னி.

 

அக்னியை அவனுக்கு யாரென்று தெரியவிட்டாலும் மிளிரை தெரிந்தது. அதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது. அவளைக் கண்டதும் எழ வேண்டிய ஆச்சரிய பாவத்தை விட அதிர்ச்சி பாவமே அவன் முகத்தில் அதிகம் இருந்தது. அதை அக்னியும் தன் மனதில் குறித்துக் கொண்டான்.

 

“நீ… நீ… மிளிர் தானே… இங்க எப்படி நீ…”

 

“உள்ள போய் பேசலாமே மிஸ்டர் தவசீலன்…” என்றவன் தவசீலனின் பதிலை எதிர்பார்க்கமால் அவனை தாண்டிக் கொண்டு உள்ளே நுழைந்துவிட, வேறு வழியின்றி மிளிர் உள்ளே வர வழிவிட்டு நின்றான்.

 

நேராக சென்று சோபாவில் அமர்ந்த அக்னி, மிளிரையும் தன் அருகில் அமர்த்திக் கொண்டான். தவசீலன் எதுவும் பேசமால் நிற்க, “குடிக்க கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா… ப்ளீஸ்…” என அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருந்தான் அக்னி.

 

“ஒரு நிமிஷம்…” என அவன் உள்ளே சென்ற நேரத்தில், அந்த வீட்டை அளவிட்டு முடித்திருந்தான் அக்னி. இருவருக்கும் இரு கிளாஸில் பழசாற்றை எடுத்து வந்து வைத்தவன், “எப்படிம்மா இருக்க… வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க… திடீருனு உன்ன பாத்ததும் ஒன்னும் புரியல…” என்றபடியே அவர்களுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டான். அவன் பார்வை மிளிரைத் தான் அளவிட்டுக் கொண்டிருந்தது.

 

விட்டால் வாசலில் வைத்தே அவனிடம் அத்தனையும் விசாரிக்க ஆரம்பித்திருப்பாள் மிளிர். ஆனால், அவள் அப்படி செய்ய முடியாத வண்ணம் அவளின் கைகளை இறுக பற்றி, ‘எதுவும் கேட்காதே…’ என கண்களால் செய்கை செய்திருந்தான் அக்னி.

 

“அதொன்னுமில்ல… மிளிர் உங்கள பாக்கனுமுனு சொன்னா… அதான்…”

 

“ஓ… அப்போ… மிளிருக்கு பழசெல்லாம் நியாபகம் வந்துடுச்சா…”

 

“வந்தா சந்தோஷம்தான்… ஆனா வரலையே… மகியோட நிச்சய ஆல்பத்தை பாத்திருப்பா போல… அதுல இருந்து எங்க கல்யாணத்துக்கு உங்கள கூப்பிடனுமுனு ஒரே அடம்…”

 

“என்ன சார்… கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன்…”

 

“பாருங்க… தலையும் புரியாம காலும் புரியாம சொல்லிட்டு இருக்கேன்… நான் அக்னிமித்ரன்… மிளிரோட பியான்ஸி… இன்னும் ஒரு வாரத்துல எங்களுக்கு நிச்சயம்… அடுத்த மாசமே கல்யாணமும் வச்சிருக்கோம்… இப்போ நிச்சயத்துக்கு புடவை எடுக்கலானு தான் காஞ்சிபுரம் வரைக்கும் குடும்பத்தோட வந்தோம்… அதான் உங்களையும் நிச்சயத்துக்கு ஒரு வார்த்தை நேர்ல கூப்பிடலாமேனு…”

 

“மிளிருக்கு எதுவும் நியாபகம் இல்லைனு சொன்னீங்க…”

 

“அதான் சொன்னேனே… மிளிருக்கு மகிய பத்தி யாரோ சொல்லி இருக்காங்க… அப்ப அவ போட்டோஸ் எடுத்து பாக்கும் போது உங்க நிச்சய ஆல்பம் கிடைச்சுது… மகிக்கு நெருக்கமான எல்லாரையும் கூப்பிடனுமுனு மிளிரோட ஆசை… பட் நிறைய பேர் அட்ரஸ் கிடைக்கல… உங்க அட்ரஸ் ஆல்பம் பின்னாடியே இருந்துச்சு… அதுவும் இல்லாம துளசி ஆன்டியும் சொன்னாங்க… அதான் நேர்லையே கூப்பிடலானு வந்துட்டோம்…”

 

“ஓஓ… எப்போ நிச்சயம்…”

 

“வர வெள்ளிக்கிழமை… மதியம் மூனு டூ ஐஞ்சு… உங்களுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருந்த அதே மண்டபம்தான்… மிளிர் பிடிவாதமா எங்க நிச்சயம் கல்யாணம் ரெண்டையும் அங்கதான் வைக்கனுமுனு சொல்லிட்டா…”

 

“அப்படியா… ரொம்ப சந்தோஷம்… கண்டிப்பா வர ட்ரை பண்ணறோம்…”

 

“நீங்க வந்தா துளசி ஆன்டி சிவம் ஆங்கிளும் ரொம்ப சந்தோஷ படுவாங்க…”

 

“கண்டிப்பா வர முயற்சி பண்ணறேன்… மிளிர் ஏன் எதுவுமே பேச மாட்டறா…”

 

“உங்களுக்கு விசயம் தெரியாதுல… சமீபத்துல மறுபடியும் ஒரு ஆக்ஸிடன்ட்… விதி அப்படிதான் இருக்கு போல… அந்த அதிர்ச்சில மிளிரால பேச முடியாம போச்சு…” என்றவனை எரித்துவிடும் முனைப்பில் பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர்.

 

“ஓ.கே தவசீலன். உங்களுக்கு வேலைக்கு டைம் ஆகும்… எங்களுக்கும் இன்னும் சிலப் பேர நிச்சயத்துக்கு கூப்பிடனும்… நாங்க கிளம்பறோம்…” என்றவன் மிளிரின் கைப்பற்றி அவளின் மறுப்பையும் பொருட்படுத்தாது வெளியே கிளம்பி வந்துவிட்டான்.

 

  – தேடல் தொடரும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்